4 ஆகஸ்ட், 2012

டெசோ – என்ன பேசப்போகிறது?


ஆகஸ்ட் 12 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ‘டெசோ’ மாநாட்டில் கீழ்க்கண்ட சில விஷயங்கள் விலாவரியாக பேசப்படவிருக்கின்றன என்று தெரிகிறது. தமிழகம், ஈழம் தவிர்த்து குறிப்பிடத்தக்க இந்தியத் தலைவர்களும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.

ஐ.நா. மனித உரிமை அமைப்பு, இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி சுட்டிக் காட்டியிருக்கும் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவராமல் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மீதான சிங்கள அரசின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவர முடியாது. இப்படியான சூழலில் போரால் நிலைகுலைந்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச மறுவாழ்வுத் திட்டங்கள் வெறும் கண்துடைப்பாகவே முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேற்பார்வையில் இலங்கையில் சுயநிர்ணய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினை தெற்காசிய மனித உரிமைப் பிரச்சினையாக பாவிக்கப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு இந்தியாவில் நிம்மதியான வாழ்க்கைக்கான உறுதியை ஏற்படுத்த முடியும்.

பாரம்பரியத் தமிழ் பெருமை கொண்ட மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடங்கள் ஈழத்தில் பாதுகாக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது அவசியம். தம் இனத்துக்கான பிரத்யேக அடையாளம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை இழந்து எந்த ஒரு இனமும் உலகில் நீடிக்க முடியாது. தமிழ் கலாச்சாரத்தையும், மொழியையும் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு இருக்கிறது. மாறாக அவற்றை அழிக்கும் பணியிலேயே சிங்கள அரசு மும்முரமாக இருந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை சிறைகளில் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். முறையான சட்ட விசாரணையின்றி சிறையில் வாடுபவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கும் பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். கல்விநிலையங்கள் பழுதின்றி செயல்படுவது தமிழ் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்ய அவசியம்.

போர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கல்வி, மருத்துவ உதவிகளை வழங்கிட பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் தாமாக முன்வந்திருக்கின்றன. தமிழ்ப் பகுதிகளில் இவ்வசதிகளை மேம்படுத்த இவர்களை அரசு அனுமதிக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக போரால் மனநலரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், உற்றார் உறவினரை இழந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான மன-உடல்நல சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்ய வேண்டிய கடமை இந்திய அரசுக்கு இருக்கிறது. ஒத்த கருத்துடைய சகநாடுகளுடன் இணைந்து, இதுதொடர்பான பொருளாதார அழுத்தங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் இலங்கை அரசுக்கு ஏற்படுத்த வேண்டும். தம் நிலங்களை தமிழர் திரும்பப் பெறவும், இழந்த பழைய வாழ்வை மீட்கவும் உறுதி செய்யும் விதமாக இந்தியா பல்வேறு நாடுகளோடு இணைந்து ஒரு குழுவினை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு உறுதி செய்யப்பட வேண்டும் என்கிற அதேவேளையில், இந்திய தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையின் அட்டூழியத்தால் சந்திக்க நேரிடும் தொடர் உயிரிழப்பு, பொருட்சேதம் ஆகியவற்றையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக இந்தியக் கடற்படை தனுஷ்கோடியிலோ அல்லது மண்டபம் முகாமிலோ நிலைகொண்டு கண்காணிக்க வேண்டும்.

போரால் நாடு, வீடு இழந்து உலகெங்கும் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் தாய்மண்ணுக்கு சுலபமாக வந்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

உடனடியாக பேசப்பட வேண்டிய பிரச்சினைகளாக இவற்றை ‘டெசோ’ அமைப்பினர் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இப்பிரச்சினைகளைத் தீர்க்க டெசோ எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், குறிப்பாக இந்திய அரசை நெருக்க என்ன வழிவகை வைத்திருக்கிறது என்பதெல்லாம் மாநாடு நடந்த பின்னர்தான் தெரிய வரும்.

