5 செப்டம்பர், 2009

உதிரத்துணி!

”இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்!” என்ற ஒற்றைவரியினை தவிர்த்து, ஈழப்பிரச்சினை குறித்த போதுமான அறிவும், தீவிரமான புரிதலும் இல்லாமலேயே முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக இணையமும், புலம்பெயர் தமிழர்கள் எழுதும் சில புத்தகங்களும் ஓரளவுக்கு நடந்தவற்றையும், தற்போதைய நடப்பையும் தெளிவாக்கி வருகின்றன.

இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன். பலாலி வங்கிக்கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

புஷ்பராஜாவின் சகோதரி புஷ்பராணியை, ஷோபாசக்தி எடுத்திருக்கும் நேர்காணல் இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.

“விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.

என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.”


ஏராளமான அதிர்வுகளையும், கேள்விப்பட்டிராத பல தகவல்களையும் ஒருங்கே கொண்டது அந்நேர்காணல். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்!

17 கருத்துகள்:

  1. சிறிலங்கா படையில் தமிழர்
    http://someeth.com/?p=42

    பதிலளிநீக்கு
  2. சாருப்பிரியன்1:35 PM, செப்டம்பர் 05, 2009

    யுவா, இங்கே கூட ஒரு அது சம்பந்தமாய் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறுத் பார்த்தீர்களா

    பதிலளிநீக்கு
  3. சாருப்பிரியன்1:36 PM, செப்டம்பர் 05, 2009

    http://www.vinavu.com/2009/09/04/raya3/

    சுட்டியை மேல வெட்டி ஒட்டிவிடவும்

    பதிலளிநீக்கு
  4. ஒரு பத்தி படித்தாலே அதிருதே!....

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் கூறியது உண்மையே. தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்! அப்படி நினைத்து தான் தமிழ்நாட்டு தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை பயன் படுத்தி லாபம் பெற சில அரசியல்வாதிகள் மட்டுமல்ல வினவும் (vinavu.com)முயற்ச்சிக்கிறது

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் எழுதியிருக்கும் ஒரு பத்தி படித்ததிலேயே வலிக்கிறது...முழுவதுமாக படிக்க முடியுமா என்று தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவின் பகுதியை படிப்பதற்கே மனம் பதறுகிறது நண்பா. முழுவதுமாய் படிப்பதற்கான தைரியம் இல்லை.

    பதிலளிநீக்கு
  8. மனிதர்கள் மிருகங்களாக மாறி கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம். இலங்கை பிரச்சினை இங்கு ஒரு உணர்ச்சியை கிளர மட்டுமே பயன்படுகிறது. என் சிறு வயதில் புலம்பெயர்ந்தவர்களுடன் படித்திருக்கிறேன். அவர்களின் வலி நமக்கு புரியாது.

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள லக்கி!
    // இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்!” என்ற ஒற்றைவரியினை தவிர்த்து, ஈழப்பிரச்சினை குறித்த போதுமான அறிவும், தீவிரமான புரிதலும் இல்லாமலேயே முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக இணையமும், புலம்பெயர் தமிழர்கள் எழுதும் சில புத்தகங்களும் ஓரளவுக்கு நடந்தவற்றையும், தற்போதைய நடப்பையும் தெளிவாக்கி வருகின்றன.

    இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
    //
    நானும் இதே மனநிலையில், ஏறக்குறைய இதே காலகட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆள்தான்.
    அதேநேரம், நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும், இன்றைய எழுத்தாளராகியிருக்கும் முன்னாள் "போராளி?" ஷோபாசக்தி மற்றும் புஸ்பராணி போன்றவர்களின் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் மிக ஆழமாக யோசிக்கும் பட்சத்தில், சந்திரவதனா போன்றோர்களின் எழுத்துக்களையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் "போராளி?" ஷோபாசக்தி சொல்லியதைப்போல, மேற்கோள்காட்டியதைப்போல, பாதிக்கப்பட்டவர்கள் பலபேர் அங்கிருந்தால் (IDP-ல்), அதை இலங்கை ராணுவம், சர்வதேச ஊடகங்களை உள்ளே அனுப்பி, புலிகள்தான் உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்று நிறுவ, அருமையான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கும் என்றே எண்ணுகிறேன். ஆனால், ஏன் இன்னும் ஒரு ஊடகத்தைக்கூட உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை? புலிகள் அழித்தொழிக்கப்பட்ட(?) இந்த சூழ்நிலையில் "போராளி?" ஷோபாசக்தியும், புஸ்பராணியும், ஏன் இலங்கை அரசும் அந்த முயற்சியை மேற்கொள்ளாமல், சும்மா blog-லும் தமிழ் ஊடகங்களிலும் பரப்புரையை மேற்கொள்ளுகிறார்களென்று, யோசிக்க உங்களை வேண்டுகிறேன். நீங்கள் தெளிந்தால் எனக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. British rule'la Indian's irunthathu pol thaan ithuvum.
    Thalai sonnapadi vaal aadum.

