21 மே, 2011

துரோகிகளும், தியாகிகளும்

1991 மே 22. அதிகாலை. ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. பள்ளி விடுமுறை. குட்டிப்பையன் நான். மேல்சட்டையுடன், ஜட்டியை விட மேலான ஒரு டவுசர் மட்டுமே அணிந்திருந்த நான் ’ஆபத்து’ புரியாமல் குதூகலித்தேன். தேர்தல் நேரம். டீக்கடை வாசலில் அதிமுக-காங்கிரஸார் குவிந்து சோகமாகவும், விஷமமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதுமே எனக்கு ஒருமாதிரியான வெறி. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே” என்று வெறுப்பேற்றி விட்டு வீட்டுக்கு ஓடினேன்.

பின் தொடர்ந்து ஓடி வந்த தொண்டர்களும், குண்டர்களும் வீட்டை சூறையாடி விட்டார்கள். எனது பெரியப்பாவின் மண்டை உடைந்தது. நல்ல வேளையாக எவருடைய உயிருக்கும் சேதாரமில்லை. தொடர்ந்த கலவரத்தால் எங்கள் ஊரிலிருந்த திமுகவினர் உடைமைகள் பறிபோயின. உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல். திமுகவினர் அதிகம் பேர் இருந்த பெரிய காய்கறி மார்க்கெட் ஒன்று எரிக்கப்பட்டது. பிரச்சாரத்துக்கு வைத்திருந்த அலங்கார வளைவுகள் தீவைக்கப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

இது என்னுடைய சொந்த அனுபவம். தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.

வட மாவட்டம் ஒன்றில் கட்சிக்கொடி கம்பத்தை வெட்ட வந்தவர்களிடம் இருந்து, கம்பத்தை காப்பாற்ற கட்டிப்பிடித்த தொண்டரின் கை வெட்டப்பட்டது. இதுமாதிரி நிறைய. எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விடவும், மிக அதிகமான கொடூரமான வன்முறையை திமுகவினர் சந்தித்த தருணம் அது.

ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம். கொலைப்பழியின் காரணமாக எங்கள் இயக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கழிந்து ஆட்சிக்கு வந்தும் கொலைப்பழி தீரவில்லை. ஜெயின் கமிஷன் நெருப்பாற்றில் நீந்தி சமீபத்தில்தான் கரை சேர்ந்தோம்.

ஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.

இருபதாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிமுக மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரையும், உடமையையும் இழந்த கழகத் தோழர்களுக்கு வீரவணக்கம்!

31 கருத்துகள்:

  1. பாவம் ஓரிடம் பழி வேறிடம்,

    பதிலளிநீக்கு
  2. உயிரிழந்த தோழர்களின் குடும்பத்தினர்க்கு அனுதாபங்கள். தொண்டர்களின் உயிரெடுத்த கட்சியோடு ஏன் தலைமை கூட்டணி வைத்தது? பின்னர் ஏன் அவர்கள் காலடி சேர்ந்து கடந்த ஐந்தாண்டு ஆட்சி? அதுவாவது பரவாயில்லை. இன்னும் ஏன் அவர்களோடு இணக்கமாக இருக்கிறது கட்சித் தலைமை? தொண்டனை விட பதவி - மத்தியில் - பெரிதா? தலைவர்கள் தொண்டனை மதிக்கவேயில்லை. குடும்பத்துக்காக கட்சி அடகு வைக்கப்பட்டது தெரிந்தும் தொண்டன் ஏன் சும்மா இருக்கவேண்டும்? ஏதாவது செய்யலாமே, கட்சியைக் காப்பாற்ற?

    பதிலளிநீக்கு
  3. கிருட்டிணன்6:21 PM, மே 21, 2011

    அப்பாவி தொண்டர்கள் இறந்தது மிகப்பெரும் சோகம். அவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கழகம் அவர்களுக்கு என்ன செய்தது என்றும் கூறினால் நலமாக இருக்கும். கழகம் நல்லதுதான். தலை அழுகி விட்டது. கழகமும் அழுகி விட்டது. அதனால் தான் 2009 மே மாதத்திற்கு பிறகு வந்தவன் எல்லாம் தியாகியாக தெரிகிறான். தொண்டன் எல்லாம் எங்களுக்கு தேர்தல் பணிக்கு. அப்புறம் சோறில் இருக்கும் கறிவேப்பிலை போல் தூக்கி எறிவது கழக தலைமைக்கு ( அதிமுக, திமுக எல்லாம் ஒரே மாதிரி தான் ) கை வந்த கலை. தொண்டனுக்கு பரிதாபப்படுவதை தவிர அவர்கள் இன்னமும் படித்தும் உங்களை போல் மடையர்களாக இருக்கிறார்களே என்றும் வருந்துகிறேன். கட்சியை பார்க்காதீர். ஆட்களை பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. கண்ணத் தொடைங்க!......கண்ணத் தொடைங்க!....இப்போ எதுக்கு சௌகார் ஜானகி ரேஞ்சுக்கு கண்ணைக் கசக்கிக் கிட்டு!......

