15 ஆகஸ்ட், 2009
பொக்கிஷம்!
தமிழ் சினிமாவை இவர்தான் தாங்கிப் பிடிக்கப் போகிறாராம். எவனுக்குமே படமெடுக்கத் தெரியாது. இவருக்கு மட்டும்தான் சர்வதேசத் தரத்தில் படம் எடுக்கத் தெரியுமாம். இவர் ஒருவர் தான் மேதாவி. மற்றவெனெல்லாம் வெத்து என்று கர்வமாகப் பேசித்திரியும் சேரனுக்கு அடுத்தடுத்து ஆப்பு அடித்துவிட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயக்கண்ணாடி. இப்போது பொக்கிஷம். பாவம், தயாரிப்பாளர் ஜபக்கின் லுங்கிதான் ஒட்டுமொத்தமாக உருவப்பட்டிருக்கிறது. பெரிய இயக்குனர் நடித்து, இரண்டு ஆண்டுகளாக பிரேம் பை பிரேமாக செதுக்கப்பட்டிருக்கும் படம் முதல்நாளே தியேட்டர்களில் காத்தாடுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்கள் ஒரு காட்சியைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் நெளிந்துக்கொண்டே இருக்கிறார்கள். இடைவேளையில் படத்தின் கோராமை தாங்காமல் ஓடியவர்களை பார்த்திருக்கிறோம். இடைவேளைக்கு முன்பே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.
சேரன் தன் காதலி பத்மபிரியாவுக்கு கடிதம் எழுதுகிறார். பத்மபிரியா பதிலுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த பதில் கடிதத்துக்கு சேரன் இன்னொரு பதில் கடிதம் எழுதுகிறார். பதில் கடிதத்துக்கு மறுபடியும் பதில். ஒவ்வொரு கடிதக் கருமத்தையும் முழுமையாக சேரனும், பத்மபிரியாவும் படிக்கிறார்கள். இப்படியாக ஒரு இருபது, முப்பது கடிதம் முழுமையாக படிக்கப்படுகிறது. இதுதான் படம். ஐம்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாரும் கேணைப்பசங்கள் என்று படமெடுக்கும் போதே சேரன் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது.
இந்த கருமாந்திரப் படத்துக்கு எதற்கு கல்கத்தா, எதற்கு 70 காலக்கட்டம், எதற்கு கம்யூனிஸ்ட், எதற்கு முஸ்லிம், எதற்கு மலேசியா என்று புரியாமலேயே சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையை பிய்த்துக் கொண்டு சாக வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளரின் பணத்தில் சேரன் மஞ்சக் குளிக்க மலேசியா என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
இந்தப் படம் பார்க்கும் எந்தத் தயாரிப்பாளரும், 'சேரனை வைத்து இனி படமெடுக்க மாட்டேன்' என்று ஏ.வி.எம். பிள்ளையார் கோயிலில் சத்தியமாக சத்தியம் செய்வார்கள். 'ஆட்டோகிராப்' வெளிவந்தபோது உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ்ரசிகர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்தடுத்து காறி உமிழ்ந்துக் கொண்டு வருகிறார் சேரன். சேரனுக்கு இப்போது உடனடித் தேவை இன்னொரு ‘வெற்றிக் கொடி கட்டு', ஆட்டோகிராப் பார்ட்-3 அல்ல என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னாலும் ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த அவரது மனசின் ஈகோவுக்கு முன்பாக எடுபடப் போவதில்லை.
இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
///படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்///
பதிலளிநீக்கு???????????//////
//சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையை பிய்த்துக் கொண்டு சாக வேண்டியிருக்கிறது.//
பதிலளிநீக்குசீத்தலைச் சாத்தனார் தலையை பிய்ச்சுக்கிட்டுத்தான் செத்தாரா? :-)
//இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம்.//
பதிலளிநீக்குSame BLOOD as Athisha. hahahahaha!
--Raja.
