நாமக்கல் அருகே உள்ள நல்லிப்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல்
படித்து வருகிறார். ஆறு செமஸ்டர்களை நிறைவு
செய்துவிட்டு ஏழாவது செமஸ்டரில் அடியெடுத்து வைக்கும் அந்த மாணவர், நல்லிப்பாளையம்
UCO வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து வருகிறார். ஏழை மாணவர் என்பதால் வட்டிக்கு
அரசு அளிக்கும் மானியம் பெறத் தகுதியானவர்.
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு.இந்த மானியத்தை கடனளிக்கும் வங்கிகள் அவர்களே அரசு நியமித்துள்ள வங்கிளிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களை ஜூன்7 2012 புதிய தலைமுறையில் வெளியிட்டிருந்தோம்
விதிகள் இவ்வாறிருக்க வட்டித் தொகையான 24000 ரூபாயைக் கட்டினால்தான் இந்த செமஸ்டருக்கான கடன் தொகையைத் தரமுடியும் என வங்கி மேலாளார் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். கடந்த ஆண்டும் இதே போல வற்புறுத்தி 16500 ரூபாயைச் செலுத்தச் சொல்லியிருக்கிறார். கல்லூரி திறக்கிற நேரமானதால் அவரது பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.கந்து வட்டிக்காரர்களிடம் 36 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி வங்கியில் பணம் கட்டிவிட்டனர்.
கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்த வேண்டியதில்லை. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வட்டிக்கான மானியமும் உண்டு. என்ற தகவல்களை வெளியிட்டிருந்த புதிய தலைமுறைக் கட்டுரையில் Education Loan Task force (ELTF) என்ற அமைப்பின் இணைய முகவரியையும் வெளியிட்டிருந்தோம். இந்த அமைப்பு அப்துல் கலாமின் கனவான விஷன் 2020 என்பதால் உந்தப்பட்டு அவரது ஆசியுடன் நடந்து வரும் அமைப்பு. ஸ்ரீநிவாசன் என்ற விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி/ இந்த அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார். .
புதிய தலைமுறையைப் படித்த விக்னேஷ், ஸ்ரீநிவாசனை ஜூன் 7ம் தேதி இரவு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தனது பிரச்சினையத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநிவாசன் மறுநாள் UCO வங்கியின் நல்லிப்பாளையம் கிளை மேலாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதிகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் வங்கி மேலாளார் ஆணவமாகப் பதில் சொன்னதாக ஸ்ரீநிவாசன் தெரிவிக்கிறார். “நீ யார் கிட்ட வேணா போய்ச் சொல்லிக்கோ, வட்டி கட்டினால்தான் பணம் கொடுக்க முடியும். எங்கள் பாங்க் விதிகள் அப்படித்தான் சொல்கின்றன” என்று சொல்லிவிட்டார்.
உடனே ஸ்ரீநிவாசன் அன்றே மேலதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அவரது மின்னஞ்சலில் புதிய தலைமுறைக் கட்டுரையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அன்று மாலை (ஜூன் 8) வங்கியின் துணைப் பொது மேலாளர் திரு வெங்கடாச்சலம் ஸ்ரீநிவாசனுடன் தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்கிறார். அவர் கிளை மேலாளரைத் தொடர்பு கொண்டு விதிகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் வங்கிக் கிளை மேலாளரே விக்னேஷைத் தொடர்பு கொண்டு அடுத்த செமஸ்டருக்கான கல்விக் கட்டணத்திற்குரிய வரைவோலையை வங்கியில் வந்து வாங்கிக் கொள் என்று சொல்லியிருக்கிறார். ஜூன் 9ம் தேதி விக்னேஷ் வங்கிக்குச் சென்று வரைவோலையைப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

இது போல் இந்தக் கிளையில் இன்னும் எத்தனை மாணவர்களுக்கு நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தை ஸ்ரீநிவாசன் வங்கி நிர்வாகத்திடம் தெரிவிக்கிறார். ஜூன் 9ம் தேதி மாலை கோவை மண்டல மேலாளர் பாஷா ஸ்ரீநிவாசனைத் தொடர்பு கொண்டு தான் ஜூன் 11ம் தேதியன்று வங்கிக் கிளைக்கே சென்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிவித்தார் .
