டிவி வந்த புதுசில் அதை யாரோ ஐரோப்பிய புண்ணியவான் ‘இடியட் பாக்ஸ்’ என்று விமர்சித்தாராம். நல்லவேளை அவர் இண்டர்நெட்டை பார்க்காமலேயே இறைவனடி போய் சேர்ந்துவிட்டார். அபத்தங்களும், முட்டாள்தனங்களும், அற்பவாதிகளும் நிறைந்த இடமாக இணையத்தை சமூக வலைத்தளங்கள் மாற்றி அமைத்திருக்கிறன. கட்டற்ற சுதந்திரம், வெளிப்படையான ஜனநாயகம் போன்ற உன்னதமான உருவாக்கங்களுக்கு வேறொரு முகமும் உண்டு. அதைதான் இப்போது எல்லோரும் ‘தரிசித்து’க் கொண்டிருக்கிறோம். லைக்குக்காக, ரீட்விட்டுக்காக, கமெண்டுக்காக கொலையும் செய்வார்களோ இவர்கள் என்று அஞ்சும் வண்ணம் இணையக் கலாச்சாரம் பரிணாமம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
வம்புக்கு இழுப்பது, வசைபாடுவது என்பதையெல்லாம் தாண்டி மல்ட்டிப்பிள் பர்சனாலிட்டியாக இமேஜ் பில்டப் செய்து, ஒரு திருட்டு வாழ்க்கையை ஒருவன் வாழ்வதற்கு சமூகவலைத்தளங்கள் வாய்ப்பளிக்கின்றன. போகிற போக்கில் டிராஃபிக் சிக்னலில் குழந்தை பிச்சையெடுப்பதை பார்த்த ஒரு காட்சியில் ‘படிமம்’ உருவாக்குகிறார்கள். மழை பொழியும் இரவில் ‘மனவெழுச்சி’ கொள்கிறார்கள். யாரோ ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் எழுதிய ஏதோ ஒரு பிட்டுக்கதையை வாசித்துவிட்டு ‘தரிசனம்’ அடைகிறார்கள். ஆண்மை எழுச்சிக்கு வழிகாட்டும் போஸ்டரை லேம்ப் போஸ்டில் ஒட்டுவது மாதிரி ஆகிவிட்டது ஃபேஸ்புக்கும், ட்விட்டரும், கூகிள்ப்ளஸ்ஸும்.
‘தரிசனம்’, ‘மனவெழுச்சி’ மாதிரி வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உண்டு. போகிற போக்கில் சப்பை மேட்டருக்கெல்லாம் இதை பயன்படுத்துகிறோமே என்று எந்த குற்றவுணர்ச்சியுமில்லை. ஒவ்வொருவருக்கும் தினமும் ஒரு மனவெழுச்சியும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வாழ்க்கைத் தரிசனமும் கிடைத்துவிடுகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு சகட்டுமேனிக்கு இதெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கிற இந்த போக்குக்காக ஜெமோக்களையும், எஸ்ராக்களையும்தான் சுட்டுத் தள்ள வேண்டும். எழுச்சியோ அல்லது தரிசனமோ கிடைக்க நமக்கு போதிமரம் கூட தேவையில்லாமல் போய்விட்டது. அப்படியாப்பட்ட கவுதம புத்தருக்கே வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் இந்த தரிசனமும், எழுச்சியும் கிடைத்தது. நம் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு சம்பவத்தின் போது எழுச்சியோ, தரிசனமோ கிடைத்தால் பரவாயில்லை. தினம் தினமா அமாவசை சோறு கிடைத்துக் கொண்டே இருக்கும்?
