14 ஜூலை, 2012

Sorkam-1970/சொர்க்கம்1970/நடிகர் திலகத்தின் நட்டுக்குத்தலான படம்...


பில்லா-2 படத்தை நீங்கள் எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் பார்த்திருக்கலாம். என்னால் அந்தப் படத்தை பார்க்க முடியாது. இயக்குனர் சக்ரா டொலாட்டி உங்கள் நண்பராக இருக்கலாம். அல்லது ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் உங்களுடைய ஒன்றுவிட்ட மச்சானாக இருக்கலாம். அல்லது அஜித்குமார் உங்களுடைய வாசகநண்பராக கூட இருக்கலாம். இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு உங்களுடைய மலச்சிக்கல் கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய பிரச்சினையே வேறு.

நான் ஏன் பில்லாவை விட்டு விட்டு ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களுக்கு காரணம் சொல்லியே ஆகவேண்டும்.

ஏனெனில் எனக்கு இப்போது ’பில்லா’ டிக்கெட்டு கிடைக்கவில்லை. வாசக நண்பர் விஸ்வா போனமாசமே டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். நான், விஸ்வா, வாசக நண்பர் அதிஷா, வாசக நண்பர் சிவராமன், வாசக நண்பர் நாராயணன் ஆகியோர் போனோம். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்பதற்கு பதிலாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தப்பாக டைட்டில் போட்டார் தியேட்டர் ஆபரேட்மேன். அவருக்கு படமே போட தெரியவில்லை என்று கூறி டைட்டில் முடிவதற்கு முன்பாக எழுந்து வந்துவிட்டேன்.

நான் லோக்கல் என்பதால், லோக்கல் தியேட்டருக்குப் போய் முந்தாநாள் டிக்கெட் கேட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது என்று தியேட்டர் வாசலில் கடைவிரித்து பீடி, பான்பராக் விற்பவர் சொன்னார். ஒத்தா, என்ன படத்துக்குதான் டிக்கெட் கிடைக்கும் என்று இணையத்தில் தேடினேன். என் வாசக நண்பர் அதிஷா, மாம்பலம் சீனிவாசா தியேட்டரில் ‘சொர்க்கம்’ படத்துக்கு டிக்கெட் கிடைப்பதாக சொல்லி, அவரே ஆன்லைனில் ‘புக்’கும் செய்துவிட்டார். டிக்கெட் விலை ரூ.30 (பால்கனி) தான். ஆனால் பைக் பார்க்கிங் டோக்கன் ரூ.10 + ஆன்லைன் சர்வீஸ் சார்ஜ் ரூ.20 + குவார்ட்டர் நெப்போலியன் ரூ. 85 + அரை பாக்கெட் கிங்ஸ் ரூ.30 + நாலு மாணிக்சந்த் ரூ.24 என்று எக்ஸ்ட்ராவாக ரூ.169 செலவானது. ச்சீ.. நாய்களா.. பேய்களா.. குரங்குகளா.. சுண்டக்காய் எட்டணா.. சுமைக்கூலி எட்டு ரூபாயா?

நான் ஏன் ‘சொர்க்கம்’ பார்த்தேன் என்று உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். டைட்டிலை பார்த்துவிட்டு ஏதாவது ‘பிட்டு’ இருக்குமென்று முதலில் நினைத்தேன். ஆனால் தியேட்டர் முன்னால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கே.ஆர்.விஜயா படம் இருந்ததால் ‘அட்டு’ தான் இருக்குமென்று தெரிந்துகொண்டேன்.

மனமார ஒத்துக்கறேன். கே.ஆர்.விஜயா சிக்கென்றுதான் இந்த வயதிலும் இருக்கிறார். 1970ல் காஞ்சிபுரத்தில் இந்தப் படத்தை என்னுடைய அப்பா பார்த்தபோதும் அப்படியேதான் இருந்திருக்கிறார். எனக்கு கே.ஆர்.விஜயாவை ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவர் கற்பகம் படத்தில் மன்னவனே அழலாமா என்று அழுதுக்கொண்டே பாடுவார்.

 = = = = = = = = = =

சொர்க்கம் படத்தின் ஓன்லைன் என்ன?

சிவாஜி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக் கொள்கிறார். இதனால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.

 = = = = = = = = = = 

சொர்க்கம் படத்தின் கதை என்ன?

