2 ஜனவரி, 2012

போட்டுத் தாக்கு!

‘நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை’ என்கிற இந்த இரண்டு நேரெதிர் மதிப்பீடுகளில் நமக்கு நம்பிக்கை எதுவும் கிடையாது. இந்த ‘நல்ல, கெட்ட’ விஷயங்களை யார் வரையறுக்கிறார்கள் என்பது தெரியாதது முதல் காரணம். ‘கெட்ட வார்த்தை’ என்று சொல்லப்படும் வார்த்தைகள் நமக்கு இயல்பானவை என்பது இரண்டாம் காரணம். ஒரு காலத்தில் ‘ஓத்தா’ இல்லாமல் எந்த விவாதமுமே சாத்தியமில்லை என்கிற காலக்கட்டமும் இருந்தது. இனிஷியல் மாதிரி எந்த வாக்கியத்துக்கும் முன்பாக ‘ஓத்தா’ போடுவது ஒரு நோயாகவே இருந்தது. குடும்பத்தினரிடம் பேசும்போதுகூட ‘ஓத்தா’ போட்டுப் பேசி பேஜாராக்கியிருக்கிறேன். கொஞ்சம் டீசண்டான கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்தபிறகு, அங்கிருந்த பீட்டர்களோடும், ஸ்டெல்லாக்களோடும் பேசும்போது இந்த ஓத்தா வந்துவிடுமோவென மிக கவனமாகத் தவிர்த்து, இப்போது பேசும் இந்த அடாசு மொழிநடைக்கு வந்துத் தொலைத்திருக்கிறேன். ஆனால் பீட்டர்களோடு இஷ்டத்துக்கும் ‘பஃக்’கலாம் என்பது வேறு விஷயம். ‘ஓத்தா’ மாதிரி சொற்களுக்கு விபரீதமான அர்த்தம் உண்டென்றாலும், இம்மாதிரி இயல்பாக பேசும்போது வரும் கெட்டச் சொற்களுக்கு நேரடி அர்த்தம் எதுவும் கிடையாது என்பதுதான் இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. படவா, ராஸ்கோலு, திருட்டுப்பையா மாதிரியான சொற்களால் கொஞ்சுவது மாதிரி, தன் குழந்தையை ‘தெவ்டியா பையா/தெவ்டியா’ என்று கொஞ்சும் அப்பாக்களை கூட சென்னையில் பார்க்க முடியும்.

சரி, இந்த வார்த்தைகளை சமூகம் எப்படியோ ‘கெட்ட’’ வார்த்தைகள் என்று கண்டறிந்து, இவற்றை உச்சரிப்பவனை கெட்டவன்(!) என்று மிகச்சரியாக அடையாளம் கண்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுத் தொலைத்துவிடுவோம். மாண்புமிகு சமூகம் ‘நல்ல’ வார்த்தைகள் என்று கருதும் சில வார்த்தைகள்கூட எப்படி ஆபாச/கெட்ட நோக்கத்துக்கு மாறியது என்பது குறித்த ஒரு வெளிச்சத்தை எதிர்நோக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உதாரணத்துக்கு ‘போடுவது’. கண்ணாடியை கீழே போட்டு உடைத்தான். நாடகத்தின் ராஜா வேஷம் போட்டான். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வெறிதாங்காமல் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டான். இப்படி ஏராளமான வாக்கியங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் நாம் போடுபோடுவென இந்தச் சொல்லை போடலாம். ஆனால் சாமானிய சமூகத்தில் ‘போடுவது’ என்பது பாலியல் உறவினை குறிப்பதாக எப்படி மாறியது என்று தெரியவில்லை. ’அவன்தான் அவளைப் போடுறானாமே?’ என்று சர்வசாதாரணமாக க்ளிண்டன் –மோனிகா விவகாரம் மாதிரி ஏதோ கிசுகிசுவை நம் காதில் யாரோ போட்டுவிட்டுச் செல்லும்போது எவ்வளவு மோசமான அர்த்தத்தை தருகிறது?

