6 அக்டோபர், 2012

விகடன் டைம்பாஸ்

சிக்கென்ற வடிவில் ஸ்லிம் சைஸில் ஐந்து ரூபாய் விலைக்கு கிடைக்கும் டைம் பாஸை வாசிக்க ஐந்து நிமிடங்கள் முழுதாகப் பிடித்தது.

(பழைய) குமுதத்தின் சேட்டை + வண்ணத்திரை, சினிக்கூத்து ரக உள்ளடக்கம் = விகடன் டைம்பாஸ்

அட்டையோடு சேர்த்து அறுபத்தியெட்டு பக்கம். முழு வண்ணம். அட்டை மட்டும் ஆர்ட் பேப்பர். உள்ளே வழக்கமான நியூஸ் பிரிண்ட். என்றாலும் ஐந்து ரூபாய்க்கு தரும் டைம்பாஸ் சற்றே அதிகம்தான். மெயின் டிஷ் சினிமா. தொட்டுக்க ஊறுகாய் மாதிரி லேசாக அரசியல்.

குட்டி சாமியாரை ரிமைண்ட் செய்த ஐடியா குட். அம்மாவின் கைப்பேசி அசத்தல். தாண்டவம் ரிவ்யூ தாங்கலை. போட்டோவுக்கு காசு கொடுக்காத விஜயகாந்த், சீரியஸ் சீண்டல். ‘அத்த பெத்த ரத்தினமே’ போட்டோ காமிக்ஸ் சூப்பர். ஷகிலா பேட்டி சபாஷ்.  வில்பர் சர்குணராஜ் பேட்டி வேஸ்ட்.

விகடனின் சாபக்கேடாக அமைந்துவிட்ட வைகோ டைம்பாஸுக்குள்ளும் தொடர்கிறார். ‘மழை’ ஸ்ரேயா கணக்காக இரண்டு பக்கங்களுக்கு கவர்ச்சி போஸ். ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் கிசுகிசுக்களும், துணுக்குகளும் நல்ல தேர்வு. ‘அவதூறு வழக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் ஜெயலலிதாவைப் பற்றி கட்டுரை எழுதுவது எப்படி?’ என்கிற கட்டுரைதான் இதழின் பெஸ்ட். இன்னும் இரண்டு பக்கங்களுக்கு நீண்டிருக்கக்கூடாதா என ஆசைப்பட வைத்தது.

ஏராளமான ஐட்டங்கள் இருந்தாலும், இதழை வாசித்து முடித்ததும் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது. ’சிரி’யஸ் பத்திரிகை என்று மொத்தமாக குத்து குத்துவென்று குத்தினாலும் சில சீரியஸ் ஆர்ட்டிக்கிள் இருந்தால் தப்பேதுமில்லை. ஒன்றோ, இரண்டோ ரியல் ஹ்யூமன் ஸ்டோரி இருக்குமேயானால் அந்த பத்திரிகையின் ரேஞ்சே வேறு.

விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் இதழில் லே-அவுட் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வது மன்மோகன் சிங்கின் டர்பன் ப்ளூ கலர் என்று சொல்வதை மாதிரி ஆகிவிடும். வழக்கம்போல ஆசிப்கானின் கேரிகேச்சர்கள் தத்ரூபம், பிரமாதம். தமிழ் பத்திரிகையுலகில் இவருக்கு முன்னுதாரணம் சொல்லக்கூடிய கேரிகேச்சர் ஆர்ட்டிஸ்ட்டுகள் யாராவது இருந்தார்களா என்றே எனக்கு நினைவில்லை. ஆனாலும் ஒரே மாதிரியான தன்மையுள்ள படங்கள் விரைவில் அலுத்துவிட வாய்ப்பிருக்கிறது. மாதநாவல்களின் அட்டைப்படங்களில் மாருதி தத்ரூபமாக பெண்களை வரைந்தபோது ஆரம்பத்தில் இருந்த ஆச்சரியம், போகப்போக மங்கிக்கொண்டேப் போனதை மறந்துவிடக்கூடாது.

இந்த பத்திரிகைக்கான ஐடியா ஆனந்த விகடன் உருமாற்றம் பெற்றபோது உருவான யூத்ஃபுல் விகடனில் தொடங்கியிருக்கும் என்று கருதுகிறேன். பிற்பாடு ‘என் விகடன்’ ஆகி, கடைசியாக டைம்பாஸில் விடிந்திருக்கிறது என்று தோன்றுகிறது. புதிய தலைமுறையின் வெற்றிக்கு அதன் ஐந்து ரூபாய் சூத்திரம் ஆரம்பக் காலங்களில் உதவியது. அதே உத்தியை இதற்கும் முயற்சித்திருக்கிறார்கள். ஐந்து ரூபாய் என்பது ஆரம்பக்கால usp (unique selling proposition). இது மூன்று மாத காலத்துக்குகூட தாக்குப்பிடிக்காது என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். ஒவ்வொரு வாசகரையும் வாரந்தோறும் தக்கவைக்க வேறொரு மேஜிக் ஏதோ தேவைப்படுகிறது. இது பவளவிழா கண்ட விகடனுக்கு நிச்சயம் தெரியும். டைம்பாஸில் என்னென்ன பாய்ச்சலை விகடன் நிகழ்த்தப் போகிறது என்று ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

