25 ஜூன், 2011

தோழர்கள்



கே.கே.நகரில் இருக்கும் ஒரு புத்தகக்கடையில் நடந்த நிகழ்ச்சி அது. ஒரு அதிதீவிர இடதுசாரி முற்போக்கு புரட்சித் தோழர், இன்னொரு ‘சாதாதோழரை சந்தித்தார்.

“வணக்கம் தோழர். முதல் தடவையா சந்திக்கிறோம். நீங்க இப்படி இருப்பீங்கன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை

வணக்கம் தோழர். நான் எப்படி இருப்பீன்னு எதிர்ப்பார்த்தீங்க?

“உங்களோட பிலாக் ப்ரொஃபைல் போட்டோவில் ஜம்முன்னு தொப்பியெல்லாம் போட்டுக்கிட்டு, தாடியெல்லாம் வெச்சுக்கிட்டு சூப்பரா இருந்தீங்க. நேர்லே ரொம்ப சுமாரா இருக்கீங்களே?


நாற்பதை தொட்ட
சாதாதோழர் கொஞ்சம் தொப்பையும், கிப்பையுமாக மொக்கையாகதானிருப்பார். ஆனாலும் புரட்சித்தோழர் நேர்ப்பேச்சில் திடீரென சூட்டுக்கொட்டையாய் சுட்டுவிட, குழம்பிப் போனார்.

“அது சின்ன வயசுலே எடுத்த போட்டோ தோழர்
என்று சொல்லி சமாளித்தார்.

“அதானே பார்த்தேன். சின்ன வயசுலே நல்லா இருந்திருக்கீங்க

இவ்வகையாக சம்பாஷணை முடிந்தது.

சொல்ல மறந்துவிட்டோமே? நம் ‘சாதாதோழரின் ப்ரொஃபைல் போட்டோவில் இருந்தவர் தோழர் சேகுவேரா. புரட்சித் தோழரோ இன்னமும், சின்ன வயசில் சாதா தோழர் சுருட்டெல்லாம் பிடித்துக் கொண்டிருந்தவர் என்று ‘சீரியஸாகநம்பிக் கொண்டிருக்கிறார்.

 ‘ஒயிட் நைட்ஸ்எழுதிய தஸ்தாவேஸ்கி இருந்திருந்தால், இச்சம்பவத்தை கேள்விப்பட்டு தூக்கு மாட்டி செத்திருப்பார்.


* - * - * - * - * - *


இவர் இன்னொரு தீவிர இடதுசாரி புரட்சித் தோழர். இந்துத்துவா சொம்பு தூக்கி அலையும் ஜெயமோகனை டவுசர் அவிழ்த்து ஓடவிட தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்.

வகையாக சிக்கியது ‘அவன் இவன்

முதல் நாள் முதல் காட்சியே படத்தை பார்த்தார். படம் பார்த்த எஃபெக்டில் நேராக கம்ப்யூட்டர் முன்பாக அமர்ந்தார். மூளையை கசக்கி யோசித்து ஒரு டைட்டிலை வைத்தார். அவன் இவன் – ஜெயமோகனின் கிழிந்த முகத்திரை!

வேகவேகமாக பதிவினை தட்டச்சினார். பாலாவின் ஆணாதிக்கத் திமிர், ஜெயமோகனின் முகம் சுளிக்க வைக்கும், காது கூச வைக்கும் வசனங்கள் மற்றும் இஸ்லாமிய வெறுப்பு என்று கலந்துக்கட்டி புரட்சிகர திரைவிமர்சனத்தை வலைப்பதிவில் பதிவிட்டு விட்டார்.

முதல் பின்னூட்டமே படத்துக்கு வசனம் ஜெயமோகன் அல்ல, எஸ்.ரா என்று சுட்டிக் காட்டுகிறது. உடனே தோழர் ஜெயமோகன் என்று தட்டச்சிய இடத்தையெல்லாம் Find போட்டு கண்டுபிடித்து, எஸ்.ரா என்று மாற்றிவிடுகிறார். கோழி குருடா இருந்தாலென்ன, செவிடா இருந்தாலென்ன, ருசியாக இருந்தால் சரிதான் என்பது தோழரின் நிலைப்பாடு. தலைப்பும்  ‘எஸ்.ரா.வின் கிழிந்த முகத்திரைஆனது. ஒருவழியாக யாருடைய முகத்திரையாவது கிழிக்க வேண்டும் என்கிற தோழரின் ஆவலும் பூர்த்தியானது.

