சுந்தர பாண்டியன்
தமிழ் படங்களை தியேட்டருக்குப் போய் பார்ப்பதையே நிறுத்திவிடலாமா என்கிற
முடிவினை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது சுந்தர பாண்டியன். தமிழ் மசாலா
படங்களின் golden
period ஆன
எண்பதுகளை மீண்டும் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் அறிமுக இயக்குனரான
பிரபாகரன். பாத்திரங்களை சித்தரிப்பதில் பாண்டியராஜன் பாதிப்பு இவருக்கு
இருக்கிறது. அச்சு அசலாக கன்னிராசி, ஆண்பாவம் பாணி. அதுபோலவே புகையிலை வாசனையோடு ஒட்டுமொத்தமாக
இத்தனை கிழவிகளை திரையில் பார்த்தும் மாமாங்கமாகி விட்டது.
லாங் ஷாட்டில் நடனம் ஆடும்போது சின்னவயசு டி.ஆர். மாதிரி இருக்கிறார் ஹீரோ
சசிக்குமார். ‘Producer Director
Sasikumar’ என்கிற டைட்டில் லாஜிக்கலாக கரெக்ட் தானென்றாலும், எப்பவும் ‘டாக்டர் கலைஞர்’
மாதிரி, படத்தை தயாரிக்கும்போதும் கூட ‘Director’ பட்டத்தை சுமந்துக்கொண்டே திரியவேண்டுமா என்று தோன்றுகிறது. சசிக்குமாரின்
லேசான சிரிப்பு இயல்பானதும், வசீகரமானதுமாக unique தன்மை
கொண்டது. ஆனாலும் அவரது தோற்றம் இந்த மாதிரி ‘விடலை’ கேரக்டர்களுக்கு வேலைக்கு
ஆவாது என்பதை அவர் உணரவேண்டும்.
ஹீரோயின் லட்சுமி மேனன் door
next girl
மாதிரி என்று சொல்வதெல்லாம் cliche.
நிஜமாகவே பக்கத்து வீட்டு
கதவை போய் தட்டினால், லட்சுமி மேனன் வந்து திறப்பாரோ என்றே தோன்றுகிறது. இடது
கண்ணுக்கு அருகில் கன்னப் பகுதியில் லேசான தழும்பு மாதிரி ஏதோ ஒன்று. அவரது முகத்துக்கு
அந்த தழும்பு கூட பாந்தமாகவே இருக்கிறது.
விறுவிறுப்பான திரைக்கதை. யதார்த்தமான வசனங்கள். எதிர்ப்பார்க்காத twist என்று பரபரவென ஒரு படம். climaxல் மட்டும் அடுத்தடுத்த twistகளை எதிர்ப்பார்க்க முடிகிறது என்றாலும், எடுக்கப்பட்ட விதத்தில் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது. bus windowவை view frame ஆக்கி, கேமிரா மெதுவாக நகரும் காட்சியும், வசனங்களே இல்லாமல் வீட்டுப் பெண்கள் லட்சுமி மேனனின் மனதை மாற்ற முயற்சிக்கும் காட்சிகளும் class.
விறுவிறுப்பான திரைக்கதை. யதார்த்தமான வசனங்கள். எதிர்ப்பார்க்காத twist என்று பரபரவென ஒரு படம். climaxல் மட்டும் அடுத்தடுத்த twistகளை எதிர்ப்பார்க்க முடிகிறது என்றாலும், எடுக்கப்பட்ட விதத்தில் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது. bus windowவை view frame ஆக்கி, கேமிரா மெதுவாக நகரும் காட்சியும், வசனங்களே இல்லாமல் வீட்டுப் பெண்கள் லட்சுமி மேனனின் மனதை மாற்ற முயற்சிக்கும் காட்சிகளும் class.
சுந்தர பாண்டியன். Super பாண்டியன்.
லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்
இயக்குனர் சேகர் கம்முலா ஒரு பீட்டர்தான். ஆனால் பீட்டர்களின் கையிலும் பிளேடை
கீறினால் ரத்தம் வரும் என்று ஒப்புக்கொள்ளும் நேர்மையான பீட்டர்.
லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் படத்தில் நடிக்க அமலாவை தொடர்புகொண்டாராம் சேகர்.
