19 செப்டம்பர், 2009
உன்னைப்போல் ஒருவன்!
முழுமையாக வந்திருக்கும் முதல் தமிழ் படம்.
இத்தனைக்கும் தமிழில் வெற்றிப்படத்துக்குரிய கட்டாய அம்சங்களான ஹீரோயின், டூயட், குத்துப்பாட்டு, இத்யாதி.. இத்யாதி மசாலா சமாச்சாரங்கள் அறவே இல்லை. ’இருவர்’ படத்துக்குப் பிறகு மோகன்லால் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கிறார். டைட்டில் ரோல் கமலுக்குதான் என்றாலும் திரையின் பெரும்பாலான காட்சிகளை மோகன்லால் ஆக்கிரமித்துக் கொள்கிறார். மோகன்லாலின் பார்வையிலேயே படம் தொடங்குகிறது, முடிகிறது. ஆச்சரியகரமாக கமல் செகண்ட் ஹீரோவாக சொந்த தயாரிப்பில் நடித்திருக்கிறார். மோகன்லாலும், கமலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார் என்று சொன்னால், அது க்ளிஷேவாகி விடும். இருவருக்கும் ஒரே ஒரு கம்பைண்ட் ஷாட் மட்டுமே. கமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே நடிப்பின் நவரசங்களையும் கொட்டுகிறார். மோகன்லால் கம்பீரமான பாடி லேங்குவேஜ், கம்பீர நடை மூலம் அசத்துகிறார்.
கமல்ஹாசனின் கதாபாத்திரம் இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்துவனா என்பதை தெளிவாக சித்தரிக்காமல், படம் பார்க்கும் ரசிகனை யூகிக்க சொல்லுவது நல்ல புத்திசாலித்தனம். தாடி வைத்திருக்கிறார். வைணவர்களும் இதேபோல தாடி வளர்ப்பார்கள், இஸ்லாமியரும் தாடி வளர்ப்பார்கள். மதிய உணவுக்கு தயிர்ச்சாதம் சாப்பிடுவதைப் போல காட்டாமல், சாண்ட்விச் சாப்பிடுவதைப் போல காட்டியிருப்பது அருமையான குழப்பல். ஒரு பாங்கில் குமாஸ்தாவாகவோ, அரசு அலுவலகத்தில் அதிகாரியாகவோ கமலை உருவகப்படுத்திக் கொள்ள வைக்கும் இண்டலிஜெண்ட் காமன் மேன் பாத்திரத்துக்கு அச்சு அசலாக பொருந்துகிறது லேசான தொந்தியுடைய கமலின் தோற்றம்.
ஆங்கிலப்படங்களைப் போல ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் தமிழில் படமெடுக்கவே முடியாது என்ற நிலையை வெற்றிகரமாக தகர்த்திருக்கிறார்கள். இந்திப் படத்தின் ரீமேக் தானே என்று சொன்னாலும், இதைக்கூட தமிழில் கமல்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ‘ரோஜா’ ரஹ்மானுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளக் கூடிய அறிமுக இசையமைப்பாளர் என்று ஆடியோ வந்ததுமே பலர் பேசினார்கள், எழுதினார்கள், மெச்சினார்கள். இந்த கூற்று நூறு சதவிகிதம் உண்மை என்று படம் பார்த்தபின் நம்பமுடிகிறது. தந்தை வழியில் சகலகலாவல்லியாக பரிணமித்திருக்கும் ஸ்ருதிஹாசனை இருகை தட்டி வரவேற்கலாம்.
படத்தில் இடம்பெறும் கமிஷனர் ஆபிஸ் கலை இயக்குனரால் உருவாக்கப்பட்டதாம். அட்டகாசம். சுஜாதா + கிரேஸி = இரா.முருகன். தமிழுக்கு வெற்றிகரமான வசனகர்த்தா ரெடி. அடுத்து ஷங்கர் எப்படியும் கூப்பிடுவார். தயாராக இருங்க முருகன் சார். இரா.முருகனை கமலுக்கு அறிமுகப்படுத்தியது எல்லே ராமா, கிரேஸி மோகனா என்று ஒரு விவாதம் இட்லிவடையில் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் அறிமுகப்படுத்தியிருந்தாலும் எந்தரோமாகானுபவலுக்கு நமஸ்காரம்.
தலைமைச் செயலாளராக லஷ்மி. சுவாரஸ்யம். முதல்வர் வீட்டு வாசலில் வியர்த்து, விறுவிறுக்க காத்திருப்பதும், முதல்வரோடு தொலைபேசியில் பவ்யம் காட்டுவதும், அடுத்த நொடியே கமிஷனர் மோகன்லாலிடம் தனது அதிகாரத்தை செலுத்த நினைப்பதும் என்று சரவெடியாய் வெடித்திருக்கிறார். முதல்வரையும் ஒரு கதாபாத்திரமாக இணைத்திருப்பது புத்திசாலித்தனமான ஐடியா. “எல்லாத்தையும் நீங்களே ஹேண்டில் பண்ணுங்கம்மா!”, “எதிர்க்கட்சிக்காரன் அறிக்கை விட்டுடப் போறான்!” போன்ற வசனங்கள், முதல்வர் மீதான அப்பட்டமான அவதானிப்பு.
