18 ஆகஸ்ட், 2009

என் இனிய மானிட்டரே!


என் இனிய மானிட்டரே..

நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட முதல் நிகழ்வை இப்போது நினைத்தாலும் மனம் குஜாலாக இருக்கிறது. ஒரு சனிக்கிழமை நைட்டு எட்டுமணிக்கு பாரெங்கும் பீரும், வாந்தியுமாக, அவனவன் அடித்த சரக்கில் நாறிக் கொண்டிருக்க.. டாஸ்மாக் கடைக்காரன் ஒரு குவார்ட்டர் பாட்டிலை உருவி ஒரு கட்டிங்கை மட்டும் காலி பாட்டிலில் ஊற்றி தந்தான். உனக்கு நினைவிருக்கிறதா..?

வாழ்க்கையில் என் சம்பாத்தியத்தில் நான் வாங்கிய முதல் கட்டிங் நீதான் என்ற வகையில் உன் மீது எனக்கு அதிகப் போதை உண்டு.

நல்லதொரு சைட் டிஷ்ஷுடன் தான் நீ வந்தாய். மிளகு அதிகமாக போடப்பட்ட பொடிமாஸ்.. மிக காட்டாக காரம் தூவப்பட்ட நெத்திலி.. தொட்டாலே விரல்கள் நாறும் சாதா கோல்டு ஃபில்டர் என்று உன் செட்டப்பே அன்று முதல் என் போதைக்கு ஊறுகாய் ஆனீர்கள்.

அன்று முதல் நீயும் நானும் ஜெயலலிதா, சசிகலாவாக உடன் பிறவா சகோதரிகளாக போதையும், வாந்தியுமாக ஜோதி தியேட்டருக்கு போனதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் காஜூ ஏறுகிறது..

என் கை நடுங்கியபோதெல்லாம் உன்னை ராவாக அடித்து ஸ்டெடி ஆன நாட்கள் எத்தனை? எத்தனை? எத்தனை ஆண்டுகள் உன்னை மிக்ஸ் செய்யாமலேயே அடித்திருப்பேன். அனைத்தையும் இப்போது நினைத்தால் நான் எடுத்த வாந்திகளே எவனோ எடுத்த வாந்தியாக தோன்றுகிறது.

அனாயசமாக ஒரே நாளில் நாலு காட்சியும் பிட்டு படங்களை ஜோதி, பானு, கெயிட்டி, எஸ்.கே. தியேட்டர்களில் பார்க்க 210 ரூபாய் செலவழிக்க வைத்தது மானங்கெட்ட மானிட்டரான நீ தான் என்பதை நான் மறுப்பதற்கில்லை.. வேளச்சேரி நூறு அடி ரோடு அம்மன் ஒயின்ஸ் பார் இன்றைக்கும் எனக்கும் போதைதரும் நினைவுகளாக இருக்கிறது.

காலை எழுந்தவுடன் பாத்ரூம் செல்லும் முன்பு, நேற்று அடித்து மிச்சம் வைத்த கட்டிங்கால் வாய்கொப்பளித்ததை ஒருநாளும் தவறவிட்டதில்லை. உனக்கே தெரியும்.

எனக்கு துன்ன சோறு இல்லையென்றாலும்கூட ஒரு நாள்கூட கட்டிங் அடிக்காமல் இருந்ததில்லை.. அம்மன் ஒயின்ஸில் மானிட்டர் ஸ்டாக் இல்லையென்றால் மனம் துடித்துப்போய் தி.நகர் நக்மா ஒயின்ஸுக்கு ஓடியிருக்கிறேன்.

வெறும் டபுள் எக்ஸ் பிட்டுகளையே பார்த்து காஞ்சி போயிருந்த என்னை குதூகலிக்க வைக்க அவ்வப்போது பல ‘த்ரிபிள் எக்ஸ்’களையும் சேர்த்தே நான் பார்த்துக்கொள்ள நீ தான் உதவினாய். யோசித்துப் பார்த்தாயா..? இதையெல்லாம் வெளியில் சொன்னால், எனக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது உனக்குத் தெரியுமா? இருந்தாலும் ‘வரவிருக்கும் புகழை’ நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை. என்னை மன்னித்துவிடு மானிட்டரே..

