8 ஏப்ரல், 2010
கொடுக்குறதை கொடுத்தாதான்...
ஒரு ஊர்லே ஒரு மருமவ இருந்தாளாம். மாமியாக்காரி எதை சொன்னாலும் புரிஞ்சுக்காம வேற ஏதாவது செய்வாளாம். அது மாதிரி நேரத்துலே மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா நாலு வாங்குவாளாம். தொடப்ப அடி பட்டதுக்கு அப்புறமா தான் மாமியாக்காரி சொன்னதை கரீக்ட்டா செய்வாளாம் மருமவ.
”தெனமும் சாயங்காலம் விளக்கு வெக்குறதுக்கு முன்னாடி போய் தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு மாமியாக்காரி சொன்னா மருமவ வெளக்கு வெச்சதுக்கப்புறமா தான் கொடத்தை கையிலே எடுப்பாளாம். அதனால தெனமும் வெளக்கு வெக்குறதுக்கு முன்னாடி மாமியாக்காரி தொடப்பத்தை எடுத்து நல்லா விளாசி விட்டுருவாளாம். தொடப்பக்கட்ட அடி வாங்குனதுக்கு அப்புறமா தான் தண்ணி புடிக்க மருமவ கொடத்தை எடுக்குறது வழக்கம்.
ஒரு முறை மருமவளோட அம்மா வீட்டுலேர்ந்து ஏதோ சீர் செய்ய வந்திருந்தாங்களாம். அவங்க வந்தது சாயங்கால நேரம். மாமியாக்காரி கிட்டே சீர்வரிசையை கொடுத்து “எம்பொண்ணு நல்லா நடந்துக்கறாளா”ன்னு கேட்டாங்களாம். மருமவளப் பத்தி அவங்க வீட்டுக்கே கம்ப்ளையண்ட் பண்ணக்கூடாதுன்னு “ரொம்ப நல்லா நடந்துக்கறா என் மருமவ”ன்னு மாமியாக்காரி பெருந்தன்மையா சொல்லியிருக்கா. அவங்க வீட்டு மனுஷா முன்னாடி “போம்மா, வாம்மா”ன்னு மருமவளை கவுரதையாவும் மாமியாக்காரி நடத்தியிருக்கா.
விளக்கு வெக்குற நேரம் வந்துருக்கு.
”மருமவளே வெளக்கு வெக்கிற நேரம் வந்தாச்சு. போயி தண்ணி புடிச்சாந்துரும்மா”ன்னு மாமியாக்காரி தன்மையா சொல்லியிருக்கா.
கொடத்தை இடுப்புலே வெச்சிக்கிட்டு வந்த மருமவ, மாமியாக்காரி முன்னாடியும், தன் வீட்டுக்காரங்க முன்னாடியும் முறைச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாளாம்.
மருமவளோட அம்மா, “ஏண்டி அத்தை தான் சொல்றாங்க இல்லை. போயி தண்ணி புடிச்சிக்கிட்டு வாடி”ன்னு சொல்லியிருக்காங்க.
ஒடனே மருமவ, “அத்தை! நீங்க கொடுக்குறதை கொடுத்தா தான் நான் தண்ணி மொண்டாருவேன்”ன்னு சொன்னாளாம்.
மாமியாக்காரிக்கு தர்மசங்கடமாப் போச்சி. “சீக்கிரமா போயி தண்ணி மொண்டாந்துரும்மா. அம்மா, அப்பாவெல்லாம் வந்துருக்காங்க இல்லே”ன்னு பாசமா சொன்னாளாம்.
மறுபடியும் மருமவ, “கொடுக்குறதை கொடுங்க அத்தே. தண்ணி மொண்டாறேன்”னு அடமா சொன்னாளாம்.
உடனே மருமவளோட அம்மா, “ஏன் சம்பந்தி, என் பொண்ணுக்கு ஏதோ பாசமா கொடுப்பீங்களாமே? அதை கொடுங்க, அவ தண்ணி மொண்டாந்துருவா”ன்னு வெவரம் புரியாம வெள்ளந்தியா சொல்லியிருக்காங்க.
நெலைமை கட்டுமீறி போவறதை பார்த்த மாமியாக்காரி வேற வழியில்லாம தொடப்பக்கட்டைய எடுத்து மருமவள நாலு வாங்கு வாங்கினாளாம். அதுக்கப்புறமா தான் மருமவ தண்ணி மொண்டார போனாளாம். மருமவ வீட்டிலேர்ந்து வந்தவங்க வாயடைச்சிப் போனாங்களாம்.
கதை சொல்லும் நீதி : கொடுக்குறதை கொடுத்தா தான் ஆலமரத்துப் பிசாசு அடங்குமாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கலக்கல் கதை போங்க . பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் மீண்டும் வருவேன்
பதிலளிநீக்குகொடுத்தாத்தான் போவேன்னு இங்க அடம் புடிக்கிற அந்த அதிர்ஷ்டசாலி யாஆஆஆஆஆரூஊஊஊ!?
பதிலளிநீக்குவால்!
பதிலளிநீக்குசில சாதிவெறி பதிவுகளையும், அவற்றுக்கு தரப்படும் தக்க எதிர்வினைகளையும் பார்த்ததுமே இக்கதை நினைவுக்கு வந்தது! எனவே இங்கே பதிவாக இட்டிருக்கிறேன்.
சில பேர் எப்பவும் மருமகளாகவே இருக்க ஆசைப்படுகிறார்கள் :-)
என்னையும் மாமியார் லிஸ்டில் சேர்த்ததற்கு நன்றி!
பதிலளிநீக்கு:)
பதிலளிநீக்குpresent sir
பதிலளிநீக்குஓஹோ!! அப்படியா?
