9 ஜூன், 2012

ஆபரேஷன் ப்ளாக்‌ஷீப்


“கமாண்டோ”

“யெஸ் கேப்டன்”

“முடிச்சிட்டியா?”

“பாவமாயிருக்கு”

“இந்த வேலைக்கு வந்துட்டு பாவம் புண்ணியமெல்லாம் பார்க்கணுமா?”

“கத்தற சத்தம் சகிச்சிக்க முடியலை”

“அதெல்லாம் அஞ்சு நிமிஷத்துலே முடிஞ்சிடும்”

“எனக்கு ரத்தத்தை பார்த்தா கொஞ்சம் அலர்ஜி கேப்டன்”

“யூ ஃபூல். ரத்தத்தை பார்க்குறதுதான் நமக்கு வேலையே”

“ஆனாலும் கேப்டன் கழுத்தை வெட்டினதுமே இளஞ்சூடா, வெளிர்சிவப்பா பீய்ச்சுற ரத்தத்தை பார்க்கும்போதெல்லாம் பீதியாகுது”


யூ பிளடி கமாண்டோ. என்னோட தேர்ட்டி இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸில் எவ்ளோவாட்டி இதே சீனை பார்த்திருப்பேன் தெரியுமா?”

“தட்ஸ் ஒய் யூ ஆர் கேப்டன். எனிவே, நான் உங்க ஆர்டருக்கு ஒபே பண்ணுறேன்”

“தலையை கெட்டியாப் பிடி”

“பிடிச்சுட்டேன்”

”கத்திய பாய்ச்சுறதுக்கு வாகான இடத்தை கழுத்திலே பார்த்து, ஒரே வெட்டு”

”வெட்டிட்டேன். ஓ காட்”

“கழுத்தை சரசரசரன்னு அறுத்து, தலையை தனியா வையி”

“முடிஞ்சது கேப்டன். ஆனா தலையில்லாத முண்டம் துடிக்குதே?”

“ஆமாம். அப்படித்தான் துடிக்கும் கமாண்டோ. கழுத்திலேருந்து வழியற ரத்தத்தை அப்படியே ஒரு பெரிய பாத்திரத்துலே புடிச்சி வையி”

“டன் கேப்டன்”

“அப்புறம் ரெண்டு காலையும் சேர்த்துப் புடிசி ஒரே சேர வெட்டு. ஒரே வெட்டு ரெண்டு துண்டு”

“முடிஞ்சது கேப்டன். இப்போ உடம்பில் எந்த அசைவுமில்லே”

“கொத்துக்கறி போடத் தெரியுமில்லே? பீஸ் பீஸா போடணும். கத்தியிலே தட்டுப்படற எலும்பையெல்லாம் தனியா பொறுக்கி வை கமாண்டோ”

“டன்டனா டன் கேப்டன்”

“இப்போ மொத்தமா எவ்ளோ கிலோ தேறும்?”

“பேக் பண்ணிட்டு, எடை போட்டுப் பார்க்கிறேன் கேப்டன்”

- படுமொக்கையாகப் போய்க் கொண்டிருக்கும் இந்த கதைக்கு முடிவு ஒன்றே ஒன்றுதான். அதுவும் நான்காம் லைனிலெயே நீங்கள் யூகித்துவிட்ட அதே படு த்ராபையான முடிவுதான். தலைப்பும் கூட அதைதான் குறியீடாக உணர்த்துகிறது. கேப்டன் கசாப்புக்கடை முதலாளி. கமாண்டோ கசாப்புக் கடையில் புதுசாக ஆடு வெட்ட சேர்ந்த பையன். ஓக்கே? சுபம்.

வேறு முடிவு ஒன்றையும் பரிசீலித்துப் பார்க்கலாம். இராணுவ கேப்டன், சித்திரவதைக் கூடத்தில் தனக்குக் கீழ் பணியாற்றும் கமாண்டோவுக்கு தொலைபேசியில் உத்தரவிட்டுக் கொண்டிருக்கிறான். வெட்டப்படுவன். எதிரிநாட்டுக்கு இராணுவ இரகசியங்களை விலைக்கு விற்றவன். இப்போது இந்தப் பின்னணியை மனதில் விஷூவலாக்கி ஓட்டிக்கொண்டே கதையைப் படித்துப் பாருங்கள். படுமொக்கையாக இருந்த கதை, ஒருவேளை சுமாரான மொக்கை ஆகியிருக்கலாம்.

