புண்ணிய பூமியாம் பாரதத்தின் 110 கோடி ஹிந்து மகாஜனங்களுக்கு இருக்கும் மத அபிமானமும், சூடு, சொரணையும், அம்மாவின் தேசமாம் ஸ்ரீ தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்துக்களும் கூட இருக்கிறது என்பதை தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகிறது. குஜராத்தில் நடந்து வரும் நல்லாட்சியைப் போன்றே தமிழகத்திலும் உலகின் ஒரே ஒப்பற்ற தங்கத் தாரகை அம்மாவின் ஆட்சி மலர்ந்திருக்கிறது. ராவணன் ஆட்சி ஒழிந்திருக்கிறது. ராமர் ஆட்சி விடிந்திருக்கிறது.
நடந்தது தேர்தல் அல்ல, இராமாயணம். புரட்சித்தலைவி அம்மா ஸ்ரீராமர். சின்னம்மா ஸ்ரீலட்சுமணர். துக்ளக் ஸ்ரீமான் ராமசாமி ஆஞ்சநேயர். திருக்குவளை தீயசக்தி ராவணன். அண்டோமேனியா சூர்ப்பனகை. இருட்டுக்கடை அல்வா புகழ் ஆற்காடு கும்பகர்ணன். இப்படியாக ஏகப்பட்ட ஒப்புமைகளை இராமாயணத்துக்கும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் நாம் ஒப்பிட்டு பார்க்க இயலும்.
தர்மத்தின் வாழ்வுதனை 2006ல் சூது வென்றாலும், 2011ல் தர்மமே வெல்லும் என்பது உறுதியாயிற்று. குடிகார திம்மியாக ஆரம்பத்தில் அறியப்பட்டு, அம்மாவால் மனம் மாற்றமடைந்த முற்போக்கு திராவிட திம்மியும் கூட, இராமர் பாலம் கட்ட ஸ்ரீ அணில் உதவியது போல அம்மாவுக்கு கொஞ்சமாக உதவியது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிரதிபலனாக அந்த குடிகார கட்சிக்கு ஊருக்கு ஒரு டாஸ்மாக் பார் லைசென்ஸை அம்மா கொடுத்திருக்கலாம். அதுவே அதிகம். ஆனாலும் பரந்த மனதோடு, அருள்பாலித்து 29 எம்.எல்.ஏ.க்களை வழங்கி கவுரவித்திருக்கிறார். இனியாவது இவர்கள் திராவிடம், முற்போக்கு போன்ற பழம் பஞ்சாங்க வார்த்தைகளை மூட்டை கட்டிவிட்டு அ ஃபார் அம்மா, சி ஃபார் சின்னம்மா, மோ ஃபார் மோடி, ஹி ஃபார் ஹிந்து என்று புது பாடம் படித்து, வழி தவறிய ஆடுகளாய் அலையாமல் வாழ முற்பட வேண்டும்.
அம்மாவின் புனித பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் மோடி, ஸ்ரீமான் ராமசாமி, ஸ்ரீமான் பொன்.ராதாகிருஷ்ணன் என்று நம்மவாளாக திரளானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தது கண்கொள்ளாக் காட்சி. அம்மா பதவியேற்க இருக்கிறார் என்பதை அறிந்து சங்கிலித் திருடர்கள், அண்டோமேனியா கட்சியினரின் அராஜக ஆட்சி நடக்கும் ஆந்திராவுக்கு ஓடிப் போய்விட்டார்கள் என்கிற பேருண்மையை அம்மாவே பத்திரிகை நண்பர்களிடம் வெளிப்படுத்தினார். அம்மாவுக்கே தெரியாத இன்னொரு உண்மையையும் நாம் இங்கே சொல்லியாக வேண்டியிருக்கிறது. தகதகக்கும் ஆதிபராசக்தியாம் அம்மாவின் அருளாட்சி தரும் வெப்பம் சங்கிலித் திருடர்களுக்கு மட்டுமல்ல, சட்னித் திருடர்களையும் ஓட ஓட விரட்டும். அண்டோமேனியாவின் ஆட்சி அண்டை மாநிலமான கேரளாவிலும் ஏற்பட்டிருப்பதால், இனி தமிழகத்தின் தீயசக்திகள் ஆந்திரா மட்டுமின்றி, கேரளாவுக்கும் ஓட்டம் பிடிக்கும்.
ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயை அனாவசியமாக கொட்டி திருக்குவளை தீயசக்தி கம்பெனியினர், மவுண்ட்ரோட்டில் கட்டிய இண்டியன் ஆயில் எண்ணெய் டேங்கை அம்மா புறக்கணித்திருக்கிறார். பாராட்டுகிறோம். அம்மா, கோட்டையே என் கோயில் என்று முழங்கியிருக்கிறார். சிலிர்த்துக் கொள்கிறோம். அகிலம் ஆளும் கருமாரியான அம்மாவுக்கு இங்கே ஓர் கோரிக்கையை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். மிஷினரிகள் செய்த சதி காரணமாக நமது அ.இ.அ.தி.மு.கழகத்துக்கு சொந்தமான கோட்டைக்கு ’புனித ஜார்ஜ்’ என்று அண்டோமேனியா வகையறாக்களின் மதப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அப்பெயரை நீக்கி ஸ்ரீராமர் பெயரையோ, அல்லது ஸ்ரீராமருக்கு ஒப்பான சக்தியை பெற்றிருக்கும் புரட்சித்தலைவி அம்மா பெயரையோ கோட்டைக்கு சூட்ட வேண்டும். ‘புனித புரட்சித்தலைவி அம்மா கோட்டை’ என்று பெயர் வைக்கப் படுமேயானால், நம் சந்ததி மட்டுமின்றி, நம் ஈரேழு சந்ததியும் அம்மா புகழ் பாடும். தீயசக்திக்கு இகழ் கூடும்.
திருக்குவளை தீயசக்தி மட்டுமே தீயது என்று தமிழகத்தின் ஹிந்துக்கள் இதுவரை தவறாக நினைத்திருந்தோம். பாண்டிச்சேரியில் ஒரு புதிய தீயசக்தி உருவாகி, அது நம் அம்மாவையே ஏமாற்றி ஆட்சியையும் பிடித்திருக்கிறது என்பதை அம்மா நேற்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். தமிழகத்து தீயசக்தியை அம்மா எப்படி வதம் செய்தாரோ, அதுபோலவே 2016 தேர்தலில் பாண்டிச்சேரி தீயசக்தியையும் வதம் செய்வார். அதற்காக தமிழகத்தின் ஏழு கோடி ஹிந்து பெருமக்களும் அம்மா பின் அணிவகுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
எது எப்படியோ, வாழும் ஸ்ரீராமராய் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அம்மாவுக்கே இறுதி ஜெயம் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த ஜெயத்துக்கு பின்னால் ஜே ஜே என்று ஜால்ரா அடித்து பஜனை பாடிய தேர்தல் கமிஷனுக்கும், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த நேர்மையான அதிகாரிகளான பிரவீண்குமார், சகாயம் போன்றவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
வாழ்க அம்மா. வீழ்க திராவிட திம்மிகள்.
பின்குறிப்பு : இந்த பதிவுக்காக அம்மா பெயரிட்டு கூகிளில் படம் தேடினோம். கடந்த ஆட்சிக்கால தீய்சக்திகள் கூகிளில் ஏதோ தில்லுமுல்லு செய்து, அம்மா பெயரையிட்டு படம் தேடினால் ஆபாசப் படங்கள் நிறைய வருவதைப் போல செட்டிங்க்ஸ் செய்திருக்கிறார்கள். இதற்காக அமெரிக்க கணினி வல்லுனர்கள் மதுரை ரவுடிகளால் தொலைபேசியில் மிரட்டப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஹிந்து தர்மத்தில் நம்பிக்கை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் இதற்கு ஏதேனும் பரிகாரம் செய்தால் தேவலை. அம்மா பெயரிட்டு படங்களை தேடினால் 1991க்குப் பின்னான அம்மா படங்கள் மட்டுமே கிடைக்குமாறு செய்யவேண்டும் என்று கூகிள், யாஹூ நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.
Oops... Yuva, this post degrades your writings. :((((( Poor choice of the words.
பதிலளிநீக்கு-Muthukumar
பின்குறிப்பு ... pattasu!