    பதிலளிநீக்கு
  5. தி மு க-வின் ஒரு கிளை நதிதான் அ தி மு க. எம் ஜி ஆர் ஏன் புடம் போட்ட தங்க கூட்டத்தை விட்டு வெளியேறினார்? வைகோ-வுக்கு என்ன பிரச்சனை? தி மு க, அதன் அரத பழசான கொள்கைகளை விட்டு விலகி ரொம்ப நாளாயிற்று. நீங்கள் வேண்டுமானால் நெருப்பாற்றில் நீந்துவதாக நினைத்து கொள்ளுங்கள். ஆற்றிலிருந்து கரை ஏறி பார்த்தால் அது கூவமகவும் இருக்ககூடும். தி மு க-வில், தலைவர்கள் பன்னீர் ஆற்றிலும், தொண்டர்கள் கூவம் சேற்றிலும் மிதக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. idleman சொன்னதுல என்ன தப்பு

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா7:32 PM, மே 21, 2011

    லக்கி,

    நாங்கள் அன்று அவ்வாறு இருந்தோம். அதனாலேயே, எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் - நாங்கள் இன்று செய்தவற்றை எல்லாம் மறந்து விட்டு என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா - உங்களுக்கு?

    ஆனால், விவரமறிந்தவர்களுக்கும் தெரியும் - அன்று கூட, நீங்கள் சொன்னது போல் உங்கள் இயக்கம் இல்லை என்பதே உண்மை. எம்ஜிஆரின் அன்பிற்கும், பாத்திரத்திற்கும் உரியவராக, பிரபாகரன் ஆனதும், எம்ஜிஆருக்கு எதிராக அரசியல் நடத்திய கருணாநிதி, போட்டி இயக்கங்களை நடத்தியவர்களுக்கே முக்கியத்துவம் வழங்கினர் என்பதே உண்மை. அப்பொழுதே இலங்கைப் போராளி குழுக்களில் முதன்மையான இடம் பெற்றது விடுதலைப் புலிகள் தான். என்றாலும் கருணாநிதி நிதி வழங்கிய பொழுது, பத்தோடு ஒன்று பதினொன்று என்ற கணக்கிலே, ஒரு அற்பத்தொகையை எல்லா இயக்கங்களுக்கும் போலவே புலிகளுக்கும் வழங்கினார். அதை விடுதலைப் புலிகள் மறுத்து விட்டனர். கருணாநிதிக்கு அந்த ஆத்திரமும் கூட உண்டு.

    புலிகள் தங்கள் தளத்தை வன்னிக்கு மாற்றிக் கொண்ட பின்னும், மற்ற குழுக்கள் தொடர்ந்து சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கத் தான் செய்தன. அவ்வாறு ஒரு போட்டி இயக்கத்தின் மொத்த செய்ற்குழுவையும் குறி வைத்து தாக்கியது புலிகளின் குழு. அதன் பின்னர் தான் அனைவருக்கும் தெரிய வந்தது - புலிகளைத் தவிர மற்றவர்கள் தாராளாமாக நடமாட கழகம் உதவியது என்று.

    பின்னாளில், எம்ஜிஆர் இல்லாத தமிழகத்தை முற்றிலும் உதறிவிட முடியாது என்பதினால், நெருங்கி வர முயற்சிக்கத்தான் செய்தார்கள். வை கோ போன்றவர்கள் அதற்கு உதவ்த் தான் செய்தார்கள். ஆனால், வை கோவை ஸ்டாலினுக்குப் போட்டியாக நினைத்ததும் கட்சியை விட்டு நீக்க முன் வைத்த காரணம் - அவர் அரசின் அனுமதியின்றி, ஈழம் சென்று வந்தார் என்பது பிரதானமானது.

