“எப்படி.. எப்படி? பொண்ணு...” வாலியின் வைரவரிகளில் அடுத்த
‘ஏ’த்தனமான வார்த்தை ரிங்டோனாக தேனில் ஊறவைத்த குரலில் ஒலிப்பதற்குள்ளாக அவசரமாக
போனை எடுத்தோம். நடுச்சாம நேரம். ஒலிம்பிக் பீச் வாலிபால் கண்டுகொண்டு,
ஃப்ரிட்ஜில் வைத்த ஆப்பிளாய் குளிர்ந்துப் போயிருந்தோம். மலேசியாவில் இருந்த அஜால்
குஜால் நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். இந்த நேரத்தில் அந்த நண்பர் அழைக்கிறார்
என்றால் கடுமையான போதையில் ஏதேனும் ‘குமுக்’கான மேட்டரை அருளப் போகிறார் என்று
அர்த்தம்.
நண்பரின் குரலும்
ஜில்லோ ஜில்லென்று இருந்தது. சிகரத்தை எட்டிய சாதனைக்கு இணையான பெருமிதம் அவரது
குரலில் வழிந்தோடியது. ஒருமாதிரியான ஹஸ்க்கி வாய்ஸில் மூச்சு வாங்கிக்கொண்டே
பேசினார். அவர் பேசப்பேச, கேட்ட நமக்கு சில நேரம் ஜூஜுலிப்பாகவாகவும், சில நேரம்
பகீராகவும், மீதி நேரம் டெர்ரர் ஆகவும், இதயம் துரந்தோ எக்ஸ்பிரஸ்ஸாக படபடவென
பட்டாசாக தடதடத்தது. ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாக அரசல் புரசலாக
கேள்விப்பட்டதுதான். அனுபவப்பட்டதில்லை. நூதனமுறை பணமோசடி. தூண்டில்? வழக்கம்போல
செக்ஸ்.
பேச்சு
முடிந்ததும், ’மேட்டர்’ அப்படியே ஆணியில் அடித்து மனசில் ஃப்ரேம் மாட்டிக்
கொண்டது. மறுநாள் விடிந்ததில் இருந்து ஆணியைப் பிடுங்கி போடலாமென்றால், ம்ஹூம்.
நல்ல ஸ்ட்ராங்கான ஆக்கர். மனசைத் திடப்படுத்திக் கொண்டு வாசகர்களின் நன்மைக்காக
‘அந்த’ கெட்ட அனுபவத்துக்காக நம்மை நாமே ஆட்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டோம். இரவு
9.30 மணிக்காக லேப்டாப்பை முன்பாக கிடத்திக்கொண்டு தவம் கிடக்கத் தொடங்கினோம்.
சரியாக மணி
9.30. யாஹூ மெசஞ்சரில் நுழைந்தோம். நண்பர் சொன்ன விஷயங்கள் எல்லாமே ‘மேப்’
போட்டதுமாதிரி பளிச்சென்று மூளைக்குள் அமர்ந்திருந்தது. ‘சாட்’ பகுதிக்குச் சென்று
‘ரீஜனல்’ பகுதியில் ‘இந்தியா’வைத் தேர்ந்தெடுத்தோம். இந்தியாவுக்குள் இருந்த
பிரபலமான நகரங்களின் பெயர் பட்டியலிடப்பட்டது. நம் மைண்ட் மேப்பில் பதிவாகியிருந்த
பெங்களூரைத் தேர்ந்தெடுத்தோம். பெண்கள் பெயரில் ஏகப்பட்ட பேய்கள் உலவிக்
கொண்டிருந்தன. நமக்கான பேயை தேர்ந்தெடுக்க டாஸ்மாக்கில் ஹாஃப் பாயில் ஆர்டர்
செய்துவிட்டு காத்திருக்கும் குடிமகனைப் போல பொறுமையாக காத்திருந்தோம்.
