“பெண்கள் திரையரங்குகளுக்கு வருவதேயில்லை” - பத்து வருடங்களாக தங்கள் படங்களின் தொடர்ச்சியான தோல்விகளுக்கு சினிமாக்காரர்கள் இதைத்தான் காரணமாக சொல்லி வருகிறார்கள். ‘ரெட்டச்சுழி’ மாதிரி படமெடுத்தா அவங்களா வந்துட்டு போறாங்க. ஷங்கரின் தயாரிப்பில் தரமான படங்கள்தான் வெளிவரும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படமிது.
அனேகமாக ‘பசங்க’ பார்த்துவிட்டு இயக்குனர் ஸ்கிரிப்ட் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். படம் முழுக்க ‘பசங்க’ ராஜ்ஜியம். குறிப்பாக பாலச்சந்தர், பாரதிராஜா என்று இரண்டு ‘பசங்க’ போட்டு தாக்கியிருக்கிறார்கள்.
சினிமாவில் அரசியல் பேசினால் சென்ஸார் பிரச்சினை, அடியாட்கள் பிரச்சினை. குட்டிப் பசங்களை வைத்து அரசியல் பேசுகிறார் தாமிரா. ஒரு குட்டிப் பாப்பாவுக்கு வசனகர்த்தா வைத்திருக்கும் பெயர் குஷ்பூ. புகுந்து விளையாடுகிறார்.
“குஷ்பூ நீ பேசாதே!”
“குஷ்பூ செருப்பு போட்டுக்கிட்டு கோயிலுக்கு வராதே!”
“குஷ்பூ நீ எதையாவது பேசினாலே பிரச்சினைதான்!”
இந்தியாவின் இருபெரும் தேசிய இயக்கங்கள் குறித்த தன்னுடைய நையாண்டி விமர்சன பூசணிக்காயை வசன சோற்றுக்குள் மறைக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ்காரர்களின் வறட்டுக் கவுரவத்தையும், கம்யூனிஸ்டுகளின் வெட்டி வீம்பையும் இரண்டு தாத்தா கதாபாத்திரங்கள் வாயிலாக வாழைப்பழத்துக்குள் கசப்பு மாத்திரை வைத்து பார்வையாளனுக்கு தருகிறார்.
“அவர் கட்சி ஆபிஸுக்கு போயே பத்து வருஷம் ஆவுது. அவருகிட்டே வந்து ராட்டையை காமிச்சிக்கிட்டு”
‘தோழர்’ என்ற பதத்தை பயன்படுத்தியிருக்கும் பாங்கு தோழர்களுக்கே கிச்சுகிச்சு மூட்டும்.
படம் தரும் ஸ்பெஷல் போனஸ், பாரதிராஜாவின் சிறுவயது ப்ளாஷ்பேக். அந்தக் காலத்து பாரதிராஜாவின் படக்காட்சிகள் மாதிரியே உல்டா அடித்து கொடுத்திருப்பது நல்ல நையாண்டி. இந்த விஷயம் புரியாதவர்கள் அதை அமெச்சூர்த்தனமாக படமாக்கப்பட்டதாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. தேவையில்லாத ஸ்லோமோஷன், ரியாக்சனே இல்லாத ரொமான்ஸ் என்று ‘மண்வாசனை’யை கிளறிவிடுகிறார் தாமிரா.
பாலச்சந்தரின் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி எடுபடாததற்கு அவரது பெரிய மீசை ஒரு காரணமாக இருக்கலாம். ‘காதலா காதலா’ எம்.எஸ்.வி.யை பாடிலேங்குவேஜில் நினைவுபடுத்துகிறார். ஆனால் பழம்பெருமை பேசும் காங்கிரஸ் பெருசு என்று சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். எதிர்பாராவிதமாக பாரதிராஜா ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அச்சு அசல் தோழர். பல காட்சிகளில் ‘முதல் மரியாதை’ சிவாஜியை மிமிக்ரி செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.