    எந்த வகையில் பார்த்தாலும், ஈழ போராட்டத்தில், கருணாநிதி தன்னுடைய ஓரவஞ்சனையை முன்னிறுத்தியே அரசியல் நடத்தி வந்தார். அதிலும் நெடுமாறன், இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின்பு, புலிகள் விஷயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட, அதில் வேறு கருணாநிதிக்கு கடுப்பு - காரணம், நெடுமாறன் - கருணாநிதியின் நேரிடையான எதிரி. காரணம் - எமர்ஜென்சி முடிந்து, இந்திரா மதுரை வழியாக சென்ற பொழுது, அவரது காரின் மீது ஒரு கொலைவெறி தாக்குதல் நடத்தப் பெற்றது திமுகவினரால். அப்பொழுது இந்திராவின் மீது விழுந்த அடியை தனது முதுகில் தாங்கிக் கொண்டவர் நெடுமாறன். நெடுமாறன், வை கோ போன்றவர்களிடத்தில் புலிகள் வைத்திருக்கும் மரியாதையை தன் மீது காட்டவில்லையே என்ற கோபம் கருணாநிதியிடம் என்றைக்குமே இருந்தது. தன் மேலாண்மையின் கீழ் அடங்க மறுத்த குழுவாகத் தான் புலிகளைக் கருணாநிதி நினைத்தார்.

    அந்தக் குரூரம் தான் - புலிகளின் தலைமை அதன் மக்களுடன் அழிக்கப் பட்ட பொழுது, கருணாநிதி தன் மகனுக்கு, பேரனுக்கு, மகளுக்கு என்று மந்திரி பதவிகளுக்காக, கடிதம் எழுதும், தனது வழக்கத்தை விட்டுவிட்டு டெல்லிக்கு நேராகப் போய் வாதாடிக் கொண்டிருந்தார்.

    ராஜிவின் மரணத்தினால் தமிழர்கள் மனம் புழுங்கினர் என்பது மட்டுமே உண்மை. பெரும் அளவில் கலவரங்கள் வெடித்தது என்பது கட்டுக்கதை.

    பதிலளிநீக்கு
  8. //ஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.//

    தியாகிகள் பட்டியல்ல 2004லிருந்து காங்கிரஸ்ஸுடன் கூட்டணி அமைச்சவங்களையும் சேத்துக்கலாமே?

    இங்க புலம்பாம கேட்க வேண்டியதுதானே உங்கள் தலைவனிடம் ஏன் அவர்களிடம் கூட்டணி வைத்தீர்கள் என்று?

    பதிலளிநீக்கு
  9. தி.மு.க தொண்டர்கள் தான் பிற கட்சி தொண்டர்களை தாக்குவது வழக்கம். அது தான் வரலாறு.

    பதிலளிநீக்கு
  10. Lucky,
    I dont understand why you are posting this now. Its very clear that you want to write something else other than the election results. Like Idleman asked why did the party align with congress later. Its very obvious that Karunanithi used the good feeling for tamils only for his pary's benefits. Where were you when karunanithi staged an "unnaviratham" for three hours in the beach with AC and manaivi and thunaivi. If you are true to your belief you should post the wrong things or criticize the decision making of Karunanithi. Your last post and this post show that you are not accepting the verdict of people. I personally think that Karunanithi should handover the party to Stalin whom everyone accept rather than Alagiri, kanimozhi, KD brothers and all the nithis. What happened to your prediction of 2G and varisu arasial are "lottu and losukku". It doesnot mean that Jaya would give a perfect ruling. She has also erred in the past but hopefully she must have learned from her mistake and the mistakes from last ruling. Please accept people's verdict and do not pretend as if you are very brilliant. I still remember what Karunanithi did when Vaiko divide the party. He announced that he would not involve in politics (but even that itself is a politics). As the party men did not respond the way he expected he returned back. What was your comments of Karunanithi towards Vaiko at that time. Now the party is in dire state as it could not make anything with Congress. Only thing they can do is ask kanimozi or Raja to leak the involvement of Congress in the 2G scam. The way the politics is going I am expecting a lot of irrelevent post from you in future.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா1:39 AM, மே 22, 2011

