ஒரு காலத்தில் தமிழ்ப்புத்தாண்டாக இருந்த தினம் ஏப்ரல் 14. அபூர்வ சகோதரர்கள் மாதிரியான படங்கள் கோடைவிடுமுறையை குறிவைத்து கச்சிதமாக வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியது. அந்த காலம் எல்லாம் போயே போச்சு. போன வருடம் சுறா, இந்த வருடம் மாப்பிள்ளை. இப்படியாகத்தான் இருக்கிறது தமிழக சினிமாவின் ஏப்ரல் 14 நிலைமை.
இந்த ஏப்ரல் 14 அன்று, விடுமுறை தினக் கொண்டாட்டம் ஹாங்காங், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் களை கட்டியது. ‘பெருசுகள்’ பலரும் ஒரு வாரமாக ஊன், உறக்கமின்றி திரையரங்கு வாசல்களில், தேருக்கு வடம் பிடித்து நின்றது மாதிரி உலக்கைகளாக தவமிருந்தார்கள். இளசுகளுக்கும் உற்சாகம்தான். பின்னே? காணாத காட்சியெல்லாம் காணப்போகிறார்களே? உலகின் முதல் அஜால் குஜால் 3டி படம் வெளியாகிறதே? காமவெறியோடு கூட்டம் கும்பலாக கும்மியது. படத்தின் ‘உச்சக்கட்ட’ காட்சி முடிந்துவிட்ட பின்னரும் கூட, தியேட்டரில் அமர்ந்திருந்த பெருசுகள் சிலையாய் சமைந்திருந்தார்களாம். அடுத்தக் காட்சிக்கும் இவர்களே போய் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க, முதன்முறையாய் தரிசனத்துக்கு வந்தவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போக, மூன்றாவது உலகப்போரையே ஏற்படுத்திவிடக் கூடிய கலவர உணர்வு, இந்த ஏரியாக்களில் பரவியிருக்கிறது.
அந்தப் படம் ‘செக்ஸ் அண்ட் ஸென் : எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’. ஸ்டீபன் ஷியூ என்பவர் 1991ல் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய திரைப்படம் ‘செக்ஸ் அண்ட் ஸென்’. ஹாங்காங் குஜால் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அந்தப் படம் சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதையே 20 ஆண்டுகள் கழித்து 3டி வடிவில் தயாரித்து, வயோதிக வாலிப அன்பர்களை குஷிப்படுத்த நினைத்தார் ஷியூ. ‘தி கார்நர் ப்ரேயர் மேட்’ என்கிற சீன செவ்விலக்கியத்தை (நம்ம வாத்ஸ்யாயனரின் காமசூத்ரா மாதிரி என்று தோன்றுகிறது) தழுவி இதன் திரைச்சதை எழுதப்பட்டிருக்கிறது. திரை முழுக்க பிட்டு என்பதால் படம் சூப்பர் ஹிட்டு. ஹாங்காங்கில் அவதார் திரைப்படம் செய்த வசூல்சாதனையை இப்படம் அனாயசமாக சுக்குநூறாக்கியிருக்கிறது.
ஒரு சாமானிய பிட்டு பட ரசிகன், பானு தியேட்டரில் காட்டப்படும்.. வீடியோவிலிருந்து ஃபிலிமுக்கு மாற்றிய தேய்ந்த பிட்டிலேயே ஜென்மசாபல்யம் அடைந்துவிடுகிறான். தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்த சமூகத்தின் தலைவிதி இதுதான். இவனைப்போன்ற ரசிகனின் ரசிப்புத்தன்மையை மேம்படுத்தும் பொருட்டே, அதிசமீப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டியில் கிட்டத்தட்ட நிஜ அனுபவத்தையும், உயர்வகை கிளர்ச்சியையும் தந்தாக வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தில் இருந்திருக்கிறார் ஷியூ. இப்படியொரு ‘ஐடியா’ தோன்றியதற்காகவே ஷியூவின் காலைப்பிடித்தாவது, அவரை இந்தியாவுக்கு வரவழைத்து படம் எடுக்கச் சொல்லலாம்.
