வினவுத் தோழர்கள் சிலரை அவர்களது நிகழ்வுகளில் கண்டிருக்கிறேன். ஆயினும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியதில்லை. நேற்றைய இந்து மக்கள் கட்சிக்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் ம.க.இ.க. செயல்வீரர்களையும், புரட்சிகரப் பெண்கள் முன்னணியினரையும் போர்க்கோலத்தில் காண நேர்ந்தது. எண்பதுகளில் இயங்கிய திமுக இளைஞரணியினரை செயல்வேகத்தில் நினைவுபடுத்தினார்கள்.
லீனாவின் கவிதை குறித்து எனக்கு பெரிய கருத்து எதுவும் கிடையாது. கவிதைகளை வெறுப்பவன் என்ற முறையில் எந்த கவிதை குறித்தும் எனக்கு கருத்து எதுவும் இருந்துவிட முடியாது. கவிதைகளை புரிந்துகொள்வதில் எனக்கு இருக்கும் அறிவு மற்றும் ரசனை குறைப்பாடு இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே யோனி மாதிரியான சொற்களை பயன்படுத்தி எழுதப்படும் கவிதைகள் வெறும் கிளர்ச்சியுணர்வை தவிர வேறெதையும் எனக்கு தந்துவிட முடியாது. ஆயினும் அச்சொற்களை பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். நவீனக் கவிதைகள் எழுதும்போது இவ்வார்த்தைகள் தவிர்க்க இயலாதவை என்று சொல்கிறார்கள். ஆமாமா என்று நவீனக் கவிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.
நேற்றைய நிகழ்வில் மீனா எனும் தோழர், “லீனாவின் கவிதைகளை வாசிக்கும்போது என்னுடல் குறித்த அசூயை எனக்கு நீங்குகிறது” என்பதுமாதிரி சொன்னார். துரதிருஷ்டவசமாக ஆணாக பிறந்துவிட்டதால் இத்தகைய ஒரு உணர்வு எனக்கு வரவில்லையோ என்னவோ? ஆனால் லீனாவின் சர்ச்சைக்குரிய அக்கவிதையை சில தோழிகளுக்கு அனுப்பிவைத்தபோது, அவர்களுக்கு இத்தகைய உணர்வு எதுவும் வரவில்லை என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். இந்த நொடிவரை என் பார்வையில் அது 'அஜால் குஜால்' வார்த்தைகள் நிரம்பிய சொற்குவியல் மட்டுமே.
வினவு தோழர்கள் இக்கவிதையை கடுமையாக எதிர்ப்பதில் இருக்கும் நியாயம், இயக்கங்களில் இயங்குபவர்களுக்கு புரியும். மார்க்சிய சிந்தனை மரபில் (பட்டர்ஃப்ளை எஃபெக்ட் மாதிரி ஜெமோ எஃபெக்ட்) வந்தவர்கள் கோபம் கொள்ளக்கூடிய வகையிலான கவிதையே அது என்பதை வாசித்துப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த காண்டெக்ஸ்டில் லீனா எழுதியிருக்கிறார் என்பதை அவரே விளக்கிச் சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். எனவே இக்கவிதையோடு ஒரு அருஞ்சொற்பொருள் பின்னுரையை அவர் தந்திருக்கலாம். பொதுவான வாசிப்பில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகிய தலைவர்களை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதாகவே நம்மைப் போன்ற சாதாரண வாசகர்கள் எடுத்துக் கொள்ள முடியும்.
கம்யூனிஸத் தலைவர்களுக்கு பதிலாக பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பின், வினவுத் தொழர்கள் செய்த கலாட்டாவை விட மிகப்பெரிய கலாட்டாவை திராவிட இயக்கத்தவர் செய்திருப்பார்கள். நானும் கலாட்டா செய்த கூட்டத்தில் இருந்திருப்பேன். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அறிஞர் அண்ணாவை மிக லேசாக சீண்டிய டி.என்.சேஷனுக்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பை இந்த சமயத்தில் நினைவுகூர வேண்டும். சென்ற இடமெல்லாம் திராவிட இயக்கத்தாரின் கருப்புக்கொடி, விமான நிலையத்தில் ஏழுமணி நேர சிறைவைப்பு என்றெல்லாம் சேஷன் நொந்துபோய், தனது சொற்பிரயோகத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று. திமுக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததாக கூட நினைவு.