    என்னபா இந்த பதிவுக்கு பின்னூட்டம் ஏதும் வரல. எல்லாரும் ஓடிட்டாங்களா? சுஜாதா விருது வாங்கினவருக்கு ரெண்டு பின்னூட்டம் தானா? அய்யகோ? சுஜாதா ஆவி மட்டும் இன்னும் பூமில சுத்திகிட்டு இருந்துச்சுன்னா மறுபடியும் ஒரு தடவை தூக்கு போட்டு தற்கொலை பண்ணி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. //உயிரிழந்த தோழர்களின் குடும்பத்தினர்க்கு அனுதாபங்கள். தொண்டர்களின் உயிரெடுத்த கட்சியோடு ஏன் தலைமை கூட்டணி வைத்தது? பின்னர் ஏன் அவர்கள் காலடி சேர்ந்து கடந்த ஐந்தாண்டு ஆட்சி? அதுவாவது பரவாயில்லை. இன்னும் ஏன் அவர்களோடு இணக்கமாக இருக்கிறது கட்சித் தலைமை? தொண்டனை விட பதவி - மத்தியில் - பெரிதா? தலைவர்கள் தொண்டனை மதிக்கவேயில்லை. குடும்பத்துக்காக கட்சி அடகு வைக்கப்பட்டது தெரிந்தும் தொண்டன் ஏன் சும்மா இருக்கவேண்டும்? ஏதாவது செய்யலாமே, கட்சியைக் காப்பாற்ற?//

    நியாயமான கேள்விகள்

    பதிலளிநீக்கு
  13. Lucky,

    I remember that day. My neighbor who is a ADMK supporter try to attack me without any reason. But as I have more friends and relatives (in different party) they came there and warned the guy.

    I remember that day now....

    santhose

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா7:52 AM, மே 22, 2011

    This is nothing but reflection of Murasoli letter. So far congress was 'uyir nanban' for DMK for getting plum portfolios in the centre. Now from Kashmir to Kanyakumari, DMK is haunted according to MK and his followers. Ironically,these sorts of statements from MK would be believed by the hardcore followers with some brain also. They conveniently forget the fact that it is their sacrifices (not MK family) as narrated in this story itself, which has contributed to the success of DMK so far.

    Would you question your leaders for continuing with the alliance even after 2009 incidents? Neither the leaders nor followers in DMK would introspect. They pick and choose some portions in the history for their benefit,as usual.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா9:06 PM, மே 22, 2011

    Lucky

    After losing the elections DMK (and you) are not able to accept the defeat gracefully

    It is showing in your blogposts. Be sportive and accept defeat.

    பதிலளிநீக்கு
  16. நல்ல வேளை. ஈழம் சம்பந்தமாக உங்கள் தானை தலைவர் எவ்வளவு பிடுங்கியிருக்கோம் பார்த்தீர்களா என்று எண்ணத் தான் புருடா விட்டாலும், அதை அனைத்தையும் வெகு திறமையாக அதே சமயத்தில் கருணாநிதியின் கயமைத் தனைத்தையும் துகிலுரிக்கும் ஆட்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இல்லை என்றால் 37 நிமிடங்கள் மட்டுமே நீடித்த உலகின் முதல் "சாகும் வரை உண்ணா விரதம்" பற்றி அவர் ஜால்ராக்கள் 370 ஆண்டுகள் மு.க புராணம் எழுதியிருப்பீர்கள். தமிழக மீனவனை தொட்டவனின் கையை உடைத்து எறியத் துப்பில்லாமல், "கொன்றவனின் மனம் நோகாமல் நீக்கு போக்கோடு நடந்துகொள்ள வேண்டும்" என்று உங்கள் தலைவர் சொனனது 'உலக மாகா ராஜ தந்திரம்' என்று டமாரம் அடித்திருபீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாளைய வல்லரசான இந்தியாவின் ஆட்சியை கவிழ்த்து "ஈழப் பிரச்சனை ஒன்று சாதாரண பிரச்சனை அல்ல" என்று ஓங்கி ஒலித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை சொல்ல வேண்டிய அற்புத சந்தர்ப்பத்தை பதவி சுகத்துக்காக மட்டுமே நழுவ விட்டவருக்கு "இனமான காவலர்" என்று பட்டம் கொடுத்து உச்சி முகர்ந்திருப்பீர்கள். இடித்துரைக்க வேண்டிய நேரத்திலும் ஜால்ரா அடிக்கும் உம்மைப் போன்றோர் தான் மு.க வை விட வெகு தீவிரமாக திமுகவை ஒழிக்கப் போகிறீர்கள். அதுவும் அவர் உயிரோடு இருக்கும்போதே நடக்கும். இது "பிஞ்சிலேயே கருகிய" என் தொப்புள் கொடி உறவுகளின் பிய்ந்து கிடந்த சதைக் குவியலின் மீது சத்தியம்.

