30 நவம்பர், 2011

சுதந்திர பூமி – கமர்சியல் பார்ப்பனக் கருத்தியல்!


"அண்ணா, பெரியார் காலத்துலேயெல்லாம் இப்படியில்லே. கருணாநிதி வந்துதான் எல்லாத்தையும் கெடுத்துட்டாரு. அதுவும் பழைய கருணாநிதி வேற. இப்போ இருக்குற கருணாநிதி வேற” என்கிற தொனியில் பார்ப்பனர்கள் பலரும் அவரவருக்கு கிடைக்கும் துக்ளக், தினமலர் மாதிரி பத்திரிகைகளிலும், இணையத் தளங்களிலும் வினோத பிரச்சாரத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். இந்த கருத்துக்கு தொடர்பான ஏதாவது துணைக் கேள்வியைக் கேட்டால், ”96 வரைக்கும் கருணாநிதிக்குதான் ஓட்டு போட்டோம்!” என்று தங்களது நடுநிலையையும் அழுத்தமாக நிரூபிக்கத் தயங்குவதில்லை இவர்கள்.

ஒருவேளை 96க்கு முன்பாக பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்தின் சமூகப் பணிகளை பாராட்டிக் கொண்டுதான் இருந்தார்களோ? அப்போது சின்னப் பயல்களாக இருந்ததால் நமக்குதான் தெரியாமல் போய்விட்டதோ என்றுகூட சில நேரங்களில் சந்தேகம் வந்துவிடும். உச்சக்கட்டமாக, “இவங்களைப் போய் தப்பா நினைச்சிட்டோமே? பெரியார், அண்ணா மேல எவ்வளவு மரியாதை வெச்சிருக்காங்க?” என்றுகூட சில நேரங்களில் நினைத்துவிடுவது உண்டு. 2009ல் திடீரென ஈழப்பாசம் இவர்களுக்கு பொத்துக்கொண்டு சோனியாவையும், கலைஞரையும் கரித்துக் கொட்டியபோது, “அடடா.. நிஜமாவே இவாள்லாம் ரொம்ப நல்லவளா இருக்காளே?” என்றும் கூட நினைக்கத் தோன்றியது.

1973ல் வெளிவந்த இந்திரா பார்த்தசாரதியின் ‘சுதந்திர பூமி’ நாவலைப் வாசித்தபோது இந்த நினைப்பெல்லாம் சுத்தமாக அகன்றது. ஏற்கனவே இ.பா.வின் படுமொக்கை நாவலான ‘வேதபுரத்து வியாபாரிகள்’ வாசித்து நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனோம். அந்நாவலை வாசிப்பதற்கு முன்பாக இலக்கிய அன்பர்கள் பலரும் ‘சமகால அரசியலை இவ்வளவு பகடியோடு அணுகிய படைப்பு வேறொன்றுமில்லை’ என்றெல்லாம் பில்டப் கொடுத்திருந்தார்கள். உண்மையில் ‘வேதபுரத்து வியாபாரிகள்’ வெறும் தயிர்வடை காமெடிதான். புன்னகைத்துக் கொண்டேகூட படிக்க முடியவில்லை. 91-96 ஜெயா ஆட்சிக் காலத்தை பகடி செய்வதாக நினைத்துக்கொண்டு, ‘ஆட்டோ வந்துடுமோ?’வென பயந்துக்கொண்டே இ.பா. எழுதியிருப்பார் என்று தோன்றுகிறது.

‘சுதந்திர பூமி’ சோஸலிஸத்தை நக்கலடிக்கும் பிரதியென்று இ.பா. நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். பார்ப்பன டி.என்.ஏ. என்பதால் தமிழகத்தை விட்டு துரத்தப்பட்ட (எத்தினி கதை சார் இதே டெம்ப்ளேட்டுலே எத்தினி பேரு எத்தனை காலத்துக்கு எழுதுவீங்க) இளைஞன் ஒருவன், டெல்லிக்குப் போய் ஒரு எம்.பி.க்கு சமையல் வேலை செய்து, அவரது நம்பிக்கையைப் பெற்று, 72 தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் நின்று வென்று, மத்திய அமைச்சர் ஆகிறான் என்று போகிறது கதை. பெரும்பாலும் மூன்றே மூன்று கதாபாத்திரங்கள், அரசியல் பேசுகிறோம் என்று எப்போதும் மொக்கை போட்டுக்கொண்டே போகிறார்கள். அரசியல் என்பதால் இடையிடையே மைல்டாக ‘செக்ஸ்’ வருகிறது. அதையும் நேரிடையாக வெளிப்படுத்த இ.பா.வுக்கு துணிச்சல் இல்லை.

