16 ஜூன், 2011

திமுக ஏன் தோற்றது?

ஒரு மாத கால மவுனத்தை கட்டுடைக்க வேண்டிய நேரம் வந்தாயிற்று. இன்று இதை பேசாவிட்டால், நாளையாவது பேசித் தொலைக்க வேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டுவிடும். இல்லாவிட்டால் நாளன்னைக்காவது பேசியாக வேண்டும். திராவிட இயக்கத்துக்கு வாக்கப்பட்டு விட்ட ஒரே பாவத்துக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் திமுக தோற்றுவிட்டதைப் பற்றி நீ என்ன எழுதி கிழித்தாய் என்று இந்த சமூகம் தினம் தினம் குனியவைத்து கும்மிக் கொண்டிருக்கும்.

திமுக ஏன் தோற்றது?

கலைஞர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை திரும்ப திரும்ப இக்கேள்வியை தனக்குதானே கேட்டுக் கொண்டிருக்கிறான். இலவச டிவி கொடுத்தோம். ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தோம். மளிகைப் பொருள் கொடுத்தோம். அவ்வளவு ஏன் தேர்தலில் ஓட்டுப்போட ஊக்கத்தொகையாக ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கூட கொடுத்தோம். அப்புறமும் ஏன் தோல்வி?

ஊடகங்கள் சில பட்டியல்களை தருகிறது. அறிவுஜீவிகள் வேறு பட்டியல்களை தருகிறார்கள். பொதுமக்கள் ஏதேதோ காரணங்களை அடுக்குகிறார்கள். கலைஞரோ 1950களின் ஸ்டைலில், பார்ப்பனர்களால்தான் தோற்றோம் என்கிறார். எந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் இவரை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள், இந்த தேர்தலில் மட்டும் குறிவைத்து தோற்கடிக்க?

ரஜினிகாந்த் ஒருவரை தவிர தமிழ்நாட்டில் யாரை கேட்டாலும், சூரியனுக்குதான் வாக்களித்தோம் என்கிறார்கள். அப்படியென்றால் சூரியனுக்கு பட்டனை அமுக்க, இரட்டை இலைக்கு ஓட்டு விழுந்ததா என்று மாண்புமிகு புரட்சித்தலைவிக்கே கூட சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் இருநூறு இடம் தம் கூட்டணிக்கு கிடைத்ததை இன்னமும் நம்பாமல், “சசி.. என் கையை ஒருவாட்டி கிள்ளு...என்று அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறாராம். எதிர்க்கட்சித் தலைவர் கேப்டனோ, இதெல்லாம் சோமபான மாயையோ என்று குழம்பி, அடிக்கடி முகத்தில் தண்ணீர் தெளித்து தான் நிதானமாக இருப்பதை உறுதி செய்துக் கொள்கிறாராம்.

மின்வெட்டு, ஈழப்பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், பல்வேறு தொழில்களில் குடும்ப ஆதிக்கம், மணல் கொள்ளை, சரமாரி ஊழல், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் குறுநில மன்னர் மனோபாவம், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அராஜகம் என்று ஆயிரம் காரணங்கள் வரிசையாக பட்டியலிடப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மிகச்சுலபமாக உடைக்க முடியும், அவையெல்லாம் தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்திருக்க முடியாதென்று.

உதாரணத்துக்கு மின்வெட்டை எடுத்துக் கொள்வோம். திமுகவுக்கு வாக்கு விழாததற்கு காரணமாக மின்வெட்டினை பொதுமக்கள் பலரும் பரவலாக சொல்லுவதை கேட்கமுடிகிறது. குறிப்பாக திமுக ஆண்ட காலத்தில் திருமணம் முடித்த பலரும், மாமனார் வீட்டில் முதலிரவில் கூட மின்சாரம் இல்லாததால் இருட்டில் தடவி, தட்டுத் தடுமாறி கடுப்பாகியிருக்கிறார்கள். மனைவியின் கையை பிடிப்பதாக நினைத்து, மாமியாரின் கையை (வேண்டுமென்றே?) பிடித்துவிட்ட அதிர்ஷ்டக்கார மாப்பிள்ளைகளும் கூட உண்டு. ‘துப்பு கெட்ட மனுஷாவென்று முதல்நாளே பொண்டாட்டியிடம் திட்டும் வாங்கியிருக்கிறார்கள். இவர்களின் பாவமே திமுக ஆட்சியை தலைமுழுகியது என்பது ஒரு சாரார் வாக்கு.

