16 ஜூலை, 2012

பில்லா-2

பிரபாகரனை நேரில் போய் பார்த்துவிட்டு வந்தவர்கள்கூட இவ்வளவு தில்லாக தாம் இயக்கிய படங்களில் காட்சிகளை வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ராஜீவ்காந்தி கொலையை ‘இந்தியப் பார்வையில்’ படமாக்கிய குற்றப்பத்திரிகைக்கு கூட இங்கே தடைவிதிக்கப்பட்டது. ஆனால், பில்லா-2 படத்தின் டைட்டில் நேரடியாக ஈழத்தில் நடத்தப்பட்ட இந்திய ராணுவ அமைதிப்படையின் கொடூரங்களை பட்டியலிடுகிறது. இப்போது தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஓர் இனத்தின் நியாயமான வலியை கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வாயிலாக இரண்டரை, மூன்று நிமிடங்களில்  பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். “நாங்களெல்லாம் பாவமில்லையா?” என்று இதில் யாரும் இறைஞ்சவில்லை. டேவிட்பில்லாவின் சிறுவயதுக் காட்சிகள் என்கிற சாக்கில் ‘இதுதான் உண்மையில் நடந்தது’ என்று நெற்றியில் அடித்தாற்மாதிரி  நறுக்கென்று மவுனமொழியில் காட்சியாக்கி தருகிறார்கள். படம் பார்த்துவிட்டு ‘மொக்கை’ என்று ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், பிலாக்கிலும் விமர்சனம் எழுதிய மொக்கைகள் எத்தனைபேர் இப்படத்தின் டைட்டிலை புரிந்துகொண்டார்கள் என்று தெரியவில்லை.

தமிழகத்தில் அகதிமுகாம்களின் நிலை பற்றிய வர்ணனைகள் தமிழ் சினிமாவில் இடம்பெற்றதாக தெரியவில்லை. லீனாமணிமேகலை இயக்கிய ‘செங்கடல்’ ஆவணப்படம் விதிவிலக்கு. ஓரளவுக்கு நந்தா, ராமேஸ்வரம் படங்களில் காட்சியாக்க முயற்சித்திருக்கிறார்கள் (வேறு சில படங்களும் இருக்கலாம், இவை நான் பார்த்தவை மட்டுமே). கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சபரி’யில்தான் அகதிமுகாம்களில் நம் அதிகாரிகளின் அத்துமீறல் நேரடியாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதுவும் கேப்டனின் ஹீரோயிஸத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான காட்சியாகவே அமைந்தது. படத்தின் தொடக்கத்தில் இரண்டு, மூன்று காட்சிகள்தான் என்றாலும் பில்லா-2வில் இது வலுவாக காட்டப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் ஒரே ஒரு காவல்துறை அதிகாரியைதான் காட்டியிருக்கிறார்கள். அகதிகளை நம் அதிகாரவர்க்கம் எதற்காகவெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று பிரச்சாரநெடி ஏதுமின்றி இயல்பான முறையில் காட்டியிருக்கிறார்கள்.

இதற்காக பில்லா-2வை ஈழப்பிரச்சாரத் திரைப்படமாகவெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. முந்தைய அஜீத்தின் படவெளியீட்டின்போது ஈழத்தமிழர்களோடு அவருக்கு நேர்ந்த பிரச்னைக்கு பரிகாரமாககூட பார்க்கலாம். ஆனாலும், ‘சென்ஸாரில் தட்டிவிடுவார்களோ?’ என்றெல்லாம் அச்சப்படாமல் நேரடியாக சொல்ல நினைத்ததை நேர்மையாக சொல்லியிருப்பதற்காக பாராட்டலாம். ஒருவகையில் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் நியாயத்தை இந்தியத் திரைமொழியில் பேச பில்லா-2 பிள்ளையார்சுழி போட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

