27 ஜூன், 2012

டெசோ


‘டெசோ’வால் இப்போது என்ன செய்ய முடியுமென்று திட்டவட்டமாக தெரியவில்லை. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த ‘டெசோ’வுக்கும், இன்றிருக்கும் ‘டெசோ’வுக்குமான வேறுபாடுகள் புரிந்தே இருக்கிறது.

அதே நேரம் ஈழப்பிரச்சினைக்கு தமிழ் ஈழம்தான் தீர்வு என்று சொல்லக்கூடிய ஒரே பெரிய கட்சியாக இங்கே திமுக மட்டுமே இருக்கிறது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவோ, ஆளுங்கட்சியான அதிமுகவோ, ஓரளவுக்கு தேசிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் இடதுசாரிகளோ ஏற்றுக்கொள்ளாத நிலைபாடு இது. உதிரிக்கட்சிகளை விட்டு விடுவோம். அவர்களது நிலைப்பாடு கூட்டணி சமரசங்களுக்கு உட்பட்டது. திமுகவே கூட மத்தியக் கூட்டணிக்காக பல சமரசங்களை ஏற்றுக்கொள்ளும்போது, சிறுகட்சிகளை குறைசொல்லிப் பிரயோசனம் இல்லை. எனவேதான் திமுக முன்வைக்கும் ‘டெசோ’வுக்கு இங்கே முக்கியத்துவம் ஏற்படுகிறது.

முந்தைய ‘டெசோ’வின் போது திமுகவால் ’ஈழம்’ குறித்த தனது கருத்தாக்கத்தை தேசிய அளவில் பலரையும் ஒப்புக்கொள்ளச் செய்ய முடிந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இன்றைய திமுகவால் அதை செய்யமுடியுமாவென்று தெரியவில்லை. எமர்ஜென்ஸிக்குப் பிறகு திமுகவோடு நட்பு அடிப்படையில் அன்று கைகோர்த்த மாநில, தேசியக் கட்சிகள், தலைவர்கள் ஆகியோருக்கு இருந்த தன்மை சமகால கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை. திமுகவுக்கே கூட அன்றிருந்த கொள்கை அடிப்படையிலான சமூகப்பிடிப்பு இன்று இருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். முன்பொருமுறை பெரியார் சொல்லி, அதையே 2009ல் கலைஞர் சொன்ன வசனம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. “நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன செய்துவிட முடியும்?”

பழைய டெசோ காலத்துக்கு வருவோம். இந்த அமைப்பு தமிழக நகரங்களில் ஈழத்தமிழருக்காக மாபெரும் பேரணிகளையும், கூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி சாதித்தது. தேசியத் தலைவர்களான வாஜ்பாய், பகுகுணா, என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி (இவரேதான் அவரும்) என்று பலரையும் தமிழகத்துக்கு அழைத்துவந்து ஈழம் தொடர்பான நியாயங்களை மக்கள் முன் வைத்தது. ஈழத்துக்கு ஆதரவான போக்கினை கைக்கொள்ள இந்திய அரசினை கடுமையாக நெருக்கியது. ஈழப்பிரச்சினை என்பது தமிழர்கள் பிரச்சினை அல்ல. ஆசியப் பிராந்தியப் பிரச்சினை என்பதான தோற்றத்தை உருவாக்கியது. ஈழப்போராளிகள் ஒன்றுபட்டு ஈழம் பெறவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியது. இப்போது ஈழப்பிரச்சினையில் கலைஞர் துரோகி என்று வசைபாடிவரும் நெடுமாறன், வைகோ ஆகியோரும் அப்போது டெசோவில் தீவிரமாகப் பணியாற்றியவர்கள்தான். அன்றைய டெசோ பிறந்த இரண்டே ஆண்டுகளில் உருக்குலைந்துப் போனதற்கு காரணம் போராளிக் குழுக்களிடையே ஒற்றுமையின்றி போனதுதான். இந்திய, தமிழக அரசுகள் வெற்றிகரமாக இதை செய்துமுடித்தன. ‘காங்கிரசுடனான கூட்டணிக்காக டெசோவை கலைஞர் கலைத்தார்’ என்று இன்று புதுகாரணம் சொல்கிறார் நெடுமாறன். 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக 87ல் கலைஞர் டெசோவை கலைத்தார் என்கிற தர்க்கம்தான் எத்துணை சிறப்பானது?

2009ல் திடீரென்று ஞானஸ்தானம் பெற்று, இன்று ஈழத்துக்காக உயிரை விட்டுக் கொண்டிருக்கும் அமைப்பின் நண்பர் ஒருவர், சமீபத்தில் புதிய டெசோ பற்றிய விவாதத்தில் முகநூலில் சொல்லியிருந்தார். “தமிழீழத்திற்காக போராட திமுகவை யாரும் அழைக்கவில்லை”. நண்பர் வரலாற்றில் கொஞ்சம் வீக். அவருக்காக சில தகவல்கள்.

-    1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் இலங்கைத் தமிழருக்கு திமுக ஆதரவளிக்கிறது என்கிற தீர்மானத்தை கலைஞர் முன்மொழிந்து தீர்மானம் நிறைவேறியது.

-    1977ல் சென்னையில் ஐந்து லட்சம் பேர் பங்குகொண்ட பேரணி திமுகவால் நடத்தப்பட்டது.

-    1981ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு ஈழப்பிரச்சினை திமுகவால் கொண்டு செல்லப்படுகிறது. ஈழப்பிரச்சினையில் மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கலைஞர் எம்.ஜி.ஆர் அரசால் கைது செய்யப்படுகிறார்.

-    வெலிக்கடை சிறையில் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டவுடன் மறுநாளே சென்னையில் ஏழரை லட்சம் பேர் கலந்துக்கொண்ட கண்டனப் பேரணியை திமுக நடத்தியது.

-    1983 இனப்படுகொலை நடந்து இரண்டு மாதங்களாகியும் இந்திய அரசோ, தமிழக அரசோ அப்பிரச்சினை குறித்து வாய்திறக்கவில்லை என்று சட்டமன்றத்தில் திமுக பிரச்சினையைக் கிளப்பியது. பேராசிரியரும், கலைஞரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து எதிர்ப்பைக் காட்டினார்கள்.

-    1986 மே மாதத்தில் மதுரையில் டெசோ சார்பாக திமுக முன்நின்று நடத்திய ‘ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’தான் ஈழத்தமிழருக்காக தமிழகத் தமிழர்கள் குரல் கொடுத்ததின் உச்சபட்ச எழுச்சி.

-    1989ல் திமுக பதிமூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வருகிறது. மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி மலர்கிறது. தமிழக திமுக அரசின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, ராஜீவ் காலத்தில் அனுப்பப்பட்ட அமைதிப்படையை மத்திய அரசு திரும்பப் பெறுகிறது. சென்னை துறைமுகம் வந்து சேர்ந்த இந்திய அமைதிப்படையை வரவேற்க மாநில முதல்வர் கலைஞர் மறுத்தார். இதன் மூலம் இந்திய இறையாண்மையை அவமதித்து விட்டதாக திமுக மீது பிரச்சாரம் செய்யப்பட்டது.

-    இதே ஆட்சிக்காலத்தில் போராளிக்குழுக்களின் உட்சண்டை காரணமாக தமிழகத்தில் நடந்த சில அரசியல் கொலைகள் திமுக ஆட்சியை கலைப்பதற்கு காரணமாக காட்டப்பட்டன.

-    உச்சக்கட்டமாக 91 மே 21. திமுக மீது கொலைப்பழி. அடுத்த தேர்தலில் அக்கட்சி அடைந்த படுதோல்வி.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஈழத்துக்காக முதன்முதலாக தீக்குளித்தவரும் கூட ஒரு இசுலாமிய திமுக தோழர்தான்.

‘திமுகவை யாரும் அழைக்கவில்லை’ என்று சொன்ன நண்பர், இதெல்லாம் திமுக யாரும் அழைக்காமலேயே தன்னெழுச்சியாக ஈடுபட்ட செயல்பாடுகள் என்பதையும் அறிந்திருக்க மாட்டார். ஏனெனில் அவர் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஈழப்பிரச்சினையை இங்கே பேசிய இயக்கம் திமுக. பேசிய தலைவர் கலைஞர்.