‘த்ரிபிள் எக்ஸ்’ ஒன்றா, இரண்டா? எதைச் சொல்வது..? இதோ பார் அந்த லிஸ்ட்டை..

மனிஷா கொய்ராலா என்ற பெயரில் எவனோ ஒரு கபோதி நூற்றி ஐம்பது ரூபாய் கறந்து ஒரு மொக்கை சிடி தந்ததை மறந்துவிட்டாயா?

ரிச்சா பலோட் ரியாலிட்டி ஷோ என்று கூறி ஒரு மொள்ளமாறி பத்தையாய் ஒரு நூறு ரூபாய் நோட்டை பிடுங்கி சென்றது கூடவா உனக்கு ஞாபகமில்லை?

லோக்கல் என்று கூறி ஒரு உராங் உடான் ஆப்பிரிக்காவின் கொடூர அனிமல் பிட்டு தந்தது உனக்கு நினைவில்லையா மானிட்டர் தம்பீ.. அந்தக் காலமெல்லாம் எங்கே போனது..?

இவை மட்டுமா? காண்டம் விட்டு காண்டம் வாங்குவது போல் பக்கத்து மாநிலமான கேரளாவில் போய் ‘சிட்டுக் குருவி லேகியங்களை’ சுட்டு வந்தேனே.. நினைவில்லை..

நாள் முழுவதும் குடித்து, குடித்து ஓடாய்த் தேய்ந்து போய் நானிருந்த வேளையில் குளிர் காற்றும், அதிக மழையும் எனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதனால் இரவில் உன்னை ராவாக மிளகு போட்டு அடித்து எனக்குப் பிடித்திருந்த சளியை விரட்டினேன். விடிந்த பின்பு மீண்டும் ஒரு பீர் அடித்து எனக்கு சளி பிடித்தது. மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி எனக்கு மூக்கே காணாமல் போனது. டாக்டர் செலவுக்காக அப்போது நான் ஆசை, ஆசையாக வாங்கி வைத்திருந்த மேட்டர் சிடிக்களை பிளாட்பாரத்தில் விரித்து மலிவுவிலைக்கு விற்றேனே..

இவ்வளவும் எதுக்காக? ஒரு கட்டிங் அடிக்கத்தான்.. “நான் ராவா ஃபுல் அடிச்சிடுவேனோன்னு பயமாயிருக்கு.. பீரை அப்படியே கல்ப்பா ஒரே கவுத்து கவுத்திடுவோனோன்னு பயமாயிருக்கு” என்று மணிரத்னம் பட டயலாக் போல நான் புலம்பி நிற்கவில்லை..

என் பலான வியாதிக்கு நான் மருந்தையும், மாத்திரைகளையும் வகை, வகையாக அருந்தினேன்.. ஒன்றா? இரண்டா? என்னைக் கழட்டிப் போட்டுவிட்டு கையில் பணம் கொடுத்தால்தான் ஆபரேஷன் என்று சொல்லி என்னை மிரட்டி நான் கட்டியிருந்த கோவணத்தையும் உருவிவிட்டானே அந்த ஜெயராஜ் தியேட்டருக்கு பக்கத்தில் இருந்த மருத்துவன்.. அந்தக் கண்றாவி காட்சியையும் பார்த்துவிட்டுத்தான் அந்த நிலையிலும் ஒரு கட்டிங் அடித்தேன்.. நானும் எனது வெட்கத்தை மறைத்து அதே கோலத்தில் ஒயின்ஷாப்புக்கு போயிருந்தேன். இதை எங்கே போய் சொல்வது?

நேற்றும் வழக்கமாக ஒயின்ஷாப்புக்கு வந்து ‘கட்டிங்’ அடித்துவிட்டு பொடிமாஸ் சாப்பிட்டேன். பொடிமாஸ் சாப்பிட்டதால் வாந்தி வராது என்று தைரியமாக இருந்தேன்.

