22 ஆகஸ்ட், 2009

நொந்தசாமி!

நொந்தசாமியின் ஒருநாள் நிகழ்வு :

காலை

7.30 : லேட்டாக எழுந்ததற்காக பொண்டாட்டியிடம் திட்டு. பெட் காஃபி கட்டு.

7.45 : காலை நாளிதழ் தினப்பலன் ராசியில் ‘வாயையும், சகல வஸ்துகளையும் மூடிக்கொண்டு சும்மா இருக்கவும். இன்று சந்திராஷ்டமம்’

8.00 : குளிக்கும்போது, குறிப்பாக முகத்துக்கு சோப்பு போடும்போது குழாயில் தண்ணீர் நின்றுவிட்டது. மோட்டார் ஸ்விட்சைப் போட்டால் ஆற்காட்டார் புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.

8.59 : ஆபிஸுக்கு கிளம்ப ஒரு நிமிடம் பாக்கி இருக்கும் நிலையில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச, இஸ்திரி செய்து போடப்பட்ட புது வெள்ளைச் சட்டையில் பாப்பா ஆய். கசங்கிப்போன பழைய சட்டை ஒன்றை எமர்ஜென்ஸிக்கு எடுத்து மாட்டிக் கொள்ளுதல்.

9.25 : இடம் : சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே. இரண்டு காலையும் தரையில் தேய்த்துக்கொண்டே வேகமாக வந்த, முகம் முழுக்க தாலிபான் மாதிரி முகமூடி போட்ட ஸ்கூட்டி பாப்பா அடுத்த இரண்டு நொடியில் இடிப்பதற்காக, வருமுன் காப்போம் திட்டம் மாதிரி ”சாரி.. சாரி.. சார்ரீ...” என்று கேட்டுக்கொண்டே வந்து இடிக்கிறாள். மூட்டு எலும்பு ஒரு நொடி இடம்மாறி, மறுநொடி இயல்பானது. ஜீன்ஸ் பேண்ட் முழுக்க டயரின் மண்கறை.

9.45 : பொட்டிக்கடையில் தம்மை தலைகீழாக பற்றவைத்ததால் நான்கு ரூபாய் ஐம்பது பைசா நஷ்டம்.

10.30 : எல்டாம்ஸ் ரோடில் மொக்கைச்சாமி ஒருவருடன் சந்திப்பு. ஒன்றரை மணி நேர ஆக்‌ஷா ப்ளேடு. கழுத்தறுப்பட்டு கதற கதற, இரத்தம் சொட்ட வெளியே வந்தால், பிளாட்பாரத்தில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த வண்டியை கடமையில் கண்ணும், கருத்துமாக இருக்கும் தமிழ்நாடு போக்குவரத்து போலிஸார் ஆட்டையைப் போட்டுவிட்டார்கள்.


பிற்பகல்

01.30 : இடம் - தேனாம்பேட்டை ஈ-3 ஸ்டேஷன்.

“சார் அங்கே நோ பார்க்கிங் போர்டு இருக்கான்னே தெரியலை. அதுவுமில்லாமே பிளாட்பார்ம்லே ஏத்திதான் வண்டியை நிறுத்தியிருந்தேன்”

“வண்டியை லெப்ட்டுலே விடக்கூடாதுன்னு ஏசி மூணு நாளா அந்த ஏரியாவில் மைக்லே கத்திக்கிட்டிருக்கார். நீங்க ஏன் சார் லெப்ட்லே பார்க் பண்ணீங்க”

“நாங்க ப்ரெஸ்ஸூ சார்”

“பிரிண்டிங் ப்ரெஸ்ஸா? எதுவா இருந்தாலும் வண்டியை கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்காங்க. பசங்களுக்கு மட்டுமாவது ஏதாவது கொடுத்துட்டு போங்க”

ரூபாய் நூற்றி ஐம்பது எள்ளு.

3.00 : ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்து விட்டதால் சிக்கன் பிரியாணி. லெக் பீஸை கடித்ததுமே தெரிந்துவிட்டது. சமையல்காரருக்கு கண் தெரியாது போலிருக்கிறது. கோழிக்குப் பதிலாக காக்காயை கொடுத்து கறிக்கடைக்காரன் ஏமாற்றி விட்டிருக்கான். தொட்டுக்க வைத்த கத்தரிக்காய் கொட்சு, டோங்குரா சட்னிக்கு இணையான காரம். கண்களில் கண்ணீர் தளும்ப பசியாறுதல்.

4.30 : ‘டோ’ பண்ணிக்கொண்டு வந்த டிராபிக் பசங்க வண்டியில் ஏற்ற வாகாக ஹேண்டில்பாரை அசைத்து அசைத்தே மென்மையாக சைட் லாக்கை உடைத்திருக்கிறார்கள். சிடி டான் சைட் லாக் செட் ரூபாய் தொண்ணூறு. ஃபிட் செய்ய தனியாக ரூபாய் பதினைந்து.


