12 ஏப்ரல், 2010

கீற்று இணையத்தளத்தின் பாசிஸம்!

முன்பு நான் மதிப்பு வைத்திருந்த ஆளுமைகள் மீதும், அமைப்புகள் மீதுமான பிம்பம் எனக்கு உடைந்துகொண்டே வருகிறது. தமிழ், தேசியம், இத்யாதிகள் மீதான பிரேமை இதுபோன்ற ஆளுமைகள் மற்றும் அமைப்புகளின் பால் என்னை ஈர்த்தது. ஆனால் நெருங்கிப் பார்த்தும், தொடர்ச்சியான செயல்பாடுகளை அவதானித்துமே நான் மேலே குறிப்பிட்ட பிம்ப உடைப்பு ஏற்படத் தொடங்கியது.

கடைசியாக ‘கீற்று' இணையத்தளம்.

இணையத்தளத்தை நான் பாவிக்கத் தொடங்கிய ஆரம்பகாலக் கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இத்தளத்தை நம்பினேன். இணையத் தளங்களில் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்திக்கு எதிரானதாகவும், மாற்று அரசியலையும், மாற்று சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் கீற்று விளங்கியது அந்தக் காலம்.

ஆனால் ஒரு கட்டத்தில் மாற்று சிந்தனையாளர்களுக்கு இடையே கூட பிரிவினை ஏற்படுத்தி குளிர்காய கீற்று முயல்கிறதோ என்றுகூட எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக ஆதவன் தீட்சண்யா தொடர்பான பிரச்சினையை சொல்லலாம். வேண்டுமென்றே தீட்சண்யாவின் ஆளுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கீற்று செயல்படுகிறது என்றே அப்போது எண்ணினேன். அதன் தொடர்ச்சியாக ஆதவன் பங்கேற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மீதான காழ்ப்பும் கூட கீற்றுக்கு ஏற்பட்டிருப்பது இப்போதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

கடந்த வாரம் எனக்கு தோழர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் கீழே :

எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கான அறிவிப்பினை கீற்றுத்தளமும் இன்று வெளியிட்டிருக்கிறது. எப்படி என்று கீழே பாருங்கள்! சுட்டி : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 (அனேகமாக இப்பதிவினை கண்டபிறகு கீற்று நிர்வாகம் அந்தப் பக்கத்தை அழித்துவிடலாம். ஆனாலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறது)

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் - பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்

கீற்று செய்திருக்கும் ஆபாசமான / அருவருப்பான வேலையை சிகப்பு எழுத்துகளில் நீங்கள் காணமுடியும். இதுவரை வெகுசன சாதீய ஊடகங்கள் எத்தகையை திருகுவேலையை செய்துவருகிறது என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தோமே அதே வேலையைதான் ‘கீற்று' போன்ற மாற்று ஊடகங்களும் செய்துவருகின்றன என்ற கொடுமையை எங்கே போய் சொல்வது? கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இன்னொரு பெரிய கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததாம்.

பால் சக்கரியா மீதான மார்க்சிஸ்டுகளின் தாக்குதலை கீற்று கண்டிப்பதாக இருந்தால் அதை வேறு வழியில் கண்டிக்கலாம். கட்டுரை எழுதலாம். சம்பந்தமேயில்லாமல் ஒரு நிகழ்வின் அழைப்பை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

மேற்கண்ட நிகழ்வில் மார்க்சிஸ்ட் தோழர்களான ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிலையில் கீற்று செய்திருக்கும் திருட்டுச் செயல் வெட்கக்கேடானது. கட்சிக்கும், அத்தோழர்களுக்கும் இடையேயான உறவை கெடுப்பது. கீற்று மீதான நம்பகத்தன்மையை என்னைப் போன்றோர் முற்றிலுமாக இழந்துவிடக் கூடிய அருவருப்பான செயல் இது. அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலும் கூட.

