ஒரு மந்தையிலிருந்த இரண்டு ஆடுகள் தேவஊழியத்துக்காக ஸித்தியாகின்றன. வெள்ளை ஆடு தேவமைந்தனுக்கு மைந்தனாய் தேவபிரசங்கம் செய்ய தலைப்படுகிறது. கருப்பு ஆடு சிற்றின்ப போதையால் தேவனுக்கு விசுவாசமில்லாமல் போய் சாத்தான் வசமாகிறது. (லக்கி 1:46)
சாத்தானின் துர்க்குணங்கள் நிரம்பிய ஆண் ஆட்டுக்குட்டி ஒன்று தேவத்தன்மை பொருந்திய ஆட்டின் சகவாசத்தால் தேவனுக்கு அடிமை ஆகுவதோடு தேவக்குணங்கள் பொருந்தியதாகவும் மாறுகிறது. தேவ தன்மைகள் மிகுந்த மற்றொரு பெண் ஆட்டுக்குட்டியோ, சாத்தானுக்கு ஊழியம் செய்யும் கருப்பு ஆட்டுக்குப் பிறந்தது. (லக்கி 4:55)
கருப்பு ஆடு, வெள்ளை ஆட்டை சூழ்ச்சியின்பால் சூழலுக்கு பலியாக்குகிறது. ஆண் ஆட்டுக்குட்டியும் தன் தேவத்தன்மைகளை துறந்து சாத்தானுக்கு வாலாட்டுகிறது (லக்கி 11:32)
சாத்தானின் ரத்தமாக இருந்தும் துர்க்குணங்களுக்கு ஆட்படாமல் தேவசிந்தனையோடு வாழும் பெண் ஆட்டுக்குட்டியின் நடத்தை, ஆண் ஆட்டுக்குட்டியை மீண்டும் தேவபாதைக்கு திருப்புகிறது (லக்கி 15:4)
கருப்பு ஆடாக சாத்தான் தேவ மைந்தர்களை அழிக்க உருவெடுத்தான். தேவமைந்தன் வெள்ளை ஆட்டின் உருவில்
சாத்தானை ஒழிக்க சாத்தானிய குணங்களை பெறுகிறான் (லக்கி 20:20)
இறுதியில் கருப்பு ஆடு தன்னை முழுமையாக சாத்தானுக்கு
ஒப்புக்கொடுக்க முடியவில்லை என்று ஒப்புக் கொள்கிறான். தன்னுடைய இரத்தமான பெண்
ஆட்டுக்குட்டியை மரிக்கவைக்க அவனால் இயலவில்லை. அவனுக்குள்ளும் தேவவிசுவாசம் இருளுக்குள்
ஒளியாய் மிஞ்சியிருக்கிறது. (லக்கி 30:29)
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
உயிர்பிழைத்த ஆட்டுக்குட்டி : படம் பார்த்து குற்றுயிரும் குலையுயிருமாகி, தேவ விசுவாசத்தால் உயிர்பிழைத்து, மீதி வாழ்க்கையை நடைபிணமாக
கழிக்கப் போகிறவர்கள்
கருப்பு ஆடு உருவில் நின்ற சாத்தான் : படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் மற்றும் இயக்குனர்
கருப்பு ஆடு உருவில் நின்ற சாத்தான் : படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் மற்றும் இயக்குனர்
ha ha ha கடல் பக்கமே போகாதிங்கனு தானே சொல்றீங்க......?
பதிலளிநீக்குஐயா ,
பதிலளிநீக்குநான் தங்களை நெடுநாட்களாகப் படித்து
வருகிறேன். ரசித்தும் சிரித்தும் மகிழ்ந்து
அனுபவித்து இருக்கிறேன்.
ஆனால் இதுவரை பின்னுஊட்டம் இட்டல்தில்லை.
இப்போது இடாமல் இருக்க முடியவில்லை.
படத்தின் களத்தில் சென்று நீங்கள் எழுதியிருப்பது
உங்களின் திறமைக்குச் சான்று.
வாழ்த்துகள் .
Hilarious :-D bt I felt better dan Ravaan!! What say?
