29 ஆகஸ்ட், 2009
QUICK GUN முருகன்!
QUICK GUN முருகன் ஒரு மாட்டுப்பையன். அதாவது கவ்பாய். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை அப்பட்டமாக, அபத்தமாக காப்பி அடிப்பவன். அவனுடைய செயினில் தொங்கிக் கொண்டிருக்கும் லாக்கெட்டுக்குள்ளிருந்து, முருகனின் காதலி திட்டிக்கொண்டே இருக்கிறாள். ரைஸ்ப்ளேட் ரெட்டி என்ற மொக்கை வில்லனோடு கேணைத்தனமாக மோதிக் கொண்டிருப்பது முருகனின் வாடிக்கை. மேங்கோ டாலி என்ற குஜால் ஃபிகரும் முருகனை பிராக்கெட் போட முயற்சிக்கிறாள். ரைஸ் பிளேட் ரெட்டியிடம் வித்தியாசமான அடியாட்கள் உண்டு. கன்பவுடர் என்பவன் முருகனை மாதிரியே இன்னொரு முரட்டு கவ்பாய். ரவுடி, எம்.பி.ஏ, என்ற நவீன அடியாளும் ரைஸ்பிளேட் ரெட்டிக்காக உழைக்கிறான்.
முதல் பத்தியை படித்ததுமே குயிக்கன் முருகன் ரொம்ப சுவாரஸ்யமானவன் என்று நீங்கள் நினைத்துவிடலாம். சுவாரஸ்யமான் தீம் கிடைத்தும் ரொம்ப மொக்கையான பிரசண்டேஷனை தான் இயக்குனர் சஷாங்காகோஸால் தரமுடிந்திருக்கிறது. உடைகள், செட்டிங், கிராபிக்ஸ் எல்லாமே உலகத்தரம் என்று ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் தொழில்நுட்பத்தில் காட்டிய கவனத்தை உள்ளடக்கத்தில் காட்டத் தவறியதால் குயிக்கன் முருகன் அந்தோ பரிதாபமாகி விட்டிருக்கிறார்.
ஷாருக்கின் ஓம் சாந்தி ஓம் பார்த்திருப்பீர்கள். ஒரு போலி படப்பிடிப்புக் காட்சியில் நம்ம ரஜினிகாந்தை நக்கலடித்து கவ்பாயாக தூள் கிளப்பியிருப்பார் ஷாருக். அக்காட்சி குயிக்கன் இயக்குனருக்கு ஒரு முழுநீளப்படத்தை உருவாக்க இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம். நன்கு கவனிக்கவும். ஓம் சாந்தி ஓமில் பரோடி செய்யப்பட்டது நம்ம சவுத் இண்டியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். குயிக்கன்னிலோ க்ளிண்டன் ஈஸ்ட்வுட்டை பரோடி செய்ய முயன்றிருக்கிறார்கள். நம்ம ஊரு ஆட்கள் லட்சத்தில் ஒருவர் கூட ஈஸ்ட்வுட் படங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள். இதனாலேயே நம்ம படம் என்ற நேட்டிவிட்டி மிஸ்ஸிங் ஆகிறது. லுங்கி கட்டிக்கொண்டு தப்பாங்கூத்துதான் ஆடவேண்டும். பரதநாட்டியம் ஆடினால், செல்லாது.. செல்லாது..
டாக்டர் ராஜேந்திரபிரசாத் மிகச்சிறந்த நடிகர். காமெடி அனாவசியமாக முகபாவங்களில் எப்போதுமே தொக்கி நிற்கிறது. நடையும், உடையும், நடிப்பும் அபாரம். நீண்டநாள் கழித்து ரம்பா. அறிமுகப்பாடலில் இன்னமும் அவரது தொடை, பதிமூன்று ஆண்டுகள் கழித்தும் அதே பழைய வனப்போடு, கட்டுக்குலையாமல் இருப்பதை உணர்ந்து தமிழர்கள் உவகை அடைகிறார்கள். இரண்டு மூன்று காட்சிகளில் வெளிப்படும் அவரது திறந்த முதுகு பரந்த புல்வெளி மாதிரி மனசுக்கு மகிழ்ச்சி தருகிறது. பார்பீ பொம்மை மாதிரி அழகோ அழகாக இருக்கிறார் ரம்பா. ரைஸ்ப்ளேட் ரெட்டி நாசர் கெட்டப்புகளில் அசத்துகிறார். அவரே டப்பிங் கொடுக்காதது பெரிய மைனஸ் பாயிண்ட். கன்பவுடர் சண்முகராஜனுக்கு இன்னும் சில காட்சிகள் எக்ஸ்ட்ராவாக கொடுத்திருக்கலாம்.
படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பரோ சூப்பர். படமாக்கிய விதமும் அட்டகாசம். எல்லாமே இருந்தும் நல்ல கதையோ, திரைக்கதையோ அமையாததால், படக்குழுவினரின் உழைப்பு பீருக்கு தண்ணீர் மிக்ஸ் பண்ணி ஊற்றியது மாதிரி ஆகிவிடுகிறது. இந்த கேரக்டர்களை சிம்புதேவனிடம் தந்திருந்தால் அடி பின்னியிருப்பார். அடுத்து அவர் இயக்கும் ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ கவ்பாய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.
இப்படம் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் படவிழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறதாம். ஒருவேளை ஆங்கிலத்தில் பார்த்தால் பக்காவாக இருக்குமோ என்னவோ. தமிழ் டப்பிங் படுமோசம். இந்தி விளம்பரப் படங்களை தமிழில் டப்புவார்களே அதுபோல த்ராபையாக வந்திருக்கிறது. வழக்கமாக ஆங்கிலப்படங்களை டப்படிக்கும் நம் ஆட்களிடமே கொடுத்திருந்தால் தூள் கிளப்பியிருப்பார்கள்.
குயிக்கன் முருகன் - சிக்கன் க்ரேவியோடு தரப்பட வேண்டிய தலப்பாக்கட்டு பிரியாணிக்குப் பதிலாக தயிர்சாதமும், வடுமாங்காயும் பரிமாறியிருக்கிறார்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுமாதிரி மொக்கைப் படங்களுக்கெல்லாம் மெனக்கெட்டு விமர்சனம் செய்து உங்கள் நேரத்தையும் இமேஜையும் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் அன்பான அட்வைஸ்!
பதிலளிநீக்குமிகவும் ஆவலுடன் இருந்தேன்:( இருந்தும் பார்க்கனும்!
பதிலளிநீக்குclint Eastwood's The Good, The Bad & The Ugly யை உடான்ஸ் விட்டு ஜெய்சங்கரின் ஒரு படம் பிளாக் & ஒயிட்டில் வந்தது. விஜய் டிவில மதியத்துல போட்டிருக்காங்க. நல்லாத்தான் இருக்கும் ;)
பதிலளிநீக்குஆனாலும் குயிக் கன் முருகன் ஏமாத்திட்டார்னு சொல்றப்போ நம்பமுடியலை. ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன்.
I think you mean CLINT EASTWOOD.
பதிலளிநீக்குரம்பாவுக்காக ஒரு பத்தி ஒதுக்கியதற்கு அனைத்துலக ரம்பா ரசிகர்கள் சார்பாக நன்றி.
பதிலளிநீக்குசார் ரம்பா சார்.
பதிலளிநீக்குஇதுமாதிரி மொக்கைப் படங்களுக்கெல்லாம் மெனக்கெட்டு விமர்சனம் செய்து உங்கள் நேரத்தையும் இமேஜையும் குறைத்துக் கொள்ள வேண்டாம் என்பது என் அன்பான அட்வைஸ்!
பதிலளிநீக்குசம்ம காமேடி
எப்படியிருந்தாலும் பார்த்தே தீர வேண்டிய சித்திரம்..,
பதிலளிநீக்குஅடடா...படம் பாக்கலாம்னு இருந்தேன்...
பதிலளிநீக்குநம்ம ஊர் ஹீரோக்களை என்ன கிண்டல் பண்ணி இருக்காங்க..தமிழ் சம்பந்தமா ஏதாச்சும் வருதான்னு கொஞ்சம் சொல்லி இருக்கலாம்..
வுடுங்க பாஸூ....
பதிலளிநீக்குஇப்போ வர்ர டமில் படத்தைவிடவா மோசமாயிருக்க போகுது.
ஒரு ஆல்டர்நேட் வேண்டாமா..
நம்ம ஹீரோஸ்லாம் இப்போ 10,20அடியாட்கள்ல இருந்து 100,200 ரேஞ்சுக்கு தமாஸ் பண்ணிட்டிருக்கப்போ
இது தமாஷுதான்னு தெரிஞ்சு ரசிக்கலாம்.தப்பேயில்ல.
ஆனா விளம்பர பிட் ரேஞ்சுக்கு ரசிச்சத முழு நீள படமா சகிக்க முடியுமான்னு தோணலை.
அதென்னமோ உங்க விமர்சனத்தை தொடர்ந்து அதிஷா எதாவது எழுதுவாரான்னு பார்க்க தோனுறது எனக்கு மட்டுமான்னு தெரியல.