சிவாஜி ஒரு வேலையில்லா பட்டதாரி. ரொம்ப வெயில் அடித்ததால் அவர் வேப்பமரம் முன்பாக நிழலுக்கு உட்காருகிறார். அப்போது ஜிக் ஜிக்கென்று ஆட்டிக்கொண்டு டூபிஸில் ஒரு பெண் டேன்ஸ் ஆடுகிறார். சிவாஜி ‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’ என்று டி.எம்.எஸ். மாதிரி கஷ்டப்பட்டு மிமிக்ரி செய்து பாட்டு பாடுகிறார். பாட்டு முடியும் போது வேப்பமரத்தில் இருந்து வேப்பங்காய் விழுவதற்கு பதிலாக பணம் கொட்டோ கொட்டுவென்று கொட்டுகிறது.

சிவாஜி பணக்காரர் ஆகிறார். ஆனால் அடுத்த காட்சியிலேயே அவர் ஏழையாகி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக்கொள்ளும் படி காட்டுவது எடிட்டர் சரியாக வேலை பார்க்கவில்லை என்பதை காட்டுகிறது. பணக்காரர் ஆன சிவாஜி தண்ணி அடிக்கிறார். தம்மும் அடிக்கிறார். அது கே.ஆர்.விஜயாவுக்கு பிடிக்கவில்லை. சிவாஜி பேசாமல் கே.ஆர்.விஜயாவுக்கும் தம்மையும், சரக்கையும் பழக்கப்படுத்தி இருந்தால் கதை இண்டர்வெல்லிலேயே முடிந்துவிட்டிருக்கும்.

இரண்டாம் பாதியில் மனோகர் நல்லவனாக வருகிறார். திடீரென்று அவரே கெட்டவனாக மாறுகிறார். கடைசியில் மீண்டும் நல்லவனாக வருகிறார். ஒரு காட்சியில் நல்லவனும், கெட்டவனுமாக இரண்டு மனோகரும் ஒன்றாக வருகிறார்கள். இப்படி முன்னுக்கு பின் முரணாக நான் லைனராக எனக்கு பிடித்த ஹாலிவுட் இயக்குனர் கிரிஷ்டாபர் லோலன் மாதிரி படமெடுத்திருக்கிறார் இயக்குன நண்பர் டி.ஆர்.ராமண்ணா. வாசக நண்பர் அதிஷாவோ அப்படியில்லை, மனோகர் டபுள் ஆக்சன் என்று ஒரு புதிய கோணத்தை சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு கோணம். ஆகமொத்தம் நம் வாழ்க்கை முக்கோணம்.

படம் முடியும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். எனக்கு அழுகை வந்தது. ஏனென்றால் பாக்கெட்டில் வைத்திருந்த தம்மு பாக்கெட்டையும், மாணிக்சந்தையும் டிக்கெட் கிழிக்கும்போது செக்யூரிட்டி செக் செய்து பறித்துவிட்டான்.

  = = = = = = = = = =

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

முதன்முதலாக நடிகர் திலகம் தண்ணி அடிக்கிறார். சரக்கில் தண்ணி ஊற்றாமலேயே கல்பாக அடிக்கிறார். எனக்கெல்லாம் சோடாவோ, கோக்கோ இல்லாமல் சரக்கு அடிக்க முடியாது. சரக்கு அடித்ததும் காருக்கு வருகிறார். டிரைவர் ஏதோ சொல்லவருகிறார். உடனே “சொல்லாதே யாரும் கேட்டால்” என்று பாடுகிறார். டிரைவர் யாரிடமும் இவர் தண்ணியடித்ததை சொல்லவில்லை. நடிகர் திலகமும் கே.ஆர்.விஜயாவிடம் இதை சொல்லவில்லை. ஆனால் கே.ஆர்.விஜயா இந்த விஷயத்தை புத்திசாலித்தனமாக கண்டுபிடிக்கிறார். எப்படி என்பதுதான் சஸ்பென்ஸ். நானாக யூகித்துக்கொண்டேன். வாசனை வந்திருக்கும் கண்டுபிடித்திருப்பார் என்று.

நடிகர் திலகம் சிவாஜிக்கு இந்த படம் மைல்கல் என்பேன். ஏனெனில் இரண்டாம் பாதி முழுவதும் அவர் காரிலோ, டிரைனிலோ பயணம் செய்துக்கொண்டே இருக்கிறார்.

கேமிராமேன் அசத்தி இருக்கிறார். ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்’ பாட்டில் புடவை கட்டிக்கொண்டு கே.ஆர்.விஜயா பாட, மற்ற பெண்கள் எல்லோரும் என்ன டிரெஸ் என்பதே தெரியாத டிரெஸ் அணிந்து ஆட, சிவந்த கண்களோடு நடிகர் திலகம் நைசாக கே.ஆர்.விஜயாவுக்கு டிமிக்கி கொடுத்து பாலாஜியோடு போய் ஒரு ‘கட்டிங்’ விட்டு வர, அனைத்தையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார் கேமிராமேன்.

