17 ஏப்ரல், 2010

தமிழ்நாடு!

80 வயது கிழவி இங்கே வந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் என்று இந்திய குடியுரிமை அதிகாரிகள் கருதுவார்களேயானால், மாவோயிஸ்ட்டுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்துவிடக் கூடிய அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்பு கேலிக்குரியதாக இருக்கிறது என்று பொருள். சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு.

கலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அண்ணா 1967ல் மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்மாற்றமே செய்திருக்க மாட்டார்.

இந்தியாவுக்கு தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை.

58 கருத்துகள்:

  1. மனிதாபிமானம் என்ன விலை? கேட்கிறது காந்தி தேசம்!

    பதிலளிநீக்கு
  2. மிக யதார்த்தமான விமரிசனம் யுவகிருஷ்ணா. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4:12 PM, ஏப்ரல் 17, 2010

    லக்கி இது நீங்கள் தானா? தி.மு.க வை விமர்சிப்பது அச்சர்யமாக இருக்கிறது...இப்போதாவது உங்களுக்கு இது தோன்றியிருப்பது மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  4. அனானிமஸ். இது ஒரு சகிக்க இயலாத சம்பவம் என்று நினைக்கிறேன்.

    போதிய ஆவணங்களோடு பக்கவாத சிகிச்சைக்கு வந்தவரை முறையான காரணம் சொல்லாமல் திருப்பி அனுப்பியது கீழ்த்தரமான செயலாக இருக்கிறது. யார் யாரோ எங்கெங்கு இருந்தோ இங்கு வந்து சிகிச்சை பெற்று நலமாக திரும்பும்போது மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பிரபாகரனின் தாயார் என்ற ஒரே காரணத்துக்காக திருப்பி அனுப்பப் பட்டிருப்பது நியாயமான செயலாக தெரியவில்லை.

    89ல் அமைதிப்படையை கண்டித்த மாதிரி கலைஞர் இச்செயலுக்காக இந்தியாவை கண்டித்திருக்க வேண்டும்.

    வழக்கம்போல கலைஞரை குற்றம் சாட்ட மட்டுமே இச்சம்பவத்தை கண்டிப்பவர்களின் கண்டிப்புக்கும், என்னுடைய கண்டிப்புக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. என்ன காரணமோ? அவசரப்பட்டு பதிவு போட்டுட்டீங்களா? நாளைக்கே கலைஞர் இதுக்கு ஏதாவது உங்களுக்கு ஏற்புடையதாக காரணம் சொல்லிவிட்டால்..

    பதிலளிநீக்கு
  6. எல்லாவற்றையும் விட மனிதம் மேலானாது

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா4:41 PM, ஏப்ரல் 17, 2010

    போன பதிவில் சொல்லியது போல, நாம் எதிர் கொள்ள வேண்டிய சரியான பிரச்சனை எது என்று தெளிவாக புரிந்து கொள்வதிலே சிக்கல் இருக்கிறது.

    மனிதாபிமானமில்லாமல் நடந்துவிட்டதென்று என்று ஆரம்பிம்பது. இப்படி மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்ச்னைகள் கோடி இங்கே இருக்கு போது. நாம் பேசவேண்டிய/அணுகவேண்டிய பிரச்சனை இதுவல்ல.
    வெள்ளைக்காரன் சமதானப்படுத்த்த வந்தானென்னால் அங்கே யாரும் காவாய் கரையோரம் வெளிக்கு போல, குடிக்க தண்ணியில்லாமலோ, இல்லை தண்ணீர் பங்கீட்டு எப்படி செயவதென்றோ கோடி பிரச்ச்னையினை வைத்துக்கொண்டு வேறநாட்டுக்கு சமதானம் பண்ணி வைக்க வரவில்லை.

    நமது தலங்க மாதிரியே, இங்கேயிருக்கிறவிட்டுவிட்டு மனிதாபிமானம் ம..மானமென்று திரும்பவும் விசயத்தினை வேற கோணத்தில் எழுதி கொண்டிருப்பதால் நான் இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன். நான் போய் என்னோட சரியான பிரச்சனையினை கவனிக்க வேண்டியிருக்கு, யுவகிருஷ்ணாக்கு புரிய வைக்க வேண்டியது என் வேலை இல்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  8. லக்கி!நீங்களா இது என்ற கேள்வி ஒரு புறம் தொக்கி நின்றாலும் மனிதாபிமானத்திற்கான உங்கள் குரலுக்கு வாழ்த்துக்கள்.