தமிழின் மிகச்சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெறும் இப்படத்திலும் ஒரு விஷயம் நெருஞ்சிமுள்ளாக குத்துகிறது. இது அப்பட்டமான இந்துத்துவா படம். வசனகர்த்தாவை வைத்து சமன் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆட்சியாளர், மோடியாக இருந்தாலும் சரி, கலைஞராக இருந்தாலும் சரி. மதக்கலவரங்களின் போது வேட்டையாடப்படுவது இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். தீவிரவாதம் என்றாலே இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்ட இந்து தீவிரவாதத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே கம்யூனிஸ்ட்கள் போன்ற சிறுபான்மையானவர்களாக மட்டுமே முன்னெடுக்கப் படுகிறது. கமல்ஹாசனும் பொதுப்புத்தி அடிப்படையில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வேரறுக்க ஷங்கரின் கதாநாயகர்கள் பாணியில் கிளம்பியிருக்கிறார். பெஸ்ட் பேக்கரி, குஜராத் கலவரம் என்று கமல் வசனம் பேசி, பேலன்ஸ் செய்ய முற்பட்டாலும், படம் பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் படம் முடியும்போது இஸ்லாமிய வெறுப்பு மண்டிவிடும் என்பது நிதர்சனம். நான்கு தீவிரவாதிகளில் ஒருவன் இந்து, அதுவும் பணத்துக்காகதான் தீவிரவாதிகளுக்கு உதவுகிறான் என்று சித்தரித்திருப்பது சுத்த அயோக்கியத்தனம். என்னவோ இந்துக்கள் மத அபிமான தீவிரவாதிகளாக இல்லாததைப் போல காட்டும் முயற்சி. கமல்ஹாசன் தீவிரவாதத்தை நிஜமாகவே எதிர்க்க கிளம்பினால், இந்தியாவில் வன்முறை வெறியாட்டத்துக்கு ஆணிவேராக விளங்கும் இந்து தீவிரவாதம் குறித்து முதலில் அலாரம் அடித்திருக்க வேண்டும்.
கமலின் திரையுலக வரலாற்றில் அவருக்கு ஏராளமான மைல்கற்கள் உண்டு. இப்படம் இன்னுமொரு மைல்கல்.
உன்னைப்போல் ஒருவன் - தமிழ் சினிமாவின் முதல்வன்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல விமர்சனம் லக்கி.
பதிலளிநீக்கு***
பதிலளிநீக்குகமலின் திரையுலக வரலாற்றில் அவருக்கு ஏராளமான மைல்கற்கள் உண்டு. இப்படம் இன்னுமொரு மைல்கல்.
***
ஆமன்.
***
பதிலளிநீக்குபடம் பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் படம் முடியும்போது இஸ்லாமிய வெறுப்பு மண்டிவிடும் என்பது நிதர்சனம்.
***
பலருக்கு ஆரிப் மாதிரி ஆகனும்ன்னு தோணுதாம்.
// “எதிர்க்கட்சிக்காரன் அறிக்கை விட்டுடப் போறான்!” போன்ற வசனங்கள், முதல்வர் மீதான அப்பட்டமான அவதானிப்பு. //
பதிலளிநீக்குலக்கி ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு டிவி இருக்கு என முதல்வர் சொல்லும் வசனமும் கலக்கல்.
அருமையான விமர்சனம் லக்கி. இந்துத்துவா ஒரு பக்கம் நெருடினாலும், எத்தனை நாளைக்குத் தான் இவர்கள் தீவிரவாதிகளாக ஆப்கான்காரனையும் பாகிஸ்தானையும் காட்டுவார்கள். பக்கத்து நாடான சீனாவின் இருப்புப் பிடியும் ஏனைய குட்டிநாடுகளின் மிரட்டல்களும் கூட ஒரு வகைத் தீவிரவாதம் தான் அதனைக் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.
கமல் எனக்குள் ஒருவனாக இருப்பதால் சிறிய பிழைகள் கூட மன்னிக்கப்பட்டுவிட்டன.
நல்ல விமர்சனம்.
பதிலளிநீக்குஇஸ்லாமிய தீவிரவாதம் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகமெங்கும் வியாபித்திருக்கும் ஒன்று. இந்து என்ன முஸ்லிம் என்ன, தவறு செய்தால் உடனே தண்டனை என வர வேண்டும்.
இந்துக்கள் சும்மாயிருக்கிறார்கள் என்பதற்காக, அவர்களை எப்போதும் விமர்சனத்திற்கு இழுப்பது முறையல்ல... சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும் கிருஷ்ணா!
மற்றபடி, நல்ல விமர்சனம்.
பிரபாகர்.
//இந்துக்கள் சும்மாயிருக்கிறார்கள் என்பதற்காக, அவர்களை எப்போதும் விமர்சனத்திற்கு இழுப்பது முறையல்ல... சினிமாவை சினிமாவாகத்தான் பார்க்க வேண்டும் கிருஷ்ணா!//
பதிலளிநீக்குஎது சும்மாயிருப்பது பிரபாகர்?
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பிறகு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதா?