அந்த தவறுக்கு தோழர் கொடுத்த விளக்கம்தான் சூப்பர். டைப் அடிக்கும்போது தவறுதலாக எஸ்.ரா என்பது ஜெயமோகன் ஆகிவிட்டதாம். டைப் அடிப்பவர்களே! நீங்களே சொல்லுங்கள். எஸ்.ரா என்று தட்டச்சும் போது, அது ஜெயமோகன் என்று மாற ஒரு சதவிகிதமாவது ஆவது வாய்ப்பு இருக்கிறதா?


* - * - * - * - * - *


இந்த புரட்சித் தோழர் ஆரம்பத்தில் சினிமா, கினிமாவென்றுதான் ஏதோ காமாசோமாவாக எழுதிக் கொண்டிருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. ஓவர் நைட்டில் புரட்சிக்காரராய் மாறிப்போனார். எதை செய்தாலும் அதை ‘புரட்சியாகவே செய்ய நிரம்பவும் மெனக்கெட்டார்.

எந்த லெவலுக்கு என்றால்...

சிலர் பின்னூட்டம் போடும் போது, கடைசியாக தங்கள் பெயரோடு பின்னூட்டம் இடுவார்கள். ‘அன்புடன் டோண்டு ராகவன் என்பது மாதிரி. நம் தோழர் இப்படி பின்னூட்டம் இடம் ஆரம்பித்தார். “இப்படிக்கு தோழர் ஃபயர்லுக்கு

எங்காவது அநீதியைக் கண்டு உன் நெஞ்சு கொதித்தால், நீயும் என் தோழன் என்பார் சே. இணையம் முழுக்க நடக்கும் அநீதிகளை கண்டு மனம் வெதும்பிப் போனதாலேயோ என்னவோ, நம் தோழர் ஃபயர்லுக்கு தன்னைத்தானே கூட தோழர் என்றே அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கோயிலில் அர்ச்சனை செய்ய அய்யர் பெயரை கேட்கும்போது கூட ‘தோழர்என்கிற ஃப்ரீபிக்ஸோடுதான் தன் பெயரை தோழர் சொல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


* - * - * - * - * - *


இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதங்கள்.

இதுபோல இன்னும் ஏராளமான தீவிர இடதுசாரி மொக்கைகளை உருவாக்கியிருக்கிறது வினவு இணையத்தளம். மக்கள் கலை இலக்கிய கழகம் என்கிற அமைப்பின் செயல்பாடுகளின் மீது ஏராளமானோர் வைத்திருந்த மரியாதை, அபிமானம் எல்லாவற்றையும் காலி செய்வதற்கென்றே வினவு இணையத்தளம் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிறது.

ஒருவன் நாத்திகனாக வாழ்வதுதான் உலகிலேயே மிகக்கடினமான செயல். முழுக்க போர்த்திய ஊரில், நிர்வாணமாய் அலைவது மாதிரி. அதைவிட கடினம், தீவிர கம்யூனிஸ்டாக இருப்பது. இதை உணர்ந்திருப்பதாலேயே, கம்யூனிஸம் பற்றிய சரியான புரிதல் கொண்ட பலரும் கூட மனசுக்குள்ளாக மட்டுமே கம்யூனிஸ்ட்டாக வலம் வருகிறார்கள். சில பேர் சமரசம் செய்துக்கொள்ளாத வாழ்க்கைச் சூழல் அமையும்போது தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

துரதிருஷ்டவசமாக தீவிர கம்யூனிஸ்டுகளின் இணைய செயல்பாடுகள், மேற்கண்ட தோழர்களை போல மேனாமினுக்கி கம்யூனிஸ்ட்களை உருவாக்கித் தொலைக்கிறது. கம்யூனிஸ்ட், நக்சல்பாரி என்று சொல்லிக் கொள்வது இவர்களுக்கு சேகுவேரா டீஷர்ட் போடுவது மாதிரி ஒரு Passion. இவர்களில் யாரும் போலிஸிடம் தடியடி பட்டவர்கள் அல்ல. தடியடி படுபவர்களை வேடிக்கை பார்ப்பவர்கள்.

