18 ஜூலை, 2009

வேலுபிரபாகரனின் காமக்கதை!


காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன்.

சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.

ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது.

பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை.

பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?

12 கருத்துகள்:

  1. லக்கி,

    வேலு பிரபாகரன் விவகாரமா படம் எடுத்திருக்கார்னு திட்டும் நீங்களும்... ஒரு விவகாரமான படத்தை போடலாமா?

    பதிலளிநீக்கு
  2. தமிழ்குரல்!

    விவகாரம் படத்தில் இல்லை, வேலுபிரபாகரனின் சிந்தனைகளில். படம் பார்த்துவிட்டு நீங்களும் அவரை சிகப்பு சிகப்பாக திட்டாவிட்டால்தான் ஆச்சரியம் :-)

    பதிலளிநீக்கு
  3. அப்போ இன்னொரு மொக்கையா? காதல் அரங்கம் என்ற படத்தையும் எடுத்தவர் இவர்தானே? லக்கி எங்கள் தலைவி நமீதா நடித்திருந்தால் படம் ஓடியிருக்குமா?

    பதிலளிநீக்கு
  4. வந்தி!

    காதல் அரங்கம் தான் காதல் கதையாக சில காட்சிகள் சேர்க்கப்பட்டு உருமாற்றம் ஆகியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. ///தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி.///

    இன்னாது பிட்டு இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. //அவரை சிகப்பு சிகப்பாக திட்டாவிட்டால்தான் ஆச்சரியம் :-)//
    பச்சை பச்சையாக...

    பதிலளிநீக்கு
  7. ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?
    we could not protect our socity till these type mind live with our people

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா4:33 AM, ஜூலை 19, 2009

    He is teaching Good Touch Bad Touch to the youth. He is also following the World Cinema with Kim Dupuk Duk..
    Hope he wins an Oscar this time. All the best Velu

    பதிலளிநீக்கு
  9. நன்றி இதுதான் உங்களுக்கு நான் எழுதும் முதல் பின்னூட்டம். உங்களை தொடர்ந்து படிக்கும் உங்கள் வாசகனும் கூட. வேலு பிரபாகரன் படம் அடிப்படையில் தப்பென்றால் சில மாதங்களுக்கு முன்னாள் கூட ஸ்ரேயா அரை நிர்வாண உடை அணிந்த புகைப்படத்தை உங்கள் வலைப்பதிவின் மேல் வலது பக்கம் அமர்திநீறே அது என்ன. கேட்டால் சும்மா டைம் பாஸ் என்று ஒரு வாசகம் வேறு. அப்படி என்றால் உங்கள் எண்ணம் என்ன. மக்கள் அதை ரசிப்பார்கள் என்று நீங்களும் புரிந்து கொண்டு இருக்கிறீர் இல்லையா. பிறகு ஏன் படம் ஹவுஸ் புல் ஆகா போக வேண்டும். அப்படி என்றால் அத்தனை மக்களும் முட்டாள்கள் நீங்கள் மட்டும் அறிவாளியா. இந்த படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க என்று சொல்லி அதை விட்டு விட வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் அதை பார்க்கட்டும். இது நம் ஜீன்களின் பிரச்சினை. கலாச்சாரத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.

    பதிலளிநீக்கு
  10. இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆச்சா !!!...

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா10:19 AM, ஆகஸ்ட் 05, 2009

    இந்த மாதிரி சின்ன விஷயங்களில் எல்லாம் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். உருப்படியாக எழுத முயற்சி செய்யுங்கள். இல்லை என்ற கருத்து சொல்லும் படத்தை நீங்கள் வெளியிஎடுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. அற்புதமான கதை கரு. 99% மான காதல் காமம்தான். நிஜத்தை படமாக்கியிருக்கிறார்... நிங்கள் தமிழ் கலாசாரத்தில இருந்து வெளியில் வந்து உங்களுடைய விமர்சனத்தை எழுதுகோ... படத்தை காம உணர்வோடு பார்த்தால் உங்களைமாதிரித்தான் விமர்சனம் வரும்...
    படைப்பாளிகளை ஒருநாளும் குறைசொல்லாதைகோ இவ்வளவு கிழ்த்தரமாக...

    பதிலளிநீக்கு