1996 அல்லது 97 ஆம் வருடங்களாக இருக்கலாம். ஒரு ஓட்டை சில்வர் ஃப்ளஸ்தான் என் வாகனம். தினமும் காலை ஒன்பது மணியளவில் வேளச்சேரி செக்போஸ்டை கடந்து கன்னிகாபுரம் வழியாக அண்ணாசாலைக்குள் நுழைவேன்.
ஒரு நாள் அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டில் மரண இசை முழங்கிக் கொண்டிருந்ததை தூரத்தில் கேட்டேன். அருகே வந்துக் கொண்டிருந்தபோது, என்னை வேகமாக தாண்டி வந்த சைரன் வைத்த கார் ஒன்று அந்த வீட்டின் முன்பாக க்ரீச்சிட்டு நின்றது.
உள்ளே இருந்து இறங்கி வந்தவர் சென்னை மாநகரின் மேயராக இருந்த ஸ்டாலின். உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வேகமாகச் சென்று, ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார். இறந்தவரின் உறவினர் (பையனாக இருக்கலாம்) ஒருவர் அருகில் சோகமாக நின்றிருந்தார். அவரிடம் இறந்தவர் பற்றிய விவரங்களை விசாரித்து, செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து கிளம்பினார்.
இத்தனைக்கும் காலமானவர் திமுகவை சேர்ந்தவரும் கிடையாது. தினம் அந்த வழியாக மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு செல்லும் ஸ்டாலின், தான் செல்லும் வழியில் யாரோ மரணித்துவிட்டதைப் பார்த்து, உடனே மரியாதை செலுத்த இறங்கியிருக்கிறார். “பார்க்குறதுக்கு ரொம்ப ஏழ்மையான குடும்பமா தெரிஞ்சது. அதுதான் செலவுக்கு பணம் இருக்குமோ, இருக்காதோன்னு தெரிஞ்சுக்கறதுக்கு இறங்கி வந்தேன்” என்று காரில் ஏறும்போது சொன்னார்.
‘அரசியலில் எளிமை’ குறித்து ஏடுகளில் மட்டுமே அறிந்திருந்த எனக்கு அந்நிகழ்வு பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. 96-2001 காலக்கட்டத்தில் சென்னையில் வசித்தவர்கள் பலரும் ஸ்டாலினின் எளிமையை உணர்ந்திருப்பார்கள். முதல்வரின் மகன், மாநகரின் மேயர், எம்.எல்.ஏ., போன்ற எந்த பந்தாவும் ஸ்டாலினுக்கு இருந்ததில்லை. அக்காலக் கட்டத்தில் பல்வேறு இடங்களிலும் அவரது திடீர் அதிரடி விசிட்டுகள் நகர்வாசிகளை ஆச்சரியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது.
பதினைந்து ஆண்டுகள் ஆகியும் இந்த எளிமை அவரை விட்டு இன்றுவரை மறையவில்லை. சில காலம் முன்பு நாம் செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம். தவறான சிகிச்சையால் கண்பார்வை பறிபோன சுரேகா என்கிற மாணவிக்கு ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் உதவி, ஐதராபாத்தில் உயர்சிகிச்சை அளிக்க வைத்தார். ஸ்டாலினோடு நிழல் போல இருக்கும், திமுகவின் மாநில இளைஞரணி துணைச் செயலர் ஹசன் முகம்மது ஜின்னா பலமுறை இந்நிகழ்வைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். “தளபதி திடீர்னு வண்ணாரப்பேட்டைக்கு வண்டியை விடுன்னு சொன்னாரு. என்ன, ஏதுன்னு தெரியாம காரில் உட்கார்ந்தோம். அங்கே ஒரு இடத்துலே காரை நிப்பாட்டிட்டு, ஒரு சந்துக்குள்ளே இறங்கி நடக்க ஆரம்பிச்சாரு. அப்போ அங்க இருந்தவங்க சிலபேரு பேசிக்கிட்டாங்க. ‘ஏய் அங்கே பாருப்பா ஒருத்தரு ஸ்டாலின்மாதிரியே போறாரு’ ன்னு”. இந்நிகழ்வு நடந்தபோது ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெருவில் எந்த பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண மனிதராக, பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் நடந்துச் செல்வதை மக்களால் நம்பவே முடியவில்லை.
கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றும் இம்மாதிரியானதுதான். மனதை நெகிழ வைத்த நிகழ்வு அது.