தயவு தாட்சணியமின்றி இக்காரணத்தை எல்லாம் நீக்கிவிடலாம். ஆட்டைக்கே சேர்க்க வேண்டியதில்லை. மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டார் ஏதோ கடைசி இரண்டு வருடங்களில்தான் கிடாவெட்டு மாதிரி மின்வெட்டை போட்டுத் தள்ளியதாகவும், அதற்கு முந்தைய மூன்று வருடங்களில் தமிழ்நாட்டையே ஜெகஜ்ஜோதியாக வைத்திருந்தது மாதிரியான தொனி இந்த கணிப்பில் தெரிகிறது. ஆற்காட்டார் அமைச்சராக கையெழுத்திட்ட அடுத்த நொடியே கோட்டையிலேயே மின்வெட்டு நிகழ்ந்தது என்பதுதான் வரலாறு.

மின்வெட்டும், ஈழத்தமிழர் பிரச்சினையும் தேர்தலில் பாதிப்பு உண்டாக்கியிருந்தால் 2009 பாராளுமன்றத் தேர்தலிலேயே திமுக, ‘கப்புவாங்கியிருக்க வேண்டும். வாங்கவில்லையே? அதென்ன கடைசி இரண்டு வருடங்களில்தான் இப்பிரச்சினை மக்களை புளியமரத்தை புளிக்காக உலுக்குவது மாதிரி உலுக்கியதா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

தமிழகம் தழுவிய அளவில் தோழர்களை வைத்து, திமுக ஏன் தோற்றது என்கிற கேள்வியை முன்வைத்து ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினோம். தேர்தலுக்கு முன்பும், பின்பும் கருத்துக் கணிப்புக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருந்தாலும், பெரிய மனது வைத்து தேர்தல் படுதோல்விக்குப் பிறகாவது கருத்துக் கணிப்பு நடத்த அனுமதி தரவேண்டும் என்று கமிஷனரை நாம் கேட்டுக் கொண்டோம். அவரிடமிருந்து உரிய பதில் வராததால் மவுனம் சம்மதம்என்று எடுத்துக்கொண்டு நம்முடைய கருத்துக் கணிப்புப் படையினர் தமிழகமெங்கும் கரும்புத் தோட்டங்கள், வாய்க்கா வரப்பு, கண்மாய் கரையென்று இண்டு இடுக்கு விடாமல் புகுந்து கணிப்பெடுத்து, கள்ள ஜோடிகள் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிய சில இடங்களிலும் கணிப்புக்காக நோட்டை நீட்டி, தர்ம அடி வாங்கியும் கூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

இந்த கணிப்பில் எல்லாக் காரணங்களையும் ஓரம் கட்டி, ஒரு முக்கியமான காரணம் தெரிய வந்திருக்கிறது. இக்காரணத்தைப் பற்றி எந்த ஊடகமும், அறிவுஜீவிகளும் இன்னமும் வாய் திறக்காதது நமக்கு அதிர்ச்சியையும், அயர்ச்சியையும், அலுப்பையும் ஒருசேர அளிக்கிறது.