எனவே லீனா கவிதைக்கான வினவுத் தோழர்களின் எதிர்ப்பு மிக மிக நியாயமானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மற்ற கம்யூனிஸ்டு அமைப்பினருக்கும் இதே கோபமும், எதிர்ப்புணர்வும் இருந்திருக்க வேண்டும் என்ற அவர்களது எதிர்ப்பார்ப்பும் நியாயமானதே.
அதே நேரத்தில் நேற்றைய கூட்டத்தில் பேசக் கிடைத்த வாய்ப்பை வினவுத்தோழர்கள் உணர்ச்சி வசப்படாமல் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம். அ.மார்க்ஸ் மிக நியாயமாக, ஜனநாயகப் பூர்வமாகவே நடந்துகொண்டார். தோழர்களின் கேள்வி வீச்சு ஒரு கட்டத்தில் லீனா மீதான தனிமனித அவதூறாக தோற்றம் தர முஷ்டியை உயர்த்திக் கொண்டு லீனாவும், அவரது கணவர் ஜெரால்டும் களமிறங்க, வினவுத் தோழர்கள் வெளியேற்றப் பட்டார்கள். கலாட்டா செய்ததாக கூறி வில்லனாக்கப் பட்டார்கள். மார்ச் 25, 1989 அன்று நடந்த ஒரு சம்பவத்தை இது நினைவுப்படுத்துகிறது.
வேறு சில தோழர்கள் ம.க.இ.க.வினரைப் பற்றி சமீபமாக எழுதியும், பேசியும் வரும் விஷயம் பகீர வைக்கிறது. குறிப்பாக யோனிக்கவிதைகள் எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு ம.க.இ.க. தோழர்களின் அம்பலப்படுத்தும் பணி கடும் மன உளைச்சலை தந்துவருவதாக தெரிகிறது. சங்கர ராமசுப்பிரமணியன் சமீபத்தில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரையில் பின்னூட்டமாக எழுதியிருந்த அனுபவம் மோசமானது. யோனிக்கவிதைகள் எழுதுவதின் அபத்தத்தையும், ஆபத்தையும் வினவு கட்டுரை வாயிலாகவும், மேடை கண்டனங்களின் மூலமாகவும் தெரியப்படுத்துவது நியாயமானது. சம்பந்தமில்லாமல் கவிஞர்களின், படைப்பாளியின் குடும்பத்தாரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது எந்த விதத்தில் நியாயமானது என்று தெரியவில்லை. இதுதான் அம்பலப்படுத்துவதற்கு ம.க.இ.க. தோழர்களுக்கு தெரிந்த ஒரே வழிமுறையா என்ற கேள்வி எழுகிறது.
ஆயினும் இதுபோன்ற விஷயங்களை மற்றவர்கள் மூலமாகதான் கேள்விப்படுகிறோம். குமுதம் ரிப்போர்ட்டரில் சைபர் க்ரைம் தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது வினவுத் தோழர்கள் என்னோடு மிக நாகரிகமாகவும், ஆரோக்கியமாகவுமே நடந்து கொண்டார்கள் என்பதையும் இங்கே நேர்மையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். அச்சமயத்தில் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்ட தோழரோடு நடத்திய ஒருமணி நேர உரையாடல் போதிய விளக்கங்களை இரு தரப்பும் பரிமாறிக் கொள்ள ஏதுவாக தோழமை மனோபாவத்தோடே நடந்தது என்பதையும் இங்கே நினைவுகூர்கிறேன்.
வினவு தோழர்களை அரங்கிலிருந்து வெளியேற்றிய போது கைதட்டி ஆராவராமிட்டு கேலியாக சிரித்தவர்களை பார்த்த போது கேவலமாக இருந்தது.
பதிலளிநீக்குவந்திருந்த பலரும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக இருந்தும் லெனின் மாவோ முதலானர்களை கொச்சைப்படுத்தி எழுதிய கவிதாயினிக்கு நாதஸ்வரம் வாசித்தது அதைவிட மட்டமாக இருந்தது. பெரியார் என்றோ அண்ணா என்றோ எழுதியிருந்தால் லீனாவால் இப்படி ஒரு கூட்டத்தை நடத்தியிருக்க முடியுமா என்று தெரியவில்லை. இந்த விடயத்தில் வினவு தோழர்களின் அணுகுமுறை உவப்பாகவே இருந்தது , தான் மதிக்கும் தலைவனையும் கோட்பாட்டையும் கொச்சைப்படுத்தி எழுதினால் நிச்சயம் இதைத்தான் எந்தத் தொண்டனாக இருந்தாலும் செய்வான். அதைத்தான் வினவு தோழர்களும் செய்துள்ளனர்.