சாதாரணப் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படாத இம்மாதிரி வார்த்தைகளை வைத்து, இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த கட்டுரையை மாதிரி சப்பைக் கட்டுரையில் ஆங்காங்கே மானே, தேனே போட்டு தூவிவிட்டால் அதற்கொரு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுவதாக எழுதிக் கொண்டிருக்கும் மொக்கைக்கு ஒரு காட்சிப்பிழை மூளையில் படிமமாகிவிடுகிறது. வாசிக்கும் மொக்கைகளும் அச்சொற்களின் உண்மையானப் பொருளுக்கான மதிப்பை உணராமல் அனிச்சையாக லைக் போட்டுவிட்டு, ‘அபாரமான எழுத்தாற்றல்’ என்று கமெண்டுபோட்டு உசுப்பேற்றி விடுகிறார்கள். எழுதுபவனும் மொக்கை, வாசிப்பவனும் மொக்கை எனும்போது கொஞ்சமாவது சூடு சொரணையோ, மனிதனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான அறிவோ, நாகரிகமோ பின்னுக்கு தள்ளப்பட்டு மலடான ஒரு அறிவுக்குருடு சமூகத்தை நம்மையறியாமலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
பள்ளியில் படிக்கும்போது பாடம் புரியவில்லை என்றால் சந்தேகம் கேட்போம். இணையத்தில் எவனாவது எதையாவது சந்தேகமாக கேட்டு பார்த்திருக்கிறீர்களா? அவனவனுக்கு தெரிந்ததை பீற்றிக் கொள்ளவும், எவனாவது இளிச்சவாயன் மாட்டினால் முழம், முழமாக உபதேசிக்கவும்தான் தயாராக இருக்கிறோம். புரியாமல் பேசுபவனை சமூகத்தில் உளறுவாயன் என்போம். மெய்நிகர் உலகமான இணையத்திலோ அவ்வாறு உளறிவைப்பவனை அறிவுஜீவி என்கிறோம். அவன் பேசுவது நமக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதெல்லாம் அடுத்தப் பிரச்சினை. ஏதோ ஒன்றினை புரியவில்லை என்று ஒப்புக்கொள்வதே நமக்கு பெரிய கவுரவ இழப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அறிவுப் பகிரல் எப்படி சாத்தியமாகும்?
பாவனைகளால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். நான் இதையெல்லாம் படிக்கிறேன். நான் இதையெல்லாம் பார்க்கிறேன் என்று உட்டாலக்கடியாக நம் இமேஜை ஏற்றிக் கொள்வதிலேயே நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும் செலவிடுகிறோம். ஸ்டான்லி க்யூப்ரிக்கின் ஒரு படத்தைக்கூட பார்க்காதவன் என்ன முட்டாளா. ஒரான் பாமுக்கை படிக்காதவன் எல்லாம் தற்குறியா. இம்மாதிரி டப்பென்று ‘நேம் டிராப்பிங்’ செய்துவிட்டால் போதும். பெரிய இண்டெலெக்சுவல் போலிருக்கே என்று இணையம் மூக்கின் மேல் விரல்வைக்கும். நியாயமாகப் பார்த்தால் இந்த போக்குக்காக சுஜாதாவையும், சாருநிவேதிதாவையும் தூக்கில் போடவேண்டும்.
பாவனைகளாலேயே வாழ்பவன் முதலில் மற்றவர்களை ஈர்க்க கஷ்டப்பட்டு இம்மாதிரி பாவனை செய்யத் தொடங்குகிறான். மற்றவர்களாகவே சேர்ந்து அவனை பெரிய வாசிப்பாளி, அறிவாளி என்று இமேஜை உருவாக்கிக் கொள்கிறார்கள். பொய்யான அந்த தோற்றத்தை சுமந்தவன், ஒரு கட்டத்தில் தனக்கு எல்லாம் தெரியும் என்று நிஜமாகவே நம்ப ஆரம்பித்துவிடுகிறான். உண்மையாகவே விஷயம் தெரிந்த ஒருவனிடம் அவன் உரையாடும்போது, வெறும் ஐந்து நிமிடத்திலேயே அவன் கஷ்டப்பட்டு கட்டி உருவாக்கிய கோட்டை பொடிப்பொடியாய் உதிர்கிறது. அப்போது உளவியல்பூர்வமாக தற்கொலை செய்துக் கொள்கிறான். வாழ்க்கை குறித்த நிஜமான ‘தரிசனம்’ ஒருவேளை அப்போது அவனுக்கு கிடைக்கலாம். தான் ஒரு முட்டாள் என்பதை ஒரு முட்டாள் உணரும் தருணம்தான் அவனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச ‘மனவெழுச்சி’யாக இருக்கக்கூடும்.