பிட்டுபட பிதாமகனான இத்தாலிய இயக்குனர் டிண்டோபிராஸ், நடக்கும் நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். 1979ல் அவர் இயக்கிய ‘கேலிகுலா’ உலகின் தலைசிறந்த மேட்டர் படங்களில் ஒன்றாக இன்றுவரை அஜால்குஜால் ரசிகர்களால் மதிப்பிடப்படுகிறது. அத்திரைப்படத்தை 3டியில் மறு உருவாக்கம் செய்து கல்லா கட்ட நினைப்பதாக தன்னுடைய விருப்பத்தை டிண்டோபிராஸ் வெளிப்படுத்தியிருக்கிறார்.
சீனாவில் ஏற்கனவே ஜனத்தொகை அதிகம். இப்படத்தை வெளியிட்டுவிட்டால், அடுத்த பத்து மாதங்களில் ஜனத்தொகை இரட்டிப்பு ஆகிவிடக்கூடிய வாய்ப்பும், ஆபத்தும் ஏற்பட்டது. எனவே சீன அரசாங்கம் மெயிண்லேண்ட் சைனாவில் தடை விதித்து விட்டது.
வெறும் பிட்டுப்படம் இத்தகைய வரலாற்றுச் சாதனைகளை செய்யுமா என்று கேட்டால், வேறு ஒரு வெயிட்டான ‘மேட்டரும்’ படத்தில் இருப்பதாக செப்புகிறார்கள். ‘டைட்டானிக்’ காதலையே, ஓர் இஞ்ச் கேப்பில் முந்தியடித்துவிட்டதாம் இப்படத்தின் காதல். ‘காதலுக்கு காமமே தேவையில்லை’ என்பதுதான் படம் சொல்ல வரும் மெசேஜ். இந்த மெசேஜைதான் படம் முழுக்க காமத்தைக் கொட்டோ கொட்டுவென்று கொட்டி சொல்லியிருக்கிறார்கள், முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி.
நாயகன் அரசகுலத்தைச் சார்ந்தவன். வாழ்க்கை என்பது மிகக்குறுகியது. இந்த குறுகியக் காலக்கட்டத்துக்குள் உடல் ஆசையின் உன்னத நிலையை அடைந்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் வாழ்ந்து வருபவன். ஒரு சாமியாரின் பெண்ணை கண்டவுடனேயே காதல்வசப்படுகிறான் (கவனிக்கவும், காமவசமல்ல). சாமியாரின் பெண் வாரத்துக்கு ஏழு நாளும் ராகவேந்திரருக்கு விரதம் இருப்பாள் போலிருக்கிறது. எனவே நாயகனின் அந்தரங்கத் தேவைகளை ஈடு செய்ய அவளால் இயலாது. காதல் வென்றதா, காமம் வென்றதா என்பதை 3டி கண்ணாடி போட்டுக்கொண்டு, துட்டு இருப்பவர்கள் ஐமேக்ஸிலும், துட்டில்லாதவர்கள் ஜோதி தியேட்டரிலும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
இந்தியாவுக்கு இப்படம் வரும் மார்க்கமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புலப்படவில்லை. இப்படியொரு உயர்ந்த முயற்சி நம் அண்டை நாட்டில் நடந்திருக்கிறது. அங்கிருக்கும் திரை ரசிகர்கள் இதனால் பன்மடங்கு உத்வேகம் அடைந்திருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டும் இப்படிப்பட்ட அற்புத அனுபவத்தை இழக்கலாமா? எப்படிப்பட்ட ஓரவஞ்சனை இது. ஊழலுக்கெல்லாம் உண்ணாவிரதம் இருப்பவர்கள், நமது அடிப்படை உரிமைகளுக்கும் போராட்டம் நடத்த முன்வர வேண்டும். ‘செக்ஸ் அண்ட் ஸென் : எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’ என்கிற செவ்வியல் காவியத்தை இந்திய ரசிகர்களுக்கு வழங்கக்கோரி, மெழுகுவர்த்தி ஏந்தி தணிக்கத்துறை அலுவலகங்கள் முன்பு மாபெரும் அறப்போராட்டம் நடத்தவேணுமாய், சக பிட்டுப்பட ரசிகர்களை கோருகிறேன். இப்போராட்டம் நம்முடைய சுயநலம் சார்ந்ததல்ல. நூற்றி பத்து கோடி இந்தியர்களின் அடிப்படை உரிமை அடிப்படையிலானது என்றும் சுட்டிக் காட்டுகிறேன்.