பதிலளிநீக்குஸ்ரீராமருக்கே ஜெயம்!"
பதிலளிநீக்குlucky.. u slowly becoming a arrogant and third rated blogger. I've read all your election related blogs but this one is with so much vulgar and vengeance. You just ignored all the voters who voted for AIADMK, remember the voters are not idiots. Rather than writing this blog, why shouldn't you write a blog about DMK's loss?. Why your DMK used vadivelu when its well know for so called "thiravida kalagam pechalars"?.
பதிலளிநீக்குPS: I write this in english as i'm in office where I could not write it in tamil.
தோழர் மது அவர்களே! அம்மாவுக்கு ஆதரவாக எழுதினாலும் உங்களுக்கு கோபம் வருகிறதென்றால், நீங்கள் திருக்குவளை தீயசக்திக்கு சொந்தக்காரராகதான் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஅம்மாவின் அளவிளா புகழை அறியத் தந்த அருமையான பதிவு.இப்படியான பதிவிட்ட உங்களுக்கு ஸ்ரீமான் ராமச்சந்திரபிரபுவின் அருள் என்றென்றும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஇப்படியான பதிவுகளை பொறுக்க மாட்டாத திராவிட திம்மிகள் அனானியாய் வந்து உங்கள் எழுத்துக்களை குறை சொல்லி கருத்திடலாம். அதைப் பொருட்படுத்திட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
:)
புகைப்படங்கள் தேர்வு அருமை...
பதிலளிநீக்குMr Yuva,
பதிலளிநீக்குI was a regular reader of your blog. I am a common man and not a supporter of any party or leader. But this post made me very upset personally, bcaz do you think the people are mad and not much intelligent. Don't degrade yourself with this kind of writings. Bcaz I always read ur writings (in blog and PT). Earlier I never made any comments for your posts, I will read and enjoy that's all, but this post made to me to comment. Sorry, If I had hurt you.
வாசு சார்!
பதிலளிநீக்குஉங்க கோவம் நியாயமானதுதான்.
ஆனா
//ரொம்பவும் சிறிய சைஸில் கல் வைத்த கம்மல் அவருடைய காதில் டாலடித்தது. அவரது முகம் அதைவிட டாலடித்தது! // என்றெல்லாம் பதவியேற்பு விழாவைப் பற்றி தமிழின் நெ.1 புலனாய்வு பத்திரிகைகள் எழுதுதே..
முதலில் அவங்க கிட்டே கோவப்பட்டுட்டு, அப்புறமா அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலையாம் என் மீது கோபப்பட வாங்க சார் :-)
ஒரு காலத்தில் அம்மா ஒரு ஆபாச நடிகை என்று எழுதுவதை
பதிலளிநீக்கு"அடடே ஆமா இல்ல" என்று கை கொட்டி சிரிக்கவோ....
கலைஞர் ஊரறிய வப்பாட்டி வைத்திருப்பவர் என்று எழுதுவதை...
"செமயா கேட்டான்டா கேள்வி...."
என்று உற்சாகத்தோடு வரவேற்கும் நிலையிலோ இன்று தமிழன் இல்லை.
அவன் இது போன்ற பீத்துணி அரசியல் ஏச்சுக்களை புறந்தள்ளி பல காலம் ஆகிறது.
இது போன்ற புண்ணாக்கு அரசியல் கட்டுரைகளால் உங்கள் கட்சியை மேம்படுத்த நினைத்தால் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
வயித்தெரிச்சலின் உச்சக் கட்டம்!.....
பதிலளிநீக்குஸ்ரீமான் மோடி மற்றும் ஸ்ரீமான் பொன்.ராதாகிருஷ்ணன், இருவரும் "அவா" இல்லை. அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே. தி. மு. க வின் இந்த தோல்விக்கு, ஜெ யோ, பிரவீண்குமரோ அல்லது சகாயமோ காரணமல்ல. கலைஞரின் குடும்பம் காரணம். பொட்டு சுரேஸ், எஸ்ஸார் கோபி மற்றும் அட்டாக் பாண்டி இவர்களை கட்டுப்படுத்த தவறிய அழகிரி மற்றும் பணத்தாசையால் கண்ணில் பட்ட எல்லாவற்றிலும் கை வைத்த கனிமொழி, இவர்கள் மிக முக்கியக் காரணம். அரசு ஊழியர்கள் தி. மு. க விற்கு குறைவாக வாக்களித்ததற்கு மிக முக்கிய காரணம், பொட்டு சுரேஸ் மூலம் அழகிரி வசூலித்த அபரிமிதமான லஞ்சப்பணமே காரணம் (இது சம்பந்தமாக ஏற்கனவே உங்களுக்கு பின்னூட்டமிட்டுள்ளேன்). தென் மாவட்டங்களில் பெருவாரியான மக்கள் சொன்னது, "இந்த தடவை தி. மு. க ஜெயித்தால் தமிழகத்தில் எல்லாவற்றையும் கலைஞர் குடும்பம் வாங்கிவிடும்" எனவே மாற்றம் தேவை. அது போல் காங்கிரஸை எதிர்த்து சீமானின் பிரச்சாரம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது (உதாரணம் திருநாவுக்கரசரின் தோல்வி, மீனவ கிராமங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக வாக்களித்தனர்). எப்படியானாலும், வெற்றிகொண்டான் இல்லாத இந்த வேளையில் அவருடைய இடத்தை இந்த கட்டுரை மூலம் பூர்த்தி செய்துள்ளீர்கள். - கிருஷ்ணமூர்த்தி
பதிலளிநீக்குதிருக்குவளை தீயசக்தியின் ஜால்ரா வாழ்க
பதிலளிநீக்குதிரு யுவகிருஷ்ணா.. உங்கள் பெயரே திமுக சார்பு பெயர் அல்ல...முழுமையான ஆரியத்தின் தழுவல் பெயர். ஒரு முன்னாள் திமுக அனுதாபியாக எனக்கு இந்த கட்டுரை மிகவும் பிடித்திருக்கிறது. பிரபாகரனது கட்டுரையும் நெகிழ்வாக இருந்தது. நமது கொள்கைகளை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தபடும் பொழுது அது மிக வலுவாகிறது என்பது என் எண்ணம். அதை நோக்கி நகராத எந்த இயக்கமும் இப்படி மண்ண கவ்வுவது அறிவியல் விதியே. திமுக வை மறு பரிசீலனை செய்ய வேண்டி ஒரு கட்டுரை எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அது நடக்காது என்று தெரிந்தும். ஏனெனில் நீங்கள் கண்முடித்தனமாக திமுகவை நேசிக்கிறீர்கள். அபி அப்பா..... எனும் திமுக அனுதாபி எழுதியிருக்கும் கட்டுரையை படித்துபாருங்கள்.
பதிலளிநீக்குhttp://abiappa.blogspot.com/2011/05/blog-post.html#comment-form
ஒரு திமுக அனுதாபியாக நான் எதிர்பார்க்கும் எல்லாவற்றையுயம் அபி அப்பா கூறியிருக்கிறார். கட்சியின் மீதான நேசம் என்பது கட்சியின் தவறுகளை தைரியமாக சுட்டிக்காட்டி எழுதுவதும்தான். அப்படி எழுதுவதாலேயே திமுக கழகத்தை உயிரோடு வைத்திருக்கமுடியும். இந்த மாமி மட்டும் முழுபலத்தோடு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறார் திமுக பெரும்பான்மை பெற்றாலும் ஏன் தள்ளாடுகிறது.? இதை உங்களை போன்ற இளம் எழுத்தாளர்கள் எழுதினால்தான் திமுக கழகத்துக்கு போய் சேரும். அல்லாவிடில் கூட்டத்தில் கண் துடைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். இவ்வளவு ஜனநாயக பண்புகளை,நாகரீகங்களை கொண்டிருக்கும் திமுக ஏன் இப்படி அடிவாங்குகிறது. ? எத்தனை உழைப்புகள் எத்தனை திட்டங்கள் பல்லாயிரக்கணக்கானோர் உழைப்பில் எழும்பிய ஒரு கட்டிடம் ஒரு அடங்காப்பிடாரி மாமியால் வீண்டிக்கபடுகிறது. உங்களை போன்றோர் திமுகவை தொடர்ந்து விமர்சனத்திற்கு உட்படுத்தி இருக்கவேண்டும். அதை யாரும் செய்யவில்லை.. சின்னகுத்தூசி, வீரமணி, சுப.வீ, திருமா, சோலை,நக்கீரன் நீங்கள் போன்றவர்களும் அச்செயலை செய்யாமல் இப்படியான மோசமான ஒரு தலைவிக்கு மீண்டும் மீண்டும் வழி ஏற்படுத்திவிடுகிறீர்கள். யோசித்து பாருங்கள் இணையத்தில் உள்ள அத்தனை காத்திரமான எழுத்தாளர்களும் நீங்கள் சவுக்கு, இன்னும் நிறைய எழுத்தாளர்கள் உட்பட யாவரும் திமுக வின் முன்னாள் அனுதாபிகளே.. எப்படி நிராகரித்தார்கள்.? அதற்கான கருத்து உங்களிடம் இல்லை.