“கவலையே படாதீங்க. ரெண்டு நாளுலே நானே போட்டுர்றேன்“ என்று கடந்துப்போகும் யாரோ ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டுச் செல்ல, ‘பக்’கென்று ஆகிறது. கெட்டப் பொருளைத் தரும் இந்த நல்ல வார்த்தைகளின் பிரச்சினையே இதுதான். சமயசந்தர்ப்பம் புரியாமல் ஏதாவது கெட்ட அர்த்தத்தை தந்துத் தொலைக்கும். இந்தப் ‘போடு’, எந்தப் ‘போடு’ என்று புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

‘போடுவது’ என்பதாவது வினைச்சொல். நல்ல பெயர்ச்சொற்களும் கூட இந்த ஆபாச உருமாறுதலுக்கு தவறுவதில்லை. சாமான், சொம்பு மாதிரியான சொற்கள் பயன்படுத்தப்படுவது பாலுறுப்புகளை குறிப்பிடுவதற்காக. மளிகைக் கடைக்குப் போய் சாமான் லிஸ்ட்டு கொடுக்கும்போது இதனால் சிறு உறுத்தல் ஏற்படுகிறது. அதையடுத்து சாமானை ஏத்தியாச்சி, சாமானை எறக்கியாச்சி என்று தொடர்வினைகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் தரும் மன உளைச்சல்களுக்கு அளவேயில்லை.

காமவெறி புத்தகங்களில் முயல், பாம்பு மாதிரியான உயிரினங்களை கூட காமகொடூர எழுத்தாளர்கள் விட்டு வைப்பதில்லை. அவற்றை அவர்கள் உவமானமாகப் பயன்படுத்தும் இடங்கள் படு கொச்சையானவை. அடப்பாவிகளா.. பாம்பையே நல்ல பாம்பு என்கிறார்கள். அதைக்கூட ‘கெட்ட’ அர்த்தத்துக்கு உபயோகித்துக் கொள்கிறார்களே? பாம்பை விடுங்கள். அது வாழும் புற்றைக்கூட ஆபாசக்’குறி’யாக்கி விட்டார்களே இந்த காமவெறியர்கள்?

மாங்காய், வாழைக்காய், கேரட் என்று காய்கறிகள் படும்பாடு அநியாயம். எலுமிச்சைப் பழத்தைக் கூட விட்டு வைப்பதில்லை. நல்லவேளையாக பூசணிக்காய், தர்ப்பூசணியெல்லாம் அளவில் பெரியதாக இருப்பதால் தப்பியது. புடலங்காய்க்கு எப்படி ஆபாச நிழல் விழுகிறது என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.

மாமா என்கிற அற்புதமான உறவையே கொச்சைப்படுத்துகிறது இந்த ஆபாசக் கலாச்சாரம். தாய்மாமன் என்கிற உறவின் அருமை பெருமைகளை நாம் பாசமலர் மற்றும் கிழக்குச் சீமையிலே ஆகிய திரைப்படங்களைப் பார்த்து உணர்ந்திருக்கிறோம். ஆனால் இன்று ‘மாமா’ என்கிற சொல்லே கூட்டிக் கொடுப்பவர் என்கிற அர்த்தத்தில் வழங்கப்படுகிறது. பாருங்கள். பேசிக்கொண்டேப் போகிறோம், எவ்வளவு ‘நல்ல வார்த்தைகள்’ கெட்ட அர்த்தத்தில் வருகின்றன? கூட்டிக் கொடுப்பது, அதாவது ஏற்கனவே கொடுத்த தொகையிலிருந்து அதிகமாக்கிக் கொடுப்பது என்கிற நல்ல விஷயம் கூட எப்படி திரிகிறது பாருங்கள். ‘சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுங்க’ என்று எங்கேயாவது கேட்டோமானால், அது எப்படிப்பட்ட பொருளைத் தரும்?

இப்படியே எழுதிக்கொண்டே போனால் ‘நல்ல’ வார்த்தைகளில் எவ்வளவு ‘கெட்ட’ அர்த்தங்கள் இருக்குமென ஒரு புத்தகமே ‘போடலாம்’. ஆனால் அளவில் ‘சிறிய’’ கட்டுரைகளைதான் இணைய வாசகர்கள் விரும்புகிறார்கள். அதுதான் அவர்களை ‘எழுச்சி’ பெறச் செய்கிறது என்பதாலும், இப்பிரச்சினை குறித்த விவாதத்தை தொடங்கும் புள்ளியாக இந்த கட்டுரையை ‘போட்டு’ வைக்கிறேன்.