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதாலேயே “புரட்சித்தலைவி என்றால் புரட்சித்தலைவிதான்” என்று பாராட்டுக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில் இதையெல்லாம் பேசுவது வீண்தாண். அப்படிப் பார்த்தால் கடந்த திமுக அரசு ஈழத்தமிழர்களுக்காக ஐந்து சட்டமன்றத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. என்ன செய்வது. கலைஞர் தமிழினத் துரோகி. அம்மா ஈழத்தாய். இராணுத்தை அனுப்பி ஈழம் பெற்றுத்தரப்போகும் ஈழநாயகி போட்ட தீர்மானம் ஆயிற்றே. பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆட்சியில் இருந்த அரசியல் கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் ஈழவிவகாரத்தில் போதுமானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஈழம் குறித்த தாக்கத்தை வலுவாக தமிழகத் தமிழர்களிடையே ஏற்படுத்திய சமூக இயக்கம் என்று திமுகவால் பெருமிதமாக மார் தட்டிக்கொள்ள முடியும்.

இன்றைய ‘டெசோ’வால் உடனடியாக என்ன செய்துவிட முடியும் என்பதை உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இச்செயல்பாடு திமுகவினுடைய வழக்கமான இயல்புதான் என்பதை திமுகவின் கடந்தகால செயல்பாடுகளை அறிந்தவர்கள் உணர்ந்துக்கொள்ள முடியும். இன்று இலங்கையில் ‘தமிழ் ஈழம்’ கோரி யாரும் போராட முடியாது. அந்த கருத்தாக்கம் மக்கள் மனதிலாவது நீறுபூத்த நெருப்பாக இருக்க வேண்டுமானாலும் ‘டெசோ’ போன்ற முயற்சிகள் நடந்துக்கொண்டெ இருக்கவேண்டும்.

புகழுக்காக, பணத்துக்காக போராளி ஆனவர்கள் காற்றடைத்த பலூன்கள். உண்மை எனும் ஊசி குத்தப்பட்டபின், சூம்பிப்போய் வரலாற்றால் தயவுதாட்சணியமின்றி பரிதாபகரமாக தூக்கியெறியப் படுவார்கள். அதை உணர்ந்து நமக்கு முன்னால் உழைத்தவர்களின் உழைப்பை மதித்து, வார்த்தைகளை விடும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றான திமுகவின் ஆதரவில் உருவாகும் ‘டெசோ’ பயனற்றது என்றால், வருடாவருடம் மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தினால் மட்டும் ஈழம் வென்றுவிட முடியுமா என்பதை தர்க்கரீதியாக, யதார்த்தமாக யோசிக்க வேண்டும்.

48 கருத்துகள்:

  1. இந்த டெசோவை திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் மீண்டும் ஏற்படுத்தி இருந்தால் பாராட்டலாம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?

    பதிலளிநீக்கு
  2. ஆனந்த் சதீஷ் சார்!

    திமுக ஆட்சியில் இருந்தபோது போராடுவதற்குதான் போராளிகள் இருந்தார்களே? இப்போதும் யாருமில்லாத நிலையில்தான் டெசோவுக்கான தேவையிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. Excellent Write up Yuva...

    Especially last paragraph! awesome...

    Keep writing....

    Nandri

    Mayiladuthurai Sivaa....

    பதிலளிநீக்கு
  4. ீஇதை விட யாரும் உரை அளிக்க முடியா.. யுவா..! சிறு சந்தேகங்களும் உள்ளன ... உங்கள
    நேரில் சந்திக்க அவா..

    பதிலளிநீக்கு
  5. இன்று பழ. நெடுமாறன் அய்யாவை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது, அப்பொழுது டெசோவை பற்றிய பேசினார். டெசோவை தன்னிச்சையாக இருக்கும் அங்கத்தினர் யாரையும் கேட்காமல் கருணாநிதி கலைத்த பொழுது வீரமணியும் நெடுமாறன் அய்யாவும், விடுதலை சம்பந்தம் அவர்களும் கருணாநிதியை சந்தித்து ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பிராபகரன் என்னை மதிக்கவில்லை அவருக்காக நான் எதையும் செய்ய முடியாது என்று கூறி இருக்கிறார். வீரமணியும், நெடுமாறன் அய்யாவும் ஈழமக்கள் முக்கியமா? பிராபகரன் முக்கியமா? என்று கேட்டதற்கு இதை பற்றியெல்லாம் பேசவேண்டாம் பிராபகரன் என்னை மதிக்கவில்லை நான் இயக்கங்கள் அனைவரையும் அழைத்த பொழுது வந்து என்னை சந்திக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

    அதற்கு முன் நடந்த திமுக பொது குழு கூட்டத்தில் பாலஸ்தின விடுதலை ஆதரவாக தீர்மானம் இயற்றி இருந்தார்களாம், விடுதலை சம்பந்தம் கருணாநிதியின் பால்யகால நண்பர் அவர் உடனே “பாருங்கள் கலைஞர் நீங்கள் பாலஸ்தீன விடுதைலையை ஆதரித்து தீர்மானம் இயற்றி இருக்கிறீர்கள் ஆனால் இன்று வரை அந்த திமிர் பிடித்த யாசர் அராபத் உங்களை வந்து சந்திக்கவில்லை, என்ன திமிர் அவருக்கு” என்று சொல்லியிருக்கிறார்.

    உடனே கலைஞர் சத்தம் போட, சம்பந்தம் அவர்களும் விடாமல் நான் இதை விடமாட்டேன் யாசர் அராபத்தை கண்டிப்பாக இதற்காக கேள்வி கேட்பேன் என்று விடாமல் வாதிட்டு இருக்கிறார். வீரமணியும் நெடுமாறான் அய்யாவும் பிரச்சனை பெரிதாகிவிடக் கூடாது சம்பந்தம் அவர்களை வெளியில் அழைத்து வந்துவிட்டனராம்......

    இப்பொழுது தெரியும் டெசோ என்பது எதற்காக... கருணாநிதியின் சுயநல அரசியலுக்கானது மட்டுமே — ஹரி ஹரன்

    பதிலளிநீக்கு
  6. தோழர் யுவகிருஷ்ணா அவர்களே, ஆனந்த் சதீஷுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பதில் 'ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் சிங்'கை தான் நமக்கு ஞாபக படுத்துகிறது....

    பதிலளிநீக்கு
  7. லக்கி,

    //‘காங்கிரசுடனான கூட்டணிக்காக டெசோவை கலைஞர் கலைத்தார்’ என்று இன்று புதுகாரணம் சொல்கிறார் நெடுமாறன். 2004ல் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்காக 87ல் கலைஞர் டெசோவை கலைத்தார் என்கிற தர்க்கம்தான் எத்துணை சிறப்பானது?//

    அப்போ 1971 இல் மற்றும், 1980 இல் சட்டசபை& லோக்சபா என இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் கூட்டணி வைத்தது யாராம்?

    எனவே 1987 இல் எம்ஜிஆர் மறைவுக்கு பின் வலிமையற்று இருந்த பிளவுப்பட்ட அதிமுகவிற்கு பதிலாக மாநிலத்தில் திமுக வை ராஜிவ் தலைமையிலான காங்கிரஸ் நாடி வரலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் மு.க செயல்ப்பட்டிருக்கலாம் என்பதே பழநெடுமாறன் சொல்ல வருவது.

    எமர்ஜென்சிக்கு அப்புறமும் நேருவின் மகளே வருக ,நிலையான ஆட்சி தருகனு சொன்னவர் ஏன் அப்படி செய்திருக்க மாட்டாரா?