சிவகாசி மாப்பிள்ளை என்கிற நண்பரே!
பதிலளிநீக்குஆபாச கமெண்டு போடும் போது லாக்-அவுட் செய்து அனானியாக போட வேண்டும். அவசரத்தில் சொந்த ஐடியில் போட்டு மாட்டிக் கொண்டால், சைபர் க்ரைமில் ஆப்பு அடிப்பார்கள். பீ கேர்ஃபுல்.
2011 தேர்தலில்,
பதிலளிநீக்குதிம்மிகள் கூட்டணி வாக்குகள்-40%, தங்கத்தாரகை கூட்டணி -50%
புரட்சித் தலைவி அம்மா, கொடநாட்டின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், உறக்கம் மறந்து, உணவு துறந்து, ஒரு நாளில் 32மணி நேரம் கடினமாக உழைத்து, திருக்குவளை தீயசக்தியின் அராஜகங்களைப் பற்றி, அறிக்கை மேல் அறிக்கை விட்டு மக்களுக்கு எடுத்துரைத்த பின்னரும் கூட-
குடிகாரக் கட்சி, ஒட்டுமொத்த ஊடகங்கள், தேர்தல் கமிசன் ஆகியோருடன் மிகப் பலமான கூட்டணி அமைத்த பின்னரும் கூட-
2011தேர்தலில் அம்மாவுக்கு 5பேர் வாக்களித்திருந்தால், திருக்குவளை தீயசக்திக்கு 4பேர் வாக்களித்திருக்கிறார்களே..... இதை என்னவென்று சொல்வது ”எல்லாம் கலிகாலம், கலி முற்றி விட்டது, திம்மிகள் பெருகி விட்டனர்.... ”
Dear Yuva, I think most of the people who have commented against you must be brahmins thats why they cant tolerate...I really didnt find anything so intolerable or arrogant in this article...Actually its a serious article written in a very lighter note...Congrats!!!
பதிலளிநீக்குஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
பதிலளிநீக்குI am at loss to see that you have degraded so much !!! You should gracefully accept the verdict of the people and not rant like this. Even your leader is like you !! He says "people have given him rest".
பதிலளிநீக்குRather he should have taken VRS.
Let some better sense prevail Lucky!!!
இதை படித்து கொண்டிருக்கும் போது கனிமொழி அரெஸ்ட் என்று நியூஸ் வருது..ராமர் தான் காப்பத்தணும்.பேசாமா அந்தம்மாவும் ஒரு மஞ்சள் சேலையில் இருந்து இருக்கலாம்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் வடிவேலுவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அரசியல் நாகரிகமற்ற நடத்தைகளில் ஊறித் திளைத்த மூன்றாம் தர அரசியல்வாதியின் எழுத்தை போல உள்ளது.
பதிலளிநீக்குதரம் தாழ்ந்த எழுத்துக்கள், குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாத எண்ணங்கள் உங்களின் வன்மமான பதிவில் உள்ளது.
உங்களின் கருத்தை நேர்மையாக , நடுநிலைமையுடன், நாகரிகமான முறையில் பதிவிட்டுருக்கலாம்.
போராட்டம் ஒழுங்கு இவையெல்லாம் போய், ஊழல் கூடாரமாகவும் ( கனிமொழி கைதாயாச்சு ) அதிகார துஷ்ப்ரயோகமாகவும். ( சினிமா தொழிலையே நசுக்கிடானுங்க ) திமுக மாறி விட்டது. எங்க பாத்தாலும் இவனுங்க படம். நீங்க வயிறு எரியுங்க. நல்லா எரியட்டும். தீயணைப்பு வண்டி வந்தாலும் அணைக்க முடியாது. நல்லாட்சி மயிருன்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. அம்மாவும் ஊழல் பேர்வழி தான். ஆனா திமுக என்னும் பிசாசு ஆட்சியை விட அம்மா எனும் பேய் எங்களை ஆள்வது சாலச்சிறந்தது.
பதிலளிநீக்குI think you are doing grave injustice to DMK. Being a party supporter does not mean you support everything your party do. Why dont you realize that this election was not a victory for JJ. But a loss for M Karunanidhi due to family politics. All of you who slog for DMK get nothing. But look at the family of your party chief? Where are you guys progressing? Kalaignar's sisters grand daughter passing 12th standard is a news in Murasoli. Says a lot about what the party thinks right?
பதிலளிநீக்குYou dont need to be a AIADMK supporter to hate DMK. Wake up or be left behind.
//மவுண்ட்ரோட்டில் கட்டிய இண்டியன் ஆயில் எண்ணெய் டேங்கை//
பதிலளிநீக்குஇதை மிக ரசித்தேன்! கலைநயம் ஒரு பொட்டும் இல்லாத இக் கட்டிடத்தின் வெளித் தோற்றத்தைப் பார்த்துப் பல நாளும் நொந்திருக்கிறேன்.
ராவணன் நல்லவன் .... நேர்மையானவன் .... யாருக்கும் துரோகம் செய்யவில்லை... ராவணனோடு கருணாவை ஒப்பிடுவதை விட ...எதிரியோடு கூட்டு வைத்து தன் இனம் அழிய துணை போன விபீஷணன் என்று கருணாவை சொல்வதே பொருந்தும்!
பதிலளிநீக்குசென்னை எங்கும் பல்வேறு இந்து அமைப்புகள் அம்மையாரை வாழ்த்தி போஸ்டர் அடித்திருக்கும் நிகழ்வை பார்த்தாலே தெரிகிறது
பதிலளிநீக்குபின்னூட்டம் போடும் அனானி மாமாக்களே!
பதிலளிநீக்குஅம்மா வெற்றி பற்றி எதுவுமே எழுதவில்லை என்று ஒரு வாரமாக ஆபாச கமெண்டு போட்டு வந்தீர்கள். அம்மாவின் வெற்றியை எளிய தொண்டனாக கொண்டாடி பதிவிட்டாலும், இப்படி எப்படி பதிவெழுதலாம் என்று அறிவுக்கெட்டத்தனமாக கேட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
நானென்ன கிரம்மர் சுரேஷா?
அம்மா ஆட்சியில் நிம்மதி அடைந்தது தமிழகம் என்று வால்போஸ்டர் ஒட்ட?
எளிய தொண்டனான நான் இம்மாதிரி ஒரு பதிவு மட்டும்தான் எழுதமுடியும் சார் :-)
@நன்றி லக்கி சார், ஒரு வாரமாக வாயே திறக்காத தாங்கள் அருமையான ஒரு கட்டுரை எழுதி வெற்றி கொண்டாண் இல்லாத குறையை போக்கி விட்டீர்கள், பிரமாதம்
பதிலளிநீக்குராகவேந்திரன்,தம்மம்பட்டி
pinnitteenga Lucky... Chance e illai... kalakkal...
பதிலளிநீக்குhttp://amuthakrish.blogspot.com/2011/05/blog-post_20.html
பதிலளிநீக்குசார்வால் இத முதல்ல படிங்க.
அடிப்பொடிகளின் சத்தம் காது ஜவ்வு கிழியுது.
பதிலளிநீக்குஇது அம்மாவின் வெற்றியே அல்ல என்பதையும், திமுகவை விரட்ட வேறு வழி இல்லாமல் அம்மாவை தேர்ந்து எடுத்து உள்ளார்கள் என்பதையும் மறந்து விட வேண்டாம். இந்து மதப்பற்று கொண்டு தமிழ்ர்கள் வாக்களித்தனர் என்பது ஏற்புடையதாக இல்லை
பதிலளிநீக்குAyye...