சரி படத்துக்கு ஏதாவது திருஷ்டிபூசணிக்காய் உடைக்க வேண்டும் அல்லவா?

நான் 1992ல் பார்த்த தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் வயசானவராக இருந்தார். 1998ல் பார்த்த படையப்பா படத்தில் தேவர்மகனை விட ஆறுவயது கூடுதலாக இருந்தார். ஆனால் 2012ல் பார்க்கும் சொர்க்கம் படத்தில் மட்டும் முப்பது, முப்பத்தைந்து வயது வாலிபனாக வருகிறார். நியாயமாக பார்க்கப்போனால் படையப்பாவை விட 14 ஆண்டுகள் அதிகம் ஆன முதியவராக அல்லவா இருக்கவேண்டும்? இந்த லாஜிக்கை மட்டும் இயக்குனர் சரி செய்திருந்தால் படம் சூப்பராக இருந்திருக்கும்.

 = = = = = = = = = = 

ஃபைனல் கிக் : படம் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்குமா என்று தெரியாது. உங்களுக்கு பிடிக்காதா என்றும் தெரியாது. பதிவு போடுவதற்காக பார்த்தே தீரவேண்டிய படம்.


37 கருத்துகள்:

  1. சிரித்த இடங்கள் :

    //சொர்க்கம் படத்தின் ஓன்லைன் என்ன?

    சிவாஜி கே.ஆர்.விஜயாவை கல்யாணம் செய்துக் கொள்கிறார். இதனால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது.//

    // நானாக யூகித்துக்கொண்டேன். வாசனை வந்திருக்கும் கண்டுபிடித்திருப்பார் என்று.//

    // பதிவு போடுவதற்காக பார்த்தே தீரவேண்டிய படம்.//

    ஜாக்கி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :))

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3:54 PM, ஜூலை 14, 2012

    கே.ஆர்.விசயாவுக்கு கக்கத்தில் வியர்த்திருந்தது. இதை எழுத மறந்துட்டீங்களே.போட்டோ பார்த்தாலே தெரியுது படத்தில பார்த்தும் எழுத மிஸ் பண்ணிட்டீங்க சார்!

    பதிலளிநீக்கு
  3. என்ன ஆச்சு...கால இயந்திரத்தில் பின்னோக்கி சென்று விட்டீரா..?

    பதிலளிநீக்கு
  4. எப்பா?!!!!!!!! :))

    முடியலய்யா..:))

    பதிலளிநீக்கு
  5. சான்சே இல்ல,கொன்னுட்டீங்க...

    பதிலளிநீக்கு
  6. யுவா யூ டூ .........ஐ லைக் இட் .............

    பதிலளிநீக்கு
  7. நான் சொர்க்கம் படமெல்லாம் பார்த்தது இல்லங்க..உங்க விமர்சனம் என்றாவது பார்க்க சொல்லும்..மற்றபடி நல்ல திரைப்பார்வை..நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா8:23 PM, ஜூலை 14, 2012

    இப்ப தெரிஞ்சு போச்சு..நீங்கதான அந்த சாம் மார்த்தாண்டன்...))))))

    பதிலளிநீக்கு
  9. யுவா சார்! விமர்சனம் கலக்கல்! நீங்க இந்த மாதிரி நிறைய விமர்சனம் எழுதவேண்டும்! படிக்க படிக்க புல்லரிக்கின்றது

    உங்கள் தீவிர வாசகன்

    பதிலளிநீக்கு
  10. நீங்க தான் ஜெட்லி சேகர்னு எல்லாருக்கும் இப்ப தெரிஞ்சு போச்சு, பழக்க தோசத்துல இன்னைக்கு ஒரிஜினல் ஐடில போட்டுடீங்க‌

    பதிலளிநீக்கு
  11. சுட்டப்பழம் விமர்சனத்திற்குப் பிறகு இதில்தான் அதகளம் பண்ணியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  12. யோவ்... நீங்கள்லாம் எழுதினா மட்டும் ஈஈஈஈஈஈன்னு பல்லைக் காட்டுற மனுஷன் நான் எழுதினா மட்டும் பொங்கி வழியுறாரே ஏன்யா...?

    பிதாமகனுக்கு போன் போட்டு அவனை நிறுத்தச் சொல்லு'ன்னு சொன்னா என்ன அர்த்தம்... எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா மோதணும்...

    பதிலளிநீக்கு
  13. சரி ரிலீஃப் தல!

    ரசிச்சு சிரிச்சு, சிரிச்சு ரசிச்சேன்...!!

    இந்தப்பதிவுதான் சொர்க்கம்! :))

    பதிலளிநீக்கு
  14. அடிக்கிற வெயிலுக்கு அண்ணனுக்கு என்னமோ ஆயிடுச்சு.............

