21 ஜூன், 2011

அநாகரிகம்

ஒரு காலத்தில் பிட்டு படம் பார்க்க நாய் படாத பாடு படவேண்டியிருந்தது. எந்த தியேட்டரில் பிட்டு ஓட்டுவார்கள் என்பதை மோப்பம் பிடிப்பதற்குள் டங்குவார் அறுந்துவிடும். பரங்கிமலை ஜோதி தியேட்டரில் சிலவேளைகளில் அரிதாக பிட்டு இருக்கும். பலவேளைகளில் சும்மா மேலுக்கு காட்டி ஏமாற்றி விடுவார்கள். மவுண்ட்ரோடு கெயிட்டி சுத்தம். போஸ்டர் லெவலுக்கு கூட சீன் இருக்காது. ஆதம்பாக்கம் ஜெயலட்சுமியில் நினைத்தால் பிட்டு ஒட்டுவார்கள். இரும்புலியூர் அனுராக்கும் இப்படித்தான்.

காசியில் மட்டும் ஓர் அருமையான டீலிங் இருந்தது. சனி, ஞாயிறு காலை 9.30 காட்சிகள் மட்டுமே பிட்டு. சைக்கிள் டோக்கன் போடும் தாத்தாவிடம் நேராகப் போகவேண்டும். எதுவும் பேசாமல் ஒரு ரூபாய் காயினை அவரது கையில் திணித்தால், “இருக்கு” அல்லது “இல்லை” என்று ஒருவரியில் அன்றைய தலையெழுத்தை நிர்ணயித்து விடுவார். இந்த வசதி வேறெந்த தியேட்டரிலும் இல்லை.

பிட்டுபட ரசிகர்களுக்கு வாராது வந்த மாணிக்கம் போரூர் பானு. ஒரே ஒரு பிட்டு லட்சியம். குறைந்தது பத்து பிட்டு நிச்சயம். ஆபரேட்டருக்கு மூடு இருந்தால் மட்டுமே பிட்டுக்கு நடுவே படம் ஓட்டுவார். காஞ்சிபுரத்தில் இருந்தெல்லாம் ரசிகர்கள் படையெடுத்து வருவார்கள்.

ம்.. அதெல்லாம் ஒரு வசந்தக் காலம். சிடி, டிவிடி மலிவாகி தியேட்டர்களுக்கு மவுசு போயே போயிந்தி. ஆயினும் ஒரிஜினலான அக்மார்க் பிட்டுப்பட ரசிகர்கள் மட்டும் மீண்டும் அந்த கனாக்காலம் நனவாகாதா என்கிற ஏக்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கனவுகள் மெய்ப்படும் காலமிது.

அப்போதெல்லாம் அடித்து அடித்து தேய்ந்துப்போன ரீலில் ‘பிட்டு’ க்ளியராக தெரியாது. நவீன தொழில்நுட்பம் அக்குறையினை போக்கியிருக்கிறது. க்யூப் டிஜிட்டல் புரொஜெக்‌ஷனில், டி.டி.எஸ். சவுண்ட் மிக்ஸிங்கில் நமக்கு காணக் கிடைக்கிறது ‘அநாகரிகம்’.

சென்னை கே.கே.நகர் விஜயா திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. குஜால் படம் திரையிடும் திரையரங்குகளின் பெயர்கள் மட்டும் விஜயா, ஜெயலட்சுமி, ஜோதி, பானு என்று கவர்ச்சிகரமான நாமகரணங்களை சூட்டியிருப்பது யதேச்சையாக நடந்த நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதெல்லாம்தான் ஆண்டவன் சித்தம்.

அநாகரிகம் படத்தின் சதையைப் பார்ப்போம்.

நாயகன் விபு ஒரு லெக்சரர். நாட்டுக்கட்டை மனைவி வகிதா. முதல் காட்சியே முதலிரவுதான். நாயகியின் வசனம், “முதலிரவுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப முக்கியம். ஒண்ணு நெஞ்சு..”. நாயகன் அதிர்ச்சியோடு பார்க்க, “இன்னொன்னு இந்த மஞ்சு” என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார். தியேட்டர் முழுக்க பரவச அலை சுனாமியாக அடித்து ரசிகர்கள் ஐந்து நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக விசில் அடிக்கிறார்கள்.