படத்தை முதல் நாள் முதல் காட்சி ப்ரீமியர் ரேட்டில் பார்த்த அணில் ரசிகர்கள் உடனடியாக எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், பிலாக், மொட்டைக் கடிதாசி என்று எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தி, ‘படம் மொக்கை’ என்று பிரச்சாரம் செய்து, தம் கடமையை முடித்துக் கொண்டார்கள். இந்தப் பிரச்சாரம் வழக்கமாக அஜித்தின் எல்லாப் படங்களுக்கும் செய்யப்படுவதுதான். பில்லா-2 நிச்சயமாக ‘சுறா’வோ, ‘வில்லு’வோ அல்ல. அதே நேரம் பில்லா-1, மங்காத்தா அளவுக்கு கெத்துமில்லை. ஓரிருமுறை பார்க்கக்கூடிய படம்தான். அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கலாம். எந்த முன்முடிவுமின்றி பார்ப்பவர்களுக்கும் நல்ல படம் என்றே தோன்றும். சக்ரிடோலட்டிக்கு படமே எடுக்கத் தெரியவில்லை என்பவர்கள், தமிழில் இதற்கு முன்பாக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படங்கள் என்று எதை கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழின் ஒரு சராசரி இயக்குனரால் இப்படத்தின் தரத்தில் பாதியைக் கூட எட்டமுடியாது என்பதுதான் நிஜம். ப்ரீக்குவல் என்பதால் ஒருவேளை பில்லா-1ஐ விட அடக்கி வாசிக்கவேண்டும் என்கிற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்திருக்கலாம். ரசிகர்களும் கூட பில்லா-1க்கு முன்பாக நடக்கும் கதை என்கிற உணர்விலேயே படம் பார்த்தால், எவ்வளவு சுவாரஸ்யமாக முன்கதைச் சுருக்கத்தை சொல்கிறார்கள் என்பதை உணரலாம்.  அடுத்ததாக ஒருவேளை பில்லாவின் சீக்குவல் எடுக்கப்பட்டால் பங்களா கட்டி புகுந்து விளையாடுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.

இதுபோன்ற கேங்ஸ்டர் படங்களுக்கு க்ரைம் அளவுக்கு செக்ஸும் ஒரு முக்கியமான அம்சம். பில்லா-1ல் நயன்தாரா, நமீதா என்று இந்த மேட்டர் அமர்க்களம். ஆனால் ஏனோ இப்படத்தில் ஏனோ ரொம்ப சைவமாக இருந்திருக்கிறார்கள். ஓங்குதாங்காக ரேஸ் குதிரை மாதிரி ப்ரூனோ அப்துல்லா இருக்கிறார். செம கட்டை என்று சொல்லமுடியாவிட்டாலும், சொல்லிக் கொள்ளும்படியாக ஓமணக் குட்டி இருக்கிறார். இருவரையும் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரிதான் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். அந்த பாலியல் விடுதி பாடல் காட்சியும் ஆகா, ஓகோவென்று இல்லை. ஏற்கனவே ‘சிந்தனை செய்’ என்கிற திரைப்படத்தில் அபாரமாக எடுக்கப்பட்ட பாடல்காட்சி ஒன்றின், சுமார் பிரதியாகவே அப்பாட்டும் அமைந்திருக்கிறது.

இரண்டாம் பாதியில் வரும் பில்டப் பாடல் நிச்சயமாக இதுவரை தமிழில் படமாக்கப்பட்ட மிகச்சிறப்பான பாடல் என்று சொல்லலாம். முழுக்க கிராஃபிக்ஸ், யுவன்ஷங்கரின் அதிரடி மியூசிக், நா.முத்துக்குமாரின் ஷார்ப் லிரிக்ஸ், அல்டிமேட் ஸ்டாரின் அதிரடி ஸ்டைல் என்று எல்லா ஏரியாவிலும் சிக்ஸர் அடிக்கும் பாட்டு இது. பில்லா-வின் தீம் மியூசிக் படத்தின் தொடக்கத்தில் எங்கும் வந்துவிடாத அளவுக்கு யுவன்ஷங்கர்ராஜா மிக ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார். டேவிட் பில்லா, டான் ஆகும் இடைவேளைக் காட்சியில்தான் (அதுவும் மெல்லியதாக) அந்த இசையைக் கொண்டு வருகிறார். அதுபோலவே பில்லா-1ல் வரும் இண்டர்போல் ஆபிஸர், ப்ரீக்குவலிலும் ஒரு காட்சியில் பில்லா சாதா ஆளாக இருக்கும்போது அவருக்கு அறிமுகமாகிறார். ஏற்கனவே எடுக்கப்பட்ட படத்தின் தொடர்ச்சி கெடாதவகையில், முன்கதையை கையாளுவது சாதாரணமான விஷயமல்ல. பில்லா-2 அவ்வகையில் பர்ஸ்ட் க்ளாஸில் தேறுகிறது.

