21 நவம்பர், 2011

அம்மான்னா சும்மாவா?

பஸ் கட்டணம் உயர்வு என்றதுமே முதலில் மகிழ்ந்தது எங்கள் ரூட்டில் பஸ் ஓட்டிக் கொண்டிருக்கும் கண்டக்டரும், டிரைவரும்தான். இருவருமே புரட்சித்தலைவி கண்ட சின்னமான ரெட்டை எலையை கையில் பச்சையாகக் குத்தியவர்கள்.

“ஆயிரம் ரூபாய்க்கு 23.50தான் பேட்டாவா கொடுக்குறாங்க. இப்போ கட்டணத்தை உயர்த்தியது மூலமா எங்களுக்கெல்லாம் தாயுள்ளம் கொண்ட அம்மா 30 ரூவாயா பேட்டாவை உயர்த்துவாங்க” என்று நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு நம்பிக்கை தெரிவித்தார் எங்க ரூட்டு கண்டக்டர்.

ஆயிரக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்த ‘பேட்டா உயர்வையும்’ அம்மா அறிவித்திருக்கிறார். இனிமேல் ஆயிரம் ரூபாய் கலெக்‌ஷனுக்கு ரூ.16.50/- ஆக பேட்டாவை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார்.

அடுத்து நம் மடியிலும் தங்கத்தாரகை அம்மா கைவைத்து விடுவாரோ என்று அஞ்சிப்போய், அவசர அவசரமாக மாடு மடியை தஞ்சமடைந்திருக்கிறார்கள் பால் உற்பத்தியாளர்கள்.

* * * * * * * * * *

செந்தமிழன் சீமான் என்றொரு சிங்கத்தின் கர்ஜனையில் மே மாதம் வரை நாடு அதிர்ந்துக் கொண்டிருந்தது. மே பதினைந்தாம் தேதி காலையில் இருந்து அவருக்கு தொண்டையில் ‘கிச் கிச்’. இப்போதெல்லாம் கர்ஜிக்க முயற்சித்தாலும் ‘மியாவ் மியாவ்’ என்றுதான் சவுண்டு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் ‘மியாவ் மியாவ்’ மூவர் தூக்குத்தண்டனை தொடர்பானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி மூவரின் உயிரையும் காப்பார் என்று ஆக்ரோஷமாக கைகளை உயர்த்தி, கண்கள் சிவசிவக்க வீர உரையாற்றியிருக்கிறார் ‘தள்ளு தள்ளு’ தலைவர்.

அம்மா, இவரை இப்படியே விட்டுவிட்டால் ’ஈழத்துக்கு ராணுவத்தை அனுப்பி ராஜபக்‌ஷேவை கைது செய்வார் புரட்சித்தலைவி’ என்கிற ரேஞ்சுக்கு அள்ளிவிட ஆரம்பித்துவிடுவார்.

இந்த ஆனந்தத் தொல்லையை சமாளிக்க அம்மாவுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஒரு நடிகையை கற்பழித்ததாக இவர் மீது பதியப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்வது மட்டுமே ஒரே வழி.

அப்படி மட்டும் செய்துவிட்டால் ஈழத்தாய்க்கு பிரமோஷன் கொடுத்து, உலகத்தாயாக்கவும் எங்கள் தன்மானச் சிங்கம் சீமான் ரெடியாகவே இருக்கிறார். அம்மா மனசு வைப்பாரா?

* * * * * * * * * *

கங்கை, யமுனை, சரஸ்வதி மாதிரி தமிழகத்துக்கு வற்றாத ஜீவநதி ஒன்று இல்லையே என்று புரட்சித்தலைவி அம்மா 91-96 காலத்திலேயே சிந்தித்திருக்கிறார். இடையில் தீயசக்தி ஆட்சி வந்ததையடுத்து ஜீவநதியை உருவாக்கும் திட்டம் தள்ளிப்போய் 2001 ஆட்சிக்காலத்தில் நடைமுறைக்கு வந்தது. டாஸ்மாக் எனும் அந்த ஜீவநதி மட்டும் இல்லையேல் 2006 தீயசக்தி ஆட்சியே நடந்திருக்காது. திவால் ஆகியிருக்கும்.

மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் அம்மா, அந்த ஜீவநதியை மேலும் புனிதமாக்கும் முயற்சிகளின் முனைப்பாக இருக்கிறார். தமிழகத்தில் உயர்த்தர குடிமக்களை உருவாக்கும் பொருட்டு ‘எலைட் ஷாப்’புகளை ஏற்படுத்தப் போகிறாராம். குடிவெறியர்கள் சாதாரண சப்பைப் பார்களிலேயே காட்டு, காட்டு என காட்டுவார்கள். எலைட் பார்கள் வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக உருவி காட்டிவிடுவார்களோ என்று கிளுகிளுப்படைந்துப் போயிருக்கிறது தமிழகம்.

* * * * * * * * * *

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதை மட்டுமே ஒரே லட்சியமாக இதுவரை கொண்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப்பார்வை மகாராஷ்டிரம் மீதும் திரும்பியிருக்கிறது. இனி மகாராஷ்டிரமும் இந்தியாவின் முதல் மாநிலம் ஆகும்.

கடந்த மாதம் சோ.அய்யர் அவர்களது டைரக்‌ஷனில் மிகச்சிறப்பாக படமாக்கப்பட்டு வெளியான உள்ளாட்சித் தேர்தல் திரைப்படத்தின் மராத்திய ரீமேக், அடுத்த மாதம் மகாராஷ்டிராவில் வெளியாகிறதாம்.

எனவே அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டம், ஜிந்தூர் நகராட்சியில் இருக்கும் இருபத்தோரு வார்டுகளையும் கைப்பற்ற அம்மா ஓ.பி.எஸ். வகையறாக்களுக்கு ஆணையிட்டிருக்கிறார்.

ரபாட்பேகம் காதிர், முன்னிஷா பெரோஜ்கான், பிட்டு அப்பாசமி, முனாப், சைதை எஸ்.டயாப், காட்டூன் ஷாகிப்கான், யாசின் கரீம், விக்ரம் தேஷ்முக் உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் களம் காணப்போகும் சிறுத்தைகள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தில் போனமாசம் வரைக்கும் சேட்டுக்கடை வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்று ரத்தத்தின் ரத்தம் ஒருவர் நம் காதில் கிசுகிசுக்கிறார்.

இரட்டை இலை அங்கே வென்றதும் பால், பஸ் கட்டணம், மின்சாரம் ஆகியவை மகாராஷ்டிராவிலும் உயர்த்தப்பட்டு விடுமோ என அங்கிருக்கும் மக்கள் பேதியடைந்திருக்கிறார்கள்.

* * * * * * * * * *

எத்தனை முறை எட்டி உதைத்தாலும், போயஸ் கார்டனுக்கு சென்று பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்சித்தலைவின் பொற்பாதங்களை கழுவிவிட்டு வரும் தமிழக இடதுசாரிகள் தற்போது கடுமையான குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, அம்மா அவருடைய வழக்கமான பாணியில் உதைத்துத் தள்ளிவிட, கடைசியாக கேடுகெட்டுப்போய் கோயம்பேடு டாஸ்மாக்குக்கு போய் கூட்டணி பேசி மார்க்ஸ், லெனின், மாவோவின் பெயரையும் கெடுத்தாயிற்று. உள்ளாட்சியில் ‘பல்பு’ வாங்கியதற்குப் பிறகு டாஸ்மாக் தலைவரும் கூட மதிப்பதில்லை.

வேறு போக்கிடமின்றி தவிக்கும் இடதுசாரிகள் மீண்டும் தா.பா. தலைமையில் செந்தமிழன் தள்ளு தள்ளு, இனமான நெடுமாறன் பாணியில் அம்மாவுக்கே தீச்சட்டி தூக்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

தமிழக இடதுசாரிகளின் அவலநிலைக்கு சற்றும் சளைத்ததல்ல தமிழக ஊடகங்களின் நிலையும்.