நான் கட்டிங் அடித்த சில நிமிடத்தில் பார் முழுக்க ஒரு கெட்ட வாடை; கும்பியும், குடலும் கருகுவது போல்.. அக்கம் பக்கம் தேடினேன்.. டேபிளை முகர்ந்துப் பார்த்தேன் புரியவில்லை; தெரியவில்லை. குனிந்து எனக்கு பின்னால் பார்த்தேன். அரண்டு போய்விட்டேன்.. வாந்தி.. அலைஅலையாய் வாந்தி.. சுனாமி என்பார்களே அது போல என் வாய்க்குள் இருந்து வாந்தியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது எனக்கு தெரியாமலேயே. அடுத்தவன் எடுப்பதைப் பார்த்தாவுடன் நக்கலாக சிரிக்கும் அந்த வாந்தியை, இப்போது நானே எடுத்தவுடன் பயத்துடன் அலறிவிட்டேன்..

பதட்டத்தில், சிக்கனை கடிப்பதற்கு பதிலாக பக்கத்துச் சீட்டுக்காரனின் உதட்டை கடித்துவிட்டேன். ஈராக் மாதிரி அதகளப் பிரதேசமாயிற்றே நம்ம பாரு. பக்கத்து சீட்டுக்காரனின் உதட்டைக் கடித்ததுமே அவனவன் என்னைப் பார்த்து பயந்து வாயை (உதட்டை) மூடிக்கொண்டு ஓட ஆரம்பித்தான், மறக்காமல் அவனவன் பாட்டிலை எடுத்துக் கொண்டு.

சுண்டல் போட்டுக் கொண்டிருந்த முனியப்பன் ஓடிவந்து விசாரித்தான் என்ன ஆச்சியென்று. சொல்ல முடியவில்லை.. உதடு கடிபட்டவன் திரும்ப வர வேண்டும்.. அவனுடைய கிழிந்த உதடுக்கு எத்தனை தையல் போட்டார்கள் என்ற பதைப்பில் இருந்த எனக்கு 2 மணி நேரம் கழித்து ஓடோடி வந்த அவனைப் பார்த்து கதறியேவிட்டேன். அவனுக்கு வாய் இருந்த இடத்தில் உதடே இல்லை. அந்த பொறம்போக்கு அப்போதும் கட்டிங் அடிக்க வந்திருந்தான்.

இதுநாள்வரையில் அவ்வப்போது கட்டிங், கட்டிங்காக மட்டுமே அடித்துக் கொண்டிருந்த நான் இனிமேல் குவார்ட்டர், குவார்ட்டராக அடித்து போதை ஏற்றிக் கொள்வேன். இதற்காக உதடிழந்தவனின் தியாகத்தினை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.

ஷகீலா! இனி என் போதைக்கு நீயே ஊறுகாய்..!

போதையுடன்
காண்டு கஜேந்திரன்

18 கருத்துகள்:

  1. பெயரில்லா2:15 AM, ஆகஸ்ட் 19, 2009

    உங்க இம்சைக்கு ஒரு அளவே இல்லையா ? தினமும் ஏதாவது ஒரு கருமத்தை எழுதி தொலைக்கனுமா ?

    பதிலளிநீக்கு
  2. இது உண்மைத்தமிழனின் பதிவுக்கு எதிர் பதிவுதானே?

    பதிலளிநீக்கு
  3. மானிட்டரே..... ஓ.....ஓ.... மானங்கெட்ட மானிட்டரே...!

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு வேணும்முன்னா உண்மைதமிழனை ஆள் வைத்து அடியுங்கள். ஏன் பதிவு போட்டு தாக்குகிறீர்கள்

    பதிலளிநீக்கு
  5. // என் இனிய மானிட்டரே... //




    என்னது மானிட்டரு இனிக்குதா....?