படத்தின் வசனங்கள் ‘ஷார்ப்’ என்றாலும், ஓவர் புத்திசாலித்தனமோ என்றுகூட ஒருக்கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. பில்லாவின் உலகம் முட்டாள்கள் அற்றது என்று தோன்றுகிறது. ‘தல’ எதைப் பேசினாலும், அது ‘பஞ்ச்’ ஆகத்தான் இருக்கவேண்டும் என்று இயக்குனர், வசனகர்த்தாவிடம் கேட்டுக் கொண்டாரோ என்னவோ தெரியவில்லை. அக்கா செத்துப் போகும்போது சுடுகாட்டுக்கு வந்தும், ‘தல’ ஏதாவது பஞ்ச் வைத்துவிடுவாரோ என்று மனசு பதறுகிறது.

“இவர் சுட்டுக் கொண்டே இருக்கிறார், மற்றவர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றெல்லாம் படத்தை குறை சொல்பவர்கள், இதற்கு முன்பாக ஏதாவது சினிமா பார்த்திருக்கிறார்களா என்றே சந்தேகம் வருகிறது. திரைக்கதை கொஞ்சம் மெதுவாகவே நகர்ந்தாலும் படமாக்கம், நடிகர்களின் ஃபெர்பாமன்ஸ், கேமிரா, எடிட்டிங் என்று தொழில்நுட்பரீதியாக சிறப்பான விருந்து பில்லா-2.

படம் மொக்கை. வேஸ்ட்டு. பில்லா இல்லை நல்லா என்றெல்லாம் எழுதினால் ஃபேஸ்புக்கிலும், பிளாக்கிலும் நூற்றி சொச்சம் ‘லைக்’, ’கமெண்டு’ எல்லாம் கிடைக்குமென்றாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, ரிஸ்க் எடுத்து இதை சொல்கிறேன்.

அஜீத் ரசிகர்களுக்கு அட்டகாசம். ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விஷூவல் ட்ரீட். இந்த இரண்டு கேட்டகிரியிலும் இல்லாதவர்கள் பவர்ஸ்டாரின் ‘ஆனந்தத் தொல்லை’ ஆகஸ்ட்டில் வெளியாகும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியதுதான்.

38 கருத்துகள்:

  1. Hi Anna ,the finishing lines are hilarious .. LMAO...

    பதிலளிநீக்கு
  2. மிகச் சரியான விமர்சனம்...
    படம் பாக்கும் பொது பிரமிப்பாக இருந்தது என்னவோ உண்மை..

    பதிலளிநீக்கு
  3. நெத்தியடி..(நான் இன்னும் படம் பார்க்கவில்லை:-)

    பதிலளிநீக்கு
  4. //சக்ரிடோலட்டிக்கு படமே எடுக்கத் தெரியவில்லை என்பவர்கள்//
    யுவாண்ணா நானெல்லாம் சக்ரிக்கு படம் சரியா பாக்கவே தெரியவில்லைங்கிற கோஷ்டி... :-)

    பதிலளிநீக்கு
  5. நானும் உங்கள் கருத்தை சார்ந்தே எனது கருத்தையும் பதிவிட்டுள்ளேன்.
    நன்றி நல்ல விமர்சனத்திற்கு.
    நேரமிருந்தால் எனது வலைபூவையும் காணுங்கள்.
    கிருஷ்ணா வ வெ.
    www .kittz .info

    பதிலளிநீக்கு
  6. விமர்சனம் நச் :) அதுவும் கடைசி வரி நச்சோ நச் :)

    பதிலளிநீக்கு
  7. இது பில்லா-2 குறித்தான விமர்சனம் அல்ல. அப்பட விமர்சனங்கள் குறித்தான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  8. // ஒருவகையில் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் நியாயத்தை இந்தியத் திரைமொழியில் பேச பில்லா-2 பிள்ளையார்சுழி போட்டிருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.//

    வெளிவருமா என்ற கேள்வியோடு ??

