25 அக்டோபர், 2012

உப்புக்கு சயனைடா?

சகோதரி சின்மயி (இவ்வாறே குறிப்பிட விரும்புகிறேன். பெண் வன்கொடுமை சட்டம் பயமுறுத்துகிறது) கடந்த சில வருடங்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது அரிய கருத்துகளை ஆர்ட்டீஷியன் நீருற்றாக அதிரடியாக வெளிப்படுத்தி வருகிறார்.

சிங்கள ராணுவம் இந்திய தமிழக கடலோர மீனவர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது ட்விட்டர்தளத்தில் தமிழர்கள் பொங்கிக் கொண்டிருந்தபோது, சகோதரி ஓர் அருமையான கருத்தினை முன்வைத்தார். அதாவது அவர் விலங்குகளை துன்புறுத்தாத அமைப்பின்
(PETA) ஆதரவாளராம். மீனவர்கள் மீன்களை துன்புறுத்துவதோடு இல்லாமல், அவற்றை கொன்று விற்பனையும் செய்பவர்கள் என்கிற முறையில் அவர்களை அவர் எப்படி ஆதரிக்க முடியும்?

போலவே முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவி நிறைய மதிப்பெண்கள் பெற்றும் தனக்கு ஏதோ கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாக குமுற, சகோதரி கைகொடுத்து ட்விட்டினார். இடஒதுக்கீடு என்பது எவ்வளவு அபத்தமென்று விவாதித்தார். இந்தியாவிலேயே எங்கும் நிகழா சாதனையாக அறுபத்தி ஒன்பது சதவிகித இடஒதுக்கீட்டினை தமிழகத்துக்கு பெற்றுத் தந்தவர் நம்மை ஆண்டுக்கொண்டிருக்கிறார். எனவேதான் அவரை ஒடுக்கப்பட்ட சமூகம், சமுகநீதி காத்த வீராங்கனையாக கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட முதல்வரை விட சகோதரி புத்திசாலி என்பது அவரது இடஒதுக்கீடு குறித்த விவாதம் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது.

சமீபத்தில் இயக்குனர் இராஜமவுலி ட்விட்டரில் ஒரு கருத்தை தெரிவித்தார். மனுதர்மம் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்லாதது, வாழ்க்கைமுறையின் அடிப்படையில் அமைவது என்று அவரோடு டென்னிஸ் விளையாடும் பிரசாத் என்கிற அறிவுஜீவி விளக்கினாராம்.

அந்த ட்விட்டில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.

“பஞ்சம ஜாதியினர் தீண்டத்தகாதவர்கள் : மற்றவர்களை சார்ந்து வாழ்பவர்கள் (ஒட்டுண்ணிகள்)

சூத்திரர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்துக்காகவும் வாழ்பவர்கள்.

வைசியர்கள் வணிகம் மூலம் தங்களுக்காகவும், தங்களோடு வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபத்தை ஏற்படுத்துபவர்கள்.

சத்திரியர்கள் தமக்கு கீழ் இருப்பவர்கள் சாப்பிட்டதற்கு பிறகு சாப்பிடுபவர்கள்.

பிராமணர்கள் தாங்கள் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு கற்பிப்பவர்கள்”

இந்த கருத்தை ட்விட்டரில் ரீட்விட் செய்து வழிமொழிந்ததின் மூலம் தன்னுடைய சமூகப்பார்வையை அகிலத்துக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் சகோதரி சின்மயி. அவரது அறிக்கைகளிலேயே தொடர்ச்சியாக அவரது சமூகம் குறித்த பெருமையை நாம் கண்டு பெருமிதப்பட்டுக்கொள்ள முடிகிறது.

இவ்வாறான உயர்ந்த சமூகப்பார்வை கொண்டவரோடு வேறுபாடான கருத்துகள் கொண்டவர்கள் விவாதிப்பது இயல்புதான். அவ்வாறு விவாதிப்பவர்களோடு நமக்கு விவாதம் தேவையில்லை எனில் அவர்களை நம் பார்வையிலிருந்து முடக்கிவைக்கும் வசதியினை ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகத்தளங்கள் வழங்குகின்றன. ட்விட்டர் தளத்தில் சகோதரி சின்மயியோடு என்னால் இம்மாதிரி விவாதங்களை நிகழ்த்த முடியாது. ஏனெனில் அவர் என்னை ஏனோ தடை செய்திருக்கிறார். அவ்வாறு தடை செய்ததாலேயே இன்று காவல்துறையால் கைது செய்யப்படாமல் இருக்கிறேன் என்பதற்காக சகோதரிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