குறைந்தபட்சம், நம்முடைய தலைவர் சாருநிவேதிதா அவர்களையாவது ஹாங்காங்குக்கு அரசு செலவில் அனுப்பிவைத்து, பார்த்து ரசிக்கவைத்து, இப்படத்தைப் பற்றி உயிர்மையில் விமர்சனமாவது எழுதவைக்க மன்மோகன்சிங் அரசாங்கம் முயற்சிகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
ஒருவேளை அரசு இப்படத்தை இந்தியாவில் அனுமதித்து விட்டாலும், ஒரு சிறு அச்சம். ‘மை டியர் குட்டிச்சாத்தானை’ 3டியில் பார்த்தே, கோன் ஐஸை பிடுங்க திரைக்கு முன்னால் கைநீட்டிய பிக்காரி கூட்டம் நம் கூட்டம். எக்கச்சக்கமான நாட்டுக்கட்டை சதைகளை 3டியில் பார்த்துவிட்டால், திரையரங்குகளின் திரை என்ன கதிக்கு ஆளாகுமோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இப்போதைக்கு கீழே இருக்கும் படத்தை, 3டியாக நினைத்துக்கொண்டு, உற்று உற்றுப் பார்த்து நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!
சிறப்பான பிட்டுரை
பதிலளிநீக்குThanks
நண்பர்களே!
பதிலளிநீக்குஆர்வக்கோளாறில் ட்ரைலர் மற்றும் காட்சிகளை பின்னூட்டத்தில் லிங்க் ஆக கொடுத்துவிடாதீர்கள். இது ஆபாச வலைப்பூ அல்ல.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும். தேடுதல் உள்ள மனிதன் இலட்சியத்தை எட்டுவான். யார் யாருக்கு தேடுதல் வேட்கை இருக்கிறதோ, அவர்களே யூட்யூபில் தேடிப்பிடித்து பார்ப்பார்கள்.
யுவா.. நீங்களா...? ரொம்ப நாளா வாட்ச் பன்றேன்.. இது கொஞ்சம் ஓவரா தெரியல!?
பதிலளிநீக்கு//யுவா.. நீங்களா...? //
பதிலளிநீக்குஅப்பறம்?
விகடன் தாத்தாவுக்கே தெரிஞ்சு லைட்ட்டா குட்டிருக்காரு இன்னைக்கு இஷ்யூவுல. உங்களுக்குத் தெரியலயா?
இவிங்க இருக்கட்டும் யுவா.. நீங்க கண்டின்யூ பண்ணுங்க...
//இப்போதைக்கு கீழே இருக்கும் படத்தை, 3டியாக நினைத்துக்கொண்டு, உற்று உற்றுப் பார்த்து நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்//
பதிலளிநீக்குஇது அச்சு அசல் 3டி படம் தான்.
TOP,CENTRE,BOTTOM என 3 DIMENSION.
//மெசேஜைதான் படம் முழுக்க காமத்தைக் கொட்டோ கொட்டுவென்று கொட்டி சொல்லியிருக்கிறார்கள், முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி//
பதிலளிநீக்குஅல்லது ஆசான் ஓஷோ (ரஜனிஷ்) மாதிரி.....
//நாயகன் அரசகுலத்தைச் சார்ந்தவன். வாழ்க்கை என்பது மிகக்குறுகியது. இந்த குறுகியக் காலக்கட்டத்துக்குள் உடல் ஆசையின் உன்னத நிலையை அடைந்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் வாழ்ந்து வருபவன்//
கொஞ்சம் பாபா சாயல் அடிக்கின்றது
இது ஆபாச வலைப்பூ அல்ல.
பதிலளிநீக்கு:) ;)
//விகடன் தாத்தாவுக்கே தெரிஞ்சு லைட்ட்டா குட்டிருக்காரு இன்னைக்கு இஷ்யூவுல. உங்களுக்குத் தெரியலயா?//
பதிலளிநீக்குஇதென்ன மேட்டர் பரிசல்?
இன்னும் கொஞ்சம் குஜாலானா படத்தை கடைசீல போட்ட்ருக்கலாம்..
பதிலளிநீக்குvaaalthukkal... u r blog is listed in ananda vikatan this week.... congrats
பதிலளிநீக்குவிகடன் தாத்தாவுக்கே, ச்சீய் தாத்தாவையே எழுந்து உட்கார வச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்... அவங்க சொல்றாங்க இவங்க சொல்றாங்கன்னு எதும் எடாகூடமா எழுதாம விட்ற போறீங்க.. :)
பதிலளிநீக்குMahesh and Team , Jawahar Arts and Science College, Neively.