    நேற்று உங்களது முந்தைய இடுகை காணும் அதே நேரத்தில் இயக்குநர் ராம் தளத்தில் பிரபாகரனின் தாயார் சென்னை வருகை பற்றிய அவசர அறிவிப்பு படிக்க நேர்ந்தது.

    விசாவுடன் ஒருவர் பயணம் செய்யும் போது அவர் தடை செய்யப்பட வேண்டியதன் உட் காரணங்கள் எதுவாக இருக்கும் என்ற கேள்வி நேற்று இரவு முதல்.

    அதற்கான ஒரு விடையாகவோ,அல்லது இன்னும் வெளியில் வராத உண்மைகளாக சில இருக்கும் என்பதற்கு நேற்று இரவு வை.கோ,நெடுமாறன் போன்றோர் விமானதளத்திற்கு பிரபாகரனின் தாயாரை அழைத்துச் செல்ல வந்துள்ளார்கள் என்பது நெடுமாறன் தளத்திலிருந்து அறிய நேர்கிறது.

    அரசியல் மீண்டும் தனது கோர முகத்தைக் காண்பிக்கிறது என்ற மீதியை உங்கள் சுய சிந்தனைக்கும்,வெளி வ்ராத உண்மைகளை சென்னையிலிருந்து அருகில் கண்டு கொள்ளவும் விட்டு விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. மனிதநேயம் கவிதைக்கு மட்டுமா சொந்தம்?

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா5:26 PM, ஏப்ரல் 17, 2010

    Lucky,

    I think that was not a state government's decision. That particular decision cannot be made by a state government - that department is a central govt department. And in this matter, even if Kalaignar likes also, the central officials might go against him..

    The only criticism I have on Kalaignar is - WHY IS HE KEEPING SILENT EVEN NOW??? WE WANT TO SEE THE KALAIGNAR OF 60'S AND 70'S OR ATLEAST 80'S

    பதிலளிநீக்கு
  11. ஆங்கில அனானி!

    நானும் இதையே தான் யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. //சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு//

    ஆம்!

    தமிழக அரசின் கரம் இதில் இருந்தால் இதை விட இழிவு வேறெதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. உங்களிடமிருந்து இந்த பதிவு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா5:54 PM, ஏப்ரல் 17, 2010

    ”அம்மையார் லட்சுமியம்மாள் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த,
    வயதான பெண்மணியை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து வரும் முறை இதுதானா?

    மாநில அரசினை அணுகாமல், அவர்களின் உதவியை நாடாமல்,
    அவர்களுக்குத் தகவல்கூடத் தெரிவிக்காமல், ரகசியமாக அழைத்து வர முயற்சிப்பதன் அவசியம் என்ன?

    அந்த அம்மையாருக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் நேரலாம்? அவருக்கு யார், என்ன கெடுதல் செய்திட முனையக்
    கூடும்? என்றெலாம் சிறுபிள்ளைத்தனாமாக யாரும் கேட்டு விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

    இப்படி ரகசியமாக, திடீரென அழைத்து வரப்படும் அந்த அம்மையாரின் உயிருக்கே கூட ஊறு நேரும் ஆபத்துகள் உள்ளனவா? இல்லையா?

    அந்த அம்மையாரின் பாதுகாப்பிற்கு
    பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? அரசா? இல்லை அவரை இப்படி வரவழைக்க
    முயன்றவர்களா?

    அந்த அம்மையாரை அழைத்து வர முயன்றவர்கள் உண்மையிலேயே
    அவரின் உடல் நலனில் அக்கறை கொண்டிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

    முதலில் அரசின் உதவியை அல்லவா நாடியிருக்க வேண்டும்?

    ஒருவேளை அரசு இக்தகைய மருத்துவ உதவியைச் செய்ய
    மறுத்திருந்தால்,இப்பிரச்சினையை மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களைத் திரட்டிப் போராடி அரசினை நிர்பந்தித்திருக்கலாமே?

    ஆனால் அவ்வாறில்லாமல், அந்த அம்மையாரை அழைத்து
    வர முயன்றவர்கள் தற்போது செயல்பட்டிருக்கும் விதம் ஏற்புடையதாக இல்லை.

    இக்காரியத்திலே ஈடுபட்டவர்களுக்கு அந்த அம்மையாரின் மருத்து சிகிச்சையிலே உள்ள அக்கறையை விட, தங்களின் சுய அரசியல் லாபங்களே முக்கியமாக இருந்திருப்பதாகத்தான் தெரிகிறது.