    பதிலளிநீக்கு
  9. மிகச் சரியான விமர்சனம்...
    படம் பாக்கும் பொது பிரமிப்பாக இருந்தது என்னவோ உண்மை..

    பதிலளிநீக்கு
  10. All are saying flim is mokkai oo mokkai. idhula ivaru mattum supper innu sollararu. Yuav eppavavume ipptithan. Orrey DMK moosam sonnalum, ivuru mattum kalainar mathitri oru thalaivar illaimbaru

    பதிலளிநீக்கு
  11. நல்ல விமர்சனம், நன்றி யுவக்ரிட்டினா

    பதிலளிநீக்கு
  12. naan ungal vimarsanathai FB il link panniyullen... Vendam endral reply pannungal... eduthu vidugiren...

    பதிலளிநீக்கு
  13. //இவர் சுட்டுக் கொண்டே இருக்கிறார், மற்றவர்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றெல்லாம் படத்தை குறை சொல்பவர்கள்//...சார் இவிங்களுக்கு இந்த மாதிரி படத்துலயும் மாதிரி படத்துலயும் அருவா வெட்டு...குச்சி ஐஸ் லவ்வு ....இத எதிர் பாக்கராங்களோ என்னவோ ...எனக்கும் படம் பிடித்திருந்தது ......

    பதிலளிநீக்கு
  14. உங்களின் விமர்சன பார்வை வேறு மாதிரி உள்ளது... (மற்றவர்களின் விமர்சனம் படித்ததற்கும், உங்களின் விமர்சனமும்)
    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப கஷ்டப்பட்டு பில்லா படத்தையும் இலங்கைத் தமிழர் பிரச்னையையும்-டைரக்டர் கூட யோசிக்காத அளவுக்கு-லிங்க் பண்ணி விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்...டெஸோ தான் மிஸ்ஸிங்!

    பதிலளிநீக்கு
  16. "நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல "என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, "நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் " என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.
    ஒரு டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா? முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண்.
    யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை.
    அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு !? சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.
    NACH REVIEW, THANKS FROM THALA FANS.

    பதிலளிநீக்கு
  17. Nice review & gud explanations to anti ajith groups!!! Super !!!

    பதிலளிநீக்கு
  18. நான் படம் பார்க்காவிட்டாலும் நண்பர் ஒருவர் கூறியதை வைத்து "பில்லா 2 பரவாயில்லை. விமர்சனங்களை கண்டு அஜீத் ரசிகர்கள் கலங்கவேண்டாம்" என்று என் தளத்தில் எழுதியிருந்தேன். ஆனால், "என்னாச்சு உங்களுக்கு?" என்று அடுத்தடுத்து ஒரே ஃபோன்கால்கள். கொஞ்சம் கலங்கித்தான் போனேன். நல்ல விஷயத்தை சொல்லப் போய் இப்படி ஆகிப் போச்சேன்னு. ஆனால் , உங்கள் பதிவை படித்ததும் மனசுக்கு கொஞ்சம் இதமாய் இருக்கிறது.

    நன்றி யுவா!

    பதிலளிநீக்கு
  19. ஆக்சுவலி ஸ்பீக்கிங் நான் அசந்துட்டேன். இப்படி ஒரு புனைவ வாசிச்சதேயில்ல... :))

    பதிலளிநீக்கு
  20. பில்லா 2 .. விமர்சனம் அருமை. மங்காத்தா வெற்றி, பில்லா 2 கு இருந்த எதிர்பார்ப்பு , முதலில் கிடைத்த வரவேற்பு இதை பொறுக்க முடியாதவர்களே படம் மொக்கை அட்டர் பிளாப் என்று கிளப்பி விடுகிறார்கள்.. ஆனால் நான் பார்த்த வரை படம் நன்றாகவே உள்ளது..