சகோதரியோடு விவாதித்தவர்கள் சிலர் ஆபாசமான முறையில் அவரிடம் விவாதித்ததாக புகார் செய்யப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது விவாத முறையில் எனக்கும் ஒப்புதல் இல்லை. அதே நேரம் ட்விட்டரில் மோசமாக நடந்துகொண்டார்கள் என்பதற்காக பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மாதிரியான பிரிவுகளில் அவர்களை கைது செய்திருப்பது மிக அதிகம். கைது செய்யப்பட்டவர்கள் சகோதரியை நேருக்கு நேராக ஒருமுறை கூட பார்த்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

சகோதரி என்னமாதிரியான புகாரை அளித்தார் என்று தெரியவில்லை. அதே நேரம் நேற்று தினகரன் பத்திரிகை பேராசிரியர் சரவணக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு காரணமாக செய்தி போட்டிருப்பது அப்பட்டமான அவதூறு. சரவணக்குமார், சகோதரி சின்மயியின் படங்களை ஆபாசமாக உருமாற்றி, ஃபேஸ்புக் இணையத்தளத்தில் பகிர்ந்ததாக செய்தித்தாள் தெரிவிக்கிறது. மற்ற ஊடகங்களிலும் கூட கிட்டத்தட்ட இதேமாதிரியான செய்திகளைதான் வாசிக்க முடிகிறது. மாறாக சரவணக்குமார் மீது புகார் கொடுக்க காரணமான ‘ஸ்க்ரீன்ஷாட்’களை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சகோதரி பகிர்ந்திருக்கிறார். அவை வெறும் ‘டெக்ஸ்ட் மெசேஜ்’களாகதான் இருக்கின்றனவே தவிர, ஆபாசப் படங்களாக தெரியவில்லை. சமூகத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பேராசிரியர் ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஊடகங்களில் செய்தி அளித்திருக்கிறார்கள். பேராசிரியர் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீதும், புகார் கொடுத்தவர் மீதும் அவதூறு வழக்கு கூட இதனால் தொடுக்கலாம். மானத்துக்கு நஷ்டஈடாக சில கோடிகளை கேட்கலாம்.

உண்மையாகவே ஆபாசப் படங்களை பேராசிரியர் பகிர்ந்திருந்தால், ‘கைது, ரிமாண்ட்’ மாதிரி விஷயங்கள் உறுத்தப் போவதில்லை. மாறாக சில ‘ட்விட்’களுக்காக தீவிரவாதிகளை பிடிப்பதைப் போல அவரை பிடித்திருப்பது, இந்த புகாருக்குப் பின்னால் வேறு ‘அழுத்தம்’ இருக்குமோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. குறிப்பாக பெயிலில் எடுக்க முடியாத வண்ணம், கோர்ட் விடுமுறை தினத்துக்கு முன்பாக ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டிருப்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். வக்கிரமான ட்விட்டுகளுக்கு சிறைத்தண்டனை என்றால், தமிழில் சமூகவலைத்தளங்களில் இயங்கும் தொண்ணூறு சதவிகிதம் பேரை சிறையில் தள்ள வேண்டியிருக்கும். இவர்களில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒருமுறையாவது வெகுஜன ஊடகங்களில் வெளிவந்த வண்ணப் படங்களையும், அதற்கு எழுதப்பட்ட கமெண்டுகளையும் தங்கள் பக்கங்களில் பிரசுரித்தவர்களாகவே இருப்பார்கள். பேராசிரியர் எழுதியிருப்பதை விடவும் மோசமான கமெண்டுகளையும், கிசுகிசுக்களையும் தமிழில் சகஜமாக பத்திரிகைகளிலேயே நாம் வாசிக்கலாம். பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் இதற்காக சிறைக்குச் செல்வது அநியாயம் என்று அறிவுலகம் ஒப்புக்கொண்டிருக்கிறது (சாவி அட்டைப்பட ஜோக் விவகாரம் நினைவிருக்கிறதா?). இவ்வகையில் இதை கருத்துரிமைக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையாகவும் பார்க்கலாம்.

அதிகபட்சமாக காவல்துறையினர் அழைத்து விசாரித்து, இனிமேல் இப்படி செய்யமாட்டேன் என்று எழுதி வாங்கிக் கொள்ளவேண்டிய ஒரு செயலுக்கு, என்னமோ ஆசிட் அடித்தவர்களை நடத்துவது மாதிரி நடத்தியிருப்பதற்கு பின்னால் என்ன அழுத்தம் இருக்குமென்று தெரியவில்லை. சகோதரியின் அங்கிள் ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி என்று கேள்விப்படுகிறோம். ஒருவேளை அதுதான் காரணமா? சகோதரி சின்மயி என்னவோ ஒரு கரடிப்பொம்மைக்கு ஆசைப்பட்டது போலவும், அதை வாங்கிக் கொடுக்க அவரது தாயாரும், உறவினரும், காவல்துறையினரும் பாடுபடுவதைப் போலவும் இந்த விவகாரம் தோன்றுகிறது.
 சகோதரிக்கு அது வெறும் ஆசை. சிறை சென்றவர்களுக்கோ வாழ்க்கை.