இந்தப் பத்திரிகை குமுதத்துக்கு சவால் விடும் என்று வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகையுலகத்தில் இருக்கும் நண்பர்களால் கிசுகிசுக்கப்பட்டது. குமுதத்துக்கு சவால் குமுதமாக மட்டுமே இருக்க முடியும் என்பது என் எண்ணம். முன்பு குமுதம் இதழே வெளியிட்ட ‘குமுதம் ஸ்பெஷல்’ என்றுமே என்னுடைய கனவுப் பத்திரிகை. குமுதம் குழுமமே நினைத்தாலும் அம்மாதிரியான ஒரு பத்திரிகையை மீண்டும் நடத்த முடியுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அதுபோலவே குமுதத்தில் இருந்து வெளிவந்த ‘ஜங்ஷன்’ கூட என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளத்தக்க ஒரு முன்மாதிரிப் பத்திரிகைதான்.

விகடன் டைம் பாஸின் முதல் இதழ் ஜஸ்ட் பாஸ். விரைவில் டிஸ்டிங்ஷன் பெற அதன் ஆசிரியர் நண்பர் ரீ.சிவக்குமாரை வாழ்த்துகிறேன்.

13 கருத்துகள்:

  1. அட போங்கணே.. ஆரம்பத்தில் இப்படி கவர்ச்சி காட்டி மயக்கி , அதன் பின் பூணூல் புத்தியை காட்ட ஆரம்பித்து விடுவார்கள்

    பதிலளிநீக்கு
  2. சிந்திப்பவன்9:09 PM, அக்டோபர் 06, 2012

    வாங்கினேன்.
    படித்தேன்.
    பேருந்திலேயே வைத்துவிட்டு இறங்கி விட்டேன்.
    குப்பையாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்தேன்.
    ஆனால் இப்பேர்பட்ட குப்பை என நிச்சயமாக நினைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  3. Even after knowing it as KUPPAI what made himto buy the KUPPAI by paying the valuable HARD EARNED money?

    moni

    பதிலளிநீக்கு
  4. // குமுதத்தில் இருந்து வெளிவந்த ‘ஜங்ஷன்’ கூட என்றைக்கும் நினைவில் //

    எழுத்துக்கு எனது மானசீக ஆசானான திரு.பா.ராகவன் அவர்களை முதலில் பார்த்தது குமுதம் ஜங்சனில்தான்.

    பதிலளிநீக்கு
  5. இதெல்லாம் தேவையா??
    இருக்கற விகடன் களை ஒலுங்க நடத்தினாலே நல்லா இருக்கும்... ஆனந்தவிகடன் லாம் புரட்டவே முடில... அந்த ரைட்டர் பேயோன் பக்கமெல்லாம் கொடுமை

    பதிலளிநீக்கு
  6. i dont understand.
    Kumudham is so full of heroine' glamour pictures and A jokes and even sirukadhai and thodar kadhai are chee in that.
    Vikatan is like a classic magazine.
    vattiyum mudhalum, loosu payyan, and the stories of famous writers would be awesome.
    kumudham cannot even come near that.
    when they give a write up on how to cook a dish, what is d need of busted ladies there.
    may be time pass is not good as u expected (i did not read it yet),
    but i think vikatan is d best.

    பதிலளிநீக்கு
  7. படக்கதையில் 'கதை - யுவா' என்று போட்டிருக்கிறார்கள். அது நீங்கள் இல்லையென்றால் காப்பிரைட் கேளுங்கள் - பேருக்கு.

    பதிலளிநீக்கு
  8. i go with perumal kumar...'paeyon pakkam' kodumaiyilum koduma....4 pakkam waste..

    பதிலளிநீக்கு
  9. விகடனின் சாபக்கேடு வைகோவா?

    மிகப்பெரிய நகைச்சுவை.

    இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து,ஈழபோரை நிறுத்தி உலகசாதனை படைத்து, எங்கள் மாவீரன் திலீபனின் உண்ணாவிரதத்தையே கேவலப்படுத்திய கருணாவுக்கும் அவரின் அடிவருடிகளுக்கும் வைகோவை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

    தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு யார் என்று ஒரு பொது வாக்கெடுப்பு வேண்டுமானால் நடத்துவோம். வைகோவை சொல்கிறார்களா? இல்லாவிட்டால் கருணாவையும்,அவர் குடும்பத்தினரையும் மக்கள் சொல்கிறார்களா என்று கேட்டுவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  10. Kumudam is full of shits. Out of focus pictures n blur wordings, its really worse magazine ever .full of Repeated articles n actersses clevage images. I wouldnt even get 1 even its a free copy. AV is always the best.

    பதிலளிநீக்கு
  11. //suppamani said...
    Even after knowing it as KUPPAI what made himto buy the KUPPAI by paying the valuable HARD EARNED money?

    moni//

    சுப்பிரமணி வாங்கி படிச்சாத்தான் குப்பைன்னு தெரியுது

    பதிலளிநீக்கு