தங்களுடைய சிந்தாந்தத்தையும் தலைவர்களையும் எவ்வளவு கொச்சைப்படுத்தி எழுதினாலும் அதை நல்ல ஸ்பிரிட்டோடு எடுத்துக்கொள்ளும் காயடிக்கப்பட்ட மார்க்ஸிஸ்ட் தோழர்கள் விரைவில் பால் சக்கரியாவுக்கு ஆதரவாகவும் இதே போன்றதொரு கூட்டத்தை நடத்தினால் நல்லது...
அதிஷா, நீங்கள் கவிதை படிக்கவில்லை அல்லது உங்களுக்கு கவிதை புரியவில்லை. லெனின் மற்றும் மாவோ பற்றி எழுதவே கூடாதா என்ன ? புஷ் மற்றும் blair என்று எழுதினால் யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்.
பதிலளிநீக்குஅண்ணா, பெரியார் என்று எழுதினால் கலவரம் வருமாம். இதை முதலில் தமிழச்சி கூறினார். அதன் பிறகு ஒருவர் மாற்றி ஒருவர் கூறி வருகின்றனர். யார் பெயரை பயன்படுத்தவேண்டும் என்பது எழுதுபவரின் தேர்வு. அந்த கவிதைகளிலும் இத்தலைவர்களின் அடிப்பொடிகளை பற்றி தான் எழுதியுள்ளார். தலைவர்களை அல்ல.
ஏன் கழக அடிபொடிகளை எழுதாமால் கம்யூனிஸ்ட் அடிபொடிகளை எழுதினார் என்பதை புரிந்து கொள்வது எளிது. முற்போக்கு எண்ணம் கொண்ட இலக்கிய வட்டாரத்தில் ஆணாதிக்கத்தை பற்றி கூற விரும்பினால் லெனின் மற்றும் மாவோவுக்கு தான் usability அதிகம்.
இதில் மிகப்பெரிய காமெடி இவர்கள் எல்லாம் சேர்ந்து இந்துக் கட்சி என்னும் non-entity க்கு எதிராக ஒன்று கூடுவது தான் !
ஜ்யோவ்ராம் சுந்தரின் நிலைபாடுடன் அப்படியே உடன்படுகிறேன்.
1995-96ல் சங்கரராம சுப்ரமணியன் பாலியல் உணர்வுகளை பற்றிய கவிதைகளை எழுதியதற்காக மகஇகவினரால் மிரட்டப்பட்டார். சங்கர் வேறு வழியின்றி அதற்கு மன்னிப்பும் கேட்டார். இலக்கிய வட்டாரங்களில் இது எல்லோருக்கும் தெரியும்.
பதிலளிநீக்கு****
பதிலளிநீக்குவினவுத் தோழர்கள் என்னோடு மிக நாகரிகமாகவும், ஆரோக்கியமாகவுமே நடந்து கொண்டார்கள் என்பதையும் இங்கே நேர்மையோடு பதிவு செய்ய விரும்புகிறேன். அச்சமயத்தில் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்ட தோழரோடு நடத்திய ஒருமணி நேர உரையாடல் போதிய விளக்கங்களை இரு தரப்பும் பரிமாறிக் கொள்ள ஏதுவாக தோழமை மனோபாவத்தோடே நடந்தது என்பதையும் இங்கே நினைவுகூர்கிறேன்.
*****
வினவு தோழர்கள் தொலைபேசியில் பேசினர். அவர்கள் தொலைபேசியில் கூறியது ஒன்றும் / ஆனால் அவர்கள் கட்டுரையோ அதன் பின்னூட்டங்களையோ பார்க்கும் பொழுது அவர்கள் நோக்கம் வேறுமாக இருக்கிறது என்று எழுதியதாக ஞாபகம்.
மணிகண்டன்!
பதிலளிநீக்குகட்டுரையை அவர்கள் எழுதியதற்கு பிற்பாடே எனக்கு தொலைபேசினார்கள். வாசகர்களின் பின்னூட்டங்களுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் விளக்கமளித்தார்கள்.