    மாநில அரசினை அணுகினால், ஒருவேளை அவர்கள் இந்தக்
    காரியத்தினைத் தங்கள் பொறுப்பிலேயே, நிறைவேற்றி விட்டால், அரசுக்கு
    அல்லவா நற்பெயர் கிடைத்துவிடும்? அதை எப்படி அனுமதிப்பது? என்று
    எண்ணித்தான், இப்படிச் செய்திருக்கிறார்கள்!

    ஆதியிலிருந்தே இவர்களின் செயல்பாடுகள் இப்படித்தான்
    இருந்து வந்துள்ளன. ஈழத்தில் கடந்த மூன்றாண்டுகளாக ஏற்பட்ட
    பேரிழப்புகளுக்கு, இவர்களின் இக்தகைய செயல்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்
    என்றே நான் நம்புகிறேன்”.

    பதிலளிநீக்கு
  15. அனானி!

    உங்கள் கேள்விகள் அத்தனையும் நியாயமானவையே. வைகோ, நெடுமாறன் வகையறாக்கள் ஆரம்பத்தில் இருந்தே செய்து வரும் சதி மற்றும் சாவு அரசியலின் ஒரு அங்கமும் இந்நிகழ்வு.

    ஆயினும் பார்வதி அம்மாள் வருவதைப் பற்றி மாநில அரசுக்கு முன்கூட்டியே நிச்சயம் தெரிந்திருக்கும். கலைஞர் தகுந்த ஏற்பாடுகளை செய்துத் தந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

    இல்லையேல் இது முழுக்க முழுக்க குடியுரிமை அதிகாரிகளின் முடிவு என்றால், அது கலைஞரால் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. கோட்டைசாமி6:03 PM, ஏப்ரல் 17, 2010

    இங்கு யாரும் முட்டாள்த்தனமாக உளறவேண்டாம். அறிவோடு சிந்தித்தால் ஒரு உண்மை விளங்கும். விஷயம் அந்த தாய் சிகிச்சைக்காக இங்கு வரக்கூடாது என்பதல்ல. அவர்கள் இங்கிருக்கும் வரை உண்மையில் அவர்களுக்கு இங்கு நிம்மதி கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள். அனாவசியமாக உணர்சிகளை தூண்டிவிட்டு கலவரம் செய்வார்கள். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்க்காகத்தான் காத்திருக்கிறது "ஜெ" மற்றும் "வைகோ" எனும் ஓநாய் கூட்டம். இந்த விசயத்தில் மத்திய அரசின் முடிவு மிகச் சரியானதுதான். இந்த முடிவை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. //என்ன காரணமோ? அவசரப்பட்டு பதிவு போட்டுட்டீங்களா? நாளைக்கே கலைஞர் இதுக்கு ஏதாவது உங்களுக்கு ஏற்புடையதாக காரணம் சொல்லிவிட்டால்..//

    ஏற்றுக் கொள்ளப் போகிறேன். இதென்ன கேள்வி அதிஷா?

    பதிலளிநீக்கு
  18. இது மத்திய அரசின் முடிவு மாநில அரசுக்கு எந்த சம்மந்தமும் கிடையாது ஓரே போடா போடுவார்

    பதிலளிநீக்கு
  19. கலைஞர் இதற்கு என்ன செய்வார் பாவம். 4 நிமிடம் உண்ணா விரதம் இருப்பார், அந்த அம்மையார் மலேசியா போய் சேர்ந்தவுடன் மத்திய மந்திரி யாரவது போன் போட்டு சொல்வார்கள் . "கலைஞரின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு அவரை வீடு வரை பத்திரமாக கொண்டு சேர்த்தது" என்று உடன்பிறப்புகள் முழங்க வெற்றி களிப்புடன் வீடு திரும்புவார். வயதான காலத்தில் அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?. இந்த விஷயத்திலாவது தமிழன் சொரணையுடன் நடந்து கொள்ளவில்லை என்றால் எல்லாரும் மசுரை வழித்துக்கொண்டு "மானங்கெட்ட தமிழன்" என்று பெருமையுடன் திரியலாம்.

    பதிலளிநீக்கு
  20. The Mother deserves legitimate treatment in her HOME land. Whether it comes form the Government or not may not matter much. It is the need of the hour and she has to be given treatment in Tamil soil.
    As somebody told nothing will happen to her security. All are pious and considerate to the old woman. The fear is utopian. Further Indian Government has already issued VISA for her for taking treatment. In this circumstances denial of entry on the grounds of 'Law and order' (if any) is condemnable. In this circumstances,I leave this to you to judge impartially.

