3 மே, 2011

வானம்



படத்தைப் பற்றி பெரியதாக சொல்ல எதுவுமில்லை. ‘வேதம்’ என்கிற அற்புதமான தெலுங்கு காவியத்தை, முடிந்துப்போன தம்மை காலில் போட்டு நசுக்குவது மாதிரி நசுக்கியிருக்கிறார்கள். குறிப்பாக பரத் கதாபாத்திரம் மகா அகோரம். வேகாவின் மூக்குத்தி கொடூரம். சிம்பு அண்டா சைஸ் சொம்பு. பிரகாஷ்ராஜின் அழுகையை கண்டிருந்தால், நாயகன் கமல் தூக்குமாட்டி செத்துவிடுவார். சோனியா அகர்வாலின் முதல் குளோசப்பை கண்ட குழந்தைகளுக்கு இரவுக்காய்ச்சல் வரும் (பன்மடங்கு உப்பிப்போய் ‘பத்து பத்து’ பிட்டுபட சோனா மாதிரி இருக்கிறார்). ‘எவண்டி உன்னை பெத்தான்?’ பாட்டை பார்ப்பதற்கு/கேட்பதற்கு பதில், பட்டையடித்து மட்டையாகலாம்.

இன்னும் ஆயிரம் அடாசுகள் படத்தில் இருந்தாலும், இது ஒரு முக்கியமான படம். இந்துத்துவ தீவிரவாதத்தையும், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் ஒரே தட்டில் நிறுத்திவைத்து தமிழில் நேர்மையாக பேசியிருக்கும் முதல் படம். இதற்காகவே இந்த திராபையான படத்தை மெச்ச வேண்டியிருக்கிறது. ஆதரிக்க வேண்டியிருக்கிறது.

மும்பை பாணியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், தமிழகத்தில் என்று நடைபெற ஆரம்பித்ததோ, அன்று சொருகப்பட்டது நம் மத நல்லிணக்கத்துக்கான ஆப்பு. இதுபோன்ற வெறிபிடித்த ஊர்வலங்களின் இருண்ட மறுபக்கத்தை ஒரு சிறுகாட்சி மூலமாக சிறப்பாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மதபோதை இருக்கும்பட்சத்தில் அது எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுமென்று பிரகாஷ்ராஜின் தம்பியை தீவிரவாதத்திற்கு தள்ளிவிடும் அந்த இந்து எஸ்.பி கதாபாத்திரம் மூலமாக கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.

பலமுறை நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய விஷயம்தான். இஸ்லாமியன் இங்கே இந்திய நாட்டுப்பற்றை நெற்றியில் பெரிய ஸ்டிக்கராக ஒட்டிவைத்துக் கொண்டே திரிய வேண்டியிருக்கிறது. நாட்டுப்பற்றே சற்றுமில்லாத, இந்த நாடு மீது எந்த மரியாதையுமில்லாத என்னைப் போன்றவர்கள், இந்துவாக பிறந்து தொலைத்துவிட்டதால் எந்தப் பிரச்சினையுமின்றி வாழமுடிகிறது. இந்துவாக பிறந்துவிட்டவன் இந்த நாட்டை, தலைவர்களை, அரசியலை என்னமாதிரியாக வேண்டுமானாலும் பேசமுடியும். ஓர் இஸ்லாமியன் கொஞ்சம் சுருதி தவறி பேசிவிட்டால் போதும். அவன் அல்-உம்மாவா, சிமியா என்று ஆராயத் தொடங்கிவிடுகிறோம்.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போதும் கூட, “துலுக்கனுங்க பாகிஸ்தானைதான் சப்போர்ட் பண்ணுவானுங்க” என்று சிண்டு, வண்டுகள்கூட அனாயசமாக ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் அடித்துவிடும் வகையில் இந்திய பொதுப்புத்தி ஆழமாக கட்டமைக்கப்பட்டு விட்டிருக்கிறது. “நாங்கள் இந்தியர்கள்” என்று சொல்லிக்கொண்டே, இஸ்லாமியர்கள் சீதை மாதிரி சிதையில் இறங்கி தங்களது நாட்டுப்பற்று கற்பினை நிரூபித்தாக வேண்டுமா என்று தெரியவில்லை.

பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் மூலமாக மிகச்சரியாக இந்த அசாதாரண நிலையினை படமாக்கியிருக்கிறார் இயக்குனர் க்ரீஷ். இந்த வாரம் யாருக்கு பூங்கொத்து தருவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஞாநியிடமிருந்து பிடுங்கி, வானம் பட இயக்குனருக்கு கொடுத்துவிடலாம்.

23 கருத்துகள்:

  1. //மிகச்சரியாக இந்த அசாதாரண நிலையினை மிகச்சரியாக படமாக்கியிருக்கிறார் //

    //பூங்கொத்து தருவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் ஞாநியின் பூங்கொத்தை //

    டெட்லைன் பிர‌ஷ‌ரா த‌ல‌?

    பதிலளிநீக்கு
  2. என்ன தல ரொம்ப சிறுசா இருக்கு???
    http://www.narumugai.com/2011/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ உங்களை பார்த்து வளர்ந்தவனின் விமர்சனம் இங்கே..

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1:49 PM, மே 03, 2011

    வாங்கித் திங்கும் காசுக்கு வஞ்சனை இல்லாம குலைத்திருக்கிறீர்கள் லொல் லொல்.....ஊப்....வூர்ர்ர்ர்ர்ர்.லொல்...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:55 PM, மே 03, 2011

    //// ‘எவண்டி உன்னை பெத்தான்?’ பாட்டை பார்ப்பதற்கு/கேட்பதற்கு பதில், பட்டையடித்து மட்டையாகலாம்./// ஆமா சொதப்பிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  5. //இந்துவாக பிறந்துவிட்டவன் இந்த நாட்டை, தலைவர்களை, அரசியலை என்னமாதிரியாக வேண்டுமானாலும் பேசமுடியும். ஓர் இஸ்லாமியன் கொஞ்சம் சுருதி தவறி பேசிவிட்டால் போதும். அவன் அல்-உம்மாவா, சிமியா என்று ஆராயத் தொடங்கிவிடுகிறோம்//



    முற்றிலும் உண்மை.


    //திராபையான//--> என்ன அர்த்தம் ...? ( அடாசு படம்னு சொல்ல வரீங்க..இல்லையா ...? )


    //சோனியா அகர்வாலின் முதல் குளோசப்பை கண்ட குழந்தைகளுக்கு இரவுக்காய்ச்சல் வரும்//



    படத்தில் அநியாயத்திற்கு நிறைய குளோசப் வருகிறது.

    கோ பார்த்தபிறகு வானம் பார்த்தால் மனதில் சுத்தமாக ஓட்ட வில்லை. அது போக படம் பார்க்கும் போது 5 முறை பவர் கட். ( ஈரோடு ).

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2:38 PM, மே 03, 2011

    Hi Lucky

    What about Anushka? No comment about her

    பதிலளிநீக்கு
  7. மன்னிக்கவும் கார்க்கி.

    யானைக்கு மட்டுமல்ல. சிலநேரம் என்னை மாதிரி பூனைகளுக்கும் அடி சறுக்கிவிடுகிறது :-(

    பதிலளிநீக்கு
  8. //சோனியா அகர்வாலின் முதல் குளோசப்பை கண்ட குழந்தைகளுக்கு இரவுக்காய்ச்சல் வரும்//
    க்ளோசப்ல பாக்காமலே பயமாத்தான் இருக்கும் உப்பி போய்...
    ஆமா, அனுஷ்கா பற்றி ஒன்னும் சொல்லலயே? எனக்கென்னவோ அப்ப்ப்பிடியே பொருந்தினமாதிரி இருக்கு ஸ்டில் பார்க்கவே! :-)

