18 ஆகஸ்ட், 2012

அட்ட கத்தி


நான் கல்லூரிக்குப் போகும்போது தினமும் எஃப்-51 பஸ்ஸில் போவேன். அப்போதுதான் அவளைப் பார்த்தேன். இம்மாதிரி தொடங்கி தமிழில் அட்ட கத்தி படத்துக்கு பத்து விமர்சனங்களாவது வந்துவிட்டதால், நானும் அதையே எழுதித் தொலைக்க விரும்பவில்லை. இம்மாதிரி எழுத முடியாததற்கு இன்னொரு காரணம் என்னவென்றால், நான் கல்லூரியே போனதில்லை.

இயக்குனர் ரஞ்சித்துக்கு ரொம்ப கருக்கான பட்ஜெட்டில் படமெடுக்க ஒரு ப்ரொட்யூஸர் கிடைத்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் குறும்படமோ, ஆவணப்படமோதான் எடுக்க முடியுமென்றாலும் ஒரு முழுநீளப்படம் எடுத்து தன்னை அறிமுகப்படுத்தி, நிரூபித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார். இந்த வேளையில்தான் சற்குணத்தின் ‘களவாணி’ வந்தது. தமிழ்த்திரையில் முதன்முதலாக பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கிராம வாலிபனின் பயோக்ராபி. தியேட்டரில் விசிலும், க்ளாப்ஸும் அள்ளுகிறது. ‘சட்’டென்று மூளைக்குள் ‘பல்பு’ எரிந்திருக்கிறது நம் ரஞ்சித்துக்கு. சென்னைக்கு அருகில் ஒரு கிராமம். அங்குதான் நம்ம ஹீரோ விமல் வசிக்கிறார். ஓ.. விமல் எழுபத்தைந்து லட்சம் வாங்குகிறாரா? படத்தோட பட்ஜெட்டே அதுதான் என்பதால் புதுமுகத்தை போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். அட்ட கத்தி ரெடி!

கதை? அது கிடக்குது கழுதை. முதல்லே சீன் புடிச்சிக்கலாம். அப்புறம் வரிசைப்படுத்தி எடிட்டிங்கில் கதை ஆக்கிக்கலாம் என்று ரஞ்சித் அவரது குருநாதர் வெங்கட்பிரபு மாதிரியே நினைத்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக இவரது வேகத்துக்கு ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் ஓடிவர முடியவில்லை என்பதால் கொஞ்சம் சொதப்பி விட்டது. ஃப்ரேமுக்குள் எல்லா கேரக்டரும் வந்தால் போதும் என்கிற சின்சியாரிட்டி மட்டுமே ஒளிப்பதிவாளருக்கு இருந்திருக்கிறது. படம் முழுக்கவே கொஞ்சம் டல்லாக தெரிந்ததாகதான் ஞாபகம். சரக்கு அடித்துவிட்டு படம் பார்க்கவில்லை என்பதால் இந்த கூற்று உண்மையாக இருக்கலாம். அல்லது உதயம் திரையரங்கின் பாடாவதி ப்ரொஜெக்ட்டர் ‘அட்டு’ ஆகியிருக்கலாம். இந்த மொக்கை தியேட்டரை வைத்துக்கொண்டு, ‘மால்’ கணக்காக தம்மெல்லாம் அடிக்கக்கூடாது என்று ரூல்ஸ் போடும் திரையரங்கு நிர்வாகத்தின் அராஜகத்தை பாசிஸ மனோபாவமாகவே கருத வேண்டியிருக்கிறது.

எங்கே விட்டோம்? ஒளிப்பதிவு. ஆங்.. ஒளிப்பதிவு ஊத்திக்கிச்சி என்றால் எடிட்டிங் மொத்தமாக கவுத்துக்கிச்சி. அந்த காலத்து பாணியில் ஃப்லிம் ரோலை பார்த்து, பார்த்து அட்ட கத்தியில் வெட்டியிருப்பார் போல எடிட்டர். சுவாரஸ்யமான திரைக்கதையாலும், இயல்பான வசனங்களாலும் ‘ஷார்ப்’ ஆகத்தெரிய வெண்டிய பல காட்சிகள் எடிட்டரால் படுமொன்னையாக தெரிகிறது. காட்சிகள் மாறும் டிரான்ஸ்லிஷன், ஆக்‌ஷன் மற்றும் பாடல் காட்சிகளையெல்லாம் இப்போது உப்புமா படங்களிலேயே சூப்பராக ஊறுகாய் போட்டு, எடிட்டி அசத்துகிறார்கள். ஆனால் நம்ம அட்டகத்தி எடிட்டரோ இருபது வருஷத்துக்கு முன்னால் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் படத்தில் பணியாற்றிவிட்டு, நேராக இந்தப் படத்துக்கு வேலை பார்க்க வந்திருப்பாரோ என்கிற ஃபீலிங்கை தருகிறார்.

ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் மைனஸ் என்றால், படத்தில் மீதி எல்லாமே கிட்டத்தட்ட ப்ளஸ்தான். குறிப்பாக நடிகர்கள். நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஹீரோவின் அப்பா, அம்மா, அண்ணன், தாத்தா என்று casting பக்கா. ஹீரோ ஜூட்டு விடும் ஃபிகர்களும் கரெக்ட்டான ரியாக்‌ஷனை, கரெக்ட் டைமிங்கில் தெளிக்கிறார்கள். எல்லாருமே யதார்த்தமாக இருக்கும்போது, அந்த ட்வின் எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஃபிகர்கள் மட்டும் தூக்கலான மேக்கப்பில் துருத்திக்கொண்டு திரிகிறார்கள். கருப்பான, களையான, லேசான தெத்துப்பல் ஹீரோயின். இவரை மேலும் வர்ணிக்க ஆசைப்பட்டாலும், நாம் ஆசைப்படும் அளவுக்கு ‘திறமை’யை அவர் ஸ்க்ரீனில் காட்டவில்லை. தமிழ் ஹீரோயினுக்கு அத்தியாவசிய அடிப்படைகளான தொப்புள், கழுத்துக்கு கீழே மாதிரியான சமாச்சாரங்கள் எதையும் இவர் வெளிப்படையாக இன்னமும் முன்வைக்காததால் இவரது அடுத்தப் படம் வரும்வரை காத்திருப்போம்.
அம்பத்தூர், ஆவடி ஏரியாவின் பாடாவதி ரோட்டில் திறமையாக பென்ஸ் கார் ஓட்டியிருக்கிறார் படத்தின் இசையமைப்பாளர். இவ்வளவு சென்ஸிபிளாக, இயக்குனரின் மனச்சாட்சியாய் வேலை பார்த்த இசையமைப்பாளர் ஒருவரை சமீபகாலமாக எந்த திரைப்படத்திலும் கேட்ட நினைவில்லை. குறிப்பாக க்ளைமேக்ஸுக்கு முந்தைய ‘பஸ் உழைப்பு’ காட்சியில் அககா.. அமர்க்களம்.. நாடி நரம்பெல்லாம் காமவெறியேறி, குறைந்தது ஒரு பத்து வருஷமாவது ரெகுலராக ‘பிட்டு’ படம் பார்த்திருப்பவரால் மட்டுமே, இப்படிப்பட்ட ஆப்ட்டான மியூசிக்கை, ஆப்ட்டான இடத்தில் சொருக முடியும்.

இயக்குனர் தனக்கு கொடுக்கப்பட்ட காசுக்கு நியாயமான உழைப்பை கொட்டியிருக்கிறார். இவர் எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட் யுனிவர்செல் லெவலுக்கு இல்லாவிட்டாலும், அட்லீஸ்ட் தமிழக லெவலுக்கு இருந்திருக்கலாம். சென்னையின் மல்ட்டிப்ளக்ஸுகளை தவிர்த்து, மற்ற ஊர்களில் அட்ட கத்தியின் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்றே தோன்றுகிறது. ரூட்டு தல கலாச்சாரமெல்லாம் பிறந்ததில் இருந்து தென்சென்னையில் வசிக்கும் எனக்கே கொஞ்சம் அந்நியம்தான் (எங்க ஊரில் எல்லாம் கேங்ஸ் ஆஃப் ஆலந்தூர் கல்ச்சர்தான்). எனவே வாடிப்பட்டிக்காரன் இதை உணர்ந்து ரசிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயமல்ல. ஒருவேளை படத்துக்கு டெக்னிக்கல் சவுண்ட் கிடைத்திருந்தால் சென்னை 600028 மாதிரி இண்டர்நேஷனல் ஹிட்டாகியிருக்கும் என்று தோன்றுகிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள், ஒரே மாதிரியான ட்விஸ்ட்டுகள் என்று பேஜார் ஆகிறது. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு விழுந்துவிடும் படம், மீண்டும் எழுந்திருப்பதற்குள் க்ளைமேக்ஸ் வந்துவிடுகிறது.

