பாக்கியராஜின் சின்னம்மாவாக நடித்த சரஸ்வதியின் நடிப்பு ரோபோத்தனமாகவும், மேக்கப் மாறுவேடப்போட்டி தரத்திலும் இருந்ததைத் தவிர்த்து பெரிதாக குறைசொல்ல வேறெதுவுமில்லை. படம் வெளியாகி இருபத்தாறு ஆண்டுகள் கழித்தும் இன்னும் ‘கொண்டச் சேவல்’ காதுக்குள்ளே கூவிக்கொண்டே இருக்கிறது. ‘மாமா உனக்கொரு தூதுவிட்டேன்’ மாதிரி மெலடியெல்லாம் இனிமேல் சாத்தியமாகுமா தெரியவில்லை. எனக்கு ஃபேவரைட், க்ளைமேக்ஸ் ஜில்பான்ஸான ‘தென்பாண்டி சீமை ஓரமா’தான். மியூசிக் சேனல்களில் காணக்கிடைக்காத இந்த பாட்டுக்காகவே எப்போது படம் போட்டாலும் முழுசாக பார்த்துவிடுவது உண்டு. பாக்யராஜின் காஸ்ட்யூமும், டான்ஸும் பக்காவாக அமைந்த பாடல் இது.
ரொம்ப நாட்களாகவே இப்படத்தின் இசை இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாடல்கள் பிரமாதமாக இருந்தால் அது இளையராஜாவாகதான் இருக்கும் என்கிற பொதுப்புத்திக்கு நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. சங்கர் கணேஷ் என்று கொஞ்ச வருஷம் முன்புதான் தெரிந்தது. ‘கொண்டச்சேவலாக’ ஹிட்டடித்ததைவிட, இந்தி ‘பேட்டா’வில் ‘கோயல் சி தேரி போலி’யாகதான் அந்த ட்யூன் மரண ஹிட்.
வயக்காட்டில் வேலை பார்க்கும் பாக்யராஜ், வேலைக்கு இண்டர்வெல் விட்டு கிணத்துமேட்டு ஷெட் ரூமில் ‘மேட்னி ஷோ’ ஆடுவதை பார்க்கும்போது இப்போதும் வெட்கம் வருகிறது. க்ளைமேக்ஸில் வரும் வாய்ஸ் ஓவர் பார்த்திபனுடையது. படம் முழுக்கவே டயலாக்கில் பாக்யராஜ் பிச்சி உதறியிருந்தாலும், ராதா வாந்தியெடுத்ததுமே அவர் சொல்வதுதான் ஹைலைட்டான டயலாக். “யோவ் மண்ணாங்கட்டி. மாமனார் வீட்டுக்குப் போயி மாப்பிள்ளையோட இந்த வீரதீர செயலை சொல்லிட்டு வாய்யா”
யதேச்சையாக இன்று ‘எங்க சின்ன ராசா’வை கூகிளிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது, இது கன்னட ரீமேக்காம். 1969ல் புட்டண்ணா கனகல் இயக்கத்தில் ராஜ்குமாரும், சரோஜாதேவியும் நடித்திருக்கிறார்கள். சரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்.
மிக சாதாரணமான ஒன்லைனரை கொண்ட இந்த ஸ்க்ரிப்ட் எப்படி தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே குவித்துக்கொண்டிருக்கிறது என்று ஆழமாக யோசித்தால், மிகச்சுலபமாக அந்த வெற்றி ஃபார்முலாவை கண்டுபிடித்துவிடலாம். செண்டிமெண்ட் + க்ரைம் + செக்ஸ். இந்த சமாச்சாரங்கள் இல்லாமல் எடுக்கப்படும் படங்கள் வெற்றியடைந்தால், அதற்கு வேறு ஏதோ சிறப்புக் காரணங்கள் இருக்கக்கூடும். வெற்றியடைந்த படங்கள் எல்லாவற்றிலுமே இது இருந்திருக்கிறது என்பதை மல்லாக்கப் படுத்து யோசித்தால் உணர்ந்துக் கொள்ளலாம்.
புட்டண்ணா சினிமால தவிர்க்க முடியாத சக்தி...... பாலு மகேந்திராட மூன்றாம் பிறை, அவர்ட 'மானச சரோவரா'ட தழுவல்..... பாரதிராஜா அவர்ட்ட அசிஸ்டண்டா வேலை பாத்துருக்கார்.......பாலசந்தர் தன்னோட மானசீக குறு எண்டு அவர குறிப்பிட்டு அவர் அறிமுகப்படுத்தின நடிகர் பலரை உபயோச்சிருக்கார்
பதிலளிநீக்கு80's யில் இந்தப்படம் பார்க்க எங்கப்பா எங்களை அனுமதிக்கவில்லை. படு செக்ஸி என்று தடுத்துவிட்டார். இப்படிச் சொன்னால் நாங்கள் எப்படியாவது பார்த்துவிடுவோமே. தோழியின் வீட்டில், பள்ளி முடிந்து, வீடியோ கடையில் வீடியோ டேப் வாங்கிக்கொண்டு, ஒளிந்து ஒளிந்து பார்த்தோம். நல்ல படம். இருப்பினும் வசனம் சில இடங்களில் கவர்ச்சிதான். இன்று பார்க்கின்றபோதும் சில வசனங்கள் முகஞ்சுளிக்கவைக்கிறது என்பதனை ஏற்கத்தான் வேண்டும்.
பதிலளிநீக்குதிரைக்கதை வித்தகரான பாக்கியராஜ் அந்த ஒரு வரி கதையையோ அல்லது பழைய படத்தின் கதை கருவியோ தன் அளவில் ஒரு வெற்றி திரைக்கதையாக மாற்றி இருக்கிறாரா அல்லது முழுமையான தமிழ் பிரதியா? ஏனனில் இந்த திரைக்கதைதான் மீண்டும் இந்தியில் வெற்றி பெற்றது. இந்தியின் முதல் பிரதி வெற்றி பெற்றதாக தெரியவில்லை.
பதிலளிநீக்குசரோஜாதேவியை கிணத்துமேட்டு ரூமில் ராஜ்குமார் எப்படி புரட்டியெடுத்திருப்பார் என்பதை கற்பனை செய்துப் பார்த்தாலே பகீரென்று கலங்குகிறது அடிவயிறு. ராஜ்குமாருக்கு மூக்கு வேறு முழ நீளத்துக்கு தும்பிக்கை மாதிரியிருக்கும்........SUPER YUVA SIR
பதிலளிநீக்குஇருபத்தி ஆறு வருடம் கழித்தும் " எங்க சின்ன ராசா"வுக்கு விமரிசனம் எழுதி வியக்கவைத்த எங்க யுவ கிருஷ்ணா வாழ்க!
பதிலளிநீக்குஉண்மையிலயே நல்ல படம் அப்படின்னு நினைக்கிறேன்..! எனக்கு அந்த ஆத்தா ஆத்தா னு கூப்பிடுவது ரொம்ப பிடிக்கும்.
பதிலளிநீக்குஎல்லாரும் ரம்பத்த பத்தி ஆகா ஓஹோ ன்னு விமர்சனம் பண்ணிட்டு இருக்கும் பொது நீங்க மட்டும் இன்னும் பழச மறக்காம இருக்கீங்க பாருங்க. அதுக்காகவே உங்கள பாராட்டலாம்.
பதிலளிநீக்கு