தமிழக முதல்வர் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால் கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம். எத்தனையோ பேருக்கு சகாயம் செய்யும் அம்மாவின் கருணைப்பார்வை ஒரு சாதாரண அரசு ஊழியருக்கும், பேராசிரியருக்கும் மட்டும் அநீதி செய்துவிடக்கூடாது. அம்மாவின் ஆட்சியில் கண்ணியம் மிக்க காவல்துறையினர் புறா மீது தேர்க்காலை இட்ட இளவரசனாக வரலாற்றில் பதியப்பட்டு விடக்கூடாது. எது குற்றமோ, அதற்கு மட்டும் தண்டனைகள் தருவதுதான் நீதி. இந்த விவகாரத்தில் அநீதி நடந்துவிடக் கூடாது என்பதை மட்டும் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்கிற வாதத்தில் எனக்கும் ஒப்புமை உண்டு. அதற்காக உப்பைத் தின்ற குற்றத்துக்காக சயனடை அருந்தவேண்டும் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

37 கருத்துகள்:

  1. அவ்வாறு தடை செய்ததாலேயே இன்று காவல்துறையால் கைது செய்யப்படாமல் இருக்கிறேன் என்பதற்காக சகோதரிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.///

    அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்..

    பதிலளிநீக்கு
  2. வெறும் சிறையில் அடைததற்கே சயனைட் உவமையா ? ஒரு பெண்ணையும் ,தாயையும் வக்கிரமாய் பொதுவெளியில் எழுதியது "வெறும் TWEET தானா ? நம் வீட்டு பெண்களுக்கு இந்த நிலை வந்தால்,இதே கருத்து தானா ?

    பதிலளிநீக்கு
  3. வெறும் சிறையில் நீங்க ஒரு ரெண்டு நாளு இருந்துட்டு வாங்களேன் பெஞ்சமின் :-)

    ஒரு நாளைக்கு சென்னையிலே 50 கி.மீ. டூவீலர் ஓட்டுனோம்னா நாலு பேராவது நம்ம அம்மாவோட கற்பை சந்தேகப்பட்டு திட்டுவான். அத்தினி பேரையும் கேஸு போட்டு வெறும் சிறையில் அடைக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  4. நண்பர் சரவணா குமார் கு இழைக்க பட்டிருக்கும் அநீதி அச்சுறுத்துகிறது. மீண்டும் அந்த சகோதரி தான் தற்கொலை எல்லைகளுக்கு தள்ளப்பட்டும் போராடுவதாய் மேலும் அநீதி இழைத்து கொண்டிருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதும் ஒரு நபர் உயர் ஆங்கிலத்தில் கேவலமாகவும் கொச்சையாகவும் எழுதுவதுண்டு. அவரிடம் இச்சகோதரி நட்பு பாராட்டுவதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை. இந்த இரட்டை நிலை ஏனோ?

    பதிலளிநீக்கு
  5. தமிழன் சின்மயிக்கெல்லாம் கட்டுரை எழுத பணிக்கப்பட்டது தான் கூடுதல் கடுப்பு!

    பதிலளிநீக்கு
  6. தமிழன் சின்மயிக்கெல்லாம் கட்டுரை எழுத பணிக்கப்பட்டது தான் கூடுதல் கடுப்பு!

    பதிலளிநீக்கு
  7. பெஞ்சமின் - அது வெறும் ட்வீட் அல்லதான்!
    இது போன்று நிறைய அத்துமீறல்கள் இணைய வெளியில் இருந்தும்
    குற்றங்களாக கூட பதிவு செய்யப்ப்படாத பொது , ஒரு பிரபலம் என்பதால்
    குற்றத்துக்கு மீறிய தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?

    பதிலளிநீக்கு
  8. To those who have doubts about the Tweet Flow, Especially Umar Chennai alias Technocrat.

    Maamallan: Beti tum Meen khata hai.. Meen thotti Vaastu

    Response: "There is nothing I can do but tweet or blog. Please channel your energies to auth
    orities also". (Now none of these lazy tweeters would have done that :) ) "Naanga Uyirgala Thunburuthardhu illa. Vetti Saapadardhum Illa".