நான்கைந்து
பெண்கள் (?) ‘வான்னா சாட் வி மீ?’ என்று பர்சனல் மெசேஜ்களாக அள்ளித் தெளிக்கத்
தொடங்கினார்கள். ‘பர்சனல் சாட் கேமிரா டூ கேமிரா வேண்டுமா?’ என்றொரு குஜிலி மெசேஜ்
அனுப்ப, சட்டென்று நமக்குள் பல்பு எரியத் தொடங்கியது. ‘ப்ளீஸ்’ என்று கூறி,
அழைப்பை தாழ்மையோடு நாம் ஏற்றதும், சாட்டிங்கில் அவள் அந்தப் பக்கமாக இருந்து
டைப்பத் தொடங்கினாள்.
“என் பெயர்
ஜெனிஃபர். உங்கள் பெயர்?”
“என் பெயர் ஜூனியர்
பதலக்கூர். சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறேன்” என்று
தொடங்கினோம்.
ஆரம்பக்கட்ட வழக்கமான
‘சாட்டிங்’ சம்பிரதாய குசலவிசாரிப்புகள் முடிந்ததும், எந்த விகல்பமும் தோன்றாத வகையில்,
நாம் எதிர்ப்பார்த்த ‘மேட்டருக்கு’ அடிகோலினாள்.
“கேமிராவில் என்னை
முழுமையாக பார்க்க விரும்புகிறீர்களா?”
“முழுமையாக
என்றால்?”
“நான் உடனே
ஒரு மூவி ஃபைல் அனுப்புகிறேன். என் செல்போனில் எடுத்தது. பார்த்துவிட்டு
சொல்லுங்கள்”
சொல்லியபடியே
ஒரு 3gp ஃபைல் அனுப்பினாள். ஃபைலில் அந்தப்
பெண்ணின் கழுத்தில் தொடங்கி, பாதம் வரை அட்டகாசமான ஆங்கிளில் வீடியோ காட்சி
விரிந்தது. மஞ்சள் புடவையில் மங்கலகரமான கவர்ச்சி. இரண்டாம் ஆட்டம் மலையாளப் படம்
பார்ப்பது மாதிரி ‘ஜிவ்’வென்றிருந்தது.
“நீங்கள்
பார்த்தது ஐம்பது சதவிகிதம்தான்”
“இல்லையே?
முழுமையாகப் பார்த்தேனே? முகத்தை மட்டும்தான் பார்க்கவில்லை”
“முட்டாள்.
உடையணிந்தப் பெண் உனக்கு முழுமையான தோற்றத்தை எப்படி காட்டமுடியும்?”
அடிக்கோடிட்டு,
கொஞ்சிக்கொண்டே அவள் மறைமுகமாக கேட்டதும், புரிந்துப் போனது. சில மாதங்களுக்கு
முன்பாக செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில், இரவுவேளையில் ஒரு ’ஆண்ட்டி’ நம்மை
இப்படித்தான் டபுள்மீனிங்கில் பேசி, ‘அதற்கு’ அழைத்தார். தகவல் தொழில்நுட்பப்
புரட்சியைப் பயன்படுத்தி இவர் ‘விர்ச்சுவலாக’ அழைக்கிறார்.
“ஓக்கே.
புரிகிறது. ப்ளீஸ், உங்களை முழுமையாக பார்க்க விரும்புகிறேன்”
“கொஞ்சம்
செலவு ஆகுமே? நாற்பது நிமிடங்களுக்கு நானூறு ரூபாய். லைவ்வாக வெப்கேமிராவில்
என்னைப் பார்க்கலாம். மஞ்சள் புடவையோ, ஜாக்கெட்டோ அல்லது வேறெந்த இடையூறுமோ
இன்றி...”
கத்தரிக்காய்
வாங்குவது மாதிரி பேரம் பேசத் தொடங்கினோம். “இருநூறு ரூபாய்க்கு முடியுமா?”
