7 செப்டம்பர், 2013

மிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார். கிரிட்டிக்கலி அக்ளெய்ம்ட் ஆன இப்படம், ஏனோ பாக்ஸ் ஆபிஸில் சோடை போனது.

இப்படம் வந்திருந்தபோது விகடனில் எழுதப்பட்ட விமர்சனத்தில் சிவாஜியின் மிருதங்க நடிப்பு தாறுமாறாய் கிழிக்கப்பட்டிருந்தது. சிவாஜி மிருதங்கம் வாசிப்பதை பார்க்கும்போது, வலிப்பு நோய் வந்தவரை பார்ப்பது போல இருக்கிறது என்று விகடன் காரசாரமாக எழுதிவிட்டது. இந்த விமர்சனத்துக்கு சிவாஜி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை கிளப்பினார்கள். இதையடுத்து விகடன், புகழ்பெற்ற மிருதங்க வித்வான்களிடம் சிவாஜியின் நடிப்பு குறித்து கருத்து கேட்டிருக்கிறது. நிஜ மிருதங்க வித்வான்களை மிஞ்சும் வகையில் சிவாஜியின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது என்று அவர்கள் சான்றிதழ் தர, விகடன் மனப்பூர்வமாக தன் வாசகர்களிடம் மன்னிப்பு கோரியது.

செய்த பாவத்துக்கு பரிகாரமாக அடுத்த ஓராண்டுக்கு விகடனில் விமர்சனமே வராது என்றும் அதன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படியே விகடனும் ஓராண்டுக்கு சினிமா விமர்சனம் எழுதவேயில்லை.

இது நடக்கும்போது நான் சிறுவனாக இருந்திருப்பேன். விகடனோடு பரிச்சயம் இருந்ததா என்றும் நினைவில்லை. எனவே சம்பவம் பற்றி தெரியவில்லை. ’தங்கமீன்கள்’ திரைப்படம் குறித்து விகடன் எழுதிய விமர்சனத்துக்கு, எதிர்வினையாக இயக்குனர் ராம் எழுதிய பதிவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மூத்தப் பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை சொன்னார். தங்கமீன்கள் விமர்சனம் குறித்த ராமின் தரப்பையும், விகடனின் விளக்கத்தையும் அடுத்தவாரம் விகடன் பிரசுரிக்கப் போகிறது என்று ராம் எழுதியிருக்கிறார். ஐ யாம் வெயிட்டிங்.

மிருதங்க சக்கரவத்தி காலத்தில் இச்சம்பவம் நடந்திருக்கும் பட்சத்தில், அதையும் தங்கமீன்கள் குறித்த விளக்கம் வரும் இதழிலேயே, விகடன் பொக்கிஷம் ஆட்கள் மீள்பிரசுரித்தால் சுவையாக இருப்பதோடு, விகடனின் பாரம்பரியப் பெருமையையும் அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு எடுத்துக் காட்டுவதாக அமையும்.

11 கருத்துகள்:

  1. yuva. wrong info. In the review, vikatan questioned about what his son was doing when the vidwan was suffering instead of supporting him. Actually, the son was not with his father. This factual mistake by the team made the editor to apologize and as a self-punishment, for one year stopped the cinema review.

    பதிலளிநீக்கு
  2. சம்பவம் நடந்தது பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரு வருசம் விமர்சனத்தை நிறுத்தினார்களா என தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணமூர்த்தி சார், இச்சம்பவம் கேள்விப்பட்டதுதான். எக்ஸாக்டாக என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் ஓராண்டுக்கு விமர்சனத்தை நிறுத்தினார்கள் என்பது உங்கள் கமெண்ட் மூலம் உறுதியாகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஓராண்டு விமர்சனத்தை நிறுத்தியது தங்கர்பச்சான் அவர்கள் ஒளிப்பதிவு செய்த படத்தில் ஒளிப்பதிவு நன்றாக இல்லை என்று தவறாக எழுதிய பொழுது நிகழ்ந்தது, இதை அவரே நானும் விகடனும் பகுதியில் பதிவு செய்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  5. திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களே..ஆக நடிப்புக்காகவும் நிறுத்தினார்களா, இல்லையா? ஏனேன்றால் யுவா முன்னெடுக்கும் எடுத்துக்காட்டு இன்றைய தங்கமீன்கள் சச்சரவுக்கு மிக இணையானதாக உள்ளது (அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்).

    பதிலளிநீக்கு
  6. This incident was not this movie, it was for "Aval Appadithan" - a movie by Ruthariah.