    Response comes because Maamallan said "Me Vegetarian" Peta Comment was for Vaastu.

    How many more stories will you create Umar Chennai? Now saying Me Vegetarian is against Tamil Fishermen?
    :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

    http://www.maamallan.com/2012/10/blog-post_23.html

    :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
    Tamil Aman, Ongala mattum Tag panni specialla - meenavargalukku edhira onnum sollalannu sonnadhan puriyuma nu kaetten, adha vechu, enna super a create pannitteenga!

    Kurukkuvazhila yosikkara moolaiya enna solradhu?! Epdi ongalukkum nerayya followers kadaichaangla? Sandhoshama irunga :)

    http://www.facebook.com/pages/Chinmayi-Sripada/130027849040

    பதிலளிநீக்கு
  9. வெறும் சிறையில் நீங்க ஒரு ரெண்டு நாளு இருந்துட்டு வாங்களேன் பெஞ்சமின் :-)

    ஐயோ .... என்னுடைய கம்மேன்டுமா வக்கிரமாய் இருக்கிறது ?

    பதிலளிநீக்கு
  10. //கண்ணியம் மிக்க காவல்துறையினர் புறா மீது தேர்க்காலை இட்ட இளவரசனாக வரலாற்றில் பதியப்பட்டு விடக்கூடாது. எது குற்றமோ, அதற்கு மட்டும் தண்டனைகள் தருவதுதான் நீதி. //\
    அது கன்னுக்குட்டி மேல தேர் ஏத்தின இளவரசன்.

    புறாவுக்காக உடல் தசையை அரிந்து குடுத்தவர் சிபிக்சக்ரவர்த்தி

    பதிலளிநீக்கு
  11. Very Good writing Mr. Yuvakrishna.. All agree with all the points.

    பதிலளிநீக்கு
  12. benjamin david சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்..

    பதிலளிநீக்கு
  13. **** தமிழக முதல்வர் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால் கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம். ****

    அவரைப் பற்றியும்தான் இவர்கள் மோசமான ட்வீட்களைப் போட்டுள்ளனர். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  14. Sir,
    I think someone in the position of Asst Professor should have been more discrete in his choice of words in a public forum. I was shocked to see some his tweets.

    The problem is, even if Chinmayee forgives completely, and matter is resolved amicably without anyone serving jail sentence, what about the damage done to their reputation in society, place of work and more importantly, within their own families? How will Asst Professor mother/wife who will be proud of her son/wife(sandron enna ketta thai) react when they see some of his tweets? How will their daughters react to their tweets when they turn 18years of age? How will their lady colleagues, girl students think now when they see them? What if they lose their jobs? Who will support their families?

    This matter should have been resolved before it became public. Was there any such efforts taken in this direction? Was it rebuffed by either side and for what reasons? Was it ego which prevented a simple sorry? Who are all responsible for goading the arrested people to abuse like this publicly? Where were their true well wishers who could have stopped this from getting this far?

    I think whatever happens , the lessons should not be forgotten in future. We can criticize people for their views and be harsh in criticism, but it should be restricted to the view only. Not on the person themselves. This is the hard lesson we all ought to learn from this very dark episode.

    பதிலளிநீக்கு
  15. அதிகாரத்தில் இருக்கும் அக்கிரமக்காரர்களுக்கு எதிராக இணையத்தைப் போர்வாளாகப் பயன்படுத்தி, பொய்வழக்கில் சிறைக்குச் செல்ல அஞ்சாத சவுக்கு இருக்கும் இணைய உலகில் இந்த 'அட்டக்கத்தி' வீரர்களும் இருக்கிறார்கள்!!

    சரவணன்

    பதிலளிநீக்கு
  16. டுவீட்டோ அல்ல முக நூலிலோ என்ன சொன்னார்கள் என அறியேன். ஆனால் தனக்கு ஆள் பலமும் அதிகார பலமும் இருக்கிறது என்பதற்காக இப்படி செய்யலாம் என்றால் கண்டிக்க வேண்டிய செயலே.

    இவர்களின் சாதி அபிமானம், வருண பேதங்களை, எளியவனே ஏளனமாக நினைப்பதை இப்படியே விட்டு விடாமல் மேலும் அம்பலபடுத்த வேண்டும்

    பதிலளிநீக்கு
  17. Harassment என்ற பிரிவில் இதை சேர்த்தது எந்த வகையில் நியாயம். @ மென்ஷன் போட்டு திட்டியதாக எந்த ஸ்க்ரீன் ஷாட்டும் இல்லை.

    மீனா கந்தசாமி, பீப் திருவிழா குறித்து எழுதிய போது என்ன நிகழ்ந்தது தெரியுமல்லவா?