ஈழம் என்றாலே வழக்கமாக பாடப்படும் ‘வாழ்க, வீழ்க’ கோஷங்களின்றி, அங்கிருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளின் அடிப்படையில் அறிவார்ந்த வகையில் டெசோ செயல்படுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் இவையெல்லாம் வெறும் பேச்சுகளாக இல்லாமல், செயல்பாடுகளுக்கு அடிகோலினால் மட்டுமே ‘டெசோ’ வெற்றியடையும்.

டெசோ இணையத்தளம் : http://teso.org.in

10 கருத்துகள்:

  1. கருணா நிதியின் அரசியல் சித்து விளையாட்டுக்களில் இது உச்சக்கட்டம்.
    இறுதி யுத்தமானது, கருணா நிதியினதும், சோனியாவினதும் ஆதரவுடனேயே நடந்தேறியது. இது என் போன்ற ஈழத் தமிழன் எல்லோருக்கும் தெரியும். ஈழத் தமிழனை, தமிழை வைத்து, இந்தக் கொலைஞர் நடத்துவது ஒரு ஈனப் பிழைப்பு.
    //செவ்விரும்புத்துகள்கள் வேகங்கொண்டு பறக்கும், கந்தகப்புகை மூச்சுக்குழல்களில் முட்டும், சிவப்புப் புழுதி மண்ணில் குருதி கொப்பளிக்கும், சமர்க்களமொன்றில் இடுப்பில் இறுக்கிக் கட்டிய சாரத்தோடு அறுந்த செருப்பை தோளிடுக்கில் ஆயுதத்துக்கு மிண்டு கொடுத்தபடி வேகங்கொண்டு நின்றவனின் தூரக்கனவான ""தமிழீழம்'' என்கின்ற சொல், இன்றைக்கு எண்ணற்ற தொலைவில், திராவிட சக்தியை அரசியல் சதியாக்கி கபடத் தாயம் போடும், கருணாநிதியின் ""டெசோ''விடம் ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பது எத்தனை பெரிய முரண்நகை?// படித்ததில் உறைத்தது.

    பதிலளிநீக்கு
  2. ஈழ தமிழர் காத்துக்கு மருந்து போடும் மாநாடாம் இது ... அட பாவிகளா .. நீங்கள் நினைத்து இருந்தால் காயமே இல்லாமல் போயிருக்குமே

    பதிலளிநீக்கு
  3. கூட்டாட்சி முறையில் கலைஞர் என்னென்ன செய்யமுடியுமோ அவைகளை செய்துவிட்டார் என்றால் நீங்கள் ஒத்துகொள்ள போவது இல்லை.நீங்கள் காயப்பட்டவர்கள்,இழப்புகள் அதிகம்.ஆனால் நீங்கள் நினைப்பது போல கலைஞர் பிரதமர் போலவோ,ஜனாதிபதி போலவோ செயல்பட முடியாது என்பதே உண்மை.இதை பல இடங்களில் பதிவு செய்தும் பலனில்லை.பதவியை தூக்கி எறிந்திருக்கலாம், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாம் என்றெல்லாம் விவாதம் செய்பவர்கள் அடிப்படையே தெரியாமல் விவாதம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4:05 AM, ஆகஸ்ட் 05, 2012

    Final War could be avoid if Prabaharan accept some form of peace agreement. Because of his stupidity it happens. These fellows are crying that because of M.K and Sonia it happens.

    பதிலளிநீக்கு
  5. There is some news on like $10Billion investments in Sri Lanka, atleast for some economic development. Atleast now, our MPs and those in the central cabinet unite across party lines, to make sure, most of those investments are made in those areas, to benefit Tamils there.
    http://www.sundayobserver.lk/2012/08/05/new20.asp

    பதிலளிநீக்கு
  6. எங்க அண்ணன் போன வருஷம் செத்துப் போனான். அவனுக்கு எல்லாம் நான் தான் செஞ்சேன்.