9 கருத்துகள்:

  1. ம்ஹூம் ! ஒண்ணுமில்ல சிணுங்கினேன் பாஸ்

    பதிலளிநீக்கு
  2. யுவா

    ஆடு வெட்டுவது, மனிதனை வெட்டுவது ஒன்றாகிவிடுமா. ஆடு கறிக்காக/சாப்பிட்டுத் தீர்ப்பதற்காக வளர்க்கப்படுவது. வியாபாரம். ஆடு கத்துவதையே சகித்துக் கொள்ளமுடியாது. மனிதனை வெட்டுவது அதுவும் இராணுவத்தால் வெட்டப்படும் மனிதன் இது மொக்கையல்ல. உயிரினை சிலிர்க்க வைக்கும் வதை. ஆன்மாவின் வாதை.

    தனுஷ்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா8:02 PM, ஜூன் 10, 2012

    sema form'la irukapla.

    indha mokka kathaiyai padithuvitu , comment vera podum...mokkasamy

    பதிலளிநீக்கு
  4. இக்கதையை நான் கவிதை வடிவில் இருப்பதை, எஸ்.ராமகிருஷ்ணன் தனக்குப் பிடித்த கவிதையாக குறிப்பிட்டுள்ளார். கவிதை எழுதியவர் என்.விநாயக முருகன், நவம்பர் 2010 சொல்வனம் இணைய இதழில் வெளியாகி இருக்கிறது.

    தங்கள் பார்வைக்காக .....




    இறைச்சிக்கடையொன்றில்

    உதவியாளனா‌‌‌க பணியாற்றும் சிறுவனுக்கு

    உண்மையில் அதுதான் முத‌ல் நாள்

    அதுநாள் வரை

    அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை

    வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது

    மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது

    வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது

    மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது

    முதல் கொலைக்கான

    உத்தரவு வந்தக் கணம்

    அவன் திகைக்கிறான்

    கோழிகளையும், ஆடுகளையும்

    மலங்க மலங்க பார்க்கிறான்

    பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்

    மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்

    நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்

    முன்பு இந்த உலகத்தில் தோன்றி

    மறைந்துபோன இறைத்தூதர்களெல்லாம்

    மனக்கண்ணில் வந்து மறைகிறார்கள்

    ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்

    கண்களை மூடிக்கொள்கிறான்

    எதையோ தீவிரமாக யோசிக்கிறான்

    அந்தக்கோழியை விட்டுவிட்டு

    இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்

    அதன் கழுத்தை திருக

    அவனுக்கு தயக்கமாக இருக்கிறது

    கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்

    கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்

    கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்

    கடவுளை தொழுகிறான்

    இறைச்சிக் கடை உரிமையாளர்

    அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்

    தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்

    ஆற்றுப்படுத்துகிறார்

    கொலைக்கு பிறகு அவனுக்கு அடையும்

    சமூக அந்தஸ்துகளை பட்டியலிடுகிறார்

    கொலை செய்வது அவன் கடமை யென்கிறார்

    கொலை செய்யவே அவன் அவதாரமெடுத்தவன் யென்கிறார்

    அவன் கொலை செய்யும் உயிர்கள்

    துர்தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் சொல்கிறார்

    பருவத்துக்கு வந்துவிட்ட

    போர்வீரனாய் கர்வம் கொள்ளும்

    அந்த சிறுவன்

    செய்யும் முத‌ல் கொலை

    மிகுந்த கொடூரமானது

    ஒரு கொலைக்கு முன்னர்

    அவன் எடுத்துக்கொண்ட கால அளவு

    மிகுந்த நீளமானது

    ஒரு கொலைக்கு முன்னர்

    அவன் மனதில் விவாதித்தது

    மிகுந்த தத்துவார்த்தமானது

    ஒரு கொலைக்கு முன்னர்

    அவன் வாழ்ந்த வாழ்க்கை

    மிகுந்த சிக்கலானது

    அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்

    ‌மிகுந்த எண்ணிக்கையிலானது

    அந்த சிறுவனது

    மரத்திலிருந்து உதிர்ந்த

    இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன

    இப்போதெல்லாம்

    அவன் விரல்கள்

    ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்

    ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்

    ஒரு மிருதங்க கலைஞனாய்

    இறைச்சியை வெட்டுவதற்கு

    பழக்கமாகியிருந்தது

    பதிலளிநீக்கு
  5. முடியல தம்பி . . .

    இது மாதிரி பதிவை போடறதுக்கு பதில்

    கே கே நகர் விஜயா ல ஓடுற

    கில்மா பட விமர்சனமாவது போடலாமே

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா10:34 AM, ஜூன் 11, 2012

    sutha aruvai.

    sujathannu periya nenaippa.

    padhivu podavadharkku oonum visayam illaya.

    பதிலளிநீக்கு