இம்முறை வாக்களித்தவர்களில் சுமார் 30 லட்சம் பேர் இளைஞர்கள். ஓட்டு போடும் மெஷின் என்பது எடை பார்க்கும் மெஷின் மாதிரி இருக்கும் என்று நினைத்து வாக்குச்சாவடிக்குப் போனவர்கள். கொளத்தூர் தொகுதியில் இளைஞர் ஒருவர் மெஷின் மீது ஏறிநின்று எடை பார்த்த காரணத்தாலேயே, அந்த மிஷினில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கையில் தெரியாமல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடியான சம்பவம் நீங்கள் அறிந்ததே. இவர்களில் சுமார் 29 லட்சத்து தொண்ணுற்றி ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்றி ஒன்பது பேர் இரட்டை இலைக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

இந்த இளைஞர்கள் அனைவருமே கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திரும்பவும் நிறைய படங்களுக்கு வசனம் எழுதிவிடுவாரோ என்று அஞ்சியே, அம்மா ஆட்சிக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார்கள். அம்மா ஆட்சிக்கு வந்தால் சசிகலா சத்தியமாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லையென்று சத்தியப் பிரமாணம் செய்து, ஒவ்வொரு இளைஞருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும் நம்முடைய கருத்துக் கணிப்பின்போது அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது (ஜாஃபர் சேட் என்னத்தைதான் உளவுத்துறையை வைத்து கணிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை)

இளைஞர்களின் அச்சம் நியாயமானதுதான்.

கலைஞரும் கொஞ்சம் நஞ்சமாகவா ஆடியிருக்கிறார்? கடந்த ஐந்து ஆண்டுகளில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் என்று புகுந்து விளையாடியிருக்கிறார் அல்லவா? வசனம் எழுதுவது மட்டுமன்றி சினிமா பிரத்யேகக் காட்சிகளிலும், விழாக்களிலும் கலந்துகொண்டு சினிமாக்காரர்களை ஹிட்லர் மாதிரி சித்திரவதையும் செய்திருக்கிறார். அந்த சித்திரவதைகளை நேரடியாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பி, தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞனும் இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும் என்று சபதம் மேற்கொள்ளுமாறும் செய்திருக்கிறார்.

எந்த ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியமோ, இன்றுவரை ‘உளியின் ஓசைகேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. ஆனால் பெண் சிங்கத்துக்கு இரையாகிவிட்டோம். ஒரு ஞாயிறு மதியம் அலுப்பாக தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, “தலைவரின் ஆணை. ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் பெண் சிங்கம்பார்த்தே ஆகவேண்டும் என்று கூறி, இளம்பெண்ணை கதற கதற கற்பழிக்க இழுத்துப் போவது மாதிரி இழுத்துக் கொண்டுப் போனார்கள் கட்சி நிர்வாகிகள். ஒரு நாடறிந்த பத்திரிகையாளனையே இப்படி கைதியாக்கி இழுத்துப் போனார்களே, சாதாரணத் தமிழ் இளைஞர்களை என்ன பாடு படுத்தியிருப்பார்கள்? இவர்கள் படுத்திய பாட்டை விட, கலைஞர் படத்தில் வசனம் எழுதி படுத்திய பாடு அமோகமானது. (படம் பற்றிய நம்முடைய திரைப்பார்வையை ஏற்கனவே விலாவரியாக எழுதியிருக்கிறோம். இங்கே அமுக்கி அவஸ்தைப்படவும்).

இளைஞன்திரைப்படத்தை காணும் விபத்தும் கூட இதேபோல நமக்கு தவிர்க்கவியலா சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் ஏற்பட்டு விட்டது. இளைஞனைப் பொறுத்தவரை கலைஞரின் வசனம் என்பதைவிட கொடுமையான விஷயம் கவிஞர் பா.விஜய் நாயகன் என்பதுதான். பொன்னர் சங்கரையும் தவிர்க்க இயலாத சூழலில் பார்த்துவிட்டு, நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