    ஆனால் அதை எல்லாம் வழக்கம் போல ஒதுக்கிவிட்டு 2004 இல் முதன் முறையாக் காங்கிரஸ் பக்கம் திமுக போனது போல சப்பைக்கட்டுவது தான் தெளிந்த அரசியல் வரலாற்று ஞானமா :-))

    நான் குறிப்பிட்டு சொன்னால் குறை சொல்வதே உன் வேலை என்பீர், இந்தப்பதிவில் முகநூலில் உரையாடியவர் முதல் பழ நெடுமாறன் வரை அனைவரையும் பாராட்டியா இருக்கிறீர் :-))

    பதிலளிநீக்கு
  8. யுவா. உங்களின் முகநூலிலும், பதிவுகளிலும் பல முறை நீங்கள் தி.மு.க மற்றும் கருணாநிதியின் செயல்களுக்கு சாதகமாக எழுதியதை பார்த்து, எப்படி ஒருவர் (அதுவும் இக்கால இளைஞர்) இந்நிலையை எடுக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயம் எரிச்சல் கூட அடைந்தது உண்டு! ஆனாலும் உங்களின் எழுத்து நடையை விரும்பியதால் அனைத்தையும் படிப்பதுண்டு. ஆனாலும், உங்களின் கொள்கை பிடிப்பு என்னை மிகவும் கவர்ந்துள்ளது (சில சமயங்கள்ல் முகநூலில் விதண்டா வாதம் செய்வது போல தோன்றினாலும்). அனைத்து உடன்பிறப்புகளுக்கும் உங்களைப் போல கொள்ளைபிடிப்பு இருந்தால் தமிழ் நாடு என்றோ முன்னேறியிருக்கும்! உங்களின் கட்சி சார்பு உங்களின் தனிப்பட்ட உரிமை அதை பற்றி பேச எனக்கு எந்த உரிமையும்/தகுதியும் இல்லை :) உங்களின் எழுத்தை ரசிபவனாக மட்டும் இருந்து கொள்கிறேன். நிறைய எழுதுக...

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா7:15 AM, ஜூன் 28, 2012

    கலைஞரின் ஈடுபாடு ஓரளவு ஒத்துக்கொள்ள கூடிய ஒன்றுதான். தற்போதைய திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ஆர்வம் ஈழ விவகரத்தில் பூஜ்ஜியம் என்ற உண்மையும் இங்கு நீங்கள் கூறி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. ஏற்று கொண்டே ஆக வேண்டும்.

    திமுகவின் ஈழம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து மட்டும் ஏதும் புத்தகம் வந்திருக்கிறதா தோழர்?

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள தோழர் மகேஷ்!

    இன்று பழ நெடுமாறன் எந்த இழிவான பழியையும் கலைஞர் மீது தூக்கிப்போட தயாராக இருப்பவர். அதற்காக அவர் எதையும் சொல்வார். முள்ளிவாய்க்காலுக்கு போய் பிரபாகரனை சுட்டுக் கொன்றவர் கலைஞர் என்றுகூட சொல்லுவார்.

    ஒரு சின்ன லாஜிக். டெசோ பற்றியும், அப்போதைய கலைஞரின் துரோகம் என்று இன்று அவர் பட்டியலிடுவதைப் பற்றியும் இருபத்தைந்து ஆண்டு காலம் கழித்துதான் வெளிப்படுத்த வேண்டும் என்று நெடுமாறனுக்கு தோன்றியதா? இதையெல்லாம் சகித்துக் கொண்டு இவ்வளவு ஆண்டுகளாக கலைஞரோடு இருந்தாரென்றால் அவர் சொல்லியபடியே கலைஞர் துரோகி என்றால் அந்த துரோகத்துக்கு நெடுமாறனும் துணை நின்றாரா?

    கலைஞர் 86ல் கூட்டிய கூட்டத்துக்கு விடுதலைப்புலிகள் கலந்துக்கொள்ளவில்லை என்று 87ல் டெசோவை கலைத்தார் என்பது கொஞ்சமும் தர்க்கரீதியாக இல்லையே? 89ல் மத்திய அரசின் ஏற்பாட்டின் பேரில் கலைஞர் கூட்டிய கூட்டத்தில் பாலசிங்கம் கலந்துகொண்டார் இல்லையா?

    சார்புநிலை ஏதுமின்றி சிந்திக்க முடிந்தால், இதையெல்லாம் சிந்திக்கலாம் :-)

    பதிலளிநீக்கு
  12. தோழர் வவ்வால்,

    புத்திசாலித்தனமாக பேசுகிறோம் என்கிற பெயரில் அபத்தமாகவே பேசுவேன் என்று சபதமெடுத்திருக்கிற உங்கள் தீரத்தை பாராட்டுகிறேன். 71, 80 கூட்டணியெல்லாம் இந்த காண்டெக்ஸ்டில் எப்படி பொருந்துகிறது என்பதை எப்படி யோசித்தாலும் புரியவில்லை.

    நெடுமாறனின் குற்றச்சாட்டு, “காங்கிரசுடனான கூட்டணிக்காக டெசோவை கலைத்தார் கலைஞர்” என்பது.

    87ல் கலைஞர் டெசோவை கலைக்கும்போது எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தார். காங்கிரஸ் எம்.ஜி.ஆருடனான நல்ல உறவில் இருந்தது. வி.பி.சிங் காங்.கில் இருந்து விலகி, ஜனதாதளம் வட இந்தியாவில் எழுச்சி பெறத்தொடங்கிய காலம். திமுக அப்போதே தேசிய அளவிலான மூன்றாவது அணிக்கு முயற்சித்துக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 67ல் விட்ட ஆட்சியை மீண்டும் பிடிக்கவேண்டும் என்கிற முனைப்பு காங்கிரஸுக்கு இருந்தது. உடைந்துவிட்ட காரணத்தால் ஜெ. தலைமையிலான அதிமுகதான் காங்கிரஸோடு உறவை நீட்டிக்க முயற்சித்து, அதையும் காங்கிரஸ்தான் தட்டிக் கழித்தது.

    அச்சூழலில் யோசித்துப் பார்த்தால் காங்கிரஸுக்கும், திமுகவுக்கு உடன்பாடு என்பதை ஒருவர் கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பார்த்து டெசோவை கலைஞர் கலைத்தார் என்பதைவிட அபத்தமான குற்றச்சாட்டை நெடுமாறனை தவிர வேறு யாரும் வைத்துவிட முடியாது. உங்களைத்தவிர வேறு யாரும் அதை உண்மையென நம்பிவிட முடியாது :-)

    இதுபோன்ற காலம் கடந்த குற்றச்சாட்டுகளை வாசிக்கும்போது, அப்போதைய அரசியல் சூழலையும் பொருத்திப் பார்த்தால் போதும். குற்றச்சாட்டுக்கு வலு இருக்கிறதா என்பதை சுலபமாக புரிந்துக்கொள்ள முடியும். அதெல்லாம் எனக்கு தெரியாது கருணாநிதி துரோகிதான் என்கிற நிலைப்பாட்டுக்கு நீங்கள் ஏற்கனவே வந்துவிட்டால் வேறெதுவும் செய்துவிட முடியாது.

    பதிலளிநீக்கு
  13. தோழர் கார்க்கி!

    திமுகவின் ஈழப்பிரச்சினை செயல்பாடுகள் குறித்து நிறைய சிறுவெளியீடுகள் வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பெரிய புத்தகமாக கேள்விப்பட்ட நிலைவில்லை.

    வாய்ப்பு கிடைத்தால் நாம் தான் எழுதவேண்டும் :-)

    பதிலளிநீக்கு
  14. //புகழுக்காக, பணத்துக்காக போராளி ஆனவர்கள் காற்றடைத்த பலூன்கள். உண்மை எனும் ஊசி குத்தப்பட்டபின், சூம்பிப்போய் வரலாற்றால் தயவுதாட்சணியமின்றி பரிதாபகரமாக தூக்கியெறியப் படுவார்கள்///

    நிஜமான நிஜம்...
    கலைஞருக்கும் பொருந்துகிறது....

    பதிலளிநீக்கு
  15. நம் உறவுகள் செத்துக் கொண்டிருக்கும் போது ‘மழை விட்டது, தூவானம் தொடர்கிறது’ என்று சொன்னவர் தான் நம் ‘ தமிழின தலைவர் ‘ கொலைஞர்.
    இன்று ‘டெசோ’ என்றும் தமிழ் ஈழம் என்றும் பேசுபவர் அன்று என்ன என்ன நாடகமாடினார் என்று நமக்கு தெரியும் தோழரே. கட்சி பாசம் உம் கண்களை மறைக்கிறது

    பதிலளிநீக்கு
  16. தோழர் லக்கி,

    என்ன கொடுமை அபத்தமாக விடாமல் பேசுறிங்கன்னு படிக்கிற சிலரே உங்களைப்பாராட்டிக்கிட்டு இருக்காங்க ,நீங்க என்னை சொல்லுறிங்க.