பதிலளிநீக்குNaan DMK tholviya, prabala padhivar tharkolai nnu seithi edhir pathan..
Romba sappu pochu ponga.
ஏற்கனவே ஒரு முறை சொன்ன மாதிரி இரண்டாவது முறையாக ஐயோ கொல்றாங்களே வா? அப்படி கத்த கூட அந்த குடிம்பத்தின் ஆட்கள் இல்லாமல் போய்விடடுவார்கள் போலிருக்கிறது. பின்னே எல்லாரும் திஹார், புழல் இப்படி எல்லா இடத்திலும் சிறை நிரப்பும் போராட்டம் செய்ய போகிறார்களே?
பதிலளிநீக்குஸ்ரீராமஜெயம்...ஸ்ரீராமஜெயம்...!
பதிலளிநீக்குஇலைக்காரன் என்னாச்சு வோய்?
அங்கயே போட்டிருக்கலாமே?
இப்பப் பாரும். லக்கி தரம் தாழ்ந்துட்டாருன்னு அம்பிஸ் ஒரே புலம்பல்ஸ்.
ராம்...ராம்...!
ராம்...ராம்...!
lcuky superb article...expecting part2 soon
பதிலளிநீக்குYou keep on writing "HINDU" as a untouchable word. Have you changed your birth certificate? Have applied for immigration to any other country? Why the heck you are sitting in a idiotic country and suffering?
பதிலளிநீக்குAs usual dont care if you wont post it....by the way you are utilizing the public funds of a country wherein most of the so called "HINDUS" contribute to the tax......
this election result shows , if cat hides its eyes or elephant hides its eyes or even bloggers like you hides your eyes, people of tamil nadu will think about which government will perform better for them. You may be upset because after election result your favorite people cant scam in 4g or xg or in some other thing. As a reporter you may want this, so that in your blag u can say why people bother about just 10 lack crore scam. I think if vadivelu didnt help them DMK wont even get this much seats. They may get just 1 or 2 max. First write post for vadivelu for giving atleast this much seat in the election.
பதிலளிநீக்கு//most of the people who have commented against you must be brahmins thats why they cant tolerate//
பதிலளிநீக்குDear Parthiban, don't be afraid to call a spade a spade.
Open your eyes and you will realize that Amma did not turn out successful in elections just with the brahmin vote. I can say that it is those who cannot tolerate DMK today, are the same who do not find Lucky's writings in good taste.
//பின்னூட்டம் போடும் அனானி மாமாக்களே!
பதிலளிநீக்குஅம்மா வெற்றி பற்றி எதுவுமே எழுதவில்லை என்று ஒரு வாரமாக ஆபாச கமெண்டு போட்டு வந்தீர்கள். அம்மாவின் வெற்றியை எளிய தொண்டனாக கொண்டாடி பதிவிட்டாலும், இப்படி எப்படி பதிவெழுதலாம் என்று அறிவுக்கெட்டத்தனமாக கேட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
நானென்ன கிரம்மர் சுரேஷா?
அம்மா ஆட்சியில் நிம்மதி அடைந்தது தமிழகம் என்று வால்போஸ்டர் ஒட்ட?
எளிய தொண்டனான நான் இம்மாதிரி ஒரு பதிவு மட்டும்தான் எழுதமுடியும் சார் :-)//
Whay are you behaving like such a fool? You shold necessaryly regret for your prediction that DMK will win this election. AND also WRITE a Analytics based report on the lapse and lags for the failure. Instead by writting this you Behave like an ********.
I have seen you commenting harshly in savukku and all, you should be ashamed by now, instead writting craps like anything, you Stupid.
P.S: I'm not a ADMK. I voted for 49 O. thanks.
I am one of your regular reader but We didn't expect this third type of articles from you Mr.Yuvakrishna. Hereafter we couldn't read your blog and remove your bookmark from the address bar.
பதிலளிநீக்குYuva read your article and liked the black humor in it. I do belong to the Ram's clan, but I can see what is good for the country. satire is good. Keep it up..
பதிலளிநீக்குஊர்ல சொல்றாங்க, ‘முன்னாடிலாம் சொல்லி வச்சு 2 மணி நேரம் கரண்ட அடக்கி வந்தாங்க... இப்ப அம்மா பவருக்கு வந்த வொடனே பவரே ஒரு நாளைக்கு மொத்தமா சேத்து 2 மணி நேரம் தான் இருக்கு..’
பதிலளிநீக்குநான் சொன்னேன், ‘இப்ப தானே வந்திருக்காங்க.. இனிமே தான் ஏதாவது செய்வாங்க...’
------------
கட்டுரை கலக்கல்... இராமயன கம்பேரிசனில் உங்களின் டச்..
------------
Freedom of speech is one thing. And I absolutely respect yours. But I don't agree to the content.
பதிலளிநீக்குMore than your content, your intent is very apparent. It's pretty upsetting to note that you are shameless to exibit your arrogance and you don't have the stomach to digest DMKs terrible defeat.
"Pendavana vettama, peeya vettaringa"
sick!
பதிலளிநீக்குசுஜாதா விருது பெற்ற பிராபல பதிவர் யுவக்ருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள். இந்த பதிவே மாஸ்டர் பீஸ்.நீங்கள் எவ்வளவு டம்மி பீஸ் என்பதற்கும். உங்கள் விருதின் தரத்திற்கும்.
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துக்கு கொடுத்த அங்கீகாரத்தையும், அதன் மதிப்பையும் பங்கப் படுத்தும் எழுத்துக்கள் ஏமாற்றத்தை அளிக்கின்றன.
அடுத்த வருடம் இணைய வெற்றிகொண்டான் அல்லது தீப்பொறி ஆறுமுகம் விருதுக்காக முயல்கிறீர்கள் என்று தெரிகிறது. வேண்டாம் லக்கி.
ஏய்யா...லூசாய்யா நீ? கருணாநிதி குடும்பம் 2G ஊழலில் கையாடல் செய்ததா இல்லையா என்று எழுதத் துப்பில்லை...அம்மா செய்யாத ஊழலா என்று சப்பைக்கட்டு கட்டும் சப்பையாகத்தான் மாறி விட்டீர்!
பதிலளிநீக்குஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!!!!!!!
பதிலளிநீக்குDear Yuvakrishna,
பதிலளிநீக்குI am one of those "Perusus" - around 80 - who admire your writings in Puthiya Thalaimurai and in your blog.
This piece on the victory of ADMK and Jayalalitha is to say the least is vulgar. You have polluted the pristine Tamil. I am sorry.
A. Namdev
Am so surprised - how can such a good writer and a rational thinker can get so lame, pathetic and stupid ONLY when writing about DMK. Chancey illa Krishna. This will limit your life and reach. Sorry
பதிலளிநீக்குThat was sarcasm at it its real best...keep it coming Yuva...
பதிலளிநீக்குலக்கியின் இந்த கட்டுரையை படித்து விட்டு கோபப்படும் நண்பர்களே..உங்கள் கோபம் பாய் கடையில் போய் தயிர் சாதம் கேட்டு அது கிடைக்காததால் கோபப்படுவது போல் உள்ளது...
பதிலளிநீக்குSpectrum எல்லாம் ஒரு ஊழலே இல்லை..தேர்தலில் திமுகவின் வெற்றி நிச்சயம் என்றவர் லக்கி..
இன்று கனி தீகாரில்..திமுகவின் வெற்றியை பற்றி யாரும் சொல்லவே வேண்டியதில்லை..நாளையோ நாளை மறுதினமோ, அவரின் தலைவரே உள்ளே செல்ல கூடும்..
இந்த நிலையில் லக்கியை வேறு என்னதான் எழுத சொல்கிறிர்கள்??
லக்கியின் இந்த கட்டுரையை கலைஞரின் ஒரு பதிலுக்கு வேண்டுமானால் ஒப்பிடலாம்..
கேள்வி: கட்சியிலும் ஆட்சியிலும் உங்கள் குடும்ப ஆதிக்கம் அதிகமாக இருகிறதே??
கலைஞர்: என்ன செய்வது...எனக்கு குடும்பம் இருகிறதே?!?!
கலைஞரின் இந்த பதிலை வடிவேலுவின் ஒரு பதிலுக்கு வேண்டுமானால் ஒப்பிடலாம்..