திருத்தணியைச் சேர்ந்தவர் ஜோதி. மாற்றுத்திறனாளியான அவர் தீவிரமான திமுககாரர். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது. தாலி கட்டிய கையோடு, மணமாலையை கழட்டிவிட்டு நேராக அண்ணா அறிவாலயத்துக்கு வந்துவிட்டார். ஸ்டாலினை சந்தித்து தனக்கு திருமணமாகியிருப்பதால், ஆசி வாங்க வந்ததாக சொன்னார். “ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?” என்று கடிந்துக் கொண்ட ஸ்டாலின், ஜோதி குறித்த மற்ற விவரங்களை கேட்டுத் தெரிந்துக் கொண்டிருக்கிறார்.
அன்று மாலை திருத்தணியில் ஜோதிக்கு திருமண வரவேற்பு. யாருமே எதிர்பாராத வண்ணம் மண்டபத்துக்குள் தன் வழக்கமான அதிரடி ஸ்டைலில் நுழைந்தார் ஸ்டாலின். ஜோதிக்கு இன்ப அதிர்ச்சி. “கல்யாணம் ஆனவுடனேயே, இரண்டரை மணி நேரம் பயணம் பண்ணி என்னை வந்து பார்த்தியேப்பா, பதிலுக்கு நான் வந்து உன்னை பார்க்க வேணாமா?” என்று தன் அறிவிக்கப்படாத திடீர் வருகைக்கு காரணமும் சொன்னாராம்.
அரசியல் தலைவர்களிடம் எளிமை இல்லை. கட்சித் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்றெல்லாம் திட்டமிட்டு, அன்னா ஹசாரே பாணியில் மொக்கைப் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் இதே காலத்தில்தான், திமுகவின் பொருளாளரும், அடுத்த முதல்வருமான ஸ்டாலின் விடிவெள்ளியாக தெரிகிறார்.
அவரது தலைவர் கலைஞருக்கு தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும், ஒரு நபரையாவது பெயர் சொல்லி அழைக்குமளவுக்கு தெரியும். ரொம்பவும் அடி வாங்கிய பழைய பழமொழிதான். இருந்தாலும் இந்த இடத்தில் பொருத்தமாக இருப்பதால் சொல்லி வைக்கிறோம். ‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’
அடுத்த முதல்வர் ஸ்டாலின்னு சொல்லுறீங்க ?
பதிலளிநீக்குthalaivar stalin vaalzga
பதிலளிநீக்குதளபதி பற்றியான அருமையான பதிவு யுவா..
பதிலளிநீக்குஅவர் அமைச்சராய் பணிபுரிந்த அந்த துறை அரசாங்க ஊழியர்களே ஸ்டாலினை புகழ்வார்கள். ..மிக்க மரியாதையுடன் ஊழியர்களை அழைப்பார் என்றும், நடத்துவார் என்றும் சொல்வார்கள்..
இதை எல்லாம் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.ஒவ்வொரு தலைவனுக்கும் இது போன்று எதாவது ஒரு பண்பு இருக்கிறது அதுவே அவர்கள் அடையாளமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குunmai..valga thalapathi
பதிலளிநீக்குஇது என்ன கொடுமை சார், ரம்ஜானுக்கு அம்மாவும்தான் நோம்பு கஞ்சி குடிக்கிறாங்க. இதுல என்ன எளிமை வேண்டியிருக்கு? அவரோட கட்சி, அவருடைய தொண்டர்கள். அதிமுக தொண்டர் கல்யாணத்துக்கா போயிட்டாரு?
பதிலளிநீக்குsuch a gud person. but i d't know why his own brother did't like him to become next cm. you might be knowing him better than his brother.
பதிலளிநீக்குதளபதியை பற்றிய அருமையான பதிவு. ஸ்டாலின் அவர்கள் வெகு சிக்கிரம் தி.மு.கவின் தலைமை பொறுப்பை கையில் எடுக்கவேண்டும்.
பதிலளிநீக்குமன்னிக்க வேண்டும் யுவா. கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்வியில் அரசு ஊழியர் பங்கும் இருந்ததில் இவர் பொறுப்பேற்று இருந்த துறை செயலாளரும் ஒரு காரணம் என சொல்வார்கள். இவரை சுற்றி எப்போதும் ஐ.ஏ.எஸ். கூட்டம் இருந்ததால் இவருக்கு உண்மைகளை யாரும் சொல்ல முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.
