20 ஜூன், 2012

மனசாட்சி வியாபாரம்



முந்தையப் பதிவான ‘வாய்ப்பும்,யோக்கியதையும்’ பதிவின் தொடர்ச்சியாக இதைக் கொள்ளலாம். ஏனெனில் அப்பதிவு பூடகமாக எழுதப்பட்டிருந்தது என்று சில நண்பர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். என்ன எழவு பூடகம் என்று புரியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்களாக இருப்பவர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி சம்பளம் வாங்கிக் கொள்ளலாம். அது வெறும் கூலி. உழைப்புக்கு தரப்படுவது. ஆனால் டாட்டாவுக்கு விளம்பரப்படம் எடுத்ததாலேயே லீனா கைக்கூலி என்பது மாதிரியான அதிசய விளக்கங்களை பின்னூட்டங்களில் பெற நேர்ந்தது.

காலச்சுவடு நிறுவனத்தின் மீது ஷோபாசக்தி நீண்டகாலமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டிருந்தார். ‘பிராமின்ஸ் டுடே’ என்கிற சாதியப் பத்திரிகை காலச்சுவடு முகாமில் இருந்து வந்துக் கொண்டிருப்பதாக. காலச்சுவடு சார்பாக இது மறுக்கப்பட்டு வந்தது. அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கான டி.டி.பி/வடிவமைப்புப் பணிகளை மட்டுமே தாங்கள் செய்துத் தருவதாகவும், இது தொழில்ரீதியான உறவேயன்றி, உணர்வுரீதியான உடன்பாடான உறவல்ல என்பது மாதிரியான மறுப்பு அது. ஆனாலும் காலச்சுவடு பற்றி எப்போது ஷோபா விமர்சிக்கும்போதும் ‘பிராமின்ஸ் டுடே’-வுக்கு கட்டாயம் இடஒதுக்கீடு உண்டு.

இம்மாதிரி ஒரு குற்றச்சாட்டு என் மீதோ, உங்கள் மீதோ சாட்டப்பட்டால் நாம் என்ன செய்வோம்? அதைதான் காலச்சுவடும் செய்தது. ஷோபா தொடர்பான ‘ஓட்டை’கள் ஏதேனும் மாட்டுமா என புலனாய்வு செய்தது. இந்த தூண்டிலில் மாட்டியது லீனா. டாடா ஸ்டீலுக்கான புதிய விளம்பரங்களை ஓகில்வி நிறுவனம் தனது தளத்தில் வெளியிடும்போது கிரெடிட்ஸ் பகுதியில் ‘தேஜஸ்வினி’ திட்டம் குறித்த விளம்பரத்துக்கு இயக்குனர் லீனாமணிமேகலை என்கிற தகவல் வெளிப்பட்டிருந்தது. ஷோபாவை மாட்டவைக்க எதுவும் கிடைக்காவிட்டால் என்ன, அவருடைய நண்பரான லீனாவை மாட்டிவிட்டால் போதுமே. குறைந்தபட்சமாகவாவது ஷோபாவை சங்கடப்படுத்தலாம் என்பதே காலச்சுவடின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி அதே டாட்டா ஸ்டீல் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக காலச்சுவடின் பின்பக்க அட்டையில் விளம்பரம் தருகிறேன் என்று சில லட்சங்களை தர முன்வந்தால், காலச்சுவடு ஆதிவாசிகளுக்கு நியாயம் தேடும் அறச்சீற்றத்தோடு மறுக்குமென நாம் கருத இடம் ஏதுமில்லை.