தீவிரவாதத்தை தீவிரவாதம் என்றுதான் சொல்லவேண்டும் என்று நாங்களும் சொல்கிறோம். நீங்கள் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது நாங்கள் பதிலுக்கு ஏன் இந்து தீவிரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று எதிர்பார்க்கிறீர்கள்?
லக்கி,
பதிலளிநீக்குகுருதிப்ப்புணலில் இஸ்லாமிய தீவிரவாதியை காண்பிகவில்லையே
ஹே ராமை எடுத்து கமல்தானே
//குருதிப்ப்புணலில் இஸ்லாமிய தீவிரவாதியை காண்பிகவில்லையே
பதிலளிநீக்குஹே ராமை எடுத்து கமல்தானே
//
கேள்வியை தப்பாக, ஆள்மாற்றி கேட்கிறீர்கள்.
குருதிப்புனலும், ஹேராமும் எடுத்த கமல் ஏன் உன்னைப்போல் ஒருவன் எடுக்கவேண்டும் என்று அவரிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும்.
தமிழின் மிகச்சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெறும் இப்படத்திலும் ஒரு விஷயம் நெருஞ்சிமுள்ளாக குத்துகிறது. இது அப்பட்டமான இந்துத்துவா படம். வசனகர்த்தாவை வைத்து சமன் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆட்சியாளர், மோடியாக இருந்தாலும் சரி, கலைஞராக இருந்தாலும் சரி. மதக்கலவரங்களின் போது வேட்டையாடப்படுவது இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். தீவிரவாதம் என்றாலே இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதமாக மட்டுமே பார்க்கப்படுகிறது//
பதிலளிநீக்குஒரு ஃபேன்டஸி படத்திற்கு தவறான வண்ணங்களைப் பூச முயற்சிக்கவேண்டாம் தோழர். விக்னேஷ்வரனின் பதிலையும் அவசியமில்லாமல் திசை திருப்பியுள்ளீர்கள்.
//கேள்வியை தப்பாக, ஆள்மாற்றி கேட்கிறீர்கள்.
பதிலளிநீக்குகுருதிப்புனலும், ஹேராமும் எடுத்த கமல் ஏன் உன்னைப்போல் ஒருவன் எடுக்கவேண்டும் என்று அவரிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும்.//
யுவ கிருஷ்ணா ,
இந்துத்வா,நக்சலைட் அமைப்புகள் பற்றி எடுத்தது தப்பில்லை என்றால் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியை காண்பிப்பது eppadi குற்றமாகும்
இஸ்லாமிய தீவிரவாதத்தை விமர்சிக்கும் பொழுது அதை இஸ்லாமியரை விமர்சிப்பதை போன்று திரித்து கூறுவது தீவிரவாதத்தை எதிர்க்கும் கோடிகணக்கான அப்பாவி இஸ்லாமியரை அவமதிக்கும் செயலாகும்.
இந்துத்வா தீவிரவாதம்,நக்சலைட் தீவிரவாதம்,இஸ்லாமிய தீவிரவாதம் என்று அனைத்தையுமே தன படங்களில் எடுத்திருக்கிறார் கமல் ..
இன்னும் சொல்லபோனால் எப்பொழுதுமே கமல் இந்துத்வா அமைப்புகளின் மீதுதான் விமர்சனங்களை வீசியிருக்கிறார் .. அது உங்களுக்கே தெரியும்.
நல்ல தெளிவான அலசல் லக்கி.
பதிலளிநீக்குRead my review at http://kaluguppaarvai.blogspot.com/
லக்கி அண்ணே.. எவ்வளவு தான் முயன்றாலும் யுவ கிருஷ்ணாவை விட லக்கி தான் மனசில் நிற்கிறார்..
பதிலளிநீக்குவிமர்சனம் நுணுக்கம்.. சின்ன சின்ன விஷயங்களையும் அலசி இருக்கிறீர்கள்.
கடைசியாக உங்களை நெருடிய விஷயம் குறை தான்.. ஆனால் அதையும் இன்னொரு படத்தில் கமல் சொல்வார்..;)
//முதல்வரையும் ஒரு கதாபாத்திரமாக இணைத்திருப்பது புத்திசாலித்தனமான ஐடியா. “எல்லாத்தையும் நீங்களே ஹேண்டில் பண்ணுங்கம்மா!”, “எதிர்க்கட்சிக்காரன் அறிக்கை விட்டுடப் போறான்!” போன்ற வசனங்கள், முதல்வர் மீதான அப்பட்டமான அவதானிப்பு. //
லக்கியார் என்ன சொல்வார் என்று நினைத்தேன்.. :)
வசனகர்த்தா பற்றி சொன்னதுக்கு சபாஷ்..
//கமலின் திரையுலக வரலாற்றில் அவருக்கு ஏராளமான மைல்கற்கள் உண்டு. இப்படம் இன்னுமொரு மைல்கல்.//
totally agreed
ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி லட்சியம்
பதிலளிநீக்குமாநிலசுயாட்சி ??????
உங்களால்????
விமர்சனம் நன்றாக எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குவட சென்னை மஹாராணியில் படம்
பார்க்கும் போதே, இஸ்லாமியர்களுக்கு
எதிராக அவதூறான கோஷமிடப்பட்டது.