அரசு இயந்திரம் என்றேனும் இவர்களை நெருங்கும் என்று தெரிந்தால், டீ ஷர்ட்டை தலைக்கு மேலே கையை தூக்கி அவிழ்த்துப் போடுவதைப் போல, கம்யூனிஸத்தை அவிழ்த்துப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

பதிவுலகத்தைப் பற்றி நிறைய எழுதினால் ஹிட்ஸ் கிடைக்கும் என்பதற்காக, ஒரு ப்ளூ ஃப்லிம் எழுத்தாளரை, பிராக்ஸியாக எழுதவைத்து பதிவுகள் வெளியிட்டு வருகிறது வினவு. இப்படிப்பட்டவர்களால், ஒரே ஒரு உருப்படியான கம்யூனிஸ்ட்டையாவது இணையத்தில் உருவாக்க முடிந்தால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.

32 கருத்துகள்:

  1. யுவா அது நக்கலுக்கு சொன்னது ......................! சே குவேரா T SHIRT ஒரு காலத்தில் போட்டுக்கொண்டு திரிந்தவன் நான்
    அந்த பதிவர் KRP செந்தில் ................ என் ஓர்குட் profile சே குவேரா படம் தான் இருக்கும் நண்பரே . சரி அதை விடுங்கள்
    சே குவேரா தெரிந்தவர் தான் நீங்கள் நீங்கள் சமூகத்திற்கு என்ன செய்து விட்டீர்கள் .

    நான் கிராமத்தில் இருந்து வந்தவன் , மடையனாகவே இருக்கட்டும் , சே குவேரா தெரியவில்லை என்றால்
    சமூக அக்கறை இல்லாமலேவா இருக்கும் .

    பதிலளிநீக்கு
  2. தோழர் வெண்ணிற இரவுகள் அவர்களே! அது நீங்கதானா? :-(

    பதிலளிநீக்கு
  3. நான் தான் லக்கி நீங்கள் விரும்பினால் வீட்டிற்கு வாருங்கள் , உங்களுக்கு T SHIRT இலவசமாய் தருகிறேன் மேலும்
    சே பற்றி புத்தகங்களும் இருக்கிறது . சரி விடயத்திற்கு வருவோம் சே தெரிந்தலாயே புரட்சியாளராய் இருக்கப்போவதில்லை .
    கிண்டலுக்கு சொல்லுவதை உங்களால் மட்டுமே இப்படி திரித்து சொல்ல முடியும் .

    பதிலளிநீக்கு
  4. சரி வெண்ணிற இரவுகள் என்று ஏன் பெயர் வைத்தேன் DOSTOVESKY படித்ததால் தான் யுவா , ஒரு சிறுவன்
    சொல்வான் சே யார் என்று சென்னையில் T -SHIRT சொல்லிக்கொடுக்கும் நண்பரே .தோழர்கள் உங்கள் ஹீரோவை
    பற்றி எழுதி விட்டார்கள் அதனால் எதோ கோவத்தில் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் . சரி விவாதித்து பயன் இல்லை
    விளம்பரத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. எல்லோரும் ஒரே சொம்பு தான் பயன்படுத்துறாங்களாம், அதான் இந்த முறை லேட் ஆயிடுச்சாம்

    பதிலளிநீக்கு
  6. தோழர் வெண்ணிற இரவுகள்!

    கண்டிப்பாக உங்கள் வீட்டுக்கு வருகிறேன். இணையத்தில் மோதினாலும், நேரில் பார்த்தால் கட்டிப் பிடித்துக் கொள்வது என்று தோழர்களோடு ஜெண்டில்மேன் அக்ரீமெண்டில் இருக்கிறோம்.

    நீங்கள் சேகுவேரா டீஷர்ட்டை அணிய கொடுத்தால், அணிந்துக் கொள்வதற்கு தயார். தமிழக சேகுவேராவான தந்தை பெரியாரின் படம் பொறித்த டீஷர்ட் அணியும் வழக்கம் இருப்பதால் பிரச்சினையில்லை.