பின்னே, அம்மான்னா சும்மாவா?

21 கருத்துகள்:

  1. இத்தகைய‌ சிற‌ப்புமிக்க‌ ஆல‌ம‌ர‌த்தின் கீழ் ப‌சுமாடு க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும் என்ற‌ த‌ன் வ‌ர‌லாறு க‌ட்டுரைப் போல‌, இத்தகைய‌ அம்மாவையே தேவ‌லாம் என‌ என்ணி வாக்க‌ளிக்க‌ வைத்த‌ த‌லைவ‌ர் க‌லைஞ‌ர்னா சும்மாவா என்று ஒரு வ‌ரியை க‌டைசியில் சேர்த்திருக்க‌லாம்

    :))

    பிகு : அட‌டா!! ப‌திவில் அணிலை மிஸ் செய்துவிட்டோமே என‌ அல‌‌றுவ‌து தெரிகிற‌து. வேறு ஏதும் இருந்தால் சொல்லுங்க‌. அதேதான்னா நெக்ஸ்ட் பின்னூட்ட‌த்திற்கு ஜ‌ம்பிடுங்கோ :))

    பதிலளிநீக்கு
  2. //இனிமேல் ஆயிரம் ரூபாய் கலெக்‌ஷனுக்கு ரூ.16.50/- ஆக பேட்டாவை உயர்த்தி ஆணையிட்டிருக்கிறார்.//
    இது உங்களுக்கு ஜோக்கா படுதா?

    பதிலளிநீக்கு
  3. தோழர் கார்க்கி!

    அணிலுக்கு ‘ஸ்பெஷல்’ கவனிப்பு வைப்போம். கவலையே வேண்டாம் :-)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா9:26 PM, நவம்பர் 21, 2011

    Un jathikkaran A.Raja telecom uzhai seiyam irunthiruntha..ithellam nadanthurukkuma?

    பதிலளிநீக்கு
  5. கட்டுரை சிறப்பு. இந்த விசயத்தில் ஊடகங்களின் நிலை குறித்து ஒரு சிறப்பு கட்டுரை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இரட்டை இலை சின்னம் எம்.ஜி.ஆர்.கண்டது..அம்மா இல்லை..அம்மா அவர்கள் இந்த இலையை வாடாமல் பாதுகாத்து வருகிறார்...

    ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9:43 AM, நவம்பர் 22, 2011

    தலைவா !!
    அடுத்த முறை, உனக்கு ஒரு சீட் reserve , இன்னும் பத்து வருடத்ல தனிக்கட்சி
    வாழ்க தமிழ் மக்கள், வளர்க தனி மனித அடி வருடிகள்...

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் சார்.

    //குடிவெறியர்கள் சாதாரண சப்பைப் பார்களிலேயே காட்டு, காட்டு என காட்டுவார்கள். எலைட் பார்கள் வந்துவிட்டால் ஒட்டுமொத்தமாக உருவி காட்டிவிடுவார்களோ என்று கிளுகிளுப்படைந்துப் போயிருக்கிறது தமிழகம்.//

    சிரிச்சிட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. //உங்களுக்காகத் தமிழக மக்கள் சுமையைத் தாங்கிக் கொள்ளத் தயார். பாரத்தை ஏற்றி வையுங்கள், தாங்குவார்கள். அதற்காக, பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டால் தாங்கமாட்டார்கள்.//

    பதிலளிநீக்கு
  10. //அப்படி மட்டும் செய்துவிட்டால் ஈழத்தாய்க்கு பிரமோஷன் கொடுத்து, உலகத்தாயாக்கவும் எங்கள் தன்மானச் சிங்கம் சீமான் ரெடியாகவே இருக்கிறார். அம்மா மனசு வைப்பாரா?//
    அப்படிப் போடுங்க!
    சூப்பர் தல...
    கிழி...கிழின்னு கிழிச்சுடீங்க....

    பதிலளிநீக்கு
  11. அம்மானாலே அதிரடிதான், எலைட் பார் திறந்ததும் பாருங்கள், சும்மா அடிச்சு தூள் கிளப்பும்.

