30 செப்டம்பர், 2009

உளியின் ஓசை!


வேற என்னத்தைச் சொல்ல? :-(

* - * - * - * - * - * - * - *

இப்போது எல்லாம் திரைவிமர்சனம் செய்யவே பயமாக இருக்கிறது? உன் நண்பனை காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது மாதிரி, உனக்குப் பிடித்த நாலு படங்களின் லிஸ்டைக் கொடு என்று பின்னூட்டத்தில் மிரட்டுகிறார்கள். முன்பெல்லாம் விஜய் படங்களையோ, ரஜினி படங்களையோ கொஞ்சம் அப்படி இப்படி விமர்சித்தால் பின்னூட்டத்தில் ஆபாசமாக திட்டுவார்கள். இப்போது கமல் ரசிகர்களும் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆட்டையில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.

'திரு திரு.. துறு துறு'. லோ பட்ஜெட்டில் ஹை குவாலிட்டி. ஆட் ஏஜென்ஸிகளில் சீனியர் விஷுவலைஸராக சில காலம் குப்பை கொட்டிய அருகதையில் சொல்கிறேன். ஆட் ஏஜென்ஸி சூழலை அப்பட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் டைட்டிலுக்கே நாக்கை மடித்துக் கொண்டு விசிலடிக்கலாம். ஹீரோ அஜ்மல் தேமேவென்று இருக்கிறார். ஹீரோயினின் கண்கள் (மட்டும்) கொள்ளை அழகு. மற்ற சமாச்சாரங்கள் பெரியதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இது காமெடி படமா, சீரியஸ் படமாவென்று தெளிவில்லாமல் இயக்குனர் திருதிருவென்று முழித்திருப்பது புரிகிறது. அதே நேரத்தில் திரைக்கதை துறுதுறுவென்று ஓடுகிறது. சத்யம் சினிமாஸ் இன்னும் கொஞ்சம் தாராளமாய் செலவழித்து, கிரேஸி மோகனை இப்படத்துக்கு வசனம் எழுத வைத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

இரண்டேகால் மணிநேர எண்டெர்டெயின்மெண்டுக்கு இந்த படம் காரண்டி!

* - * - * - * - * - * - * - *

'மதுரை டூ தேனி, வழி : ஆண்டிப்பட்டி' என்ற வித்தியாசமான டைட்டிலோடு போனவாரத்துக்கு போனவாரம் ரிலீஸ் ஆகி, இந்த வாரம் ஒரு படம் மூட்டையை கட்டிவிட்டது. படத்தைப் பற்றி பெரியதாக சொல்வதற்கு எதுவுமில்லை. யதார்த்த படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் ரொம்ப முக்கியிருக்கிறார். அட்டகாசமான ஒன்லைனர் மோசமான திரைக்கதையால் பேவென்று இளிக்கிறது. ஹீரோயின் மட்டும் பக்கத்து வீட்டு ஃபிகர் மாதிரி பாந்தம்.

இந்தப் படத்தை பொறுத்தவரை பாராட்டப்பட வேண்டியவர்கள் இருவர். ஒருவர் கேமிராமேன். இவருக்கு ஒரு நல்ல படம் கிடைத்தால் சீக்கிரமே முன்னுக்கு வந்துவிடுவார். இன்னொருவர் பி.ஆர்.ஓ சக்திவேல். ஒரு மொக்கைப் படத்துக்கு கூட இந்தளவுக்கு மக்கள் தொடர்பு செய்யமுடியுமா என்பது ஆச்சரியம். அதுவும் உன்னைப் போல் ஒருவன் வெளியான வாரத்தில் இந்தப் படமும் வெளிவந்து சொல்லிக்கொள்ளத்தக்க வகையில் பேசப்பட்டது ஆச்சரியம்.

* - * - * - * - * - * - * - *

தமிழ் பதிவுகளை எல்லாம் அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. எப்போதாவது எட்டிப் பார்த்தாலும் அரைகுறைகள் அரசியல் பேசுவதை கண்டால் அஜீரணமாக இருக்கிறது. கவிஞர்கள் கவிதையை மட்டுமாவது உருப்படியாக எழுதி தொலைக்கலாம். அரசியல் எழுதுபவர்கள் நாராசமாய் கவிதை எழுத முற்படாமல் இருக்கலாம். இரண்டுமே கண்ணறாவியாக இருக்கிறது.

சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!

25 கருத்துகள்:

  1. //எப்போதாவது எட்டிப் பார்த்தாலும் அரைகுறைகள் அரசியல் பேசுவதை கண்டால் அஜீரணமாக இருக்கிறது//


    ஏனிந்த கொலவெறி.?

    பதிலளிநீக்கு
  2. சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள்.//

    அவர்களுக்கும் ஏதோ ஒரு ரேட்டிங்கில் ஏதோ ஒரு எண்ணிக்கை நிலைக்குள் வந்துவிடவேண்டுமென்ற கட்டாயம் ஏதும் இருக்கிறதோ என்னவோ.....

    பதிலளிநீக்கு
  3. சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!

    /\*/\

    எல்லாத்தையும் அவன் பாத்துக்கிட்டு தானே இருக்கான்

    பதிலளிநீக்கு
  4. // சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே! //
    சரியாக சொன்னீர்கள் இந்த பதிவு கூட அந்த ரகம் போல இருக்கு. திரைப்பட விமர்சங்களுக்கு நான் பின்னூட்டம் இடுவதுல்லை.

    பதிலளிநீக்கு
  5. வர..வர... உம் கொல வெறிக்கு அளவே இல்லாம போச்சு......!! :-):-)

    பதிலளிநீக்கு
  6. //ஒரு மொக்கைப் படத்துக்கு கூட இந்தளவுக்கு மக்கள் தொடர்பு செய்யமுடியுமா என்பது ஆச்சரியம்//
    கிருஷ்ணா,

    நிறைய நொந்து போயிருக்கிறீர்கள் போலிருக்கிறது? தமிழை நினையுங்கள். யாவும் 'சூரியனை' கண்ட பனிபோல் விலகிவிடும்...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  7. /இது காமெடி படமா, சீரியஸ் படமாவென்று தெளிவில்லாமல் இயக்குனர் திருதிருவென்று முழித்திருப்பது புரிகிறது. அதே நேரத்தில் திரைக்கதை துறுதுறுவென்று ஓடுகிறது. சத்யம் சினிமாஸ் இன்னும் கொஞ்சம் தாராளமாய் செலவழித்து, கிரேஸி மோகனை இப்படத்துக்கு வசனம் எழுத வைத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

    இரண்டேகால் மணிநேர எண்டெர்டெயின்மெண்டுக்கு இந்த படம் காரண்டி!
    //



    முதலில் இந்த வரிகள் உலியின் ஓசைக்காக என்று நினைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. sakthipages.com// this should also be labelled as 'ad'. isn't??

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் லக்கி... தினம் தினம் பதிவிடும் பதிவர்களின் பல பதிவுகள் யாருக்குமே சதக்காசு பெறாததாக இருக்கிறது... அதனால் அவர்களின் நல்ல பதிவுகளைக் கூட தவறவிடவேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன்...

    பிளாக்கரில கிழமைக்கு இத்தனை பதிவுதான் நீ இடலாம் எண்டு வரையறை கொண்டந்தாக்கூட பரவாயில்லை எண்டு மனம் யோசிக்குது.. :-))

    பதிலளிநீக்கு
  10. ஹூம் எவ்வளவு வேதனையோடு அந்த கார்ட்டூனப் போட்டிருக்கீங்கன்னு புரியுது.. :) கடைசிப் பாயிண்டு - நானும் அடிக்கடி நெனப்பேன்..

    பதிலளிநீக்கு
  11. //சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும்

    எங்களை மாதிரி வளரும் பதிவர்கள் (வளராத பதிவர்கள் இருக்காங்களான்னு கேட்கப்பிடாது) தாக்குவது மாதிரி இருக்கு. இது கடும் கண்டனத்திற்கு உரியது. எத்தனை ஆட்டோக்களுக்கு தாக்குப்பிடிப்பீர்கள் என்பதனை கூறவும். அதற்கு ஏற்றார் போல ஆட்டோக்கள் உங்கள் வீட்டுக்கு அனுப்பப்படும்.