    பதிலளிநீக்கு
  7. http://vennirairavugal.blogspot.com/2009/12/blog-post_19.html நண்பரே நான் எழுத வந்த புதிதில் 2009 எழுதியது , நான் எழுதியது மொக்கையாகவே இருக்கட்டும் உங்களை பொறுத்த வரை ,
    எழுத்து பிழைகள் உண்டு , ஒத்துக்கொள்கிறேன் , நான் சாருவோ , இல்லை யுவாவோ கிடையாது , ஆனால் அதில் உணர்வு இருக்கும் .
    நீங்கள் யாரை தெரியவில்லை என்று சொல்லி இருந்தாலும் சும்மா இருந்திருப்பேன் , சே வைத்து தான் எனக்கு பொது உடமை அரசியலையே
    படிக்க ஆரம்பித்தேன் . ஆனால் இப்பொழுது தான் புரிகிறது , சே செய்தது மக்கள் திரள் அல்ல தனி நபர் சாகசம் . இருந்தாலும் எனக்கு அவர் மீது
    மரியாத உண்டு . நீங்கள் நான் மொக்கை என்று சொல்லுங்கள் சொல்லி இருக்கிறீர்கள் , இது எல்லாம் பிரச்சனையா என்று நான் ஒதுங்கி போய் இருக்கிறேன் .
    ஆனால் எங்களை வைத்து தோழர்களை அவமானபடுத்த வேண்டாம் . அவர்கள் யாரும் சுயநலமாய் இருப்பவதில்லை ,எனக்கு தெரிந்து
    வாழ்வையே விட்டு விட்டு வந்தவர்கள் , போராட்டங்களை சந்தித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் , என்னையும் புலிகேசியையும் தனி நபராய்
    தாக்குங்கள் , நான் கண்டுகொள்ளவே மாட்டேன் அது எனக்கு வேலையும் அல்ல . ஆனால் இதை வைத்து தோழர்கள் என்று எழுதுவது
    வன்மமாய் எழுதுவது என்று ஆனதால் ? உங்களுக்கு மறுப்பு தெரிவிக்கறேன்

    பதிலளிநீக்கு
  8. தோழர் வெ.இ.

    உங்களது இந்த குறிப்பிட்ட கருத்திலேயே புரட்சி நெடி வீசுகிறது. நீங்கள் புரட்சித் தோழர் எனும் கருத்தாக்கத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. //சே இன்று வணிக பொருள் ஆகி விட்டது வருத்தமே.அவர் யாரென்று தெரியாமல் அவர் படம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு செல்கின்றனர்.வரலாறு கூட அவர்களுக்கு தெரியாது.சே வணிக பொருளோ,சினிமா நாயகனோ இல்லை //

    தோழர் வெ.இ.

    உங்கள் பதிவு அபாரம். மேற்சொன்ன வார்த்தைகள் நீங்கள் சொன்னது. அதையேதானே இந்தப் பதிவிலும் நான் சொல்லியிருக்கிறேன். ஒய் டென்ஷன்?

    பதிலளிநீக்கு
  10. பைகானூர் முத்து5:41 PM, ஜூன் 25, 2011

    யுவகிருஷ்ணா,

    புரட்சி பொடலங்காய்கள் விற்கும் வெத்து வேட்டுகளுக்கு கம்யூனிசமும் தெரியாது , சே வையும் தெரியாது. சொந்த வீட்டில புரட்சியை செய்ய முடியாதவனுங்க தான் இங்கே பின்னூட்டத்தில ப்ளாக்ல பொரட்சியை கூறு கட்டி விக்கிறானுங்க..,

    எல்லாத்துக்கும் வெங்காய வெளக்கம் தரும் தோலர்கள் சமீபத்தில் ஒரு பஸ்ஸூல அல்லக்கை ஒன்னு கக்கூஸ் போனதுக்கும் , இப்போ வெட்டி பந்தா வாந்தி ஒன்னு அவுத்து காட்டிட்டு அலையுறதுக்கும் ஒரு மயித்தியையும் கண்டிக்கல,

    இவனுங்களே போலி ஐடில பொறம்போக்கா அலையுறப்போ பொரச்சியாஅது பொடலங்காயாவது..,

    வெட்டபயலுவலுக்கு வீறாப்பா பாருன்னு சொல்வாங்க அப்படி வெறும் மட்ட பயலுவ பொழப்ப பாரும்யா

    பதிலளிநீக்கு
  11. யுவா... செம...

    //
    டைப் அடிப்பவர்களே! நீங்களே சொல்லுங்கள். எஸ்.ரா என்று தட்டச்சும் போது, அது ஜெயமோகன் என்று மாற ஒரு சதவிகிதமாவது ஆவது வாய்ப்பு இருக்கிறதா?
    //
    :)))))))))))))

    இன்னொரு முக்கியமான விசயத்தை விட்டுட்டீங்க... முதலாளித்துவத்தை எதிர்க்குற இவங்க எல்லாம் எங்க வேலை செய்யுறாங்கன்னு யாரும் சொல்லிக்குறதே இல்லை :)

    பதிலளிநீக்கு
  12. நான் தோழரா??? ஏங்க என்னைய தோழர்னு சொல்லி அவங்கள அசிங்கப் படுத்துறிங்க. நானெல்லாம் சுயநலவாதி. நானெல்லாம் தோழராக எவ்வளவு வருச்மாகும்னு தெரியல...