    அவர் அதை எப்படி கையாண்டார் என்றும் தெரியுமில்லையா?

    இந்த ஒரு கேசின் மீது அவசர (நான்கு நாட்கள் கோர்ட் விடுமுறை இருக்கும் போது) நடவடிக்கை ஏன்???

    மீதம் 19 வழக்குகள் தாமதம் ஏன்?

    சமரச முயற்சி (எழுதி வாங்குதல் தான்) தாண்டிய வன்கொடுமை இதில் எங்கு இருந்து வந்தது??

    உப்பு தின்னவன் தான், ஆனால் சைனைட் ஓவர்!

    பதிலளிநீக்கு
  18. எவ்வளவு பதிவு போட்டாலும்,எதிர்ப்பவர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.சிலரைப் பொறுத்தவறை ராஜன் செய்தது மட்டுமே தவறாம்.இந்த வழக்கின் முடிவு நம்மை சார்ந்தே இருக்கவேண்டும் என்று நம்புகிறேன்.அப்போதாவது இந்த பத்திரிக்கைகள் நம் பக்கப் செவி சாய்க்குமா?? :-(

    பதிலளிநீக்கு
  19. இறுதி பத்திக்கான பதில்(கேள்வி)


    கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?

    பதிலளிநீக்கு
  20. Nothing Wrong chinmayi...obnoxious post.. very harmful 4 d reputation.. chinmayi......You take serious action against those notorious people,,,,,,,,,,,,
    you found out the person and taking steps legally to fix them it's a stupendous task but do it to save the social site....

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் சொல்வது என்னவென்றால், 1.76 இலட்சம் கோடி ஊழல் செய்தவர்கள் வெளியே இருக்க, கோடி ரூபா ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிப்பதா என்பதைப் போல இருக்கின்றது.
    "குறிப்பாக பெயிலில் எடுக்க முடியாத வண்ணம், கோர்ட் விடுமுறை தினத்துக்கு முன்பாக ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டிருப்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். "
    அப்படியென்றால் அன்றைய தினம் யாரையும் காவல்துறை கைதுசெய்யக்கூடாதா?

    "வக்கிரமான ட்விட்டுகளுக்கு சிறைத்தண்டனை என்றால், தமிழில் சமூகவலைத்தளங்களில் இயங்கும் தொண்ணூறு சதவிகிதம் பேரை சிறையில் தள்ள வேண்டியிருக்கும். "
    "பேராசிரியர் எழுதியிருப்பதை விடவும் மோசமான கமெண்டுகளையும், கிசுகிசுக்களையும் தமிழில் சகஜமாக பத்திரிகைகளிலேயே நாம் வாசிக்கலாம். "
    "இவ்வகையில் இதை கருத்துரிமைக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையாகவும் பார்க்கலாம்."
    இந்த கருத்துக்கள் நீங்கள் ஒரே பந்தியில் எழுதியவையே. இதன் அபத்தம் உங்களுக்கு புரிகின்றதா? உங்களின் கருத்துப்படி, தமிழ்க் கீச்சுக்கள் 90% வக்கிரமானவையா? அப்படியென்றால் அவர்களைக் களையெடுப்பதில் என்ன தவறு? எங்கோ ஒருவரிடம் அது தொடங்கப்படவேண்டியதுதானே?

    இன்று இவர்களுக்காக ஒரு கட்டுரை எழுதும் அளவிற்குத் தேவையென்ன? சின்மயியை ஆதரித்து எழுதும் கட்டுரைகளும், அவரை எதிர்த்து எழுதும் கட்டுரைகளும் நீதி தேவதையின் தாரசை சமனாகவே வைத்திருக்கின்றது. இரண்டு பக்கமும் தங்களால் மற்றயவரை எப்படி வதைக்கமுடியுமோ அப்படி வதைக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டும். இரண்டு பக்கத்திலும் எதுவும் சுத்தமில்லை.

    பதிலளிநீக்கு
  22. You may be right .... But ...Eve teasing, ragging etc. started like this only. Some control is needed and somebody has to bell the cat...

    பதிலளிநீக்கு
  23. பராக் ஒபாமாவைப் பற்றி மிகக் கேவலமாகவும் அவரது அம்மா ஒரு விலைமாது அளவுக்கு கேவலமானவர் என்றும் அமெரிக்க வலது சாரியினர் ஒரு DVD யே வெளியிட்டு உள்ளனர் (பராக் ஒபாமாவின் அம்மா என்று சொல்லி ஒருவர் நிர்வாணமாய் உள்ள பல விதமான படத்துடன்) netflix -இல் கூட உள்ளது! ...ஒபாமா தரப்பில் இருந்து ஒரு மறுப்பும் இல்லை. கருத்து சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவுக்கு கருத்து சொல்லாமலும் இருக்க எவருக்கும் சுதந்திரம் உண்டு என்ற மிகச் சுலபமான உண்மை கூட சின்மயிக்கு தெரியவில்லை என்பது மிக மிக பரிதாபமே!