    //71, 80 கூட்டணியெல்லாம் இந்த காண்டெக்ஸ்டில் எப்படி பொருந்துகிறது என்பதை எப்படி யோசித்தாலும் புரியவில்லை.//

    அதாவது ஏற்கனவே காங்கிரசுடன் கூட்டணி வைத்து ருசி கண்டவர் என்ற காண்டெக்ஸ்ட்டில் பொருந்துகிறது.

    1956 இல் அண்ணா அவர்கள் தலைவராக இருந்தார் ஆனால் ,என்னமோ மு.க வே காரணம் என்பது போல சிதம்பரம் மாநாட்டு தீர்மானத்தினை சொல்லிக்கொள்கிறீர்கள். அதெல்லாம் எந்த காண்டெக்ஸ்டில் பொருந்தும்?

    மேலும் மிசாவுக்கு பின்னர் எந்த காண்டெக்ஸ்ட்டில் காங்கிரஸ் உடன் மீண்டும் கூட்டணி வைத்தார் :-))

    87 இல் ஜெயலலிதா தான் முயன்றார் என்றால் ,மு.க முயலாமல் இருந்திருப்பார் என்றாகிவிடுமா? இவரும் ஒரு பக்கம் கதவு திறக்காதா என காத்திருந்து அதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக டெசோ காலைத்திருக்கலாம் என்பதனை மறுப்பதற்கில்லையே.

    இப்போ கூட ஏன் கூட்டணியை விட்டு வெளியேறாமல் பல அவமானங்களுக்கிடையே இருக்கிறார், இவர் வெளியேறினால் அம்மையார் இணைந்துக்கொள்வார் என்று சொல்லி சமாளிக்கிறார் என ஊடகத்தில் எல்லாம் வந்தாச்சு, அப்போ இப்போ அம்மையார் கூட்டணிக்கு முயலவில்லை, நாங்கள் வெளியில் இருந்தோம் என சொன்னால் நம்பிவிடுவீர்களா?

    பிஜேபியுடன் கடைசி வரைக்கும் இருந்துவிட்டு எப்படி உடனே காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிந்தது. நிமிடத்தில் நடந்துவிட்டதா? அது எல்லாம் முன்னரே பேசி முடிவுக்கு வந்த பிறகே ,ஆட்சிக்காலம் முடியட்டும் எனக்காத்திருந்து கழுத்து அறுத்து வெளிவந்தார் மு.க.

    நீங்கள் அக்கட்சியில் உறுப்பினரோ என்னவாகவோ இருந்து விட்டு போங்கள், ஆனால் உங்களுக்கு தெரிந்தது தான் அரசியல் என்பது போல அடுத்தவர்களின் அரசியல் அறிவை குறை சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாம்.

    அரசியலில் எப்போதும் ஏதேனும் திட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கும், இதெல்லாம் புரியாமல் எப்படித்தான் அரசியல் பற்றி பேசுறிங்களோ :-))

    உங்களுக்கு இரண்டு கேள்விகள்:

    1) மிசா கொடுமைகள் ,ஸ்டாலின் முதலானோர் நைய புடைக்கப்பட்டது, சிட்டிபாபு இறப்பு , எனப்பல பல அவமானங்களுக்கு பிறகும் மீண்டும் 81 இல் "நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என" எப்படி காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடிந்தது? அதற்கு என்ன விளக்கம்?

    2) கனிமொழி ,ராசா போன்றோர் சிறையிலடைப்பு, மேலும் பல அவமதிப்புகள் என தொடர்ந்த பிறகும் வேண்டா விருந்தாளியாக காங்கிரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதற்கு என்ன விளக்கம் இருக்கிறது?

    உங்களுக்கு மட்டுமே அபத்தமில்லாத அரசியல் அறிவு இருப்பதாக நீங்கள் சொல்லிக்கொள்வதால் ,என்னோட அபத்தங்களை போக்கி கொள்ளவே இதனைக்கேட்கிறேன் :-))

    பதிலளிநீக்கு
  17. வவ்வால் சார்!

    அப்படியும் எப்படியும் உங்க அபத்தசாலித்தனத்தை காட்டிக்கிட்டே இருக்குறதுன்னு முடிவு பண்ணீட்டீங்க. காட்டுங்க.. கட்டுங்க.. காட்டிக்கிட்டே இருங்க.

    56ல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா அல்ல கலைஞர். பதிவை ஒழுங்கா படிங்க சார் :-)

    எண்பதுகளின் இறுதியில் காங்கிரஸ் வேணாம்னுதானே சார் தேசிய முன்னணி அமைக்க முயற்சித்தார். தேசிய முன்னணியை சென்னையில் பிரம்மாண்டமாக தொடங்கி வைத்தவர் கலைஞர். அப்புறம் அவருக்கு அப்படியொரு எண்ணம் வராமலா இருந்திருக்கும்னு திரும்பத் திரும்ப கேள்வி கேட்டுக்கிட்டிருந்தீங்கன்னா, உங்களுக்கு பதில் சொல்ல யாராவது கீழ்ப்பாக்கத்தில் இருந்துதான் வரணும் :-)

    ரெண்டு கேள்விகளுக்கு பதில்...

    1. திமுக மிசாவை கடுமையாக எதிர்த்தது. அதனால் உயிர்த்தியாகம் கூட செய்தது. ஆனாலும் மிசாவில் இருந்து தங்களை பாதுகாத்த திமுகவை தமிழர்கள் 77 தேர்தலில் கைகழுவினார்கள். அன்றைய எம்.ஜி.ஆர் ஆட்சி திமுக என்கிற கட்சியை ஒட்டுமொத்தமாக அழிக்கும் முயற்சியில் படு தீவிரமாக இருந்தது. 80ல் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டிருக்கா விட்டால் அது நடந்தும் இருக்கும். அதிமுகவை எதிர்கொள்ளும் கடிவாளமாக காங்கிரஸோடு திமுக கூட்டணி அமைத்தது. அது பயனும் தந்தது.

    2. இன்றும் கூட அதே நிலைதான். அரசியலில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டா விருந்தாளியாகவாவது சில இடங்களில் இருந்தாக வேண்டும். மாநிலத்தில் அதிகாரத்தில் இல்லாத நிலையில் மத்தியில் இருப்பவர்களையும் பகைத்துக் கொண்டு இன்னொரு சந்திரபாபு நாயுடுவாக மாற கலைஞர் என்ன வவ்வால் மூளை கொண்டவரா? :-)

    பதிலளிநீக்கு
  18. யுவா,

    இந்த அப்பரசண்டிகளுக்கு பதில் சொல்லவே உங்களுக்கு நேரம் போதாது போலிருக்கே!

    அந்த காலத்து திமுக பேச்சாளர்களை ஞாபகப்படுத்தி விட்டீர்கள் உங்கள் கட்டுரையிலும் பின்னூட்டத்திலும்! கருத்துக்களில் உள்ள ஆழமும், சொல்வதில் எளிமையும், வசவாளர்களுக்கான பதிலில் உள்ள நக்கலும், உண்மை பேசும் போது மட்டும் வரக்கூடிய செருக்கும்! ஆஹா! ஆஹா!

    பதிலளிநீக்கு
  19. Dear YuvaKrisha,
    I like the "HONESTY" for the Answers 1 & 2 . . .

    பதிலளிநீக்கு
  20. இந்தக் காணொளியில் 22 : 00 நிமிடங்கள் முதல் வரும் காட்சிகளைப் பாருங்கள். எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்பார்கள். அது போல் ஈழ விஷயத்தில் போடுவது வரை நாடகம் என்று ஆடிய நாடகத்தின் ஒரு பகுதி இது.

    http://www.youtube.com/watch?v=pV4CqksZxrQ

    பதிலளிநீக்கு
  21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  22. //பெரியார் சொல்லி, அதையே 2009ல் கலைஞர் சொன்ன வசனம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. “நானே ஒரு அடிமை. ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன செய்துவிட முடியும்?”//

    - பெரியார் சொன்னதுக்கும் கலைஞர் சொன்னதுக்கும் அர்த்தம் வேறு படுது. இவர் நான் குடும்பத்துக்கு அடிமை என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பாரோ ?

    பதிலளிநீக்கு
  23. If there are no stupid questions, then what kind of questions do stupid people ask? Do they get smart just in time to ask questions?