பதிலளிநீக்குpattasu
பதிலளிநீக்குசார்
பதிலளிநீக்குஇதுமாதிரி சில பதிவுகளைப் பார்த்து உங்களைத் திட்டவும் முடியலை. சில பதிவுகளைப் பார்த்து திட்டாமலிருக்கவும் முடியலை. இயேசுவுக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே
படத்துல லிப் டு லிப் கிஸ் சீன் இல்லையாமே. என்ன கொடுகை இது?
பதிலளிநீக்குவழி மாறிக் கடலில் மூழ்கவிருந்த ஆட்டுக் குட்டிகளை தேவதூதனாக பிரசன்னமாகிக் காத்த லக்கிக்கு ஸ்தோத்திரம்! அல்லேலூயா!
பதிலளிநீக்குAmen
பதிலளிநீக்குசந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே
பதிலளிநீக்குசந்தோசம் எங்கும் பொங்குதே
கடலை பார்த்தவர்களை
நினைத்து பார்த்தால்
சந்தோசம் எங்களுக்கு பொங்குதே
எப்போதுமே அவசரப்பட்டு எல்லா படங்களையும் பார்த்துவிடுவதால் சிலசமயம் தலை கிறுகிறுத்துத்தான் போகிறது.
பதிலளிநீக்குபாவம் இந்த அன் 'லக்கி' ஆடு.
என் கல்லூரி காலங்களில் மணி சாரின் அநியாய விருப்பன் நான்..
பதிலளிநீக்குமணி, மணி என்று கொண்டாடி தீர்த்தவன். எனக்கு பம்பாய் படத்துடன் முடிந்து விட்டது..
அவரின், படத்தை பல வருடங்களுக்கு பின்பு ரொம்பவே நம்பி ராவணன் பார்த்ததுடன், முடிவே எடுத்து விட்டேன். மணி சாரின் படத்தை இனிமேல் பார்க்கவே கூடாது என..
என் ஞாபக அலையிலிருந்து கழன்று விடுவார் என்ற நல்லெண்னமே..
விமர்சனத்தில் கடுமையான விமர்சனம்
பதிலளிநீக்குஇந்த விமர்சனத்தை ஏற்று கொள்ளும் மனப்பக்குவத்தை மணி சாருக்கு , தேவன் அருளட்டும்..
கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே..கோடான கோடி நன்றிகள்..!!
பதிலளிநீக்குamen
பதிலளிநீக்குஇதுதான் professional perfection என்பது. உங்கள் திறமை வலைப்பதிவில் பளிச்சுன்னு தெரியுதே. குட் writing
பதிலளிநீக்குமணிரத்னம் படங்களை விமர்சனம் செய்து பின்னுட்டம் இட்டால் எந்த பெரிய பத்திரிகைகளும் வெளியிடுவதில்லை. (தினமணி மற்றும் தினமலர் ). இந்த மொக்கையை எத்தனை நாள்களுக்குதான் தூக்கி வைத்து கொண்டாடுவார்களோ ?
பதிலளிநீக்குவேதம் ஓதும் சாத்தான் ஜெயமோகன் கைங்கர்யத்தினாலே மணிரத்னத்திற்கு சங்கு ஊதி சாங்கியம் செய்யும் படிக்கு தேவனால் ஆசிர்வதிக்க பட்டதால்,படம் பார்க்காதவர்கள் பாக்கியவான்கள்(நட-12;2)
பதிலளிநீக்குsuper luck sir.ha ha ha ha ha ha
பதிலளிநீக்குஎனது
பதிலளிநீக்குஇடது பக்கத்தில்
சாத்தானும்
வலது பக்கத்தில்
இயேசுநாதரும்
... ’கடல்’ பார்த்தனர்
இடைவேளையில்
இயேசு அவரை அவரே
சிலுவையில்
அறைந்துக் கொண்டார்
சாத்தானோ
வெள்ளை அங்கி
அணிந்து
பாதிரி ஆனார் - luicky Yuva
பாவத்தின் சம்பளம் மரணம். போனஸ் கடல் படம்.
பதிலளிநீக்குJust for 30 silver coins Yudas turned agains jeses and helped (Yudhars)enemies of jesus christ.
பதிலளிநீக்கு