ஆனால் காலச்சுவடு என்ன நினைத்ததோ அதை சாதித்துக் கொண்டது என்றே தோன்றுகிறது. அது பற்ற வைத்த தீ செழிப்பாகவே எரிந்தது. லீனாவுடைய எதிரிகள் மட்டுமின்றி அவரது நண்பர்களும் கூட கறாராக அறம் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜெயமோகனும் தன் பங்குக்கு எழவு வீட்டில் வேர்க்கடலை விற்க கிளம்பிவிட்டார். இச்சந்தர்ப்பத்தைபயன்படுத்தி காலச்சுவடு கண்ணன், அ.மார்க்ஸ் ஆகியோரிடம் தனக்கு ஏற்கனவே இருக்கும் பழையகணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்கிறார். அதையெல்லாம் விட ஆச்சரியம். எப்போதோ செத்துப்போய் அடக்கம் செய்துவிட்டவர்களை எல்லாம் தோண்டியெடுத்து இழிவுசெய்யும் ஜெயமோகன் அப்பதிவில் இவ்வாறாக எழுதுகிறார். “தமிழில் இந்த அளவுக்கு கீழ்த்தரமான வன்மம் வேறெங்காவது வெளிப்படுகிறதா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. “அன்புள்ள அல்லிக்கு...” பாணியில் தினமும் யாராவது ஒரு வாசகர் ஜெயமோகனிடம் உலகின் சர்வபிரச்சினைகளுக்கும் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவது வழக்கம். இந்த குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக பாண்டியன் எம்.கெ. என்பவர் கடிதம் எழுதி, அதற்கு ஜெயமோகன் பதிலும் அளிக்கிறார். வழக்கமான ஊன்னா தான்னா பாணியிலான படுநீளமான, கொட்டாவி விடவைக்கும் பதில்தான். தொடர்ச்சியாக ஜெயமோகனின் பதிவுகளை வாசித்து வருகையில் அவர் கடந்த ஜென்மத்தில் ராஜாஹரிச்சந்திராவாக பிறந்திருப்பாரோ என்கிற சந்தேகம் நமக்கு எழாமல் இருக்காது. இந்தப் பதிவும் அவ்வகையிலான செல்ஃப் ப்ரமோஷன் பதிவுதான். முழுக்க சிங்குலர் பர்சனில் ‘அரசாதி அரச அரச குலோத்துங்க’ பாணியில் அவரை அவரே வாழ்த்தி, பாராட்டி, மெய்சிலிர்த்து, கண்கலங்கி சிலாகித்துக் கொள்கிறார். இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை. தினம் தினம் இவரை வாசித்து நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளும் மசோகிஸ்ட்டுகளாக ஜெயமோகனால் ஏற்கனவே நாம் உருவெடுத்துவிட்டோம்.

நைசாக தலைவர் ’பிட்டை’செருகுகிறார். ‘சிந்துசமவெளி’ என்கிற ‘பிட்டு’ படத்தில் தனக்கு பங்களிப்பே இல்லை. ஆனாலும்அதை என்னோடு தொடர்புபடுத்தி அவதூறு பேசுகிறார்கள் என்கிறார். நன்றாக நினைவிருக்கிறது. அப்படம் வெளிவருமுன்பாக ஜெயமோகன் தனது தளத்தில் ‘சிந்து சமவெளி’ குறித்து விரிவாக எழுதிய விளம்பரக் கட்டுரை ஒன்று. இயக்குனர் சாமி எப்படிப்பட்ட அப்பாடக்கர். சினிமாத்தொழில் எப்படி இவருக்கு நிறைவை அளிக்கிறது என்றெல்லாம் விஸ்தாரமாக எழுதியிருக்கிறார். இப்போது மிகக்கவனமாக தனக்கும், சிந்துசமவெளிக்குமான உறவை வரலாற்றில் இருந்து முற்றிலுமாக மறைக்க நினைக்கிறார் ஜெயமோகன். விக்கிப்பீடியாவில் ஏதாவது ஆதாரம் தட்டுப்படுமா என்றெல்லாம் தேடிப்பார்க்காதீர்கள். விக்கிப்பீடியா என்பது விஷ்ணுபுரம் ஏரியா.

//அந்தப்படத்தில் பங்களிப்பாளர்களின் பெயர்களில் என்பெயர் சொல்லப்படவில்லை // என்று எப்படித்தான் வாய்கூசாமல் இவரால் சொல்லமுடிகிறதோ தெரியவில்லை. மேற்கண்ட விளம்பரம் சிந்துசமவெளி திரைப்படத்துக்கான இசைவெளியீட்டின் போது வெளியிடப்பட்டது. இன்றும் சிந்துசமவெளி எங்காவது ‘கில்மா’ படம் ஓடும் தியேட்டர்களில் ஓடினால், அதற்காக ஒட்டப்படும் சுவரொட்டிகளில் நாம் ‘ஜெயமோகன்’ பெயரை காணலாம். ஜெயமோகன் தனது தளத்தில் பதிந்திருக்கும் தினமலர் நேர்காணலில் கூட ‘நான் கடவுள்’, ’அங்காடித்தெரு’ படங்களைத் தொடர்ந்து ‘சிந்து சமவெளி’ படத்துக்கு வசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்என்றே இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே தான் திரைப்பங்களிப்பு அளித்த திரைப்படங்களாக இரண்டே இரண்டு படங்களை (நான் கடவுள், அங்காடித்தெரு) மட்டும் குறிப்பிடுகிறார். அவை அதுவரை திரையில் பேசப்படாத ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை இத்யாதி, இத்யாதியெல்லாம் பேசுவதால் அவற்றை மட்டும் தன்னுடைய கணக்கில் சேர்த்துக் கொள்கிறார். முன்பாக படுதோல்வியடைந்த ‘கஸ்தூரி மான்’ என்கிற திரைப்படத்துக்கும் இவர்தான் வசனம் என்று அறிகிறோம். என்ன காரணமோ தெரியவில்லை. அது ஜெமோவின் அக்கவுண்டுக்கே வரவில்லை. ஒருவேளை ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பற்றி அது பேசவில்லையோ என்னவோ? ஜெயமோகனைப் போல செய்துவிட்ட ஒரு வேலையை செய்யவேயில்லை என்று லீனா மறுக்கவில்லை.