    ஆமா! எப்படிங்க இறந்தார்.

    அது தான் சொன்னேனே! நான் தான் செஞ்சேன் என்று'

    இந்தத் பாசத்தம்பி தான் நம் தமிழனத் தலைவர். நடத்தப் போவது மாநாடு அல்ல. ஈமக் கிரிகை

    பதிலளிநீக்கு
  7. கரிகாலன்1:31 PM, ஆகஸ்ட் 06, 2012

    இதில் சொல்லப்பட இருக்கும் விஷயங்கள் ஈழ மக்களுக்கு இப்போது ஈழத்தை விட அவசியமாக தேவையானவையும் ஆகும். ஆனால் கருணாநிதி இவற்றை அதிகாரம் இருக்கும் போது செயல் படுத்தி இருந்தால் கண்டிப்பாக அது மக்களை சென்று அடைந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.காலம் கடந்த செயல்பாடுகள் ஆனாலும் தமிழருக்குள் பிரிவினை என்பது எழுதபடாத விதி நாம் பிரிந்து ஒவ்வொருவரும் ஒவொரு திசையில் நிற்கிறோம் அதனால் தான் எதிரிக்கு சாதகமாக போய் விட்டது அதுவே நமக்கு பாதகமாக அமைந்துவிட்டது..நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று எடுத்து கொள்வோம்..கருணாநிதி இதை எந்த நோக்கத்தோடு நடத்துக்கிறார் என்பது தெரியாது ஆனால் நமக்கு இதில் அவருடன் உடன்பாடு இல்லை என்றால் தள்ளி நின்று வேடிக்கை பார்போம்..இறுதியில் நல்லது நடந்தால் அது ஈழ மக்களுக்குத்தானே... அந்த நோக்கத்தோடு நாமும் பயணிப்போம் ஈழ தமிழர் உரிமைகளை வென்றெடுப்போம்....

    பதிலளிநீக்கு
  8. கரிகாலன்3:08 PM, ஆகஸ்ட் 06, 2012

    TO Anonymous

    //**Final War could be avoid if Prabaharan accept some form of peace agreement. Because of his stupidity it happens.**//

    இறுதி போர் என்பதே சிங்களத்தாலும் சர்வதேசத்தாலும் திணிக்கப்பட்ட ஒன்றே.2002 ஆம் ஆண்டு நோர்வே அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதிலேயே புலிகள் அமைதிக்கு திரும்பி விட்டனர் அன்றே போர் முடிந்து விட்டது. பிற்பாடு நடந்தவை எல்லாம் அவர்களை அழிக்க நடந்த ஒன்றே என்பதை புரிந்து கொள்ளுங்கள். எடுத்துகாட்டுக்கு - In 2003 the LTTE proposed an Interim Self Governing Authority (ISGA). This move was welcomed by the international community but rejected by the Sri Lankan President.நீங்கள் சொன்ன some form of peace agreement முன்னமே புலிகளால் ஒப்புகொள்ளபட்டுளது. ஆனால் சிங்களம் தான் இதை மறுத்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    //**These fellows are crying that because of M.K and Sonia it happens.**//
    கருணாநிதி மற்றும் சோனியா மீது பழி சொல்வதற்கு காரணம் இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது அப்பாவி மக்களை காக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான். புலிகளை காப்பாற்றவில்லை என்று யாரும் அவர்களிடம் பழி போடவில்லை. புலிகள் ஆயுதம் ஏந்தி போராடும் போராளிகள் அவர்கள் சாகிறார்கள் என்றால் அது ராணுவ மரபுப்படி அது வீரமரணம். ஆனால் அப்பாவி மக்கள் ஏன் சாக வேண்டும் அதை கருணாநிதியும் சோனியாவும் நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  9. //இந்தத் பாசத்தம்பி தான் நம் தமிழனத் தலைவர். நடத்தப் போவது மாநாடு அல்ல. ஈமக் கிரிகை//

    அதே... அதே...

    பதிலளிநீக்கு