25 ஜனவரி, 2012

வேட்டை – கமர்சியல் கோட்டை

‘பப்பரப்பா’ பாட்டு தொடங்கும்போது ரைட் ஸ்க்ரீன் முழுக்க க்ளோசப்பில் காட்டப்படும் அமலாபாலின் பேரழகு தொப்புளை காண்பதற்காகவே இன்னொரு முறை சூரியன் தியேட்டரில் ஐம்பது ரூபாய் டிக்கெட்டுக்கும், இருபது ரூபாய் பைக் டோக்கனுக்கும், இருபத்தைந்து ரூபாய் வாயில் வைக்க சகிக்காத கண்ணறாவி காஃபிக்கும் அழலாம் போலிருக்கிறது.

தமிழ், ஆங்கிலம், சீனம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா என்று எல்லா மொழிகளிலுமே ஏறத்தாழ நூற்றி சொச்சமுறை படமாக்கப்பட்டுவிட்ட பயந்த அண்ணன், வீரம் செறிந்த தம்பி கதையை லட்சத்து சொச்சமாவது முறை படமாக்கியிருக்கும் லிங்குசாமியை, நண்பன் பாணியில் பேண்ட் அவுத்து சாஷ்டாங்கமாக காலில் விழுந்து ‘தலைவா கலக்கிட்டே!’ என்றுதான் பாராட்டித் தொலைக்க வேண்டும்.

‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுன்னு சொன்னாங்க. மூணு ஹீரோ இருக்காங்களே பாஸூ’ என்று கூட படம் பார்த்த தோழரிடம் சொன்னபோது, ‘முட்டாள். அது ஹீரோயின், பேரு சமீராரொட்டி’ என்று கடிந்துக் கொண்டார். ஹீரோயினைக் கண்டதுமே ரசிகனுக்கு காதல் எழும்ப வேண்டும். அட்லீஸ்ட் தரையிலிருந்து காலாவது அரை இஞ்சுக்கு பரவசத்தில் மேலெழும்பவேண்டும். சமீராவைக் கண்டதுமே பக்கத்துவீட்டு விடலைப் பையனைக் கண்டது மாதிரி எரிச்சல்தான் மண்டிக்கொண்டு வருகிறது. இந்த அழகில் அம்மணிக்கு அஞ்சு செகண்டுக்கு ஒருமுறை குளோசப் வேறு. திட்டு திட்டான மேக்கப்பில் சமீராவை ஜூம் செய்துப் பார்த்த நீரவ்ஷாவுக்கு சிக்கன் குனியா வந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏமி லேது.

மிகச்சரியாக பண்ணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக லவ்வர் பாயாக அறிமுகமான மாதவனைப் பார்த்தால் ‘அங்கிள்’ என்றுகூட சொல்லத் தோன்றவில்லை. அடுத்த ஆண்டு ‘தாத்தா’ என்றே கூப்பிடலாம் போல. குட்டி கமல்ஹாசன்னு பேரு எடுத்தா மட்டும் போதாது பாஸூ. காதல் இளவரசனை பாருங்க. அறுபது வயசானாலும் இளவரசனாகவே இருக்கிறார். இவரைவிட மருதமலை வடிவேலுக்கு போலிஸ் யூனிஃபார்ம் பாந்தமாக இருந்தது. ஆர்யாவின் அதே ஸ்டீரியோ டைப் நடிப்பு. முகத்தில் வராத உணர்ச்சிகளை டப்பிங்கில் சரிகட்டும் உலகின் ஒரே நடிகராக இவர்தான் இருக்கவேண்டும்.

தூத்துக்குடியில் தினம் தினம் தீபாவளிதான் போல. படம் ஆரம்பித்ததில் தொடங்கி எங்காவது யாராவது பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இருளான வானத்தைக் காட்டினாலே வானவேடிக்கைதான்.

மிக மிக பலவீனமான அல்லது ஆயிரம் முறை சலித்து, லட்சம் முறை அரைத்த அதே மாவை வைத்துக்கொண்டு சூடான சுவையான இட்லியை சுட்டுக் கொடுத்திருக்கிறார் லிங்கு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முழம் முழமாக காதில் பூ சுற்றி, ஒன்றரை சவரனுக்கு கம்மல் வாங்கி குத்தினாலும் சுவாரஸ்யமான படமாக்கலில் லிங்கு கிங்கு.