கேள்வி: பக்கத்துக்கு ஊரு பொண்ண கைய புடிச்சு இழுத்தியா??
வடிவேலு: என்ன கைய புடிச்சு இழுத்தியா??
லக்கி = கலைஞர்
கலைஞர் = வடிவேலு
சோ,
லக்கி = வடிவேலு
சிரிங்க, சீரியஸா எடுத்துக்காதிங்க..
பகடிக்கும், வயிற்றெரிச்சலுக்கும் வித்தியாசம் உண்டு. எதிர் காலத்தில் ஜெயலலிதா-வின் நடவடிக்கைகள் மூலம், இதை விட மோசமாக எழுத கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அதுவரை உங்களை போன்ற அறிவு ஜீவிகள் காத்திருக்கலாம். ரகசிய ராம பக்தர்கள், பொதுவில் ஈ.வே. ரா வின் பகுத்தறிவுவாதம் பேசுவதை விட, ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் நகைப்புக்குரியது அல்ல.
பதிலளிநீக்குலக்கியின் இந்த கட்டுரைக்கு நீங்கள் இருவருக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்..திரு. மோடி அவர்களுக்கும் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்...
பதிலளிநீக்குஅவர்கள் மட்டும் அன்று வாயிற்று போக்கு காரணமாகவோ அஜீரண கோளாறு காரணமாகவோ பதவி ஏற்பு விழாவிற்கு வராமல் போயிருந்தால் இன்னும் ஒரு மாதத்திற்கு நீங்கள் ஏலகிரி பற்றியோ, அங்கு வசிக்கும் வாலில்லா குரங்கு பற்றியோ, அல்லது நீலகிரி பற்றியோ, அங்கு வசிக்கும் வால்தவக்களை பற்றியோதான் இந்த தளத்தில் வாசித்திருக்க முடியும்..
என்னமோ தெரியவில்லை ஏலகிரி, நீலகிரி என்று எழுதும்போது
அழகிரி, கொலகிரி
என்று கணினி தானாக அடுத்த வரியை நிரப்பி கொள்கிறது...எல்லாம் தெரிந்த லக்கிதான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும்.
பி.கு..லக்கி வெளியிட்ட ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தையும் படித்த கருணாநிதி,
கண்ணதாசன் எழுதிய
"வனவாசம்" புத்தகத்திற்கு, அவரே திரைகதை, வசனம் எழுதி இயக்கவும் இருப்பதாக அறிவித்து உள்ளார் (அப்பதான அந்த புத்தகத்த சும்மா கொடுத்த கூட எவனும் படிக்க மாட்டான்).
மக்களை முட்டாளாக நினைத்து பணத்தை வாங்கிகொண்டு வாக்களித்து விடுவார்கள் என்ற எண்ணத்திற்கு விழுந்த அடி தான் இந்த தோல்வி
பதிலளிநீக்குநீங்களும் மக்களை அப்படி நினைத்துவிடாதீர்கள்
அன்புடன்
ஜோதிகுமார்
You have two options
பதிலளிநீக்கு1.Join Murosoli and continur the jalra
2.Put your blog in Pudiya Thalaimurai and see your future.
இந்த ஏழு கோடி முட்டாக்கூனாக்களோட நீங்க எப்படித்தான் தினமும் குப்பை கொட்டுரிங்களோ தெரியல. ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும். நீங்காவேணா இந்த இந்துக்கள் தொல்லையே இல்லாத பாகிஸ்தான் இல்லாட்டி ஆப்கானிஸ்தான் அப்டின்னு ஏதாவது ஒரு ஊர் ட்ரை பண்ணுங்களேன். அங்கெல்லாம் இந்த முட்டாப்பசங்க இல்லையாம். எல்லாரும் உங்கள மாதிரி அறிவாளிங்கலாம். அப்டியே ரெஸ்ட் எடுக்குற உங்க தலைவரையும் அவரோட பரிவாரத்தையும் (திஹார் போகல்லன்னா) கூட்டிட்டு போனிங்கன்னா ரொம்ப புண்ணியமா போகும். அய்யய்யோ உங்களுக்கு பாவ புண்ணியத்தில நம்பிக்கை கிடையாதுல்ல.
பதிலளிநீக்குஅங்கெல்லாம் அவுங்க கண்ணா மூடினா உலகமே இருண்டு போயிருமாம். இந்துக்களா திட்டினா சந்தோஷ படுவாங்களாம். ட்ரை பண்ணிதான் பாருங்களேன். இங்குள்ள முட்டாப்பசங்க பாவம் பொழச்சு போறாங்க.
கரண்ட் எல்லாம் முன்னாடியே இந்த அம்மா செலவழிசிட்டங்கன்னு தெரியாம இந்த முட்டாப்பயலுக என்னென்னமோ பண்ணிட்டாயிங்க. அறிவாளி நீங்க சொன்னாலும் கேக்க மாட்டின்றாங்க.
உங்களைப் போன்ற 'பக்தர்களால்'திமுகவுக்கு அழிவுதான்.
பதிலளிநீக்குபுரட்சி தலைவிக்கு தைரியம் இருந்தால் தனது அமைச்சர்களையும் எம் எல் ஏ க்களையும் பார்த்து உங்கள் சம்பளத்தை தவிர ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க விடமாட்டேன் பீ கேர்புல் என்று கூறி அதை செயல் படுத்த முடியுமா?.
பதிலளிநீக்குNo wonder Charu wrote this, now we know your qualification:
பதிலளிநீக்குஇன்னொரு முக்கிய விஷயம். இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதற்குக் காரணம் என்னவென்றால், வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றால் இப்போது வாசகர் வட்டத்தின் பொருளாளர் பொறுப்பிலிருக்கும் சீனிவாசன் அதிலிருந்து விலகி ”நான் போட்டியில் கலந்து கொள்கிறேன்” என்று சொல்லுவார். ஏனென்றால், சுஜாதா விருதுப் போட்டியின் போது நானே மனுஷ்ய புத்திரனிடம் அதைத்தான் சொன்னேன். என்னை நடுவராகப் போடாதீர்கள்; சிறந்த ப்ளாக் என்ற போட்டியில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றேன். அவர் கேட்கவில்லை. அதனால்தான் பரிசு யுவகிருஷ்ணாவுக்குப் போயிற்று.
Lucky i dont think you have written anything wrong except commented about hindus.Dont bother about ADMK sombu's.Those who are feeling this post is vulgar you need to visit dinamalar.com.you will get to see what is actual vulgar.
பதிலளிநீக்குYuva Keep it up.
லக்கி... இது மாதிரி நிறையக் கட்டுரைகள் இனி வரவேண்டும். இடிப்பாரில்லா ஏமறா மன்னன் போல ஜெயலலிதா இன்றைக்கு ஆட்சிக்கட்டிலில் ஏறியுள்ளார். 1991ல் இப்படித்தான் ஜெயலலிதா நடந்து கொண்டார். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே என்ற ஸ்ரீமத் பகவத் கீதையின் கூற்றுக்கேற்ப, யார் நிந்தனையையும் கண்டு கொள்ளாதேயுங்கோ...
பதிலளிநீக்குhttp://www.luckylookonline.com/2011/03/blog-post_09.
பதிலளிநீக்குதலைவா மக்கள் உங்கள் எல்லாருக்கும் காது குத்திட்டாங்களே!
http://www.luckylookonline.com/2011/04/blog-post_11
ஐயோ ஐயோ!
பத்திரிக்கையாளராக ஆன பிறகு நடுநிலை இருந்தால்தான் நன்றாக இருக்கும் லக்கி.. நீங்கள் இந்த ஜால்ரா அடித்து உங்களுக்கென்ன அடுத்த தி.மு.க ஆட்சியில் கொறடா பதவியா கொடுக்கப்போகிறார்கள்?
பதிலளிநீக்கு(இப்படிப்பட்ட பதிவுகள் உங்களை வெறும் பத்தோடு பதினொன்று பதிவராக ஆக்குகின்றன)
இந்த பதிவுக்கு பிரபல பதிவர்கள் என் யாரும் பின்னூட்டம் போடுறது இல்ல. அப்புறம் இப்படி உங்களுக்கு இவ்வளவு அங்கீகாரம்? உங்கள பார்த்தா ஒரே பொறாமையா இருக்கு லக்கி சாரே. ஒரு வேலை அனானிகாளாய் பின்னூட்டம் போட்டது எல்லாம் பிரபல பதிவர்களோ?