கும்பி கண்ட சோழரே
பதிலளிநீக்குமற்றவர்கள் பயன்’படுத்தும்’
வார்த்தைகளின் உரிமைக்காகவும் ‘சமூகநீதி’க்காக போராடும் உம் பகுத்தறிவு கண்டு மெச்சினோம். அவ்வுரிமையினை கொண்டே பகவலவனக்களையும் பேரறிஞர்களின் கும்பிகளையும், ‘கிழித்து’ ஒருநாள் தொங்கவிடுவார்கள் இப்புவியிலே பெருங்கொண்ட அறிவும் ஆற்றலும் கொண்ட மணிமேகலைகள். ராஷ்கோலுகளாலும் கண்மனிகளாலும் உடனே ரத்த ஆறு ஓடும்.. நாம்தான் கல்தோன்றிய காலத்து நாகரீகமாச்சே,, அதுனால் இன்னும் கல்தோன்றின காலத்திலே காலகாலத்திற்கும் இருப்போம் வேற எதுவும் பண்ணாமல்..ரொம்பப்ப்ப்ப்ப்பபப நன்றிங்கய்யா இத்த வெளியிட்டால்.
முகமூடி பேரவை for ever
சிலுக்குவார்பட்டி
கல்தோன்றிய காலத்தில் தோன்றிய நாகரீகத்தின் தொட்டில்
சிலுக்குவார்பேட்டை முகமூடி பேரவை தோழர்களே!
பதிலளிநீக்குஊரு ரெண்டு பட்டால் உங்களை போன்ற குடிகார கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கிறோம்.
மூன்றாவதாக இருக்கும் அனானி கமெண்டு தாங்கள் போட்டதுதான். அதில் ம.க.இ.க.வினரை கொச்சையாக விமர்சித்திருந்த வார்த்தைகளை மட்டும் நீக்கி வெளியிட்டிருக்கிறோம். அந்த வார்த்தையை நீக்கியதால் குடி ஒன்றும் முழுகிவிடாது. எனவே போய் உங்கள் குடித்தொழிலை வழக்கம்போல் கவனிக்கவும்.
அ.மார்க்ஸ் மிக நியாயமாக, ஜனநாயகப் பூர்வமாகவே நடந்துகொண்டார்.
பதிலளிநீக்குஅதே நேரத்தில் நேற்றைய கூட்டத்தில் பேசக் கிடைத்த வாய்ப்பை வினவுத்தோழர்கள் உணர்ச்சி வசப்படாமல் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம். -யுவகிருஷ்னா
தோலர்கள் உணர்ச்சி வசப்பட்டு தனிமனித தாக்குதலில் இறங்கியதால்தான் - இவ்வளவு பிரச்சினையும்.
ஆனால் வினவு தளத்தில் புறட்சி தோலர்களை - அப்பாவிகளாகவும் - ஜனநாயகமாக நடந்துக்கொண்ட மார்க்ஸை லீனாவின் ’அல்லக்கையாக’ சித்தரித்து காட்டுவது அபத்தமாக உள்ளது.
///////////யார் பெயரை பயன்படுத்தவேண்டும் என்பது எழுதுபவரின் தேர்வு.////////////
பதிலளிநீக்குமணிகண்டன்,
எந்த பெயரை பயன்படுத்த வேண்டும், எந்த வார்தையை பயன் படுத்த வேண்டும் என்ற தேர்வு / உரிமை கலகக்கார கவிஞர்களுக்கு தானா?
உங்களை/உங்கள் கவிதைகளை விமர்சிக்க எந்த வார்தைகளை பயன் படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு
நீங்கள் யார்? அது அவர்களின் (ம.க.இ.க வினரின்) தெரிவு...
கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிவினை ஆற்றினால், தனிமனித தாக்குதல், அவதூறு என்று புலம்பல் வேறு!
எது தனிமனித தாக்குதல், அதற்கு வரம்பு என்ன என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
தன்னை பற்றிதாக இல்லாத வரை அது கருத்து சுதந்திரம், தன்னை பற்றி யெனில் இருக்கவே இருக்கிறது அதே கருத்து சுதந்திரம், கூத்தடிக்க.. சாரி! கூட்டம் நடத்த!