அவர் விசாரணைக்கு வந்த போது 20க்கும் மேற்பட்ட மாணவர்கள்
அவரிடம் வங்கிக் கிளை மேலாளர் மூலம் சந்தித்து
வரும் பிரச்சினைகளத் தெரிவித்ததாக அறிகிறோம். தகுதியுள்ள மாணவர்களுக்கு அவர்களிடம்
வட்டியாக வாங்கிய பணத்தைத் திருப்பியளிக்க ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளதாக திரு. பாஷா
புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறையைப் படித்து முறையிட்ட மாணவருக்கு மின்னல்
வேகத்தில் உதவிகளைப் பெற்றுத் தந்த ELTF அமைப்பிற்கும், ஸ்ரீநிவாசனுக்கும், அவர் மின்னஞ்சலின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த
UCO வங்கியின் மேலதிகாரிகளுக்கும் பணிவன்போடு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்கள் ஆற்றிய பணி மிகப் பெரிது.
இது ஒரு வங்கியில் ஒரு கிளையில் மட்டும் ஏற்பட்ட பிரச்சினை
அல்ல. இது போன்று அநேகமாக எல்லா வங்கிகளிலும் ஏதோ ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட
கிளைகளில் மாணவர்களும் பெற்றோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.
வங்கிகளின் மேல் அதிகாரிகள் வங்கிக் கிளைகளில் விதிமுறைகளின்படி
தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மேற்பார்வையிட
மண்டல வாரியாக சமூக அமைப்புக்கள், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட
குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதே போல் கல்விக் கடன் தொடர்பான புகார்களை மின்னல்
வேகத்தில் விசாரித்து அவற்றைத் தீர்ப்பதற்கென்று பிரத்யேக குறை தீர்க்கும் மையங்கள்
அமைக்கப்பட வேண்டும் எனப் புதிய தலைமுறை வலியுறுத்துகிறது.
(நன்றி : புதிய தலைமுறை - ஆசிரியரின் தலையங்கத்திலிருந்து...)
(நன்றி : புதிய தலைமுறை - ஆசிரியரின் தலையங்கத்திலிருந்து...)
நல்ல விஷயம்...நிறைய பேருக்கு இது போன்று விஷயங்கள் சென்று சேர்வதில்லை.அதுவும் நகர வங்கிகளில் கிராம புற மாணவர்கள் பெரும் அவஸ்தை இருக்கே..சொன்னால் புரியாது..
பதிலளிநீக்குசபாஷ்...
பதிலளிநீக்குதம்பியும் தம்பியின் வீட்டையும் பாத்தா அப்படி ஒன்னும் ரொம்ப ஏழையா தெரியலையே....
பதிலளிநீக்குரொம்ப நல்ல விஷயம் .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
கொஞ்சம் விவரம் தெரியாதவரா இருந்தா இவங்க, நாம தலையிலே மிளகாய் அரைச்சிருவாங்க... அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... நன்றி நண்பரே !
பதிலளிநீக்குஎல்லாமே வணிக நோக்காகிவிட்ட இந்த காலத்தில், புதிய தலைமுறையின் இந்த பணி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி.
பதிலளிநீக்குநல்ல விஷயம் நன்றி!
பதிலளிநீக்குபை த பை
<<<>>>>
வாழ்ந்து கெட்ட குடும்பமாக இருக்காலாம் இல்லையா? அனாணி அண்ணே!
@Anonymous
பதிலளிநீக்குI personally know Vignesh. He is one of the very intelligent, talented and dedicated guy. He is fair that does not mean that he is not poor. An engineering student should look professional that is what he is. His father struggled a lot to brought up him and his brother. They are very good in studies. Apart from that both of them are top ranking chess players.
Do not just spam your worthless judgement and comments. It is very cheap to say something like this. If possible help a person.
BTW I am his cousin
~Shan.