    பதிலளிநீக்கு
  17. திமுகவை ஒழிக்க தான் மட்டும் போதாதுன்னு லக்கியையும் தலைவர் துணைக்கு சேத்துருக்கர்போல. எனக்கென்னவோ நீங்க அதிமுகவோட ரகசிய தொண்டனோ அப்டின்னு ஒரு சந்தேகம் வேற வருது.

    ராஜீவ் கொலைக்கப்புறம் திமுக தொண்டர்கள் தாக்கப்பட்டது மாதிரி நான் எங்கேயும் படிக்கலை. நீங்க சொல்றது உண்மையா அப்டின்னு எனக்கு தெரியல. எதாவது லிங்க் தர முடியுமா.

    பதிலளிநீக்கு
  18. திமுக தொண்டர்கள் கட்சிகாரர்கள் தாகப்பட்டடு உண்மையே.. அப்போது முதுகலை இரண்டாம் ஆண்டு பதிதுக்கொண்டிருந்தேன்.. ! காங்கிரஸ் மற்றும் அதிமுக பல இடங்களில் திமுகவினரை தாக்கியது நடந்தது.. !

    ஆனால் , அந்த காங்கிரசோடு கூடி குலாவி பதிவியில் இருந்துவிட்டு இப்போது அதை பத்தி பேசுவது சரியல்லவே.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா1:41 PM, மே 23, 2011

    MK's 'sacrifices' duly exposed by his nephew Dhayanidhi Maran. Please see Wiki leaks published in 'The Hindu' today. Even after some rational being like 'Lucky' supports MK means, God (Iyarkai) alone can save him!

    பதிலளிநீக்கு
  20. ஒட்டு மொத்த தமிழக தமிழர்களுமே ஈழ விவகாரத்தில் துரோகிகள் தான். இல்லை என்றால் 2009 தேர்தலில் காங்கிரஸ்-திமுக வெற்றி பெற்று இருக்குமா?

    பதிலளிநீக்கு
  21. Lucky: I really wondering your participation in "anti hindi struggle" and association with chinna kuththoosi.waiting for your writings on the days with CN Annadurai and EVR.

    பதிலளிநீக்கு
  22. ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம்...What do you expect when you as a kid would take 'ownership' of the killing (certainly prompted by such comments by elders of your house hold)"அவர்களை கண்டதுமே எனக்கு ஒருமாதிரியான வெறி. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே” என்று வெறுப்பேற்றி விட்டு வீட்டுக்கு ஓடினேன்.." You took pride in a heinous act and you paid the price stop whining. Also why disparage the image of Christ in this irrelevant post.

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா1:18 PM, மே 24, 2011

    திரு லக்கி அவர்களே தேவையா இந்த கட்டுரை. ஒரு பின்னூட்டம் கூட இதைச் சரி என்று சொல்லவில்லை. உங்கள் எழுத்துக்களை விரும்பும் எங்களுக்கு தேர்தல் தோல்விக்குப் பின் உங்கள் கருத்துக்கள் மிகவும் வருத்தம் அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  24. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே”

    Yuva seriously i cant understand how to show ring finger :-/

    பதிலளிநீக்கு
  25. >> லக்கி,

    நாங்கள் அன்று அவ்வாறு இருந்தோம். அதனாலேயே, எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் - நாங்கள் இன்று செய்தவற்றை எல்லாம் மறந்து விட்டு என்று கேட்பது வேடிக்கையாக இல்லையா - உங்களுக்கு?

    ஆனால், விவரமறிந்தவர்களுக்கும் தெரியும் - அன்று கூட, நீங்கள் சொன்னது போல் உங்கள் இயக்கம் இல்லை என்பதே உண்மை. எம்ஜிஆரின் அன்பிற்கும், பாத்திரத்திற்கும் உரியவராக, பிரபாகரன் ஆனதும், எம்ஜிஆருக்கு எதிராக அரசியல் நடத்திய கருணாநிதி, போட்டி இயக்கங்களை நடத்தியவர்களுக்கே முக்கியத்துவம் வழங்கினர் என்பதே உண்மை. அப்பொழுதே இலங்கைப் போராளி குழுக்களில் முதன்மையான இடம் பெற்றது விடுதலைப் புலிகள் தான். என்றாலும் கருணாநிதி நிதி வழங்கிய பொழுது, பத்தோடு ஒன்று பதினொன்று என்ற கணக்கிலே, ஒரு அற்பத்தொகையை எல்லா இயக்கங்களுக்கும் போலவே புலிகளுக்கும் வழங்கினார். அதை விடுதலைப் புலிகள் மறுத்து விட்டனர். கருணாநிதிக்கு அந்த ஆத்திரமும் கூட உண்டு.