29 கருத்துகள்:

  1. பெயரில்லா7:02 PM, ஏப்ரல் 12, 2010

    அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கண்டிக்க வேண்டியது, உண்மையில் பால் சக்காரியா மீது நடந்த தாக்குதலைதான். அப்போது அமைதி காத்தவர்கள், இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத புகாருக்காக ஏன் கூட்டம் நடத்துகிறார்கள்? பால சக்காரியா மீது நடந்த தாக்குதல், வன்முறை. உண்மையில் அதுதான் கருத்து சுதந்திரத்தின் மீதான அச்சுறுத்தும் தாக்குதல். இந்து மக்கள் கட்சியாவது தனது எதிர்ப்பை (அது முட்டாள்தனமானது என்றாலும் கூட) அறவழியில் பதிவு செய்தது. அதற்கு கூட்டம் நடத்துபவர்கள் கருத்து சுதந்திரத்தின் மீது அசலான தாக்குதல் நடந்த போது எங்கே போயிருந்தார்கள்? சி.பி.எம்மில் இருக்கும் யாராவது பால் சக்காரியாவிற்காக கட்சியில் கண்டனக்குரல் எழுப்பியிருப்பார்களா? உண்மையில் கீற்று இந்த கூட்டத்தில் உள்ள் உள்முரண்களை சூசகமாக சுட்டிக்காட்டியிருக்கிறது. கூட்ட ஏற்பாட்டாளர்கள் பதில் சொல்வார்களா?

    பதிலளிநீக்கு
  2. அந்த இணையத்தையும் இனி நம்ப முடியாதா.. கிழிஞ்சிது ..

    பதிலளிநீக்கு
  3. இந்த விவாகரம் எனக்கு சரியாக புரியவில்லை....

    அனால், நீங்க வேறு சில ஆளுமைகள் மீது வைத்து இருக்கும் தேவை அற்ற மதிப்பு , உங்கள் உழைப்பையும் , திறமையையும் வீணடித்து வருகிறது.... இந்த மாயை விரைவில் விலக , எல்லாம் வல்ல இயற்கையை மனமுருகவேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  4. Thanks. They corrected it:
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268

    பதிலளிநீக்கு
  5. நிச்சயமாக கீற்றுவின் இந்த செயல் கண்டிக்கப்படவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  6. Hello,

    Something problem in the Link to this post it seems.

    I didnt added any of my links here. But why it shows lot of my links below your post and that too in a irrelevant post?

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9:52 AM, ஏப்ரல் 13, 2010

    நண்பர் லக்கி நீங்கள் திமுகவின் தீவீரமான விசுவாசி, கலைஞரின் விசிறி உங்களுக்கு கீற்று மீதும் தமிழ் தேசிய வாதிகள் மீதும் வெறுப்பு ஏற்படுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அது இங்கே பிரச்சனையும் இல்லை. நீங்கள் வெறுப்படைவதால் கீற்றுவுக்கு எந்த இழப்பும் இல்லை. ( இம்மாதிரி மனப் போக்கை கற்றுக் கொண்டதே உங்கள் கலைஞரிடம் இருந்துதான்) சரி கிடக்கட்டும். மெயில் யாரோ இடையில் சில வார்த்தைகளை சொறுகி விட்டார்கள். அதை உண்மையான மெயில் என்று நம்பி கீற்றுவும் போட்டு விட்டது. ஆனால் இடையில் சில வார்த்தைகளைச் சேர்த்த அந்த ஆசாமி.... மிகச் சிறந்த அரசியல் கலகம் ஒன்றை அந்த மெயிலில் நிகழ்த்தியிருக்கிறார்கள். நீங்கள் ஏன் அதைப் பேச மறுக்கிறீர்கள். நீங்கள் மறுப்பீர்கள் என்று தெரிந்து தானே அவரும் இப்படிச் செய்திருக்கிறார். சி.பி.எம் தோழர்களின் பொய்யான முகமூடியை தோலுரிக்கும் அட்டகாசாமான கலகம் அது . லக்கி மற்றபடி கீற்று அதை போட்டிருக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  8. அனானி 1!

    உங்களுடைய கோபம் மிக நியாயமானது என்பதை உணர்கிறேன். அதற்காக கீற்றுவின் இந்த கோயபல்ஸ்தனத்தை நாம் நியாயப்படுத்தி விடமுடியாது. குறைந்தபட்சம் கீற்றுவுக்கும், சன் டிவிக்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற புரிதலாவது நமக்கு இருக்க வேண்டுமல்லவா?


    அ.பா!

    ஏகப்பட்ட விஷயங்கள் கிழிஞ்சி தொங்குது. கீற்று மட்டும் விதிவிலக்கா?


    மாயவரத்தான்!

    இங்கே சுனாமி அடித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் வந்து சுண்டல் விற்பது நியாயமா? உங்களுடைய பிளாக்கில் பிளாக் ரோல் பகுதியில் என் வலைப்பூவை இணைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனாலேயே லிங்க்ஸ் இதுபோல தாறுமாறாக வந்து தொலைக்கும். இது பிளாக்கரின் லேட்டஸ்ட் கோளாறு. விரைவில் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்.