    பதிலளிநீக்கு
  24. அதே எழுத்துக்கள், ஆழ்ந்த கருத்துக்கள், தீர்ந்தது சந்தேகம்,

    நீங்கள் சொல்ல வந்ததை குறைந்தது பத்து இருவது பேராவது நம்பி இருப்பார்கள், இன்னும் முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு அரசியல் தெரிகிறது யுவா எங்களுக்கு தெரிந்தது மனசாட்சி மட்டுமே,

    வெறும் புள்ளி விவரங்கள் எல்லா நேரத்திலும் உதவுவது இல்லை .

    மனதில் வையுங்கள் " அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வதை தேய்க்கும் படை "

    துரோகத்தை அதனை சுலபத்தில் மறக்க தமிழ் மக்களுக்கு பக்குவம் போதவில்லை, இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்க்கலாம்

    மக்கள் நம்பினாலும் நம்புவர்கள்

    பதிலளிநீக்கு
  25. திமுக சார்பாக பேசும் நான் உண்மைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். இதில் எது பொய் என்று யாரும் எதிர்த்துப் பேசமுடியவில்லை. திமுகவை எதிர்ப்பவர்களிடம் வெறும் வாய் மட்டும்தான் இருக்கிறது. வாயில் இருந்து உருப்படியாக எதிர்வாதம் வருவதாக தெரியவில்லை. மிஞ்சிப்போனால் “கருணாநிதி துரோகி” என்று தெனாலி கமல் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி துரோகி என்று நிறுவக்கூட தெரியவில்லை.

    என்ன செய்வது? இப்படிப்பட்டவர்களுடன்தான் உரையாடித் தொலைக்க வேண்டியிருக்கிறது :-(

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா5:20 PM, ஜூன் 28, 2012

    உங்களைத்திருத்த முடியாது யுவா... நான் பிடிச்ச முயலுக்கு மூணுகாலுன்னு சொல்லறவங்க தான் நீங்க.. நீங்க என்று நான் குறிப்பிடும் அதிபுத்திசாலிகள் "நீங்கள்", "சாரு", "கார்க்கி", "கேபிள் சங்கர்" ஆகிய அதி மேதாவிகள் மட்டுமே. இன்னூம் ரெண்டு பேரு இருக்காங்க. உங்க குருக்கள் "ஜாக்கி சேகர்", மற்றும் "ஆதி தாமிரா". அய்யய்யோ இவா ரெண்டு பெரும் கோச்சுக்க கூடாதுன்னோ, (உங்களோடையும் / கார்க்கியோடையும்) சிஷ்யாளா உங்கள ஸ்நானப்ப்ராப்தி பண்ணுனதுக்கு.

    பதிலளிநீக்கு
  27. வாழும் வரை போராடு7:21 PM, ஜூன் 28, 2012

    தோழர் யுவகிருஷ்ணா அவர்களே, நான் தி.மு.க yedhirpavan இல்லை, அதிமுக கட்சி இல்லை. ஒரு பொதுஜனம். திமுக வின் ’ஈழம்’ குறித்த தனது கருத்தாக்கத்தை வரலாற்றை சொன்னீர்கள். சரி.
    ஆனால் கடந்த காலங்களில் குறிப்பாக ஈழ படுகொலை நிகழ்ந்த சமயம் தி.மு.க செய்த செயல்கள் "நீங்கள் என்ன வரலாறு விளக்கம் அளித்தாலும்" நியாயப்படுத்த முடியாது. இது உலகத்தின் ஒவ்வொரு சாதாரண தமிழனுக்கும் தெரியும். நிச்சயம் அப்போது தி.மு.க எதாவது செய்திருக்க முடியும். செய்யவில்லை.

    i just wanted to say what சரவணன் and Karthick said...

    //நம் உறவுகள் செத்துக் கொண்டிருக்கும் போது ‘மழை விட்டது, தூவானம் தொடர்கிறது’ என்று சொன்னவர் தான் நம் ‘ தமிழின தலைவர் ‘ கொலைஞர்.
    இன்று ‘டெசோ’ என்றும் தமிழ் ஈழம் என்றும் பேசுபவர் அன்று என்ன என்ன நாடகமாடினார் என்று நமக்கு தெரியும் தோழரே. கட்சி பாசம் உம் கண்களை மறைக்கிறது //

    // யுவா. உங்களின் முகநூலிலும், பதிவுகளிலும் பல முறை நீங்கள் தி.மு.க மற்றும் கருணாநிதியின் செயல்களுக்கு சாதகமாக எழுதியதை பார்த்து, எப்படி ஒருவர் (அதுவும் இக்கால இளைஞர்) இந்நிலையை எடுக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயம் எரிச்சல் கூட அடைந்தது உண்டு! ஆனாலும் அனைத்தையும் படிப்பதுண்டு. .. உங்களின் கட்சி சார்பு உங்களின் தனிப்பட்ட உரிமை அதை பற்றி பேச எனக்கு எந்த உரிமையும் இல்லை :) //

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா7:36 PM, ஜூன் 28, 2012

    தி.மு.க. - ஈழத்திற்கிடையே ஆன பாச உறவைத் தேதிவாரியாகப் பட்டியலிட்டிருக்கும் நீங்கள் குட்டிமணியை விமானமேற்றி இலங்கைக்குத் திருப்பி அனுப்பிய கலைஞரின் தமிழ் இனத் தியாகத்தை விட்டு விட்டீர்களே!!!

    குட்டிமணியி ன் ஆசன வாயில் மிளகாய் பூசிய கத்தியை செருகி சிங்களவர்கள் சித்திரவதை செய்தபோதும், வெலிகடா சிறையில் போராளிகள் வெட்டியும், எரித்தும் கொல்லப் பட்டபோதும் கலைஞர் தன் மிகச் சுமாரான நடையில் குங்குமத்தில் பெரிய முலை உடைய பெண்கள் நிறைந்த தொடர்கதைகள் எழுதி தமிழ் இன உணர்வை வளர்த்ததையும் நீங்கள் மறந்திருக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  29. இங்கே அனானியா ஆபாசமா கமெண்டு போடுற மரம் வெட்டி தம்பி ஒண்ணுக்கு கொண்டையை மறைக்கவே தெரியலை.

    ஏண்டா சொம்பி, இங்கே போட்ட கமெண்டில் இருக்குற ஆபாசத்தை மட்டும் கட் பண்ணிட்டு, காப்பி & பேஸ்ட் பண்ணி உன்னோட ஃபேஸ்புக் ஸ்டேட்டஸா போட்டிருக்கியே நீயெல்லாம் என்னத்தைதான் உன் சாதியை வளர்க்கப் போறியோ. மருத்துவர் அய்யா பாவம். உன்னை மாதிரி வெண்ணைவெட்டிங்களை வெச்சுட்டு மாரடிக்க வேண்டியிருக்குது :-)

    பதிலளிநீக்கு
  30. தோழர் லக்கி,

    //56ல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் அண்ணா அல்ல கலைஞர். பதிவை ஒழுங்கா படிங்க சார் :-)//

    நான் அபத்தசாலி என அறியப்பெற்றதில் மகிழ்ச்சி, அதிபுத்திசாலியான உங்களுக்கு அரசியல் நடை முறையே தெரியவில்லையே , ஒரு கட்சியின் தலைவர் அனுமதியில்லாமல் ,யாரும் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்திட முடியாது, நான் கேட்டது அண்ணா பெயரை குறிப்பிடாமல் எப்படி மு.க வுக்கு மட்டும் கிரெடிட் போகும் என்று, அரசியல் ஞானியான உமக்கு புரியும் என நினைத்தால் இவ்வளவு விளக்க வேண்டி இருக்கு, இப்படியே இருந்தால் அப்புறம் எப்படி ஆள்வது :-))

    இப்போது கூட தி.மு.க கொண்டு வரும் தீர்மானங்களை பெரும்பாலும் பேராசிரியர் முன் மொழிவார், அல்லது துரை முருகன், ஆர்காட்டார் என கட்சி சீனியர்கள் முன் மொழிகிறார்கள், அப்போ எல்லாப்பெருமையும் அவர்களையே சாரும் என உங்கள் மூலமாக தெளிவுப்பெற்றேன் :-))

    // 80ல் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டிருக்கா விட்டால் அது நடந்தும் இருக்கும். அதிமுகவை எதிர்கொள்ளும் கடிவாளமாக காங்கிரஸோடு திமுக கூட்டணி அமைத்தது. அது பயனும் தந்தது.//

    ஆக மொத்தம் மிசா கொடுமைகளை விட பெரிதான கொடுமைகளை எம்ஜிஆர் செய்துள்ளார், எனவே அவரைப்பார்த்து பயந்து போய் தான் தப்பிக்கொள்ள இந்திராவுடன் கூட்டணி வைத்து கட்சியை காப்பாற்றியுள்ளார் மு.க. அப்படியானால் எதிர்ப்புகளை சந்தித்து தீரத்துடன் போராடி கட்சியை வளர்த்தது என சொல்லிக்கொள்வதெல்லாம் மேடைப்பேச்சுக்கு மட்டுமே. சந்தர்ப்பவாதமாக செயல்ப்பட்டு அரசியல் செய்வதே அரசியல்ல் சாணக்கியத்தனம், இராச தந்திரம் என புரிந்தது.