ஹீரோ, ஹீரோயின் என்று பெயருக்கு ஒரு ஜோடி. அங்காடித் தெரு அஞ்சலி அழகுப் பொம்மையாக மட்டுமே வருகிறார். ‘உசிராப் புடிச்சிருக்கு தாத்தா’ என்று சொல்லும் காட்சியில் மட்டும் நடிப்பு லேசாக மிளிர்கிறது. ஆனால் அடுத்த நொடியே அந்த வசனத்துக்கு பாரதிராஜா காட்டும் நடிப்பில் அஞ்சலி காணாமல் போகிறார்.
இசையும், ஒளிப்பதிவும் இயக்குனருக்கு நல்ல பக்கபலம். பாடல்கள் ரொம்ப சுமாராக இருந்தாலும் கார்த்திக்ராஜாவின் பின்னணி இசையில் இளையராஜா வாசனை. செழியனின் கேமிரா ஒவ்வொரு ஃபிரேமையும் கவிதையாக்கி தருகிறது.
ரொம்ப கறாராக செலவழித்திருப்பார்கள் போலிருக்கிறது. இப்படத்துக்கு ஆன செலவில் ஒரு மெகாசீரியலின் ஏழு எபிசோடை கூட இன்றைய விலைவாசியில் எடுக்க முடியாது. இதனாலேயே நாடகத்தன்மை படம் முழுக்க ஊடாடிக் கொண்டிருப்பது படத்துக்கு பெரிய மைனஸ்.
நிச்சயமாக தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் படம் இதுவல்ல. ஆடியன்ஸூக்கு அதிர்ச்சிக் கொடுத்து அழவைக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இப்படத்தை தெலுங்கில் டப்படித்தால் கூட டப்பாவுக்குள் புகுந்துவிடும். ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரண்டரை மணிநேர க்ளீன் எண்டெர்டெயினர். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கும் குழந்தைகளை அழைத்துக்கொண்ஊ குடும்பத்தோடு எந்த நெருடலும் இல்லாமல் ரசித்து சிரித்து மகிழலாம். வறண்டு போயிருக்கும் தமிழ் சினிமாவுக்கு இப்படம் கோடைமழை.
ரெட்டச்சுழி - ரகளை.
மேலே அஞ்சலியின் படம் மாறிவிட்டது என்பதை நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டி, சரியான இந்த ‘அஞ்சலி' படத்தை அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி!
அஞ்சலி போட்டோ கூடவா இல்ல பாஸ் ? :(
பதிலளிநீக்குஅஞ்சலின்னு போட்டு கூகிளில் தேடிய்போது கிடைத்த படத்தை பதிவிட்டிருக்கிறேன் கவிஞர் ஆயில்யன் அவர்களே. இந்தப் படமும் நல்லாதானே இருக்கு? :-)
பதிலளிநீக்குஅந்த அஞ்சலிக்கும் இந்த அஞ்சலிக்கும் வித்தியாசம் தெரியாதவங்க ஏமாந்திடப் போறாங்களே பாஸ் :(
பதிலளிநீக்குநல்ல ரசனை கேபிள் ஐயா படம் சரியில்லை என்று எழுதி இருக்கிறார்
பதிலளிநீக்குஅது ஏங்க செலவழிச்சிருக்கிறீங்க???
பதிலளிநீக்கு“செலவளித்தல்” இல்லீங்களா??
நல்லா இருக்கு விமர்சனமும் அந்த அஞ்சலி படமும் :))
வாவ்! சூப்பர், கலக்கலான, அருமையான, நேர்மையான நச்சுன்னு ஒரு விமர்சனம். இது போல நீங்க ஒருத்தர் தான் எழுத முடியும் தோழர்.
பதிலளிநீக்குநெட்ல ரிலீஸானவுடனே படத்தோட தயாரிப்பாளரோட பார்த்துட்டு நானும் விமர்சனம் எழுதிடுறேன் :)
வாட் ஏ கோ இன்சிடன்ஸ் தோழர்
பதிலளிநீக்குநான் அண்ணா தியேட்டரில் இதற்கு முன்னால் ஓடிய பாடகசாலை படத்தின் ஹீரோவோடு படம் பார்த்தேன்..