இ.பா.வின் பெரும்பாலான கதைகளில் டெல்லிதான் களம். அவர் அங்கு வாழ்ந்தார் என்பதே இதற்கு காரணம். இந்நாவலும் விதிவிலக்கல்ல. அமெரிக்காவிலேயே ‘க்ரீன் கார்ட்’ வாங்கி செட்டில் ஆகிவிட்டாலும், இங்கிருக்கும் தி.க.,வையும், தி.மு.க.வையும் பார்த்து வயிறெறிவதுதான் பார்ப்பன அடிப்படைக் கருத்தியல். தமிழகத்தின் 97 சதவிகிதம் பேர் முட்டாள்கள் என்பதையே திரும்ப, திரும்ப வேறு வேறு வார்த்தைகளில், வேறு வேறு வடிவங்களில் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இ.பா.வும் இந்த ‘சோஸலிஸ பகடி’க் கதையில் (கதையோடு ஒட்டா விட்டாலும்) அதை இரண்டு அத்தியாயங்களுக்கு விரிவாகச் சொல்கிறார்.

வட இந்திய எம்.பி., சென்னைக்கு வருகிறார். அவரோடு நம் ‘பார்ப்பன’ நாயகனும் காரியதரிசியாக வருகிறார். தமிழக அரசியல் தத்துவ விசாரங்களை உரையாடல்களாக இருவரும் நிகழ்த்துகிறார்கள். வடநாட்டு எம்.பி. சொல்கிறார் “பெரியார்தான் உங்களுக்கு டான் க்விஸாட் என்றால் நீங்களெல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள்?”

தமிழ் அரசியல் வட இந்திய அரசியல்வாதிகளுக்கு வேப்பங்காய்தான். ஆனாலும் இ.பா. இந்தப் போக்கை நியாயப்படுத்துகிறார். ஏனென்றால் தமிழர்கள் முட்டாள்கள் என்றுதானே அவரும் நம்புகிறார்? இல்லாவிட்டால் ராமராஜ்யம் நடத்திய ராஜாஜியை வீழ்த்திவிட்டு காமராஜர் வந்திருப்பாரா? அவருக்குப் பிறகு சூத்திரக் கட்சியான திமுக பெரும்பான்மை பெற்றிருக்குமா?

சென்னைக் கடற்கரையைப் பார்க்கும் எம்.பி. இவ்வளவு அழகான கடற்கரையில் சமாதி கட்டி, தமிழ் அறிஞர்களின் சிலைகளை வைத்து அசிங்கப்படுத்திய திராவிட ஆட்சியை கேலி செய்கிறார். ‘நாட்டுக்குள் ஒரு தனிநாடாக’ தமிழ்நாடு விளங்குவதை வடநாட்டு எம்.பி.யால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவரது தமிழ்நாட்டு டி.என்.ஏ காரியதரிசியோ காட்டிக் கொடுக்கும் வேலையை செவ்வனே செய்கிறார். “எங்கள் முதல்வருக்கு ராஜராஜ சோழன் என்று நினைப்பு” என்று தொடங்கி, சராசரி பார்ப்பனர் எப்படி திராவிட இயக்கங்களை அணுகுவாரோ, அந்தக் கருத்தியல்களை தத்துவம் மாதிரியான போர்வையை கட்டமைக்கும் வார்த்தைகளில் பக்கம் பக்கமாகப் பேசுகிறார். அண்ணா அப்போதே செத்துப் போய்விட்டார் என்பதால், அண்ணாவுக்கு மட்டும் லேசான சேதாரம் வரும்படியாக பார்த்துக்கொண்டு, பெரிய மனது வைத்து தமிழ்நாட்டின் மானத்தை ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறார் இ.பா.

இந்நாவலை வாசிக்கும்போது தெளிவாகவே தெரிகிறது. பார்ப்பனக் கருத்தியலின் அஜெண்டா எப்போதுமே ஒன்றே ஒன்றுதான். அதன் வடிவங்களும், பிரச்சாரர்களும் மாறுவார்களே தவிர, அக்கருத்தியலின் நோக்கம் மாறவே மாறாது. நாற்பதாண்டுகளுக்கு முன்பாக எதை சொல்லி வந்தார்களோ, அதையேதான் இன்றும் சொல்லி வருகிறார்கள்.