படத்தின் பட்ஜெட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகம் வைத்து ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கு பெரும் தொகைக்கு தள்ளிவிட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஒருவேளை நியாயமான விலைக்கு விற்றிருந்தால், படத்தை வாங்கியவருக்கு கோடி கோடியாக கொட்டியிருக்கும். மாறாக வாங்கிய ரேட்டை நினைத்துப் பார்த்தால் இந்த கம்பெனியின் கதியும் தெருக்கோடிதானா என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

13 கருத்துகள்:

  1. மாதவன் "எனக்கே ஷட்டரா?" என ஒரு பஞ்ச் அடிக்கின்றார், மக்கள் விசில் அடிக்கின்றார்கள். ஏதற்க்கு இந்த டயலாக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?
    Did I miss anything??????

    பதிலளிநீக்கு
  2. செம...செம...உங்களின் பார்வையில் விமர்சனம்

    பதிலளிநீக்கு
  3. ‘டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டுன்னு சொன்னாங்க. மூணு ஹீரோ இருக்காங்களே பாஸூ’ என்று கூட படம் பார்த்த தோழரிடம் சொன்னபோது, ‘முட்டாள். அது ஹீரோயின், பேரு சமீராரொட்டி’ என்று கடிந்துக் கொண்டார்./////

    NICE...
    SUPER....

    பதிலளிநீக்கு
  4. I really enjoyed like MGR film. Nice entertainment movie...

    பதிலளிநீக்கு
  5. ஆக்ஷன் படம் என்பதை மனதில் கொண்டு லாஜிக்குகளை யோசிக்க வைக்காமல் விறுவிறு என காட்சிகளை நகர்த்துகிறார் லிங்குசாமி. போரடிக்கவில்லை! MGR படம் பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.

    பதிலளிநீக்கு
  6. ரெம்ப சந்தோசம் :)...

    "உங்கள் தகவலுக்கு நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com"

    பதிலளிநீக்கு
  7. ஹீரோயினைக் கண்டதுமே ரசிகனுக்கு காதல் ’’எழும்ப’’ வேண்டும்.

    நீங்க எழுதுனதுல அடைப்பு’’ குறி ‘’ missing.

    :)))))) யுவா யுவா .

    பதிலளிநீக்கு
  8. //ஹீரோயினைக் கண்டதுமே ரசிகனுக்கு காதல் எழும்ப வேண்டும். அட்லீஸ்ட் தரையிலிருந்து காலாவது அரை இஞ்சுக்கு பரவசத்தில் மேலெழும்பவேண்டும். //


    Nachchuuuuuuu

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா4:22 PM, ஜனவரி 26, 2012

    நீங்க வேற இந்த உலக சினிமா பற்றி அமெரிக்க பத்திரிகை ஒன்றிலேயே செய்தியோ, விமர்சனமோ வந்திருக்காம்.

    வேட்டை - உலக சினிமாவின் உச்சம்

    பதிலளிநீக்கு
  10. அகில இந்திய அமலா பால் ரசிகர் மன்ற தலைவர் மிஸ்டர் கன்னுகுட்டி12:04 AM, ஜனவரி 27, 2012

    அமலாபாலின் பேரழகு தொப்புள் என்று விளம்பர படுத்தி விட்டு ப்ரியா மணி தொப்புள் புகை படத்தை போட்ட உங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் :)

    கரெக்டா?

    பதிலளிநீக்கு
  11. அடப்பாவிகளா. ரெண்டு பேர் சேந்தாப்ல போயி படத்த பாத்துட்டு, ஒரு ஆள் மொக்கைன்னும், இன்னொரு ஆள் சூப்பெர்னும் எழுதிறீங்க. அங்க போய் ஆஹா ஓஹோன்னு பத்து பேர் கமெண்ட் போடறாங்க. இங்க வந்து ஆஹா ஓஹோன்னு பாத்து பேர் கமெண்ட் போடறாங்க. என்னய்யா நடக்குது இங்க.

    அமலா பால் தொப்புளுக்கும் பிரியாமணி தொப்புளுக்கும் வித்யாசம் தெரியாத பாமரர்கள் இருக்கிறவரைக்கும் நம்ம நல்லா கல்லா கட்டலாம்.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா12:54 AM, ஜனவரி 30, 2012

    prakash is lingusamy.

    பதிலளிநீக்கு