புத்திசாலியாக நடிப்பது ரொம்ப ஈஸி. ஆனால் நாம் நிஜமான நாமாகவே இருப்பதில் இருக்கும் சவுகர்யத்துக்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை.
maintaing innocence throughout the journey is the toughest task of the life
அருமையான கட்டுரை
பதிலளிநீக்கு'புத்திசாலியாக நடிப்பது ரொம்ப ஈஸி. ஆனால் நாம் நிஜமான நாமாகவே இருப்பதில் இருக்கும் சவுகர்யத்துக்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை' . யுவகிருஷ்ணா
முத்தாய்ப்பு
மனோ தத்துவமான கட்டுரை
பதிலளிநீக்குnalla thiranaayyu yuva. ithuthaan nijam. palarukku purivathillai.
பதிலளிநீக்கு10 நிமிஷம் சாட்டையால அடிச்ச மாதிரி ஒரு உணர்வு அண்ணா.... உண்மையா யோசிக்க வச்சிட்டிங்க..
பதிலளிநீக்குஅவன் பேசுவது நமக்கு புரிகிறதா புரியவில்லையா என்பதெல்லாம் அடுத்தப் பிரச்சினை. ஏதோ ஒன்றினை புரியவில்லை என்று ஒப்புக்கொள்வதே நமக்கு பெரிய கவுரவ இழப்பாக தோன்றுகிறது. இப்படிப்பட்ட சூழலில் அறிவுப் பகிரல் எப்படி சாத்தியமாகும்?
பாவனைகளால் நிறைந்திருக்கிறது இணைய உலகம். நான் இதையெல்லாம் படிக்கிறேன். நான் இதையெல்லாம் பார்க்கிறேன் என்று உட்டாலக்கடியாக நம் இமேஜை ஏற்றிக் கொள்வதிலேயே நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச அறிவையும் செலவிடுகிறோம்.
ஸ்டான்லி க்யூப்ரிக்கின் ஒரு படத்தைக்கூட பார்க்காதவன் என்ன முட்டாளா. ஒரான் பாமுக்கை படிக்காதவன் எல்லாம் தற்குறியா. இம்மாதிரி டப்பென்று ‘நேம் டிராப்பிங்’ செய்துவிட்டால் போதும். பெரிய இண்டெலெக்சுவல் போலிருக்கே என்று இணையம் மூக்கின் மேல் விரல்வைக்கும்./// உண்மை தான் நானும் உங்களை பெரிய இண்டெலெக்சுவல் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..
புத்திசாலியாக நடிப்பது ரொம்ப ஈஸி. ஆனால் நாம் நிஜமான நாமாகவே இருப்பதில் இருக்கும் சவுகர்யத்துக்கு இணையாக உலகில் வேறெதுவும் இல்லை.
Enna aachu yuva? Yaar mele ithanai kobam?
பதிலளிநீக்குConfession?
பதிலளிநீக்குஎப்படி சுஜாதாவை
பதிலளிநீக்குசத்தியமான உண்மை.... !
பதிலளிநீக்குஎனது நிஜவாழ்க்கயை வாழத்துடிக்கும் எனக்குள் இக்கட்டுரை ஒரு உந்துசக்தியை ஏற்படுத்தியது, நன்றி அண்ணா!
பதிலளிநீக்குஇந்தக்கட்டுரையிலயும் சில விஷயம் புரியல.ஆனா அதுக்கும் ஆஹா,ஓஹோ சொல்ல நீங்க ஒரு கூட்டம் சேத்து வச்சிருக்கிறது அதைவிடச் சோகம்.
பதிலளிநீக்குஏன் இந்த திடீர் தரிசனமும் திடீர் எழுச்சியும் தம்பி... இந்த கட்டுரையையும் வசிக்கும் ஒவ்வொருவரும் இதை தங்களுடைய சுயவிமர்சனமாகவே உணரும் வண்ணம் உள்ளது. ஆனால் இதை நீங்கள் எழுத காரணம் என்ன என்பது தான் புரியவில்லை.
பதிலளிநீக்குபாலாஜி! நீ கூட எழுச்சி கொள்ளலாமே! நாம் படித்துக் கொண்டிருந்தபோது எழுதிய கதைகள், கலந்து கொண்ட பட்டிமன்றம், ஆடிய ஆட்டங்கள் (கிரிக்கெட்டைதான் சொன்னேன்)எல்லாம் நினைவுக்கு வருகிறது
நீக்குநினைவுகளை நினைவுபடுத்தியதற்கு நன்றி முரளி
நீக்குஅபாரமான எழுத்தாற்றல்
பதிலளிநீக்குunmai unmai
பதிலளிநீக்குIt is really nice and true.