நானும் எனது நண்பர்களும் நேற்று இரவு இந்த இழவு படத்தை பார்த்துத் தொலைத்தோம்... ச்சீ... ஏண்டா, சனியன் இந்த படத்துக்கு போனோம் என்றாகிவிட்டது.. :( நாந்தான் எனது நண்பர்களை கட்டாயப்படுத்தி கூட்டி சென்றேன்... ஹ்ம்ம்ம்.... கொடுமை.. சேரன் ஆட்டோகிராப்பிலிருந்து இப்படித்தார் திரிகிறார்.. உயிர கொடுத்து காதலிப்பார்களாம், காதல் கைகூடாதாம், ஆனால் வேர ஒருத்திய கல்யானம் செய்துகொண்டு செட்டில் ஆகிடுவாறாம்... சே... கடுப்பா இருக்கு... இரவு நல்லா தூங்கி இருக்கலாம்... கடிதம், கடிதம், கடிதம்... அந்த சனியன சட்டு புட்டுன்னு படிச்சு முடிச்சாத்தான் என்ன? படம் பார்தத யாருக்கும் சுத்தமாக திருப்தி இல்லை... என்ன சேரன் எவ்வளவு எதிர்பார்த்து வந்தோம் இப்படி ஏமத்திட்டீங்களே???
பதிலளிநீக்குநீங்கள் போட்ட படம் மிகவும் அழகு.
பதிலளிநீக்குசேரனின் முந்தைய படங்கள் - தவ்மாய் தவ்மிருந்து, ஆட்டோகிராப் - அவர் புகழை என்றுமே பாடும்.
ஒரு படம் தூக்கிவிட்டால் போதும் பார்வையாளர்களை எருமைமாடுகள் போல இந்த மேதாவிகளின் எண்ணம். இக்கதையை (பொக்கிச கதையை )அவருக்கு பாடம் சொல்லும்.
பதிலளிநீக்குநல்லவேளை காப்பாத்திட்டீங்க..அடுத்த வாரம் படத்திற்கு போகலாம் என்று இருந்தேன்..
பதிலளிநீக்குசீழ் + தலைதான் சீத்தலை ஆனது. சீத்தலைச் சாத்தனார் என்றொரு சங்ககாலப் புலவர் இருந்தார். இவர் தம் பாடல்களில் தவறு நிகழும்போதெல்லாம் கோணி ஊசி போன்ற பெரிய ஊசியால் தம் தலையில் குத்திக்கொள்வாராம். இதனால் இவர் தலை சீழ் பிடித்த தலையாக ஆகிவிட்டதாம்
பதிலளிநீக்குகுருஜி,
பதிலளிநீக்குபடம் பார்த்துவிட்டு செம காண்டுல இருக்கிறீர்களென நினைக்கிறேன். சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். அலுவலகமல்லாது வீட்டிலிருப்பதால் தப்பித்தேன்.
சேரன் இதை படித்தால் ஒரு வாரம் தூங்க இயலாது என்பது திண்ணம்.
சங்கர் அண்ணா படித்து பார்க்கவேண்டுமா என குழம்பி உண்மைத்தமிழனால் பார்க்க வேண்டுமென முடிவு செய்து, இப்போது இனி இது பற்றி வரும் விமர்சனத்தையே படிக்கக் கூடாது என முடிவு செய்திருக்கிறேன்.
ஆனாலும் ஆம்புலன்ஸ், பன்றி காய்ச்சல் எல்லாம் கொஞ்சம் அதிகம். என்றாலும் அவைதான் இந்த பதிவிற்கே முத்தாய்ப்பாக இருக்கின்றன...
லக்கி ஃபார்முக்கு வந்தாச்சு....
சந்தோஷம் கிருஷ்ணா....
பிரபாகர்...
"ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த அவரது மனசின்" எதாவுது நேரடி அனுபவமா உங்களுக்கு, கொஞ்சம் விளக்கவும்.
பதிலளிநீக்கு"ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த அவரது மனசின்" எதாவுது நேரடி அனுபவமா உங்களுக்கு, கொஞ்சம் விளக்கவும்
பதிலளிநீக்குenna pa kobam cheran mela?
பதிலளிநீக்குரொம்ப க்லாச்சிடிங்க போல..வை டென்ஸன்..
பதிலளிநீக்குதட்ஸ்தமிழ் விமர்சனம் போல காயப்படுத்தாத, உறுத்தாத விமர்சனமாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்...
பதிலளிநீக்குஇல்லை.
ஆனால் அதிலும் சேரனுக்கு எல்லா மெசேஜும் உண்டு...
பதிலளிநீக்குலக்கீஸ் , அதிஷாவுடன் போன அந்த ஆருயிர் நண்பர் நீர் தானா? :D
பதிலளிநீக்குநகைச்சுவை என்று எழுதுவது சில சமயம்
பதிலளிநீக்குஇந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம்//
பதிலளிநீக்குஇதே ரேஞ்சுக்கு அதிஷாவும் அழுதிருக்கிறார். அவ்வளவு மொக்கைப்படமா?
a big yawn of a movie ?
