1 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் : சூதாட்டம்

அந்த குறுகிய சந்திப்பில் குறைந்தது ஆயிரம் பேர் குழுமியிருந்தார்கள். சோகம், கோபம், ஆவேசம், வெறி, விரக்தியென்று விபரீதமான உணர்வுகள். கூட்டத்தை விலக்கி மெதுவாக ஒரு வெள்ளைநிறக் கார் உள்நுழைகிறது. கார் நின்றதுமே இறங்குபவர்கள் எல்லாரும் வெள்ளுடையும், தலையில் வெள்ளைக் குல்லாவும் அணிந்திருக்கிறார்கள். ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கூட்டம் அமைதியாகிறது. யாராவது விபரீதமாக நடந்துக் கொள்வார்களோ என்று கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் அச்சம். அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என்று காவலுக்கு நின்ற காவலர்களுக்கும் பயம். கிட்டத்தட்ட வன்முறைச் சூழல். ம்ஹூம். அச்சப்படுவது மாதிரி ஏதும் நடந்துவிடவில்லை. மாறாக அவர்களை வாழ்த்தி கோஷங்கள்தான் முழங்கப்பட்டது. பளீரென உதயசூரியனால் விடிகாலை காரிருள் விலகி ஒளிவெள்ளம் பாய்வது மாதிரி, கூட்டத்தில் வார்த்தைகளில் விவரிக்க இயலா சமத்துவ உணர்வு மேலெழுந்தது. மரியாதையாக அவர்களுக்கு அந்த கருப்புநிற கேட் திறந்துவிடப்பட்டது. கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளே சென்றார்கள்.

கமலுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன பிரச்சினை ஏற்பட்டுவிட முடியும்? கமலைப் போய் இஸ்லாமியர்கள் எதிரியாக கருத முடியுமா? 
தமிழகம் மதச்சார்பு கொண்ட மாநிலமாக மாறிவிட்டது என்று கமலோ அல்லது வேறு யாரோ நினைத்தால் அதைவிட பெரிய பைத்தியக்காரத்தனம் வேறு எதுவுமில்லை. ஆயிரம் ’அம்மா’க்கள் தோன்றினாலும் இது தமிழர் தந்தை வாழ்ந்த மண். அவரிடம் சாமானியத் தமிழர்கள் எதை கற்றார்களோ இல்லையோ, சகிப்புத்தன்மையை கற்றிருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பெரியார் தமிழகத்தை மதவெறி சக்திகளிடமிருந்து காப்பார். திராவிடர் கழக அனுதாபியான கமலுக்கும் இது நிச்சயம் தெரியும். “இங்கிருந்து வெளியேறி விடுவேன்” என்று அவர் அன்று மிரட்டியது சமநிலை குன்றிய ஒருமாதிரியான சுயபச்சாதாபத்தில்தான். 
அன்று மாலை கமல் வீடு முன்பாக திரண்டிருந்த கூட்டத்தில் நானும் நண்பர்களோடு இருந்தேன். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது சோகம் என்னையும் சோகப்படுத்தி இருந்தது. இரவு எட்டரை மணிவாக்கில் கருப்புச் சட்டையில், போதுமான மேக்கப்பில் பால்கனியில் கமல் தோன்றினார். பரவசமான அந்த நிமிடங்களை என்னவென்று வர்ணிப்பது? எல்டாம்ஸ் சாலை முழுக்க ஒலித்த ‘வாழ்க’ கோஷம் போயஸ் தோட்டத்தை எட்டியிருக்கும். அவர் அதட்டினால் கூட்டம் அடங்கியது. கைத்தட்டலையும், விசிலையும் எதிர்ப்பார்த்து அவரது பேச்சில் சிறு இடைவெளி கொடுத்தால், அதை உணர்ந்துக்கொண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. கூடியிருப்பவர்கள் தன்னிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தன்னுடைய பிரத்யேக ஸ்டைலை காட்டினார் கமல். சட்டென்று காலை ஒரு திண்டின் மீது வைத்து, கால்முட்டியில் ஊன்றி, கையை கன்னத்தில் வைத்து அவர் கொடுத்த ‘போஸ்’ ஒன்றே போதும். அள்ளியது விசில். “என்னுடைய ரசிகர்களாக இஸ்லாமிய சகோதரர்களும் இருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு ஒரு ‘கேப்’ கொடுக்க, அதை உணர்ந்து கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய தோழர்கள் ஒவ்வொருவராக “நானும் இஸ்லாமியன்தான்” என்று குரல் கொடுத்துக் கொண்டே கை உயர்த்தினார்கள். ஆயிரக்கணக்கானோரை அசால்ட்டாக ரிங்மாஸ்டராக அன்று வேலை வாங்கினார் கமல். மணிரத்னத்தின் ‘இருவர்’ படத்தில் மோகன்லால் பால்கனி வழியாக ரசிகர்களை சந்திக்கும் காட்சியை ஒத்த காட்சி அது.