அமலாவோ நடிக்க விருப்பமில்லை என்று மறுத்திருக்கிறார். சற்றும் மனந்தளராத
விக்கிரமாதித்தனாய் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியிருக்கிறார் சேகர். உச்சக்கட்டமாய்,
“நீங்கள் நடிக்காவிட்டால், நான் இந்தப் படத்தையே எடுக்கப் போவதில்லை” என்றுகூட
மிரட்டியிருக்கிறார். அமலா மனமிறங்கி நடித்துக் கொடுத்திருக்கிறார். இவ்வளவு
ஃபோர்ஸான கம்பேக் வேறு எவருக்காவது கிடைக்குமாவென்று தெரியவில்லை. மொத்தமாக நான்கு
காட்சிகள்தான் தோன்றுகிறார். ஆனால் ஒட்டுமொத்தப் படத்தின் சுமையையும், அந்த நான்கே
காட்சிகளில் அமலா சுமப்பதாக தோன்றுகிறது. ஒரு காட்சியில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும்
பழைய அமலாவின் ஸ்டில் (கலாசேத்ராவில் எடுக்கப்பட்ட அந்த பிரபலமான பரதநாட்டிய
முத்திரை) ஒன்றே ஆயிரம் கதைகளை பேசுகிறது.
பழைய படங்களில் பண்ணையார் மற்றும் அவரது அல்லக்கை கும்பல்களோடு பாட்டாளிகள்
மோதுவார்கள் இல்லையா? அதே கதைதான். பணக்கார குடியிருப்பு வாசிகளோடு, நடுத்தர
வர்க்கத்தவர்கள் மோதுகிறார்கள். மூன்று பையன்கள். மூன்று (அழகான) பெண்கள். போதாதா?
லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்.
இந்த கதைக்கு நேரடியாக சம்பந்தமில்லாத, ஆனால் கதைக்கு மிக அத்தியாவசியமான ஒரு
அம்மா செண்டிமெண்ட். இறுதிக் காட்சியில் உங்கள் கண்களில் நீர் கோர்க்காவிடில்,
உங்கள் பெயர் இடிஅமீனோ அல்லது ஹிட்லராகவோ இருக்கவேண்டும்.
ஒவ்வொரு முறையும் காப்மேயரின் ஏதேனும் ஒரு நூலை வாசித்து முடிக்கையில்,
உங்களுக்கு தன்னம்பிக்கை காம்ப்ளான் குடித்தமாதிரி ஒருமாதிரியாக முறுக்கேறும்.
நாடி, நரம்பெல்லாம் ஏதோ ஒரு வெறியேறி, எதையோ சாதிக்கவேண்டும் என்று இனம்புரியாத
கிளுகிளுப்பு அல்லது விறுவிறுப்பு தோன்றும். இப்படம் முடியும்போது அம்மாதிரியான
ஒரு உணர்வை உணர்வீர்கள்.
சேகர் கம்முலா வீட்டு வரவேற்பறையில் ஏகப்பட்ட விருதுகள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக அவர் பெறப்போகிற விருதுகளுக்காக புதுசாக ஒரு வீடே கட்டவேண்டும்.
சேகர் கம்முலா வீட்டு வரவேற்பறையில் ஏகப்பட்ட விருதுகள் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்காக அவர் பெறப்போகிற விருதுகளுக்காக புதுசாக ஒரு வீடே கட்டவேண்டும்.
பார்ஃபி
இனிமேல் ஹாலிவுட்காரர்கள் இந்தி படத்தை சுட்டு காட்சிகள் அமைக்கலாம். ரன்பீர்
கபூருக்கு நம்ம ஊரு சிம்பு வயசுதான் இருக்கும். பார்ஃபி மூலமாக அவர்
சாதித்திருப்பதை யோசிக்கும்போதுதான், இவ்வளவு நாட்களாக ’உலகத்தர’ விஷயத்தில், கமல்
நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று கோபம் வருகிறது. முதல்நாளே
படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நண்பர் ஒருவர் சொன்னார். “ஆஸ்கருக்கு இதை
அனுப்புங்க பாஸ். நாம வாங்கறோமா இல்லையான்னு பாருங்க”.
மர்பி என்கிற பார்ஃபி என்கிற ரன்பீர் அநியாயத்துக்கு அழகாக இருக்கிறார்.
சார்லி சாப்ளினை கேவலப்படுத்தாமல், சின்சியராக இமிடேட் செய்கிறார். நிஜமாகவே
இவருக்கு வாய்பேச வராதோ என்று தோன்றுமளவுக்கு பிரமாதமான ஒர்க். க்ளாமர் குயீனான
பிரியங்கா சோப்ராதானா என்று சந்தேகம் வருகிறது ஜிமிலை பார்க்கும்போது. ஒரு
காட்சியில் தொடை வரை காட்டினாலும், பார்வையாளனுக்கு ‘மூடு’ வராததுதான் பிரியங்காவின்
நடிப்புக்கு கிடைத்த வெற்றி. இலியானாவின் நடிப்பைப் பார்த்தால், இவர் நம்ம இலியானாதானா
என்று சந்தேகம் வருகிறது.