    //2. இன்றும் கூட அதே நிலைதான். அரசியலில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டா விருந்தாளியாகவாவது சில இடங்களில் இருந்தாக வேண்டும். மாநிலத்தில் அதிகாரத்தில் இல்லாத நிலையில் மத்தியில் இருப்பவர்களையும் பகைத்துக் கொண்டு இன்னொரு சந்திரபாபு நாயுடுவாக மாற கலைஞர் என்ன வவ்வால் மூளை கொண்டவரா? :-)//

    ஆக இப்போவும் சந்தர்ப்பவாத அரசியல் தான்னு ஒத்துக்கிறிங்க, எனவே அடுத்து ஸ்டாலினோ, தயாளு அம்மாளோ 2ஜி வழக்கில் கைதானாலும் கட்சியை காப்பாற்ற கூட்டணி தொடரும் என சொல்கிறீர்கள்.

    மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி மாறாமல் இருப்பார்கள், ஏன் எனில் அப்போதும் மாநிலத்தில் அம்மையார் ஆட்சி இருக்கும், எனவே பகைத்துக்கொள்ள முடியாது.

    ஆனால் இதெல்லாம் சாதாரண கழக கண்மணிகளுக்கு புரிவதேயில்லை, இன்னும் ஏன் மத்தியில் கூட்டணியில் இருக்க வேண்டும் எனக்கேட்கிறான். மேலும் மு.க பேசும் போது லேசாக கூட்டணியை விட்டு என சொன்னாலே கைத்தட்டவும் ஆரம்பித்துவிடுகிறான் ஏன் என்று தான் அபத்தசாலியான எனக்கு புரியவில்லை :-))

    எனக்கு புரிய வைத்தார்ப்போல கழக கண்மணிகளுக்கும் இதெல்லாம் சந்தர்ப்பவாத அரசியல்,இப்படிலாம் செயல்ப்பட்டால் தான் பதவியில் இருக்கமுடியும், பொழைக்க கத்துக்கணும் என சொல்லி புரிய வையுங்கள்!

    பதிலளிநீக்கு
  31. வவ்வால் சார்!

    ‘நேசம்’ படத்தின் சங்கிலி முருகனாக நானும், வடிவேலுவாக நீங்களும் இருக்கிறீர்கள்.

    எத்தனைவாட்டிதான் சார் கையப் புடிச்சி இழுக்குறது?

    குருவி மண்டைங்களுக்கு புரியற விஷயம்கூட, வவ்வாலு மண்டைகளுக்கு புரியலைன்னா என்னத்தைச் செய்யுறது?

    மேலே, ஒருக்கா பதிவைப் படிங்க. அதுலே ஏதாச்சும் டுபாக்கூர்னா சொல்லுங்க. அதை விட்டுப்போட்டு நீங்க இமேஜின் பண்ணிக்குறதுக்கு எல்லாம் கொஸ்டின் கேட்டு, என்னை ஆன்ஸர் பண்ணச் சொல்லாதீங்க. முடியல.

    பதிலளிநீக்கு
  32. யுவஎ,
    எனக்கு அரசியல் அவளவு தேராது. இருந்தாலும் முன்மொளிந்தவருக்கு பெருமை ஸெஉஉமா என்பதே வவ்வாலின் கேள்வி. இம்போதும் முன்மொழியும் ஆர்காடோருக்கோ அல்லது எப்போதும் இரண்டாவ்வதாகவே யுஉக்கும் பெராசியருக்கோ அந்த பேரறுமை சேருமா என்பதே கேள்வி.
    கலைஞர் டேசொவை கலைத்தது என் என்பதை விட்டு விடுங்கள். நீங்கள் சொன்னது போல ஆட்சியில் இல்லாமல் இருக்கும்போது அதுவும் காங்க்றேச்ஸ் கட்சி ஈழ பிரச்சினையில் எதிர் நிலையில் இருக்கும்போது (நீங்களே தீ மு க மதஉமே ஆதருகிறது என்று சொல்லி இருக்கிறீர்கள்) காங்க்ரச கட்சியை விட்டு வெளியிலும் வர முடியாது பதவியலும் இருக்க வேண்டும் எப்படி சமாளிப்பது. இருக்கக்வே இருக்கு டெசோ வை தொடங்கு என்று என் நினைத்து இருக்க கூடாது. இப்போது முடியாத ஈழதிருக்கு ஆதரவு கொடுத்தது போலவும் ஆயிர்ரூ பதவியயலும் இருந்தாயிற்று, ஆதிமுகவையும் எதிர்தாயிற்று என்று தான் சொல்கிறோம்.
    நீங்களே ஒரு விளக்க கட்டுரை எழுதினீர்களே டூ கி எல்லாம் வூழலே இல்லை என்று. பிறகு கனிமொழியும் ராசாவும் கைது செய்யபட்டாஹ்பொது என் வெளியே வரவில்லை என்ற வவ்வலின் கேள்விக்கு பதவியில் ஒடிஇகொண்டு இருக்கவேண்ட்ர்ம என்ற வுங்களின் பதில் சரஈல்லையே.
    அதேபோல் நீங்கள் என் ராசாவை வரவேர்ல்எ என் தி மு க புள்ளிகளோ அல்லது கருணாநிதியோ செல்லவில்லை என்று சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  33. லக்கி சார்,

    நீங்க ரொம்ப லக்கி உங்களுக்கு குருவி மண்டை இருக்கு :-))

    அதனால தான் ரெட் ஜெயண்ட் குருவி படம் எடுத்திருக்கணும் :-))

    இன்றைய தேதியில் கழகத்திற்கு கொள்கை இருக்குன்னு உங்களைப்போல தீவிர குருவி மண்டைகளை தவிர யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டாங்க என்பதே உண்மை , மேலும் நான் சொன்னது எல்லாம் கற்பனை அல்ல கடந்த கால வரலாறின் எச்சங்கள், ஆனால் இப்போதைய நிலையில் கழகம் மறக்க விரும்பும் அத்தியாயம் :-))

    பார்ப்போமே வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த பக்கம் தாவப்போறாங்கன்னு, அப்போது நான்ன் சொன்னவற்றையே குற்றச்சாட்டாக சொல்லவும் வாய்ப்பு இருக்கு. அதை எல்லாம்ம் பெரிய மனசுடன் பொறுத்துக்கொண்டு கூட்டணியில் இருந்தோம் என சொல்லுவார் அதான் மிகப்பெரிய காமெடியாக இருக்கும்.

    ஈழ விவகாரத்தில் இனியும் மு.க வை நம்ப ஒருவரும் இல்லை, டைம் பாஸ் அஜண்டாவாக டெசோவை தூக்கி இருப்பதும் ஏதாவது புதிய அணி உருவாக வாய்ப்பு இருக்கா எனப்பார்க்கவே(வைகோ இம்முறை ஏமாறக்கூடாது).

    வரும் காலம் பதில் சொல்லும், காத்திருப்போம் தோழரே!