கலகக்காரர்களுக்கு அதே பாணியில் பதிலளித்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஆதிஷா பின்னூட்டம் சரியாக உள்ளது , ம கா இ கா செய்தது தவறாக தோன்றவில்லை மணிகண்டன் கவிதை எழுதினால் விளக்கம் தரவேண்டுமல்லவா ............சரி அப்படியே தலைவர்களை குறிப்பிடாமல் தொண்டர்களை குறிப்பிடும் படி கவிதை
பதிலளிநீக்குஉள்ளது என்று வைத்துக்கொண்டாலும் எத்தனை தொண்டர்களின் அவர் கவிதையில் சொல்லப்பட்ட X விடயத்தை பார்த்து இருக்கிறார்கள் என்று கேட்டால் என்ன தப்பு?????கவிதை எழுதுவது அவர் உரிமை என்றால் விளக்கம் கொடுக்க வேண்டியது தானே ...............????
தோழர், உங்கள் கண்டுபிடிப்பு தப்பென்று நிருபிப்பதற்காக மேலும் சில பின்னூட்டம் எழுதினால் அதனை மட்டும் சரியாக எப்படி தோழர் மட்டுப்படுத்துறீர்கள். ‘புதிய இதழாழர்களின்’ ஜனநாயகம்? அல்லது தலையாண்ட வச்சுருக்குன்ன கிரீடம் விழுந்து தொலைக்குமாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பதிலளிநீக்குதோழரே,இன்றைக்கான விகடன் பக்கத்தில் புயலும், நெடுமாறனும் ஒரு விசயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துதிருக்கிறார்கள். அதே விசயத்திற்காக இன்னொரு அட்டை கத்தி ’பி’ரட்சிக்காக ஏர்போட்டுக்கு வாங்கோன்னு ஒரே ஒரு படத்தினை இயக்கியவர் கூவுறார். அதே விகடன் பக்கத்தில் இந்தியாவில் இருக்கின்ற கழிப்பறைகளின் எண்ணிக்கையினை பற்றிய ஒரு கட்டுரையும் இருக்கு.வண்ணாரப்பேட்டையிலிருந்து பெரம்பூர் பாலம் வரைக்கும் காலையில் எல்லாம் வரிசையாக காலையில் உட்கார்ந்து இருப்பார்கள் இந்த புயலுங்க நம்மோட அடிப்படை பிரச்சனைக்கு எல்லாம் எப்பொழுதிருந்து போராட ஆரம்பிப்பார்கள். இது கூட வேண்டாம் ராயபேட்டை அரசாங்க மருத்துவனையில் எத்தனை பேர் அடிப்படை வசதியின்றி செத்துக்கொண்டிருக்கிறார்கள், அட ஆஸ்பத்திரிய சுத்தமாக வைத்துக் கொள்ள ஏதாவது போராடலாம். இன்னும் சிவகாசியிலிருந்து திருத்தங்கலுக்கு ஒத்தையடிப்பாதைதான், எவ்வளவு சிறுவரகள் சிவாகாசியிலே தீப்பெட்டி ஒட்றாங்க, அதெற்கெல்லாம் கண்ணை மூடிக்’கொல்லும்’ இதுங்க எல்லாம் என்னோட தலைவனுங்க, இதுங்களுக்கு எது நம்முடைய தேவையென்றே தெரியவில்லை. இதுங்க பண்ணுற தப்பெல்லாம் தப்பேயில்லை, ஆனால் அது தப்பென்றே தெரியாமல் இருக்கிறது ரெம்ப தப்பு. இதையெல்லாம் சுட்டிக் காட்டவேண்டிய இதழாழர்கள் தலைவனுங்க மாதிரியே கண்ணை மற்றவற்றுக்கெல்லாம் ’தொ’றந்து கொண்டு ’னோ’னிக் கவிதை உரிமைக்காக போராட போய் விடுகிறீர்கள், இதனை சொன்னால் ரோசம் மட்டும் பொத்து கொண்டு வந்துவிடுகிறது, நான் எதெற்கெலாம் கண்ணை திறேந்தேனென்று உங்க தலைவர்கள் மாதிரியே கேள்வியெல்லாம் கேட்காமல்(கல்தோன்றிய காலத்திலே நிற்காமல்) நிதானமாக யோசிக்க முடியுமென்று நினைக்கிறேன்
பதிலளிநீக்குலீனாவின் விஷயத்தப் பற்றி பேச வரவில்லை
பதிலளிநீக்கு// கட்டுரையை அவர்கள் எழுதியதற்கு பிற்பாடே எனக்கு தொலைபேசினார்கள். வாசகர்களின் பின்னூட்டங்களுக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் விளக்கமளித்தார்கள்//
உங்கள் கடமையென்று சொல்லவில்லை. ஆனால் வாசகர்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கலாமே!! அது முதற்கொண்டு அவர்கள் மேல் இன்னும் வெறுப்பிலே இருக்கிறேன் நான். படைப்பு எழுதிய பின் படைப்பாளி செத்துவிடுகிறான் என்பது போல், ஓவ்வொருவரையும் அந்தந்த பிரச்சினையின் அடிப்படையில் மட்டுமே அணுக நான் இன்னும் கற்கவில்லை.