பதிலளிநீக்குGovindasamy Sekar
ஒட்டுமொத்த இணையத்தையும் இப்படி சொல்லிட்டீங்களே? :-( சோஷியல் மீடியான்னா, ஓக்கே. மிச்சபடி, நிறைய பேருக்கு (சும்மா, எனக்குத் துணைக்கு சேர்த்துக்கறேன்) சோறுபோட்டுக்கொழம்பு ஊத்தறதே இணையம்தானே...
பதிலளிநீக்குஎன் யுவா சார் இவ்வளவு கோபம்? பிறரால் ஈர்க்கப் பட்டு பாவனைக்க முயலும் ஒருவன் நிஜமாகவே படிக்க அரம்பித்துத் தன்னை வளர்த்துக் கொண்டால் நல்லது தானே?
பதிலளிநீக்குjust made me realize something....
பதிலளிநீக்கு‘அபாரமான எழுத்தாற்றல்'
பதிலளிநீக்குநிஜமாலுமே,,
எனக்கு தெரிந்து சோசியல் மீடியாவே இதற்கு காரணம்....
பதிலளிநீக்குஎன்ன செய்வது மனிதன் அங்கீகாரத்திற்கு ஏங்குபவனாக இருக்கிறான். அதற்கு வசதியான இடமாக இணையம் விளங்குகிறது. நாம் சொல்லும்போது நம் முக பாவங்களையோ உண்மையான எண்ண ஓட்டங்களையோ அறிய முடியாது என்பது கூடுதல் வசதி.
பதிலளிநீக்குYes. You are right. Social media slowly transforms people to live for others not for themselves.
பதிலளிநீக்கு//‘தரிசனம்’, ‘மனவெழுச்சி’ மாதிரி வார்த்தைகளுக்கு எத்தனை சக்தி உண்டு//
பதிலளிநீக்குயுவா , வார்த்தைகளுக்கு என்று தனியாக எந்த சக்தியும் இல்லை . அதை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த வார்த்தைகளுக்கான ஷக்தி உண்டாகிறது.
நீங்க சொல்றதைப் பார்த்தா இவங்க இவங்க தான் இந்த வார்த்தைகளை பயன்படுத்தனும்னு விதிமுறை இருக்கா மாதிரி தோணுது. இது அடிப்படையிலேயே தப்பான வாதம் .
யார் எந்த வார்த்தையை பயன்படுத்தினாலும் படிப்பவன் எப்படி உணர்கிறானோ அதுவே அந்த வார்த்தையின் பொருள்.
அடுத்தது ...
//கவுதம புத்தருக்கே வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் இந்த தரிசனமும், எழுச்சியும் கிடைத்தது. நம் வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு சம்பவத்தின் போது எழுச்சியோ, தரிசனமோ கிடைத்தால் பரவாயில்லை. //
என்ன கொடுமை நண்பா இது ? கவுதம புத்தருக்கே ஒருமுறைதான் கிடைத்தது .
அது என்ன கவுதம புத்தருக்கே .. ஏன் வேற யாருக்கும் தினம் தினம் வாழ்க்கையில் தரிசனம் கிடைக்க கூடாதா ?
இன்னும் சொல்லப் போனா ஒவ்வொரு ஷணமும் வாழ்கையை தர்சிப்பதுதானே ஆன்மிகம்.
உங்கள் கண்ணுக்கு தெரிந்தது ஒரே ஒரு கவுதமபுத்தர் , தெரியாம லட்சகணக்கில் இருக்க கூடாதா?
மேலும் ..
// யாரோ ஒரு மூன்றாம்தர எழுத்தாளர் எழுதிய ஏதோ ஒரு பிட்டுக்கதையை வாசித்துவிட்டு ‘தரிசனம்’ அடைகிறார்கள். ///
இது என்ன அவலம் "பிட்டுக்கதையைப்" படித்து வாழ்கை தரிசனம் கிடைத்தால் " ம்ஹூம் அதெல்லாம் முடியாது "பிட்டுக் கதை " படித்து தரிசனம் கெடைச்சா அதெல்லாம் நாங்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒத்துக்க மாட்டோம்னு சொல்ல வரீங்களா சாமி ?
தெரிஞ்சிகிட்டா தனயன் ஆவேன்