    பதிலளிநீக்கு
  21. நல்ல விமர்சனம் யுவா.
    பளோகில் பில்லா இல்ல ரொம்ப நல்ல என்ற வகையில் விமர்சனம் எழுதியவன் தான் நானும். இந்த படம் இலங்கை அகதிகளின் , இலங்கையில் நடந்ததை பதிவு செய்துள்ளது என்பதை மிகவும் விளக்கமாக எழுதியுள்ளீர்கள். ஒரு இலங்கை வாசியாக எனது நன்றிகள். ஆனால் ஸ்கை நைட் ஹெலிகாப்டர்கள், அமெரிக்க தனமான ராணுவ வீரர்கள் என்று அந்த காட்சிகள் காட்டபடுவது எதை மறைக்க? மேலும் எனக்கு தெரிந்து பவளத்துரை என்ற ஊர் இங்கு இல்லை. அஜித் இளவயதில் ஜெயிலில் இருப்பதாகவும் காட்டுகிறார்கள் (ஒரு நம்பர் மேல் சீல் குத்துவதோடு), அவர் போராளியா இல்லை கிரிமினலா? கிரிமினல் என்றால் அதை கொஞ்சம் தெளிவாக சொலியிருந்தால் (அஜித் பிறகு தன வீட்டுக்காரரே தன்னை புரிந்து கொள்ளவில்லை என்கிறார்) இன்னும் ஒன்ரியிருக்கலாம். இப்படி நிறைய விசயங்கள் படத்தில் தொட்டு தொட்டு செல்வதால் தான் இதை நல்ல படம் என்று ஒத்து கொள்ள அநேகரால் முடியவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்து நடையில் விமர்சனம் படத்தை விட நன்றாக இருந்தது.

    கஜன்
    ஸ்ரீ லங்கா

    பதிலளிநீக்கு
  22. கஜன்,

    பில்லா ஒரு முன்னாள் போராளி என்பதாகவே காட்சிகளில் புரிந்துகொண்டேன்.

    அவருடைய அக்காவை சந்திக்கும் காட்சியில் துப்பாக்கி கீழே விழுகிறது. நீ இன்னும் திருந்தலையா? பைபிள் எடுத்துக்கிட்டு வரவேண்டிய இடத்துக்கு துப்பாக்கியோட வரீயே என்று அவரது அக்கா கேட்கும் கேள்வியில் இருந்து இதை யூகிக்கலாம்.

    பவுடர் பிசினஸ், ஆயுத பிசினஸ் என்றெல்லாம் அமைக்கப்பட்ட காட்சிகள் குறித்து விலாவரியாக பேசினால் நான் தமிழினத்துரோகியாக ஆகிவிடக்கூடும் என்கிற சாத்தியம் இருப்பதால் பேசவில்லை.

    பதிலளிநீக்கு
  23. Billa oru munnal poorali enbathu padathin aarambhakatchigalil poraligalukum thiviravathigalukum ulla vithiyasathai kurippidumpothe pulapadugirathu...

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா1:44 PM, ஜூலை 17, 2012

    Dear Uva,

    Your understanding about Ajith as a "porali" may be right. But in the whole movie no one was talking in Singala Tamil. Did you notice that too? Or Am I missing something?
    Thanks - Nelson.

    பதிலளிநீக்கு
  25. "பவுடர் பிசினஸ், ஆயுத பிசினஸ் என்றெல்லாம் அமைக்கப்பட்ட காட்சிகள் குறித்து விலாவரியாக பேசினால் நான் தமிழினத்துரோகியாக ஆகிவிடக்கூடும்":ஹா ஹா , நல்லது.
    ஆனால் இப்பவும் பில்லா ஆரம்ப காலங்களில் கிரிமினலாக இருந்த மாதிரி சித்திரித்திருந்தால் அவனது, அந்த முன்னுக்கு வர வேண்டுமானால் எதையும் செய்யலாம் என்ற, கருத்து ஞாயப்படுத்தப்படிருக்கும்; அவன் நல்லவன் இல்லை ஒரு வில்லன் தான் என்றாலும்.துப்பாக்கி வைத்திருந்தவர்கள் எல்லாம் (தமிழரில்) போராளிகள் அல்ல யுவா. நீங்கள் கூறிய அதே காரணத்திற்காகவே நானும் அதிகம் பேசாது மௌனம் காக்கிறேன். இந்தியாவில் இதற்கு பரிசு ஒரு பட்டம் மட்டுமே, இங்கு வேறு.
    யாருக்கு யாரும் துரோகம் செய்வது இல்லை யுவா, செய்யவும் முடியாது. எந்த வினையும் எதிர் வினைகளே. நமக்கு நாமே தான் துரோகிகளும் நண்பர்களும். thanks for the reply .