பதிலளிநீக்குயுவா,
பதிலளிநீக்குஎன்னுடைய கமென்ட் ஐ நீங்கள் போடவில்லை என்றாலும் உண்மை அதுதான்.
மாடரேடர் எடிட்டிங் இதற்காகத்தான் வைத்திருக்கிறாய் போலிருக்கு.
உன்னை பாதிக்காத கமென்ட் மட்டும்தான் பிரசுரிப்பாய் என்று நினைக்கிறேன்.
இதுவும் ஒரு ஆத்திரம்தான்.
அரசியல் தலைவர்களிடம் எளிமைஇல்லை தொண்டர்களிடம் மரியாதை இல்லை என்று மொக்கை பிரச்சாரம் செய்யவில்லை உண்மையை கூறுகிறார்கள்.தொண்டர்களை விடுங்கள் இர்ண்டாம் மட்ட தலைவர்களுக்கே மரியாதை இல்லை இல்லவிட்டால் கனிமொழி,கலனிதி மாரன் எல்லாம் MP மந்திரி ஆகமுடியுமா ஏன் அவர்களைவிட திறமையானவர்கள் கட்சிக்காக பாடுபட்டவர்கள் கட்சியில் இல்லையா
பதிலளிநீக்குஒவ்வொரு கழக தொண்டனும் சோர்ந்திற்க்கிரான் அம்மா கட்சியயையும் சேர்த்துதான்
//அடுத்த முதல்வருமான ஸ்டாலின் //
பதிலளிநீக்குஇதிலென்ன சந்தேகம். ஆனால் அடுத்த முறை திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் போது கலைஞர் அவர்கள் ஒரு ஆறு மாத காலமாகவாவது முதலமைச்சராக இருந்து விட்டு பிறகு ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் ஆறாவது முறையாக முதலமைச்சராகிறார் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார் அல்லவா?.
எனக்கு பிடிக்காதது ஸ்டாலின் பேச்சு தான்..எந்த சுவாரஸ்யமும் துணிச்சலும் இல்லாத ..வெறுமையான பேச்சு..கலைஞரின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது பேச்சு திறமை.நகைச்சுவை உணர்வு..ஸ்டாலினுக்கு நகைச்சுவை உணர்வும்..போரடிக்காமல் பேசும் திறனும் இருக்கா..?..விஜய் தன் தந்தை உதவியால் முன்னேறியது போல் ஸ்டாலின் கலைஞரின் நிழலில் பாதுகாப்பாக இருக்கிறார்.இது கானல் நீர் என்பது எதிர்காலத்தில் தெரிந்துவிடும்.கருணாநிதிக்கு சொல்லிக்கொள்ள இந்தி எதிர்ப்பு போராட்டம்,கல்லக்குடி மறியல் என இருக்கலாம்..ஸ்டாலினுக்கு பத்தோடு பதினொன்றாக மிசா வில் அடி வாங்கியதை தவிர ஏதுமில்லை.இவர் தி.மு.க வினருக்கு தலைவராக தளபதியாக தோற்றமளிக்கலாம்.ஆனால் மக்களுக்கு அப்படி தோற்றமளிக்கவில்லை என்பதற்கு இவர் பிரச்சாரத்துக்கு செல்லும்போது கூடும் மக்கள் கூட்டமே சாட்சி.
பதிலளிநீக்கு//“பார்க்குறதுக்கு ரொம்ப ஏழ்மையான குடும்பமா தெரிஞ்சது. அதுதான் செலவுக்கு பணம் இருக்குமோ, இருக்காதோன்னு தெரிஞ்சுக்கறதுக்கு இறங்கி வந்தேன்” //
பதிலளிநீக்குஅருமை....
வராலாறு எழுதுபவர்கள் ஒரு பக்கமாக எழுதுவதுதானே இயல்பு. காலம் காலமாக அப்படித் தானே எழுதப்படுகிறது. நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது. எந்த ஊர் நாணயமானாலும் சரி...
பதிலளிநீக்குஅப்போ, திமுக அவ்வளவு நல்ல கட்சியா?
பதிலளிநீக்குநீங்க என்ன கண்ணை மூடிட்டா இருக்கீங்க? நாட்டு நடப்பு ஒண்ணுமே தெரியாதா?
திமுக, அதிமுக, எல்லா 'முக' கட்சியும் ஊழல் பெருச்சாளிகள் தான்...