    என்னங்க..உளியின் ஓசை விருது எல்லாம் படிச்சு, செரிச்சுக்கறாங்க..எங்க தொல்லைய தாங்க மாட்டாங்களா என்ன ? :)

    பதிலளிநீக்கு
  12. /இன்னொருவர் பி.ஆர்.ஓ சக்திவேல்.

    படம் சுமார் என அவரின் வலைத்தளத்தில் பின்னூட்டமிட்டேன். அது தணிக்கை செய்யப்பட்டுவிட்டது :)

    பதிலளிநீக்கு
  13. அவ்வளவு பிசியா தல.
    தமிழ் பதிவு பற்றி படிக்க முடியாத அளவு.

    ஆனா அரசியல் பற்றி கவிதை உண்மையிலேயா கொடுமையா இருக்குது. தாங்க முடியல. இதுக்கு சென்ஸார் தான் வேணும்

    பதிலளிநீக்கு
  14. லக்கிலுக் என்ற ஒருவர் ஆரம்ப காலத்தில் தினமும் 5 மொக்கையாவது போட்டிருந்தார் என்பதை அறியத் தருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. எனக்கு இம்சை அரசன்ல அடிக்கடி ரெண்டு வந்து, 'இதை செய்ததால் இன்றுமுதல் இப்படி அழைக்கப்படுவாய்'னு விருது கொடுப்பாங்களே, அவங்க ஞாபகம் வந்தது. :))

    பதிலளிநீக்கு
  16. கமல் ரசிகர்களும் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆட்டையில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.///

    லக்கி, நீங்களும் கமல் ரசிகர் தானே..??

    ===

    எதற்கும் டென்ஷன் வேண்டாம். தமிழ் இருக்க டென்ஷன் எதற்கு.??

    மொக்கை பதிவுகளை படிக்காமல் தமிழனுடன் அதிகம் நேரம் செலவிடவும்.

    அறிவுரை அல்ல. விண்ணப்பம். அனுபவம்.

    பதிலளிநீக்கு
  17. அய்யாமாரே!

    அனானியாக திட்டிவிட்டு, அடுத்த செகண்டே ஒரிஜினல் ஐடியில் வந்து ‘நல்ல’ கமெண்டு போடாதீர்கள். அனிச்சையாக ரெண்டையுமே ரிஜெக்ட் செய்துவிட்டேன் :-)

    பதிலளிநீக்கு
  18. //அனானியாக திட்டிவிட்டு, அடுத்த செகண்டே ஒரிஜினல் ஐடியில் வந்து ‘நல்ல’ கமெண்டு போடாதீர்கள். அனிச்சையாக ரெண்டையுமே ரிஜெக்ட் செய்துவிட்டேன் :-)
    //

    எப்படி கண்டிபிடிச்சீங்க. என்னால நம்பமுடியல. யார் அது.

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் சக்திவேல் சாரை வைத்து காமெடி கீமடி பண்ணலையே ?

    பதிலளிநீக்கு
  20. மொக்கை படத்துக்கு மக்கள் தொடர்பு செய்வது எப்படி என்று விளக்கினால் நலம்.

    பதிலளிநீக்கு
  21. எல்லாம் விமர்சனம் தானே.. ;)
    அளவுகோல் எல்லாம் யார் வைக்கிறா?

    யார் வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் எழுதலாம்.. கருமாந்திரம்,கண்றாவி,கலைப் படைப்பு எல்லாம் அவரவர் முடிவு & எண்ணம்..

    அதுசரி ஒரு 'பிரபல' பதிவர் அக்டோபர் முதலாம் திகதி அடுக்கடுக்கா ஐந்து பதிவுகள் (ரிப்பீட்டு உட்பட) போட்டுள்ளாரே.. பார்க்கலையா? ;)

    படம் சூப்பர்.. ;)

    பதிலளிநீக்கு
  22. ஏனுங்க நீங்க என்னை சொல்லலைங்களே...?

    பதிலளிநீக்கு
  23. //சரியாக சொன்னீர்கள் இந்த பதிவு கூட அந்த ரகம் போல இருக்கு. திரைப்பட விமர்சங்களுக்கு நான் பின்னூட்டம் இடுவதுல்லை//

    :))))

    பதிலளிநீக்கு