விஸ்வரூபம் படம் தொடங்கியதிலிருந்து, அது தொடர்பான இன்றைய நிகழ்வுகள் வரை வரிசைக்கிரமமாக யோசித்துப் பாருங்கள். ஒரு க்ரைம் தில்லர் நாவலை வாசிப்பதைப் போன்ற சுவாரஸ்யம் கிடைக்கும். தயாரிப்பு கை மாற்றம், டி.டி.எச். ரிலீஸ், தியேட்டர் அதிபர்களோடு மோதல், டி.டி.எச்.வாபஸ், இஸ்லாமியர் எதிர்ப்பு, அரசாங்கம் தடை, நீதிமன்றத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர்கள் ஒரு சினிமாவுக்காக காரசார மோதல், தடை நீக்கம், தடை நீக்கத்துக்கு இடைக்காலத் தடை, அரசியல் சினிமா பிரமுகர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு, கமல் ஜெ தனிப்பட்ட மோதல் மாதிரியான தோற்றம், வெளியான இடங்களிலெல்லாம் வரலாறு காணாத வரவேற்பு, அகில இந்தியப் பிரச்னையாக உருமாறுதல், இந்தி ரிலீஸ், மீண்டும் பேச்சுவார்த்தை என்று இதுவரை நடந்தவையே கன்னித்தீவின் தொடர் சுவாரஸ்யத்தை மிஞ்சுகிறது. விகடனோ, குமுதமோ உடனடியாக கமலை அணுகி ஒரு ‘மினித்தொடர்’ எழுத ஏற்பாடு செய்தால் தமிழ்நாடே அதிரும்.
விஸ்வரூபம் ஒரு கலைப்படைப்பு. கலைஞனின் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்றெல்லாம் நாம் நினைக்கவில்லை. சினிமா என்பது பிரதானமாக வியாபாரம். வியாபாரி தனக்குக் கிடைக்கும் கூடுதல் லாபத்துக்காக ‘கட்டிங்’ கூட கொடுக்க வேண்டியிருக்கும். பாலிவுட்டில் இது ஒரு கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. நூறு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படம் என்பது எத்தனை பேரின் கண்ணை உறுத்தியிருக்கும்? இனி தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள் ‘கட்டிங்’குக்காகவே தங்கள் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டியிருக்குமென தோன்றுகிறது.

இந்த ஒட்டுமொத்த விஸ்வரூப விவகாரத்தில் இஸ்லாமியர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. முன்பாக துப்பாக்கி விவகாரத்திலும் திரைமறைவாக ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாகவும், அது சரிபடாத காரணத்தாலேயே இஸ்லாமியர்களது உணர்வுகளை தூண்டிவிட்டு மதப்பிரச்சினையாக மாற்றினார்கள் என்றும் சில சினிமாக்காரர்கள் சொல்கிறார்கள். ஒரு சில விஷமிகளின் சுயநலத்துக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் கெட்டப் பெயர் சம்பாதிக்க வேண்டியிருப்பது வேதனையான நிகழ்வு. தகப்பன் மகள் உறவை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசக்கூடிய ஒருவர் எப்படி அன்பைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு விசுவாசமாக இருக்க முடியும்? இவர்களெல்லாம் தங்கள் பிரதிநிதிகள், தங்கள் சுயமரியாதையை காக்க போராடுகிறார்கள் என்று இஸ்லாமியர்கள் நம்பினால் அதைவிட பெரிய கொடுமை வேறெதுவுமில்லை. தங்களுக்குள் வளர்ந்துவிட்ட கருப்பு ஆடுகளை இனங்கண்டு இஸ்லாமியர்கள் ஒதுக்க வேண்டிய நேரமிது. இல்லையேல் மும்பையைப் போல எப்போதும் மதரீதியான பதட்டம் நிலவக்கூடிய அபாயச்சூழலுக்கு நம் அமைதிப்பூங்காவும் ஆட்படுத்தப்பட்டு விடும்.