ஏதோ கலைஞர் ஆசைப்பட்டு வசனம் எழுதினார், படம் வெளியானது என்றில்லாமல் ஒரு நாளைக்கு 248 முறை கலைஞர் டிவியில் ட்ரைலர் காட்டியதும், படங்கள் அமோகமாக ‘அவதார்வசூலை முறியடித்துவிட்டதாக கலைஞருக்கு சில அல்லக்கைகள் கணக்கு காட்டியதும், நம் முப்பது லட்சம் இளைஞர்களையும் எரிமலையாய் குமுறச் செய்துவிட்டது. ரஜினியின் ரோபோவுக்கே 100வது நாள் போஸ்டர் ஒட்டப்படாத நிலையில் உளியின் ஓசை, பெண் சிங்கம், இளைஞன் ஆகிய படங்களுக்கு 100, 175, 250 நாட்களுக்கு போஸ்டர் அடித்து கும்மியடித்தார்கள் உடன்பிறப்புகள். கலைஞரும் நிஜமாகவே தனது படங்கள் ஓடுவதாக நினைத்து பொன்னர் சங்கர் என்கிற அடுத்த படத்துக்கும் உற்சாகமாக வசனம் எழுதிவிட்டார். நல்லவேளையாக தேர்தலுக்குப் பிறகே இப்படம் வெளிவந்ததால், திமுக 20 ப்ளஸ் சீட்டுகளையாவது வெல்ல முடிந்தது.

கலைஞர் மீண்டும் ‘தீரன் சின்னமலைஎன்கிற திரைக்காவியத்துக்கு எழுத்தோவியம் தீட்டவிருப்பதாக ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே, அம்மா ஆட்சி வந்தும் கூட தங்களுக்கு விடிவுக்காலம் இல்லையா என்று இளைஞர்கள் மனம் வெதும்பி போயிருக்கிறார்களாம்.

கலைஞரே; தமிழினத் தலைவரே! கழகத்தையும் நாட்டையும் காக்கும் மாபெரும் பொறுப்பை அறிஞர் அண்ணா தங்களிடம்தான் ஒப்படைத்திருக்கிறார். சினிமா வசனம் எழுதுவதிலிருந்து உங்கள் பேனாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பிறகு, தமிழினமே தங்களை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடப் போவதைப் பாருங்கள்.

37 கருத்துகள்:

  1. // உங்கள் பேனாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பிறகு, தமிழினமே தங்களை தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடப் போவதைப் பாருங்கள்.//

    நூத்துல ஒரு வார்த்தை யுவா. கண்டிப்பா அடுத்த ஆட்சி கலைஞரோடதுதான்

    பதிலளிநீக்கு
  2. nengal soluvathu orualavuku othukidalam...

    intha vatam matriyathu youngsters than... but ana athu reason ila...

    main reason is social networking...

    they dont know abt the jj rule for the past 2 times... athan problem e

    பதிலளிநீக்கு
  3. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா .....அந்த போஸ பாத்தா இப்பவும் சிரிப்ப அடக்க முடியல. தி.மு.க வ அல்லக்கைகள் பாராட்டு விழா வச்சு வச்சே ஒழிச்சிடுவாங்க போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. காமெடியாத்தான் எழுதியிருக்கீங்ணா! ஆனாலும், ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம்னு ஒரு பெரிய ட்ரம் உருண்டுக்கிட்டிருந்துச்சே இந்த விவகாரத்துல. அத மட்டும் ஏங்ணா உங்க பதிவுல காணோம்?

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப சீரியஸா ஏதாவது ஆராஞ்சி ஆராஞ்சி எழுதியிருப்பீங்கன்னு வந்தேன்... தப்புதான்.. தப்புதான்... :))

    பதிலளிநீக்கு
  6. அடாடா, ஒரு உருப்படியான அலசல், சீரியசான கட்டுரை, பலே! என்று ஓடிவந்து படித்தவனை, மாற்றுக் கருத்துகளைப் படிக்க ஆவலாக இருந்தவனை ஏமாற்றி விட்டீர்களே!

    காமெடி பீஸ் எழுத முயற்சி பண்ணப் போகிறீர் என்று தெரிந்திருந்தால்...! ஹும்ம், விதி வலியது!

    பதிலளிநீக்கு
  7. தி.மு .க. வளர்வதற்கு பெரும் பங்கு வைத்த ஐந்து தி.மு.க.தலைவர்களில் கலைஞர் கருணாநிதியும் ஒருவர்.