தீவிரவாதத்தில் இந்து,முஸ்லிம் பேதம்
கிடையாது. பொதுப் புத்தியில் இஸ்லாமிய தீவிரவாதமே உறைந்து போனதன் விளைவே இப்போக்கு.
ஹஸன் ராஜா.
//தீவிரவாதிகளில் ஒருவன் இந்து, அதுவும் பணத்துக்காகதான் தீவிரவாதிகளுக்கு உதவுகிறான் என்று சித்தரித்திருப்பது சுத்த அயோக்கியத்தனம்//
பதிலளிநீக்குலக்கி,
இதை அயோக்கியத்தனம் என்று சொல்லமுடியாது. இஸ்லாமிய தீவிரவாதிகள் மதக்கோட்பாடுகளால் உந்தப்படுகிறார்கள் என்றால் இந்துத்துவா தீவிரவாதிகள் பதவிவெறி மற்றும் அதன்மூலம் கிடைக்கும் பணத்திற்க்காகவும்தான்.
இந்துத்துவா தீவிரவாதி மோடி தனது பதவியை தக்க வைத்துக் கொண்டிருப்பது மதவெறியை மூலதனமாக வைத்துதானே. அத்வானி என்கிற தலைமை தீவிரவாதி பிரதமர் பதவியைப் பிடிக்கும் ஆசைக்கு இந்துத்துவா தீவிரவாதம்தானே முதலீடு. ஒரு இஸ்லாமிய தீவிரவாதி மதவெறியைத் தூண்டி ஆட்சியை பிடிக்க முயற்சித்ததாதக வரலாறு கிடையாதே!
கமல் சரியாகதான் சொல்லியிருக்கிறார். எல்லாம் நமது புரிதலில்தான் இருக்கிறது.
மற்றபடி விமர்சனம் அருமை. படத்தை பார்த்துவிட்டு மீதத்தை சொல்கிறேன்.
நல்ல பதிவு அல்லது விமர்சனம் நண்பரே.இனிதான் பார்க்க வேண்டும்.சினிமா ஒரு பக்கம் இருக்கட்டும்.சமீப காலமாக எந்த பதிவாக இருந்தாலும் அதனுடன் ஒரு நூலிழை அளவு இஸ்லாம் பற்றிய தகவல் இருந்தால் உடனே கிளம்பும் வாதங்கள் பக்கம் பக்கமாக நீளுகின்றன.உண்மையிலேயே இது ஆரோக்கியமானதுதானா என்பதில் எனக்கு குழப்பமும்,பயமும் இருக்கிறது.இதுபோல் வெறுப்பை உமிழும் வாசகர்களின் அருகிலேயே முஸ்லீம்களும் வசிக்கத்தானே செய்வார்கள்.அவர்களிடம் பழகுபவர்களுக்கு தெரியும் இந்த தீவிரவாதத்தால் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும்,இதை எந்த அளவு வெறுக்கிறார்கள் என்பதும்.ஒன்றிரண்டு அரைவேக்காட்டு முஸ்லீம்கள் உளறுவதையும் கேட்டிருக்கிறேன்."இப்படியும் ஏதும் நடக்கலேன்னா நம்மள சுத்தமா காலிபன்னிடுவானுங்க" இவர்கள் தங்கள் வார்த்தையின் வீர்யம் அல்லது அபாயம் உணராதவர்கள்.
பதிலளிநீக்குசிறுபான்மை தீவிரவாதம் பாதுகாப்பின்மை குறித்த பயத்தால் வருவது.
பெரும்பான்மை தீவிரவாதம் அடக்குமுறையை நிலைநாட்ட வரும் அகம்பாவத்தின் வெளிப்பாடு.ஆனால் நியாயமான தீவிரவாதம் என்று எதையும் கூறிவிட முடியாது.
உண்மை,உலகின் பெரும்பான்மை தீவிரவாதிகள் முஸ்லீம்கள்தான். அதே வேளையில்,அதிக அளவில் அடக்குமுறைக்கு ஆளாகியிருப்பதும் அவர்கள்தான்,நீதி மறுக்கப்பட்டிருப்பதும் அவர்களுக்குத்தான் என்பதை இந்த சகோதரர்கள் ஏன் உணர்வதில்லை?
அஸ்ஸாம்,நாகலாந்து,காஸ்மீர் அல்லது முந்தைய பஞ்சாப் ஆகட்டும்.யாரும் தீவிரவாதத்தை தங்கள் வாழ்வியலாக விரும்பி எற்றுகொண்டவர்களில்லை.உண்மையில் அது அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று.
கடைசியாக ஒரு வார்த்தை: தங்களின் பணவெறி,மற்றும் கவனக்குறைவு மூலம் அந்நிய தீவிரவாதிகளை இந்த மண்ணுக்குள் நுழையவிடும் எவனும் ஒரு தீவிரவாதிக்கு எள்ளளவும் குறைந்தவனல்ல.
//கமலின் திரையுலக வரலாற்றில் அவருக்கு ஏராளமான மைல்கற்கள் உண்டு. இப்படம் இன்னுமொரு மைல்கல்//
பதிலளிநீக்குஐயையே, கமலுக்கு இரா. முருகன் & மோகன் லால் புண்ணியத்தில் இந்தப் படமாவது ஓடும் என்று நினைத்தேன். இதுவும் ஊத்க்டல் தானா?