நீங்கள்?
தோழர்
பதிலளிநீக்குMmmmm
இந்த படத்துக்கு வினவுல விமரிசனம் எழுதணுமா, கூடாதா?
பதிலளிநீக்கு//இந்த படத்துக்கு வினவுல விமரிசனம் எழுதணுமா, கூடாதா?//
பதிலளிநீக்குஎழுதலாம். ஆனா ஏற்கனவே எழுதவனுங்க வீட்டுக்கு ஆளனுப்பிச்சி விமர்சனத்துக்கு விளக்கம் மட்டும் கேட்கப்படாது. பல பயலுக வீட்டுக்கு தெரியாமதான் படம் பார்க்குறானுங்க :-)
BTW, அங்காடித்தெரு பத்திரிகை விளம்பரத்தில் வினவு இணையத்தளத்தின் விமர்சனத்தை உபயோகித்திருந்தார்களே? பார்த்தீர்களா?
//எழுதலாம். ஆனா ஏற்கனவே எழுதவனுங்க வீட்டுக்கு ஆளனுப்பிச்சி விமர்சனத்துக்கு விளக்கம் மட்டும் கேட்கப்படாது. பல பயலுக வீட்டுக்கு தெரியாமதான் படம் பார்க்குறானுங்க :-)//
பதிலளிநீக்குலக்கி அண்ணே, குடும்பத்தோட படம் பாக்கலாம்னு சொல்லிட்டு விமரிசனத்துல மட்டும் குடும்பம் இல்லையின்னா எப்படி? :-)
//BTW, அங்காடித்தெரு பத்திரிகை விளம்பரத்தில் வினவு இணையத்தளத்தின் விமர்சனத்தை உபயோகித்திருந்தார்களே? பார்த்தீர்களா?//
விளம்பரத்துல வந்த வாசகம் வினவுல வந்த வரிகள் இல்லை. ஏதோ அவர்களாகவே எழுதிக்கொண்டது அல்லது மற்றவர்களின் வரிகளை மாற்றிப் போட்டிருக்கலாம். பரவாயில்லை. ஆனா வினவு விமரசினத்தை லக்கி கூட படிக்க வில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
//லக்கி அண்ணே, குடும்பத்தோட படம் பாக்கலாம்னு சொல்லிட்டு விமரிசனத்துல மட்டும் குடும்பம் இல்லையின்னா எப்படி? :-)//
பதிலளிநீக்குமுதல்லே குடும்பத்தோட பார்க்கக்கூடிய படமான்னு ‘டெஸ்ட்' பண்ணுறது எப்படி? :-)
//விளம்பரத்துல வந்த வாசகம் வினவுல வந்த வரிகள் இல்லை. ஏதோ அவர்களாகவே எழுதிக்கொண்டது அல்லது மற்றவர்களின் வரிகளை மாற்றிப் போட்டிருக்கலாம். பரவாயில்லை. ஆனா வினவு விமரசினத்தை லக்கி கூட படிக்க வில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.//
உங்களது விமர்சனத்தை நிச்சயமாக வாசித்தேன். ஆனால் விளம்பரத்தில் வந்த வாசகம் உங்கள் விமர்சனத்தில் இல்லை என்பது சட்டென்று பொறி தட்டவில்லை :-(
'நன்றி : வினவு இணையத்தளம்' என்ற வார்த்தையை பார்த்ததுமே அதையெல்லாம் நினைக்கவும் தோன்றவில்லை.
சரி போகட்டும், அடுத்த தபா உங்க கோ இன்சிடன்ஸ் கூட்டணியில் வினவையும் படம் பாக்க சேர்ப்பீங்களா?