ஒரே மாற்றம் என்னவென்றால், இப்போது அந்தக் கருத்தியலுக்குள் சூத்திரர்களுக்கும் கொஞ்சம் தாராளமாக ‘இடஒதுக்கீடு’ கொடுக்க முன்வந்திருக்கிறார்கள். திராவிட ஆட்சி விதைத்ததின் பலன்களை நன்கு அறுவடை செய்துவிட்ட ஒரு குழுவோ, தங்களுக்கும் இடுப்புக்கும் தோளுக்கும் குறுக்காக ஒரு வெள்ளைநிற ‘மாய நூல்’ வழங்கப்பட்டு விட்டதாக கருதிக்கொண்டு வளர்த்த கடாக்களின் மார்பிலேயே பாயத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் தனிமனித சுயநலத்தை தூண்டும் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது. இதன் விளைவாக எவ்வளவோ உன்னத சிந்தனைகளும், இயக்கங்களும் காலாவதியாகத் தொடங்கியிருக்கிறது. திராவிட இயக்கமும் அதற்கு பலிகடா ஆகிவிடுமோ என்று இன்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பார்ப்பனக் கருத்தியல் எப்போதுமே ஒழுக்கத்தை சுட்டிக் காட்டி தனது எதிரிகளை ஒடுக்கும். எதிரி, தான் ஒழுக்கக் குறைவானவன்தானோ என்று அவனையே நம்பச் செய்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கும். டி.என்.ஏ பாரம்பரியமல்லாமல், நவீன பார்ப்பனர்களாக உருவெடுத்துவரும் அரசியல் விலக்கு செய்யப்பட்ட, ஒரு மொன்னையான சூத்திரப் பரம்பரைக்கு ‘சுதந்திர பூமி’ இவ்வாறான ஒரு குற்றவுணர்ச்சியை வெற்றிகரமாக ஏற்படுத்தும்.

நூல் வெளியீடு : கிழக்கு பதிப்பகம், சென்னை

(கிழக்கு இணையத்தளத்தில் தேடும்போது, இந்நூல் ‘ஸ்டாக்’ இல்லையென்று தெரிகிறது. கிழக்கின் செகண்ட் சேல்ஸில் ஒருவேளை கிடைக்கக் கூடும். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தேவி தியேட்டருக்கு எதிரிலிருக்கும் பிளாட்பாரப் புத்தகக் கடை அல்லது தெருவோர திருவல்லிக்கேணி புத்தகக் கடைகள்)

10 கருத்துகள்:

  1. இ.பாவின் 'ஏசுவின் தோழர்கள்' படித்து பாருங்கள். இன்னும் நொந்து போவீர்கள்.( கம்யூனிசத்தை டார்கேட் செய்திருப்பார்.)

    இ.பாவின் மூன்று நாவல்களை படித்து, அவரது மாஸ்டர் பீஸ் (?) என்று சொல்லப்படும் 'குருதிபுனல்' யை படிக்க தோன்றவில்லை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு... உங்கள் பதிவில் புத்தக விமர்சனம் படிக்கிறேன். தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. I don't understand why people like you are still holding on to the half-baked anti-brahministic attitude to sound fashionable and make your presence felt. Pls. move on to better things in life. Use your brains on something more novel to get noticed by people. Horrible..I accidentally clicked on your link from Badri's blog. Waste of my time.

    பதிலளிநீக்கு
  3. திராவிட கட்சிக்கு ஒரு பிராமண பெண்ணை தலைவியாக்கி ஊடகங்களை வைத்து உருப்பெருக்கம் செய்து முதலமைச்சராக்கி வேலை நியமனத்துக்கு தடை சட்டம் போடுவது கிராமப்புற மாணவர் மார்க் எடுப்பதை பார்த்து கடுப்பு வந்து அதுக்கு நுழைவு தேர்வு வைத்து தடுப்பு போடுவது சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், முத்தமிழ்ப் பேரவை ஆகியவற்றை காலி செய்வது என்று போயிட்டு தான் சார் இருக்கான் பாப்பான் ஒண்ணும் பண்ண முடியாது.

    பதிலளிநீக்கு
  4. அண்ணே ஏண்ணே.இந்த புக் எல்லாம்
    விளம்பர படுதுறேங்க . காலாவதி ஆக போறது
    ஆரியம்தான்

    பதிலளிநீக்கு
  5. டெல்லித் தமிழன் முகுந்தன், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தமிழ் வெறி போல் வடநாட்டில் இல்லை" என்று சொல்லும்போது, மிஸ்ரா, "நீங்கள் தமிழைப் போற்றுவது போல், அங்கு பசுவைப் போற்றுகிறார்கள்" என்று ஸேம் ஸைடு கோல் போடத் தயங்குவதில்லை.

    பதிலளிநீக்கு
  6. உலகமயமாக்கல் தனிமனித சுயநலத்தை தூண்டும் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது. இதன் விளைவாக எவ்வளவோ உன்னத சிந்தனைகளும், இயக்கங்களும் காலாவதியாகத் தொடங்கியிருக்கிறது.