பதிலளிநீக்குநல்ல வேளை, திருட்டு சீடிக்கு குடுக்க இருந்த 40 ரூவா மிச்சம்.
பதிலளிநீக்குஏழை வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் யுவ கிருஷ்ணாவே,
பதிலளிநீக்குஇனிமேலும் எங்களை போன்ற வியாபாரிகளின் வருமானத்திற்கு உலை வைக்கும்படியான பதிவுகளை இட வேண்டாம். தயவு செய்து இது போன்ற விமர்சனங்களை வெளியிட்டு எங்களின் வியாபாரத்தை குறைக்க வேண்டாம்.
இப்படிக்கு,
தியேட்டர் வாசலில் மருந்து கடை வைத்து ஆஸ்பிரின் விற்போர்
மற்றும்
தியேட்டரில் ஏற்படும் கவலையை மறக்க டாஸ்மாக் நடத்துவோர்
கடைசி பாரா உங்க டச், அருமை.
பதிலளிநீக்குஇதுதான் கிருஷ்ணன்,
படம் பார்க்காத நான் லக்கி,
’ஒரு படைப்பாளி எப்போதுமே நல்ல படைப்புகளாகத்தான் தருவான் என்று எதிர்பார்க்கக்கூடாது; ஒரு படைப்பாளியின் மோசமான படைப்பை வைத்து அவரை எடை போடக்கூடாது, அவரின் மிகச் சிறந்த படைப்பை வைத்துதான் எடை போட வேண்டும்’ என்று ஞாநியின் கேணிக் கூட்டத்தில் சொன்னார் பாலு மகேந்திரா. அதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பதிலளிநீக்குசுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....
பதிலளிநீக்குHi Lucky,
பதிலளிநீக்குThanx to Cheran - i was able to read a hilarious review from you
Good to see that you are back in form Lucky
Did u notice that after your re-entry, the no of pinnoottam has come down
Time for you to write a controversial article and make the no of pinnoottam > 100
Friend from Bangalore
இது விமர்சனமாகத் தெரியலியே!
பதிலளிநீக்குஒரு படத்தின் திரைக்கதை சரியில்லை என்றாலும். அதில் பார்க்க, பாராட்ட ஏராளமான விடயங்கள் இருக்கலாம். என்னென்ன நல்ல விசயங்கள் இருக்கிறதென்பதையும் எடை போட்டுக் கூற வேண்டியது தானே!
//
ஆட்டோகிராப்' வெளிவந்தபோது உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ்ரசிகர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்தடுத்து காறி உமிழ்ந்துக் கொண்டு வருகிறார் சேரன்.
//
"தவமாய் தவமிருந்து" என்ற படத்தைக் குடும்பம் குடும்பமாகப் போய் பார்த்ததை ஏன் மறந்தீர்கள்? இதைப் படித்தால் உங்களுக்கும் சேரனுக்கும் ஏதோ சண்டை போலத் தோன்றுகிறது :))
it is not a review of film , it is a personal attack on cheran ,with out last 15 min we can accept the film for its attempt. but defanetly flawys are there. lucky this is not fare for u r writing dont losse balance
பதிலளிநீக்குநிசமாவே அவளோ மோசமாவா இருக்கு?
பதிலளிநீக்கு//இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பதிலளிநீக்கு//
அது லக்கி உங்களுக்கு என்ன ஆனது
PAdam Trailor parthaudane parka thundiyathu autograph ... Athae mathiri pokkisham parka thona after seeing the trailer
பதிலளிநீக்குஇந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ............ayyo ayyo ayyo ayyo unga vimarsanam padicihu sirithu sirithu vayiru vedichidum pola irukku........hahahahaha
பதிலளிநீக்குவேனா...
பதிலளிநீக்குவிட்டுடு...
வலிக்க்க்க்குது...
அளுதுடுவேன்...
- சேரன் ரசிகன்
விமர்சனம் படிக்காம சிக்கிட்டேன்.தாயோளி அவன் நாசமா போகட்டும்.இன்டர்வெல் விடுறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி பக்கத்து சீட் பசங்க ரெண்டு பேரு பேசிகிட்டு.வாடா போயிடலாம்.இருடா பத்து வெள்ளி ஊர் பணத்துல முன்னூத்தி இருவது ரூவாடா.அதுக்காக சாகவா முடியும்?வாடா போலாம்.நமக்கு எதுக்குயா பன்றிக்காய்ச்சல்? அது சேரனுக்கு வரட்டும்.