    தவறாகவாதிட்டால் மீண்டும் கையை பிடித்து இழுப்பதில் தவறில்லை!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  34. 180000 அப்பாவி ஈழதமிழர்களை ஒரே நாளில் கொன்று குவித்தபோது இதை செய்திருந்தால் ஏற்றிருப்போம்
    என்னுடைய பணத்தில் என் சொந்தங்களை கொள்ள ஆயுதம் அனுப்பிய பொது டெசோ வந்திருந்தால் ஏற்றிருப்போம்
    என்சொந்தங்கள் கொள்ளப்படும் போது மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று சொன்ன கல்நெஞ்சகாரன் யார்? கொலைகாரனை விட கொடுமையானவன் !
    சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வோம் என்று சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை நிவேற்றவிடாமல் செய்தது யார்?
    குடும்ப பாசம் தானே
    ஒரு குடும்பம வாழ ஒரு இனமே அழிந்து போனதே!
    ஈழத்தமிழனை விடுங்கள் என் இந்திய மன்னிக்கவும் தமிழ் மீனவனை காப்பற்ற இவரால் முடியுமா ?
    தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பற்ற ஈழ ஆயுதம் எடுத்திருக்கும் கபடதாரி
    எந்நாளும் உன்னை தமிழினம் மன்னிக்காது

    பதிலளிநீக்கு
  35. 1989 ல் அன்றைய பிரதமர் சந்திரசேகர் திமுக ஆட்சி நீக்கம் செய்யப்பட்டதற்கு
    ஈழத்தை காரணம் காட்டியது உண்மைதான்! மறுக்கமுடியாது. ஆனால், திமுக ஆளுங்கட்சியாக இருந்தபொது இதில் உறுதி காட்டியதே இல்லை! கிழக்கு பாகிஸ்தான் போரில் (இன்றிய மேற்குவங்க விடுதலைப்போர்(மேற்குவங்க முதலவர்/கட்சிகள் செயல்பட்டதில் நூறில் ஒருவிதம் கூட தமிழா முதல்வர்/கட்சிகள் செயல்பட்டதே இல்லை.சோழன் என்ற பெயர் மீது கலைஞ்ருக்கு பெரும் விருப்பு உண்டு.வேண்டுமானால், இனி ஈழத்திற்கு விடுதலை?!பெற்றுத்தந்த ஈழனே என்ரூ அழைத்துவிடலாம்!

    பதிலளிநீக்கு
  36. //திமுக சார்பாக பேசும் நான் உண்மைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். இதில் எது பொய் என்று யாரும் எதிர்த்துப் பேசமுடியவில்லை. திமுகவை எதிர்ப்பவர்களிடம் வெறும் வாய் மட்டும்தான் இருக்கிறது. வாயில் இருந்து உருப்படியாக எதிர்வாதம் வருவதாக தெரியவில்லை. மிஞ்சிப்போனால் “கருணாநிதி துரோகி” என்று தெனாலி கமல் மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்படி துரோகி என்று நிறுவக்கூட தெரியவில்லை//


    நீங்கள் எதற்காக உண்மைகளை பட்டியல் இடுகிறீர்கள் யுவா, வாசகர்களாகிய நாங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தானே ? நாங்கள் திரும்பவும் புள்ளிவிவரங்களுடன் பதில் சொல்வோம் என்று எதிர் பார்கிறீர்கள்.

    நாங்கல் கட்சி காரர்கள் இல்லை யுவா சாதாரண பொது ஜனம். விபரீதம் நடக்க போகிறது என்று உணர்ந்து நாளும் இரவும் தூங்காமல் மக்கள் உயிர் காக்க படாதா, அதிகாரம் பொருந்திய இடத்தில ஏன் உட்கார வைத்தோம் இந்த நேரத்தில் நிச்சயம் எதாவது செய்து மக்களை காப்பார் என்று எதிர் பார்த்து ஏங்கி அழுது காயம் ஆழமாய் வடுவாய் அவ்வளவு சீக்கிரம் ஆறாது யுவா.

    உங்கள் புள்ளிவிவரங்கள் எங்களுக்கும் தெரிகிறது ஆனால் மனம் உறுதியாய் சொல்கிறது துரோகம் என்று, என்ன செய்ய ?

    பதிலளிநீக்கு
  37. \\ஆட்சியில் இருந்த அரசியல் கட்சியாக திமுகவின் செயல்பாடுகள் ஈழவிவகாரத்தில் போதுமானவையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.\\

    அது எப்படி லக்கி கலைஞரின் மொத்த துரோகத்தையும் ஒரே வரியில் அடக்கி விட்டீர்கள்?

    \\திமுக ஆட்சியில் இருந்தபோது போராடுவதற்குதான் போராளிகள் இருந்தார்களே? இப்போதும் யாருமில்லாத நிலையில்தான் டெசோவுக்கான தேவையிருக்கிறது.\\

    அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று காத்திருந்ததா டெசோ ?

    \\வருடாவருடம் மெரினாவில் மெழுகுவர்த்தி ஏந்தினால் மட்டும் ஈழம் வென்றுவிட முடியுமா என்பதை தர்க்கரீதியாக, யதார்த்தமாக யோசிக்க வேண்டும்.\\

    அப்படியே மனிதசங்கிலி ஊர்வலம், தந்தி அடிக்கிறது, அப்புறம் முக்கியமா நான்கு மணிநேர சாகும்வரை உண்ணாவிரதம் இருக்குறதெல்லாம் செஞ்சா ஈழம் கெடச்சிடுமான்னு அப்பவே தர்க்கரீதியாவோ, யதார்த்தமாவோ யோசிச்சிருக்கணும்..

    பதிலளிநீக்கு
  38. பெயரில்லா3:14 PM, ஜூன் 29, 2012

    லக்கி,
    நீங்கள் கொடுத்துள்ள வரிசையின் படி ...
    1 . திமுக/கலைஞர் , எதிர் கட்சியாக இருந்த பொழுது மட்டுமே ஈழ தமிழர்களுக்காக கவலைப்பட்டுள்ளது.
    2 தனக்கு பெருமை கிடைக்கும் காலத்தில் மட்டுமே, அதாவது உங்களது கூற்று படி, போராளிகள் ஆதிக்கம் செலுத்தாத காலத்தில் மட்டுமே இது போன்ற போராட்டங்களை முன்னேடுக்குமென்றால், அந்த அக்கறையின் உண்மைத்தன்மை கேள்விக்குலாகிறது அல்லவா?

    பதிலளிநீக்கு
  39. பெயரில்லா6:37 AM, ஜூன் 30, 2012

    1956-DMK was not in power.
    1977-DMK was not in power.
    1981-DMK was not in power.
    1983-DMK was not in power.
    1986-DMK was not in power.
    1989-He would have gone to receive IPKF if his party had been in alliance with Congress at that time. It was not a hard decision to make politically as he was going to lose nothing.

    1991-Even if Rajiv Gandhi had not been killed DMK would have lost that election as the alliance between Congress and AIADMK was considered formidable at that time.

    Why don't you enlighten us by listing some of the things DMK did while it was in power?

    BA

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா9:57 AM, ஜூன் 30, 2012

    லக்கி! எனக்கு ஃபேஸ் புக் அக்கவுண்ட் இல்லை. யாராவது என் கருத்தை வெட்டி ஒட்டி இருந்தாலும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அனாநிக்கு ஏது காப்பிரைட்?

    ஆனால் நீங்கள் குட்டி மணிக்கு கருணாநிதி காட்டிய இனப்பாசத்திற்கு விளக்கமே தரவில்லையே! கருணாநிதியை துரோகி என்பதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள். தந்தால் பதில் தராமல் ஒதுங்கலாமா?

    சொல்லுங்கள் லக்கி. அப்பாவிகள் மூன்று பேரை எரித்தே கொன்ற மகனைக் காப்பாற்றத் துடிக்கும் கருணாநிதி, குட்டி மணிக்கு கோரச்சாவு காத்திருக்கிறது என்று தெரிந்தும் இலங்கைக்கு அனுப்பியது ஏன்?

    பதிலளிநீக்கு
  41. பெயரில்லா7:30 PM, ஜூன் 30, 2012

    மிக மிக நல்லக் கட்டுரை!

    பதிலளிநீக்கு
  42. பெயரில்லா1:13 PM, ஜூலை 02, 2012

    அதை செய்தோம் இதைசெய்தோம் என பட்டியலிடும் நீங்கள் 2009 ஆண்டு கலைஞர் இருந்த 5 மணி நேர உண்ணாவிரத்ததையும் ,2009 மே மாசம் ஈழத்தமிழரின் அழிவுக்கு சோனியாவுடன் உடன்பட்டதையும் சொல்ல வேண்டும் என கேட்டு கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  43. லக்கி,

    இங்கே ஒரு உண்மையை தவற விட்டு விட்டீர்கள்...