பதிலளிநீக்குகல்லூரி மாணவர்கள் நாங்கள் ஒரு குழு அமைத்து கடந்த 20௦ நாட்களாக தமிழகத்தின் பல தொகுதிகளில் மக்களை சந்தித்து சேகரித்த முடிவின் படி கணிப்பு இது.
சர்வே குழு - 38 ,
மொத்த தொகுதிகல் சென்றது - 110
மொத்த மக்கள் - 12000+
3 கேள்விகள் தான் முன் வைத்தோம்
1. எந்த கட்சிக்கு வாக்களித்தீர்
2. யாருக்கு வாக்களிப்பதாக நினைத்திருந்தீர்
3. முக்கிய பிரச்னை எது
முடிவுகள்
தி மு க விற்கு வாக்களித்தோம் - 40%
அதி மு க விற்கு வாக்களித்தோம் - 51௧
ப ஜ க - 6
மற்றவை - 3
தி மு க விற்கு வாக்களிக்க நினைத்து அதிமுக விற்கு மாறியவர்கள் - 17%
அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து திமுக விற்கு மாறியவர்கள் - 9%
திமுக அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து ஆனால் இரண்டும் பிடிக்காமல் மற்ற கட்சிக்கு வாகளிதவர்கள் 6%
தொகுதிகள்
தி மு க 28
அதிமுக 81
BJP 1
இதன் படி பார்த்தல் தி முக 60௦ம் அதிமுக 172௦ம் , BJP -2
முக்கிய பிரச்சனையாக மக்கள் சொன்னது :
மின் வெட்டு, விலையேற்றம்
spectrum , ஈழம் ஒரு சில தொகிதிகளில் மட்டுமே பிரச்சனையாக சொல்லப்பட்டது.. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
மதிமுக வெளியேற்றப்பட்டதால் அதிமுகக்கு வாக்களிக்க நினைத்ததில் 4% பேர் வேறு கட்சிகளுக்கு வாகளித்துள்ளனர்
மதிமுகவினர் பலரும் திமுக விற்கும், சிலர் பாஜக விற்கும் வாக்களித்துள்ளனர், குறிப்பிட்ட சதகிவிததினர் வாகளிக்கவே இல்லை
விஜயகாந்த் பிரச்சாரம் எடுபட வில்லை - விஜயகாந்த் அதிமுக கூட்டணி வைத்தது பிடிக்காமல் தேமுதிக வாக்குகள் சில ப ஜ க விற்கு சென்றுள்ளது
ஜெயலலிதா போக்கில் மற்றம் இல்லை எனினும் இன்றைய சூழலுக்கு அவரே சரியானவர் என்று பலர் சொன்னார்கள்
கருணாநிதி நல்லவர் சுற்றி இருப்பவர்கள் சரி இல்லை என்ற கருத்தும் உள்ளது
இலவச திட்டங்கள் கிராமங்களில் நல்ல வரவேற்பு ஆனால் மின்தடை விலை வாசி ஆகியவை பலனை குறைத்துள்ளது
வடிவேலு பிரசாரம் சில தொகுதியில்
எடுப்பட்டுள்ள போதிலும்.. பல இடங்களில் அவரை வேடிக்கை பார்க்க மட்டுமே கூட்டம்
கிராமபுரத்தில் திமுகவிற்கு சற்று வலு கூடியுள்ளது
நகர்ப்புறங்களில் அதிமுக முந்துகிறது.
பிரசாரத்தில் பிடித்தது - கலைஞர், ஸ்டாலின், நல்லகண்ணு, நெப்போலியன்.
ஊனமுற்றோர் பலர் தி மு க விற்கு வாகளித்துள்ளனர்
மதுரையில் இந்த முறை ஆசாகிரிக்கு இறங்கு முகம்
கொமுக பெரிய அளவில் தி மு கவிற்கு உதவிட
வில்லை
அதே போல ச ம க மற்றும் புதிய தமிழகம் அதிமுகக்கு உதவிடவில்லை
Note: Any bloggers can make this as a seperate post in their blog, please
//‘மை டியர் குட்டிச்சாத்தானை’ 3டியில் பார்த்தே, கோன் ஐஸை பிடுங்க திரைக்கு முன்னால் கைநீட்டிய பிக்காரி கூட்டம் நம் கூட்டம். எக்கச்சக்கமான நாட்டுக்கட்டை சதைகளை 3டியில் பார்த்துவிட்டால், திரையரங்குகளின் திரை என்ன கதிக்கு ஆளாகுமோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
பதிலளிநீக்கு//
LOL
http://yawcg.org/2011/
பதிலளிநீக்குPls join.
