ஒரு தொடர் நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக நடைபெற அதன் அமைப்பாளர்கள் மட்டுமே காரணமாகி விட முடியாது. அந்நிகழ்வு யாருக்காக நிகழ்த்தப்படுகிறதோ அவர்களின் பங்கேற்பும், ஆர்வமும் மட்டுமே வெற்றியை தேடித்தர முடியும். அவ்வகையில் 'உரையாடல்' அமைப்பு, நியூ ஹாரிசன் மீடியா பத்ரியோடு இணைந்து நடத்திவரும் உலகப்பட திரையிடல் வெற்றிகரமாக ஓராண்டை வரும் மாதத்தோடு நிறைவுசெய்வதை பங்கேற்பாளர்களின் வெற்றியாக நாம் கொண்டாடலாம்.
இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதை பைத்தியக்காரன் பதிவு போட்டு விளக்கியிருக்கிறார்.
முதல்வருட நிறைவு கொண்டாட்டத்தை முன்வைக்கும் விதமாக உங்கள் சிந்தனைகளை ஒட்டுமொத்தமாக டவுசர் அவிழ்க்கும் (இட் மீன்ஸ் கட்டவிழ்த்தல்) திரைப்படம் ஒன்றினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் உரையாடல் அமைப்பாளர்கள். லியோ தால்ஸ்தாய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நாவல் பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. உரையாடல் அமைப்பு திரையிடப்போகும் படமோ அரதப்பழசானது. 1935 கிறிஸ்துமஸுக்கு வெளியானது. நெஞ்சில் மாஞ்சா சோறு இருப்பவர்கள் வரும் ஞாயிறு அன்று திரையிடலுக்கு வரலாம். படம் பார்த்து தாவூ தீருபவர்களுக்கு உரையாடல் அமைப்பு சோடா வாங்கித்தர தயாராக இருக்கிறது.
படத்தின் பெயர்: Anna Karenina (1935)
Director: Clarence Brown
Actors: Greta Garbo (Anna Karenina), Fredric March (Vronsky)
Language: English
பட நேரம் : 95 min
நாள் : மே 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக மாலை 6 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோடு, சென்னை
அனைவரும் வருக...
உரையாடல் அமைப்புக்கு வாழ்த்துகளும், உங்களுக்கு அன்பும்.!
பதிலளிநீக்குபதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html
பதிலளிநீக்குதங்களின் "சுறா" விமர்சனத்துக்காக காத்து கொண்டு இருக்கிறேன் !
பதிலளிநீக்குஎனது கணிப்பில் இது எஸ் எ சி யின் தயாரிப்பு (சங்கிலி முருகன் சும்மா டம்மி பீசு ) இயக்கம் கூட அவரோ என்று சந்தேகம் உள்ளது !வேட்டைக்காரனில் அழகான தோற்றத்தில் சூப்பர் காஸ்டியுமில் கலக்கிய விஜய் ரொம்ப கேவலமா இருக்கிறார் ! தமன்னா கோடை குளு குளு! கேமரா படு மட்டம் ! வில்லன் ஸ்கூல் டிராமாவில் நடித்து போல உள்ளது ! வாட் எ கோ இன்சிடன்ஸ் ...பார்டிகளுக்கு பிடித்தால் வியப்பில்லை !