திசைக்கு ஒருவராக நாலு பேர் சுமக்க வேண்டிய படத்தை இயக்குனரும், இசையமைப்பாளருமாக பக்கத்து ஒருவராக இரண்டே பேர் சுமக்கிறார்கள். கேமிராமேனும், எடிட்டரும் சும்மாக்காச்சும் கைவைத்து பாவ்லா காட்டியிருக்கிறார்கள். ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது என்கிற வகையில், சுமாரான படத்துக்கு சூப்பர் பப்ளிசிட்டி செய்திருப்பதே, இப்படம் குறித்த நெகட்டிவ் மவுத் டாக் அதிகமாக வெளிவர காரணமாகி விட்டது.

எது எப்படியோ.. வெங்கட்பிரபுவுக்கு பிறகு தமிழில் அவருடைய genreல் திறமையோடு இன்னொரு இயக்குனரை அட்ட கத்தி அடையாளம் காட்டியிருக்கிறது. இப்படம் சாதித்திருப்பது இதைதான்.

11 கருத்துகள்:

  1. படிக்க ஆரம்பிச்சதும் யோவ் நீயுமா'ன்னு கடுப்பானேன்... லக்கி டச்...

    சமீப படங்களில் நீங்க(ளே) நல்லாயில்லைன்னு சொன்ன படம் இதுதான்னு நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. பிரபா, பொதுவாக நல்லாயில்லை என்று நினைக்கிற படங்களைப் பற்றி எழுத விரும்புவதில்லை. அட்ட கத்தி ஒருமுறை பார்க்கக்கூடிய படம். ஆனால் இதை காவியமென்றெல்லாம் என்னை ஏற்றிவிட்டு வெறுப்பேற்றி விட்டார்கள் என்பதற்காகவே எழுதினேன் :-(

    பதிலளிநீக்கு
  3. வாழ்க்கையின் அழகினை உணர வைப்பதுதான் நல்ல இலக்கியம் என்றால், இந்த படம் அதை செய்தது. காமிரா இருப்பதே தெரியாமல் அழகாக படமாக்கப் பட்டிருந்தது. சுதந்திர தினம் அன்று மாலை 4.௦௦ மணிக்கு முடிவு செய்து 6.45 காட்சி மனைவி மகளுடன் பார்த்தேன். சாந்தி தியேட்டர் ரொம்பவும் ரசித்து படத்தை பார்த்தது. படம் தொடங்கும் முன் தேவை இல்லாமல் கூச்சலிட்ட கூட்டம், முதல் காட்சியில் இருந்தே ரசித்து பார்த்தது. சின்ன சின்ன கவிதைகளாய் படம் நெடுக ரசிக்கும் படியாகவே இருந்தது. படம் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. யுவா, படம் வித்தியாசமாக, முகத்துக்கு நேராக உண்மையை சொல்கிற படமாக, இன்றைய கீழ்தட்டு சென்னை இளைஞனின் முக்கியமான வாழ்க்கை கட்டத்தை பதிவு செய்வதாக உள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

    பதிலளிநீக்கு
  4. படம் பார்க்கவில்லை... நாளை தான்...

    விமர்சனத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. meaning please........
    (எங்க ஊரில் எல்லாம் கேங்ஸ் ஆஃப் ஆலந்தூர் கல்ச்சர்தான்)

    பதிலளிநீக்கு
  6. ஓவர் பந்தா உடம்புக்கு ஆகாது என்கிற வகையில், சுமாரான படத்துக்கு சூப்பர் பப்ளிசிட்டி செய்திருப்பதே, இப்படம் குறித்த நெகட்டிவ் மவுத் டாக் அதிகமாக வெளிவர காரணமாகி விட்டது.-- இத இதத்தானே நானும் சொன்னேன். தென்சென்னைக்கு ஒரு நியாயம் வாடிப்பட்டிக்காரனுக்கு ஒரு நியாயமா?

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா10:39 PM, ஆகஸ்ட் 21, 2012

    என்ன யுவா, நல்ல படம்ப்பா.. எப்போவும் நல்லா விமர்சனம் பண்ணுற நீயே, இப்படி சொல்லிட்டியே. தினேஷ் நல்ல actor .வாடிப்பட்டி காரனுக்கு மட்டும் இல்ல, இந்த படம் எல்லா பட்டிக்கும் நல்ல படம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த படங்களில் எனக்கு பிடித்த இரண்டு படங்கள் . AK + நான்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10:25 AM, ஆகஸ்ட் 22, 2012

    ரொம்ப அலடிக்கற மாதிரி தெரியுது.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா3:14 PM, ஆகஸ்ட் 23, 2012

    you should have appreciated the acting of the hero dinesh....what a performance !!!!!! he has done a wonderful job in this film...

    பதிலளிநீக்கு
  10. இது நல்லப் படம். மேலே ‘அமர்’ சொன்ன கருத்தை நான் அப்படியே ஆதரிக்கறேன்.

    பதிலளிநீக்கு