Xlent review lucky. Great. Thanx.
பதிலளிநீக்குஇரா.முருகனை கமலுக்கு அறிமுகப் படுத்தியது சுஜாதா அவர்கள்.
பதிலளிநீக்கு/*நான்கு தீவிரவாதிகளில் ஒருவன் இந்து, அதுவும் பணத்துக்காகதான் தீவிரவாதிகளுக்கு உதவுகிறான் என்று சித்தரித்திருப்பது சுத்த அயோக்கியத்தனம். என்னவோ இந்துக்கள் மத அபிமான தீவிரவாதிகளாக இல்லாததைப் போல காட்டும் முயற்சி. கமல்ஹாசன் தீவிரவாதத்தை நிஜமாகவே எதிர்க்க கிளம்பினால், இந்தியாவில் வன்முறை வெறியாட்டத்துக்கு ஆணிவேராக விளங்கும் இந்து தீவிரவாதம் குறித்து முதலில் அலாரம் அடித்திருக்க வேண்டும்.*/
பதிலளிநீக்குஉண்மையான வார்த்தைகள் லக்கி. அப்படியே வழிமொழிகிறேன்.
//ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி லட்சியம்
பதிலளிநீக்குமாநிலசுயாட்சி ??????
உங்களால்????//
தண்டோரா!
இதைப் பற்றியெல்லாம் யோக்கியர்கள் பேசலாம். நாம பேசலாமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு கமல் படத்தில் கமலையும் மீறி வேறொருவர் தெரிகிறார் (மோகன்லால்).
பதிலளிநீக்குமற்றபடி ஒரே ஒரு சந்தேகம்: இந்த படத்திற்கு பட்ஜெட் நாப்பது கோடியாம். அது எப்படி?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
//'இருவர்' படத்திற்கு பிறகு மோகன்லால் தமிழில் ஹீரோவாக நடித்து இருக்கிறார் //
பதிலளிநீக்குஇருவர் படத்திற்கு பிறகு மோகன்லால் தமிழில் ஹீரோவாக நடித்த படம் 'பாப்கார்ன்' நாசர் இயக்கியது.
நல்ல விமர்சனம் லக்கி!!!!
பதிலளிநீக்குதலீவா,
பதிலளிநீக்குபொக்கிஷம் மாதிரியே இந்தப் படமும் உங்க தலைவர் டிவிக்குக் கிடைக்கலன்னு உங்களுக்கு ரொம்ப ஆதங்கம் மாதிரித் தெரியுது?
இல்ல, ‘வெற்றியப் பாதிக்காதே?’னு தலைவர் கேட்கிற மாதிரி வசனம் வைத்ததால் வந்த கடுப்பா?
பிரபலமாகத் திகழ்வதற்கான உங்கள் முயற்சி வாழ்க!
Nice review
பதிலளிநீக்கு// 1:45 AM, September 20, 2009
பதிலளிநீக்குBlogger basheer said...
நல்ல பதிவு அல்லது விமர்சனம் நண்பரே.இனிதான் பார்க்க வேண்டும்.சினிமா ஒரு பக்கம் இருக்கட்டும்.சமீப காலமாக எந்த பதிவாக இருந்தாலும் அதனுடன் ஒரு நூலிழை அளவு இஸ்லாம் பற்றிய தகவல் இருந்தால் உடனே கிளம்பும் வாதங்கள் பக்கம் பக்கமாக நீளுகின்றன.உண்மையிலேயே இது ஆரோக்கியமானதுதானா என்பதில் எனக்கு குழப்பமும்,பயமும் இருக்கிறது.இதுபோல் வெறுப்பை உமிழும் வாசகர்களின் அருகிலேயே முஸ்லீம்களும் வசிக்கத்தானே செய்வார்கள்.அவர்களிடம் பழகுபவர்களுக்கு தெரியும் இந்த தீவிரவாதத்தால் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும்,இதை எந்த அளவு வெறுக்கிறார்கள் என்பதும்.ஒன்றிரண்டு அரைவேக்காட்டு முஸ்லீம்கள் உளறுவதையும் கேட்டிருக்கிறேன்//
மிக நல்ல சிந்தனை , என்ன பிரட்சனை எனில் மேலோங்கி ஒலிக்கும் குரல் உங்களை போன்ற நல்லவர்களின் குரல் அல்ல ,மதம் மண்டைக்கெறியவர்களின் குரலே ,
உங்கள் சமுதாயத்திலிருந்து எதிர்ப்பு குரல் பலமாக எழும்போதுதான் இந்த அவப்பெயர் நீங்கும் .
யோசியுங்கள் நண்பா , இந்துத்துவாவை எதிர்த்து எழும் முதல் முரல் ஒரு இந்துவினுடையதாகவே இருக்கிறது , ஆனால் இஸ்லாமின் பெயரால் எழும் தீவிரவாதத்திற்கெதிறான குரல் அதிகப்ட்சம் முஸ்லீம்களுடையதாக இருந்திருந்தால் அவப்பெயர் ஏன் ?