“ஓ, யெஸ்.
ஆனால் இருபது நிமிடம்தான். பரவாயில்லையா?”
“பரவாயில்லை.
எனக்கு அவசரமாக உன்னை முழுமையாக பார்க்கத் தோன்றுகிறது”
உடனே அவள் ஒரு
இணையத்தளத்தின் ‘லிங்க்’ அனுப்பினாள். இந்தியாவின் முன்னணி செல்போன் நிறுவனத்தின்
இணையத்தளம் அது. ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து, இந்த எண்ணுக்கு ‘நெட் பேங்கிங்’ மூலமாக
இருநூறு ரூபாயை, ‘டெபாசிட்’ செய்துவிடுமாறு சொன்னாள். இவ்வாறு அந்த எண்ணுடைய
அக்கவுண்டுக்கு நாம் டெபாசிட் செய்யும் தொகையை, அந்த செல்போன் சேவையின்
துணைச்சேவைகள் (டி.டி.எச்., லேண்ட்லைன், ப்ரீட்பெய்ட் ரீசார்ஜ் மாதிரி) மூலம்
மற்றவர்களுக்கு அவள் பயன்படுத்தி காசாக்கிக் கொள்ள முடியும். பாதுகாப்பான
பரிவர்த்தனை. டெக்னாலஜி ஈஸ் சோ இம்ப்ரூவ்ட்.
“நான் பணம்
கட்டியதும், நீ ஏமாற்றி விட்டால்...?”
ஒரு நிமிடம்
என்று கூறியவள், வெப் கேம் அழைப்புக்கு நம்மை அழைத்தாள். அந்த அழைப்பை ஏற்றதும்,
நம் திரையில் ஓர் அப்சரஸ் தோன்றினாள். அனுஷ்கா முகவெட்டு. அசின் உடற்கட்டு.
பார்த்ததுமே பச்சக்கென்று நம் மனசில் ஒட்டிக்கொண்டது அவர் தோற்றம். ஜூனியர்
என்.டி.ஆர். மாதிரி தெலுங்கு ஹீரோக்கள் பார்த்தால், பார்த்ததுமே தங்கள் படத்துக்கு
கொத்திக்கொண்டு போய்விடுவார்கள். கேமிராவை அட்ஜஸ்ட் செய்து, முகம் மட்டும்
குளோஸப்பில் தெரியுமாறு பார்த்துக்கொண்டு, தெளிவான ஆங்கிலத்தில் பேசத்
தொடங்கினார்.
“இன்னும் நீ
என்னை நம்பவில்லையா?” மஞ்சள் புடவை அணிந்து, நடுவகிட்டில் குங்குமம் வைத்த
பெண்ணுக்கு ஜெனிஃபர் என்று பெயர் இருக்க சாத்தியமில்லை என்று பகுத்தறிவு நமக்குச்
செப்பினாலும், தோற்றக் கவர்ச்சியில் அதையெல்லாம் ஆராய மனமில்லை. உடனடியாக ஒரு
இருநூறு ரூபாயை அவர் குறிப்பிட்ட எண்ணுக்கு கட்டினோம். டிரான்சேக்ஷன் ஐடியை
சாட்டிங்கில் கேட்டாள். இசைக்கு மயங்கின பாம்பு மாதிரி அதையும் கொடுத்தோம்.
“பணம்
வந்துவிட்டது. உனக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறேன்”
கேமிராவுக்கு
பின்னால் நகர்ந்தாள். இடுப்பு வரையான தோற்றம். மாராப்பை நழுவ விட்டாள்.