விபுவை விட்டுவிடுவோம். வழக்கமான பிட்டுபட ஹீரோவாகதான் இருக்கிறார். வகிதா வாவ். இவ்வளவு களையான முகம் கொண்ட பெண்ணை இதுவரை சினிமாவில் பார்த்ததே இல்லை. முகம் வரைக்கும் லட்சுமிகரமாக இருக்க, கழுத்துக்கு கீழே தொடங்கி ஜோதிலட்சுமிகரம். முதுகிலும், அதற்கு நேரெதிராக முன்னாலும் நச்சென்று அவருக்கு அமைந்திருக்கிறது அழகாக இரு மச்சம். தொப்புளிலிருந்து இரண்டே முக்கா இஞ்ச் இறக்கிதான் கொசுவம் வைக்கிறார்.

ஒரு காட்சியில் கணவரை புடவை கட்டி விடச் சொல்கிறார் வகிதா. கைகளையே பயன்படுத்தாமல் கொசுவம் சொருக வேண்டும் என்பது கண்டிஷன். இந்தக் காட்சியில் இயக்குனர் தனது படைப்பாற்றல் திறனை முழுமையாக கொட்டித் தள்ளியிருக்கிறார். க்ளோசப்பில் இக்காட்சியை படம் பிடித்த கேமிராமேனுக்கு வகையான இடத்தில் நிச்சயம் ஒரு மச்சம் இருக்க வேண்டும்.

ஒழுங்காக ஓடிக் கொண்டிருக்கும் ‘இல்லற’ வாழ்வில் திடீர் புயலாய் நுழைகிறார் தொங்கும் தோட்டமான பாபிலோனா. ஹீரோயினுக்கு இவர் தோழி. ஏதோ வேலை விஷயமாக சென்னைக்கு வருகிறார். அடிப்படையில் இவரது கணவர் ஒரு டொக்கு. இனி கதை எப்படிப் போகுமென்று யூகிப்பதில் உங்களுக்கு சிரமமிருக்காது. லெக்சரரை கணக்கு பண்ண ஜாக்கெட், பாவாடை மட்டுமே அணிந்து புடவைக்கு இஸ்திரி போடுகிறார். துண்டு மட்டும் கட்டிக்கொண்டு ஹீரோவிடம் கசமுசாவுக்கு ‘ட்ரை’ செய்கிறார். ஹீரோ முரண்டு பிடிக்க.. எசகுபிசகான சந்தர்ப்பத்தில் வகிதா பார்த்துவிட.. முடிச்சு மேல் முடிச்சாக விழுகிறது திரைப்பாவாடையில். கணவன், மனைவி பிரிகிறார்கள்.

பின்னர் தனியாக வசிக்கும் லெக்சரரிடம் ட்யூஷன்(!) படிக்க வருகிறார் ஒரு ஏழைப்பள்ளி மாணவி. கெமிஸ்ட்ரி எடுக்கும் மாஸ்டருக்கு மாணவியிடம் கெமிஸ்ட்ரி பற்றிக் கொள்கிறது. ஆனால் ஒரேயடியாக ‘மேட்டரை’ முடிக்காமல், துண்டு துண்டாக ‘பிட்டு’ ஓட்டி, திருமணத்துக்கு வற்புறுத்துகிறார் லெக்சரர். தன்னையும், தன் குடும்பத்தையும் பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் மாஸ்டரிடம் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவிக்கிறாள் மாணவி. கடைசியில் காதலனை கைபிடித்தாளா, லெக்சரர் மனைவியோடு இணைந்தாரா என்பதை கே.கே.நகர் விஜயா திரையரங்கில் ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கிப் பார்த்துக் கொள்ளவும்.

மாணவி பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் நாலு குழந்தைக்கு அம்மா மாதிரியான சைஸில் ஒருமாதிரியாக தொளதொளவென இருக்கிறார். இதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்.

கச்சிதமாக மூன்று ஃபிகர்களையும் மாற்றி மாற்றி புரட்டி எடுக்கும் ‘கவுரவமான’ வேடம் கிடைக்க, ஹீரோ எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தாரோ தெரியவில்லை.