இருந்தாலும் மனம் ஆற மாட்டேன் என்கிறது. தமிழர்கள் மங்கல நிகழ்வுகளாக இருந்தாலும் சரி. அமங்கல நிகழ்வுகளாக இருந்தாலும் சரி. விளக்குக்கு முதன்மையான இடத்தை தங்கள் அன்றாட வாழ்வில் சங்கக் காலத்தில் இருந்து தந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ‘விளக்கு’ கூட கொச்சையானப் பொருளில் இந்நூற்றாண்டில் இருந்து புரிந்துக்கொள்ளப் படுகிறது. ‘விளக்கு புடிப்பது’ என்கிற சொல் ‘மாமா’க்களைதான் குறிக்கிறது என்றாலும், மின்தடை காரணமாக வேறு வழியின்றி, இரவுகளில் நாம் கூட கையில் விளக்கைப் பிடித்தாக வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் மாலை ஆறு மணி ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் “விளக்கேத்தியாச்சா?” என்கிற குரல் ஒலிக்கும். இனி இம்மாதிரி யாரேனும் சொன்னால், அது எப்படி புரிந்துக்கொள்ளப்படும் என்கிற சமூகக்கவலை நமக்கு ஏற்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமான கவலை ஒன்று உண்டு. இலக்கியவாதிகளுக்கு ‘விளக்கு விருது’ என்று ஒன்று தருகிறார்கள். வேறு ஏதாவது பெயரில் விருது கொடுத்துத் தொலைக்கக் கூடாதா? அந்த விருதை கையில் பிடித்திருக்கும் இலக்கியவாதியை ஊரென்ன பேசும்... இந்தப் பெயரிலான விருதை வாங்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு உடலும், மனமும் கூசுமே?

இந்த வலைத்தளத்தை ‘வாசிப்பவர்களுக்கு’ (இந்தச் சொல் கூட ஆபாச அர்த்தம் தந்து தொலைக்கிறதே) புத்தாண்டு வாழ்த்துகள்!

கடந்த ஆண்டு புத்தாண்டுப் பதிவு : சரோஜா தேவி!

18 கருத்துகள்:

  1. சினிமாவால வந்த வினைகளில் இதுவும் ஒன்னு! கவுண்டமணி காலத்தில இருந்து இப்ப சந்தானம் வரை இத வச்சி தான் பொழப்ப ஓட்டிட்டு இருக்காங்க!!

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா... கமண்ட் 'போட்டாச்சு!' :-)

    பதிலளிநீக்கு
  3. தமிழர்கள் மங்கல நிகழ்வுகளாக இருந்தாலும்///

    யுவா, மங்கள நிகழ்வு என்பதே சரி.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா4:01 PM, ஜனவரி 02, 2012

    //ஆனால் பீட்டர்களோடு இஷ்டத்துக்கும் ‘பஃக்’கலாம் என்பது வேறு விஷயம்.//

    //“கவலையே படாதீங்க. ரெண்டு நாளுலே நானே போட்டுர்றேன்“ என்று கடந்துப்போகும் யாரோ ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டுச் செல்ல, ‘பக்’கென்று ஆகிறது.//

    பக்கென்னுதானே ஆகிறது?

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா4:03 PM, ஜனவரி 02, 2012

    //அந்த விருதை கையில் பிடித்திருக்கும் இலக்கியவாதியை ஊரென்ன பேசும்...//

    draft ல் 'அதைக் கையில் பிடித்திருக்கும் இலக்கியவாதியை ஊரென்ன பேசும்...'என்று எழுதிவிட்டு பிறகு மாற்றியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா4:04 PM, ஜனவரி 02, 2012

    'கில்லி'வந்த புதிதில் படம் பேர் சொல்ல வெட்கப்பட்டேன். 'அப்படிப் போடு கையால' என்று பாட வெட்கப்பட்டேன். போகப் போக சபைக் கூச்சம் எல்லாம் விலகிப்போயிடும் போல...