    பதிலளிநீக்கு
  12. திமுகவின் இணைய கொபசெவாக உங்களை அறிவித்துள்ளார்கள் போலும்... இருந்தாலும் ரசிக்கும்படியாகவே உள்ளது... கார்க்கி கமெண்ட்தான் இதில் ஹைலைட்டே...

    பதிலளிநீக்கு
  13. அசோகபுத்திரன் அவர்களே!

    குந்திதேவியைப் பார்த்து வயிற்றில் அம்மிக்கல்லால் அடித்துக் கொண்ட காந்தாரியாக நீங்கள் இருக்கிறீர்கள்.

    உங்கள் வயிற்றெரிச்சலே எங்களை வாழவைக்கும். தொடர்ந்து வயிறெரியவும் :-)

    பதிலளிநீக்கு
  14. நல்ல பதிவு . . .

    ஆனா இதுக்காக கருணாநிதி பெட்டர்னு ஒத்துக்க முடியாது . . .

    மகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் அவர்

    மக்களை காப்பத்திடுவரா . . . ?

    நன்றி

    பதிலளிநீக்கு
  15. பகுத்தறிவு பேசிக்கொண்டு, ஏதாவது உதாரணம் சொல்வதற்கு மட்டும் புராணங்களை நாடும் உங்கள் தலைவர்வழி நடக்கும் தாங்கள்தான் உண்மையான கொபசெ... நீங்கள் சொல்வது உண்மைதான்... எங்களை போன்றோர் வயிற்றெரிச்சல்தான் உங்கள் தலைவரையும் அவர் குடும்பத்தையும் ‘வாழ வைத்துக்கொண்டுள்ளது.’ :-)

    பதிலளிநீக்கு
  16. ரம்ஜான் நோன்பு உடலிற்கு நல்லது, கார்த்திகை விரதம் மூடத்தனம். உடன் பிறப்புகளுக்கு இதயத்தில் இடம், பணம் உள்ளவருக்கு தேர்தலில் இடம். ஒருவனுக்கு ஒருத்தி - இது தமிழன் மரபு. நான் பச்சை தமிழன் - என் மூன்று மனைவிகளை தவிர்த்து. காவேரி பிரச்சனைக்கு கடிதம் எழுதுவோம், கனிமொழி பிரச்சனைக்கு நேரில் செல்வோம். எந்தனை முறை என்றாலும். மற்ற அனைத்தையும் யுவ கண்ணன் விளக்குவார் அல்லது ஜால்ரா அடிப்பார்.

    பதிலளிநீக்கு
  17. உங்க அய்யா அந்த வற்றாத டாஸ்மாக் ஜீவநதி யில் இருந்து தான் இலவச டிவி யை எடுத்து கொடுத்தார் தான் சொந்த பணத்தில் இருந்து அல்ல. உங்கள் பண்புள்ள தளபதியிடம் சொல்லி அந்த நதியை போன ஆட்சியிலே நிறுத்த சொல்ல வேண்டியதுதானே? தனியர்கள் சம்பாதித்து கொண்டிருந்த பணத்தை அரசுக்கு டாஸ்மாக் முலமாக திருப்பு விட்டார் ஜெயா. இதை மறுக்க முடியுமா? உங்கள் அய்யா இந்த கேடுகெட்ட பணம் வேண்டாம் நான் டாஸ்மாக் கடையை மூடுகிறேன் என்று மூடி இருந்தால் அது நியாயம். உங்கள் கட்டுரையை பார்த்தாலும் அய்யாவின் தினம் தினம் வருகிற அறிகையை பார்த்தாலும் தெரிகிறது நம் நாட்டில் இன்னமும் பல காந்தரர்கள் உலகை வயிற்றில் அடித்து கொள்கிறார்கள் என்று. வாழ்க உங்கள் ஒரு தலை பட்சம்.

    பதிலளிநீக்கு
  18. Hi all visitors) who becomes the champion of England's football?
    [url=http://medsonlinenoprescription.net/category/antibiotics]buy antibiotics online[/url]

    பதிலளிநீக்கு