    பதிலளிநீக்கு
  9. தமிழன்6:58 PM, மே 03, 2011

    //முடிந்துப்போன தம்மை காலில் போட்டு நசுக்குவது மாதிரி நசுக்கியிருக்கிறார்கள். மகா அகோரம். வேகாவின் மூக்குத்தி கொடூரம்.அண்டா சைஸ் சொம்பு. நாயகன் கமல் தூக்குமாட்டி செத்துவிடுவார். குளோசப்பை கண்ட குழந்தைகளுக்கு இரவுக்காய்ச்சல் வரும், பட்டையடித்து மட்டையாகலாம்.//

    இவ்வளவு எரிச்சலை கொட்டிய உங்களுக்கு, அசல் அழகி அனுஷ்காவைப் பற்றி ஒரு வார்த்தை எழுதத்தோன்றியதா?!? நீரெல்லாம் பெரிய பதிவர்!!

    பதிலளிநீக்கு
  10. விமர்சனம் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  11. //என்னைப் போன்றவர்கள், இந்துவாக பிறந்து தொலைத்துவிட்டதால் எந்தப் பிரச்சினையுமின்றி வாழமுடிகிறது//
    ஐயோ பாவம். பேசாமல் இஸ்லாமியராக மதம் மாறிப்பாருங்களேன்....

    பதிலளிநீக்கு
  12. இன்னும் திரைப்படம் பார்கவில்லை.எனினும் புகைப்படம் நன்று. :-)

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா3:22 AM, மே 04, 2011

    "நாட்டுப்பற்றே சற்றுமில்லாத, இந்த நாடு மீது எந்த மரியாதையுமில்லாத என்னைப் போன்றவர்கள், இந்துவாக பிறந்து தொலைத்துவிட்டதால் எந்தப் பிரச்சினையுமின்றி வாழமுடிகிறது. "//

    Cool Lucky.. just because Vinavu has said some thing about you and your boss you should not start hating your country... The same country is honouring you with money and fame and awards( Charuvukku vaal pidichi vangineeengannu nalu per sonnalum naan nambalai)... After May 13th you may get Ko Pa Se post from Thaleevar...
    Do not ask what the country has done for you ask what you have done for the country...

    பதிலளிநீக்கு
  14. பல இடங்களில் நீங்கள் என்னுடன் உடன்படுகிறீர்கள். குறிப்பாக பிள்ளையார் ஊர்வலம். இங்கே சேட்டுங்க ஊர்வலத்தையும் மத பிரச்சனையையும் கொண்டு வந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா1:09 PM, மே 04, 2011

    என்ன லக்கி ரவுசு கட்டுற, இந்த மாதிரி கட்டுரைகளை உனக்கு விருது கொடுத்தவங்க படிக்கனும். பாவம் அமரர் சுஜாதா!!

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா2:01 PM, மே 04, 2011

    why don't you cut your dick
    and convert yourself as a muslim
    there are no one in this country
    begging you to be Indian and hindu
    if you don't like your nationality and religion ,denounce it

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா11:47 AM, மே 05, 2011

    இந்து தீவிரவாதம் என்று ஒன்று கிடையாது ...சும்மா உருவாக்கி விட்டார்கள் என்று சப்பை கட்டு கட்டுபவர்கள் ...மேலே உள்ள "சில" மதவாதிகளின் எழுத்தில் உள்ள தீவிரவாதத்தை உணரலாம் ! அதிலும் நம்ம லுக்கின் "அதை" வெட்ட வேண்டும் என்று சொல்லும் வன்மம் சிரிப்பு உண்டாக்குகிறது :) விட்டால் அவரே வந்து அதை "cut" பண்ணி விடுவாரோ !!!?? :) குறைகளையும் நிறைகளையும் சரியாக சொல்லி படம் எதனால் வரவேற்கப்பட வேண்டும் என்றும் சொன்ன லுக்க்யிக்கு என் வாழ்துக்கள் ! தெலுகுவில் இந்த படம் பார்த்து கண்ணீர் முட்டியது ! இன்று இந்த படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்! சங்கம் பெட்டெர் என்று நினைக்கிறேன் ! யாரும் கத்திரிகோலோடு நின்றால் போக மாட்டேன் ;) - Bloorockz Ravi

