தொண்ணூத்தி மூன்றிலோ, நான்கிலோ டங்கலின் காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும்போது சொன்னார்கள். இனிமேல் இந்தியாவில் பணம் மழையாக கொட்டப் போகிறது. ஏழைகளை அருங்காட்சியகத்தில்தான் பார்க்கமுடியுமென. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தோமானால் அந்த கூற்றில் பாதி மெய்யாகியிருக்கிறது. இந்தியாவில் பணம் மழையாக கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏழைகள் மறைந்துவிடவில்லை. மாறாக சாமர்த்தியம் இருப்பவன் எழுநூறு தலைமுறைக்கும் சொத்து சேர்த்துக் கொள்ளலாம், சாமர்த்தியமற்றவன் தூக்கு போட்டு சாகலாம் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. இச்சூழலை மிகச்சரியாக பிரதிபலித்து கடந்த ஆண்டு தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் மங்காத்தா. இவ்வாண்டு தெலுங்கில் பிசினஸ்மேன்.
பிசினஸ்மேனுக்கு சரி/தவறு இரண்டுக்குமே அர்த்தம் தெரியாது. வாழத்தேவையான எதையும் செய்யலாம் என்பதே அவன் வேதம். இந்த நாட்டில் ஏராளமாக பணம் இருக்கிறது. அதை அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள். கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்கிறார்கள். ரவுடிகளும் ஏன் கொஞ்சம் அடித்துக்கொள்ளக் கூடாது? காலத்துக்கும் எவன் எவனுக்கோ அடியாளாக வேலைபார்த்து அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாட அவனுக்கென்ன தலையெழுத்தா? ரவுடியிஸத்தை கார்ப்பரேட் ஸ்டைலில் நாடு முழுக்க கிளை அமைத்து விரிவுபடுத்துவதுதான் பிசினஸ்மேனின் பிசினஸ். கேட்கவே டெர்ரராக இருக்கும் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படம் என்று சொன்னால் நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகதானிருக்கும். ‘தடி எடுப்பவன் தான் தண்டல்காரனாக முடியும்’ என்பதோடு, நீயும் தடியெடு, இல்லாவிட்டால் தண்டம் கட்டு என்கிற படுமோசமான மேசெஜ் தான் படத்தின் ஒன்லைன்.
மூன்று மாதத்துக்கு முன்புதான் ஒரு ’தூக்குடு’ என்றொரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறார் மகேஷ்பாபு. அந்த எனர்ஜி லெவல் கொஞ்சமும் குறையாமல் அடுத்தப் படத்திலும் அதே பிக்கப்போடு வேலைபார்த்து, முந்தைய ஹிட்டை மிஞ்சும் இன்னொரு ஹிட்டடிக்க இந்தியாவிலேயே இன்று வேறு நடிகர் இல்லை. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை திரை முழுக்க பிரின்ஸ் ராஜ்யம்தான். ஆக்டிங், ஆக்ஷன், டேன்ஸ், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று எல்லாப் பக்கமும் சிக்ஸர் அடிக்கும் மாஸ் ஹீரோ அனேகமாக இன்று இவர் ஒருவர்தான். தன்னை முழுக்க இயக்குனரிடம் ஒப்புக் கொடுத்துவிடுவதால், பூரிஜெகன்நாத் மாதிரி மாஸ் டைரக்டர்கள் கமர்சியலில் ‘எதை’ வேண்டுமானாலும் பரிசோதித்து பார்த்துக் கொள்ள முடிகிறது. தெலுங்குப் படங்கள் இன்று கமர்ஷியலில் தொட்டிருக்கும் உச்சம் மிகக்குறுகிய காலத்தில் நிகழ்ந்திருக்கும் சாதனை.
காஜல் அகர்வால் நாட்டுக்கட்டையாக இல்லாமல் இருந்தாலும், கைக்கு வாட்டமான அடக்கமான சைஸில் இருக்கிறார். பெரிய முண்டக்கண்களை தவிர்த்து செக்ஸியான அம்சங்கள் ஏதும் சொல்லிக் கொள்ளும்படி இவரிடம் இல்லை. ஆனாலும் லிப்-லாக்குக்கென்றே அவரது உதடுகள் உருவானவையோ என்னவோ தெரியவில்லை. உலகின் மிக கவர்ச்சிகரமான உதடுகள் கொண்டவர்களை பட்டியலிட்டால், காஜலை மிஸ் செய்யவே முடியாது. வெட்கப்பட்டுக் கொண்டே லிப்-டூ-லிப் அடித்தார் மகேஷ்பாபு என்று படித்தேன். படத்தில் பார்க்கும்போது அப்படி தெரியவில்லை. ஸ்ட்ராங் டீப் கிஸ்.
ஹீரோ-டைரக்டரின் போக்கிரி காம்பினேஷன் பிரசித்தி பெற்றது என்பதால், கிட்டத்தட்ட அதே பாணி ஸ்க்ரீன்ப்ளே, டைரக்ஷன். பரபரவென்று ஓடும் திரைக்கதையில் ஒரு காட்சியை கூட மிஸ் செய்யமுடியவில்லை. படம் முழுக்க விரவியிருக்கும் ‘பஞ்ச்’களுக்கு விசிலடித்து விசிலடித்தே தம்மு தீருகிறது.