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா1:34 AM, ஜூலை 15, 2012

    what happened yuva?. anything big big problem like fever or cold. consult a good doctor.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா3:33 AM, ஜூலை 15, 2012

    கிரிஸ்டோபர் லோலன்!!!!

    நல்லா பேரு வெச்சீங்கையா!

    பதிலளிநீக்கு
  17. யுவா,

    வேலை செய்ய முடியலையா? சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு. ஃபுல் பார்ம்ல இருக்கா மாதிரி இருக்கு????

    பதிலளிநீக்கு
  18. அடிச்ச சரக்கு தெளியறதுக்குள்ள விமர்சனமும் எழுதிட்டீங்க போல?

    பதிலளிநீக்கு
  19. பக்கி லீக்ஸ் பாதிப்பு ?

    பதிலளிநீக்கு
  20. முதல் பாரா படிக்கும் போதே தெரிந்து விட்டது யார் பாணி என்று. தனி ஸ்டைல் உருவாக்கியிருக்கும் அந்த ஒரிஜினலுக்கு வாழ்த்துகள் ! !

    பதிலளிநீக்கு
  21. திருவாளர் யுவா!
    என்னய்யா, நீர், உமது எழுத்தை காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லாமல், சும்மா ஒரு சொடக்கு போட்டாலே கடைசி வரையும் இழுத்துக்கொண்டு போகிறதே. உமது பேனாவில் மைக்கு பதிலாக மசியை நிரப்பியுள்ளீரோ! இருக்கட்டும் வந்ததை சொல்லுகிறேன், சொர்க்கம் 2 எடுத்தால், கதை வசனம் நீங்கள் எழுத வேண்டும், படம் புட்டுக்கிட்டு ஓடும்!

    பதிலளிநீக்கு
  22. எவ்வளவு சுயநலம் மற்றும் காழ்ப்புணர்ச்சி .....உங்கள் ஒருவருக்கு டிக்கெட் கிடைக்கலைன்னா கொலைவெறி புடிச்சு எங்களை குதறுவது மிகப்பெரும் தவறு.பேசாம வீட்டுக்கு போக வேண்டியது தானே, அடுத்த முறை நானே ரிசர்வ் செய்து விடுகிறேன்.மாணிக்சந்தை புடுங்குனது தப்புதான் கோபம் வரும்தான் அதுக்காக இதெல்லாம் ரொம்ப அதிகம்ன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. ஏன் பாஸ் இந்தக் கொலைவெறி திடீர்னு?...

    பதிலளிநீக்கு
  24. உங்களுக்கு டிக்கட் கிடைக்கவில்லை என்ற கோபத்தை வாசக நண்பரான என் மீது இப்படிக் காட்டலாமா?

    பதிலளிநீக்கு
  25. யுவகிருஷ்ணாதான் சாம் மார்த்தாண்டனா...??? சொல்லவேயில்ல.. ஆவ்வ்!!

    பதிலளிநீக்கு
  26. எங்கள் யுவாவுக்கு எதைபற்றியும் எப்படியும் எழுத முடியும் என்பதற்கு இந்த பதிவு ஒரு சாட்சி.

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா10:28 AM, ஜூலை 16, 2012

    Why boss? why?

    Y dis kolaveri?

    பதிலளிநீக்கு
  28. நல்ல வேலை, பில்லா 2 டிக்கெட் கிடைக்கவில்லை. கிடைதிர்ருந்தால் விமர்சனம் மேலும் கிண்டலாவும்/ உங்களுக்கு எரிச்சலாவும் இருந்துருக்கம்.

    பதிலளிநீக்கு
  29. நடிகர் திலகம் சிவாஜிக்கு இந்த படம் மைல்கல் என்பேன். ஏனெனில் இரண்டாம் பாதி முழுவதும் அவர் காரிலோ, டிரைனிலோ பயணம் செய்துக்கொண்டே இருக்கிறார்.

    ha ha ha....

    really enjoyable write up.

    @ philosophy : blog la ( luckyum jackieyum ) ithellam satharanamappa.
    anbudan
    sundar g rasanai chennai

    பதிலளிநீக்கு
  30. சின்ன வயசுல இந்தப் படம் பார்த்தேன், அப்போ மனசுல ஓடுன விஷயங்களை அப்படியே படம் பிடிச்ச மாதிரி எழுதி இருக்கீங்க, ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. குடியிருந்த கோவில்,கர்ணன் விமர்சனங்களையும் ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  31. This shows your real Talent, I have laughed like a mad person while reading this.

    My Colegue said that why we should block your blog :) in office.

    பதிலளிநீக்கு