    பதிலளிநீக்கு
  13. எனக்கு ஒரு 'சே' தேநீர் சட்டை பார்சல் (ப்ளீஸ்)...

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா9:40 PM, ஜூன் 25, 2011

    வினவு தளத்தில் சாருவையும் அவரது அடிவருடிகளையும் கிழித்து காயப்போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார்களே! அடிவருடிகளின் செயலாளராக இருக்கும் உங்களின் அபிப்ராயம் என்ன? தெரிந்துகொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  15. மிக மிக ரசித்துப் படித்தேன். சூப்பர் நக்கல் :)

    அப்புறம் அது passion அல்ல. fashion. உங்களை யாராவது ஆங்கிலம் தெரியவில்லை என்று நக்கலடிக்கப் போகிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா11:43 PM, ஜூன் 25, 2011

    Mr. Yuvakrishna Vinavu is realy good and Makkal kalai ilakiya kalzhgam ellorum pala porratngalai samugathil seaidu varuginraner avergalai summa jalli adipathu vendam

    பதிலளிநீக்கு
  17. Mr. Yuvakrishna Vinavu is realy good and Makkal kalai ilakiya kalzhgam ellorum pala porratngalai samugathil seaidu varuginraner avergalai summa jalli adipathu vendam

    பதிலளிநீக்கு
  18. //டைப் அடிப்பவர்களே! நீங்களே சொல்லுங்கள். எஸ்.ரா என்று தட்டச்சும் போது, அது ஜெயமோகன் என்று மாற ஒரு சதவிகிதமாவது ஆவது வாய்ப்பு இருக்கிறதா?//
    ஒரு குரங்கைத் தமிழ் டைப்ரைட்டர் மீது இறக்கி விட்டால் அது அங்கும் இங்கும் தாவும் போது அமுங்கும் கீ க்களினால் ஒரு கம்பராமாயணப் பாடல் டைப்பானது எனச சொல்வது எத்தனை சாத்தியமோ அத்தனை சாத்தியமிருக்கிறது

    பதிலளிநீக்கு
  19. yuva, unkalukku saralamaana-ezhuththu,nakaichchuvai,nakkal ellaam varukirathu.intha thiramaikalai vaiththu,naattirkum,veettirkum ubayokamaana katturaikalai ezhuthalaam. anbum vaazhthukkalum.ssr sukumar

    பதிலளிநீக்கு
  20. சாருவை பற்றி உண்மையை சொன்னால், வினைவை தாக்கி ஒரு பதிவு!
    http://charuonline.com/blog/?p=2280 (கடைசியில் இருந்து இரண்டு, மூன்றாவது வரியில் உள்ள சொல்லாடலுக்கு)
    இந்த அளவுக்கு சொம்பு தூக்க வேண்டாம்!

    பதிலளிநீக்கு
  21. சொம்பு தூக்குவதற்கு ஒரு பட்டம் கொடுப்பதாக இருந்தால் அது கண்டிப்பாக உங்களுக்கு தான்....திமுக, சாரு இன்னும் யாருக்கெல்லாம் சொம்பு தூக்குவதாக உத்தேசம் யுவா. நீங்கள் என்ன இவர்களிடம் வாங்கி தின்ன கடனை கழிப்பதற்கா இவர்களுக்கு சோம்பு தூக்கி கொண்டு அலைகிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  22. எனக்கு ஒரு தெலுகு நண்பன் உண்டு. அரைகுறையாய் அவன் பேசும் தமிழ் வினோதமாக இருக்கும். பல நேரம் கோமாளித்தனமாய் இருந்தாலும் அவன் தொடர்ந்து அரைகுறை தமிழ் பேசும் முயற்சியை கைவிடுவதில்லை. நாம் தமிழில் "டா" என்று சொல்வது போல் அவன் "ரா" என்று சொல்லுவான். உதாரணமாக "இங்க வாடா" என்று நாம் சொன்னால் அவன் "இங்க வா ரா" என்பான். "எங்க டா" என்று நாம் கேட்பது போல் அவன் "எங்க ரா" என்பான்.

    நேற்று சாட்டில் அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன்.

    me: "180 படம் பார்த்தாச்சா?"

    அவன் பதிலுக்கு

    XXX" "ஜெயமோகன்" என்று டைப் செய்திருந்தான்.