மேலும், பின்னூடஙக்ளுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என்பதும் சரியா?
அதிஷா என்னும் அறிவாளிக்கு
பதிலளிநீக்கு/வினவு தோழர்களை அரங்கிலிருந்து வெளியேற்றிய போது கைதட்டி ஆராவராமிட்டு கேலியாக சிரித்தவர்களை பார்த்த போது கேவலமாக இருந்தது./
ம.க.இ.க காரர்கள் சிவசேனா குண்டர்களைப் போல நடந்து கொண்டதும் ம.க.இ.க தோழர் சிலாகித்து, சிலாகித்து ‘ஆண்குறியின் வகைமாதிரி’ பற்றிக் கேட்டதும் கேவலமாக இல்லையா?
லக்கிலுக்கிற்கு.
டி.என்.சேஷனை அதிமுக தாக்கியபோது திமுக கண்டனம் தெரிவித்தது. மற்றபடி எல்லாவற்றையுமே ‘அஜால்குஜால்’ மேட்டராகப் புரிந்துகொள்ளும் உங்கள் புத்திசாலித்தனம் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. சு.சாமி மீது பாவாடையைத் தூக்கிக் காட்டிய அதிமுக மகளிரணியின் புரட்சிக்கும் ம.க.இ.க, ‘புரச்சிகர’ பெண்கள் விடுதலை முன்னணி செய்த ரவுடித்தனத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை. அடுத்தபடியாக தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தி ஒரு பதிவு போடுவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அறிவாளி அனானி!
பதிலளிநீக்குஅதிமுக மகளிரணியினரையும், புரட்சிகரப் பெண்கள் இயக்கத்தவரையும் ஒரே தட்டில் நிறுத்தி விவாதிக்கும் அறிவுகொண்ட உம்மிடம் என்னத்தை விவாதித்து கிழிக்க முடியுமென்று தெரியவில்லை.
எனவே இவ்விவாதத்தில் நான் தோற்றுவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
Pl watch this ..
பதிலளிநீக்குhttp://www.youtube.com/user/ndtvhindu#p/u/7/bNtD1isu2XU
அனானி தோழர்!
பதிலளிநீக்குஅனானியாக போட்டாலும் உங்கள் கொண்டை தெரிகிறது :-)
எனிவே, லீனா கவிதையில் பயன்படுத்திய யோனி முதலான வார்த்தைகளுக்கு நிகரான யூசுவல் வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட இயலவில்லை. மன்னிக்கவும்.
வெளியிட்டால் இந்து மக்கள் கட்சி இந்த வலைப்பூவையும் தடை செய்யச் சொல்லி வழக்கு தொடுப்பார்களோ என்று அச்சமாக இருக்கிறது.
இந்துமக்கள் கட்சி வழக்கு போடாவிட்டாலும் ம.க.இ.ககாரர்கள் வீட்டுக்கு வருவது உறுதியாகி விடும். பை தி பை, கேள்வியில் உள்ள நியாயங்கள் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்குத்தான் அந்த பின்னூட்டம். உங்களை விட எனக்கு ம.க.இ.ககாரர்களை அதிகம் தெரியும். ஒரே ஒருமுறை போனில் பேசியதாலேயே ‘ரொம்ப நல்லவங்க’ சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டாம்.
பதிலளிநீக்குமேலே போட்ட பின்னூட்டத்தையும் வெளியிடத் தேவையில்லை.
பதிலளிநீக்கு//...அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்......என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//
பதிலளிநீக்குலீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.
Leena talking like a democrate>>I posted two comments (My dtcommittee resolutions and opinion on Vinavu comments)in her blog..Till date she did not publish the comments.But she SAID in her new article that YAMUNA RAJENDREN didnot publise her comments in their blog...what a hypocrisy ? Leena manimehalai has no intellectual honesty.
பதிலளிநீக்கு