    அனானி 2 அண்ணே!

    நான் செவ்வாய்கிரக அரசியலை பேசினால் கூட “டாய் நீ திமுககாரந்தானே? இதெல்லாம் ஏண்டா பேசுறே?” என்று கேட்பீர்கள் போலிருக்கிறதே? :-)

    கீற்று ‘உண்மையான மெயில்' என்று நம்பிப் போட்டது என்று நீங்கள் சொல்லுவதை கீற்று நந்தனே கூட ஏற்றுக் கொள்ள மாட்டார். மார்க்சிஸ்டுளின் மீதான அரிப்பை கீற்று இவ்வாறாக தீர்த்துக் கொண்டது என்பதே உண்மை. வேறு சில அரசியல் காரணங்களும் கீற்றுக்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.

    அப்புறம், இதையெல்லாம் கலகம் என்று சொல்லாதீர்கள். போலி எண்கவுண்டரை ஒத்த விஷயம் இது. வேண்டுமானால் போலி கலகம் எனலாம். உங்களைப் போல போலி கலகத்தை ஏற்றுக்கொண்டு ரசிக்கும் மனப்பக்குவம் எனக்கு இன்னமும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா11:55 AM, ஏப்ரல் 13, 2010

    லக்கி அண்ணே

    அ. மார்க்சு நடத்துற கூட்டம் லீனாவுக்கு எதிராக யாரும் பேசக் கூடாதுங்குறதுக்காகத்தானே. அப்படி பேசுபவர்களின் பேச்சில் அவதூறு உள்ளது என அளவிட்டு சொல்ல என்ன சட்டம் கையில் இருக்கு. அது ஆள் ஆளுக்கு வேறுபடுதுதானே. அந்த அம்மா மார்க்சு லெனின கேவலப்படுத்தி கவிதை எழுதினால் பதிலுக்கு சிலரு அந்த அம்மாவ கேவலப்படுத்தி பதிவு போடுறாங்க•. இப்போ உங்க திமுக தலைவருங்க அல்லது பேச்சாளருங்க ஜெயல்லிதாவ திட்டி பேசுன மறுநாளு அதிமுக காரங்க அங்கேயே மேட போட்டு உங்க தலைவர வாருவாங்க•. இது அரசியல்ல சகஜம்தானுங்க• இல்ல எங்க அம்மாவ திட்டினதுக்கு எதிரா கூட்டம் போடுறோம்னு உங்க ஆளுங்க இதுவர கூடுனதா நான் கேள்விப்படல• அப்புறம் அப்பிடி பேசுறது கூட ஒரு ஜனநாயக உரிமைதான•. அதப் போயி தடுக்க சொன்னா இவங்க மத்தவங்க ஜனநாயக உரிமையை பறிக்குற பாசிஸ்டுகள் இல்லையா.. இவங்களுக்கு ஆதரவா ஒரு பதிவ போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...

    அப்புறம் அது ஜனநாயக உரிமைக்காக 40 ஜனநாயகவாதிகள் பேசுற கூட்டமாம். ஆனா ஒரு கேள்வி பதில் செசன் கூட பார்வையாளர்களுக்கு கிடையாதாம். இவ்வளவு தூரம் பார்வையாளர்களுக்கு ஜனநாயகத்தை வேற எந்த ஜனநாயக வாதியும் தர முடியாது இல்லையா. இந்த சர்வாதிகாரிகளிடம் பட்டுத்தான் ஜனநாய உரிமையை காப்பத்தணும்னு நினைக்கிற 40 பேருல யாருக்காச்சும் பார்வையாளர்களது கேள்வி என்ற ஜனநாயக உரிமைக்கும் மதிப்பு தரணும்னு நினைத்தால் தங்களது பேச்சிற்கான நேரத்தை ஒதுக்கியதை ரத்து செய்து அதனை பார்வையாளர்களின் கேள்விக்கு அந்த மேடையிலேயே அவர்கள் களம் அமைத்து தருவதுதான் எந்த ஒரு ஜனநாயகவாதிக்கும் அழகு. பார்க்கலாம் அவர்களது அதாங்க 40 பேருடைய ஜனநாயக உணர்வை.