ஜாக்கெட்டையும் மெதுவாக கழற்றினாள். கிட்டத்தட்ட ஸ்லோமோஷனில் இதெல்லாம் நடந்துக்
கொண்டிருந்தது. வைத்த கண் வாங்காமல் திரையையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
முழுமையாக கழற்றாமல் வெப்கேமிராவை ஆஃப் செய்துவிட்டு, “இருநூறுதானே அனுப்பி
இருக்கிறாய்? நான் ஐநூறு அல்லவா கேட்டேன். இன்னும் முன்னூறு அதே எண்ணுக்கு அனுப்பி
வை. அனைத்தையும் காட்டுகிறேன்” என்று திடீரென சாட்டிங்கில் வந்து பிகு செய்யத்
தொடங்கினாள். ”இருநூறுக்கு இருபது நிமிடம் என்று ஒப்புக்கொண்டாயே?” என்று நாம்
சமாதானப்படுத்தத் தொடங்க, எதிர்த்தரப்பில் இருந்து பதிலே இல்லை. திரும்பத் திரும்ப
சாட்டிங்கில் கெஞ்சியும், அவள் நமக்கு எந்தப் பதிலும் தராமல் ‘எஸ்கேப்’
ஆகிவிட்டாள். நாம் பணம் கட்டிய செல்போன் எண்ணை ‘டயல்’ செய்தோம். ‘ரிங்’
போய்க்கொண்டே இருந்ததே தவிர, யாரும் எடுக்கவில்லை.
நமக்கு
வழிகாட்டிய மலேசிய நண்பருக்கு தொலைபேசி அனைத்து விவரங்களையும் பகிர்ந்தோம்.
வாசகர்களுக்கு இந்த நூதன மோசடியை விளக்கவே நாம் இந்த திருவிளையாடலை விளையாடினோம்
என்பதை ஏற்றுக்கொள்ளாமல், ஏதோ சிற்றின்பத்துக்கு ஏங்கி இந்த சோதனையை செய்துப்
பார்த்தது மாதிரி நம்மை கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.
மறுநாளும்
சரியாக அதே 9.30 மணிக்கு, அதே யாஹூ சாட்டிங், அதே இந்தியா ரீஜன், அதே பெங்களூர்
சிட்டியில் நுழைந்தோம். நேற்று நம்மிடம் பேசிய அதே பெயர் திரையில் ஒளிர்ந்தது.
நாமாக அவளை அழைத்தோம். நேற்று நடந்தது எதுவுமே தெரியாததைப் போல, மீண்டும் ‘அ’ன்னா,
‘ஆ’வன்னாவில் இருந்து பேசத் தொடங்கினாள். அதே ‘மணி ஈஸிலோட்’ லிங்க்.
இம்முறை காசு கொஞ்சம் கூடுதல். இருபது நிமிடத்துக்கு முன்னூறு ரூபாய். வேப்கேம்
ஆன் ஆகி திரையில் இம்முறை தெரிந்தது வேறு ஒரு பெண். ஆங்கிலோ இந்தியத் தோற்றத்தில்
இருந்தாள்.
நம் சந்தேகம்
என்னவென்றால், ஒரே நிக் நேமில் ஒவ்வொரு முறையும் வேறு வேறு பெண்கள் வருகிறார்கள்
(ஒருவேளை ரெக்கார்ட்டட் வீடியோவாக இருக்கலாம்). வழக்கம்போல அந்த செல்போன் சேவை
நிறுவனத்தின் குறிப்பிட்ட எண்ணில் பணம் டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள். அந்த
எண்ணுக்கு போன் செய்தால் ‘ரிங்’ போய்க்கொண்டே இருக்கிறது. ஒருவேளை அந்த செல்போன்
சேவை நிறுவனமே இதுமாதிரி ஏற்பாடு செய்து இணையத்தில் புழங்குபவர்களிடம் பணம்
கறக்கிறதா?
வெளியே சில
விவரம் தெரிந்த ஆசாமிகளோடு பேசியபோது கமுக்கமாக சிரிக்கிறார்கள். நீ உள்ளூர்
என்பதால் இருநூறு, முன்னூறோடு போய்விட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்
சிலர் ஈசல் மாதிரி மாட்டிக்கொண்டு, லட்சங்களை கூட இழந்திருக்கிறார்கள் என்றார்கள்.