    பதிலளிநீக்கு
  21. இது போன்ற பதிவுகள் உங்கள் நம்பதன்மயை அதிக படுத்துகின்றன... சில விஷயங்களில் உங்கள் பார்வை தவறு என நான் நினைத்தாலும், நீங்கள் உண்மை என்று நினைப்பதை சொல்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.... உங்களை பற்றி தவறாகத்தான் நினைத்து வந்தேன் என்பதை ஒப்பு கொள்கிறேன்... சாரி....

    " 89ல் அமைதிப்படையை கண்டித்த மாதிரி கலைஞர் இச்செயலுக்காக இந்தியாவை கண்டித்திருக்க வேண்டும் "

    அப்போது வேறு கூட்டணியில் இருந்ததால் கண்டித்தார்... அது தவறு என்பதால் கண்டிக்க வில்லை...

    " WE WANT TO SEE THE KALAIGNAR OF 60'S AND 70'S OR ATLEAST 80'ச "

    அபோது எப்படி இருந்தாரோ , அப்படித்தான் இப்போதும் இருக்கிறார்... எதிர் கூட்டணியில் இருக்கும் போது பாய்ச்சல்... நட்பு கூட்டணியின் போது பதுங்கல்... எனபதுதான் அவர் பாணி...

    பதிலளிநீக்கு
  22. //கோட்டைசாமி 6:03 PM, April 17, 2010

    இங்கு யாரும் முட்டாள்த்தனமாக உளறவேண்டாம். அறிவோடு சிந்தித்தால் ஒரு உண்மை விளங்கும். விஷயம் அந்த தாய் சிகிச்சைக்காக இங்கு வரக்கூடாது என்பதல்ல. அவர்கள் இங்கிருக்கும் வரை உண்மையில் அவர்களுக்கு இங்கு நிம்மதி கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டார்கள். அனாவசியமாக உணர்சிகளை தூண்டிவிட்டு கலவரம் செய்வார்கள். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்க்காகத்தான் காத்திருக்கிறது "ஜெ" மற்றும் "வைகோ" எனும் ஓநாய் கூட்டம். இந்த விசயத்தில் மத்திய அரசின் முடிவு மிகச் சரியானதுதான். இந்த முடிவை நான் முழுமையாக வரவேற்கிறேன்.///


    ஒரு வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளிப்பதால் எந்த ஒரு நிகழ்வும் நிகழ்ந்து விட போவதில்லை .! அவருக்கு சிகிச்சை அளிப்பதை வைத்து கலவரம் உண்டாக்குவார்கள் என்று சிந்திப்பதுதான் முட்டாள்தனமானது...! எதிரி நாடு என்று சொல்ல படுகின்ற பாகிஸ்தானில் இருந்துகூட இங்கே வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள் ..!

    பதிலளிநீக்கு
  23. நான் புத்தியை தீட்டி ட்வீடியது இது தான். அதை இங்கும் முன் வைக்கிறேன். - 80 வயது மூதாட்டி பிரச்னையில்லை. கூட உதவிக்கு வரும் 20 வயது பையனுக்கு என்ன agenda இருக்குமோ? அப்படி பயந்திருக்கலாம் இல்லையா?
    அது மட்டுமல்ல, உடனே, சீமான், திருமா என்று லைன் கட்டி தேசிய தலைவரின் அன்னையை பார்த்து ஆப்பிள் குடுத்து போட்டோ புடிச்சு பேப்பர்ல போட்டுக்குவாங்க..

    எது எப்படியோ..arguements aside , மனிதாபிமான முறையில் மனதுக்கு ஒப்பவில்லை தான்.

    பதிலளிநீக்கு
  24. யுவகிருஷ்ணா ஜி,
    உங்களுடைய கருத்துக்கள் நியாயமானது அதை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்காக இரு தரப்பில் இருந்து யோசிக்காமல் இப்படி எடுத்தோம் கவுத்தோம் என்று பேசுவது முறை என்று நினைக்கிறீர்களா ?

    பதிலளிநீக்கு
  25. லக்கி..நீங்கள் இப்படித்தான் உங்கள் கருத்தை சொல்வீர்கள் என்று நினைத்தேன். நன்றி..ஆனால் இந்த நிகழ்வு முகவின் பார்வைக்கு போய், அவர் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பார் எனப்தை நான் நம்பவில்லை. குடியுரிமை மற்றும் மத்திய உளவு அதிகாரிகள் மட்டத்தில் இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.அம்மாளின் வருகை முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தால் தலைவர் அதை அரசியலுக்கு உபயோகப்படுத்திக் கொண்டிருப்பார் என்பதும் சாத்தியமே