    அப்புறம் ... கவின்மலர் பிரச்சினை... மார்க்சிஸ்டு கட்சி சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது இல்லை என அவர்களது மாநில குழு உறுப்பினரும், தமுஎகச பொதுசெயலருமான ச•தமிழ்செல்வன் கடந்த ஞாயிறு அன்று ஞாநி வீட்டில் நடந்த கேணி இலக்கிய சந்திப்பில் பொதுமேடையில் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் தாங்களும் கலந்து கொண்டீர்கள். கட்சி முடிவினை கவின்மலர் ஏற்கவில்லையா என்று ஏன் நீங்கள் இந்தப் பதிவில் கேள்வி எழுப்பவில்லை...

    பதிலளிநீக்கு
  10. 11.55க்கு கமெண்டு போட்டிருக்கிற அனானி அண்ணே!

    //அ. மார்க்சு நடத்துற கூட்டம் லீனாவுக்கு எதிராக யாரும் பேசக் கூடாதுங்குறதுக்காகத்தானே. அப்படி பேசுபவர்களின் பேச்சில் அவதூறு உள்ளது என அளவிட்டு சொல்ல என்ன சட்டம் கையில் இருக்கு. அது ஆள் ஆளுக்கு வேறுபடுதுதானே. அந்த அம்மா மார்க்சு லெனின கேவலப்படுத்தி கவிதை எழுதினால் பதிலுக்கு சிலரு அந்த அம்மாவ கேவலப்படுத்தி பதிவு போடுறாங்க•. இப்போ உங்க திமுக தலைவருங்க அல்லது பேச்சாளருங்க ஜெயல்லிதாவ திட்டி பேசுன மறுநாளு அதிமுக காரங்க அங்கேயே மேட போட்டு உங்க தலைவர வாருவாங்க•. இது அரசியல்ல சகஜம்தானுங்க• இல்ல எங்க அம்மாவ திட்டினதுக்கு எதிரா கூட்டம் போடுறோம்னு உங்க ஆளுங்க இதுவர கூடுனதா நான் கேள்விப்படல• அப்புறம் அப்பிடி பேசுறது கூட ஒரு ஜனநாயக உரிமைதான•. அதப் போயி தடுக்க சொன்னா இவங்க மத்தவங்க ஜனநாயக உரிமையை பறிக்குற பாசிஸ்டுகள் இல்லையா.. இவங்களுக்கு ஆதரவா ஒரு பதிவ போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிக்க வேண்டாமா...//

    என்ன காண்டெக்ஸ்ட்டில் இதை சொல்லுறீங்க என்று சரியாகப் புரியவில்லை. அதாவது உங்கள் தமிழ் என்னுடைய அறிவுக்கு அப்பாற்பட்ட ஆற்றலை கொண்டது :-(

    புரிந்துகொண்ட அளவில் ஏதோ விளக்கம் என்ற விளக்கெண்ணெயை ஊற்ற முயற்சிக்கிறேன் :-(

    அரசியல், ஜனநாயகம், கண்ணறாவியை எல்லாம் விட்டு விடலாம். கீற்று தனக்குத் தெரிந்தே ஒரு 'பொய்யான' அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதை கண்டிக்க யாருக்கும் துப்பில்லை. எனக்கு துப்பு இருந்திருக்கிறது.

    நீ ஏன் லீனா மார்க்ஸை, லெனினை கேவலப்படுத்தி எழுதியபோது கண்டிக்கவில்லை என்று கேட்டால், அப்போது எனக்கு அதை கண்டிக்க துப்பில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    எல்லாரும் எல்லாவற்றையுமே கண்டித்துவிட முடியாதில்லையா? அப்படியாயின் இருபத்து நான்கு மணிநேரமும் பசி, தூக்கமின்றி எதையோ எல்லாரும் கண்டித்துக் கொண்டேதான் இருக்கவேண்டும் இல்லையா?

    சட்டென்று கண்ணில் பட்டது/உறுத்தியது கீற்று செய்திருந்த கோயபல்ஸ்தனம். உடனே உணர்ச்சிவசப்பட்டு கண்டித்துவிட்டேன்.

    ”இது ஒரு தப்பா?” என்று அந்நியனிடம் கேள்வி கேட்ட சமையல் காண்ட்ராக்டர் மாதிரி உங்களிடம் கேட்கிறேன்.

    அப்புறம், கூட்டம் எப்படி நடக்கும்? அதில் பார்வையாளர் செஷன் உண்டா என்பதைப் பற்றியெல்லாம் கூட்ட அறிவிப்பில் ஏதும் இல்லை. அதே நேரத்தில் இதெல்லாம் இல்லையென்றும் கூட அந்த அறிவிப்பில் ஏதும் இல்லை என்பதை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.