//கமல்ஹாசன் தீவிரவாதத்தை நிஜமாகவே எதிர்க்க கிளம்பினால், இந்தியாவில் வன்முறை வெறியாட்டத்துக்கு ஆணிவேராக விளங்கும் இந்து தீவிரவாதம் குறித்து முதலில் அலாரம் அடித்திருக்க வேண்டும்.//
பதிலளிநீக்குஇந்த அரைவேக்காடு பாராவை தவிர மற்றவை நல்ல விமர்சனம்.
Lucky, I am sure there are more than 3 islamic terrorits for each hindu terrorist. Kamal is trying to balance only.
பதிலளிநீக்கு1) Where are the Hindu & christian community in Indonesia?
2) Where are the Christian community in Pakistan, Iran and Iraq?
அருமையான விமர்சனம்..
பதிலளிநீக்குஆனால் வழக்கமான வலைப்பதிவர்களின் செக்யூலரிச்ட் விமர்சனமாகவும் ஆகிவிட்டது.
இத்தனைக்கும் இந்தியில் இல்லாத 'இந்து தீவிரவாதியை' கமல் கஷ்டப்பட்டு நுழைத்தும் கூட அவருக்கு அர்ச்சனை.
என்னதான் செய்வார் பாவம்!!
Lucky,
பதிலளிநீக்குYou have motivated us to see the picture.
Powerful review.
S.Ravi
Kuwait
அன்பு யுவா நீங்கள் இதன் மூலமான ஹிந்திப்படத்தை பார்த்தீர்களா என தெரியவில்லை. அதன் தழுவல் என்ற நிலையில் கமல் வேறு என்ன தான் செய்ய முடியும்.
பதிலளிநீக்குஇது ஒரு சினிமா என்ற எண்ணத்தில் நோக்கவேண்டுமே அன்றி வேறு சாயம் பூசுவது தவறு என்றே நினைக்கிறேன்.
ஹிந்திப்படம் இதைவிட மிகவும் விறுவிறுப்பாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
//அன்பு யுவா நீங்கள் இதன் மூலமான ஹிந்திப்படத்தை பார்த்தீர்களா என தெரியவில்லை. அதன் தழுவல் என்ற நிலையில் கமல் வேறு என்ன தான் செய்ய முடியும்.//
பதிலளிநீக்குஅன்பின் மஞ்சூர்!
ஏராளமான சிறந்த இந்திப்படங்கள் இருக்க கமல் ஏன் இதை மட்டும் தழுவ வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழவில்லையா? :-)
அன்பு கிருஷ்ணா
பதிலளிநீக்குமுன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தையும் கமல் தமிழில் எடுத்தார். அவருக்கு தமிழில் இந்த படத்தை எடுத்தால் நன்றாக இருக்கும் அல்லது வெற்றியடையும் என தோன்றியிருக்கும் அதனால் எடுத்திருப்பார். அதனால் இதில் நாம் காரணக்காரியங்களை ஆராய்ந்துக்கொண்டிருப்பது சரியான செயலா என்பதே என் கேள்வி.
அன்பின் மஞ்சூர் ராசா!
பதிலளிநீக்கு’வெற்றி பெறும்’ என்ற நினைப்பில் மட்டுமே எடுக்க கமல்ஹாசனா தேவை?
அதற்குதான் ரஜினிகாந்தும், விஜய்யும் இருக்கிறார்களே?
கமலுக்கு சமூக அக்கறை உண்டு என்று நம்புபவர்கள் அனைவருமே உ.போ.ஒருவன் படம் பார்த்து காண்டு ஆகியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இப்படம் தொழில்நுட்பரீதியாக சிறந்தபடம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் உள்ளடக்கரீதியாக விஷமத்தனம் நிறைந்தது என்பதையும் நாம் நேர்மையாக ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
மதச்சண்டைகள் மிகக்குறைவாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. நிச்சயமாக இதுபோல ஒரு படத்தை இங்கே அறிமுகம் செய்வது ஆபத்தானது. மக்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்பட வேண்டும்.
படத்தில் நீங்கள் சொல்வது போன்ற காட்சிகள் இருக்கிறது என்பது உண்மைதானென்றாலும் மூலப்படமான இந்தி படத்தில் அதே காட்சிகள்தான் இருந்தன என்பதால் அதை எவ்வாறு மாற்ற முடியும்.
பதிலளிநீக்குபிரச்சினை இந்த அளவுக்கு வெடிக்கும் என கமலே எதிர்ப்பார்த்திருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் படம் பார்ப்பவர்கள் மத்தியில் ஒரு சிலருக்காவது நீங்கள் சொல்வது போன்ற ஒரு மதரீதியான பாதிப்பு ஏற்படத்தான் செய்யும் என்பது வருந்தத்தக்க விசயம் தான்.
இதுவும் ஒரு சினிமா என்ற ரீதியில் சுலபமாக எடுத்துக்கொண்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை.
//படத்தில் நீங்கள் சொல்வது போன்ற காட்சிகள் இருக்கிறது என்பது உண்மைதானென்றாலும் மூலப்படமான இந்தி படத்தில் அதே காட்சிகள்தான் இருந்தன என்பதால் அதை எவ்வாறு மாற்ற முடியும்.