Rambha foto illeya?
பதிலளிநீக்கு//பரோடி//
பதிலளிநீக்குஅப்படின்னா இன்னாங்க? parodoyன்ன்னு சொல்ல நினச்சு உளறிட்டீங்களா?
spoof படத்துக்கு எல்லாம் கதை கிடையாது. காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கனும். hotshots, naked gun மாதிரி. தமிழ்ல இம்மாதிரியாக ’சரஸ்வதியின் சபதம்’னு ஒரு டிராமா வந்தது. சத்யராஜின் மகாநடிகன், இங்க்லீஷ்காரனில் கொஞ்சம் செய்திருப்பார்கள். QGM முழுவதும் ’பாரடாய்’க்காக மட்டும் செய்தது. விஜய் படம் பார்ப்பது போல லாஜிக்கை கழட்டி வைத்துவிட்டு சிரித்துவிட்டு வரனும்.
//இந்தி விளம்பரப் படங்களை தமிழில் டப்புவார்களே அதுபோல த்ராபையாக வந்திருக்கிறது. வழக்கமாக ஆங்கிலப்படங்களை டப்படிக்கும் நம் ஆட்களிடமே கொடுத்திருந்தால் தூள் கிளப்பியிருப்பார்கள்.//
பதிலளிநீக்கு"டப்புவார்களே" "டப்படிக்கும்" வார்த்தை பிரயோகங்கள் பயங்கர கிண்டலடித்தாலும், மிக எளிதாக விளங்க கூடியவைகள். நான் நம்புகிறேன் விரைவில் இந்த பிரயோகங்கள் பழக்கத்திற்கு வந்துவிடும் பாருங்கள்!
//சார் ரம்பா சார்.//
பதிலளிநீக்குபிரக்காஷ்
ரம்பா உடம்பு அப்படியே இருக்குதாமே. எப்டி எப்டி எப்டி
அந்த படம் எங்க. வலையுலக கர்ணன் லக்கிலும் அந்த படத்தை வெளியிடுவாராக
//ஷாருக்கின் ஓம் சாந்தி ஓம் பார்த்திருப்பீர்கள். ஒரு போலி படப்பிடிப்புக் காட்சியில் நம்ம ரஜினிகாந்தை நக்கலடித்து கவ்பாயாக தூள் கிளப்பியிருப்பார் ஷாருக். அக்காட்சி குயிக்கன் இயக்குனருக்கு ஒரு முழுநீளப்படத்தை உருவாக்க இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம்.//
பதிலளிநீக்குQGM was the character created for a series of Channel [V] commercials in 1994. You can still find some of the old clips on YouTube. I guess what worked in short comedy sketches didn't in the feature length.
// நீண்டநாள் கழித்து ரம்பா. அறிமுகப்பாடலில் இன்னமும் அவரது தொடை, பதிமூன்று ஆண்டுகள் கழித்தும் அதே பழைய வனப்போடு, கட்டுக்குலையாமல் இருப்பதை உணர்ந்து தமிழர்கள் உவகை அடைகிறார்கள். இரண்டு மூன்று காட்சிகளில் வெளிப்படும் அவரது திறந்த முதுகு பரந்த புல்வெளி மாதிரி மனசுக்கு மகிழ்ச்சி தருகிறது. பார்பீ பொம்மை மாதிரி அழகோ அழகாக இருக்கிறார் ரம்பா. //
பதிலளிநீக்குஇதுக்கப்பறம் படிக்கவந்தது QGM பத்திங்கறதே மறந்துபோச்சுங்கப்பு!
(சினேகா) ராகவேந்திராவையே பீட்டடிக்கும் அளவுக்கான அபார வர்ணனை! :)
நன்றிங்க்ண்ணா.....
பதிலளிநீக்குமதுரையில் 4 வது புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் சார்பாக நடைபெறுகிறது.மொத்தம் 227 அரங்கங்களும்,1 கோடி புத்தகங்களும் உள்ளது.செப்டம்பர் 9 ம் தேடி வரை நடைபெறுகிறது.
பதிலளிநீக்குசென்ற ஞாயிறு அன்று சாரு,ராமகிருஷ்ணன்,மனுஷ்யபுத்திரன்,ரமேஷ் பிரபா போன்ற தலைகள் தென்பட்டது.
மதுரை, மதுரையை சுற்றியுள்ளவர்கள் அவசியம் போகவும்.
//கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com
பதிலளிநீக்கு//
படம் பாத்தா GH க்கு டிக்கட் தருவாங்க.
இதெல்லாம் டூப்பு .