கமலும் சும்மா இல்லை. எப்போது படம் எடுக்கும்போதும் ஏதேனும் சர்ச்சையை கச்சை கட்டிக் கொள்வது அவரது வாடிக்கை. மதரீதியான எதிர்ப்பு தோன்றியதுமே, சம்பந்தப்பட்டவர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி, சமரசப்படுத்தி அமைதியாக படத்தை வெளியிட்டிருக்க முடியும். கமல் ரசிகன் என்கிற முறையில் அவரது படம் யாருடைய வயிற்றெரிச்சலையோ கொட்டிக்கொண்டு வசூல்மழை பொழிவதில் நமக்கும் உடன்பாடில்லை.
 மடியில் கனம் இருப்பதால்தான் அவருக்கு வழியில் பயம். தமிழுக்குப் பிறகு வெளியிடப்போகும் விஸ்வரூபத்தின் இந்தி வடிவத்துக்கு ஏன் முதலில் தணிக்கைச் சான்றிதழ் வாங்கினார்? ஏனெனில் தமிழ் திரைப்படங்களுக்கான தணிக்கை கொஞ்சம் கறாரானது. இதே படத்தின் இந்திவடிவம் கொஞ்சம் தாராளமாக தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வாங்கிவிட்டால், அதை பின்பற்றுவதைத் தவிர தமிழ் தணிக்கையாளர்களுக்கு வேறு மார்க்கமில்லாமல் போய்விடும். இந்தியத் துணைக்கண்ட இஸ்லாமியர்களின் மனவோட்டமும், தென்கிழக்கு ஆசிய இஸ்லாமியர்களின் மனவோட்டமும் அடிப்படையில் வேறு வேறானது. எனவேதான் மலேசியாவில் முதலில் படத்தை போட்டுக்காட்டி, இஸ்லாமியர்கள் இப்படத்தை ஆட்சேபிக்க ஒன்றுமில்லை என்று நிறுவ முயன்றார். இருபத்தைந்தாம் தேதி பட வெளியீடு என்று அறிவித்துவிட்டு, திரையரங்குகளில் முன்பதிவும் ஆரம்பித்துவிட்டு கடைசிக்கட்டத்தில் இருபத்தியொன்றாம் தேதி இஸ்லாமிய அமைப்புகளுக்கு படம் போட்டுக் காட்டுகிறார். நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ போய் தடை வாங்கிட அவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுக்கக்கூடாது என்கிற எண்ணம் அவருக்கு இருந்ததைப் போல தோன்றுகிறது. விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக ஐந்து மணி நேரத்துக்கு மேலாக நீள்வதாகவும், பாதி படம்தான் முதல் பாகமாக இப்போது வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இதில் இந்திய முஸ்லிம்களைப் பற்றி ஆட்சேபகரமாக எதுவுமில்லை, ஏனெனில் கதை அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் நகர்கிறது என்று சமாதானமும் சொல்கிறார்கள். ஆனாலும் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படும் மீதி படம் இந்தியாவில் நடப்பதாக இருக்கிறது. அப்போது இந்திய முஸ்லிம்கள் சம்பந்தப்படாமல் கதை நகர வாய்ப்பேயில்லை. இப்போது இஸ்லாமியர் அச்சப்படும்படியான விஷயங்கள் அதில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இதனால்தானோ என்னவோ படத்தை இரண்டு பாகமாக கமல் வெளியிடுகிறார். முதல் பாகம் ஓடி வெற்றியடைந்துவிட்டால், அதன் தாக்கத்திலேயே இரண்டாம் பாகத்தை பிரச்சினையின்றி வெளியிட்டுவிடலாம் என்றும் அவர் நினைத்திருக்கலாம்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்புமே ஆடம்பரமான கேசினோ அரங்கில் அமர்ந்து சூதாட்டம் ஆடுவதைப் போன்ற சித்திரமே மனதில் எழுகிறது. எதிரில் அமர்ந்திருப்பவனின் கரங்களில் இருக்கும் மூன்று கார்டுகள் என்னவாக இருக்குமென்று யூகித்து ஆடவேண்டும். எப்போதுமே ‘ஏஸ்’ கிடைத்துவிடுவதில்லை. ஒரு கட்டில் நாலு ‘ஏஸ்’ தான் இருக்கமுடியும். நிகழ்தகவு அடிப்படையில் சிந்தித்து யோசித்து விளையாடுபவன்தான் சூதாட்டத்தில் கில்லாடி.
 விஸ்வரூபம் விஷயத்தில் கலைஞரின் கையில் இருந்த மூன்று கார்டுமே ‘ஏஸ்’. மதப்பிரச்சினை, அரசுத்தடை என்று மாநில அளவில் இருந்தப் பிரச்சினையை அவரது அறிக்கை தேசியப்பிரச்சினையாக மடைமாற்றி விட்டது. போதாக்குறைக்கு கமலுக்கும், முதல்வருக்கும் முன்விரோதம் என்று போகிற போக்கில் ஒரு திரியையும் கொளுத்திப் போட்டிருக்கிறார். ஊடகங்களில் கிசுகிசு மாதிரியாக கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருந்த விஸ்வரூபத்தை ஜெயாடிவி அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சித்தது என்கிற விவகாரத்தையும் நோண்டினார். காலையில் கமலின் உருக்கமான பேட்டி, மாலையில் கலைஞரின் விவரமான அறிக்கை என்று அந்த நாளிலேயே கமல் தரப்பு ‘ஸ்ட்ராங்’ ஆனது. கமலுக்கு ஆதரவான அனுதாப அலை தமிழ் சினிமாவுலகில் மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் வெகுவாக எழும்பத் தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் காவிரி விஷயத்தில் தமிழகம் ‘கப்பு’ வாங்கிய செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, விஸ்வரூபம் பிரதானப் பிரச்சினையாக மக்களின் முன்பு ஊடகங்களால் முன்வைக்கப்பட்டது. இந்த பரபரப்பு பரவி பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களும், ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் கமலுக்கு ஆதரவாக திரண்டார்கள். மத்திய அமைச்சரே விஸ்வரூபம் பற்றி பேசவேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. கலைஞரின் அறிக்கையால் கமலுக்கு பெருவாரியான ஆதரவு திரண்டது. அதே நேரம் கலைஞருக்கும் அரசியல் மைலேஜ் கூடுதலானது. அதிமுக ஆட்சிக்கு எதிரான மனோபாவம் பரவுவது அவரது அரசியலுக்கு லாபம்தானே.. அதுவும் யாரும் எதிர்பாராத ஒரு பிரச்சினையில்? 
கலைஞர் எதிர்ப்பார்த்த மாதிரியே பூனைக்குட்டி வெளியே வந்தது. அதுவரை விஸ்வரூபம் குறித்து எதையும் கண்டுக்கொள்ளாத மாதிரி இருந்த முதல்வர் ஜெயலலிதா தன்னை தற்காத்துக்கொள்ள பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஜெயலலிதாவின் கருத்துகள் ஓரளவுக்கு அவர் தரப்பு சேதாரத்தைக் குறைத்திருக்கிறதே தவிர, முற்றிலுமாக நிலைமையை மாற்றிவிட முடியவில்லை. வேறு வழியின்றி பதினைந்து நாள் தடை முடிந்ததும் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். ஒருவேளை தடையை நீடித்தால் கலைஞர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்கிற எண்ணம் மக்களுக்கு வலுப்பட்டு விடும்.

தமிழ்நாட்டைத் தவிர உலகெங்கும் வெற்றிகரமாக விஸ்வரூபத்தை வெளியிட்டு விட்டார். கமலால் செலவு செய்யமுடியாத கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு தமிழக அரசும், சில இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு விளம்பரத்தைத் தேடி தந்திருக்கின்றன. வழக்கமான கமல் படங்களுக்கு கிடைக்கும் ஆதரவை விட பன்மடங்கு ஆதரவை ரசிகர்கள் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய ரவுண்டில் கமல் வென்றிருப்பதாகவே தெரிகிறது.

