17 செப்டம்பர், 2009

தென்கச்சி!


சில மாதங்களுக்கு முன்பாக பத்திரிகையாளரான தோழர் ஆரா என்னைத் தொடர்பு கொண்டார்.

“ஜூ.வி.யில் மடிப்பாக்கம் ரவுண்டப் பண்ணப் போறோம். அந்தப் பகுதியில் வசிக்கும் விஐபிங்க யாருன்னு சொல்லமுடியுமா?”

அனிச்சையாக சொன்னேன். “தென்கச்சி கோ.சாமிநாதன்”

”அவருகிட்டே ஏற்கனவே பேசிட்டோம் பாஸ். மொத்தமா எழுதியே கொடுத்துட்டாரு. கட்டுரையோட டைட்டில் என்ன தெரியுமா? மழைப்பாக்கம்!”

மடிப்பாக்கத்துக்கும், மழைக்கும் என்ன சம்பந்தமென்று சென்னை வாசிகளுக்கு தெரியும். ஆனாலும் ‘மழைப்பாக்கம்’ என்ற டைட்டிலை இதுவரை யாரும் சிந்தித்தது கூட இல்லை. இந்த டைமிங்-கம்-ஹ்யூமர் சென்ஸ் தான் தென்கச்சி.

’இன்று ஒரு தகவல்’ மூலம் பிரபலமானவர் என்று சொல்லுவது மடிப்பாக்கத்திலும் வெள்ளம் வந்தது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. வானொலியை தெரிந்த யாருக்குமே தென்கச்சியை தெரியாமல் இருக்கவே முடியாது. 70களின் இறுதியில் அவர் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தபோது நடத்திய ஒரு நிகழ்ச்சியே பிற்பாடு சென்னை தூர்தர்ஷனில் கொஞ்சம் மாற்றப்பட்டு ‘வயலும், வாழ்வும்’ என மலர்ந்தது என்பார்கள். கான்செப்ட்களில் செம ஸ்ட்ராங்க் நம்ம தென்கச்சி.

மடிப்பாக்கத்தில் ஒரு நூலகம் கூட இப்போது இல்லையே என்று வருந்திக் கொண்டிருந்தார். தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் “இவ்வளவு ஆயிரம் பேர் வசிக்கிற ஒரு ஊரிலே ஒரு லைப்ரரி கூட இல்லையே?” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்.

நூலக எழுச்சி ஆண்டாக இவ்வாண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மடிப்பாக்கத்தில் விரைவில் மாவட்டக் கிளை நூலகம் அமைக்கப்படப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நூல்களை வாசிக்க தென்கச்சிதான் இருக்க மாட்டார்.

மடிப்பாக்கம் மவுனமாக அழுதுக் கொண்டிருக்கிறது!

22 கருத்துகள்:

  1. ஈடு செய்ய முடியாத இழப்புகளின் வரிசையில் தென்கச்சியின் இழப்பும்...... :(

    பதிலளிநீக்கு
  2. " மடிப்பாக்கம் மவுனமாக அழுதுக் கொண்டிருக்கிறது!"

    அவரது கதை கேட்டு வளர்ந்தவள் நான் ...
    அருமையான படைப்பு... அவரது நினைவைபோலவே கனக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. கிருஷ்ணா,

    கதை சொல்லிகளில் என்னை மிகவும் கவர்ந்தவர். சிரிக்காமல் சொல்லை நம்மை நிறைய சிரிக்க, பின் சிந்திக்க வைத்துவிடுவார்.

    ஈடு செய்ய முடியாத இழப்பு.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  4. " மடிப்பாக்கம் மவுனமாக அழுதுக் கொண்டிருக்கிறது!"
    அவருடைய இழப்பு ஈடுசெய்யமுடியாதது..

    பதிலளிநீக்கு
  5. கதை மட்டுமல்ல. அவரது குரலும் தனித்துவம் வாய்ந்தது.

    பெரிய இழப்பு தான்.

    பதிலளிநீக்கு
  6. மடிப்பாக்கத்துடன் அவரின் கோடான கோடி ரசிகர்களும் அழுகின்றார்கள். இனியொரு தகவல் எங்கிருந்து கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. மெல்லிய குரலில் வல்லிய நகைச்சுவை தந்தவர்..unique personality!

    பதிலளிநீக்கு
  8. மடிப்பாக்கம் மவுனமாக அழுதுக் கொண்டிருக்கிறது!

    /\*/\

    மழைப்பாக்கம் கண்ணீர்ப்பாக்கம் ஆகிவிட்டது :-(

    உங்கள் வலைத்தளத்தில் இன்று பெரியார் பிறந்த தின சிறப்பு இடுகை எதிர்ப்பார்த்தேன் ஆனால் தென்கச்சியாரின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது

    பதிலளிநீக்கு
  9. ஆளப்பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் மாளப்பிறந்தவர்கள் தான் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார் தென்கச்சி!