    பதிலளிநீக்கு
  6. // டாஸ்மாக் கடைக்காரன் ஒரு குவார்ட்டர் பாட்டிலை உருவி ஒரு கட்டிங்கை மட்டும் காலி பாட்டிலில் ஊற்றி தந்தான். //





    அப்போ ... டாஸ்மாக் ஆரம்பிச்சதுக்கு அப்பறம்தான் நீங்க மானிட்டர மொதோ மொதோன்னு ..... சைட்டு அடுச்சுருக்கீங்க....!!!

    பதிலளிநீக்கு
  7. // உனக்கு நினைவிருக்கிறதா..? //





    அதுவே புல் சரக்குல இருக்குது.... அப்பறம் எங்க நெனவு இருக்கும்...???

    பதிலளிநீக்கு
  8. // வாழ்க்கையில் என் சம்பாத்தியத்தில் நான் வாங்கிய முதல் கட்டிங் நீதான் என்ற வகையில் உன் மீது எனக்கு அதிகப் போதை உண்டு. //






    அடங்கொன்னியா... கல்வெட்டுல செதுக்கவேண்டிய வாசகம்....!!

    பதிலளிநீக்கு
  9. // அன்று முதல் நீயும் நானும் ஜெயலலிதா, சசிகலாவாக உடன் பிறவா சகோதரிகளாக போதையும், வாந்தியுமாக //





    அப்போ ... மானிட்டரு...... ஆம்பளையா... பொம்பளையா....??

    பதிலளிநீக்கு
  10. // என் கை நடுங்கியபோதெல்லாம் உன்னை ராவாக அடித்து ஸ்டெடி ஆன நாட்கள் எத்தனை? எத்தனை? //






    மப்புல கணக்கு வெக்குலையோ.....??

    பதிலளிநீக்கு
  11. // எத்தனை ஆண்டுகள் உன்னை மிக்ஸ் செய்யாமலேயே அடித்திருப்பேன். //





    எதைய மிக்ஸ் பண்ணாம இத அடுச்சீங்க......? இல்ல...

    இதைய மிக்ஸ் பண்ணாம எதைய அடுச்சீங்க......??

    பதிலளிநீக்கு
  12. // அனைத்தையும் இப்போது நினைத்தால் நான் எடுத்த வாந்திகளே எவனோ எடுத்த வாந்தியாக தோன்றுகிறது. //





    மப்புல நாம செய்யறது எதுமே.... தப்பா தெரியாது.....!!!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் லவ்டேல் மேடி!

    பதிவின் ஒவ்வொரு வரிக்கும் உங்கள் கருத்துகளை தனித்தனி பின்னூட்டமாக இடவேண்டாம். அது பின்னூட்ட இண்டீஸன்ஸி ஆக கருதப்படும்.

    மொத்தமாக ஒரே பின்னூட்டமாக போட்டால் புண்ணியமாப் போகும்.

    அன்புடன்
    லக்கி

    பதிலளிநீக்கு
  14. // அனாயசமாக ஒரே நாளில் நாலு காட்சியும் பிட்டு படங்களை ஜோதி, பானு, கெயிட்டி, எஸ்.கே. தியேட்டர்களில் பார்க்க 210 ரூபாய் //





    பிட்டு படத்துக்காக இவ்வளவு செலவு பண்ணுணீங்களா....??? அவ்ளோ
    (கா)ல் ....... (ம)ண் கொடூரனா நீங்க......?

    பதிலளிநீக்கு
  15. // மானங்கெட்ட மானிட்டரான நீ தான் என்பதை நான் மறுப்பதற்கில்லை.. //




    ஹலோ .... திட்டரதெல்லாம் வெச்சுக்காதீங்க.....!!

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா4:05 PM, ஆகஸ்ட் 19, 2009

    Do you have experince with Perungalathur "Anurock" therater. In 'my experince' Rock show (we used to call) is the best xxx show i ever seen.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா4:05 PM, ஆகஸ்ட் 19, 2009

    Do you have experince with Perungalathur "Anurock" therater. In 'my experince' Rock show (we used to call) is the best xxx show i ever seen.

    பதிலளிநீக்கு