இசை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிப்பு, எடிட்டிங் என்று சினிமாவின் அத்தனை
துறைகளிலும் இந்திய சினிமா எட்டியிருக்கும் உச்சபட்ச உயரமாக பார்ஃபியை எடுத்துக்
கொள்ளலாம்.
Lucky - for your first sentence here is answer. http://tanqeed.com/forum/barfi-scenes-inspiredcopied-from-the-notebook-charlie-chaplin-and-other-movies/
பதிலளிநீக்குயுவா, எனக்கு இதுதான் தோன்றியது.
பதிலளிநீக்குசசிகுமார் புரட்சி தளபதி அல்லது மினி தளபதி என்று பட்டம் கொடுத்துகொல்லாமல் இயக்குனர் சசிகுமார் என்று போடுவது ஒன்றும் பெரிதல்ல. ஆனால் அது அந்த படத்தின் இயக்குனர் அவர் என்ற தொனியில் வராமல் இருந்தால் சரிதான். இன்னும் பார்கவில்லை எல்லாரும் நன்றாக இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்.
அரசியல் த்ரீ இன் ஒன்:
1. மம்தா அமைச்சரவையில் இருந்து வெளியில் வருகிறார். ஆனால் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பார். - செய்தி.
2. மம்தா அமைச்சரவையில் இருந்து விலகினார். ஆதரவையும் திரும்பபெற்றார். - செய்தி.
3. கலைஞர் ஆதரவை திரும்ப பெறலாமா - அல்லது அனைவரும் விலகிய பின்னர் யோசிக்கலாமா என்று யோசிக்கிறார். - செய்தி.
"இவ்வளவு நாட்களாக ’உலகத்தர’ விஷயத்தில், கமல் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்று கோபம் வருகிறது"
பதிலளிநீக்குWhy this Kolaveri Yuva!!
பகிர்வுக்கு நன்றிங்க.....
பதிலளிநீக்கு//ஆஸ்கருக்கு இதை அனுப்புங்க பாஸ். நாம வாங்கறோமா இல்லையான்னு பாருங்க”.// யாருங்க அந்த தீர்க்கதரிசி ? நிஜமாவே ஆஸ்கருக்குப் போகிறது.
பதிலளிநீக்கு// சுந்தர பாண்டியன். Super பாண்டியன். // என்ன யுவா சார்! இந்த படத்துல உங்களுக்கு எந்த ஜாதீய குறியீடும் தெரியலியா? கொஞ்சம் யோசிச்சு நேர்மையா எழுதுங்க சார்! நாம பொய் பேசலாம்! நம்ம எழுத்து பேசக்கூடாது சார்!
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன்,
'நியுட்' நண்டு
நண்டு சார்,
பதிலளிநீக்குநீங்கள் யூகிப்பதைப் போல நான் ‘அந்த’ சாதி இல்லை :-)
மேலும், பிரச்சினைக்குரியதாக சொல்லப்படும் டைட்டிலுக்கு முந்தைய காட்சிகளை நான் காணவில்லை. படம் ஆரம்பித்து சில நிமிடங்களுக்குப் பிறகே உள்ளே போனேன்.
அதற்குப் பிறகான காட்சிகளில் ‘தேவர்’ புகழ் பாடப்படுவதாய் எனக்கு தோன்றவில்லை. ‘ஆஹா’, ‘மைக்கேல் மதனகாமராஜன்’ போன்ற திரைப்படங்களையும் நான் பார்ப்பனீய மேலாதிக்க திரைப்படங்களாய் காணவில்லை எனும் அம்சத்தை கருத்தில் கொண்டு ஏதோ பார்த்து போட்டுக் கொடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நிச்சயம் நீங்க பெரிய ஆளா வருவீங்க சார்..! :-)
பதிலளிநீக்குநீங்கள்லாம் வந்தது மாதிரி நானும் வந்துட்டுப் போறேன் சார். பெரியமனசு பண்ணி எனக்கு மட்டுமாவது இடஒதுக்கீடு கொடுங்க :-)
பதிலளிநீக்குSasi :))
பதிலளிநீக்கு