    பதிலளிநீக்கு
  10. வானொலியிலும் பண்பலையிலும் மச்சி மாமா, யார டாவடிக்கிறீங்க... உங்க ஆளுக்கு கிஸ் குடுக்கும்போது என்ன நினைச்சீங்கன்னு.. தமிழையும், பண்பாட்டையும், நாகரீகத்தையும், பேச்சுத்தமிழையும் சமாதிகட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


    உண்மையில் வானொலியில் பேச்சுதமிழுக்கென புதிய அடையாளத்தை தந்தது தென்கச்சிதான்.

    உரைநடையில் ஆதித்தனார் சாதித்ததை பேச்சுத்தமிழில் தென்கச்சி சாதித்தார்.

    தென்கச்சி பேசி எவன் ஒருவனுக்கு புரியவில்லையோ.. அவனுக்கு யார்சொன்னாலும் புரிவதற்கான வாய்ப்பில்லை.

    வானொலியில் 'வீடும் வயலும் ' நிகழ்ச்சி உண்மையில் விவசாயி கேட்க ஆரம்பித்தது தென்கச்சி பேசஆரம்பித்தபோதுதான்.

    யுவகிருஷ்ணா உண்மையில் உங்களிடமிருந்து விரிவான பதிவை எதிர்பார்த்தேன்.

    இருந்தாலும் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி!!!

    - சென்னைத்தமிழன்.

    பதிலளிநீக்கு
  11. தகவல் தந்தவர் தகவல் ஆனார்...ஈழத்தமிழர்கள் பற்றிய அவரின் பதில் கண்கலங்க வைத்துவிட்டது...! அவர் ஆத்மா சாந்தியடையட்டும்..!!!

    பதிலளிநீக்கு
  12. இவர் போன்றோரை பாதுகாப்பது அரசின் கடமையாகவே இருக்கவேண்டும். தமிழினங்களின் அடையாளங்களாக நிற்பவர்களை அரசு எப்பாடுபட்டாவது காக்கவேண்டும்.

    அண்ணாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  13. Those who have listened to AIR can never forget his voice and his humorous stories. My condolences to his family.

    பதிலளிநீக்கு
  14. ஈடு செய்ய முடியாத இழப்பு.....

    பதிலளிநீக்கு
  15. தென்கச்சி கோ சுவாமிநாதன் மரணம்,தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு.பொதுவாக படிப்பவர்களை விட கேட்பவர்களே அதிகம்.அவருடைய இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது.நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்.

    -கார்த்திகேயன்

    பதிலளிநீக்கு
  16. // மடிப்பாக்கம் மவுனமாக அழுதுக் கொண்டிருக்கிறது!//

    அங்கு மட்டுமா.. இங்கேயும் ஏராளமான தென் கச்சியாரின் ரசிகர்கள் இருக்கிறோம்..
    சின்ன வயதில் சிரித்தது பின்னர் இப்போதுவரை ரசிப்பது.. அவருக்கு நிகர் அவரே..
    கதை சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதில் அவரிடம் இனி வெற்றிடமே..

    பதிலளிநீக்கு
  17. "Simple, but a Great Man" - These were the words about Thenkachi Ko Swaminathan when I conveyed with deep regret the news of his death to my 76-year old father. My father was associated with him when he was working in AIR Farm and Home division both at Tirunelveli and at Chennai.

    I recall the day 28 years back when a team from our school was at the studios of AIR Tirunelveli for a recording of the weekly children's program wherein for a 2-minute skit on Family Welfare the producers there required the voices of a few children to be recorded. I still wonder Thenkachiar's commitment and dedication by proper prior planning and self-rehearsal even for that small skit.

    Whenever I wrote a letter to him, he would instantly acknowledge and reciprocate with due regards to my father, elder to him.

    His "Indru oru thagaval" was a great hit in that all through the day we will enjoy his concluding humorous remark but at the same time he would have driven home the underlying message to the listeners. Sharing of knowledge leads to wisdom. He has done a great service to a lot of listeners. May his soul rest in peace.

    - Palai R Ashok
    rajashokraj@yahoo.com

    பதிலளிநீக்கு
  18. :(
    எனது இரங்கலும்.

    //’இன்று ஒரு தகவல்’ மூலம் பிரபலமானவர் என்று சொல்லுவது மடிப்பாக்கத்திலும் வெள்ளம் வந்தது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. //

    ஆனால் நான் சிறுவனாக, முதலில் வானொலி நிகழ்ச்சிகள் கேட்க ஆரம்பித்தபோது 'இன்று ஒரு தகவல்'தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  19. நூற்றுக்கணக்கான நீதிக் கதைகளை சொல்லிக் கொடுத்த ஐயாவுக்கு என் அஞ்சலிகள். மிகப் பெரும் இழப்பு. :(

    பதிலளிநீக்கு
  20. அதிர்ச்சி மாறா துயரத்துடன்,
    கட்டிலடங்கா கண்ணீருடன்,
    :(:(:(
    அன்பன்,
    அய்யனார்.

    பதிலளிநீக்கு