    கடைசியாக, தமிழ்செல்வன் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கேணிக்கூட்டத்தில் சொன்னாரா என்று எனக்கு உறுதியாக தெரியாது. அவ்வாறு அவர் சொன்னதாக கீற்றுவின் சம்பந்தப்பட்ட சுட்டியில் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தது மட்டுமே எனக்கு தெரியும்.

    அப்புறம், கவின்மலர் என்பவர் யார்? அவர் கட்சியில் இருக்கிறாரா, கட்சி முடிவுக்கு கட்டுப்படுகிறாரா என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? :-)

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12:24 PM, ஏப்ரல் 13, 2010

    அண்ணே

    அந்தக் கூட்டம் லீனாவோட மத்தவங்கள திட்டுற உரிமைய ஆதரித்தும், அதற்கு பதிலாக திட்டுற மத்தவங்களோட உரிமைய தடுக்க கோரியும் நடக்குது. அடிப்படையிலயே எனக்கு மட்டும்தான் உரிம இருக்கு, மத்தவனுக்கு இல்லங்குறதுக்காக நடக்குற கூட்டம் உரிமைக்கான ஜனநாயக அடிப்படையிலான கூட்டமா... நான் அடிப்பேன்.. பதிலுக்கு நீ அடிக்க கூடாது அப்படிங்குறதுக்கு பேரு என்ன பேருன்னே..

    சட்டென்று உங்களுக்கு கோயப்ல்சு தனம் பிடிப்ட்டது ஆச்சர்யம்தான். அது என்னங்க கூட்டம் எழுதுபவனின் உரிமைக்காக என்ற பெயரில் நடக்கிறது. பால் சக்காரியாவின் பேச்சுரிமைக்கு எதிராக தாக்கிய சிபிஎம் தோழர்களை கண்டித்து கூட அந்த 40 பேரில் ஒருவர் கூடவா பேசாமல் இருப்பார். செலக்டிவ் அம்னீசியா கவினமலருக்கும் அவரது கட்சிக்கும் இருக்கலாம். 40 பேருக்குமா இருக்கும். அப்புறம் இணையத்தில் அவதூறுக்கும் எதிராகத்தான் கூட்டம் நடக்குது. லக்கி லுக்கோட எழுத்து அ. மார்க்சுக்கு அவதூறாக பட்டால் அதை தடுக்க சொல்லி கூட்டம் போடுறாரு. யாருட்ட தடுக்க சொல்றாரு. சைபர் கிரைமிடம் போட்டுக் கொடுக்கப் போறாரு. போலிசுல போட்டுக் குடுக்கறதுக்கு ஜனநாயகத்தோட பேர சொல்லி பேசப் போறாரு. உங்க கைய வச்சு டைப் பண்ண வச்சே இனிமே நீங்க டைப் பண்ண டிஜிபி ஆபிசுல லைசென்சு வாங்க வைக்கப் போறாரு.. அத்த்தான் சொன்னேன். இது உங்க கண்ணுக்கு படலயா.. இணைய எழுத்து சுதந்திரத்திற்கு எதிராக மார்க்சு நடத்துகின்ற இக்கூட்டத்தில் நிகழ்ந்த சரியான விமர்சனத்தை கீற்று நேரடியாக வைக்காத்த‍ற்காக கண்டிப்பது அதை விட முக்கியாமா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

    கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு முடிவு எடுத்தால் அதற்கு அனைவரும் கட்டுப்பட்டுதான் வேலை செய்ய முடியும். ச• தமிழ்செல்வன் அன்றைக்கு தனக்கு வேறு கருத்து உள்ளது, கட்சி கருத்து வேறு என்றெல்லாம் பலமுறை உளறிக் கொட்டினார். அப்படி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட சொல்ல முடியாது. அவர் மாநிலக்குழு உறுப்பினர் என்பதெல்லாம் தனிக்கதை. அந்தக் கட்சி முடிவில் அக்கடிசி சார்ந்த கவின்மலருக்கு உடன்பாடு இல்லையா என்பதுதான் கேள்வி. மற்றபடி லீனா பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெளிவாக கூட்டத்தில் அறிவித்தார். இந்த அறிவித்தலை அறிக்கையாக மாற்றி தரப்போவதாகவும் சொன் அவரும் அவர் சார்ந்த கட்சியும் இதுவரை அதனை செய்யவில்லை.

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் மீண்டும் அண்ணே!