பதிலளிநீக்கு"மோதி விளையாடு" படம் பார்த்ததில் இருந்து இனி எந்தப் படத்தையும் ரீலிஸ் (வெள்ளிக்கிழமையே) அன்று பார்க்கக்கூடாது என்று எடுத்த தற்காலிக முடிவால் காப்பாற்றப் பட்டுவிட்டோம் என நினைக்கும் போது கண்ணில் ஆனந்தக்கண்ணீரே வருகிறது.
பதிலளிநீக்குஅய்யோ...
பதிலளிநீக்குஒரு இனிய இரவு வீணாகிப் போய்விட்டது..
செகண்ட் ஷோ பார்த்து விட்டு வந்து படுத்தால், நதிரா..நதிரா..என்று சேரனின் அவலக் குரல் சுத்தி சுத்தி அடிக்கிறது..
என்ன கொடும சார் இது..?
//
பதிலளிநீக்குஇதே ரேஞ்சுக்கு அதிஷாவும் அழுதிருக்கிறார். அவ்வளவு மொக்கைப்படமா//
மொக்கையா பொக்கையானு தெரியலை..
அது ஒரு விதமான கொலை வெறி உணர்வு ஏற்படும் இந்த படத்த பார்த்தா...
சொன்னா புரியாது..பட்டாதான் புரியும், போய் பாருங்க !
ஆட்டோ கிராப் மற்றும் தவமாய் தவமிருந்து என இரண்டு அருமையான படங்களை கொடுத்தவர்தான். ஆனைக்கும் அடிசறுக்கும். பிரபலமான எல்ல இயக்குனர்களுக்கும் ஓர் இரு முறை இப்படி விழுந்து எழுந்த கதைகளை நாம் பார்த்துள்ளோம்.
பதிலளிநீக்குஉங்களின் விமர்சனம் படித்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தது உண்மை. நல்ல
" Satire " உங்களிடம். வாழ்த்துக்கள்.
நன்றி கிருஷ்ணா.
பதிலளிநீக்குநல்லவேளை இன்னும் படம் பார்க்கவில்லை. இனிமேல் பார்க்க போவதுமில்லை. அருமை நண்பர் கேபிளும் உ.த னும் கூட புலம்பி தீர்த்து விட்டனர்.
செந்தழல் சொன்ன தட்ஸ் தமிழில்::
”இனிய நினைவுகளாய் இந்தப் படம் ஒவ்வொரு ரசிகர் மனதிலும் தங்கட்டும்” என்று சொல்லி முடித்திருக்கிறார்கள்.
ha..ha..haa....
எனக்கு இந்த வலை பக்கதுல நடக்குற சில விஷயம் மட்டும் பிடிக்கவே இல்ல.
பதிலளிநீக்குஒரு படத்தை பற்றி நன்றாக விமர்சனம் பண்ணி பதிவு போட்ட அத பாராட்டி பல பின்னுடம் போடுறாங்க, அதே மாதுரி மோசம் என்று எழுதினால் அதுக்கும் திட்டி பல பின்னுடம் போடுறாங்க. ஒண்ணு மட்டும் நல தெரிஞ்சிடுச்சு ஜால்ரா தட்டுருவன் தட்டிகிடே பின்னுடம் போடுவன். அதுதான் இங்க நடந்துட்டு இருக்கு , உண்மைய சொல்லணும்னா இங்க படத்துக்குகாக போட்டு இருக்குற பின்னுடம் பதில் லக்கிகாக ஜால்ரா அடித்தவர்கள் தான் அதிகம்.
படத்தை பார்காமலே நிறைய பேரு இங்க எஸ்கேப், தப்பிச்சோம்ன்னு எழுதி இருக்கிறது கொஞ்சம்க்குட சரி இல்லை. எந்த படம் என்றாலும் அத பார்த்துட்டு அதற்கு பின்னாடி பின்னுடம் போடுக ...