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா12:30 PM, மே 05, 2011

    தம்புக் குட்டா !இதே மாதிரி எழுது இல்லைன்னா படியளக்கிற என்.ஜி.ஒ ஆசாமிகள் ஆப்பு அடிச்சிடுவானுக.

    அப்புறம் பூவாவுக்கு என்னா பன்னுறது

    பதிலளிநீக்கு
  19. "Iru matha theeviravadhathaiyum"

    - Nam naattil Indhu theeviravadham endru ondru illavae illai. Indha vaarthai ungalai pondra "Madha Saarbinmaivadhi" image/vilambaram thevaippadubavargal panbaduthvathu.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா12:55 PM, மே 06, 2011

    மக்களே ,நேற்று இந்த படத்தை பார்த்தேன் ! ஏற்கனேவே தெலுகுவில் இந்த படத்தை பார்த்து சிலிர்தவர்களில் நானும் ஒருவன்!! படம் நன்றாகவே வந்திருக்கிறது !சந்தானத்தின் காமடி தெலுகுவை விட இந்த படத்துக்கு ஒரு பிளஸ் !நல்ல படம் ...உங்கள் கண்களின் ஓரத்தில் இரண்டிலிருந்து மூன்று முறையாவது கண்ணீர் எட்டி பார்க்கும் ! நீங்களே பார்த்து முடிவு செய்யுங்கள் ! - Bloorockz Ravi
    Lucky,I couldn't spot the scissor guy ;)

    பதிலளிநீக்கு
  21. ஆமாம்,ஒரு கேள்வி முன் வைக்கிறேன் பிரசன்னா அவர்களே , 100 வீடு இருக்கும் இடத்தில் இருபது பேர் வேற்று மதத்தினர் இருந்தும் தன்னிச்சையாக அனைவரின் சம்மததியும் வாங்காமல் பத்துக்கு பத்தில் பிள்ளையார் கோவில் வைப்பதும் ......அரசு அலுவல்களில் ...இந்து தெய்வங்கள் மட்டும் இருப்பதும் ...மற்றவர்களின் மனதை பற்றி எந்த அக்கறையும் இல்லாத ஹிப்போக்ரிசிக்கு பேர் என்ன !!?? என்னை பொறுத்த வரையில் அதுவும் ஒரு வகை mild தீவிரவாதமே !!

    பதிலளிநீக்கு
  22. வன்முறையாகவும் மத வெறியர்களின் கயமை புத்தி எந்தளவிற்கு பேச வைக்கும் என்பதற்கு இங்கே வந்திருக்கும் கமென்டுகள் சாட்சி.பொறுக்கித்தனமாகவும் பேசுபவர்களுக்கு பதில் சொல்லாமல் இருப்பது ரொம்ப தப்பு. கமான் கிருஷ்ணா!

    பதிலளிநீக்கு
  23. தேசப்பற்று‍ என்பதற்கு‍ பலபேர் மொக்கையான அர்த்தத்தை கொண்டிருக்கும்போது‍, எனக்கு‍ இந்த நாட்டின் மீது‍ துளியும் மரியாதை இல்லை என துணிவாக நீங்கள் பதிவிட்டிருப்பது‍ கூட ஒரு‍ வகையில் இந்த தேசத்தை நீங்கள் வெறியாக நேசிப்பதாகத்தான் எனக்கு‍ படுகிறது.

    (நோ, நோ அழப்படாது)

    பதிலளிநீக்கு