    2008 அக்டோபர் 24ஆம் தேதி எழுச்சியாக நடந்த மனித சங்கிலிக்கு பிறகு இந்திய அரசு இனபடுகொலையில் பங்கு பெறாமல் இருந்திருந்தால் ஏதாவது நியாயம் இருந்திருக்கும்... ஆனால் 2008 அக்டோபர் 26ஆம் தேதி காலை அடுத்த சில நாட்களில் சனாதிபதியாக போகும் கேடி பிரனாப் வந்து கோபாலபுரத்தில் பேசி விட்டு சென்ற பின் கலைஞரின் ஈழம் சார்ந்த கலைஞர் நிலைபாட்டில் மாற்றம் இருந்ததே?

    மிக கொடுமையாக 1 1/2 லட்சம் மக்கள் இனபடுகொலை செய்யபட்ட போது இங்கே பாசிச இந்திய அரசுக்கு ஏவல் வேலை செய்ய முதல் அமைச்சராக இருந்து என்ன சாதித்து விட்டார் கலைஞர்?

    நியாயமானவர்களின் எதிர்பார்ப்பு... தமிழின படுகொலையை சிங்கள அரசும், இந்திய அரசும் நடத்தும் போது அதன் பங்காளியாக இல்லாமல் நேர்மையாக... அதிகார வெறியை தூக்கி எறிந்து... கொல்லபடும், ஒடுக்கபடும் மக்களுக்காக பேசி இருக்க வேண்டாமா?

    மற்றபடி இந்த கொடுமையான இனபடுகொலை செய்த இந்திய அரசு... பழியை திமுக/கலைஞரின் பக்கம் திருப்பி... அவர்களின் பாசிசத்தை மறைத்து கொண்டு இருக்கிறார்கள்... ஜெயலலிதாவும், மற்ற ஆங்கில ஊடகங்கள், விகடன், உமர் போட்டிருக்கும் புதிய தலைமுறை போன்றவை இந்திய பாசிசத்தின் ஊது குழல்களே...

    உண்மையில் ஈழத்திற்காக பேசுபவர்கள் இந்திய அரசின் கிழிந்த கோவணத்தை அவிழ்த்தாலே போது... அந்த ஓட்டை கோவணத்தில் ஒளிந்திருக்கும் கலைஞர் உட்பட அனைவரின் அம்மணமும் அம்பலமாகும்...

    ஆனால் எல்லோரும் இந்திய பாசிசத்தை பேச முடியாமல் கருணாநிதியை திட்டி சுய இன்பம் அனுபவித்து கொண்டு... இந்திய பாசிசத்திற்கான சேவையை நடத்துகிறார்கள்...

    பதிலளிநீக்கு
  44. Atleast u should try to answer atleast one question in this video .. before even trying all out to make all his grand children to eat and enjoi this nation wealth in the pseudo name of tamil desam

    http://www.youtube.com/watch?v=cZdl0nHdnW8&feature=BFa&list=UUEhsOgK2u8GDDoynMCj78Ng

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா7:38 AM, ஜூலை 08, 2012

    Compared to other leaders of politicians, Karunanithy is far better in Eelam case and did something for Eelam cause. During the final days of war, Jayalalitha said "porendral makkal saaga thane seivargal" that showed her sentiment about tamil people but she changed her track during the election compaign and tn tamils bought it. Idha vida kevalam veru ethuvum irukka mudiyathu.

    பதிலளிநீக்கு
  46. ராஜ இந்திரன்5:01 PM, ஜூலை 13, 2012

    அரசியல் வரலாற்றை முழுமையாக அறியாமல் கருணாநிதியைக் குறைபாடுவதிலேயே உங்கள் கட்டுரைக்கு பதில் கூறியவர்களின் எண்ணமாக இருக்கிறது.தமிழிழம் அமையாதற்க்கு முக்கியக் காரணம் ஈழப் போராளிகளின் சகோதர யுத்தம் தான்என்பதை உணர்வீர்களா தமிழர்களே

    பதிலளிநீக்கு
  47. டெசோ சிந்தனை: சி.பி.எம். பார்வைக்கு... இலங்கையின் இன்னொரு பக்கம்

    இந்தத் தலைப்பை விடுதலை கொடுக்கவில்லை. தீக்கதிர் ஏட்டில் (19.7.2012) தோழர் டி.கே. ரெங்கராஜன் எம்.பி. கொடுத்த தலைப்பு.

    அந்தக் கட்டுரையில் என்ன கூற விரும்புகிறார்? டெசோ மாநாட்டில் தனியீழம் பற்றிய தீர்மானம் இடம் பெறவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சியும் இதைத் தானே கூறி வருகிறது. இதற்காக தி.மு.க. உள்ளிட்ட தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்று கூறிய கட்சிகள் வசைமாரி பொழிந்துள்ளன என்று ஆதங்கப்படுகிறார் தோழர் டி.கே. ரெங்கராஜன்.

    சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்பார்கள். அதனைத் தான் இவர்களும் செய்கிறார்கள்.

    டெசோ சார்பில் நடக்க இருக்கும் மாநாட்டில் தனியீழம் பற்றிய தீர்மானம் இடம் பெற வில்லையே தவிர, தனியீழம் தேவையில்லை என்று என்றைக்கும் சொல்லவில்லை. மாநாட்டின் கருத்துருவை செய்தியாளர்களிடம் வெளியிட்ட நேரத்தில்கூட டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தனி யீழம் தான் எங்கள் நிலைப்பாடு என்பதைத் தெரிவிக்கவும் தவற வில்லை.
    உண்மை இவ்வாறு இருக்க, சி.பி.எம். எடுத்த நிலைப்பாட்டை டெசோ ஏற்றுக் கொண்டு விட்டது என்ற தன்மையில் கட்டுரை எழுது வது நல்லதோர் நகைச்சுவையே!

    தனியீழம் தேவை என்பதைத் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய தி.க. தி.மு.க. போன்ற அமைப்புகள் எதனையும் திணிக்கவில்லை.

    இந்த முடிவை எடுத்தவர்கள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள்தான் என்பதை தீக்கதிர் ஏனோ மறந்தது அல்லது மறைக்கிறது?
    சிங்களமே இலங்கையின் ஆட்சி மொழி என்று இலங்கையில் 1956இல் சட்டம் இயற்றப்பட்டபோது அதனை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் வெறும் உண்ணாவிர தம் தான் நடத்தப்பட்டது. அத னையே அனுமதிக்கவில்லை சிங் கள இனவெறியர்கள். உண்ணா விரதம் இருந்தவர்களை அடித்துத் துவைக்கவில்லையா? பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் பலரையும் தூக்கி எறியவில்லையா?

    எல்லா வகையிலும் அறப்போர், ஜனநாயக வழியாக சட்டமன்ற பிரவேசம் எல்லாவற்றையும் நடத்திப் பார்த்துவிட்டுத் தான் - இனி ஒன்றி வாழ்வது என்கிற பேச்சுக்கே இட மில்லை என்று அனைத்து அமைப் புகளும் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஒன்றுகூடி தனியீழம்தான் ஒரே வழி என்று தீர்மானம் செய்தனர்.

    இந்த வரலாற்றை எல்லாம் நுணுக்கமாக கருத்தில் கொள்ளா மல், ஏதோ தி.க. - தி.மு.க. மற்றும் சில தமிழ் அமைப்புகள்தான் தனி யீழம் கோருகின்றன என்று சொல் லுவது நேர்மையான கருத்தாகாது. இன்னொன்றையும் புதிதாகக் கண்டுபிடித்து கூறியுள்ளார் தோழர் டி.கே.ஆர். இனப் பிரச்சினையையும் கடந்து இலங்கையில் வருக்கப் போராட்ட மும் நடந்து கொண்டுள்ளதாம். அப்படியா சேதி? ஈழத் தமிழர்களும், சிங்களவர்களும் வருக்கப் பார்வை யோடு ஒன்றிணைந்து எந்தெந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர்? பட்டியல் போட்டுக் காட்டுமா சி.பி.எம்? இலங்கையில் நடப்பது இனப் பிரச்சினையா? வர்க்கப் பிரச் சனையா? வறட்டுப் பிடிவாதத் தோடு எழுதுகோல் பிடித்தால் இப்படிப்பட்ட தடுமாற்றம்தான் ஏற்படும்

    பதிலளிநீக்கு