யுவா, உங்க மேல இருந்த மரியாதையே போச்சு...
yes... his son is also very simple... you may try to write an article about how udhayanidhi is able to produce/distribute movies (a high cost business) with such a simpleton father who came from humble background...
பதிலளிநீக்குbeing simple doesnt mean he is a good person
Lucky: This is not a great thing that stalin attended marriage. One thing which I liked about amma , if you have watched jaya tv very often she passes condolences , marraige wishes and meeting party members in every days. I feel she is directly connected to aiadmk party members through this TV. But nothing these sorts of things has been came from karunanethi..
பதிலளிநீக்குBut always feels that someway amma is connected to people/party caderes one way or other.
I am not supporter of both the parties.
எது எப்படியோ நல்லது செஞ்சா..பாராட்டனுங்க...
பதிலளிநீக்குஅப்பத்தா...அந்த புகழ்ச்சி மயக்கத்தில்
இன்னும் நல்லது செய்வாங்க...
நிச்சயம் அடுத்த முதல்வர் “ஸ்டாலின்” - அதில் எந்த மாற்றமும் இல்லை...
பதிலளிநீக்குஇன்னும் 4 ஆண்டுகள் மேலும் மேலும் “ஜெ” மோசமான ஆட்சி தரவேண்டும் ;-((
நல்ல பதிவு யுவா...
மயிலாடுதுறை சிவா....
நீங்கள் சொல்லும் காலகட்டத்தில் நானும் வேளச்சேரியில்தான் இருந்தேன். வேளச்சேரி-ஹால்டா ரோடு ஓவர் நைட்டில் சரிசெய்யப்பட்டது. அவரது பந்தா இல்லாத அணுகுமுறையை நானும் சில இடங்களில் கண்டிருக்கிறேன்.. சொல்லப்போனால் கடந்த தேர்தலிலேயே கலைஞரா ஜெ.வா என்பதை விட ஸ்டாலினா ஜெ.வா என்று இருந்திருந்தால் போட்டி சுவாரஸ்யமாக இருந்திருக்கும்...
பதிலளிநீக்கு\\நல்ல நேரம் சதீஷ்குமார்...
எந்த சுவாரஸ்யமும் துணிச்சலும் இல்லாத ..வெறுமையான பேச்சு..\\
பேசிப்பேசியே நம்மளை ஏமாத்தினது அப்பாவோட போகட்டும்... மகனாவது மக்கள்பணியில் நன்றாக செயல்படுகிறார். அவரை அப்படியே இருக்க விடுங்கள்..
In DMK, Stalin only is the Correct person; remaining everybody is dummy piece or corrupt person only including M. Karunanithi . .
பதிலளிநீக்குதளபதியின் நல்ல குணங்களில் அவரது எளிமையும் ஒன்று. அவரை எளிதில் அணுக முடியாது என்று சொல்பவர்கள் ஒருமுறை ஜெயலலிதாவை சந்திக்க முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவரது ஒரு நாளைய நிகழ்ச்சி நிரலைப்பார்த்தாலே நமக்கு தலை சுற்றிவிடுமளவிற்கு தினமும் 18 மணி நேரத்திற்கும் மேலாக உழைக்கிறார். அவதூறு பேசும் எதிர்க்கட்சியினரையும் சரி, உட்கட்சி துரோகிகளையும் சரி அவர் தூற்றி யாருமே பார்த்திருக்க முடியாது. ”வாழ்க வசவாளர்கள்” என்ற அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை பின்பற்றும் பண்பாளர் நமது தளபதி. பின்னூட்ட வசவாளர்கள் இதைப்பார்த்தாவது திருந்தட்டும்!
பதிலளிநீக்குதிமுக இருக்கும் இன்றைய நிலைமையில் இவர் மட்டும்தான் தொண்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆறுதல். கடந்த தேர்தலை இவர் தலைமையில் சந்தித்து இருக்கவேண்டும். தவறு கலைஞருடையது. யார் சக்கர நாற்காலியில் இருக்கிற,நடக்க இயலாத 87 வயது நபரை முதல்வர் பதவிக்கு ஏற்றுக்கொளள முடியும். ஸ்டாலின் தலைமையில் இருந்தால் நிச்சயம் இந்த படுதோல்வி நிகழ்ந்திருக்காது. அதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். திமுக தொண்டனுக்கு அது தெரியும்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு! எளிமை குறித்து மிகையில்லாத நடையில் அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள்!
பதிலளிநீக்கு