    இந்த தேர்தலில் தி.மு .க 119 இடங்களில் மட்டும் போட்டியிட வைத்தது கலைஞர் கருணாநிதி செய்த மிகப் பெரிய தவறு.

    தனி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டி போடாத நிலையில் தனது கட்சியின் வலிமையினை தானே மதிக்காமல் போனது,

    கடந்த கால ஆட்சியில் இனாம் கொடுத்த பழக்கம் தொகுதி பங்கீட்டிலும் தொடர கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் மத்தியில் வெறுப்பினை உண்டாகியது .அதனால் தி.மு .க தொகுதி கிடைக்காதவர்கள் தி.மு .க கூட்டு கட்சிக்கு வோட்டு போடவில்லை.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றுமை அனவருக்கும் தெரியும். தலைமை வழிதான் தொண்டர்களின் வழி . ஒருவழியாக தானும் தோற்று தி.மு .க.வையும் தோல்வியடைய வழி செய்து விட்டனர் .

    ஜாதி அமைப்பு கூடாது என்று முற்போக்கு கொள்கை பேசும் கொள்கைக்கு குழி தோண்டி ஜாதி கட்சிகளுக்கு தொகுதி கொடுத்து தானே குழி தோண்டி தி.மு .க. வை புதைக்க வழி செய்து விட்டார்.

    தி.மு .க. அரசு செய்த பல நல்திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதிற்கு முக்கிய காரணம் தேர்தல் நேரத்தில் மின்சார பற்றாக் குறையும், குடும்ப வாரிசுகளுக்கு அனைவருக்கும் முக்கிய பதவி கொடுத்து மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற எண்ணம் உண்டாகும்படி செய்த நிலை.

    தமக்கு வயதாகிவிட்டது என்ற காரணத்தால் அனைவரையும் அரவணைத்து செல்ல நாட்டம் கொண்டு தவறு செய்பவர்களை கண்டு கொள்ளாமல் போனது. இனாம் கொடுத்தால் வாக்குச் சீட்டு வந்து விழும் என்ற தவறான கொள்கைக்கு அடிமையானது.

    சிறப்பாக கொள்கை பேசுபவர்களை தவிர்த்து காமடியர்களை தனிப்பட்ட விரோதத்தினை பேச இடம் கொடுத்தது தி.மு .க. வின் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தது .
    மற்றவர்களை பிளவு படுத்த எண்ணி தாங்களே பிளவு ஏற்பட வழி வகுத்தது.

    பதிலளிநீக்கு
  8. கலைஞரின் ஒரு குடும்பம் ஒரு கோடி தொண்டர்களின் உழைப்பை விணாக்கிவிட்டது

    பதிலளிநீக்கு
  9. எனக்கு தெரிஞ்ச சிம்பிளான காரணம். நாமதாண்டா ஜெயிப்பொம் என உங்கள மாதிரி எல்லோரும் மிதப்புல திரிஞ்சுது..மற்றவை எல்லாம் உப காரணங்கள் :)

    பதிலளிநீக்கு
  10. indha katturaiyai ezhudiadhan moolam kalaignarin predhana allakaiyaga marivittirgal... vazhthukkal!!!!

    பதிலளிநீக்கு
  11. என்னுடைய எண்ணமும் இது தான்.. புதிய வாக்காளர்களை கவர தி மு க தவறி விட்டதே இந்த தோல்விக்கு காரணம்... புதிய வாக்காளர்களில் பெரும்பான்மயனவர்கள் விஜயகாந்த் என்ற மூதேவி தான் காக்கும் தெய்வமா நினச்சது தான் இங்க கேலிகூத்து... பார்கதானே போகிறோம், இனி வரும் காலங்களில் எதனை தொழிற்சாலை தொடங்குகிறார்கள், எதனை அரசாங்க வேலைகள் இந்த இளைஞர்களுக்கு கிடைக்க போகிறது என்று... தயாராக இருங்கள்.....