பதிலளிநீக்குLucky,
பதிலளிநீக்குDon't worry about this f** in ambi's who always wrote one and did something opposite.
I am the regular reader of these blogs from 2006 and noticed that all the blogers try to show that they are "Sathya Santhans". But I saw lot of bloggers who are act differently in person. But I accept it as it is a human nature.
As a human you can't 100% perfect (as Jeyamohan as per his blog).
Man ....... how is it possible to be 100% perfect. Bull shit .....
Lucky .. as you mentioned about JV abt amma's kammal ... you are great.
I appreciate you man ....
//பின்னூட்டம் போடும் அனானி மாமாக்களே!//
பதிலளிநீக்குதலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி
போகட்டும்.
இது வரை பின்னூட்டங்களில் சொல்லாத ஒன்றைச் சொல்லத் தான் இந்தப் பின்னூட்டம்: கழகம் வேறு, கலைஞர் வேறு; உண்மையில், கலைஞருக்கு வக்காலத்து வாங்குபவன் கழகத்தின் விரோதி; என்,வி.நடராசன், சி பீ சிற்றரசு கருணாநிதி, , நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் பேச்சிலே மனதைப் பறிகொடுத்த அறுபதின் பதின்ம வயதினர் இந்த கழகத்தை ஜீரணிக்க முடியாது. (உங்கள் பின்னூட்டங்களில் இவர் அதிகம் இருப்பார் என நினைக்கிறேன். உங்கள் தலை முறைக்கு இது புரியாமல் போகலாம்.)
கழக அபிமானிகள், கலைஞருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து, கழகத்தை ஸ்டாலின் அல்லது இன்னும் சிறந்தது: குடும்பத்திற்கு வெளியே ஒருவர் கையில் கொடுத்து (வைகோ சம்மதித்தால் மிக சிறப்பாக இருக்கும்) கழகத்தை மக்கள் இயக்கமாக மீண்டும் மாற்றுங்கள்.
yuva....
பதிலளிநீக்குas a common man.... i dont like this article and i didn expect this type of words from your pen.
mano
paavam yuva neenga..sympathize for you..try to get peace..
பதிலளிநீக்குசரி நீங்க சொல்ற மாதிரியே இது ஆரிய திராவிட யுத்தம், அதில் திராவிடம் வீழ்ந்து ஆரியம் வெற்றி பெற்றதாகவே கொள்வோம். ஆனால் திராவிடம் ஏன் வீழ்ந்தது என்று நீங்கள் சொல்லும் காரணங்கள் தான் மகா மொக்கையாக உள்ளது. 2g காரணமா? இல்லை... காரணம் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மின்வெட்டு மட்டும் காரணமா? இல்லை.. காரணம் 'தடையில்லா மின்சாரம்' வழங்கப் பட்ட சென்னையில் தான் திமுக படு தோல்வி அடைந்துள்ளது. விலை வாசி மட்டும் காரணமா? இருக்கலாம். இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த தேர்தலில் கிட்டத் தட்ட ஒரு கோடி புது இளைன்கர்கள் வாக்களித்துள்ளனர். கரைவேட்டியை தாண்டி தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானித்தவர்கள் அவர்களே. அவர்களுக்கு தெரிந்த அரசியல், அவர்களுக்கு உறுத்திய விஷயம், ஏதோ காத்திருந்து கழுத்தை அறுத்தது போல திமுகவின் கதையை முடித்திருக்கிறது. (திமுக யாருடைய கழுத்தை அறுத்தது என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை.)முற்பகலில் தி.மு.க "கழுத்தை அறுத்தது", பிற்பகலில் "அவர்களின் கழுத்தை அறுத்துள்ளது". அவர்கள் ஓங்கி சொல்லியிருக்கிறார்கள் "நாங்கள் திராவிடர்கள் அல்ல, தமிழனை கொல்ல துணை நின்ற அந்த திராவிடம் தங்களுக்கு தேவையும் அல்ல" என்று...!!! ஆரியம் -- எதிரி, திராவிடம் -- துரோகி...!!! துரோகிகள் வீழ்த்தப் பட்டுள்ளனர். எதிர்களும் விரைவில் வீழ்த்தப் படுவர்.ஆக, விரைவில் தமிழனாக முயற்சி செய்யுங்கள்.
பதிலளிநீக்கு// ஜே ஜே என்று ஜால்ரா அடித்து பஜனை பாடிய தேர்தல் கமிஷனுக்கும், இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த நேர்மையான அதிகாரிகளான பிரவீண்குமார், சகாயம் போன்றவர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குஉங்களை போன்ற உடன்பிறப்புகள் கடைசி வரை இப்படியே மாறாமல் இருந்து அடுத்த தேர்தலிலும் ஐய்யாவை ஓய்வெடுக்க வைக்க வேண்டும் ... plz இப்படியே இருங்கள் மாறி விடாதீர்கள் ,
அம்மாவின் புனித பதவியேற்பு விழாவுக்கு ஸ்ரீமான் மோடி, ஸ்ரீமான் ராமசாமி, ஸ்ரீமான் பொன்.ராதாகிருஷ்ணன் என்று நம்மவாளாக திரளானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தது கண்கொள்ளாக் காட்சி
பதிலளிநீக்கு--It seems no one turned up at the function from thirudargal munnerra kazhagam.We know that,they lack basic courtesy.Or ,may be that,under Amma's rule,the thirudargal are always under fear.
ur calling urself an atheist ??
பதிலளிநீக்குur making the real atheists throw up !!
Yela yuva be least bothered about sambar mama's comments.our basic thought is iritating them.Lets enjoy their comments.Nee vombakkula yeluthula.koluthu mapla
பதிலளிநீக்குPANAYERI
திகார் முன்னேற்ற கழகத்தின் ஆயுள் கால உறுப்பினரோ?
பதிலளிநீக்குI didnt vote in this election due to the local 'OPEN' attrocities by the local "powers" as they equally contributed to the loss.
பதிலளிநீக்குBut Such a big number of replies prove DMK & this blog's popularity. Elections will come & go. DMK will bounce back in the next MP elections. DMK has a unique self cleaning process like the one 'NATURE' has. DMK did the mistake & got the most painful blow from the people. It will correct itself & win back the popularity. After all DMK is a social movement. DMK is not grown by tears (like amma does) but by blood and sweat of crores of its caders. DMK will comeback to balance the power in TamiZ nadu. STAY TUNING.........
Thalaivare,
பதிலளிநீக்குGreat article. I am a brahmin. I am not hesitating to say this. But on what base you have won the last election? That time these people are intelli and now they are idiots and stupids? FYI: JJ has given his ministry post to almost all caste people but what KK did?
If you are a true DMK follower you should think why you have lost? Instead if you going to critize rama, brahmins always you wont win at all. Just do good things first. You know all ministers how much they have earned? How much they threatened others? You are a press person you know more than us. Dont be like a stupid.
அதிமுக கட்சியை எப்படி வேண்டுமானலும் திட்டுங்கள் ஏன் என்றால் அவர்கள் முந்தைய ஆட்சியில் நெறைய தவறுகள் செய்து உள்ளனர் ..ஆனால் உங்களின் தேர்தல் ஆணையம் குறித்த பதிவுகளை சகிக்க முடியவில்லை. இது மாதிரி பொதுமக்களுக்கு தொந்தரவு தராத (லட்சம் ,கோடி ரூபாய்களை கார்களிலும் ,பஸ்களிலும் எடுத்து செல்லும் பணக்காரர்கள் படும் கஷ்டத்தை இங்க சொல்லாதீர்)தேர்தல் இதற்கு முன்னால் நடந்து இல்லை என்பது பொது மக்கள் அனைவரின் பெரும்பான்மையான கருத்து .நன்றாக தமிழில் எழுதுகிறீர் ,சுஜாதா விருது எல்லாம் கிடைத்து உள்ளது என்பதால் தான் உங்கள் ப்ளோகை படித்து வந்தேன் ..ஆனால் நீங்களும் ம திமு கழகத்துக்கு ஜால்ரா அடிக்கும் சொம்பு தூக்கிகளில் ஒருவர் என்பதை இதன் முலம் அறிந்து கொண்டேன். உங்கள் ப்ளோகை என் வாசிப்பு தொகுப்பில் இருந்து நீக்கி விட்டேன். உங்கள் தொண்டு சேவை தொடர என் வாழ்த்துகள் ..