32 கருத்துகள்:

  1. ஒன்னுமே புரியல உலகத்துல

    பதிலளிநீக்கு
  2. //ஆயிரம் ’அம்மா’க்கள் தோன்றினாலும் இது தமிழர் தந்தை வாழ்ந்த மண். அவரிடம் சாமானியத் தமிழர்கள் எதை கற்றார்களோ இல்லையோ, சகிப்புத்தன்மையை கற்றிருக்கிறார்கள்.//
    //தங்களுக்குள் வளர்ந்துவிட்ட கருப்பு ஆடுகளை இனங்கண்டு இஸ்லாமியர்கள் ஒதுக்க வேண்டிய நேரமிது. இல்லையேல் மும்பையைப் போல எப்போதும் மதரீதியான பதட்டம் நிலவக்கூடிய அபாயச்சூழலுக்கு நம் அமைதிப்பூங்காவும் ஆட்படுத்தப்பட்டு விடும். //
    சகிப்புத்தன்மையைக் கற்றுத் தந்த தமிழர் தந்தை கறுப்பு ஆடுகளை அடையாளம் காணக் கற்றுக் கொடுக்கவில்லையா? அடப்பாவமே? ஒரே கட்டுரையை ஆரம்பிச்சு முடிக்கறதுக்குள்ள தமிழர் தந்தை மேல் நம்பிக்கை போயிடுச்சா?

    பதிலளிநீக்கு
  3. பூர்ணம் அவர்களே!

    உங்களை மாதிரி ‘த்ரெட்’டர்களை கண்டதுமே அடையாளம் கண்டுகொள்கிறோமே? இதை யார் சொல்லிக் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? :-)

    பதிலளிநீக்கு
  4. தெளிவான அலசல். இந்த ரேசில் கமலுக்கு மட்டுமன்றி கருணாநிதிக்கு மைலேஜ் கூடியிருப்பது கண்கூடு.

    பதிலளிநீக்கு
  5. //தகப்பன் – மகள் உறவை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசக்கூடிய ஒருவர் எப்படி அன்பைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு விசுவாசமாக இருக்க முடியும்? இவர்களெல்லாம் தங்கள் பிரதிநிதிகள், தங்கள் சுயமரியாதையை காக்க போராடுகிறார்கள் என்று இஸ்லாமியர்கள் நம்பினால் அதைவிட பெரிய கொடுமை வேறெதுவுமில்லை. தங்களுக்குள் வளர்ந்துவிட்ட கருப்பு ஆடுகளை இனங்கண்டு இஸ்லாமியர்கள் ஒதுக்க வேண்டிய நேரமிது.//
    நண்பரே, நீங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. அந்த நபர் குறிப்பிட்ட காலமாக தமிழ் இஸ்லாமிய சமூகத்தில் குறிப்பிடதக்க இடத்தை பெற்றிருக்கிறார் என்பது வெக்கக்கேடான உண்மை ஆனால் அதை அவர் பெற தமிழகம் முழுவதும் இஸ். சமூகத்திற்குள்ளேயே ஏறாளமான குழுச் ச்ண்டைகளை அரங்கேற்றினார், குடும்பச்சண்டைகளை அரங்கேற்றீனார்..இஸ்லாத்திற்காகவும், அது கூறும் அன்பு, அறம் இவற்றிற்காகவும் உழைத்த நல்லவர்களை மரணித்துப்விட்ட உயர்வானவர்களை கூட கண்ணியம் இல்லாது பேசி பல ரகளைகளை உண்டாக்கினார்.. இவரை இதுவரை பலருக்கும் பிடிக்காது இஸ்லாத்திற்கு வெளியே இவரை நேற்றுவரை நல்ல கண்ணோட்டத்தில் நினைத்தவர்கள் எல்லாம் இப்போது தான் புரிந்திருக்கிறார்கள். காட்டித்தந்த காலத்திற்கு நன்றி.

    யுவக்கிருஷ்ணாவின் சிந்தனையில் உண்மை உண்டு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. Good analysis.
    Whatever be the outcome for KH.....your party need to spend only half for the 2014 elections

    பதிலளிநீக்கு
  7. "விஸ்வரூபம்"
    படமும், அதன் அதிர்வலைகளும் - ஒரு சாதாரண ரசிகனின் பார்வையில்!!!!!!!!!
    ஒரு திரைப்படம், பார்ப்பவர்களை, அதன் பாதிப்பிற்க்குள் சிறிது நேரம் ஆட்க்கொள்ளும்.
    இப்படம் என்னுள், இலங்கையில் நாம் அனுபவித்த சிறுபான்மை இன்னல்களை மீட்டுப்பார்க்க வைத்தது.
    முஸ்லிம் மக்களிற்க்கு எதிரானது அல்ல என்று கூறிக்கொண்டு இப்படத்தை வெளியிடப் பல எதிர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கும், அதனால் பலரது அனுதாபத்திற்க்கும் உள்ளாகியிருக்கும் உலக நாயகன் கமல்காசன், இப்படத்தில் என்ன சொல்ல வருகிறார்?
    தாலிபான்கள் மிகவும் கொடூரமானவர்கள், தமக்கும், தம்மக்களிற்க்கும்கூட, மிகக் கடுமையான சட்டதிட்டங்களுடன், அமெரிக்கர்களிற்க்கு எதிராக, (உலகமக்களிற்க்கு எதிராக) ஈவிரக்கமற்ற யுத்தத்தை நடாத்துகின்றனர். இந்த யுத்தத்தில, இந்திய முஸ்லிம் உளவாளியான, கமல்கசன், அமெரிக்கர்களுடன் சேர்ந்து அவர்களை ஒடுக்குகின்றார்.