இதுக்கு பேசாம மனித உரிமை சேவர்கள் படம் பார்க்க வருபவர்களுக்கு இரண்டு முலம் கயிறை இலவசமாக வழங்கலாம்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதை போல படம் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை.... வழக்கமான சேரனின் படம் போல மிக நீளமாக சொல்ல பட்டு இருக்கிறது.... பல இடங்களில் போர் அடித்தாலும் , சில இடங்களில் நம் மனதை தொட்டு செல்கிறார் சேரன்... சேரனின் தவமாய் தவமிருந்து பிடித்திருந்தால் அந்த சில காட்சிகள் உங்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும்
பதிலளிநீக்குSonna karythu 100% oppu kolla koodiyadhey..Aanal sonna vidham sema cottamana comedy..Ok avarukkum ungalunkkum yedhavadhu vaika thagaraara? :)
பதிலளிநீக்குUM.Krish
"தவமாய் தவமிருந்து" என்ற படத்தைக் குடும்பம் குடும்பமாகப் போய் பார்த்ததை ஏன் மறந்தீர்கள்? இதைப் படித்தால் உங்களுக்கும் சேரனுக்கும் ஏதோ சண்டை போலத் தோன்றுகிறது :))
பதிலளிநீக்குஒரு தலைப்பட்சமான ,விமர்சனம்..
சினிமா ,பற்றி ஒன்றும் தெரியாத நபர் எழுதி இருந்தால் கூட பரவாயில்லை , லக்கியிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை..
இண்டர்வெல்லுக்கு சற்று நேரம் முதல் இருந்து படத்தின் இண்டர் வெல் ஆனால் இண்டர் வெல் வரை லக்கி சொன்னது போல் படம் மோசம் தான்,
ஒளிப்பதிவு...மிக மிக அருமை.....
பதிலளிநீக்குநல்ல வேலை இந்த sunday போகலன்னு நினைச்சன் *************** thank u for Information
பதிலளிநீக்குலக்கி, ஏதோ சேரன் கிட்ட உதவியாளராச் சேர வாய்ப்புக் கேட்டு, அது கிடைக்காத வயித்தெரிச்சல்ல எழுதின மாதிரித் தெரியுது?!
பதிலளிநீக்குபல கோடி போட்டு ஒருத்தன் படம் எடுத்தா, அதை ப்ளாக் டிக்கட் வாங்கி பார்த்துட்டு, ஒருதலைப்பட்சமா இப்படி நொட்டை சொல்றது நல்லா இல்லை. இன்னைக்கு முளைச்ச... புது எழுத்தாளர்னு சொல்லிக்கிற நீங்க எழுதுற தொடரை விமர்சனம் செஞ்சாவே உங்களுக்கு பொறுக்கல...ஆனா நீங்க மட்டும் இப்படி எழுதறீங்க.
அதுக்காக சேரன் செய்யற எல்லா எழவுக்கும் நான் வக்காலத்து வாங்க வரல...விமரிசனம்னா நிறை குறைகளை அலசனும். உண்மைத்தமிழன், கேபிள் சங்கரோட விமரிசனங்களையும் படிச்சுப் பாருங்க. உங்களை நீங்களே பிரபலம்னு கற்பிதம் பண்ணிக்கிறதால வருகிற தலைக்கனம் இது. வளர வேண்டிய உங்களைப் போன்றவர்களுக்கு அது நல்லதல்ல.
நான் சொல்லியிருப்பது தவறு என்று உங்களுக்குத் தோன்றினால்...என்னை மன்னிக்கவும்.
இப்படிக்கு,
உங்கள் நல்ல பதிவுகளை தினமும் விரும்பிப்படிக்கும் வாசகன்.
Lucky! Very very one sided writing! Sivaji padathai vida saththaanathu ippadathin kadhai enpadhu en thaalmaiyaana karuthu! Konjam Boreadippathu ennavo unmaithaan atharkaaka kuppai endrellam kaadaasuvathu.. konjam over thaan! Athaivida kodumai annony pinnootangal thaakkuvathum sila non anony pinnootangal balanced view solvathum! Ulvilaiyaatellaam over aa irukkuthonnu enakku konjam santhekam kooda irukku! ;-(
பதிலளிநீக்குபடத்தைப் பார்த்துவிடு வந்தவுடனேயே கடுப்பான கையோடு எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு//இடைவேளையில் படத்தின் கோராமை தாங்காமல் ஓடியவர்களை பார்த்திருக்கிறோம். இடைவேளைக்கு முன்பே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.//
இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
அவர் நடிப்பைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.. ரா.தே.சீதையில் கைவசம் இருந்த நடிப்பு ஸ்டாக்கை எல்லாம் இறக்கிவைத்துவிட்டதால் மிச்சம் மீதி வைத்து ஒப்பேற்றியிருப்பதாய் கேள்விப்பட்டேனே.!