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா11:00 PM, ஏப்ரல் 17, 2010

    பிரபாகரன் தாயாரின் வருகை மாநில அரசுக்கு தெரியாமல் இருந்திருந்தால் மாநில காவல்துறையினர் ஏன் குவிக்கப்பட்டிருந்தனராம்??? மாநில அரசிடம் பார்வதி அம்மாள் ஏன் உதவி கோர வேண்டும் என சிலர் சொல்கிறீர்கள் ? அப்படி கேட்டால் அதனால் கலைஞருக்கு தான் தர்மசங்கடம் என்று எண்ணியிருக்கலாமே?? நளினி விவகாரத்தில் மாநில அரசு எப்படி நடந்து கொண்டது ...என்று பார்த்தாலே அது காங்கிரஸை துளியும் பகைக்க த்தயாரில்லை என்பது விளங்காதா???

    பதிலளிநீக்கு
  27. அப்போத்திலிருந்தே நாங்களும் இதத்தான சொல்லிக்கினு இருந்தோம்....... தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டிய கருணாநிதியும், முதலமைச்சர் பதவிய தங்கபாலுவும் பாத்துகறாங்கன்னு நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  28. கோட்டைசாமீ , அந்த அம்மாவுக்கு விசா எந்த அரசு கொடுத்தது? அதை குடுத்திட்டு இப்போ அவங்கள வரவிடாமல் தடுத்தால் திமுக வின் செல்வாக்கு குறையும் என்று காங்கிரஸ் திட்டமிட்டு இதை செய்தது என்று அறிவாளி தனமாய் யோசிக்கும் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கலாம் .

    பதிலளிநீக்கு
  29. முக்கிய பதிவாளர்கள் இவ்வாறு தேவையானவற்றை எழுதுவதில்லை என்று எண்ணியிருந்தேன் . ஆனால் உங்கள் கருத்து மிகச்சரியானது . பிரயோசனமானதும் கூட . நன்றிகள் .

    கோட்டைசாமி said... :- மத்திய அரசு விசா வழங்கும் போது என் போனது புத்தி ??

    திராவிடர்கள் ஆரியர் கையால் எவளவு தூரம் நசுக்கப்பட போகிறார்களோ??

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லா8:14 AM, ஏப்ரல் 18, 2010

    Please get out of India and immigrate to USA or Canada or UK or Indonesia or Tanzania soon. Tamilian's life is in danger in India

    பதிலளிநீக்கு
  31. "ஏற்றுக் கொள்ளப் போகிறேன்".
    இதை தவிர நம்மால் வேறென்ன செய்து விட முடியும் என்பதை தெரிந்து தானே நம்மை ஆளுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  32. கோட்டைசாமி

    சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து ஒரு சிறுமி இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியா வந்தபோது நல்லெண்ண அடிப்படையில் அதை ஆதரித்தது இந்தியா. அப்போது என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுபோனதா?

    பதிலளிநீக்கு
  33. //லக்கி!நீங்களா இது என்ற கேள்வி ஒரு புறம் தொக்கி நின்றாலும் மனிதாபிமானத்திற்கான உங்கள் குரலுக்கு வாழ்த்துக்கள்.//

    me too!

    பதிலளிநீக்கு
  34. இப்படி ரகசியமாக, திடீரென அழைத்து வரப்படும் அந்த அம்மையாரின் உயிருக்கே கூட ஊறு நேரும் ஆபத்துகள் உள்ளனவா? இல்லையா?//

    என்ன கொடுமை! அவருக்கு விசா வழங்கியாகிவிட்டது அல்லவா? அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியா வர உரிமை இருக்கிறது அல்லவா? பிறகென்ன ரகசியம்? அவர் வருவதை இந்தியா விரும்பவில்லை என்றால் விசா கொடுக்க மறுத்திருக்க வேண்டும்.ஒரு மூதாட்டியை இப்படி வதைப்பது எந்த வகை அறமோ?

    பதிலளிநீக்கு
  35. இங்கு மனித​நேயம் கி​டையாது ஒரு மயிரும் கி​டையாது... நான் சந்​தோசப்படுவது

    அந்த அப்பாவி வயதான ​நோய்​கொண்ட தாயா​ரை, சி​றை ​கோர்ட் ​கேஸ் என்று அ​ழையவிடாமல் திருப்பி அனுப்பினர்க​ளே அதுவ​ரைக்கும் மனம் மற்றற்ற மகிழ்சி அ​டைந்தது...