    சின்மயிக்கு உள்ளது ஒரு விதமான திமிர்த்தனம் தான்! அதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு மேட்டுக் குடி மாண்வன் சின்னதாய் விஷமம் செய்து மற்ற பல மாணவர்களை கெட்ட வார்த்தை பேச வைத்து வாத்தியிடம் அடி வாங்கிக் கொடுத்ததுதான் ஞாபகம் வருகிறது!
    முனுக்கு முனுக்குனு இருந்துக்கிட்டு முன்னூறு வீட்டுக்கு தீ வைப்பானாம் என்ற பழமொழியும் ஞாபகம் வருகிறது.

    மீனா கந்தசாமியை கீச்சியதை விட யாரையும் கேவலமாக கீச்சிட முடியாது! அதில் யாராவது ஜெயிலுக்குப் போனார்களா என்ன?

    -பாலா.

    பதிலளிநீக்கு
  24. 60 வயது முதாட்டியை கட்டிட வேலையா செஞ்சாங்க.....என்று கேட்பது என்ன நியாயம்?
    /////////////////////
    யுவா இது நீங்க கேட்டதுதான்!
    யாருக்காக இந்த கட்டுரைய எழுதினீங்களோ அவங்க
    1)கும்கான இருக்கின்றது

    2) வப்பாட்டி

    3)அப்புறம் டி.ஆர் பாலு வெச்சிகிட்டு இருக்கிறதா வேற சொன்னாங்க..!

    உனக்கு வெக்கமாவே இல்லையா?
    உன் நண்பர்கள் என்றால் பிஞ்ச செருப்பால் அடித்தாலும் வாங்கிக்குவிங்க...!

    இனி எங்கியாவது பொங்குவீங்கல்ல அங்க வருவேன்!

    பதிலளிநீக்கு
  25. சின்மயி சொன்னதெல்லாம் எழுதிட்டீங்க. சிறையில் உள்ளவர்கள் என்ன சொன்னாங்க மட்டும் எழுதலையே. ஏன்? அவ்வளவு கேவலமா ஏதாவது சொன்னாங்களா? சின்மயியை விமர்சித்து முழு நீள கட்டுரை எழுதிவிட்டு சிறையில் உள்ளவர்கள் செயலுக்கு மட்டும் "அவர்களது விவாத முறையில் எனக்கும் ஒப்புதல் இல்லை" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  26. //புறா மீது தேர்க்காலை இட்ட இளவரசனாக// (புறாவாக (காகமாக)இருந்தால் பறந்திருக்குமே!!!அது கன்று!!!!)இது கொஞ்சம் ஓவர்தான்!!!ஆனாலும் இணையத்தில் முகம்,விலாசமில்லாமல் பண்ணும் அழும்புக்கு என்ன தண்டனை!!!!

    பதிலளிநீக்கு
  27. To Make Yuva angry and understand what the 'Asst Prof' has done.
    Just i want to say

    He has Tweeted vulgarly about 'Tamizhna Thailavar' and his family members also

    You can read those Tweets and then come back and put your comments about the credibility of 'Asst Prfo' and Co.

    Most unfortunate thing in Tamilnadu is anybody who pronounces vulgarity against women/anybody , can just get away by saying few words using 'Illangai Tamilarkal', 'Ida othikeedu', 'Tamil Inam', 'Tamil Desam' then they can escape with anything.
    There are people like you are ready to support them abuse the victim in a sarcastic manner.

    பதிலளிநீக்கு
  28. Welldone Yuva.....:-))

    by Maakkaan

    பதிலளிநீக்கு
  29. Yuva,

    Did you get a chance to read charu's article?...thanks

    பதிலளிநீக்கு
  30. Ayya... You have mentioned that Police should have called him and spoken... But the reality is he went to Police Station on Saturday; the police took apology in writing and still they arrested him on Monday suddenly and unknowingly............