    //அந்தக் கூட்டம் லீனாவோட மத்தவங்கள திட்டுற உரிமைய ஆதரித்தும், அதற்கு பதிலாக திட்டுற மத்தவங்களோட உரிமைய தடுக்க கோரியும் நடக்குது. அடிப்படையிலயே எனக்கு மட்டும்தான் உரிம இருக்கு, மத்தவனுக்கு இல்லங்குறதுக்காக நடக்குற கூட்டம் உரிமைக்கான ஜனநாயக அடிப்படையிலான கூட்டமா... நான் அடிப்பேன்.. பதிலுக்கு நீ அடிக்க கூடாது அப்படிங்குறதுக்கு பேரு என்ன பேருன்னே..//

    இது உங்க பார்வை. இது சரியாவும் இருக்கலாம், தப்பாவும் இருக்கலாம். எனக்கு இதைப்பற்றி எந்த விமர்சனமும் இல்லை.

    அப்புறம் கவின்மலர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இதைப் பத்தியெல்லாம் பதில் அவங்க தான் சொல்லணும். எனவே நீங்க எங்கிட்டே இந்த கேள்வியையே கேட்கப்படாது :-)

    நான் கண்டிக்கிற விஷயம் என்னன்னா..

    இப்போ நீங்க ஒரு நம்பிக்கையின் பேரிலே என் பிளாக்குலே கமெண்டு போட்டிருக்கீங்க. நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு இதை திரிச்சி - அதாவது கீற்றை நீங்க திட்டுறமாதிரி - வெளியிட்டேன்னா, அதுக்கு பேரு என்னா? கோயபல்சுத்தனம் இல்லையா? பாசிஸம் இல்லையா? ஃப்ராடுதனம் இல்லையா?

    நிற்க. கீற்று இதைத்தான் அந்த அழைப்பிதழில் செஞ்சிருக்கு என்பதுதான் என் கண்டனத்துக்கு காரணம்.

    இது ஒரு எளிமையான விஷயம். மாற்று சிந்தனைகளுக்கு இணையத்தில் தங்களைதான் நம்பி இருக்காங்க. வேற வழியில்லை என்ற சர்வாதிகார எண்ணத்தில் கீற்று இனிமேல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியத்தை உங்களைப் போன்ற ஆதரவாளர்கள் கீற்றுக்கு கொடுக்கறீங்க.

    கீற்றுக்கு ஒரு மாற்று அவசியம் என்கிற எண்ணத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா12:39 PM, ஏப்ரல் 13, 2010

    கூட்டத்துல 40 பேரு பேசுறாங்க• இவங்க மட்டும்தான் ஜனநாயகத்த பேசணும்னு தீர்மானித்த்து யார். எந்த அடிப்படையில். இது ஒரு சம்பவம் என்று பார்வையாளனாக வேண்டுமானால் கூட இருக்கிறேன் ஆனால் கலந்து கொள்வது முக்கியம் என்று வரும் பார்வையாளர்கள் பெரிய ஜனநாயக வாதிகள் இல்லையா. இதனை அ. மார்க்சு உள்ளிட்ட ஆன்றோர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் வழியில்தான் பேசுகிறேன். இவர்தான் தகுதியானவர் என தீர்மானிப்பதற்கு உதவிய கொள்கை, கோட்பாடு இவற்றை தனது உறக்கத்தில் கூட எதிர்த்து அமைப்புகளுக்கு எதிராகவும் பெருங்கதையாடலை எதிர்ப்பதற்காகவே அவதாரம் எடுத்த்தாகவும், விளிம்புநிலை மனிதர்களை காப்பதே லட்சியம் என்றும் இருக்கும் அது போன்ற நபர்கள் தங்களது கொள்கைக்கு முரணாக அமைப்புகள் ஏற்றுக் கொண்ட அறிவாளிகளை மாத்திரமே மேடை ஏற்றுவது எப்படி சரி. தனக்கு மட்டும் கொள்கையை மாற்றி கொள்வார்களா..

    அப்புறம் இது ஜனநாயகம் அல்லது வெங்காயத்திற்கான எதோ கூட்டம். இதுல 40 பேரு பேசிய பிறகும் பார்வையாளனுக்கு ஒரு கருத்து கூட தோன்றக் கூடாது. அப்படியே தோன்றினாலும் அதனை வெளியே கேள்வி அல்லது கருத்தாக சொல்லக் கூடாது என்பது பேச்சு சுதந்திரத்தை அவமதிப்பது கிடையாதா... கேள்வி நேரம் இல்லை என தெளிவாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்து விட்டார். ஒரு காலத்துல சொத்து உள்ளவனுக்குதான் ஓட்டுப் போடுற தேர்தல்ல நிக்குற தகுதி உண்டுன்னு சட்டமே இருந்துது. அப்புறம் வயது வந்தவர்களுக்கெல்லாம்னு மாத்தியது 50 களுக்கு அப்புறம்தான். இன்னமும் பழைய பண்ணையார்கள் மாத்திரம்தான் தேர்தல்ல போட்டி போடணும்னு சட்டம் இன்னைக்கு இல்லை. ஆனா பேச்சிற்கு மாத்திரம் அறிவாளிகள் மாத்திரம்தான் வரணும்கிறது எப்படி சரி.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா12:42 PM, ஏப்ரல் 13, 2010