    பதிலளிநீக்கு
  12. //ரொம்ப சீரியஸா ஏதாவது ஆராஞ்சி ஆராஞ்சி எழுதியிருப்பீங்கன்னு வந்தேன்... தப்புதான்.. தப்புதான்... //

    yes :-)

    பதிலளிநீக்கு
  13. //எந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் இவரை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள், இந்த தேர்தலில் மட்டும் குறிவைத்து தோற்கடிக்க.//

    அது சரி. ஆனா லக்கி, நிஜத்தில் அந்த சமூகத்தைச் சேர்ந்த நிறையப் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசுவதைக் கவனித்திருக்கிறேன்.

    //அப்படியென்றால் சூரியனுக்கு பட்டனை அமுக்க, இரட்டை இலைக்கு ஓட்டு விழுந்ததா என்று மாண்புமிகு புரட்சித்தலைவிக்கே கூட சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. //

    இந்த இடத்தில் புரட்சித்தலைவியின் அளவு கடந்த நம்பிக்கையை நீங்கள் கவனிக்க வேண்டும். தனது பட வசனங்கள் தமிழ் மக்களால் ஏகோபித்து வரவேற்கப்படுகின்றன என்று கலைஞருக்கு இருக்கும் அதே நம்பிக்கை.

    பதிலளிநீக்கு
  14. இப்பவும் ஓய்வெடுக்காமல் சலம்பிகிட்டிருப்பது... திமுகவையே அழிச்சிரும்னு சொல்லுங்க....

    பேசாம அம்மாகிட்டயே கொடநாடு பங்களாவை வாடகைக்கு எடுத்து அடுத்த எலக்ஷன் வர ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க....

    அம்மாவே அடுத்து ஆட்சிக்கு வர வழிபண்ணிருவாங்க...

    பதிலளிநீக்கு
  15. lucky, paarpanargal vottu (atleast enakku therinju iyergalin vottu) nichayama kalaignarkuthan shankaracharya kaidukku appuram niraya per DMK va support pannanga, sai baba vandathu avar veetukku ithellam brahmins kitta avanga imagea rombave soften panniduchi!

    பதிலளிநீக்கு
  16. தலைவா! நாமல்லாம் இப்படித்தான் சொல்லி மனச தேத்திக்கனும், உண்மையை தெரிஞ்சுக்கணும்னா, நக்கீரன்'ல் பத்திரிக்கையாளர் " சோலை" யின் கட்டுரைதான் படிக்கவேண்டும், அதுதான் உண்மை. அதவிட்டுட்டு மத்ததல்லாம் பேசுறது, மற்றுமொரு "பாசதலைவனுக்கு பாராட்டு விழா" வாக தான் இருக்கும். வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வில்லையெனில், வரலாற்றின் சாதக பக்கங்கள் நமக்கில்லை. நன்றி - திட்டச்சேரி முருகவேல் ச - ஆழ்வார்பேட்டை, சென்னை 18

    பதிலளிநீக்கு
  17. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.



    Share

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா4:37 PM, ஜூன் 17, 2011

    \\கொளத்தூர் தொகுதியில் இளைஞர் ஒருவர் மெஷின் மீது ஏறிநின்று எடை பார்த்த காரணத்தாலேயே, அந்த மிஷினில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கையில் தெரியாமல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடியான சம்பவம் நீங்கள் அறிந்ததே.//

    தலைவா செம காமெடி போங்க ... சுபெரப்பு

    வாழ்த்துக்கள் ....... டுபுக்கு.நெட்

    பதிலளிநீக்கு
  19. கலைஞரும் கொஞ்சம் நஞ்சமாகவா ஆடியிருக்கிறார்?
    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சன் டிவில காட்டி காட்டி நோக அடிசுட்டாங்கப்பா!