    இதில் அமெரிக்கப்படைகள் தாக்குவது தீவிரவாதிகளையும், அவர்கள் குடும்பத்தையும் மட்டுமேயன்றி, ஒருசில பொதுமக்களே பாதிக்கப்படுகிறார்கள்.
    எனவே இது முற்றிலும் தீவிரவாதத்திற்க்கு எதிரான போர். இங்கே இந்தத் தீவிரவாதிகளின் தொழுகை முறையும், அவர்களது கலாச்சாரமும், அவர்களது தண்டனைகளின் குரூரமும், பார்ப்பவர்கள் முகம்சுழிக்கும் வண்ணம் படமாக்கப்பட்ட உண்மைகள்.

    இது உண்மைகளாகவே இருக்கட்டும்!
    இப்படி ஒரு குளு குரூரப்போர் நடத்த வேண்டிய தேவை என்ன? இவர்கள் பிறந்ததே ஜிகாத்திகளாகவா? இல்லை முஸ்லிம் மக்களின் மதப்புனித நூலாம் குரானின் பெயரால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனரா? இருப்பின் இவர்களிற்க்கும் முஸ்லிம்களிற்க்குமான வேறுபாடு என்ன? சாதாரண முஸ்லிம் குடிமகனிற்க்கு, இப்படத்தில் வரும், முஸ்லிம் இந்திய உளவாளி என்ன பெருமை சேர்த்துவிட முடியும்.

    இதுபற்றிச் சிந்திக்த் தமிழர்களிற்க்கு முடியாவிட்டாலும், சிறுபான்மை இலங்கைத் தமிழனாக, எனக்குள் சிறு ஏக்கம்!!!!!
    நானும் ஒரு தீவிரவாதிதான் இலங்கை அரசாங்கத்தின் கண்களிற்க்கு, எனது சகோதரனின் இன்னுயிர் நீத்த, ( அரச படைகளை மட்டும் தாக்கியளித்த ) கரும்புலித்தாக்குதலும் தீவிரவாதம்தான் இவ்வுலகிற்க்கு.
    உலகில் எங்கு வாழ்ந்தாலும் சிறுபான்மை இலங்கைத் தமிழன் தீவிரவாதிதான், அவன் போராட்டத்தின் காரணம் திரிபுபடுத்தப்பட்டது.
    உலக நாடுகளின் முன் அவன் தனது சொந்தங்கிற்க்காகவும், இனஅழிப்பிற்க்கு எதிராகவும் போட்ட கூச்சல்கள் எல்லாம், செவிடன் காதுச் சங்கல்லவோ?

    என்னை இந்த உலகம் பார்த்த அந்தப் பார்வை, என்னருகில் இருக்கும் பிறநாட்டு சகதொழிலாளி, என் பிறநாட்டு முதலாளி, பிற நாட்டுப் பள்ளித்தோளன்.........
    பரிதாபம். அந்தொ பரிதாபம்......

    இப்படி ஓர் நிலமையை இந்திய முஸ்லிம்களிற்க்கு, தாம் பிறந்த நாட்டிலேயே, தம்மொழி பேசுவோராலேயே எற்ப்பட்டுவிடும் அவலம் இப்படத்தினால் வரும், அல்லது வித்திடப்படும்.
    ஏனெனில் சாதாரண முஸ்லிம் பொதுமகனைப் பிரித்தறிய இந்த உலகம் தம் நேரத்தை செலவிடாது.

    தொழுகை செய்பவன், குரான் படுப்பவன், முட்டாக்குப் போடுபவன், குல்லா போடுவன் எல்லாம் தீவிரவாதியாகப் பார்க்கப் படப் போகிறான்.

    இதற்க்குப் பதிலாக, முஸ்லிம் தீவிரவாதத்தை எதிர்த்து, முஸ்லிம்களிற்க்காக, தலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்ட முஸ்லிம் தமிழனாக, உலக நாயகன் கமல்கசன் நடித்திருந்தாலோ? அவர்கது திட்டம் இந்தியாவில் அரங்கேறப்போவதையறிந்து இத்திட்டம் இந்திய முஸ்லிம்களிற்க்கோ, உலகமுஸ்லிம்களிற்க்குப் பெரும் அவப் பெயர் என்று, தடுக்கும் பணியில், இந்திய அரசாலும் தீவிரவாதியாப்பார்க்கப்படும் நபராக கமல் நடுத்திருந்தால்.........
    இப்படம் முஸ்லிம்கிற்க்கெதிரானது அல்ல என்று அவர் மார்தட்டுக்கொள்ளலாம்.

    அதைவிடுத்து இப்படி ஒரு படத்தை, அதுவும், உன்னால் முடியும் தம்பி,
    மகாநதி, அன்பே சிவம், என்று பயனுள்ள படங்களைத்தந்த கமலிற்க்கு இது விஸ்வரூபம் அன்று, இது ஒரு மன்மதன் அம்பு -அமெரிக்காவை நோக்கி கமலிடமிருந்து.கமல் நேர்மையுடன் ஏற்க்க வேண்டும் என்றில்லை,
    கமல் நேர்மையுடன் இருந்தால் ஏற்றுக்கொள்வார். ( கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை? கடவுளிருந்தால் நல்லாயிருக்கும் என்றுதான் சொல்கிறேன்.)