பதிலளிநீக்கு//சரி போகட்டும், அடுத்த தபா உங்க கோ இன்சிடன்ஸ் கூட்டணியில் வினவையும் படம் பாக்க சேர்ப்பீங்களா?//
பதிலளிநீக்குதங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் :-)
What a taste yuva? padam sari illaenna goodnu solrathu.. hit moviena mokkainu solrathu...
பதிலளிநீக்குநேர்மையான விமர்சனம் யுவா...ஆனாலும் கற்றது தமிழ் ,அங்காடித்தெரு மூலம் ஓரளவு பிரபலமான அஞ்சலி போட்டோவை நீங்கள் தேடிய விதம் அநியாயத்துக்கு அக்குறும்பு....!!!
பதிலளிநீக்குபார்க்கணும்...
பதிலளிநீக்குதோழர் குமார் இப்பதான் தோழர்ன்ற வார்த்தை உங்களுக்கு கிண்டலாத் தெரியுதா ! எனக்கு ஆதிகாலத்திலிருந்தே அப்படித்தான், 3 காரணங்கள்
பதிலளிநீக்கு1. எங்கூட்டாளி 10ம் கிளாஸ் ஊத்திக்கிட்டவுடனே ஊருக்கு நல்லதுபண்ணியே ஆகணூம்ன்னு முடிவு பண்ணி கட்சியில் சேர்ந்து தோழர்ன்னு என்னை கூப்பிட ஆரம்பிச்சவுடனே,,(ஊ.ந.ப-concent நல்லாத்தான் இருந்தது, படிக்கிற வயசில படிக்கிற கடமையை செய்யமாட்டாராம், ஆனால் சமூகம் மட்டும் தன் கடமையைச் செய்யனும்மாம். படிக்காத காரணம் அவுங்க அப்பாரு, குடும்ப சூழ்நிலையென்று உங்க னோனி தோழர்கள் ஆரம்பிச்சாலும் நானும் ரெடி
2.தம் மனைவி மக்களை தோடு மூக்குத்தி, கடவுளிடமுருந்து எல்லாம் தள்ளி வச்சிருந்த ஒரு ம.க.இ.க தோழர் தன் வாழ்வியலுக்கு நடத்தியது ஒரு பெரிய Fancy store !
3. Bonus கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும், மதுரையை சுற்றி 20 வருடங்ககளாக தொடர்ந்து இயங்கிகொண்டேயிருந்த 20 பஞ்சாலைகளை (ஆலைத்தொழிலாளர்கள் அரசாங்க ஊழியர்கள் மாதிரி திரிந்த காலம்) 1994 வருடம் bonus பிரச்சனையில் மூடச் செய்து 10000 குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்தது தோழர்களின் சாதனைதான்
ஏற்கனவே எழுதவனுங்க வீட்டுக்கு ஆளனுப்பிச்சி விமர்சனத்துக்கு விளக்கம் மட்டும் கேட்கபடாது @@@@
இப்படி வாருவதுதான் உங்களுடைய ++++++ அதுக்காகதான் தொடர்ந்து படிச்சு தொலைய வேண்டியதிருக்கு !! தோழர் !!
இதையும் மூகமூடி பேரவையிலிருந்துதான் எழுதினோம்ன்னு சொன்னால் நம்பவா போறீங்க
முகமூடி பேரவை for ever
க.தோ.மு.தோ.நாகரீத்தின் தொட்டில்
மொண்டிக்குண்டு கிளை
தாங்க முடியல... உங்க அஞ்சலி கொடுமை....
பதிலளிநீக்கு:-)) போன கமெண்டுல ஸ்மைலி மிஸ்ஸாயிடுச்சு பிரதர்.!
பதிலளிநீக்குபொட்டி வந்துருச்சேய்ய்ய்ய்..!!
பதிலளிநீக்குஅடுத்த வாரம் வரை பொறுமை காக்கவும். தமிழ் சினிமாவுக்கு ஆக்சிஜன் கிடைக்கக்கூடும் :))
பதிலளிநீக்கு