பதிலளிநீக்கு//
வெட்னஸ்டே திரைப்படம் வந்தபோது மும்பையின் மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்களே கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றன. இங்கே அதுபோன்ற நிலை இல்லாத சூழலில் நம்மைப் போன்ற ஆல்டர்நேட் மீடியாக்களாவது நம் எதிர்ப்பை பதிவு செய்து வைக்க வேண்டாமா?
இல்லையேல் எதிர்கால தலைமுறை நம்மை கண்டு சூடு சுரணை இல்லாதவர்கள் என்று பழிக்க மாட்டார்களா?
//இதுவும் ஒரு சினிமா என்ற ரீதியில் சுலபமாக எடுத்துக்கொண்டு போய்விட்டால் பிரச்சினை இல்லை.
//
இந்தப் படத்தை சிம்பு தயாரித்து நடித்திருந்தால் அப்படி எடுத்துக் கொண்டு போய்விடலாம்.
நாளையே பெரியார் திடலுக்கு வந்து, “நான் அக்ரஹாரத்தில் இருந்து திடலுக்கு தட்டுத் தடுமாறி தவழ்ந்து வந்த குழந்தை” என்று கமல்ஹாசன் பேசும்போது நமக்கெல்லாம் சுருக்கென்று நெஞ்சில் தைக்காதா?
ஐம்பதுவருடங்களாக திரைத்துறையில் இருக்கும் ஒரு முக்கிய நடிகரான அவரது படத்தை பார்ப்பதற்காக அனைத்து மட்டத்திலும் பலர் உள்ளனர் என்ற நிலையில் கமல் இந்த படத்தை எடுப்பதற்கு முன் கொஞ்சம யோசித்திருக்கவேண்டும் என்பது உண்மையே. இப்படத்தின் மூலம் பெரிய அளவில் ஏதேனும் பிரச்சினைகள் வராமல் இருந்தால் சரி.
பதிலளிநீக்கும்ம் பார்ப்போம்.
யுவகிருஷ்ணா 12:29 PM, ஸெப்டெம்பெர் 27, 2009
பதிலளிநீக்குஅன்பின் மஞ்சூர் ராசா!
’வெற்றி பெறும்’ என்ற நினைப்பில் மட்டுமே எடுக்க கமல்ஹாசனா தேவை?
அதற்குதான் ரஜினிகாந்தும், விஜய்யும் இருக்கிறார்களே?
கமலுக்கு சமூக அக்கறை உண்டு என்று நம்புபவர்கள் அனைவருமே உ.போ.ஒருவன் படம் பார்த்து காண்டு ஆகியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இப்படம் தொழில்நுட்பரீதியாக சிறந்தபடம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் உள்ளடக்கரீதியாக விஷமத்தனம் நிறைந்தது என்பதையும் நாம் நேர்மையாக ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.
மதச்சண்டைகள் மிகக்குறைவாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. நிச்சயமாக இதுபோல ஒரு படத்தை இங்கே அறிமுகம் செய்வது ஆபத்தானது. மக்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்பட வேண்டும்.
மஞ்சூர் ராசா 12:50 PM, ஸெப்டெம்பெர் 27, 2009
ஐம்பதுவருடங்களாக திரைத்துறையில் இருக்கும் ஒரு முக்கிய நடிகரான அவரது படத்தை பார்ப்பதற்காக அனைத்து மட்டத்திலும் பலர் உள்ளனர் என்ற நிலையில் கமல் இந்த படத்தை எடுப்பதற்கு முன் கொஞ்சம யோசித்திருக்கவேண்டும் என்பது உண்மையே. இப்படத்தின் மூலம் பெரிய அளவில் ஏதேனும் பிரச்சினைகள் வராமல் இருந்தால் சரி.
ம்ம் பார்ப்போம்
யப்பா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே நாராயணா
ரோஜா படத்த ரி மேக் பண்ணுங்கடா,இந்து குண்டு வெக்குறான்,பாகிஸ்தானுக்கு ஆதரவா இருக்கான்.
செப் 11 அமேரிக்கா இரட்டை கோபுரத்த தாக்கினது கத்தோலிக்க கிருஸ்துவர்கள்,காரணம் அமேரிக்கா புராட்டஸ்டன்ட் கிருஸ்துவ நாடு அதான்,
புத்தர்,இயேசு,காந்திக்கு அடுத்த வரிசைல அன்பை,அகிம்சையை,சமாதானத்தை பரப்ப வந்த மனித தெய்வம் ஒசாமா பின் லேடன்தான்.
உங்களைப் போல் ஒருவன் இருந்தால் தாங்காதுடா சாமீ
யோசியுங்கள் நண்பா , இந்துத்துவாவை எதிர்த்து எழும் முதல் முரல் ஒரு இந்துவினுடையதாகவே இருக்கிறது , ஆனால் இஸ்லாமின் பெயரால் எழும் தீவிரவாதத்திற்கெதிறான குரல் அதிகப்ட்சம் முஸ்லீம்களுடையதாக இருந்திருந்தால் அவப்பெயர் ஏன்
இது ஒரு நகல். அசல் இந்தியில்.