    இல்லண்ணே அவங்க அழைப்பிதல பாருங்க• இணைய எழுத்து சுதந்திரத்துக்கு எதிரா இருக்கா இல்லையா.. இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க•

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா12:44 PM, ஏப்ரல் 13, 2010

    கீற்றை ஆதரிக்கவில்லை. கோயபல்சு தனம் உள்ளது உண்மைதான். யார் பெரிய கோயபல்சு என்பதுதான் பிரச்சினை. அ. மார்க்சா கீற்றா அல்லது சிபிஎம் ஆ என்பதுதான் உண்மையான விவாதம்.

    பதிலளிநீக்கு
  16. அண்ணே!

    திரும்ப திரும்ப பேசுற நீ!
    திரும்ப திரும்ப பேசுற நீ!

    அந்த கூட்டம் நடக்குறதே தப்பு. அல்லது அ.மார்க்சு நடத்துறது தப்பு. அல்லது லீனாவுக்காக நடக்குறது தப்பு. அல்லது மார்க்சிஸ்டுகள் கலந்துக்கறது தப்பு. அல்லது அந்த 40 பேர் கலந்துக்கறது தப்பு.

    இப்படி என்ன வேணும்னாலும் நீ சொல்லு அண்ணே. கீற்றுலேயே கட்டுரை எழுதுண்ணே. இல்லைன்னா வினவுலே எழுதுண்ணே. அப்படியுமில்லைன்னா லக்கிலுக் ஆன்லைனில் கூட எழுதுண்ணே. ஒத்துக்கறேன் நீ ஒரு ஒரிஜினல் போராளின்னு.

    அதை உட்டுப்போட்டு ஒரு செய்தியை நல்லா நமக்கு வாகா ‘திரிச்சி' போடுறதுங்கறது ஊடக தர்மத்தையெல்லாம் விடுங்க. ஊடக அநியாயத்துக்கு கூட அடுக்காதுண்ணே!

    பதிலளிநீக்கு
  17. //கீற்றை ஆதரிக்கவில்லை. கோயபல்சு தனம் உள்ளது உண்மைதான். யார் பெரிய கோயபல்சு என்பதுதான் பிரச்சினை. அ. மார்க்சா கீற்றா அல்லது சிபிஎம் ஆ என்பதுதான் உண்மையான விவாதம்.//

    அப்படி வாங்கண்ணே வழிக்கு :-)

    கோயபல்சுலே என்னண்ணே சின்ன கோயபல்சு, பெரிய கோயபல்சு? எல்லாம் ஒரு குட்டையில் ஊறின மட்டைங்க தாங்கறேன். :-)

    அ.மார்க்ஸ் கோயபல்சா? சி.பி.எம். கோயபல்சான்னு நீங்கதான் ஆதாரங்களோட அம்பலப்படுத்தணும். எங்கிட்டே அதுக்கெல்லாம் சரக்கு கம்மி.

    ஆனா கீற்று கோயபல்சுதான்னு ஒத்துக்கிட்டீங்க பாருங்க. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருண்ணே.

    பதிலளிநீக்கு
  18. //கேள்வி நேரம் இல்லை என தெளிவாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்து விட்டார்.//

    அண்ணே அல்லது தம்பி!