பதிலளிநீக்குநாம் வீரத்துடன் இருந்தால் மட்டும் போடாது. விவேகமுடனும் செயல்படவேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தலில் வாக்கு அளித்துவிட்டால் போதும், நமது வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், தமிழ்நாடு மீண்டும் கொள்ளை போவதை தடுக்க, நாம் எல்லாம் அணி திரள வேண்டும். தமிழகத்தில் RTI club ஒன்றை உருவாக்கி நடக்கும் தவறுகளுக்கு கேள்வி கேட்க வேண்டும். கொள்ளை போன பணம், மற்றும் சொத்துகளை மீட்க வேண்டும். கொள்ளையர்களை குறைந்தது 5 ஆண்டுகள் சிறையில் போடவேண்டும். நடுத்தர மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள், முதுகு எலும்பு இல்லாத கோழைகள் என்று நினைக்கும் ஆட்சி, அதிகார வர்க்கத்தினரை பயம் கொள்ள செய்ய வேண்டும். முன்னாள் கொள்ளையர்களையும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். தமிழர்களே ‘நாம் ‘ ஒன்றிணைந்து செயல்படுவோமா ? வீரம், மற்றும் விவேகத்துடன் செயல்படுவோமா ? ஒருவர் மட்டும் RTI வழியாக கேள்வி கேட்டால் அடிக்க வருவார்கள். ஆனால் ‘நாம்’ ஆயிரம் வேறாக சேர்ந்து கேட்போம். ஆயிரம், லட்சங்களாக மாறும். தயவு செய்து ஒன்று சேருங்கள். தமிழ்நாடு ஊழல் எதிர்ப்பு இயக்கம் –
பதிலளிநீக்குஊழலற்ற தமிழகம் அமைய தொடர்பு கொள்ளுங்கள்.
chennai.iac@gmail.com
http://iacchennai.org
இது எனது தனிப்பட்ட கருத்து. நமது அணியின் கருத்து அல்ல.
பதிலளிநீக்குமக்களுக்கு ஏன் நிகழ்கால அரசியல், நிர்வாகம் மீது கோபம் வருகிறது ? காரணங்கள் இதோ ..
ஜனாதிபதி தகுதி :
முன்னாள் பாரத பிரதமருக்கு சமையல் வேலை செய்து பாத்திரம் கழுவியவர்.
குற்ற பின்னணி உடையவர்.
பிரதமர் :
முன்னாள் இந்திய மத்திய வங்கியின் பணியாளர். உலக வங்கி அனுபவம் உண்டு. தற்போது எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்பவர். இதோ சில தெரியதுகள் ...
1) 2G ஊழலா .. தெரியாது
2) commonwealth games ஊழலா .. தெரியாது
3) adarsh ஊழலா .. தெரியாது
4 ) உணவு தானியங்கள் கோடி கணக்கான டன் கணக்கில் கெட்டு போகிறதா ? தெரியாது.
5) இலங்கையில் நம் மக்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.
6 ) நமது மீனவர்கள் கொல்லப்படுகிறார்களா ? தெரியாது.
தெரியாது என்று சொல்வதற்கு ஒரு பிரதமர்.
நிதி அமைச்சர்:
மேற்படி அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்து இருப்பவர்.
உள்துறை அமைச்சர் :
வெற்றி பெற்றாரா என்ற சந்தேகம் உலகம் முழுதும் உண்டு. கருப்பு பணம் பட்டியலில் இவரது மகன் பெயர் முதலில் உள்ளதாக செய்தி. இவர் குடும்பம் பற்றி தனியாக எழுதலாம்.
முன்னாள் உள்துறை அமைச்சர் :
தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக அக்கறை உள்ளவர். டெல்லி மற்றும் மும்பையில் குண்டு வெடித்தால் கண்டு கொள்ளாதவர்.
தொலைதொடர்பு துறை :
முன்னாள் அமைச்சர் திகார் சிறையில்.
இந்நாள் அமைச்சர் மிக சிறந்த வக்கீல் (திருடர்களுக்கு). 2G "ஜீரோ லாஸ்" என்ற தத்துவத்தை உதிர்த்தவர்.
மத்திய வேளாண் அமைச்சர்:
இவர் எதற்கான அமைச்சர் என்பது உலகம் முழுவதும் தெரியும். கிரிக்கெட் அமைச்சர். திருடர்களின் (சாஹிட் பால்வா) கூட்டாளி. உணவு தானியங்கள் கிடங்குகளில் கெட்டு போகின்றன என்று உச்ச நீதி மன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவர்களின் தலைவர் :
என்ன படித்து இருக்கிறார் என்றே இந்த நாட்டுக்கு தெரியாது. தனது சொந்த நாட்டில் pizza விற்றவர். 40 வயது மகனுக்கு இன்னும் அறிவு முதிர்ச்சி இல்லை.
முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை :
பல முறை கேடுகளுக்கு சொந்தம். இன்று சொத்து கணக்கை வெளியிட மாட்டேன் என்று சொல்லி விட்டார்.
முன்னாள் ஊழல் கண்காணிப்பு தலைவர் :
இவரைப்பற்றி நாடே அறியும். நான் என்ன சொல்ல வேண்டும்.
கருப்பு பணம் தலைவர் :
இவருக்கு இந்நாள் உள்துறை மனைவி வக்கீல். நல்ல குடும்பம்.
பாண்டிசேரி ஆளுனர் :
மேற்படி ஆளுக்கு பாஸ்போர்ட் வாங்கி கொடுத்தவர்.
தமிழ் நாட்டை பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை.
எனவே இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு யார் தலைவர் என்று மக்கள் பார்க்கவில்லை.
தாவூத் இப்ராஹீம் அல்லது நாதுராம் கோட்சே உயிருடன் எழுந்து வந்து போராடினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகி விட்டார்கள். மக்கள் பகத்சிங், சுபாஷ் அல்லது ஜெயப்ரகாஷ் நாராயணன் வரும் வரை பொருத்து கொள்ளத் தயாராக இல்லை.
The Verdict is more of an anti-DMK mandate than a pro-ADMK one. Hope You will accept atleast this.