    பதிலளிநீக்கு
  7. இந்த மாதிரி போடறதுக்கு ( அட பதிவ தான் சொல்லுகிறேன்) உங்கள விட்டா ஆளே இல்லீங்க.
    நல்லா போடுறீங்க. ''மாட்டுவீங்கலோன்னு'' சந்தேகமா இருக்கு.

    எங்க பக்கமெல்லாம் ''ஒத்தா'' கிடையாதுங்க ''ங்கோத்தாதான்''.

    இந்த பதிவ படிச்சு நானும் நல்லா ''எழுச்சி'' பெற்றேன்.

    இன்னும் நிறைய சொல்லலாம் . தம்பி , தூங்கறான், காய், பழம், இப்படி.............

    அனேகமா நெறையா பேரு இங்க போடுவாங்கன்னு ( அட கமெண்ட தானுங்க ) நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இந்த பதிவைப் படித்ததும் எனக்கெதுவும் இரட்டை அர்த்தமே தோன்றவில்லை.எல்லாமே ஒரு அர்த்தமாத்தான் தோன்றுது ;)))))))

    பதிலளிநீக்கு
  9. //தமிழர்கள் மங்கல நிகழ்வுகளாக இருந்தாலும்///

    யுவா, மங்கள நிகழ்வு என்பதே சரி.//

    இரண்டுமே சரி. மங்களம் சமஸ்கிருதம். மங்கலம் என்பது தமிழ்!

    பதிலளிநீக்கு
  10. இது ஒன்றும் தமிழுக்கு மட்டுமே உரித்தானதல்ல. எல்லா மொழிகளுக்குமே இது பொருந்தும்.

    உதாரணத்துக்கு, அந்தேரி ராத் மே தியா தேரே ஹாத் மே என்னும் ஹிந்தி படத்தலைப்பின் இரு அர்த்தங்கள்:

    1. இருண்ட நள்ளிரவில் உன் கையில் விளக்கு

    2. இருண்ட நள்ளிரவில் உன் கையில் தூக்கிக் கொடுத்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது படத்துக்கு பதிலா வேற நல்ல படமா போடுங்க ;-)

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா10:09 PM, ஜனவரி 02, 2012

    சென்னையில் கெட்ட...ஸாரி கேட்ட வார்த்தை 'பாடு' என்பது. இதற்கு என்ன அர்த்தம்?

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா1:33 AM, ஜனவரி 03, 2012

    யுவர் ஆனர்...மிஸ்டர் டோண்டு குணமாகிவிட்டார் என்ற அறிகுறி அவர் கமென்ட்டிலிருந்து தெளிவாகத் தெரிகிறது :-)

    பதிலளிநீக்கு
  14. மௌன குரு போல் நல்ல படத்தை விமர்சனம் செய்ய மாட்டியா? போடறது...

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா2:40 PM, ஜனவரி 03, 2012

    தம்பி குலோத்துங்கா.....

    இன்னா விளையாட்டு இது .......

    நல்லா இட்டுருக்கே பதிவு

    (எப்பூடி வேற வார்த்தை கொண்டாந்துட்டாம்லே!)

    ஜிப்பா கந்தசாமி

    பதிலளிநீக்கு
  16. ஜில்பான்சி11:38 PM, ஜனவரி 03, 2012

    இந்தக் கொடுமை அமெரிக்கக் குமுகாயத்திலும் உண்டு என்பதை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.

    நானும் உன்னுடன் வருகிறேன். - இதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்வீங்க?

    I'll come with you.

    ஆனாக்க அமெரிக்காவுல இப்படிச் சொல்லக்கூடாது.

    I'll go with you ன்னுதான் சொல்வாங்க.

    ஏன்னாக்கா I'll cum with you அப்படின்னா பொருள் மாறிடும். அதனாலதான்.

    பதிலளிநீக்கு
  17. Tamilil 'idam kondu porul ariga' endru oru ilakkanam undu. adhu idhu pondra prchanaigalai thavirkathaan.

    பதிலளிநீக்கு