    இப்படி எப்படி அறிவிச்சார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்? எங்களுக்கெல்லாம் தெரியலையா? எதில் இந்த அறிவிப்பு வந்தது. கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. டெல்லியைவிட்டு நீங்கியபோது அந்தக் காட்சிகள் மறைந்தன. அறுபட்டைச் சாலைக்கன வேலைகள் நடப்பதனால் வழியெங்கும் தூசு. அந்த தூசுக்குள் செல்வது ஒரு கனவுக்காட்சி போலா இருந்தது. ஆனால் வழியெங்கும் பெரிய கடைகள் , ஓட்டல்கள், கல்விநிறுவனங்கள் வந்துகொண்டே இருந்தன. உத்தராஞ்சல் வரை ஊர் வளமாக இருப்பதாகவே தோன்றியது. நடுவே ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்தினார்கள். அத்தனைபேரும் இறங்கி பேருந்தை ஒட்டியே நின்று சிறுநீர் கழித்தார்கள். அதுவும் பெண்கள் பேருந்து சக்கரத்தை ஒட்டி அமர்ந்து கூட்டமாக சிறுநீர் கழித்த காட்சி அருமையாக இருந்தது. முக்காடுக்குள் இருப்பதனால் என்னவேண்டுமானாலும் செய்வதற்கான சுதந்திரம் அவர்களுக்குக் கிடைக்கிறது போலும்

    - Jeyamohan.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா3:02 PM, ஏப்ரல் 13, 2010

    அ.மார்க்ஸ் செய்யாத கலகத்தையா கீற்று செய்துவிட்டது? பால் சக்கரியாவின் மீதான மார்க்சிஸ்ட்களின் தாக்குதலைக் கண்டிக்க வக்கற்ற மார்க்ஸ் வகையறா லீனாவுக்காகப் பேசுவதற்கு கருத்துசுதந்திரத்தின் மீதுள்ள அக்கறை மட்டுமே காரணமா என்ன?

    பதிலளிநீக்கு
  21. சந்திரன்3:45 PM, ஏப்ரல் 13, 2010

    http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=2766

    உயிர்மை கூட உங்க கண்டுபிடிப்பின் படி பாசிச இணையதளம் தானா?

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா5:03 PM, ஏப்ரல் 13, 2010

    பாசிஸம் னு சொல்லிருக்கீங்களே ... அப்படிங்னா எண்ணங்னா

    பதிலளிநீக்கு
  23. "முன்பு நான் மதிப்பு வைத்திருந்த ஆளுமைகள் மீதும், அமைப்புகள் மீதுமான பிம்பம் எனக்கு உடைந்துகொண்டே வருகிறது
    "

    Ithu charu patri soleengala?

    பதிலளிநீக்கு
  24. லக்கி, கேப்டன் டிவியில் வேளைக்கு கூப்பிட்டா போயிடாதிக. நீங்க ரொம்ப நல்லவுக. அங்க போயி கெட்டு கிட்டு போயிடபோறிய.

    பதிலளிநீக்கு
  25. லீனாவின் பதிவில் இருந்த சுட்டி மூலம் இங்கே வந்தேன்.

    லக்கி, இந்த இடத்தில் உயிர்மையும் கீற்று உடன் சேர்ந்து சதி செய்ததாக சொல்லியிருக்க வேண்டும் அல்லது பழைய வாக்கியங்களை மாற்றியிருக்க வேண்டும். எதையுமே செய்யாத உங்கள் அறிவு நேர்மை புல்லரிக்கிறது. அதனால் பரவாயில்லை. பலரும் இந்த மாதிரிதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  26. நல்ல பதிவு யுவக்ருஷ்ணா தவறை தைரியமா சுட்டிகாட்டியதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. //விஜய் மகேந்திரன் said...
    நல்ல பதிவு யுவக்ருஷ்ணா தவறை தைரியமா சுட்டிகாட்டியதற்கு வாழ்த்துக்க/

    ரிப்பீட்டேய்ய்

    பதிலளிநீக்கு
  28. keetru has done wrong thing with ulterior motive.you are correct..

    பதிலளிநீக்கு
  29. தங்களது கருத்துகளை மட்டுமே சரியானது என அனைவரும் கருதுவார்கள் அதே போல் தான் தங்களின் கருத்தும். ஓர் தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்களிடையே கூட ஒத்த கருத்து இருக்காது. அனைத்து இயக்கங்களும் அதன் கொள்கைகளை பிறரிடம் திணிக்க முற்படுகின்றன ஏற்றுகொண்டோரை தோழர் என்றும் பிறரை முடர் என்றும் ஏசுகின்றன. இவையே பகுத்தறிவு இயக்கங்களின் கொள்கைகளாகும். இனசண்டைகளுக்கும் இவையே காரணமாகும். லீனாவின் கவிதையை பிடித்தவர்கள் படிக்கலாம்.பிடிக்காதவர்கள் வேறு இணைய பக்கத்தை புரட்டலாம். அதை விட்டு விட்டு தேவையில்லாமல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல் இட்டு தங்கள் நேரத்தை வீணாக்கிகொண்டு உள்ளார்கள்.

    பதிலளிநீக்கு