பதிலளிநீக்குநீங்கள் இவ்வளவு நாள் சொன்னது போல் திமுக ஒரு இயக்கம், கட்சி இல்லை என்றால் முதல் குடும்பத்தை தானாகவே விலக்கிக் கொண்டிருக்கும் அல்லது விலக்கக்கூடிய கோரிக்கையாவது எழுந்திருக்கும். கொள்கைக்காக இல்லையென்றாலும் Accountability kaga தலைவர் விலக வேண்டும்
பதிலளிநீக்கு91 முதல் 96 வரை ஜெ. ஆட்சியில் ஊழல், அராஜகம் நடந்தது உண்மை ... ஆனால் இரண்டாம் முறை தவறை உணர்ந்து ஒழுங்காக இருந்தார். மேலும், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு தவித்த நேரம் அது. முன் இருந்த திமுக ஆட்சி பாப்புலர் ஸ்கீம்களில் தொலைநோக்கு இல்லாமல் பணத்தை அள்ளிவிட்டதால் வந்த நிலை. மேலும், மத்தியில் திமுக இருந்து குடைச்சல் வேறு .... எந்த ஸ்கீம் போட்டாலும் சுற்றுச்சூழல் துறையிலிருந்த ராசாவின் முட்டுக்கட்டை ... திட்டக்கமிஷனின் ஓரவஞ்சனை ...சென்னையின் நெரிசலைக் குறைக்க மாமல்லபுரம் அருகே தலைமைச்செயலகத்தை மாற்றமுயன்றார் ... முடியவில்லை ... எதிரிகளின் முட்டுக்கட்டை. வீராணம், மழை நீர் சேகரிப்பு போன்ற முக்கியத் திட்டங்கள் கொண்டுவந்தார் அதிலும் சிதம்பரம்பகுதி மக்களைத் தூண்டி விட்டு வீராணத்துக்கு முட்டுக்கட்டை போட முயன்று குளிர் காய்ந்தது திமுக ...... மின் உற்பத்திக்காக பைக்கராத் திட்டத்தை செயல்படுத்தினால் அதிலும் சுற்றுச்சூழல் ராசாவின் அடாவடி ...மழை வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வேறு ... ஏன், அப்போது தொழிற்சாலைகள் வரவில்லையா?? அரசு ஊழியர்கள் போராட்டம் நியாயமானதா?? அதை அடக்குமுறை செய்த ஜெயாவின் செயல்கள் கொஞ்சம் ஓவர்தான் ... ஆனால், அக்கவுன்டபிலிட்டியே இல்லாமல் சம்பளம் வாங்கும் பெரும்பாலான (அனைவரும் அல்ல.. சீரிய அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள், எனது பெற்றோர் உட்பட) ஊழியர்களின் சம்பளத்துக்கே அரசு செலவினம் ஆனது நியாயமா?? இப்படியெல்லாம் போராடி நிதி நிலையை சீராக்கி சில நல்ல திட்டங்களால் தான் ஒரேயடியாய் தோற்காமல் விஜயகாந்த் ஓட்டுப்பிளவையும் மீறி 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது அதிமுக. தாத்தாவால் மெஜாரிட்டி கூட இல்லாமல் 99 தான் வாங்க முடிந்தது ...ஜெயா சீராக்கிய நிதி நிலைமையை இன்று இலவச டீவீ, இலவச நிலம் என்று மீண்டும் தாத்தா திவாலாக்கியிருக்கிறார். ஏழைகளுக்கு ஒரு ரூபாய் அரிசி சிறந்த திட்டம், தேவை .... டீவீ. தேவையா?? புதிதாய் அமைத்த அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுக்கு 2கோடி மட்டும் ஒதுக்கி, இலவச டீவீக்கு 1000 கோடி செலவிடுவதுதான் தமிழ்நாட்டை உயர்த்துவதா ?? சிமென்ட் உபயோகமோ, சினிமா டீவீ சம்பந்தமோ, புதிய அரசு ஊழியர் , ஆசிரியர் நியமனமோ இல்லாமல் எந்தத்திட்டத்தை தலைவர் செய்கிறார்?? காரணம் புரியுமே !!! அன்று ஜெயா சொன்ன சைக்கிள் திட்டத்தை இது மத்திய அரசு திட்டம் என்று எகத்தாளம் செய்தார் .. இவரோட ஆட்சியில மருத்துவக் காப்பீடு, ஆம்புலன்ஸ், ஜவஹர்லால் தேசிய நகர வளர்ச்சித்திட்டம் எல்லாம் மத்திய அரசு ஆதரவில் நடந்ததே. தன்னை சனனாயகவாதியாக நடித்துக்காட்டிக்கொள்ளும் மஞ்சள் துண்டு என்ன வாழுதாம் .... ஒரு ப்ரஸ் மீட்டுக்குப்போய் அய்யா மீது நியாயமான குற்றச்சாட்டு கூறுங்கள் .... எகத்தாளமாய் பதில் வரும் ... வீட்டுக்குப் போன் போட்டு அசிங்கமாய்த்திட்டுவார்கள் .... சாதியை இழுப்பார் .... ஜால்ரா கூட்டம் அடடா நகைச்சுவை ஆகாகா ராசதந்திரம்னு கூவும் .... அது அடிமைத்தனம் இல்லையா?? தலைமையை மீறி துரையோ, வேலுவோ, முடியோ ஏதாவது பேச முடியுமா??? என்ன அந்தம்மா வெளிப்படையா எல்லாரையும் ஆட்டுவிக்கறாங்க ... நம்பாளு வெளிய தெரியாம ஒரு உப்புமாக் கூட்டத்த வெச்சு டீல் பண்ணுறாரு அதுதான் வித்தியாசம் .. ஜெயலலிதா சூப்பர்-டூப்பர் டீவீன்னு கேபிள் தொழிலை கைப்பற்ற முயற்சித்தபோது குய்யோ முறையோ அனியாயம், அக்கிரமம்னு கூவின பத்திரிகைகளெல்லாம் சுமங்கலி, டீடீஎச்னு இந்தக் கூட்டம் கோலொச்சும்போது எங்கே போயினர்?? அந்தம்மா டைரக்டா யாரையாவது திட்டும் ... இவரு ஜால்ரா மணி, வெற்றிக்கொண்டான், குருமான்னு வேற யாருக்காவது எழுதிக்கொடுத்து அவுங்கள விட்டுத் திட்டச்சொல்லுவாரு !! வெளியில் பொது மேடையில் வெளிப்படையாக காலில் விழுவது மட்டும் அடிமைத்தனம் இல்லீங்க ... ஆலயத்துக்குள்ள தனி ரூமுல காலில் விழுவதும் அடிமைத்தனமே ... இதில் ரெண்டு கழகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை ... தமிழனுக்கு வெட்கமென்னவென்றால்... இந்த சீர்கேட்டுல இதுக்கு பேரு சுயமரியாதை இயக்கம் !!!!! த்த்தூ
பதிலளிநீக்குஏக இறையின் அருள் என்றென்றும் அனைவர் மீதும் நிலவட்டுமாக
பதிலளிநீக்குஇந்த வெற்றி என்பதே பார்ப்பன ஊடகங்களின் வெற்றி தான். ஏனெனில் தினந்தோறும் திமுக வை மட்டுமே குறை சொல்லி அதிமுகவின் பிரச்சார பீரங்கியாக தினமணி, தினமலர், விகடன் இதழ்கள் செயல்பட்டன. இன்றும் செயல்பட்டு வருகின்றன. இவையனைத்தும் நடுநிலைமை ஊடகங்கள் என்று இன்றும் இளிச்சவாய் தமிழர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஊழலை எதிர்க்க ஜெயலலிதா என்ற மற்றொரு ஊழல்வாதியா? என்ற கேள்வியை இந்த ஊடகங்கள் எழுப்பவேயில்லை. எழுப்பவும் மாட்டார்கள். ஏனெனில் பார்ப்பனர்கள் தவறு செய்தால் மந்திரம் சொல்லி போக்கி விடலாம் என்ற மனுதர்மத்தில் திளைத்திருக்கும் சோ ராமசாமி வகையறாவை சேர்ந்தவர்கள் பெரும்பாலான ஊடகத்தினர்கள். ஆனால் கருணாநிதியோ சூத்திரன். எனவே கருணாநிதியை நீதிமன்றம் தண்டித்தே ஆக வேண்டும்.
அப்புறம் ஈழத்தை பற்றி உருகி உருகி பேசியவர்கள் அரசியலிலும் பதிவுலகிலும் பலர் உண்டு. ராஜபக்சே இனப்படுகொளையாளன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அம்மாவின் பதவியேற்பு விழாவுக்கு வந்த நரவேட்டை புகழ் "நரேந்திர மோடி" யார்? அவனும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை குஜராத்திலே கொன்று குவித்தவனல்லவா. ஆனால் அவன் தமிழ்நாட்டிற்கு வந்ததை எத்தனை ஈழ அபிமானிகள் கண்டித்தனர். ஆனால் மோடி போல அம்மா ஆட்சி செய்ய வேண்டுமென்று செந்தமிழன் சீமான் ஆசைப்படுகிறார். பலரும் இதை ஆதரிக்கின்றனர். இதைப்பற்றி எவனானவது பதிவுலகில் கண்டித்தானா? ஏன் கண்டிக்கவில்லை. மோடியால் செத்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மனிதர்காளாக கூட வாழ தகுதியில்லாதவர்கள் என்ற எண்ணம் தான். எனவே மனிதநேயம் மக்களை கொன்றான் எங்கே மக்கள் அநியாயமாக மக்கள் கொல்லப்பட்டாலும் நாங்கள் கூவுவோம் என்று மனசாட்சிக்கு விரோதமாக பொய் சொல்லாமல் ஈழ அபிமானிகள் வாழ கற்றுக் கொள்ளட்டும். மோடியின் தமிழக வருகையை கண்டிக்காத எவனும் ராஜபகேச்யை கண்டிக்க தகுதியில்லை. குறைந்தபட்சம் தாங்களாவது மோடியின் வருகையை ஒட்டி ஒரு பதிவு போட்டமைக்கு நன்றிகள் யுவகிருஷனா.
பதிலளிநீக்கு