@perumal Karur: "Naanga Nalla Vaala Pora Kudumbam".....:)
பதிலளிநீக்குநம்ம ஊர்ல தடி எடுத்தவன் தண்டல் காரன்.
பதிலளிநீக்குpoor nu proof panrathu verum munji thaan ah?apadi patha america la pichakaran kuda ena vida color!!
பதிலளிநீக்குen munja patha poor mathiri therla nu solranga! idhu en + 0r my -?....enaku therla
பதிலளிநீக்குsorry shan. nothing serious. it was just a time pass comment.
பதிலளிநீக்குNo need to be poor. In education loan even rich can take. The bank give loan to student and not to his parents. Some bank managers do such things due to lack of knowledge. Hats off to Sri. Venkatachalam. Dgm. Uco bank
பதிலளிநீக்குதிரு ஸ்ரீநிவாசன் மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்து இருந்தால் நாங்கள் அவருக்கு ஒரு நன்றி மடல் எழுதி இருப்போமே? அவர் ஒரு பிராமணராக இருப்பார் போலும்.
பதிலளிநீக்குபுதிய தலைமுறை உங்களை படிக்கும் என் போன்ற சில வாசகர்களுக்கு தேவை இல்லை. ஆனால் நல்லன செய்யும் யாரையும் பாராட்ட வேண்டிய கடமை கண்டிப்பாக உண்டு, ஆகவே புதிய தலைமுறையில் அவர் மின்னஞ்சல் உள்ளது என்பது போன்ற கருணாதித்துவம் சொல்லாதீர்கள்.
பதிலளிநீக்குஇத்தகைய நல்ல செயல்களை பார்க்கும் போது பத்திரிக்கை துறையில் இருப்பதற்கு ஒரு அர்த்தம் வரும் என தோன்றுகிறது
பதிலளிநீக்குலக்கி ,
பதிலளிநீக்குஒரு பின்னூட்டம் போட்டேன் , வரக்காணோம், காக்கா தூக்கிபோனது எனில் மீண்டும் போடுவேன், இல்லை அப்பின்னூட்டம் வெளியிட விருப்பமில்லை எனில் தெரிவிக்கவும்.
நன்றி!
தோழர் வவ்வால்,
பதிலளிநீக்குகாக்காய் தூக்கிக் கொண்டு போவதற்கென்றே ஒரு பின்னூட்டம் இட்டீர்கள் என்றால் காக்கா கொத்தாமல் கொஞ்சவா செய்யும்? :-)
நீங்கள் நினைக்குமளவுக்கு நான் நேர்மையோ, அறமோ, புரட்சிகர சிந்தனைகளோ கொண்டவனல்ல. முடிந்தவரை (அதாவது என் பிழைப்புக்கு பாதிப்பில்லாத வகையில்) போராட மட்டுமே தயாராக இருக்கும் சாதாரண மொக்கை நான்.
உங்களைப் போன்றவர்கள் அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எவ்வளவு வேண்டுமானாலும் ‘நேர்மை’ பேசலாம். என்னால் முடியாததற்கு மன்னிக்கவும் :-(
This is the real power of Print Media . . . . Well done Pudthiya Tahalamura.
பதிலளிநீக்கு(Some Media are wasting their time & also the readers time by making too much news about cinema field . . )
லக்கி,
பதிலளிநீக்குஇம்புட்டு தானா உங்க டக்கு :-))
முடிந்த வரை சமரசம் செய்துக்கொண்டு தான் வாழணும், ஆனால் அப்புறம் என்ன போராடுவதாக ஒரு போராளி வேடம்? அல்லது யாரேனும் போராடுவதாக சொன்னால் கோமாளிகள் என சொல்ல என்ன யோக்கியதை இருக்கு.
நம்ம வாழ்க்கைய பார்க்க போறோம்னு முடிவு பண்ணியாச்சு , அப்புறம் என்ன அடுத்தவனுக்கு தகுதி இருக்கானு ஆராய்வது, அப்புறம் எல்லாரும் அப்படித்தான்னு பொதுமைப்படுத்தி சான்றுக்கொடுப்பது.