    பதிலளிநீக்கு
  31. //வெறும் சிறையில் அடைத்ததற்கே சயனைட் உவமையா?//
    இதில் ஆச்சர்யப்பட எதுவுமே கிடையாது. மனித உரிமைப் பித்தம் தலைக்கேறினால் கடைசியில் இப்படித்தான் முடியும். மரண தண்டனை பற்றி பத்ரிக்கு நான் ஒரு கமென்ட் போட்டிருந்த போது இதைத்தான் கேட்டேன். மரண தண்டனை மட்டும் தான் மனிதாபிமானம் இல்லையா? ஆயுள் தண்டனை கூட அப்படித்தானே என்று.
    இப்போது அது முன்னேறி சிறையில் வைப்பதே தவறு என்று வளர்ந்திருக்கிறது.
    ப்ரொஃபஸருக்கு பதிலாக "சகோதரி " சின்மயியைக் கைது செய்துவிட்டால் மனித உரிமையைக் காப்பாற்றி விடலாம்சகோதரியை விடுமுறைக்கு முன் தினம் கைது செய்தாலும் அதில் தவறெதுவும் கிடையாது. ஏனெனில் இட ஒதுக்கீடு/ இலங்கைத்தமிழர் என்ற இரண்டு விஷயங்கள் பற்றி சகோதரி எதிர்க் கருத்து சொல்லியிருக்கிறாரே? இந்த இரண்டு விஷயங்களில் மாற்றுக் கருத்து வைத்துக் கொள்ளும் உரிமை எந்த மனிதருக்கும் கிடையாது. மீறி மாற்றுக் கருத்து இருந்தால் அவரது உரிமைகள் மனித உரிமையாகவே கருதப் படாது. அவர் மனிதரே அல்ல என்றும் அறிக.
    சதிச்செயல் செய்தவன் புத்திசாலி
    அதை சகித்துக் கொண்டிருப்பவன் குற்றவாளி என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. ஆனால் அதை வெளியே சொன்னால் நீங்க வேணும்னா நாலு நாள் ஜெயிலில் இருங்க என்று பதில் வரும். அதனால் இப்பல்லாம் அந்த பாடலைக் கூட எடிட் பண்ணித்தான் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  32. Saravana kumar went and asked for apologies on Saturday before being arrested. Still he has been taken into remand as though he is a BIG criminal. His family is suffering to the core......Both his kids are missing him so badly......His son is not being sent to school with a fear that someone will question him in school...He keeps asking where is his father.......Not able to answer him......Second one, daughter is just 8 months old.....She cannot understand anything.... And his wife unfortunately is out of country and not able to return now........and both are suffering without parents.........No one to question this injustice being done..........

    பதிலளிநீக்கு
  33. இனிமேல் ஆபாசப் பதிவு போடுவதற்கு முன் அவரவர் குடும்பத்தைப் பத்தி யோசித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இது போன்ற ஒரு பாடம் தேவை தான். சின்மயியின் ஜாதி பற்றி ஆராய்கிற, கருத்து சுதந்திரம் பற்றி வாய் கிழிகிற யாருக்கும் எந்த விஷயத்திலும் தனிப்பட்ட வம்புக்குப் போகாமல் நாகரீகமாக எழுதலாம் என்றொரு ஆப்ஷன் நினைவுக்கு வந்த மாதிரியே தெரியவில்லையே? ஆபாசமாக எழுதியே ஆக வேண்டும் என்று ஆழமான மன வியாதியில் பலர் பீடிக்கப் பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
    பதிவுலகில் இருப்பவர்கள் பின்னூட்டம் இடும் போது நண்பர் திண்டுக்கல் தனபாலனைப் பின் பற்ற முயல்வது நன்று. சர்ச்சைகள் இல்லாமல் குறைந்த பட்ச வார்த்தைகளில் கமென்ட் போடும் அவரது நாகரிகத்தைப் பின்பற்றினால் வலையுலகம் நாகரிகமாகும். (சிலர் அவரைக் கேலி செய்கிறார்கள். நான் கேலி செய்யவில்லை.)

    பதிலளிநீக்கு
  34. Posted earlier message by mistake without completing what I want to say. Got cut off at half way. Ok here you go again.

    Idhukku unga badhil enna?

    http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=22

    What if a parpan has tweeted abusingly using caste? Would you have said the same thing? If a parpaan did it would that have been a criminal offense in that case or will you get an apology in writing and let him/ her off?