புனேவில் ஒரு கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், மக்களுக்கு ‘விழிப்புணர்வு’ ஏற்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணதேவன். படத்தின் தயாரிப்பாளர் ஒரு டாக்டர். அதென்னவோ தெரியவில்லை, பிட்டு படம் எடுப்பவர்களெல்லாம் டாக்டர்களாகவே இருக்கிறார்கள். இயக்குனர் எதிர்ப்பார்க்கும் ‘விழிப்புணர்வு’ நிச்சயம் ஏற்படும். ஏனெனில் படம் பார்த்த ஒரு ரசிகனும் இரவு முழுக்க தூங்க இயலாமல், விழித்துக் கொண்டே படம் ஏற்படுத்திய அதிர்வுகளை உணர்வான்.

‘ஏதோ மோகம், ஏதோ தாகம்’ பாடல் மிகப்பொருத்தமான இடத்தில் சொருகப்பட்டு, அட்டகாசமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஒரிஜினல் கூட இவ்வளவு சிறப்பாக அமைந்ததில்லை. பின்னணி இசையும் ஓக்கே. பிட்டு படங்களுக்கேயான பிரத்யேக மரபார்ந்த இசைமரபை உடைத்தெறிந்திருக்கிறார் இசையமைப்பாளர்.

வெறுமனே ‘சதை’யை மட்டும் நம்பி படம் எடுக்காமல், ‘கதை’க்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், பிட்டுபட பாரம்பரியத்தில் அநாகரிகத்துக்கு தனி இடம் நிச்சயமுண்டு. இவ்வகையிலான சாஃப்ட் போர்ன் படங்கள் நிறைய வரும் பட்சத்தில் விஜயா, ஜெயலட்சுமி போன்ற திரையரங்குகள் மறுமலர்ச்சி அடையக்கூடும்.

அஜால், குஜால் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்!

19 கருத்துகள்:

  1. விமர்சனம் அருமை. சிடி கிடைக்குமா

    பதிலளிநீக்கு
  2. ஆயிரம் சொன்னாலும் மலையாள பிட் படங்கள் அளவுக்கு தமிழ் படங்கள் காட்சி அமைப்பு இருக்காது.
    மலையாளப் படத்தில் ஒரு பாட்டு, இரண்டு பைட் (செலவே இல்லது கராத்தே, குங்க்பூ பாணியில் நடக்கும் பைட்) , டீ எஸ்டேட் , பூர்ண சந்திரன், அம்பாசிடர் கார், டுப்லெக்ஸ் வீடு என்ற வழக்கமான குறியீடுகள் இருக்கும்.

    பாபிலோனவுடன் , நகைச்சுவை நடிகர் முத்துக்காளை அமர்ந்து இருக்கும் படம் கண்டேன் இணையத்தில். அவர் பற்றி ஒரு செய்தியும் இல்லை உங்கள் விமர்சனத்தில். (அது இந்தப் படம் தானே)

    பதிலளிநீக்கு
  3. பலவேளைகளில் சும்மா மேலுக்கு காட்டி ஏமாற்றி விடுவார்கள்//

    சும்மா மேலுக்குக் காட்டாமல் - மேலுக்கு சும்மா காட்டினால் அதுதான் பிட்டுப்படம் இல்லயா சார்

    பதிலளிநீக்கு
  4. படம் எப்படியோ! உங்க விமர்சனம் மாஸ்டர் “பீஸ்”

    பதிலளிநீக்கு
  5. Oh my god Yuva...சிரிச்சு சிரிச்சு...கண்ணுல கண்ணீரா ஊத்துது... What a fantastic write-up!
    Thanks very much for this useful info...இதோ, இப்பவே டிக்கெட் புக் பண்ண கெளம்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா8:36 PM, ஜூன் 21, 2011

    இரும்புலியூர் அனுராக் தியேட்டர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் ..,கல்லுரி நாட்களில் நாங்கெல்லாம் ரெகுலர் கஸ்டமர் தெரியுமில்லே ..,வெளில ஒரு பட போஸ்டர் இருக்கும் .,உள்ள புல்லா பிட்டு தான் தெரியுமா

    பதிலளிநீக்கு
  7. தண்ணி வந்துச்சு - சிரிச்சு சிரிச்சு கண்ணுல...

    தோழர் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ண முடியுமா ?

    அன்பு நித்யன்

    பதிலளிநீக்கு
  8. தோழர் நித்யன்!

    டிக்கெட் கவுண்டரில் ஆண்லைன் மட்டும்தான்

    பதிலளிநீக்கு
  9. படம் எப்படியிருக்கும்னு தெரியல. ஆனால் உங்க விமர்சனம் சூப்பர்! அதுவும் ரசிகர்களுக்கு உண்டாகும் 'எழுச்சி'! அடி பின்னிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  10. //டிக்கெட் கவுண்டரில் ஆண்லைன் மட்டும்தான்//

    தோழர் யுவா..வெயிட்டு...!!

    பதிலளிநீக்கு
  11. Mudhal irave vaa vaa, KASI NATH naditha Padam 1986 illana 1987 vandha padam, woodlands theatre odinathu andha madhiri padam ippa varadunda

    பதிலளிநீக்கு
  12. mudalirave vaa vaa kasinath padam 1986 vandha padam endru ninaivu adhu madhri padam ippa varadunda. woodlands theatre ill partha naivugalai ungaludaya indha article thunivituradu

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா7:57 PM, ஜூன் 23, 2011

    யுவா, என் முதல் பிட்டு படம், நான் porur பானு உள்ள பார்த்தேன். படத்தின் பெயர் beegaran! அதன் பின்னர் நான் அங்கு பல படங்களில் பார்த்திருக்கிறோம். Porur பானு இப்போது இடிக்கப்பட்டு விட்டது மிகவும் பரிதாபம்!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா12:12 PM, ஜூன் 24, 2011

    தவற விடவில்லை யுவா :) நண்பனுடன் கருமாரியில் தரிசித்தோம் ! நீங்கள் சொன்ன qube இல்லை அங்கே ! ஆனால் அதுவே நமக்கு ஒரு நல்ல விஷயமாக பட்டது ! ஏனென்றால் ...இது தான் பழைய ஞாபகங்களை நினைவு படுத்தியது ! இதற்க்கு முன் மோட்சத்தில் "சாந்தி மற்றும் நித்யா" பார்க்கும் போது டிஜிட்டல் தரம் ஏதோ டிவி சீரியல் பார்த்த effect தந்தது !சமீபத்தில் வந்த ரசனையான படம் ....ஆரம்பம் முதல் கடைசி வரை நல்ல "கதை" ...என்னே கற்பனை ! சூப்பர் !நம்ம ரசனை நன்றாக ஒத்து போகின்றது ;) உங்கள் பதிவுக்கு நன்றி !!
    பழைய "பிட்டுகள் " போல் தற்போது கட் பண்ணிய சீன்களை சேர்ப்பதில்லை என்ற ஒரே வருத்தம் தான் ! ஜெயதேவன் ..மற்றும் ஜாய் படங்களின் அடுத்த கட்ட வளர்ச்சி இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ! Bloorockz

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா12:16 PM, ஜூன் 24, 2011

    முக்கியமான விஷியத்தை விட்டுவிட்டேன் ...'நடித்த கதாநாயகிகள் ' நன்றாக நடித்து இருக்கின்றனர் ! அதை விட ...எல்லோருக்கும் நல்ல களையான முகம் ...பாத்திரத்திற்கு ஏற்ற உடம்பு ;) இது தான் இப்போ வரும் மற்ற படங்களில் மிஸ்ஸிங் ! எல்லாம் மும்பை முகங்களை போட்டு கடுப்பேற்றுகின்றனர் !- Bloo

    பதிலளிநீக்கு
  16. உங்கள் "நக்கல்" எழுத்து நடை நன்றாகவுள்ளது :-)

    பதிலளிநீக்கு
  17. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்
    நன்றி
    கூட்டான்சோறு பகுதி - 2

    பதிலளிநீக்கு
  18. அட..நல்லாவே விமர்சனம் பண்றீங்க
    என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

    பதிலளிநீக்கு