இப்படிப்பட்ட ஜெயமோகன்தான் போலிவேடதாரிகள், தங்கள் மூளைகளை விற்பனைக்காக சந்தையில் விரித்து வைத்திருப்பவர்கள், அற்ப பிழைப்பு வாதிகள், சில்லறை நோக்கங்களுக்காக வாழ்பவர்கள் என்று தனக்கு உவப்பில்லாதவர்கள் அத்தனை பேர் மீதும் முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்.

என்ன செய்வது? ஊர் ரெண்டு பட்டிருக்கிறது. ஜெயமோகனுக்கு கொண்டாட்டம்தான்!

15 கருத்துகள்:

  1. பெயரில்லா6:58 PM, ஜூன் 20, 2012

    //இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை. தினம் தினம் இவரை வாசித்து நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளும் மசோகிஸ்ட்டுகளாக ஜெயமோகனால் ஏற்கனவே நாம் உருவெடுத்துவிட்டோம்.//

    மன்னிக்கவும் லக்கி. சீரியசான கட்டுரை என்றபோதும் வாய் விட்டு சிரித்துவிட்டேன்.
    அதுவும் விக்கிபிடியா எல்லாம் விஷ்ணுபுரம் ... :)

    - ஜெகன்

    பதிலளிநீக்கு
  2. மாமல்லர் நெடி!! கட்டுரை அருமை... :)

    பதிலளிநீக்கு
  3. http://www.jeyamohan.in/?p=26622 இது செயமோகனின் சுயவிளக்கம்.



    படத்தின் கிரடிட்களில் 'நாவல் வடிவம் செயமோகன்' என போடுகிறார்கள். இப்படம் இவான் துர்கனேவின் ஒரு நாவலை ஒட்டி எடுக்கப்பட்டதாகவும் எழுத்து போடுகிறார்கள். மேலும் 'எழுத்தும் & இயக்கமும் சாமி' எனவும் காட்டுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. //இப்படிப்பட்ட ஜெயமோகன்தான் போலிவேடதாரிகள், தங்கள் மூளைகளை விற்பனைக்காக சந்தையில் விரித்து வைத்திருப்பவர்கள், அற்ப பிழைப்பு வாதிகள், சில்லறை நோக்கங்களுக்காக வாழ்பவர்கள் என்று தனக்கு உவப்பில்லாதவர்கள் அத்தனை பேர் மீதும் முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்.//
    உண்மையோ உண்மை!!!போட்டு தாக்கு லக்கி!!

    பதிலளிநீக்கு
  5. இப்போது இரவு நன்றாக தூக்கம் வருமே....

    பதிலளிநீக்கு
  6. //இன்னொரு விமர்சனம், நான் சிந்துசமவெளி படத்துக்கு எழுதினேன் என்பது. அந்தப்படம் நான் எழுதியதல்ல என்பதும், அந்தப்படத்தில் பங்களிப்பாளர்களின் பெயர்களில் என்பெயர் சொல்லப்படவில்லை என்பதும், நான் அந்தப்படத்தின் முன்னர் உத்தேசிக்கப்பட்ட ஒரு வடிவையே எழுதினேன் என்பதும் அனைவருக்குமே தெரியும். [சிந்துசமவெளியின் மூலக்கதை மலையாளத்தில் வெளிவரவுள்ளது]//

    இதுதான் ஜெமோ சந்துசமவெளி பற்றிய கருத்து... அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை... ஏற்கனவே ஜெமோவிற்கும் உங்களுக்கும் உறவு கசந்தது என்பது தெரிந்ததே... எனக்கும் அவருடைய லீனா பற்றிய கருத்தில் உடன்பாடில்லை... ஆனால் நீங்களும் அவரை பற்றிய செய்தியில் தவறாகவே குறிபிட்டுயிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  7. கஸ்தூரிமான் படத்தில் மலையாள வசனங்களை தமிழில் மொழியாக்கம் செய்த வேலை மட்டுமே தன்னுடையது என‌ ஜெயமோகன் குறிப்பிடுகிறார். பழசிராஜா படத்திலும் அப்படியே.