பதிலளிநீக்குநகல் எடுகிறவருக்கு வேலை கம்மி. அப்படியே எல்லாம் அசலில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஜெராக்ஸ் வேலை தான். அண்ணன் இந்தப் படத்தின் அசலை பற்றி சொல்லி விட்டு கொஞ்சம் மாற்றங்கள் செய்து எடுத்திருக்கிறார்.
நிறைய படத்தில் அண்ணன் அசலை பற்றி சொல்லாமல் அப்பப்போது நகலடித்திருக்கிறார்.
அசலில் உள்ள தப்புகல் பற்றி, அதன் விமசனங்களில் படித்து நகலை, அசலை விட சரியாக எடுத்திருப்பாரு. . அண்ணன் இதில பெரிய ஆளு.
பெரிய நடிகர்களின் படங்களுக்கு , இம்மாதிரியான நகல் வேலைகளுக்கும் சேர்த்து ஜல்லியடிப்பதற்கு நம் தமிழ் நாட்டில் வார்த்தை ஆயுதங்களோடு பெரிய கூட்டம் இருப்பதால், தமிழ் சினிமாவுக்கு சரியான விமரிசனங்கள் எங்கேயும் இல்லை.இங்கேயும் இல்லை.
ஒரு நல்ல அசலான திரைப்படத்தை இவர் எடுத்துக் காட்டட்டும். பிறகு இவரைத் தூக்கித் தலையில் வைத்துக் கொள்ளலாம்.
அண்ணாத்த,
பதிலளிநீக்குநானும் ஒரு இடுகை இட்டு இப்போ 'காமன் பிளாக்கர்' ஆகிட்டேன். :)
kamal’s next NEW film’s ( நம்மைப்போல் ஒருவன் )’s story is : – கமலின் அக்கா புருகாவில் இருப்பதால் பட்டப்பகலில் மும்பை மார்கெட்டில் ஹிந்துத்வா தீவிரவாதிகளால் வெட்டிக்கொள்ளபடுகிறார். நீதி கேட்டு போலீசில் புகார் செய்ய கமல் சென்றால் அவரையே தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள்.
பதிலளிநீக்குஹீரோவாயிர்றே கமல்! ஜெயிலில் இருந்து தப்பித்து தன பெற்றோருடன் சொந்த ஊரான கோவைக்கு குடி பெயர்ந்து புதிய வாழ்க்கையை துவங்குகிறார். அவர் தந்தை தான் மும்பையில் செய்த அதே துணிக்கடை தொழிலை துவங்குகிறார். சில வருடங்கள் கழித்து ஒரு கலவரத்தில் அவரின் துணிக்கடை ஹிந்துத்வா கலவரக்காரர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது. வீடு அவரின் அம்மாவுடன் சேர்த்து கொளுத்தப்படுகிறது. கமலின் அப்பா கடுங்கோபத்துடன் காவல் நிலையம் சென்று மீண்டும் மீண்டும் முறையிட, அவரை ஒரு குண்டு வெடிப்புக்கு காரணம் என்று சொல்லி போலிஸ் தடாவில் உள்ளே போட்டு விடுகிறது. தினமலரில் கமலின் முகம் பயங்கரவாதி என வருகிறது.
கமல் இம்முறை அஹ்மதாபாத்திற்கு தப்பி செல்கிறார். அங்கு கவுசர் பானு என்ற புர்கா போட்ட முஸ்லிம் பெண்ணை
சந்திக்கிறார். அவர் இவரை ஒருவாறு தேற்றி சகஜ வாழ்க்கைக்கு கொண்டு வருகிறார். திருமணமும் நடக்கிறது. ஒரு மிகப்பெரிய கலவரத்தில் அவர் க ரு வ ரு க் க ப் ப டு கி றா ர். இப்போது
கமல் எந்த கம்ப்லைண்டும் கொடுக்காமலேயே என்கௌன்டரில் போட்டுத்தள்ள குஜராத் போலிஸ் துரத்துகிறது.
எப்படியோ கமல் தப்பித்து டெல்லி செல்கிறார். பல வருடம் உச்ச நீதிமன்ற வாசலில் நீதி கிடைக்கும் என நம்பி நின்று நம் நாட்டின் போக்கையும் நீதியின் போக்கையும் பார்த்த கமல், தன் வாழ்க்கையும் இது போல பலர் வாழ்க்கையும் இருண்டு போனதற்கு காரணமான, அணைத்து அரசியல் தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் இலாகாக்களை ஒதுக்கிக்கொள்ளும் ஆர்வத்திலும், பிரதமரை தேர்வு செய்யும் குஷியிலும் ஒரே இடத்தில் ஒன்றாக குழுமி இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில், தாமரை மலர் பேனர் கட்டப்பட்ட ஒரு பெரிய அரங்கத்துக்கு சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு ரிமோட்டை அழுத்துகிறார். பேக்கிரவுண்டில் தீப்பிழாம்பாய் காட்சி தர காமன் மேன் தற்போது ஹீரோவாய் சுலோ மோஷனில் நடந்து வருகிறார்….. இப்போது மீண்டும் (கபிலனின்) முதல் பாராவை படிக்கவும்.
இது ஜஸ்ட் ஒரு படம்தானே என்று சென்சார் எந்த கட்டும் இன்றி வெளியிடுமா? அல்லது இந்த கதையில் கமல் தான் நடிப்பாரா?