சில நண்பர்கள் 'தவமாய் தவமிருந்து' நல்ல படம் என்று சொல்லியிருந்தார்கள். சரிதான்.! அதில் இவரின் மூஞ்சியையும், நடிப்பையும் காண்பிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இன்னும் 100 மடங்கு நல்ல படமாய் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
லக்கி லுக்
பதிலளிநீக்குவலைப் பூ நண்பர்கள் சொல்வது போல நீங்கள் இப்படி எழுதி இருக்க வேண்டாம். சற்று மென்மையாக இதனை நீங்கள் விமர்சித்து இருக்கலாம்.
எனக்கும் சேரன் மீது (மாயக் கண்ணாடி)கோபம் உண்டு ஆனால் வன்மம் அல்ல!
சர்சைகளுக்கு அப்பாற்பட்டு சேரன் ஒரு படைப்பாளி என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம்.
எனக்கு இந்த படம் ஓடவில்லையே அல்லது படம் நன்றாக இல்லையே என்ற பெருத்த ஏமாற்றம் உள்ளது.
புதிய கதையோடு, புதிய களத்தில் மீண்டும் அவர் நல்ல படங்கள் கொடுத்து அவர் மீண்டு வர வேண்டும்.
பாவம் சேரன் - விட்டுவிடுங்கள்!!!
மயிலாடுதுறை சிவா...
யார் வேண்டுமானாலும் வக்கணையாகப் பேசலாம். இப்படத்துக்காக பல மாதங்கள் காத்திருந்து முதல்நாளே ஆவலோடு பார்த்து ஏமாந்த எனக்குதான் தெரியும் நான் அடைந்த ஏமாற்றம். ஏமாற்றம் தரும் கோபம் இப்படித்தான் வெளிப்படும். இதுதான் இயல்பும் கூட.
பதிலளிநீக்குஇவ்வளவு மட்டமான படத்தை கொடுத்துவிட்டு வெட்கமேயில்லாமல் சினிமாவில் ஒரு இலக்கியம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பேசும் சேரனை இப்பதிவில் நான் விமர்சித்திருப்பது அதிகபட்ச நாகரிகத்தோடே இருக்கிறது. தியேட்டரில் போய் உட்கார்ந்துப் பாருங்கள். ரசிகர்கள் எப்படி சேரனை போற்றிப் புகழ்கிறார்கள் என்பது புரியும் :-)
//Athaivida kodumai annony pinnootangal thaakkuvathum sila non anony pinnootangal balanced view solvathum! //
பதிலளிநீக்குஓசை அண்ணே!
கண்ணை நல்லா திறந்துப் பார்க்கவும். பெரும்பாலான அனானி பின்னூட்டங்கள் தாக்குவது என்னைத்தான், சேரனை அல்ல :-)
Sir,
பதிலளிநீக்குYou should mature! Cheran might give the dumbest movie ever made in Tamil. Can't you comment politely? There is limit for sarcasm. You are comparing his movie to Swine Flu. Do you realize you are criticized more than the movie itself? I think you have to change your attitude. You have good skills - please use it positively.
Sincerely,
Ashwini
ஹலோ யுவ கிருஷ்ணா வருக! நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். இல்லேன்னா நானும் பாத்துட்டு தியேட்டர் வாசல்ல நின்னு யாரும் பாக்காதீங்கன்னு ஜனகராஜ் மாதிரி சொல்லிக்கொண்டிருக்க வேண்டிதுதான்! பாவம் ஊரிலிருந்து இங்க பிழைக்க வந்திருக்கும் தம்பிகளை இந்த மாதிரி படத்துக்கு வந்து ஐயையோ ஊர் காசு முன்னூத்தி இருபது நூபாடா என்று புலம்பும் பசங்களுக்காகவாவது இந்த சமூக சேவை செய்ய வேண்டியது தான்.
பதிலளிநீக்குபொதுவாகவே சேரன் படங்களில் அவர் முகம் காட்டாமல் இருந்தால் இன்னும் சகிக்கபில்லாக இருக்கும். ஆட்டொகிராஃப் கூட இன்னும் சூப்பரா ஓடியிருகும். இதில கடிதம் மேல் கடிதம் எழுதி மொக்கை போடறாரா? ஐ எஸ்கேப்!!!!
சித்ரா
you could have been subtle..guess this is too rude.
பதிலளிநீக்குஎன்ன கிருஷ்ணா
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் கோபம்?