    பதிலளிநீக்கு
  8. //உங்களை மாதிரி ‘த்ரெட்’டர்களை கண்டதுமே அடையாளம் கண்டுகொள்கிறோமே? இதை யார் சொல்லிக் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? :-)//

    பதிலளிநீக்கு

  9. //.... தங்களுக்குள் வளர்ந்துவிட்ட கருப்பு ஆடுகளை இனங்கண்டு இஸ்லாமியர்கள் ஒதுக்க வேண்டிய நேரமிது.//

    நூற்றுக்கு நூறு சரி நண்பா

    பதிலளிநீக்கு
  10. " ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் கெட்டப் பெயர் சம்பாதிக்க வேண்டியிருப்பது வேதனையான நிகழ்வு. தகப்பன் – மகள் உறவை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசக்கூடிய ஒருவர் எப்படி அன்பைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு "
    பிஜே அவர்களுக்கு நீங்கள். உங்களின் சமீபத்திய பேச்சில் சில வார்த்தைகளை கேட்ட போது ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். மிக மோசமான முன்னுதாரணம் இது. உணர்ச்சிவசத்தில் பேசிய ஒன்றாக இருக்கும் என்றே என் மனத்தை தேற்றிக்கொள்ள முயற்சிக்கின்றேன். கண்ணியத்தை எடுத்துரைத்த நீங்களா இப்படி பேசினீர்கள்? நம்பமுடியவில்லை. உங்களின் இந்த பேச்சிற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  11. கலைஞர் விட்ட அறிக்கையால் தான் அம்மாவின் பத்திரிக்கையாளர் அவசர கூட்டம் நடைபெற்றது என்பது உண்மையிலும் உண்மை அதுதான் அம்மாவின் வழக்கம் கூட


    - அருள் மணிவண்ணன்

    பதிலளிநீக்கு
  12. யுவ கிருஷ்ணா
    //தகப்பன் – மகள் உறவை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசக்கூடிய ஒருவர் எப்படி அன்பைப் போதிக்கும் புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு விசுவாசமாக இருக்க முடியும்?//
    அப்பனும் மகளும் காதல் டூயட் பாடுவோம் என்று சொல்வது தான் முற்போக்கா? என்று கேட்பதற்காக அவரது மகள் சொன்னதை நான் குறிப்பிட்டேன். மகளை விடுங்கள் கமல ஹாசனே என்ன சொன்னார்.
    இதோ படியுங்கள்:

    "கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏர்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.
    அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:-
    எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் இந்த படத்தை எடுப்போம்."
    புனித மார்க்கமான இஸ்லாத்துக்கு விசுவாசமாக இருக்கிற காரணத்தால் தான் இதை சொல்ல நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  13. Hi Krishna,
    I live in Los Angeles,I work in Entertainment industry in Hollywood.Some of the US cinema related magazines reported this issue and people are asking me about this issue. You cannot believe, Vishwaroopam movie is super hit in USA. What you said is right,he got free advertisement for this movie. One thing I noticed that lot of people are mentioning in social media to not to encourage pirated VCD for this movie. Its a good start...

    பதிலளிநீக்கு
  14. //உங்களை மாதிரி ‘த்ரெட்’டர்களை கண்டதுமே அடையாளம் கண்டுகொள்கிறோமே? இதை யார் சொல்லிக் கொடுத்தது என்று நினைக்கிறீர்கள்? :-)//

    த்ரெட்டரா? நானா? ஹாஹா... உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்பத் தப்பு...

    பதிலளிநீக்கு
  15. கமலின் சினிமா அறிவையோ முயற்சியையோ குறைத்து நான் மதிப்பிட வில்லை. படத்திற்கு தடை விதித்ததையும் கண்டிக்கிறேன். படம் நிச்சயம் வெளிவர வேண்டும். அதே நேரத்தில் கமலுக்கும் இது மாதிரி குடைச்சல்கள் வேண்டும். ஏனெனில் அவர் ஒரு பாதி பகுத்தறிவு வாதி. அதென்ன பாதி பகுத்தறிவு. முதலில் கொண்ட கொள்கைக்காக இம்மியும் பிசைய மாட்டேன் என்பார். பின்னர் எதிராளியின் மன நிலையைப் புரிந்துகொண்டது போல வியாபாரத்திற்க்காக விட்டுக் கொடுத்து விட்டு பகுத்தறிவையும் விடாதது போல பேசுவார். ஆனால் கமல் வியாபார உக்தியை மனதில் கொண்டு பல சில்லறை வேலைகளை பகுத்தறிவு ,முற்போக்குத் தனம் என்ற பெயர்களில் தந்திர நரித்தனம் செய்கிறார் என்றே கருதுகிறேன். அத்தனையும் தெரிந்தே, வேண்டுமென்றே செய்கிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே வியாபாரத்திற்க்காக மலிவான விடயங்களை பல படங்களில் இதை செய்கிறார் என்று தெரிந்தும் , படத்தைப் படமாக பாருங்கள் என்று சொல்கிற முற்போக்குவாதிகள் சினிமாவின் பாதிப்பு சமூகத்தில் இல்லை என்று சொல்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  16. \\விகடனோ, குமுதமோ உடனடியாக கமலை அணுகி ஒரு ‘மினித்தொடர்’ எழுத ஏற்பாடு செய்தால் தமிழ்நாடே அதிரும்.\\

    இந்த வார ஆனந்த விகடனில் பாரதி ராஜா பேட்டி தவிர, வேறுங்கும் விஸ்வரூபம் விவகாரம் வரவில்லை. கவனித்தீர்களா? அல்லது 'கவனித்தார்களா'?

    http://www.sivigai.blogspot.in/2013/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  17. Hi Man,

