20 ஜனவரி, 2009
வில்லு - பார்ப்பவனையெல்லாம் கொல்லு!
முன்பெல்லாம் சூப்பர் ஸ்டாரை ஃபாலோ செய்துக்கொண்டிருந்த இளையதளபதி இப்போது மக்கள் திலகம் பாணிக்கு மாறியிருக்கிறார். பின்னே சூப்பர் ஸ்டார் என்ன தமிழ்நாட்டின் முதல்வராகவா இருந்தார். 2021க்கு இன்னொரு முதல்வர் ரெடி. விஜய் மன்றக்கொடியோடு உன்னால் முடியும் என்ற வாசகத்தோடு தொடங்குகிறது படம். 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று டைட்டில் பாடுகிறது. ஒரு ஆயா எனக்கு பிடித்த ஹீரோ என்று எம்.ஜி.ஆரை சொல்லிவிட்டு அடுத்து விஜய்யை சொல்லும்போது தடாலடி ஓபனிங்.
எல்லாம் சரி. இந்த கும்மாளங்களில் காட்டிய கவனத்தை படத்தில் கொஞ்சமாவது இயக்குனர் காட்டியிருக்க வேண்டாமா? இப்படத்தைப் பார்ப்பவர்கள் குருவியே சூப்பர் படம் என்கிறார்கள். படத்தில் கதை என்ற ஒரு வஸ்து கடைசிவரைக்கும் தென்படவேயில்லை. குசேலனை விட ஒரு மோசமான படத்தை இனிமேல் பார்க்கமுடியுமா என்று தவித்திருந்த வேளையில் மாமருந்தாய் வந்து சேர்ந்திருக்கிறது வில்லு. பாடல்கள் மட்டும் ஹிட்டு. மீதியெல்லாம் கமர்கட்டு.
அழகிய தமிழ்மகன் மூலமாக சாய்மீராவின் சாம்ராஜ்யத்தை நிலைகுலைய வைத்தவர் விஜய். இப்போது அய்ங்கரனுக்கும் பலமாக ஆப்பு வைத்திருக்கிறார். அய்யோ பாவம். வடிவேலுவுக்கு நேரம் சரியில்லை. சிரிப்பு மூட்ட எவ்வளவோ மெனக்கெடுகிறார். சாரி பாஸ். வடிவேலு நிலைமையாவது பரவாயில்லை. நயன்தாரா நிலைமை ரொம்ப மோசம். அழகாக இருந்தும் என்ன பிரயோசனம்?
இந்த கோராமையில் விஜய் டபுள் ஆக்சன் வேறு. அப்பா விஜய்க்கு ஜோடி ரஞ்சிதா. கொடுமையோ கொடுமை. பிரபுதேவா பேசாமல் டான்ஸ் மட்டும் ஆடிவிட்டு போகலாம். எதற்கு டைரக்சன் கருமமெல்லாம்? கதையே இல்லாமல் துண்டு துண்டாக காட்சிகளை எடுத்து இரண்டரை மணி நேரத்துக்கு எடிட் செய்துவிட்டால் படமாகிவிடுமா?
இவ்வளவு கொடுமையிலும் விஜய் மட்டும் மிளிர்கிறார். அழகாக இருக்கிறார். ஆக்சனில் அனல் பறக்கிறது. ஆட்டத்தில் சுறுசுறுப்பு. நடிப்பில் விறுவிறுப்பு. க்ளைமேக்ஸில் பசித்த சிங்கத்தின் வெறியை கண்களில் கொண்டு வருகிறார். சண்டைக்காட்சிகளும், ஆகாய விமான ஆக்சனும் ஹாலிவுட் தரம்.
இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி. இளகாத மனம் படைத்தவர்களாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் இந்த கருமாந்திரத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டாம். 'வில்லு - பார்ப்பவனையெல்லாம் கொல்லு' என்று முடிவெடுத்துவிட்டு படமெடுத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இரட்டை அர்த்த காமெடிகள் வேறு. த்தூ..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Hi Lucky
பதிலளிநீக்குI saw Lucky only because of your review :-)
Got a bad headache after that - Time for Vijay to watch movies like "Nadodigal" - Sasikumar looks very promising na?
Friend from Bangalore