"யார் வேண்டுமானாலும் வக்கணையாகப் பேசலாம். இப்படத்துக்காக பல மாதங்கள் காத்திருந்து முதல்நாளே ஆவலோடு பார்த்து ஏமாந்த எனக்குதான் தெரியும் நான் அடைந்த ஏமாற்றம். ஏமாற்றம் தரும் கோபம் இப்படித்தான் வெளிப்படும். இதுதான் இயல்பும் கூட.
...."
உங்கள் ஏமாற்றம் புரிகிறது. ஆனால் உங்கள் கோபம், வன்மம் போல் தெரிகிறது.
உங்களுடைய பல பதிவுகளை படித்து ரசித்து இருக்கிறேன். உங்களை போலவே நானும் கலைஞர் ஆதரவாளன்!!! இருப்பினும் இந்த பதிவு சற்று கீழ்தரமாக உள்ளது.
என்னவோ போங்கள்....
மயிலாடுதுறை சிவா...
சைபர் கிரைம்னு தொடர் ஆரம்பித்து விட்டு விடலைகளின் விரச ங்களை விவரிப்பதிலேயே உங்களுக்கு நேரம் போகிறதே...சைபர்னா என்னன்னு தெரியுமாண்ணே.. கிரைம்னா என்னன்னு தெரியுமாண்ணே... சும்மா எழுத்து வியாபாரியா மாறிபுட்டு இன்னொரு சினிமா வியாபாரியைப் பற்றி இப்படி எழுதியிருக்க வேண்டியதில்லை... ஆனாலும் அப்பப்ப சின்னப்புள்ளேன்னு காட்டிக்கிறீங்களே கிச்சா அண்ணே...
பதிலளிநீக்குபாவம் சேரன் இனிமேல் உங்ககளிடம்தான் படம் எடுக்க யோசனை கேட்க வேண்டும். கையோடு கதை இருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டால்தான் விடுவீர்கள் போலிருக்கிறது. சேரன் இனிமேல் மாயக்கண்ணாடியில் தன் முகத்தை மீண்டும் பார்க்க வேண்டும். இது விமர்சனம் மாதிரி இல்லை. சும்மா வெளுத்து வாங்கிவிட்டீர்கள். எல்லா டைரக்டர்களும் உங்கள் வீட்டுமுன்பு குவிந்து கதை சொல்லிவிட்டு படம் எடுத்தால் தமிழ்நாடு உருப்படும். வாழ்க தமிழ்ப் படம்! வளர்க யுவகிருஷணா !
பதிலளிநீக்குதொடரட்டும் தங்கள் கர்ஜனை !
தனுஷ்
இந்த சேரன் போன்ற ஆட்கள் தங்கள் அரிப்புக்குத்தான் படம் எடுக்கிறார்கள். மக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடத்தொடங்கினால் போதும்... உடனே தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விடுகின்றனர்.
பதிலளிநீக்கு"சரியாச் சொன்னிங்க...படம் எடுங்கடா என்றால், நமக்கு பாடம் எடுக்கிராங்க. என்ன கொடுமை சார் இது!"
////யார் வேண்டுமானாலும் வக்கணையாகப் பேசலாம். இப்படத்துக்காக பல மாதங்கள் காத்திருந்து முதல்நாளே ஆவலோடு பார்த்து ஏமாந்த எனக்குதான் தெரியும் நான் அடைந்த ஏமாற்றம். ஏமாற்றம் தரும் கோபம் இப்படித்தான் வெளிப்படும். இதுதான் இயல்பும் கூட.
பதிலளிநீக்குஇவ்வளவு மட்டமான படத்தை கொடுத்துவிட்டு வெட்கமேயில்லாமல் சினிமாவில் ஒரு இலக்கியம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பேசும் சேரனை இப்பதிவில் நான் விமர்சித்திருப்பது அதிகபட்ச நாகரிகத்தோடே இருக்கிறது. தியேட்டரில் போய் உட்கார்ந்துப் பாருங்கள். ரசிகர்கள் எப்படி சேரனை போற்றிப் புகழ்கிறார்கள் என்பது புரியும் :-)//////
UNMAI...,UNMAI...,
MUDIYALA...PADAM PAKKA MUDIYALLLLAAAAAAAAA... :(((((
Good movie to watch! it is slow..but good! i would say that it would've touched every heart ...had IR composed numbers and re-rec..and had some other good actor did instead of Cheran(we are so used to his way of acting...sobbing,.crying etc,)and a good make up man for Padmapriya in the end.