பர்மாபஜாரில்
பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கும் மேட்டர் டிவிடியில் இதைவிட நல்ல ‘சரக்கு’கள்
கிடைக்கிறது. ஆனாலும் நம்மோடு ‘லைவ்’வாக ஒரு பெண் ‘ஸ்ட்ரீப்டீஸ்’ (ஆடை அவிழ்ப்பு)
செய்கிறாள் என்கிற திருப்திக்காக இளசுகள் தினமும் ஆயிரக்கணக்கில் இதுமாதிரி
இழந்துக் கொண்டிருக்கிறார்கள். நவீனத் தொழில்நுட்பம் எவ்வளவோ வசதிகளை நமக்கு
ஏற்படுத்தித் தருவது ஒரு புறமென்றால், இன்னொரு புறம் விபச்சாரத்தை விர்ச்சுவலில்
கொண்டுவருவது மாதிரியான இம்மாதிரி பக்கங்களையும் காண வேண்டியிருக்கிறது. கட்டற்ற
சுதந்திரத்தோடு காட்டாறாய் பெருகி நிற்கும் இந்த டெக்னாலஜி அசுரனை யார்தான்
முறைப்படுத்தி ஒழுங்குக்கு கொண்டுவருவார்களோ தெரியவில்லை.
(சமீபத்தில் குமுதத்தில் வாசித்த கட்டுரை ஒன்றினை கொஞ்சம் மாற்றி எழுதிப் பழகிப் பார்த்தேன்)
(சமீபத்தில் குமுதத்தில் வாசித்த கட்டுரை ஒன்றினை கொஞ்சம் மாற்றி எழுதிப் பழகிப் பார்த்தேன்)
யாரும் ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு கட்டுரை பாராட்டுக்கள் சார்
பதிலளிநீக்குகொஞ்சம் ஆர்வமாக தான் எழுதியிருப்பீர்கள் போல
I agree with this write up 100%. In USA, there are 100s of websites doing this kind of business. But, you can use the credit card for that and you can live chat with real girls too. There are rip offs, but I heard that some websites are for real. I would imagine that in India, it will only be rip-offs!
பதிலளிநீக்குIn Singapore, recently there was a court case that a couple, possibly lovers, used to chat with people, and the girl will start striptease and expect the other party also to striptease. So you will striptease in front of the camera in response to the girl's striptease. You will be thrilled and enjoy the whole session with no money involved. That girl will praise about your asset and want to meet you. You will give your mobile, and the meeting place etc. On the meeting day, some guy will call you over phone, and tell you that the whole striptease of yours, and other silly acts, possibly masturbation, are recorded and will be uploaded to video sites unless you pay him a huge sum. You cannot go to police as well, because of your non-sense video, so, you will pay what is asked for. So, they are innovating nowadays...
பதிலளிநீக்குbetter to visit livjasmin..konjama pakkalam
பதிலளிநீக்குஎனக்கு பெண்களிடம் வாங்கித்தான் பழக்கம் கொடுத்து பழக்கமில்லை!!
பதிலளிநீக்குநோய் அல்ல பணத்தை !!
இதை தொழில் நுட்ப விபச்சாரம் என்றே அழைக்கலாம். அதே வேளை அதே தொழில் நுட்ப விபச்சரிகள் அல்லவா இதில் மாட்டிக்கொள்கிறார்கள்.
பதிலளிநீக்குநானும் ரெகுலரா யாஹூ சைட் போனவன் தான்... ஆனாலும் இந்த மாதிரி அழைப்புகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை... நம்மளுக்கு சைபர் க்ரைம் பற்றிய சிறு அறிவு இருப்பதினால்... ஒன்றும் தெரியாதவர்கள் மாட்டிக்கொள்ள நிறைய வாய்ப்பு உண்டு...
பதிலளிநீக்கு