    கமலும் ஸ்ருதியும் இணைந்து நடிப்பதாகத்தானே சொல்லியிருக்கிறார் ? காதலர்களாக - ஜோடியாக நடிக்கப்போவதாகவோ டூயட் பாடப்போவதாகவோ சொல்லி இருக்கிறாரா ? அல்லது நீங்களாக உங்களது கற்பனைக்குதிரையை தட்டி விட்டிருக்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு!தந்தை மகள் உறவைப்பற்றி பேசியதைக்(யார் என எனக்குத் தெரியாது) குறிப்பிடும் நீங்கள், அந்த உறவைப்பற்றி கொச்சையாக ஒருவர் கதையே எழுதினார் என்று அந்தக் கதையையும் தனது சுயசரிதையில் வெளிடயிட்டார் ஒரு கவிஞர்.ஏதாவது வசதி கருதி தாங்கள் மறந்திருக்கலாம்.இந்த தமிழ்த் திரைப்பட விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கோலிஉட் முழுவதுமே ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி நிலைகுலைந்து போய் இருந்தது;அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்காக எவனும், எந்த முன்னணி நடிகனும்,முன்னணி பட நிறுவனங்களும் குரல் கொடுத்ததில்லை;மாறாக தங்களது படங்களையே அந்த குடும்பத்திற்கு விட்டு கொடுத்து,கோழைத்தனத்தை குழைந்து காட்டினர்.ஆனால் ஜெயாவின் ஆட்சியின்போது(1996-ய் நினைவில் கொள்க) மட்டும் இவர்களுக்கு துணிவு எங்கிருந்து வருகிறது.அவர்களுக்கு பயந்து அடிமாட்டு விலைக்கு படம் கொடுத்தவர்கள் நமக்கும் கொடுப்பார்கள் என ஆளும்தரப்பு நினைத்திருக்கலாம்.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையத்தானே செய்யும்! முதல்வர் சொல்வது பொய்யாகவே இருக்கட்டும்;ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்திருக்குமானால் அப்போது நாம் என்ன சொல்லியிருப்போம்;வன்முறை வரும் எனத் தெரிந்தும் இந்த அரசு மெத்தனமாக இருந்தது என்பதுதானே!.கமலின் கலைத்திறமையில் குறைவில்லை;எனினும் உலகநாயகன் ஏன் எப்போதும் சர்ச்சைநாயகனாகவே வலம்வருகிறார்? தாங்கள்கூட கட்டுரையின் முடிவில், இந்துத்துவாவை வலுப்படுத்துவதாக இஸ்லாமியர்களின் எதிப்பு அமைந்துவிடக்கூடாது என்ற தொனியில்தான் எழுதியுள்ளீர்கள்.மொத்ததில் கட்டுரை அருமை.நன்றி!

    பதிலளிநீக்கு
  19. Hi Man said... - கமல் சொன்னது இணைந்து நடிக்க போவதாக தானே.. அதை ஏன் யங்கள் மனம் கொஞ்சி படுத்தி பார்க்கிறது, தந்தை மகளாகவே நடிக்கலாம், வேறு நல்ல உறவுகளாகவும் இருக்கலாம்... மனதில் இருக்கும் நஞ்சு, தானே வெளிவருகிறது.. அதை சுத்தம் செய்வது நலம்..அனைவருக்கும் நலம்.. கடவுள் இருக்கிறார், இல்லை அல்லா இருக்கிறார் .. இவர் இருப்பதால்.. நீங்கள் தெளிவடைவீர்கள் என்று நம்புகிறேன்.. தெளிந்தால் நல்லது.. முருகவேல் சண்முகம்

    பதிலளிநீக்கு
  20. யுவா நல்ல கட்டுரை.. மிக ரசித்தேன், ஒரு கமல் ரசிகன் என்ற முறையில். அவருடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.. இவ்விசயம் பற்றி வேறு இடங்களில் பேசி, சண்டையிட்டு, ஆயினும் மனம் கஷ்டபட்டிருந்த வேளையில், உங்கள் கட்டுரை சற்றே ஆறுதல் தருகிறது, அரசியல் சுயநலத்தோடு, இடைஞ்சல்கள் செய்தாலும் கூட கமல் வெற்றிகரமாக சாதிப்பார், இப்படம் மிக பெரிய வெற்றி பெரும், இப்படத்தை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. நன்றி. - முருகவேல் சண்முகம்

    பதிலளிநீக்கு
  21. சினிமாவை சினிமாவாக பார்ப்போம்னு சொல்றாங்க,அப்புறம் ஏன் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளா சித்தரிக்கனும்?

    சினிமாதானே,உண்மையில்லையே ஒரு கற்பனைக்காக என்று இந்துக்களை தீவிரவாதிகளா சித்தரித்து ஒருதடவை எடுக்கலாமே?

    (உண்மையில் இந்து தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்)

    முதலில் சினிமாவை சினிமாவாக பார்க்கும் சூழல் இங்கு உள்ளதா?இன்னும் முதல்வர்களை தமிழ்சினிமாவில் இருந்தே தேர்ந்தெடுக்கும் மனமுதிர்ச்சியில்தானே தமிழன் இருக்கிறான்?

    முஸ்லிம்கள் விவாகாரம் வந்தவுடன் மட்டும் பல நடுசென்டர்கள்,கருத்து சுதந்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆடுவதை பார்க்கும் போது அச்சமாகவே இருக்கிறது.

    அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் என்று போர்னோகிராபிகள் கூடத்தான் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு ஓடுகின்றன.அது போல் இங்கும் கருத்து சுதந்திரம் செய்யலாமே? பரிந்துரைப்பீர்களா? மாட்டீர்கள் ஏன்? ஒரே ஒரு நிமிடம் சிந்தித்தால் உங்களுக்கு எல்லாமே புரியும்.ஆனால் மாட்டிக் கொண்டது முஸ்லிம்கள்,அதனால் மௌனம் சாதிப்பீர்கள். இதே சூழலில் இந்துத்துவ இயக்கங்கள் இருந்திருந்தால் இந்த திடீர் கருத்து சுதந்திர ஆதரவுவாதிகள் என்ன செய்திருப்பார்கள்?