பதிலளிநீக்குஅண்ணே, படத்தை விமர்சனம் பண்ணுங்க. டைரக்டரோட குணத்தை விமர்சனம பண்ண உங்களுக்கு என்ன உரிமையிருக்கு? அதையும் சேத்தா ௫௦ 50
பதிலளிநீக்குகுடுத்து வாங்கினீங்க?
-Srini
நண்பர் யுவகிருஷ்ணா அவர்களுக்கு,
பதிலளிநீக்கு//சேரன் தன் காதலி பத்மபிரியாவுக்கு கடிதம் எழுதுகிறார். பத்மபிரியா பதிலுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த பதில் கடிதத்துக்கு சேரன் இன்னொரு பதில் கடிதம் எழுதுகிறார். பதில் கடிதத்துக்கு மறுபடியும் பதில். ஒவ்வொரு கடிதக் கருமத்தையும் முழுமையாக சேரனும், பத்மபிரியாவும் படிக்கிறார்கள். இப்படியாக ஒரு இருபது, முப்பது கடிதம் முழுமையாக படிக்கப்படுகிறது. இதுதான் படம்.//
1) இந்த படத்துல என்ன எதிர்பார்த்து போனீங்க?
///இப்படத்துக்காக பல மாதங்கள் காத்திருந்து முதல்நாளே ஆவலோடு பார்த்து ஏமாந்த எனக்குதான் தெரியும் நான் அடைந்த ஏமாற்றம். ஏமாற்றம் தரும் கோபம் இப்படித்தான் வெளிப்படும்.///
2) படத்தோட SubText " அவள் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள்" அப்படிங்குற Simple மேட்டர் கூட கவனிக்காத உங்களோட விமர்சனத்த சரின்னு எப்படி எதுக்குறது?
///இந்த கருமாந்திரப் படத்துக்கு////
3.இத கருமாந்திரப் படம்னா? அப்ப எது நல்ல படம்? நெறைய வேண்டாம் 1,2 சொன்னீங்கன்னா நாங்களும் அறிந்து, பார்த்து, தெரிந்து, புரிந்து, பின் தெளிந்து கொள்கிறோம்.
///எதற்கு கல்கத்தா, எதற்கு 70 காலக்கட்டம்///
4.கதைய பொறுத்த வரை , கடிதங்கள்
எழுதுற காலகட்டத்துல நடக்குது. அண்மை காலமாக யாரும் கடிதம் எழுதுரதில்லைனும், வெளியூர்ல இருந்தாத்தான் கடிதம் எழுதுவாங்கன்னும் உங்களுக்கு தெரியும்னு நெனைக்குறேன்.
///இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம்///
விமர்சனம் பண்றவர் , தான் விமர்சனம் பண்ற ஒருத்தர் தப்பாவே செய்திருந்தாலும் நட்பு முறையில் விமர்சித்தால் தான் அவர் தன்னை மாற்றி கொள்ள முடியும், அது தான் சரியானதும் கூட.
இந்த படத்தை பார்த்த நான் துர்பாக்கியசாலி இல்லை, தாங்கள் தங்களை துர்பாக்கியசாலி என்று நினைக்கும் விதத்தில் தங்களுக்கு பன்றி காய்ச்சல் வந்து விடகூடாது என்று அந்த எல்லாம் வல்ல (யுவ) கிருஷனனையே வேண்டி கொள்கிறேன்.
லக்கி,
பதிலளிநீக்குஇப்பதான் இந்தப்படத்தைப் பார்த்து 'முடிச்சோம்'. என் வழக்கம்போல் படத்தைப்பார்த்தபிறகு நம்மாட்கள் என்னதான் எழுதி இருக்காங்கன்னு தேடி இங்கே வந்தேன்.
கடைசி பாரா படிச்சுச் சிரிச்சதில் படம் பார்த்த தலைவலி போய் இப்போ வயித்துவலி:-)))))))
அதுவும் கடைசியில் பத்மாப்பிரியா ஒவ்வொரு கடிதமாக எடுத்து வாசிக்க வாசிக்க..... சீக்கிரம் படத்தை முடிச்சுட்டு அப்புறமாப் போய் படிம்மான்னு அலறிட்டேன்னா பாருங்க
ஆமாம்..... கடைசியில் பத்மப்ரியா காரிலேயே 'போய்ச்சேர்ந்து'ட்டாங்களா?