    பதிலளிநீக்கு
  7. பாலசந்தர் படமொன்றுக்கும் நடந்தது

    பதிலளிநீக்கு
  8. "நானும் விகடனும்" தொடரில் ஒரு இயக்குனர் விகடன் ஆசிரியரிடம் சென்று தன்னுடய படம் பற்றிய விமர்சனம் தவறு என்று நிரூபித்து விட்டதால்ஆசிரியர் ஒரு வருடம் விகடன் விமர்சனம் பிரசுரிப்பதை நிறுத்தினார் என்று சொன்னார். யார் என்று தான் ஞாபகம் வரவில்லை. பாக்கியராஜ் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. Yes, Vikatan pointed out as if there was a logical mistake. Actually it was a miss from Vikatan's Review team (think it was headed by Madhan). When it was pointed out by many fans, Vikatan realised it and stopped writing film reviews-- ren

    பதிலளிநீக்கு
  10. So the comments reveal , no one was sure the resl story and the film behind the stopping of the film reviews by the vikstan for one year......

    பதிலளிநீக்கு
  11. 'காலமெல்லாம் காதல் வாழ்க’ படமும் வெற்றி. ஆனால், அந்தப் பட விமர்சனத்தில் 'காட்சிகள் எல்லாமே அவுட் ஆஃப் ஃபோகஸ். மொத்தத்தில் ஒளிப்பதிவு சரியில்லை’ங்கிற தொனியில் எழுதிட்டாங்க. 'என் ஒளிப்பதிவை உலகமே கொண்டாடுது. நாம் கொண்டாடுற விகடன், ஏன் இப்படி பண்ணுச்சு?’ன்னு வருத்தம். உடனே, விகடன் ஆசிரியருக்கு 14 பக்கக் கடிதம் எழுதினேன். 'நான் இன்னார். ஒளிப்பதிவைக் கல்வியாகப் படித்தவன். இந்தந்த இலக்கியங்கள் படித்தவன். உலகத் திரைப்படங்கள் பார்த்தவன். ஏதோ மூன்றாம் தரப் பத்திரிகையில் இப்படி வந்திருந்தால், புறந்தள்ளி இருப்பேன். நான் விரும்பும் விகடனில் வந்துள்ளதால், மன உளைச்சலில் உள்ளேன். மறுபடியும் படம் பாருங்கள். தவறு இருந்தால், நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இல்லை என்றால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!’ - இதுதான் அந்த 14 பக்கக் கடிதத்தின் சாராம்சம். அந்தக் கடிதத்துக்குப் பதில்கூட வராது என்று எண்ணிய என்னை, விகடன் வியக்கவைத்தது.

    முன்னர் விகடன் விமர்சனக் குழு புரொஜெக்டர் சரியில்லாத அண்ணா சாலைத் திரையரங்கு ஒன்றில், படத்தைப் பார்த்திருக்கிறது. அதனால், ஒளிப்பதிவின் தரம் அவர்களுக்குப் பிடிபடவில்லை. அந்தக் கடிதத்துக்குப் பின், வேறு ஒரு நல்ல திரையரங்கில் படத்தை மீண்டும் பார்த்திருக்கிறார்கள். பிறகு, என் நியாயமான கோபத்துக்கு மதிப்பளித்து, அடுத்த இதழின் முதல் பக்கத்திலேயே, 'ஸாரி மிஸ்டர் பச்சான்’ என்று வருத்தம் தெரிவித்து, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் விளக்கம் வந்தது. என்னை நேரில் அழைத்த அவர், 'பச்சான், நாங்கள் செய்த தவறுக்கு எங்களை நாங்களே தண்டிப்பதுபோல, இனி ஓர் ஆண்டுக்கு விகடனில் எந்த சினிமா விமர்சனத்தையும் வெளியிடப்போவது இல்லை’ என்றார். சொன்னதுபோலவே செய்தார். நான் ஆடிப்போனேன். விகடனிடம் மட்டுமே எதிர்பார்க்கக்கூடிய உச்சபட்ச நேர்மை அது. ஒரு படைப்பாளனின் நியாயத்தைப் புரிந்துகொண்டு அவனுக்குப் பதில் சொல்லும் பத்திரிகை தர்மம், விகடனைத் தவிர இன்று வேறு யாரிடமும் இல்லை!-தங்கர்பச்சான் .( நானும் விகடனும் மே 11 , 2011)

    பதிலளிநீக்கு