    ரேனிகுண்டா, சிந்துசமவெளி இரண்டிலும் தான் எழுதிய வடிவை அவர்கள் எடுக்கவில்லை, அதனால் அவற்றிலிருந்து விலகியதாகச் சொல்கிறார். ஆனாலும் சி.ச.வெ. படத்தில் மட்டும் (courtesy அடிப்படையில்) தனக்கு டைட்டில் க்ரெடிட் போட்டார்கள் என்கிறார்.

    மற்றபடி, அவர் எழுதிய பிற படங்கள் ஒன்று கைவிடப்பட்டன (பத்தொன்பதாவது படி, பொன்னியின் செல்வன்) அல்லது இன்னும் வெளியாகவில்லை (6, உலோகம், கடல், நீர்ப்பறவை).

    அதனால் சி.ச.வெ. மேட்டரை மட்டும் உண்மையென எடுத்துக் கொண்டால் (ஏன் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை) அவர் இதுகாறும் வசனம் வசனம் எழுதிய படங்கள் என நான் கடவுள், அங்காடித்தெரு இரண்டை மட்டுமே குறிப்பிட முடியும் என்பது துல்லியமான உண்மையே.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா7:38 AM, ஜூன் 21, 2012

    என்ன யுவா சார்! அப்டினா ஜெயமோகன் சார கூத்தாடி என்கிறீர்களா? அவுரு எயுத்தாளர்னு தானே சொல்லிகிட்டிருக்காரு!

    பதிலளிநீக்கு
  9. தோழா, லீனா, ஷோபா கும்பலும் ரொம்ப மோசமானதுகள் தான். ஜெயமோகன் என்ற அயோக்கியனை எதிர்ப்பதாக நினைத்து மற்ற அயோக்கியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்காதீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:51 AM, ஜூன் 21, 2012

    //ஜெயமோகனும் தன் பங்குக்கு எழவு வீட்டில் வேர்க்கடலை விற்க கிளம்பிவிட்டார். இச்சந்தர்ப்பத்தைபயன்படுத்தி காலச்சுவடு கண்ணன், அ.மார்க்ஸ் ஆகியோரிடம் தனக்கு ஏற்கனவே இருக்கும் பழையகணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்கிறார். // :-):-):-):-):-)

    பதிலளிநீக்கு
  11. இதை பற்றிதான், உங்களை போன்றவர்கள் பற்றிதான் தெளிவாக சொல்லுகிறார் யுவா.
    //ஆனால் ஒவ்வொரு முறையும் என் திரைப்பங்களிப்பைப்பற்றி பேசும்போதும் ஒரு பெரும் கூட்டம் சிந்துசமவெளியின் வசனகர்த்தா என்று மட்டுமே என்னை அடையாளப்படுத்துவார்கள். அந்த அவதூறு வழியாக என்னை பிழைப்புவாதி என முத்திரையடித்தபின்னரே விஷ்ணுபுரத்தைப்பற்றிக்கூட பேசுவார்கள்.//

    மீண்டும் மீண்டும் சிந்து சமவெளி பற்றி சொன்னாலும் நீங்கள் உங்களுக்கு வேண்டியவகையில் திரித்து கூறுவதையே வழக்கமாக இருப்பதை பற்றிதான் சொல்லுகிறார். அது அவ்வாறு இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் அவ்வளவுதான்.

    //சிந்துசமவெளி ஒரு தீவிரமான படமாக உத்தேசிக்கப்பட்டது. இவான் துர்கனேவின் ஒரு குறுநாவலை ஒட்டி தமிழ்வடிவம் ஒன்றை நான் எழுதினேன். ஆனால் அதைப் படமாக ஆக்க இயக்குநரால் முடியவில்லை. சினிமாவில் அத்தகைய கட்டாயங்கள் சாதாரணம். அவர் வணிக அம்சங்களுடன் முற்றிலும் வேறு கதை ஒன்றை எடுத்தார். நான் அதில் மேற்கொண்டு பங்காற்றவில்லை.//

    உங்கள் ஆசைக்காக, இதில் அவர் எல்லா படங்களையும் பற்றி சொல்லிருக்கிறார், இதில் எதாவது விட்டு போயிருந்தால் சொல்லுங்கள்...
    http://www.jeyamohan.in/?p=26622
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா1:30 PM, ஜூன் 22, 2012

    கெட்டிக்காரன்யா நீய்யி... பதிவு எழுதறதோட ஜோலி முடிஞ்சுது. பின்னூட்டத்துல எவனாவது வந்து கேள்வி கேட்டா பதில் சொல்லாம ஓடிப்போயிடுவ...

    பதிலளிநீக்கு