பதிலளிநீக்குஅது சரி !!! ஆனா கதை அரத பழசு ....My mom used to tell this during my school days....;)
பதிலளிநீக்குKonjam new story try pannunga Yuva.
good
பதிலளிநீக்குஓ! இது அந்த மாசோகிஸ்ட் மேட்டர் தானே தோழர்
பதிலளிநீக்கு>>சில பேர் எப்பவும் மருமகளாகவே இருக்க ஆசைப்படுகிறார்கள் :-)
பதிலளிநீக்குஉங்க குருசாமி (?!) 'நித்யானந்தா' சாரு ஸ்டைலில் 'கிசு கிசு' பாணி இலக்கியம் உங்களுக்கு நல்லா வருது :)
அருவருப்பான பதிவு. இவவளுவு ஆணதிக்க வெறியை மனதில்வைத்துக்கொண்டு சாதிவெறியை சாடுவதாக போலிபித்தலாட்டங்கள் வேறா?
பதிலளிநீக்குசரியான நேரத்தில் சரியான கதை.. ! :)
பதிலளிநீக்குவால், ராஜன், கும்மி, பட்டாபட்டி - நல்ல கேட்டுகோங்க.. கொடுக்கவேண்டியத கொடுக்கணுமாம்.. ரெடி ஜுட்
lucky..nowadays u r posting ur old posts much.. i am ur damn hard fan but really disappointed this last 3 months..many of ur posts are from 'puthiya thazhaimurai'..we expect ur writing stuff which proves the magic to hit lakhs of visitors.. refresh urself and come back to form.. wishing ur change..
பதிலளிநீக்குயுவா.. உங்க க்ரியேடிவிடி , தமிழ் எல்லாம் எனக்கு பிடிக்கும்... உங்க எழுத்துல பிடிக்காதை அப்பப்ப சொல்லிட்டு வர்றேன்...
பதிலளிநீக்குஇந்த பதிவு, ஒரு கதை என்ற விதத்தில் நன்றாக இருந்தாலும், பெண் அடிமைத்தனம் மிகுந்த பழைய தலை முறை சாயல் கொண்டது... ஆத்திர பட மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு, எந்த கோபத்த்தையோ , இப்படி காட்டுவது , உங்கள் போன்ற மூத்த பதிவருக்கு அழகல்ல...
தல, கலக்கீட்டீங்க. அருமையான கதை. ஆனா ஏன் அத முழுசா முடிக்கலேன்னுதான் தெரியல. அதோட தொடர்ச்சி இதுதான்:
பதிலளிநீக்குகடேசில மாமியாகாரிகிட்ட வாங்க வேண்டியத வாங்கிகிட்டு மருமககாரி தண்ணி மொண்டாண்டாந்தா. இதுல என்ன ஆயிப்போச்சின்னா மாமியாகாரிக்கு ஒரு பெரிய எகத்தாளமாயிப் போச்சி. தனக்குதான் பெரிய பவுரு இருக்கிறதாவும், தனக்கு இந்த மாதிரி அல்லா மருமககாரிகளையும் தட்டிக் கேக்குற உரிமை இருக்குறதாவும் அவளுக்கு ஆயிப் போச்சி.
இதோட இப்பிடித்தான் ஒரு நா பக்கத்து வீட்டுக்காரி அவ பாட்டுல நடந்து போயிக்கிட்ட்ருந்தாளாம். ஆனா அவ நடக்கறது இந்த மாமியாகாரிக்கு சுத்தமா பிடைக்கல. சும்மா இல்லாம அவகிட்ட போயி “இப்பிடி நட, காலத் தூக்கி இப்பிடி வையி, கைய இப்பிடி வீசு”-ங்கிற ரேஞ்சுல ஆர்டர் போட ஆரம்பிச்சா. அவ காதுலயே போட்டுக்கல. இப்போ தான் நீங்க எதிர்பாக்குற மாதிரியே நடந்துச்சு. அதே தான், வெளக்குமாத்த தூக்கி அவள அடிக்கப் போனா.
******************************************************
மறு நா.
கொடத்தை இடுப்புலே வெச்சிக்கிட்டு வந்த மருமவ, மாமியாக்காரி முன்னாடி முறைச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தாளாம். மாமியாக்காரி “சீக்கிரமா போயி தண்ணி மொண்டாந்துரும்மா”ன்னு பாசமா சொன்னாளாம்.
மருமவ, “கொடுக்குறதை கொடுங்க அத்தே. தண்ணி மொண்டாறேன்”னு அடமா சொன்னாளாம்.
ஆனா நெலமை என்னதான் கட்டுமீறிப் போனாலும் பாவம் மாமியாக்காரியால ஒண்ணும் பண்ண முடியல. ஏன்னா பாவம், அவ கையத்தான் நேத்தே பக்கத்து வீட்டுக்காரி ஒடச்சு அடுப்புல போட்டுட்டாளே.
முழுக் கதையும் சொல்லும் நீதி : ஒலக மாமியாக்காரின்னு ஒருத்தருமில்ல.
Eppaaa.. some how after many generations.. mamiyar marumagal sandai.. konjam koranjathu nu sollalaam..
பதிலளிநீக்குVarushatulla.. konjal naal mamiyaara tolerate pannarathey periya vishayam.. Andha kaalathulla.. eppadi orey veetulaa mamiyar marumagal 2 perum vella vetti ilaaama utanthutu irundanagalo terila..
Ippa.. ellarum veli oor/ veli nadula vella parkurathaala, sanda podamaley tani kuduthanam.. mamiyaar kita irundu viduthalai :)
Oops.Who linked my post here?!
பதிலளிநீக்கு