    பதிலளிநீக்கு
  20. super! செம காமெடி போங்க

    பதிலளிநீக்கு
  21. i wonder still DMK followers like you doesnt agree on the sprctrun, raja kani Jail...i pity you

    பதிலளிநீக்கு
  22. எனக்கென்னவோ தி மு க தோற்க காரணம் சிந்தனையாளரும்,போராளியுமான நடிகர் விஜய் அவர்களின் வாய்சும்,அவரின் அறிவார்ந்த தொண்டர்களின் அயராத உழைப்பும்;நடிகர்களும் சிந்தனையாளர்க்களுமான செந்தில், சிங்கமுத்து, ஆனந்தராஜ் போன்றவர்களின் சூறாவளி பிரச்சாரங்களும் தான் தி மு க தோல்விக்கு காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    இப்பொழுது ஜெயலிதாவின் ஆட்சி யை பார்த்ததும் எனக்கு மகிழ்சிக்கு அளவே இல்லை. பாருங்கள் எவ்வளவு அற்புதமான ஆட்சி என்று. ராமனால் கூட இவ்வளவு அருமையாக நாட்டை ஆண்டிருக்க முடியாது. ஒரு கொலை கொள்ளை உண்டா.நானெல்லாம் இப்பொழுது வீட்டை பூட்டுவதே இல்லை. குறிப்பாக பள்ளி மாணவர்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள். படிக்கவே வேண்டியது இல்லையே.சும்மா பள்ளிக்கு போய் வந்தாலே போதுமே.

    பதிலளிநீக்கு
  23. kadiseela ungalukkum theriyalayaa en dmk thoththunnu.illa ilam vaakkaalarkalthan-nnu solla vanthu niruththeettinga.

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் மட்டும் இல்லை தலைவரே எனக்கு தெரிந்த நண்பர்கள் (திமுக விசுவாசிகள் அனைவரும்) தலைவர் குடும்பத்தின் மேல் வைததுள்ள பாசத்தினால் தான் இவ்வளவு பிரச்சினையும் என்பதை உணர மறுக்கிறீர்கள் , அது தான் தலைவர் மேல் தாங்கள் அனைவரும் வைத்துள்ள பாசம் என்பது, ஆனால் ஒரு பெரியசோகம் என்ன தெரியுமா
    வயதான நம் தலைவருக்கு அவர் கண் முன்னே பிள்ளைகளால் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல் தான், என்ன செய்ய விதி வலியது ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்,
    ராகவேந்திரன்,தம்மம்பட்டி

    பதிலளிநீக்கு
  25. ////பொன்னர் சங்கரையும் தவிர்க்க இயலாத சூழலில் பார்த்துவிட்டு, நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.///

    உங்களுடைய பொன்னர் ஷங்கர் விமர்சனத்தை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன்.. அப்போது positive review கொடுத்த நீங்கள்,இப்போது இப்படி சொல்லுவது/வார்த்தை மாறுவது ஏனோ ??!!!

    http://www.luckylookonline.com/2011/04/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  26. பாஸு,சீரியசா எழுதுரிங்களா இல்ல காமெடியானு முதல்லயே சொல்லிருங்க பாஸு

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா8:27 PM, ஜூன் 19, 2011

    கடந்த நூறு ஆண்டு காலமாக நாம் பார்பனர்களை குறை கூறிக்கொண்டு இருக்கிறோம். (தென் இந்திய நல உரிமை சங்கம், சுயமரியாதை இயக்கம், நீதி கட்சி, திராவிட கழகம், பின்னர் எண்ணற்ற திராவிட அரசியல் கட்சிகள் எல்லாம் திட்டி ஆயிற்று)

    என்னை பொறுத்தவரை சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மண்டல் கமிஷன் அமல்படுத்திய பிறகு நாம் அவர்களைப்பற்றி பேசுவது தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அல்லது நாம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தால் நமக்கு அறிவு, அரசியல், ஆட்சி அதிகார பலம் இருந்தும் நாம் இன்னமும் வளரவில்லை என்றே தெரிகிறது. அல்லது சரியான அறிவு கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

    தமிழகத்தில் 5 முறை, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக யார் ஆண்டார்கள் என்பது நமக்கு தெரியும்.