    பதிலளிநீக்கு
  26. மற்றது, தயவு செய்து "சர்வதேச படம்" என்று கூறுபவர்களுக்காக, அப்பிடி ஒரு படம் இருக்கிறதா அல்லது இல்லையா என்று ஆதரங்களுடன் ஒரு கட்டுரை வரையுங்களேன் யுவா. இந்த வார்த்தை சினிமா காரகளிடம் இருந்து வரும் "வித்தியாசமான" என்ற வார்த்தை போல கேட்க கேட்க எரிச்சலாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. என்னைப் பொறுத்தவரையில் ஆக்சன் படங்களுக்கு அஜித் செட் ஆகமாட்டார். ஏனென்றால் ஆக்சன் படங்களுக்கு என்றுமே மேன்லியான ஹீரோவாக இருக்க வேண்டும். அஜித்துக்கு அந்த மேன்லினஸ் இல்லை. பேசாமல் ரொமாண்டிக் ஹீரோவாகவே தொடரலாம்.

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா6:39 PM, ஜூலை 17, 2012

    an unbiased review! I really liked the film. Unlike other Tamil films, where the hero will justify his actions, Ajith is a complete don who will do anything to survive. Ajith has an amazing charisma:)

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா6:41 PM, ஜூலை 17, 2012

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  30. ண்ணோவ் ப‌ட‌த்துல‌ எங்கேயும் அஜித் தான் இல‌ங்கை அக‌தி‍னு சொல்ல‌ல‌.அக‌தி முகாம்ல‌ யாருமே இல‌ங்கை த‌மிழ் பேச‌ல‌.நீங்க‌ பில்ட‌ப் கொடுக்குற‌ அள‌வுக்கு டேர‌ட‌க்ட‌ர் அவ்ளோ பெரிய‌ அப்பாட‌க்க‌ர்‍னா அத‌ நேரிடையா சொல்லிருக்க‌லாமே

    அப்புற‌ம் அஜித் முன்னாள் போராளிங்க‌ற‌ உங்க‌ க‌ண்டுபிடிப்ப உட‌ப்புல‌ போடுங்க‌.ஒரு மாற்று திற‌னாளி பொடிய‌ன‌ அடிச்சு த‌ன் வீர‌த்த‌ நிலை நாட்டுற‌ அள‌வுக்கு ஒரு போராளி த‌ர‌ம் தாழ்ந்து போக‌ மாட்டான்.இத‌ விட‌ அவ‌ங்க‌ள‌ கேவ‌ல‌ப்ப‌டுத்த‌ முடியாது

    ஒரு ப‌ட‌த்த‌ ஏத்தி விட‌ இந்த‌ ம‌க்க‌ளை ஊறுகாயா ப‌ய‌ன் ப‌டுத்தாதீங்க‌

    பதிலளிநீக்கு
  31. அருமையான விமர்சனம் அண்ணா.
    சமயம் கிடைத்தால் இந்த தம்பியின் வலைப்பக்கதிற்கு வந்து செல்லவும்.
    நன்றி.
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    பதிலளிநீக்கு
  32. கடைசி வரிகளுக்கும் மொத்த விமர்சனத்திற்கும்தான் எத்தனை முரண் அண்ணே...உங்களுக்கு அஜீத் பிடிக்கும் சரிதான். அதுக்குன்னு அஜீத் என்ன பண்ணாலும் பிடிச்சிருமா? அதுவும் இந்த படம் ஏதோ ஈழம் பத்தி, நிறைய ஆழமா பேசியிருக்கற மாதிரி வேற போட்ருக்கீங்க..சபாஷ்..சபாஷ்....அவிங்க என்ன காட்னா என்ன, நமக்கு என்ன வேணுமோ, அப்படி புரிஞ்சுக்க வேண்டியதுதியான்..அப்படித்தான..அற்புதம்...

    பதிலளிநீக்கு