    Aazham - Vaazhthukkal

    பதிலளிநீக்கு
  7. >>>>>கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் தனிமனித சுயநலத்தை தூண்டும் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது.<<<<<<


    லக்கி சார்,

    இ.பா. பற்றிய உங்கள் விமர்சனத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் மேற்சொன்ன வரி அற்புதம்! நான் எத்தனையோ முறை மனதில் நினைத்ததை ரத்தினச் சுருக்கமாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்! சொல்லப் போனால் 'அதிரடியாக விரைவுபடுத்தியிருக்கிறது'!

    நன்றி!

    சினிமா விரும்பி

    பதிலளிநீக்கு
  8. " டான் க்விஸாட் " தவறு

    டான் கிஹோத்தே - சரி

    பதிலளிநீக்கு
  9. நல்ல பதிவு.

    இதற்கு சமமாக தமிழர்களின் தற்கால போராட்டம் மற்றும் அதன் போக்கு பற்றி தமிழர் ஒருவர் எழுதிய கட்டுரை இந்த இணைப்பில்.

    http://siragu.com/?p=1320

    //
    இன்று இந்தியாவில் வளர்ந்த சமூகத்தின் சிந்தனை என்பது ஒரு வல்லாதிக்க சிந்தனையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உலகமயமாக்கல் பொருளாதார சமூக சூழல். இந்த சூழல் முதலாளித்துவ கோட்பாடுகளை தாங்கி நடத்தப்படும் ஊடகங்களின் பலத்தால் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. நம் தமிழகத்தில் மட்டும் மக்கள்(சிலர்) சரியான தருணத்தில் விழித்துக்கொண்டனர். //

    - Nellai Kumaran

    பதிலளிநீக்கு
  10. லக்கி,

    இந்த மொத்த நாடும்... கடவுளும் பார்ப்பனர்களுக்கு அடிமையாக இருக்கும் போது அவர்களின் அயோக்கியதனங்களை அம்பலபடுத்திய பெரியார் மீது பார்ப்பனர்களுக்கு காலகாலத்திற்கு வெறுப்பு இருக்கதானே செய்யும்...

    இ.பா என்ன... பாலகுமாரன், சுஜாதா என அனைத்து பார்ப்பன எழுத்தாளர்களும் பார்ப்பன கருத்தியலை கொண்டவர்கள்தானே...

    நீங்கள் பார்ப்பனீய கருத்தியலை அம்பலபடுத்தியது ஒரு புறம் இருந்தாலும்...

    கருணாநிதியை நியாயபடுத்துவது?

    1971 தேர்தலில் ராமனை பெரியார் செருப்பால் அடித்தார் என பார்ப்பனர்கள் பரப்புரை செய்த போது திமுக 187 இடங்களில் வெற்றி பெற்றது...

    2007இல் கருணாநிதி ராமன் என்ன பொறியாளரா என நக்கல் அடித்த போது மக்கள் ஆதரிக்கதான் செய்தார்கள்...

    நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தை பாருங்கள்...

    //* கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் தனிமனித சுயநலத்தை தூண்டும் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது *//

    உலகமயமாக்கலுக்கு நாட்டை திறந்து விட நரசிம்மராவின் காங்கிரஸ் 1992 தீர்மானம் போட்ட போது...

    நேரு ஆவடி மாநாட்டில் கொண்டுவந்த சோசலிச திட்டதை எல்லாம் மொட்டை அடித்து கொண்டு நாம சாமியின் முன் காங்கிரஸ் நிற்கிறது என சொன்ன கருணாநிதி... பின்னாளில் மக்களுக்கு எதிரான் அணு சக்தி ஒப்பந்தம், தற்போதைய எப்டிஐ வரை அனைத்திலும்.. காங்கிரஸோடு பங்காளியாக இருப்பதை விமர்சனம் செய்யாமல் கள்ள மவுனம் சாதிக்க வேண்டும் என்கிறீர்களா?

    ஈழ இனபடுகொலையில் கருணாநிதி தமிழர்களுக்கு நியாயமாக நடந்து கொள்ள வில்லை என்பதற்கு விமர்சனம் செய்வது சரி என்றாலும் அதற்கு தீர்வாக பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதாவிடம் மண்டியிடுவது தீர்வாக இருக்காது என சொல்ல முடியுமே... ஈழ இனபடுகொலையில் கருணாநிதியின் துரோக நிலைபாட்டை நியாயபடுத்த எப்படி உங்களால் முடிகிறது என தெரியவில்லை? மனசாட்சியை அந்த நேரம் கழட்டி வைத்து விட்டுதானே முடியும்...

    பதிலளிநீக்கு