    தாயா! தமிழ்நாட்டுக்கு வராதீர்கள்.. இங்கு ஓநாய்கள் ​பெருகி விட்டது... எ​தையும் தட்டிக்​கேட்டவும் எல்லாவற்​றையும் த​லைவிதி என்று ​பொறுத்துக்​கொள்ளும் முது​கேலும்பில்லா மண்புழு கூட்டமாக வாழ்ந்து ​செத்துமடிந்து​கொண்டிருக்கின்​றோம்...

    பதிலளிநீக்கு
  36. /////இந்தியாவுக்கு தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை./////////


    நம்மலத்தான் இவணுக மனித இனமாகவே நினைக்கவில்லையே . அப்றம் எங்கிருந்து மனிதன் மீதும் இரக்கம் வரப்போகிறது .

    பதிலளிநீக்கு
  37. வழக்கம்போல கலைஞரை குற்றம் சாட்ட மட்டுமே இச்சம்பவத்தை கண்டிப்பவர்களின் கண்டிப்புக்கும், என்னுடைய கண்டிப்புக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது.
    ..........................

    உங்கள் கேள்விகள் அத்தனையும் நியாயமானவையே. வைகோ, நெடுமாறன் வகையறாக்கள் ஆரம்பத்தில் இருந்தே செய்து வரும் சதி மற்றும் சாவு அரசியலின் ஒரு அங்கமும் இந்நிகழ்வு.

    ஆயினும் பார்வதி அம்மாள் வருவதைப் பற்றி மாநில அரசுக்கு முன்கூட்டியே நிச்சயம் தெரிந்திருக்கும். கலைஞர் தகுந்த ஏற்பாடுகளை செய்துத் தந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

    இல்லையேல் இது முழுக்க முழுக்க குடியுரிமை அதிகாரிகளின் முடிவு என்றால், அது கலைஞரால் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.
    ...........................

    கோபமாய் வந்த மோசமான வார்த்தைகளுக்கு முன் உங்கள் உள் மனம் என்ன சொல்கிறது என்பதை பார்த்த போது அத்தனை கோபமும் வடிந்து விட்டது.

    எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஐயாவுக்கு வேறு யாரும் தேவையில்லை? அவர் குடும்பத்திலே (?) இருக்கிறது??????

    பதிலளிநீக்கு
  38. தமிழனுக்கு மனிதம் இல்லாமலே போய் விட்டது...

    அந்த 80 அம்மாவை மீண்டும் சிங்கள சித்ரவதை சிறைக்குள் அடைக்கவே ஹிந்திய அரசு விரும்புவது போல் தெரிகிறது...

    இனிமேல் ஹிந்தியா பொந்தியா என எவனாவது/எவளாவது பேசினால் செருப்பால் அடிப்போம்... கலைஞரும் ஹிந்தியர் என கணக்கில் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  39. பெயரில்லா9:36 PM, ஏப்ரல் 18, 2010

    //ஏற்றுக் கொள்ளப் போகிறேன். இதென்ன கேள்வி அதிஷா?//

    //சட்டம், இறையாண்மை, மசுரு, மட்டு என்பதற்கெல்லாம் மேலானது மனிதம். இந்தியா மனிதமற்ற நாடு//

    Why this two different views from you.

    பதிலளிநீக்கு
  40. Each country has the right to defend, whoever not having proper document to enter a foreign land, i don't find any fault in india's stance - Ali

    பதிலளிநீக்கு
  41. பெயரில்லா6:35 AM, ஏப்ரல் 19, 2010

    thamizhanukku pala prachchinai. pala graama-nagarangalil oru naalaikku 6 mani neram current illai. vilaivaasi uyarvu; oozhal; pokkaththa arasaangam; sattam-ozhungu seerketta nilamai; thanneer prachinai; idhu pola pala irukkum pozhudu idhu pondra vishayangalil manadhalavil edhirthu vittu velaiyai paarka poi viduvar endrey ninaikkiren.

    ungalaip pondra dmk anudhaabigal kooda enna seigireergal? election endru vandhu vittaal admk-virkaa vote poda pogireergal? illaiyey. idhu kalaignarukku therindhirukkiradhu. adhanaal avaridam edhirpaarpadhu veen. avar akkaraiyellam eppadi stalin-azhagiri iruvarukkum soththai (tamilnadu aatchi adhigaaram endru padikkavum) eppadi pirithu koduppadhu enbadhu dhaan

    பதிலளிநீக்கு
  42. செயல் தவறானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், அதற்கு காரணம் மத்திய அரசுதான் என்று சொல்வது இடிக்கிறதே. அவருக்கு விசா கொடுத்தது இலங்கையா இருக்குமோ? அதை கவனிக்காமல் அந்த அம்மா இந்தியா வந்துட்டாங்களா?