மாலை

6.00 : பார்க்கிங்கில் “கசுமாலங்க ஆளாளுக்கு அறிவில்லாம சைட் ஸ்டேண்ட் போட்டுட்டு போயிடறானுங்க. செண்டர் ஸ்டேண்ட் போடுறதுக்கு கூட ........... நோவுது” - சாடைப்பேச்சு தாங்காமல் மரியாதையாகப் போய் செண்டர் ஸ்டேண்ட் போடுதல்.

6.30 : மூன்றேகால் மணிநேர முழுநீளக் காவியம் ‘கந்தசாமி’ திரையிடப்படுகிறது.

11.00 : டாஸ்மாக் குளோஸ்டு. ”எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி. பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வழி எப்படி?” நொந்தசாமி பாடிக்கொண்டே இல்லத்துக்கு திரும்புதல்.

16 கருத்துகள்:

  1. கந்தசாமி கலக்கல் விமர்சனம் :))

    /ஆளாளுக்கு அறிவில்லாம சைட் ஸ்டேண்ட் போட்டுட்டு போயிடறானுங்க. செண்டர் ஸ்டேண்ட் போடுறதுக்கு கூட ........... நோவுது” - சாடைப்பேச்சு தாங்காமல் மரியாதையாகப் போய் செண்டர் ஸ்டேண்ட் போடுதல்.//

    எல்லா ஊர்லயும் இதே திட்டுதானா :(

    பதிலளிநீக்கு
  2. காலைலேர்ந்து இவ்வளவு சிக்னலை கடவுள் காமிச்சும் விடாப்பிடியா போய் கந்தசாமில மாட்டிக்கிட்ட உங்களை என்னன்னு சொல்றது!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. எக்ஸ்கியுஸ் மீ மிஸ்டர் நொந்தசாமி , சரக்கு அடிக்கலாம் கம் வித் மீ. ஹாட்டோ பீரோ நீங்களே காசு கொடுத்திடுங்க மீ தி கிரேட் எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  4. we all expected this film will be a failure,. so there is no wonder in your post too.

    Kalaipuli thaanu's list continues, aalavandhaan, kandukonde kandukonden, kandasaamy...

    பதிலளிநீக்கு
  5. டெம்ப்ளேட் சிம்பிள் பட் அடோரபிள். (நாங்களும் இதையே வச்சிருந்தோம்ல)

    பாஸ்.... கந்தசாமி ஹைப் குடுக்கையிலேயே ஊத்திக்கும்னு தெரியும்.. இப்ப ஆதவன் வரும் பாருங்க.. சும்மாவா? என்ன எக்ஸ்பெக்டேஷன் தெரியுமா? ஹஸிலி ஃபிஸிலியே ராசாமணி!

    பதிலளிநீக்கு
  6. “பிரிண்டிங் ப்ரெஸ்ஸா? எதுவா இருந்தாலும் வண்டியை கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்காங்க. பசங்களுக்கு மட்டுமாவது ஏதாவது கொடுத்துட்டு போங்க”

    ரூபாய் நூற்றி ஐம்பது எள்ளு.

    கலக்கிட்டீங்க தல.

    பதிலளிநீக்கு
  7. //எக்ஸ்கியுஸ் மீ மிஸ்டர் நொந்தசாமி , சரக்கு அடிக்கலாம் கம் வித் மீ. ஹாட்டோ பீரோ நீங்களே காசு கொடுத்திடுங்க மீ தி கிரேட் எஸ்கேப்
    //
    படம் பார்த்த கொடுமை போதாதா. இதுல உனக்கு வேற அழனுமா

    பதிலளிநீக்கு
  8. கலக்கல் லக்கி, எங்க காசையும் நேரத்தையும் மிச்சமாக்கியதற்கு நன்றி.
    Template சிம்பிளா ஆனா நல்லா இருக்கு
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    bostonsriram.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. படம் மூணேகால் மணி நேரம்தானா? எனக்கு என்னோவோ ஒரு 5-6 மணிநேரம் ஒடுனமாதிரி இருந்துச்சி... யார் சொல்லியும் கேட்காம போய் பார்த்தேன் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...

    பதிலளிநீக்கு
  10. அதெல்லாம் சரி....பட விமர்சனம் எப்ப தல? இல்ல இந்த படத்துக்கு இது தான் விமர்சனம்னு முடிவெடுத்தாச்சா? :0))

    பதிலளிநீக்கு
  11. நொந்தசாமி என்பதை விட, கடுப்பில் வெந்தசாமி என்பதே சாலச் சிறந்த தலைப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். தங்களின் கருத்து என்னவோ?? :D

    பதிலளிநீக்கு
  12. //டோங்குரா சட்னிக்கு இணையான காரம்...
    //
    டோங்குரா இல்லை..... கோங்குரா சட்னி...

    பதிலளிநீக்கு
  13. //
    எல்டாம்ஸ் ரோடில் மொக்கைச்சாமி ஒருவருடன் சந்திப்பு. ஒன்றரை மணி நேர ஆக்‌ஷா ப்ளேடு.
    //

    அதெல்லாம் இல்லை. 1 மணி பத்து நிமிஷத்தில் விட்டுட்டோம்ல!

    பதிலளிநீக்கு