முகம் தெரியாததை ஒரு பலமாகக்கொண்டு யாருக்கும் கோமாளிப்பட்டம் கொடுப்பதில்லை நான், என் நேர்மைக்கு உட்பட்டு மட்டுமே எழுதுகிறேன், நான் யாரையும் திட்டி அல்லது யாருடைய தவறையும் நியாயப்படுத்தி பதிவு எழுதுவதே இல்லை.ஊழல்வாதிகள்,கடமை தவறியவர்களை கூட எதுவும் சொல்லமாட்டேன் என்பது எனது கொள்கையல்ல.
மேலும் எனது பின்னூட்டத்தில் அப்படி என்ன வில்லங்கம் இருந்தது, தவறுக்கு அடிப்படையான காரணத்தையும் எழுதுங்கள் என சொன்னது எப்படி குற்றமாகும்.
நான் அப்பிரச்சினையை வைத்து எழுதலாம் என நினைத்து நினைத்து தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது, விரைவில் நானே பதிவிடுகிறேன்.பொது மக்கள் பிரச்சினையை யார் எழுதினால் என்ன?
நன்றி!
வவ்வால் சார்!
பதிலளிநீக்குநெஜமாவே அம்புட்டுதான் என்னோட டக்கு. நீங்க அனானிமஸ் என்பதால் உங்களுக்கு கொஞ்சம் கூடுதல் ‘டக்கு’ இருக்கலாம்.
நீங்க யாரு, எப்படி பொழைப்பை பார்க்குறீங்க என்பதை வெளிப்படையாக முன்வைத்து எழுதினால் உங்க டக்கும் டொக்கு ஆயிடும் என்பது உங்களுக்கே தெரிஞ்சதாலேதானே, வெறும் புனைபெயரில் டொக்கு வெச்சுக்கிட்டிருக்கீங்க?
லக்கி,
பதிலளிநீக்குஅனானிமஸ் என இல்லை என்றாலும் நிஜமாகவே டக்கு அதிகம் தான்,ஆனால் அதனை வைத்து தற்பெருமை அடைவதில்லை.துஷ்பிரயோகம் செய்வதில்லை.
டொக்கு ஆகிவிடும் எனில் என் டொக்கை மட்டும் பார்ப்பேன்,அடுத்தவர்களின் தவறுகளை நியாயப்படுத்தி என் தவறையும் நியாயப்படுத்திக்கொள்ள மாட்டேன்.
பிழைப்பு வாதம் பார்ப்பது தவறில்லை ,ஆனால் அதனை சரி என சொல்ல அனைவரும் பிழைப்புவாதம் செய்கிறார்கள் எனப்பொதுமைப்படுத்தி என்னை நானே ஆறுதல்படுத்திக்கொள்ள மாட்டேன்.
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ,வேதாளத்தினை தோளில் தூக்கிப்போட்டு சென்றான் ,வேதாளம் வழக்கப்படி கதையை ஆரம்பித்தது.
ஒரு ஊரில் ஒரு காவல் ஆய்வாளர் இரு குற்றவாளிகளைப்பிடிக்கிறார், ஒருவன் பணக்காரன், இன்னொருவன் ஏழை , பணக்காரனிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு ஏழையை மட்டும் குற்றத்துக்கு பொறுப்பாக்கி கைது செய்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார். இப்போது அவர் ,ஒரு குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுத்த நேர்மையாளரா இல்லை ஒரு குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த கடமை தவறியவரா?
வேதாளம் கேள்வியை கேட்டது விக்கிரமாதித்தான் விக்கித்துப்போனான் :-))
அம்புட்டுதேன்!
வவ்வால்,
பதிலளிநீக்குதுரதிருஷ்டவசமாக உங்களை நீங்களே அறிவுஜீவி, சாமர்த்தியசாலி என்று எடைபோட்டு இயங்குகிறீர்கள் என்று தோன்றுகிறது :-(
விவாதத்துக்கான எந்த ஒரு வெளியையுமே நீங்கள் ஏற்படுத்தித் தருவதில்லை. எனவே உங்களுக்கு கொஞ்சூண்டு அறிவிருந்தும்கூட அதற்குப் பிரயோசனமில்லாமல் போகிறது.