    புலிகள் தங்கள் தளத்தை வன்னிக்கு மாற்றிக் கொண்ட பின்னும், மற்ற குழுக்கள் தொடர்ந்து சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கத் தான் செய்தன. அவ்வாறு ஒரு போட்டி இயக்கத்தின் மொத்த செய்ற்குழுவையும் குறி வைத்து தாக்கியது புலிகளின் குழு. அதன் பின்னர் தான் அனைவருக்கும் தெரிய வந்தது - புலிகளைத் தவிர மற்றவர்கள் தாராளாமாக நடமாட கழகம் உதவியது என்று.

    பின்னாளில், எம்ஜிஆர் இல்லாத தமிழகத்தை முற்றிலும் உதறிவிட முடியாது என்பதினால், நெருங்கி வர முயற்சிக்கத்தான் செய்தார்கள். வை கோ போன்றவர்கள் அதற்கு உதவ்த் தான் செய்தார்கள். ஆனால், வை கோவை ஸ்டாலினுக்குப் போட்டியாக நினைத்ததும் கட்சியை விட்டு நீக்க முன் வைத்த காரணம் - அவர் அரசின் அனுமதியின்றி, ஈழம் சென்று வந்தார் என்பது பிரதானமானது.

    எந்த வகையில் பார்த்தாலும், ஈழ போராட்டத்தில், கருணாநிதி தன்னுடைய ஓரவஞ்சனையை முன்னிறுத்தியே அரசியல் நடத்தி வந்தார். அதிலும் நெடுமாறன், இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பின்பு, புலிகள் விஷயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட, அதில் வேறு கருணாநிதிக்கு கடுப்பு - காரணம், நெடுமாறன் - கருணாநிதியின் நேரிடையான எதிரி. காரணம் - எமர்ஜென்சி முடிந்து, இந்திரா மதுரை வழியாக சென்ற பொழுது, அவரது காரின் மீது ஒரு கொலைவெறி தாக்குதல் நடத்தப் பெற்றது திமுகவினரால். அப்பொழுது இந்திராவின் மீது விழுந்த அடியை தனது முதுகில் தாங்கிக் கொண்டவர் நெடுமாறன். நெடுமாறன், வை கோ போன்றவர்களிடத்தில் புலிகள் வைத்திருக்கும் மரியாதையை தன் மீது காட்டவில்லையே என்ற கோபம் கருணாநிதியிடம் என்றைக்குமே இருந்தது. தன் மேலாண்மையின் கீழ் அடங்க மறுத்த குழுவாகத் தான் புலிகளைக் கருணாநிதி நினைத்தார்.

    அந்தக் குரூரம் தான் - புலிகளின் தலைமை அதன் மக்களுடன் அழிக்கப் பட்ட பொழுது, கருணாநிதி தன் மகனுக்கு, பேரனுக்கு, மகளுக்கு என்று மந்திரி பதவிகளுக்காக, கடிதம் எழுதும், தனது வழக்கத்தை விட்டுவிட்டு டெல்லிக்கு நேராகப் போய் வாதாடிக் கொண்டிருந்தார்.

    >>

    சரியாச் சொன்னீங்க..

    முதல்ல புரிஞ்சிக்க வேண்டிய விசயம்.. "உணர்ச்சி வசப்பட்ட தமிழன்" மட்டும் இல்லைன்னா - கருணா - கோயில்ல உண்டக்கட்டி வாங்கி சாப்டுக்கிட்டு இருந்திருப்பாரு!

    தன் "அடிப்படைகளுக்கு" விசுவாசமா இருக்க மறுக்கும் அயோக்கியர்களுக்கு - காலம் மேலும் பல படிப்பினைகளைத் தரும்!

    துரோகிகளின் கையால் சாவதை விட "பரம்பரை எதிரிகளின் கையால்" சாவது மேல்.

    - "உணர்ச்சி வசப்பட்ட முட்டாத் தமிழன்"

    பதிலளிநீக்கு
  26. Lucky,

    What is your opinion about Saru's latest comment "I received a threat in DMK Period" and about his writings in Tugluk?

    I think this guy is an exentric. Your comment on this pl.

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா5:34 PM, ஜூன் 01, 2011

    Dear Yuva,

    Please write something about anything. Becaue the comments are better then your writings.

    பதிலளிநீக்கு