யோசித்துப் பார்த்தால் உருப்படியாக ஒன்றுமே இல்லாத படம். ஆனால் ஏதோ ஒரு விஷயம் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டுகிறது. பூரிஜெகன்நாத்தின் மேஜிக்கே இதுதான்.
Good Review. I like Prince so much. Awaiting to see.
பதிலளிநீக்குகழுதை மேய்க்கிற பய அனேகமா இந்த படத்தோட தமிழ் ரைட்ஸ் வாங்கிடுவான்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅதுக்குள்ளார இப்ப நடிக்க வந்திருக்கிற நிதிகளில் யாரவது ஒருத்தர் உரிமையை வாங்கிட்டா நல்ல இருக்கும்.
//முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை திரை முழுக்க பிரின்ஸ் ராஜ்யம்தான். ஆக்டிங், ஆக்ஷன், டேன்ஸ், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று எல்லாப் பக்கமும் சிக்ஸர் அடிக்கும் மாஸ் ஹீரோ அனேகமாக இன்று இவர் ஒருவர்தான்.//
பதிலளிநீக்குமுதன் முதலா உங்க கருத்துக்கு என்னோட ஒரு மாற்று கருத்து. என்னோட சாய்ஸ் சல்மான் கான் தான்.
யோசித்துப் பார்த்தால் ஒன்று மட்டும் புரிகிறது... நீங்க எவ்வளவு மொக்கைப்படமா இருந்தாலும் கூச்சப்படாம பாராட்டித் தள்ளுறீங்க...
பதிலளிநீக்குமுந்தைய ஹிட்டை மிஞ்சும் இன்னொரு ஹிட்டடிக்க இந்தியாவிலேயே இன்று வேறு நடிகர் இல்லை
பதிலளிநீக்கு- இருக்கிறாரே.. சல்மான் பாய் - வாண்டட் சூப்பர் ஹிட், ரெடி மெகா ஹிட், பாடிகார்ட் ஆல் டைம் பிளாக்பஸ்டர் - ஹேட்ரிக் பிளாக்பஸ்டர்
ஆண்டவா, தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுபவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குகொல்டி படத்துக்கு விமர்சனம் எழுதுபவர்களிடமிருந்து நீ காப்பாற்று
நண்பன், வேட்டை எப்போது
பதிலளிநீக்குதமிழ்ல அழகா ரெண்டு பெரிய படம் வெளியாகி இருக்கு, அதை விமர்சனம் செஞ்சு இருப்பீங்கன்னு எதிர்பார்த்து வந்தா தெலுங்கு படம், ஏன் இந்த ஓரவஞ்சனை லக்கி ?
பதிலளிநீக்குலாஜிக்லாம் பார்த்த படம் எடுக்க முடியுமா தல... மங்காத்த மாதிரி இருக்குன்னு சொல்லிட்டிங்க... பாத்துரவேண்டியது தான்...
பதிலளிநீக்குதோழர்களே!
பதிலளிநீக்குசல்லு பாய் அடுத்தவன் ஓட்டி ஜெயிச்ச குதிரையை இன்னொரு முறை ஓட்டி ஜெயிக்கிற ஜாக்கி. ப்ரின்ஸுக்கு என்னிக்குமே புது குதிரைதான்!
இதுதான் ரெண்டு பேருக்குமான அடிப்படை வித்தியாசம்...
//சல்லு பாய் அடுத்தவன் ஓட்டி ஜெயிச்ச குதிரையை இன்னொரு முறை ஓட்டி ஜெயிக்கிற ஜாக்கி. ப்ரின்ஸுக்கு என்னிக்குமே புது குதிரைதான்!//
பதிலளிநீக்குநான் சொல்ல வந்தது இந்த கோணத்தில் அல்ல யுவா,
------------------------------------------------------------------------------------------------------------------------------
//முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை திரை முழுக்க பிரின்ஸ் ராஜ்யம்தான். ஆக்டிங், ஆக்ஷன், டேன்ஸ், ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று எல்லாப் பக்கமும் சிக்ஸர் அடிக்கும் மாஸ் ஹீரோ அனேகமாக இன்று இவர் ஒருவர்தான்.//
இதில் தான் சல்லு பாய் பிரின்சை முந்தி நிற்கிறார் என்று சொல்ல வந்தேன். இதில் மற்றொன்றும் சேர்த்துக்கொள்ளலாம்.ஒரு நடிகனுக்கு முதுமை தரும் தண்டனையையும் சல்லு வெற்றிகரமாக முறியடிக்கிறார் கமலை விட.
இந்தப் படம் பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால் நீங்க ஒஸ்தியை சூப்பர் ஹிட் ஆகும் என்ற அளவுக்கு ஒசத்தி என்ற சொன்னதாலேயே இந்த படத்துக்கான விமர்சனத்தை மறுபடி மறுபடி படிச்சு முடிவு எடுக்க வேண்டியிருக்குது!!!!
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனத்தில் நான் மிகவும் ரசித்தது காஜல் அகர்வாலைப் பற்றித்தான். Haha!
பதிலளிநீக்கு