    பதிலளிநீக்கு
  35. பார்ப்பான் செய்தால் தண்டனை இல்லை என்று யார் சொன்னது? பார்ப்பனர் மட்டுமல்ல, எந்த ஒரு உயர் சாதியினரும் சாதிப் பெயர் சொல்லித் திட்டினால் கண்டிப்பாக சட்ட நடவடிக்கை உண்டு. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் போதிய சட்ட வசதிகள் இல்லாததால் மற்ற எல்லா சட்டங்களையும் போல இதுவும் தேவையான இடங்களில் உபயோகப் படாமல் போவது துரதிர்ஷ்டம். சின்மயி பஞ்சமர்களை ஒட்டுண்ணிகள் என்று ட்வீட்டில் குறிப்பிட்டது கண்டிக்கத் தகுந்தது. (அந்த ட்வீட்டின் ஸ்க்ரீன்ஷாட்டை மாமல்லன் அவர்களின் ப்ளாகில் பார்த்தேன்.) இது போன்ற தகவலை ஃபார்வேர்ட் செய்வது கூட சட்டப்படிக் குற்றம் தான். ராஜன் லீக்ஸ் மற்றும் சரவணகுமார் இதற்கு சட்ட ரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் என் கேள்வி.
    தலித்துகள் ஒரு விதத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் பெண்களும் ஒடுக்கப் பட்டவர்கள் தானே? வீட்டுக்குள் அடைந்திருந்தவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிய வந்திருக்கும் போது கருத்தியல் தவறுக்காக இப்படிப் பாலியல் வன்முறையை ஏவி விட்டால் பெண்கள் இனிமேல் சமூகத் தளங்களை உபயோகப் படுத்த அஞ்ச மாட்டார்களா?
    சமுதாயத்தின் எந்த ஒரு அங்கத்தையும் முடக்கி விட்டு மற்ற பிரிவுகள் முன்னேறி விட முடியாது என்பதை எல்லாத் தரப்பினருமே நினைவில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  36. These are all indications that India is not at all ready for freedom of speech. If you look at any forum or even listen to adult rated talk shows (for example, Bill Maher) one would understand that using bad words is one way of expressing the opinion about anyone. Even Barak Obama is called names in American politics by many talk show hosts. If Obama has to complain, then million people have to be arrested.

    பதிலளிநீக்கு
  37. கல்லூரியில் படிக்கும் போது கானா பாடல்களை பாடுவதும் அதை பலர் விரும்பி கேட்பதும் அடிக்கடி நிகழும் நிகழ்வுகள்.கடவுள்,பாடல்கள்,தமிழ் பட பாடல்கள் என்று அனைத்தையும் வார்த்தைகளை மாற்றி கிண்டலாக,ஆபாசமாக பாடுவது முக்கால்வாசி பேரால் ரசிக்கப்பட்ட விஷயம்.
    சீனியர் பெண்கள்,அதே வகுப்பில் படிக்கும் பெண்கள் என்று போட்டு பாடுவது தான் அதில் ஹைலைட்டே
    அவர்களை வைத்து கொண்டு பாடுவது வேறு,நாலு ஆண்கள் இருக்கும் பொது பாடுவது வேறு .இது இரண்டும் ஒன்றை போல பேசுவது சரியா

    இன்றும் நண்பர்கள் வந்தால் உடன் வேலை செய்யும் பெண்களை பற்றி என்னாடா மச்சான் சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கும் போல என்று பேசும் நண்பர்கள் தான் மிக அதிகம்.நானும் அவர்கள் வேலை செய்யும் இடத்திற்கு சென்றால் இதே தான் செய்வேன்
    .டேய் டேய் மெதுவாடா கேட்க போவது என்று சிலர் கெஞ்சுவார்கள் .முக்கால்வாசி தோழர்கள் ஒக்காளி,தாயோழி என்று தான் அழைப்பார்கள் பாசத்தோடு.வட இந்திய தோழர்களில் இப்படி அழைக்காதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்
    இரண்டு ஆண்கள் இப்போது சேர்ந்தாலும் கூட படித்த பெண்களை.பொதுவாக தெரிந்த பெண்களை பற்றி பேசுவது ச்வப்னசுந்தரி பற்றி கௌண்டமணிஇடம் செந்தில் கேட்டது போல தான் பேசி கொள்வார்கள்
    இப்போது பல ஆண்கள் கொதிப்பதை பார்த்தால் இப்படியும் நல்லவர்களாக பல ஆண்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியமாக உள்ளது
    த்விட்டேரில் இரு நண்பர்களுக்கு இடையே நடக்கும் பேச்சை மெனகேடுத்து இன்னொருவர் பார்ப்பது ,அதை வைத்து புகார் செய்வது ,அதை சரி என்று பலர் வாதிடுவது வேதனையான ஆச்சரியம் தான்
    ராஜன் ஒரு கானா பாடகர் போல பலரால் மிகவும் விரும்பப்பட்டு ரசிக்கபட்டார்.அவர் தனிப்பட்ட முறையில் அரசியல் தலைவர்களை தவிர்த்து யாரையும் கொச்சையாக விமரிசனம் செய்தது கிடையாது என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு