2 செப்டம்பர், 2009
ஸ்வீட் சிக்ஸ்டீன்!
சிக்ஸ்டீன் என்ற சொல்லே சிக்கென்று கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? கூடவே ஸ்வீட்டும் சேர்ந்தால் டூபீஸ் நமீதா மாதிரி கும்மென்று எஃபெக்ட்.
கிழக்கு டூரிங் டாக்கீஸில் இம்மாதம் திரையிடப்படும் படம் ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்!’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படம் அடல்ட்ஸ் ஒன்லியா என்று தெரியவில்லை. இப்படத்தில் மொத்தமாக முன்னூற்றி சொச்சம் முறை FUCK என்று உச்சரிக்கப்படுகிறதாம். ரசிகர்களின் ’எதிர்ப்பார்ப்பு’ முழுமையாக பூர்த்தியாகுமா என்பதை திரையிடுதலில் தான் தெரிந்துகொள்ள முடியும்.
இப்படம் பற்றிய விவரங்களை அறிய விக்கிப்பீடியா சுட்டிக்கு இங்கே அமுக்கவும்!
இம்மாதம் சிறப்புப் போனஸ் வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மாதாமாதம் உலகப்படத்தோடு ஒரு ஆவணப்படமும் திரையிடப்படுமாம். எழுத்தாளர் மெளனி குறித்த ஆவணப்படமும், ஸ்வீட் சிக்ஸ்டீனுக்குப் பிறகு திரையிடப்படும் என்று உரையாடல் அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு டூரிங் டாக்கிஸில் படம் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம். திரையிடுதலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பைத்தியக்காரன், பத்ரி ஆகியோரும் தரை டிக்கெட் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். எனவே தரையில் உட்கார்ந்தும் பார்க்கக்கூடிய வசதி கடந்த திரையிடுதலின் போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நாள் : 06-09-2009, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி
இடம் : கிழக்குப்பதிப்பகம் மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை.
அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சென்னையில் வசிக்கவில்லையே என பல விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. அதில் லேட்டஸ்ட் இந்தத் திரைப்பட விஷயம்.
பதிலளிநீக்குஐ மிஸ் இட் லைக் எனிதிங்....
:-(
சென்னையில் வசிக்கவில்லையே என பல விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. அதில் லேட்டஸ்ட் இந்தத் திரைப்பட விஷயம்.
பதிலளிநீக்குஉண்மைதான்.
எனக்கு ஒரு துண்டு போட்டு வைக்க முடியுமா ?
பதிலளிநீக்கு:)
//எனக்கு ஒரு துண்டு போட்டு வைக்க முடியுமா ?//
பதிலளிநீக்குதரை டிக்கெட்டு தான் ரிசர்வ் பண்ண முடியும். பரவாயில்லையா? :-)
//சென்னையில் வசிக்கவில்லையே என பல விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. அதில் லேட்டஸ்ட் இந்தத் திரைப்பட விஷயம்.
பதிலளிநீக்கு//
கோவையிலோ, திருப்பூரிலோ இதுபோல பதிவர்கள் முன்னெடுத்து முயற்சிக்கலாம் பரிசல்.
கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com
பதிலளிநீக்கு