மாதத்துக்கு முப்பது ரூபாய் செலவழித்தால் போதும். நமக்கு போன் செய்பவர்களின் காதில் ‘ட்ரிங் ட்ரிங்’குக்கு பதிலாக நாமே தேர்ந்தெடுக்கும் பாடல் இசைவெள்ளமாய் பாய்கிறது. சாமானியர்களுக்கு மட்டும்தான் இந்த ‘காலர் ட்யூன்’ வசதியா. அரசியல் புள்ளிகளும் அசத்தலாமே. ஒய் நாட்? வி.ஐ.பி.களின் தற்போதைய ‘மூடு’க்கேற்ப நம்முடைய தாழ்மையான பரிந்துரைகள்...
அஞ்சா நெஞ்சன் :
“அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை?”
சொந்தமென்ன பந்தம் என்ன
சொல்லடி எனக்கு பதிலை...
நன்றி கொன்ற உள்ளங்களை
கண்டு கண்டு வெந்த பின்பு
என்னடி எனக்கு வேலை?”
தளபதி :
“முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி
பிறந்து வந்தோம்
கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒண்ணுக்கு ஒண்ணாக”
(சோக வெர்ஷன் பாடல்)
கலைஞர் :
“கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்த காலமே...
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே...
என் தேவனே ஓ தூக்கம் கொடு
மீண்டும் அந்த வாழ்க்கை கொடு
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆறவிடு”
புரட்சித்தலைவி :
“பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குதான்
என எண்ண வேண்டும்
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்”
டாக்டர் அய்யா & சின்ன அய்யா :
“மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
திண்டிவனத்து மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போன்ற மாம்பழம்
உங்களுக்கும் வேண்டுமா
ஓடி இங்கே வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்
பரவசமாய் பாடலாம்”
(ரைம்ஸ்)
கேப்டன் :
பாஜகவோடு கூட்டணி அமைந்தால் :
“தாமரைப் பூவுக்கும்
‘தண்ணிக்கும்’ என்னிக்கும்
சண்டையே வந்ததில்லை
மாமனை அள்ளி நீ
தாவணி போடுக
மச்சினி யாருமில்லை”
காங்கிரஸோடு கை கோர்த்தால் :
“கை, கை, கை வெக்கிறா வெக்கிறா
கைமாத்தா என் மனசை கேக்குறா கேக்குறா”
தனித்து நின்றால் :
“தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?
உரிமையும் இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?”
அண்ணியார் :
“வெள்ளை மனம் உள்ள மச்சான்
விழியோரம் ஈரம் என்ன
பக்கத்திலே நானிருந்தும்
துக்கத்திலே நீ இருந்தா
கரை சேரும் காலம் எப்போ?”
எழுச்சித் தமிழர் :
“வருது வருது – அட
விலகு விலகு
சிறுத்தை வெளியே வருது
சிறுத்தை நான்தான்
சீறும் நாள்தான்”
செந்தமிழன் :
“நான் யாரு
எனக்கேதும் தெரியலியே
என்னைக் கேட்டா
நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி
கொண்டு வந்த சாமி
யாரைதான் கேட்டானோ?”
பொன்னார், புரட்சிப்புயல், பாரிவேந்தர், நீதிக்காவலர் மற்றும் கொ.மு.கவின் எல்லா பிரிவு தலைவர்களுக்கு சேர்த்து க்ரூப் ட்யூன்!
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளிக்கூட்டம் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்”
தா.பா, ஜி.ரா மற்றும் பிரகாஷ்காரத், பரதன் உள்ளிட்ட அகில இந்திய கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் அனைவருக்கும் சேர்த்து க்ரூப் ட்யூன்!
“அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
புரட்சித் தாயன்றி வேரொன்று ஏது?”
Sarath kumar?
பதிலளிநீக்குNice :)
பதிலளிநீக்குசூப்பர் :-)
பதிலளிநீக்குரெண்டு வாரம் முன்னால கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு போஸ்ட் நானும் போட்டேன்...
http://www.muthusiva.in/2014/02/2014-powered-by.html
அட நாறப்பயபுள்ள, சிரிச்சு சிரிச்சு செத்தே போனேன் நான்:-))))))))))))))))
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை . உங்கள் சித்தனை சிறப்பாக ,நகைச்சுவையோடு கலந்து வருகிறது .இருப்பினும் ஒரு தவறு . கலைஞர் :"என் தேவனே
பதிலளிநீக்குபாதங்களை ஆறவிடு” இந்த வார்த்தைகளை விரும்ப மாட்டார்
wat a pity??
பதிலளிநீக்குwat a pity??
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள்
பதிலளிநீக்குசொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
Madotica
பின்றாம்பா...பின்றாம்பா...
பதிலளிநீக்குடேய் அஸிஸ்டென்ட். நோட் பன்னுங்கடா...