எவ்வளவு பெரிய பர்சனாலிட்டியாக இருந்தாலும் சரி. இந்த சமூகவலைத்தளத்தில் புழங்கும் ஆட்களிடம் மாட்டிக்கொண்டால் பஞ்சர்தான். கொஞ்சமாக போட்டோஷாப்பில் விளையாடத் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்துவிட்டால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி. வி.ஐ.பி.களின் முகத்தை மட்டும் வெட்டியெடுத்து, வேறு ஏதாவது ஒரு படத்தில் பொருத்தி நொடியில் உலகமெல்லாம் காண செய்துவிடுவார்கள்.
ஃபேஸ்புக்கில் இதுமாதிரி நக்கலடிக்கவென்றே நூற்றுக்கணக்கான க்ரூப்புகளை உருவாக்கி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கடுப்பேத்தறார் மை லார்ட்’ என்பது ஒரு க்ரூப்பின் பெயர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், எந்த லெவலுக்கு இறங்கி அடிப்பார்கள் என்பதை.
இப்போது இவர்களிடம் ரொம்பவும் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது மன்மோகன்சிங்தான். ஏனோ அவரது முகத்தைப் பார்த்தாலே வெட்டி, எங்காவது ஒட்டியாகவேண்டும் என்று இவர்களுக்கு ‘கொலைவெறி’ ஏற்பட்டு விடுகிறது. சோனியா, கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று அன்றன்றைய அவர்களது அறிக்கைகள், செயல்பாடுகளை பொறுத்து, இவர்களது ‘கருத்துப்படம்’ அமையும்.
இணையத்தில் புழங்குபவர்களுக்கு என்றுமே ஃபேவரைட் ஆன ஆட்கள் சிலர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் டி.ராஜேந்தர். அவருக்குப் பிறகு ஜே.கே.ரித்தீஷ். சமீபகாலமாக தன்னைத்தானே ‘பவர்ஸ்டார்’ என்று அழைத்துக் கொள்ளும் நடிகர் (!) சீனிவாசன். இவர்களெல்லாம் எதைச் செய்தாலும் இவர்களுக்கு ஜோக்குதான். பவர் ஸ்டார் சீனிவாசனின் லத்திகா திரைப்படம் சமீபத்தில் 200 நாள் ஓடியதை இந்த சோசியல் நெட்வொர்க் ஆட்கள் திருவிழாவாக கொண்டாடிவருகிறார்கள்.
இவர்கள் கிராஃபிக்ஸ் செய்ய அவசியமே வைக்காதபடி சில அரசியல்வாதிகளுக்கு கிராபிக்ஸ் போஸ்டர்கள் ஒட்டப்படுவதுண்டு. குறிப்பாக மத்திய அமைச்சர் அழகிரிக்கு அவர்களது தொண்டர்கள் அழைக்கும் அடைமொழிகள், மூக்குப்பொடி போடாமலேயே நம்மை தும்மவைக்கும் லெவலுக்கு காரம் கொண்டவை. அதையெல்லாம் அப்படியே கேமிரா மொபைலில் சிறைபிடித்து, எந்த மாற்றமும் இல்லாமல் இணையத்தில் ஏற்றுகிறார்கள்.
ஏதோ காமெடிக்கோ, பொழுதுபோக்குக்கோ இதையெல்லாம் இவர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மீதான தங்களது கோபத்துக்கு வடிகாலாகவும் இணையத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
எல்லை மீறாத வரை சரிதான்!
வீட்டுல எல்லாரையுமே சிரிக்கவைக்கும் அற்புதப் படங்களப்பா.
பதிலளிநீக்குஇதே அமெரிக்காவுல ரொம்ப ஓவராப் பண்ணுவாங்க.சுதந்திரதேவி சிலையக்கூட விட்டுவைக்க மாட்டாங்க.
:)))))))))
இதுல 5 வதாக இருக்கும் படம் தான் அட்டகாசம்.
பதிலளிநீக்குall comment are very super
பதிலளிநீக்கு//இன்றைய ஐ.டி. கலாச்சார இளைஞர்கள் இதற்காகவெல்லாம் தெருவுக்கு வந்து போராடுகிறார்களோ இல்லையோ.. இணையத்தில் ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ நாலுவரி கிண்டலாக எழுதிவிட்டு ‘ரிலாக்ஸ்’ ஆகத் தொடங்கிவிட்டார்கள்.//
பதிலளிநீக்குஆம். சரியாக சொன்னீர்கள். ஆனால் இந்த ஐ.டி. இளைஞர்கள் உருவாக்கிய வலைப்பூவில்தான் இதையும் எழுத வேண்டி உள்ளது என்றெண்ணும் போதுதான் நெருடுகிறது!!
ஜாலி என்ற பெயரில் மொக்கையான ஒரு பதிவு..!
பதிலளிநீக்கு