தமிழர்களே ஒன்று படுங்கள். இது தான் சரியான நேரம். முடிந்தவரை மக்களுக்கு உண்மை தெரிய செய்து ,
மக்களை ஒன்று திரட்டுவோம்.
தொடர்புக்கு:
திருமலை – 9944224935
அருண்ஷோரி - 9003154128
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள்
1. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF)
2. தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை
3. தமிழ்த் தேச மாணவர் இயக்கம்
4. அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF)
5. சர்வதேச தமிழர் கழகம்
6. மே 17 இயக்கம்
7. இந்து மக்கள் கட்சி
8. மக்கள் சக்தி கட்சி
9. இளைஞர் இயக்கம்
10. அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்
11. ஒடுக்கப்பட்டோர் விடுதலை வேங்கைகள்
12. கச்சத்தீவு மீட்பு இயக்கம்
இயக்கத்தில் பங்கேற்பதாக உறுதியளித்த அமைப்புகள்
1. பெரியார் திராவிடர் கழகம்
2. நாம் தமிழர் கட்சி
3. தமிழர் தேசிய கட்சி
4. தமிழர் எழுச்சி இயக்கம்
5. மக்கள் மன்றம்
6. அம்பேத்கர் சிறுத்தைகள்
7. தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
8. தமிழின கூட்டமைப்பு
9. ஆதி தமிழர் விடுதலை இயக்கம்
10. ஆதித்தமிழர் பேரவை -அதியமான்
11. பெரியார் தத்துவ மையம்
12. தமிழர் சமயம்
13. மள்ளர் மீட்பு களம்
14. தமிழர் களம்
15. தமிழ் இளைஞர் கூட்டமைப்பு
16. உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்
17. தேசிய இனங்களுக்கான உரிமை கூட்டமைப்பு
18. தமிழர் உரிமை முன்னணி
19. மக்கள் விடுதலை முன்னணி
20. ஆதி தமிழர் விடுதலை முன்னணி
21. அருந்தமிழர் விடுதலை இயக்கம்
22. தமிழர் விடுதலை இயக்கம்
23. சமத்துவ முன்னணி
24. Vizhithezhu iyakkam, Mumbai (தொடர்பு சிரிதர் -9702481441)
wow :D :D
பதிலளிநீக்கு//குறைந்தபட்சம், நம்முடைய தலைவர் சாருநிவேதிதா அவர்களையாவது ஹாங்காங்குக்கு அரசு செலவில் அனுப்பிவைத்து, பார்த்து ரசிக்கவைத்து, இப்படத்தைப் பற்றி உயிர்மையில் விமர்சனமாவது எழுதவைக்க மன்மோகன்சிங் அரசாங்கம் முயற்சிகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
பதிலளிநீக்குஒருவேளை அரசு இப்படத்தை இந்தியாவில் அனுமதித்து விட்டாலும், ஒரு சிறு அச்சம். ‘மை டியர் குட்டிச்சாத்தானை’ 3டியில் பார்த்தே, கோன் ஐஸை பிடுங்க திரைக்கு முன்னால் கைநீட்டிய பிக்காரி கூட்டம் நம் கூட்டம். எக்கச்சக்கமான நாட்டுக்கட்டை சதைகளை 3டியில் பார்த்துவிட்டால், திரையரங்குகளின் திரை என்ன கதிக்கு ஆளாகுமோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.//
இந்த இரண்டு பாராவையும் படித்து சிரித்ததில் வயிற்று வலியே வந்துவிட்டது.
ஆஹா அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
பதிலளிநீக்குஅருமை அருமை.. இந்த இதுக்குதான் சுஜாதா விருதா.. பிரமாதம் அடுத்த ஆண்டு திருமாவலவன் விருது வாஙக வாழ்துக்கள்
பதிலளிநீக்குபடத்தை பார்ப்பதா ! கட்டுரையை படிப்பதா !
பதிலளிநீக்குதியேட்டரில் பெண் ஊழியர்கள் இல்லாமல் இருப்பது நல்லது
பதிலளிநீக்கு