உங்களது வலையுலக செயல்பாடுகள் பெரும்பாலும் அடுத்தவரை குற்றம் சாட்டும் நோக்கில் அமைந்தவையே. அப்படியிருக்கையில் நீங்கள் இவ்வாறு தம்பட்டம் அடித்துக் கொள்ளுவது என்பது அவல நகைச்சுவையின்றி வேறல்ல.
வேதாளமாக இருப்பது சுலபம். நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள். அப்படித்தான் இருப்பீர்கள். பெட் கட்டி சொல்கிறேன். எந்தக் காலத்திலும் விக்கிரமாதித்தனாக உங்களால் நாடாளவே முடியாது :-)
லக்கி,
பதிலளிநீக்குஉரையாடத்தயார் எனில் ,நானும் தயார்... பேசுவோம்.
எந்த இடத்திலும் அப்படி பிரகடணப்படுத்திக்கொண்டதில்லையே.
யார் விவாதத்திற்கான வெளியை ஏற்படுத்தி தருவதில்லை, அல்லது நான் ஏற்படுத்தி தர வேண்டிய சூழல் நிலவுகிறதா? என்னுடையப்பதிவில் ஆதிகாலம் தொட்டே மட்டுறுத்தல் , இன்னார் தான் கருத்து சொல்லவேண்டும் என கட்டுப்பாடு என எதுவும் இல்லை, அப்படி இருந்தும் விவாதிக்க என்ன தடை வந்துவிட்டது.
இத்தனைக்கும் நான் தான் அடுத்தவர் பதிவில் போய் பின்னூட்டம் போடுகிறேன், உங்களைப்போன்றவர்கள் அதனை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கிறீர்கள், சொல்லப்போனால் நான் அல்லவா உங்களை பார்த்து அப்படி கேட்க வேண்டும், ஆனால் கேட்காமல் இருக்கிறேன்.ஒருவனை அடித்துவிட்டு அடித்த என் கை வலிக்குது எல்லாம் உன்னால தான் சொல்வது போல இருக்கே உங்க பேச்சு :-))
எது அவல நகைச்சுவை ? யாருக்கு யோக்கியதை இருக்குனு அடுத்தவங்களை குற்றம் சாட்டி பதிவு போடுவதா இல்லை நான் பின்னூட்டம் போடுவதா?
இன்னும் சொல்லப்போனால் நான் "polite" ஆகவே சொல்கிறேன், உங்கள் பின்னூட்டத்தில் என்ன சொன்னேன் அதைப்பற்றியும் எழுதினால் நாலுப்பேருக்கு நல்லது விழிப்புணர்வு ஏற்படும் என்று தானே சொன்னேன்.
யோக்கிதை இல்லை, கோமாளிகள் என்றெல்லாம் எழுதுவது பாராட்டு , என இப்போது தெரிந்துக்கொண்டேன். :-))
நமக்கு கையில பதிவு இருக்குனு என்ன வேண்டுமானாலும் எழுதலாம்னு எழுதுவதில்லை , அப்படி என்பதிவில் எனக்கு தெரியாமல் இருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்.நான் அடுத்தவர் பதிவில் போய் உரையாடுகிரேன் ,அப்படி எனில் விவாதத்திற்கான களம் அவர்களுடையது,அவர்கள் தான் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,நான் அல்ல :-))
எனக்கு நாடாள எல்லாம் ஆசையில்லை :-)) பசிச்சா சோறு தாகம் எடுத்தா பீரு அம்ப்புட்டுத்தேன்!
ஆனால் ஆளப்பிரந்தவர்களுக்கு ஆசை இருக்கலாம், நான் ஆளப்பிறந்தவன் என சொல்லிக்கொள்வது எல்லாம் தன்னடக்கத்தோடு சொல்லிக்கொள்வது என இப்போ தான் தெரிகிறது :-))
உண்மையில் உங்கள் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது அத்தனையும் உங்களுக்கான சுய விமர்சனம் ,ஆனால் என்னைப்பார்த்து சொல்லிக்கிட்டு இருக்கிங்க , என்ன கொடுமை சார் இது :-))
நன்றி!