    கிராமப்புற அரசு பள்ளிக்கு ஏன் ஆசிரியர்கள் ஒழுங்காக வருவதில்லை என்று நாம் கேட்க முடியவில்லை. பள்ளிகளுக்கு கட்டடம்,
    நாற்காலி, கரும்பலகை சரியாக இல்லை என்று நாம் போராட முடியவில்லை. மாணவர்களுக்கு லேப்டாப் தேவை இல்லை,

    முதலில் அடிபட்டை வசதியும், கழிப்பறை வசதியும் தான் தேவை என்று அதிகாரவர்க்கத்த ை கேட்டு நம்மால் போராட

    முடியவில்லை. நகர் புறங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப தேவையான அளவு அரசு பள்ளிகள் வேண்டும் என்று நம்மால்

    அதிகாரவர்க்கத்த ை கேட்டு போராட முடியவில்லை. வீரம் விளைந்த சேர, சோழ, பாண்டிய, நாயக்க, பல்லவர்கள் என்று பறை சாற்றி கொள்பவர்கள் இதை பற்றி எல்லாம் பேசுவது இல்லை. ஆனால் பார்பனர்களை மட்டும் குட்ட்றஞ்சாட்டி பேசுகிறோம்.

    ஆனால் பார்பனர்களே, இரண்டு கேள்விகள் ஒன்று : தமிழில் "பிராமண பாஷை" எங்கு இருந்து வந்தது ?
    இரண்டு: ஆலயத்திற்கு உள்ளே மக்கள் செல்லும் பொழுது, பொது மக்கள் நிற்கும் இடம் தாண்டி கருவரைக்கு பக்கத்துக்கு அறை வரை சென்று கடவுள் தரிசனம் செய்கிறீர்களே ? உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?

    ---- கணியன் ------

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா2:11 PM, ஜூன் 20, 2011

    >>>>
    ////பொன்னர் சங்கரையும் தவிர்க்க இயலாத சூழலில் பார்த்துவிட்டு, நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.///

    உங்களுடைய பொன்னர் ஷங்கர் விமர்சனத்தை உங்களுக்கு ஞாபக படுத்த விரும்புகிறேன்.. அப்போது positive review கொடுத்த நீங்கள்,இப்போது இப்படி சொல்லுவது/வார்த்தை மாறுவது ஏனோ ??!!!

    http://www.luckylookonline.com/2011/04/blog-post_12.html

    >>>
    Repeatt..

    -Raji

    பதிலளிநீக்கு
  29. Regarding your comments and review on Ponnar shankar,we(those who used to read ur blog regularly) are waiting for ur clarification,luckylook..

    பதிலளிநீக்கு
  30. சார் உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா?
    இருந்தாலும் மிகவும் நன்றாகவே இருந்தது,,,

    பதிலளிநீக்கு
  31. நகைச்சுவையாக தோல்விக்கான காரணத்தை சொன்ன பானி மிகவும் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  32. பொன்னர் சங்கர் என்கிற அடுத்த படத்துக்கும் உற்சாகமாக வசனம் எழுதிவிட்டார். நல்லவேளையாக தேர்தலுக்குப் பிறகே இப்படம் வெளிவந்ததால், திமுக 20 ப்ளஸ் சீட்டுகளையாவது வெல்ல முடிந்தது.////

    அடேங்கப்பா....எவ்வளவு பெரிய புலனாய்வு புலி நீங்க....
    பொன்னர் சங்கர் வெளிவந்து ஐந்து நாட்களுக்கு பிறகே தேர்தல் நடந்தது. இந்த படம் தேர்தலுக்கு பின் வந்திருந்தால் கொங்கு மண்டலத்தில் ஒரு சில இடங்களாவது வென்றிருக்கலாம்.
    தி.மு.க.என் தோற்றது பதிவில் உங்கள் நகைச்சுவை உணவு தெரிகிறது. உண்மையான காரணம் அறிய....
    தி.மு.க-வை வீழ்த்திய ஐம்பெரும் சக்திகளும், நமக்கு உணர்த்தும் பாடமும்....
    http://www.rahimgazzali.com/2011/05/five-reason-of-dmk-fall.html

    பதிலளிநீக்கு