    நான் அப்போது ஒன்றும் புரியாமல் குழம்பினேன். இப்போது உங்கள் கட்டுரை படித்த பிறகு தான் தெளிவு பெற்றேன்.

    அதாவது "எஸ்.ரா(Yes da)" என்ற அவனது வழக்கமான கலப்பட தமிழ் தான் தட்டச்சு பிழையாக "ஜெயமோகன்" என்று வந்திருக்கவேண்டும்.

    நன்றி யுவா.

    பதிலளிநீக்கு
  23. // நானெல்லாம் சுயநலவாதி. நானெல்லாம் தோழராக எவ்வளவு வருச்மாகும்னு தெரியல//

    உங்க‌ அறியாமை பேரிழ‌ப்பு தோழ‌ர் :)

    யுவா,
    ஒரு முறை புத்தாண்டு கொண்டாட்ட‌த்திற்கு சென்றிருந்தேன். தோழ‌ர்க‌ள் குழு ஒன்று வ‌ந்து எங்க‌ளிட‌ம் "இர‌வு 1 ம‌ணிக்கு இங்க‌ சுத்துறீங்க‌ளே!!உங்க‌ வீட்டுல‌ கேட்க‌மாட்டாங‌க்ளா" என்றார். நான் "நீங்க‌ கூட‌த்தான் இப்ப‌, இங்க‌ இருக்கிங்க‌. உங்க‌ வீட்டுல‌ த‌ண்ணி தெளிச்சிட்டாங்களா" என்றேன்..

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா3:40 PM, ஜூன் 27, 2011

    வேணாம் யுவா ! ஒரு விரல நம்ம நீட்டுறதுக்கு முன்னால ....

    - Bloo

    பதிலளிநீக்கு
  25. //சே செய்தது மக்கள் திரள் அல்ல தனி நபர் சாகசம் . இருந்தாலும் எனக்கு அவர் மீது
    மரியாத உண்டு//

    வெண்ணிற இரவுகள்,

    சேவின் போராட்ட வழிமுறையில்
    பலருக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் தன்னுடைய ஆஸ்துமா நோயுடனும், பிழைப்புவாதிகளுடன் சமரசமின்றியும், மக்களின் விடுதலைக்காக விடாப்பிடியாகப் போராடிய வகையில் அவரது தியாகம் மதிப்பளிக்கவேண்டியது.

    யுவா,
    செம்புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்டுகளை விடவும் அதனின் எதிரிகள்தான் அதிகம் பேசுகிறார்கள். அதன் மீதான கிலிதான் இப்படி கேலி பேச வைக்கின்றது என நினைக்கிறேன். புரட்சி என்றவுடன் சிலருக்கு தமிழக புரட்சி!க் கழிசடைகள் நினைவிற்கு வந்து விடுகிறார்கள் போலும். அதனால்தான் என்னவோ புரட்சி செய்பவர்கள் ஒரு சூப்பர்மேனைப்போல இருக்க வேண்டும் எனக் கற்பனை செய்துகொள்கிறார்கள்.தொப்பையாக வழுக்கையாக இருந்தால் புரட்சி செய்ய முடியாதா என்ன!

    சிலருக்கு புரட்சி எப்போ வரும் என்று ஒரே கவலை. இவர்கள் தங்களது வாழ்நாளிலேயே அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் எனத் துடிக்கும் தற்குறிகள். புரட்சிகர சூழல் இல்லாமல் புரட்சி சாத்தியமல்லதான், அதற்காக சாக்கடையில் பன்றிகளுடன் படுத்துருளவா முடியும்!

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா11:14 AM, ஜூன் 28, 2011

    உன் தலைவரின் மகளைப் பற்றி இவ்வளவு அவதூறு கூறியும் சகித்துக் கொண்டு சொம்பு தூக்கும் உன் கட்சிப் பாசம்... ஐயோ ... மெய் சிலிர்க்கின்றது, உடன்பிறப்புகளுக்கு பொதுவாக கல்வியறிவு குறைவு என்று நினைக்கிறோம். இன்டர்நெட்டில் இவ்வளவு வாங்கு வாங்கியும் கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லாத உடன்பிறப்புகள்????

    பதிலளிநீக்கு
  27. ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்! னு ஒளிப்படத்துக்கு கீழே போட்டு வச்சிருக்கிங்க.
    ஆனா தோழர்கள் மீது பயங்கர கடுப்புல இருக்கிங்க போல..

    பதிலளிநீக்கு