    திருடனுக்கு தேள்கொட்டியது போல் இருந்திருக்கும்.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்து இயக்கங்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன. உள்துறை அமைச்சர் காவி தீவிரவாதம் என்று சொன்னதற்கே பரிவாரங்கள் சாமியாடுகின்றன.பாராளுமன்றத்தையே இயங்கவிடாமல் தடுப்போம் என்று பிஜேபி மிரட்டுகிறது.இந்து தீவிரவாதத்தை வைத்து படம் எடுக்க இதே கமல் முன்வருவாரா? படம் எடுப்பது இருக்கட்டும், அதைப்பற்றி பேசித்தான் பார்க்கட்டுமே,அப்புறம் தெரியும் உங்கள் கருத்து சுதந்திரத்தின் லட்சணம்

    பதிலளிநீக்கு
  22. ஆழ்ந்த சிந்தனையுடன் அருமையான பதிவு. இந்த முயற்சியை காவிரி நீர் ரிலீஸாக எடுத்திருந்தால் உச்ச நீதிமன்றத்தில் ‘கப்” கிடத்திருக்காது.காவிரி நீரினால் அரசியல் சாக்கடை சுத்தமாகி விடும் என்று கதர் வேஷ்டிகளும், கரை வேஷ்டிகளும் கணக்கு போட்டு காய் நகர்த்துவது போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  23. முத்து, மற்றும் முருகவேல், அவர்களுக்கு,
    //அவரது மகள் சொன்னதை நான் குறிப்பிட்டேன். மகளை விடுங்கள் கமல ஹாசனே என்ன சொன்னார். இதோ படியுங்கள்.
    இது கமலின் பேட்டி, மகள் சுருதி அளித்தப்பேட்டியில் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றஆசை,இல்லையில்லை...இலட்சியம் என்று கூறியிருக்கிறார் அதைத்தான் பதிந்துருந்தேன்

    பதிலளிநீக்கு
  24. // தந்தை மகள் உறவைப்பற்றி பேசியதைக்(யார் என எனக்குத் தெரியாது) குறிப்பிடும் நீங்கள், அந்த உறவைப்பற்றி கொச்சையாக ஒருவர் கதையே எழுதினார் //

    I think you mentioned abt JJ who wrote a story abt this. I think in kalki or kumudam.

    பதிலளிநீக்கு
  25. Every body is blaming that U.S is killing people in Afhanistan. They did it because Bin Laden did it in U.S soil. Their slogan after 911 was and still I saw it in car stickers "We will Never Forget911".

    They have the guts to destroy the terrorist group. But What happends in India after lot of terrorist activities, we simply warns Pakistan (Islam Terrorist groups) and no body cares abt this.

    Even Indian Govt has no guts to mention Kasmir Terrorist as "Terrorists", you can hear this in TV and Radio announcements. India mention them as Militants not Terrorists.

    பதிலளிநீக்கு
  26. அம்மாவிடம் காட்டிய திறமயயை ஐயாவிடம் முந்தய ஆட்ச்சியில் காட்டியிறுந்தால் என்ன நடந்திறுக்கும்? முன் காலத்தில் ஒரு அதிமுக அமைச்சர் படத்தில் காட்டிய போக்கிரிதனத்திற்கு முடிவு கட்ட‌ வள்ளலே அபய கரம் நீட்டினார். அது போல எப்பொதும் நடக்குமா?

    பதிலளிநீக்கு
  27. பிரபாகரன் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுக்கணும்ன்னு நடேசன் சொல்லும்போது, வெண்டாம் ராஜபக்சே பெண்களையும் சிறுவர்களையும் கொல்லமாட்டார் எனவே பாதுகாப்பு வேண்டாம்ன்னு பிரபாகரன் சொல்லுறமாதிரி கமல் படத்தி எடுத்திருந்தால் ஒத்துக்கொள்ளூவீர்களா லக்கி?

    பதிலளிநீக்கு
  28. லக்கி...முடிந்தால் கார்த்திக்கின் இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்.

    http://www.countercurrents.org/karthik010213.htm


    தீவிரவாதம் பற்றி படம் எடுக்கும் ஒரு கலைஞன் எப்படிப்பட்ட தவறுகள் செய்யக் கூடாதோ அந்தத் தவறுகளை கமல் இந்தப் படத்தில் செய்துள்ளார்!

    "History will not be very kind to those who forget it.”

    பதிலளிநீக்கு
  29. ஒரு ரசிகனாக இயல்பான பகிர்வு :)

    பதிலளிநீக்கு
  30. அன்பு சகோதரருக்கு....அந்த தலைவர் அப்பா மகள் உறவை கொச்சைபடுத்த பேசவில்லை... அவர் பேசியது அனைத்தும் நாளேடுகள் மற்றும் தொலைக்கட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் அமைந்திருந்தது... விஸ்வரூபம் கண்ணியத்திற்கு உடைய இஸ்லாமிய மார்க்கத்தை எவ்வளவு கீழ்த்தரமாக சித்தரிக்கிறது என்பதனை உணர்த்த தான் எதிர்ப்பை அள்ளி வீசிய அனைவரின் மீதும் இந்த மாதிரி வார்த்தைகளை அந்த கூட்டத்தில் பிரயோகித்தார்.... இது அன்றி வேறு எதுவும் இல்லை...

    பதிலளிநீக்கு