    வைகோவும் நெடுமாறனும் அரசியல் லாபம் பெற்றுவிடுவார்கள் என்று பயந்து ஒருவேளை சோனியாகாந்தி நேரடியாக தலையிட்டு திருப்பி அனுப்பி இருப்பாரோ?

    விரைவில் உண்மை வெளிவரும்.. அப்போ தெரியும் பின்னணி யாரென்று..

    பதிலளிநீக்கு
  43. சஞ்சய்!

    இதுபோன்ற விஷயங்களை நம் அரசியல் சார்பினை கைவிட்டு விட்டு பார்ப்பதுதான் நியாயம்.

    பதிலளிநீக்கு
  44. லக்கி , நிச்சயம் நான் அந்த அம்மாவை திருப்பி அனுப்பியதை ஞாயயப் படுத்தவில்லை. ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற உங்க பார்வை???? இது கலைஞருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் வழக்கம் போல் ஈழத்தமிழர்களின் முதல் வரிசை எதிரிகளான( வாயால் கெடுப்பவர்கள்)வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் அநாகரிக அரசியல் லாபக் கணக்கு தான் இந்த சம்பவத்திற்கு பிரதானமாக இருக்க முடியும். அவர்கள் இந்த அம்மாவுக்கு சிகிச்சைக்கு உதவி இருக்க மாட்டார்கள். அதில் அரசியல் செய்திருப்பார்கள். செம்மொழி மாநாடு நடைபெறைப் போகும் இந்த தருணத்தில் நிச்சயம் கலைஞருக்கு இந்த சூழலை வைத்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் கலைஞருக்கு தெரிந்தே இந்த திருப்பி அனுப்பும் சம்பவம் நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இதில் இந்தியாவை போட்டுத் தாக்குவது தான் சரியானதாக இல்லை.

    பதிலளிநீக்கு
  45. எல்லா திமுக கட்சிக்காரகளின் இன்றைய எண்ணம் இதுவாகத்தானிருக்கும். இதை புரிந்துக்கொள்ளும் நிலையில் தலைவர் இல்லை என்று புரிந்து விட்டது. அடிப்படை மனிதாபிமானம் கூட அழிந்து விட்டது. எதனை முறைத்தான் நாம் தலைகுனிவது தெரியவில்லை. ச்சே!

    பதிலளிநீக்கு
  46. திரு.கலைஞர்கு திரு.பழநெடுமாறனும் திரு வை.கோவும் பிடிக்காது, அப்படிஇறுக எதுக்கு அவர் போய் கூப்டிறார். திரு வைவால் ஒன்னும் பண்ண முடியாது,வெறும்உணர்ச்சி
    மேலிட பேட்டிக் கொடுத்ததையும், அழுகை தவீர. யைக்கோ பவம் அந்த 80 வயது கிழவி.



    இந்தியாவுக்கு (திரு.கலைஞர்கு) தமிழன் மீதும் மரியாதையில்லை. மனிதன் மீதும் இரக்கமில்லை.

    பதிலளிநீக்கு
  47. கிழவி வருவதால் அதைவைத்து தமிழக மக்கள் மனம் மாறிவிடுவார்கள் என்று பயந்து அலறுறாங்களே. ஒரு விசயத்தை நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது. வரவே மாட்டார் என்று நீங்கள் நம்பிக்கொன்டிருக்கும் அவர் வந்தால் என்ன ஆவார்கள்?

    பதிலளிநீக்கு
  48. //கலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.//

    இன்னும் உருவலையா ? போன பாராளுமன்ற தேர்தல் முடிவின் போதே உருவிட்டதாகத்தானே பேசிக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  49. லக்கி... படித்ததில் பிடித்தது என இணைப்பு கொடுக்க ஒரு அருமையான பதிவு வந்து இருக்கிறது... மறக்காமல் பார்த்து இணைப்பு கொடுங்கள்..

    அல்லது அதே பாணியில், நீங்கள் ஒன்று பதிவிடுங்கள்.. " படித்ததில் பிடித்தது " என

    " அங்கு " இணைப்பு கொடுக்கப்படும்...

    ச்சே ..ச்சே... இலவச ஆலோசனைதான்.. காசெல்லாம் வேண்டாம்

    பதிலளிநீக்கு
  50. சஞ்சய்!

    நீங்கள் மத்திய அரசை காக்க விரும்புகிறீர்கள். நான் கலைஞரையோ, மாநிலை அரசையோ இந்த விவகாரத்திற்காக காக்க விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  51. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன், முல்லைக்கொடி பரவி வளர தேர் கொடுத்த பாரி மன்னன், பார்ப்பனர்களுக்கும் உதவி செய்த பெரியார் ஆகியோர் பிறந்த தமிழக மண் அவரை துன்பப்படுத்தி துரத்தியடித்துள்ளது.

    பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு 2003ஆம் ஆண்டு முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா விடுத்த அரசாணைதான் காரணம் எனக் கூறுவது பொருத்தமற்றது.

    அன்றைய அரசியல் சூழலில் எடுத்த முடிவை, இப்போதைக்கு காரணமாக கூறுவது நியாயமல்ல. பார்வதி அம்மாள் வருகை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. முதல்வருக்கு தகவல் கொடுக்காமல், தமிழக காவல்துறை எப்படி விமான நிலையம் சென்றது என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  52. லக்கி

    அந்த அம்மையாரை “தல” மறுபடி சிகிச்சைக்காக இங்கு அழைத்து வந்துவிட்டால், அவருக்கு இன்னொரு பாராட்டு விழா நெடுமாறன், வீரமணி, திருமா தலைமையில இருக்கு...

    பதிலளிநீக்கு
  53. பெயரில்லா11:03 AM, ஏப்ரல் 21, 2010

    " சஞ்சய்!

    இதுபோன்ற விஷயங்களை நம் அரசியல் சார்பினை கைவிட்டு விட்டு பார்ப்பதுதான் நியாயம். "

    அது சரி !!
    கலைஞர் "அம்மாள் வந்ததே தெரியாது" என்றவுடனேயே இதில் அரசியல் நுழைந்துவிட்டது தெரியாதா?.
    கலைஞராலேயே ஒன்றும் செய்ய முடியாத நேரத்தில் வைகோவோ நெடுமாறனோ என்ன செய்துவிட முடியும்?
    திமுக மற்றும் அதன் தலைமைகளின் இயலாமையை மக்களே புரிந்துகொள்ளட்டும் என எதிர்/other கட்சிகள் நினைத்துவிட்டன போலும்.
    அம்மாளும் கொல்கத்தா, புனே, இலக்னோ, ஹைதராபாத் போன்ற ( தமிழர் இன்னும் அடிவாங்காத ) கண்காணா நகரங்களுக்கு சிகிச்சைக்கு போயிருக்கலாம்.அல்லது மத்திய அரசால் அனுப்பப்பட்டிருக்கலாம் அல்லது கலைஞரால் கோரப்பட்டிருக்கலாம். ஒரே லாம் லாம் லாம் தான்.

    shivatma.

    பதிலளிநீக்கு
  54. பெயரில்லா6:09 PM, ஏப்ரல் 21, 2010

    Rather than brooding over what has happened the solution for Parvathi ammal to get into India is to change her Reli...

    Regards
    S Baskar

    பதிலளிநீக்கு
  55. இதில் மத்திய அரசை காக்க வேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை..

    வைகோ ஜூவி பேட்டி
    //''பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட தற்கு தமிழக அரசோ தமிழக போலீஸோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை என டாக்டர் ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே...'

    ''அப்படியானால், மத்திய அரசுதான் திருப்பி அனுப்பச் சொன்னதா? பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசுதானே விசா கொடுத்தது? ஆப்பிரிக்க அரசு கொடுக்கவில்லையே... அப்படி விசா கொடுத்தவர்களே எப்படி விரட்டி அடிப்பார்கள்? அந்த அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதில் கலைஞருக்கு ஆட்சேபனை இல்லையென்றால், உடனடியாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமே பேசி அதற்கு வழி செய்திருக்கலாமே... இந்த விஷயத்தில் ராமதாஸ் என்ன... மத்திய அரசேகூட, 'பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம்' என அறிவித்தாலும், ஆச்சர்யமில்லை! இத்தகைய அறிவிப்பை வெளியிடவைக்கும் முயற்சியில் இந்நேரம் கலைஞர் ஈடுபட்டிருப்பார்.'//

    பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டுகிறார் எனினும் ......

    பதிலளிநீக்கு
  56. இதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம்....
    உங்கள் பழைய பதிவு பார்த்தவுடன் எனக்கு தோன்றியது...ஒரு வேளை நீங்க சொன்ன சொல் பலிச்சிட்ட மாதிரி தெரியுதே..

    "கலைஞர் இன்னமும் சோனியாவின் முந்தானையை பிடித்தே ஆட்சியை தொடர்வாரேயானால் திமுகவின் வேட்டி ஒட்டுமொத்தமாக உருவப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை."

    பதிலளிநீக்கு