    Irunthum ithu konjam over thaan.

    Ella policeum onnu pola, Tamilnadu or Ceylon.

    makkalatchi nu solli ippadi.. ithu mannarathciyae mael

    பதிலளிநீக்கு
  11. இப்போது போரில்லையே. சோபாசக்தி இலங்கை சென்று மக்கள் பணியில் ஈடுபடுவாரா ?

    பதிலளிநீக்கு
  12. //இப்போது போரில்லையே. சோபாசக்தி இலங்கை சென்று மக்கள் பணியில் ஈடுபடுவாரா ?//

    அப்படி ஈடுபடப்போவதாக ஷோபாசக்தி எங்காவது சொல்லி இருக்கிறாரா?

    பதிலளிநீக்கு
  13. //இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன்//

    என்ன லக்கி உண்மையிலே தெரியாதா அல்லது தெரியாதமாதிரி நடிக்கின்றீர்க்ளா..
    80-களின் இறுதி வரை யாழ் மாவட்டத்தில் காவல் துறை உட்பட அனைத்து அரசு துறைகளும் முழுமையாக தமிழர்களால் நிர்வாகம் செய்யப்பட்ட நிலையில் அந்த நேரத்தில் யாழ் நகரில் செயல்பட்ட அரசு காவல்துறை சிங்கள அரசு சார்பாகத்தானே செயல்பட்டிருக்கும்.

    ஈழப்போரட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களின் வரலாறு தெரிந்துகொள்ளாமல் போனது யார் தவறு லக்கி.?


    //முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்//

    இதில் என்ன புரிதலில் தவறு கண்டீர்.?

    வரலாறு புரியாமல் தமிழர்களின் உணர்வினை கொச்சைபடுத்தார்தீர்கள் லக்கி.

    தமிழர்கள் என்ன கடந்த முப்பதாண்டுகளாக சிங்களவர்கள் மிகவும் கௌரவமாக நடத்தப்பட்டார்களா.

    சிங்களன் மட்டும் தமிழனை கொல்லவில்லை,தமிழனும் தமிழனை கொன்றான் என்ற கருத்தியலை நிறுவப்பார்பதன் அவசியம் என்ன.?

    30,000 தமிழர்கள் ஓர் இரவில கொல்லப்பட்டத்தை கண்டு மனமொடிந்து வருத்தப்பட்டவர்கள் எல்லாம் முட்டாள்களா.?


    //விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.//

    நான் கூட நினைத்தேன் லக்கி ”தமிழனத் தலைவர்” தமிழர்களுக்கு எதாவது துன்பம் வந்தால் பதவியை துறந்தாவது தமிழர்களை காப்பாற்றுவார் என்று.

    30,000 தமிழர்கள் கொல்லப்பட்ட அன்று பதவிக்காக டெல்லி நகரில் காவடி தூக்கிகொண்டு அலைந்தவரும் ஒரு தமிழர்தானே லக்கி.அன்று டெல்லியில் பதவிக்காக அலைந்தை பார்த்தபோது எனக்கு எற்ப்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை லக்கி.


    இப்படியிருக்கையில் காவல்துறையில் இருந்த ஒரு தமிழன் கொடுமைபடுத்திய ஒரு சம்பவத்தினை வைத்துகொண்டு தமிழர்களின் உணர்வினை கேள்விகுறியாக்காதீர்கள் லக்கி

    புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் புலி எதிர்ப்பு புராணம் பாடி பிழைப்பு நடத்தும் சோபா சக்தியின் புலியெதிர்ப்பு அரசியலை வேறு வகையில் நிறுவப்பார்க்கும் ஒரு செயலாகவே உங்கள் பதிவினை பார்க்கின்றேன்.

    அன்புடன்
    அரவிந்தன்
    பெங்களுர்

    பதிலளிநீக்கு
  14. //ஈழப்போரட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களின் வரலாறு தெரிந்துகொள்ளாமல் போனது யார் தவறு லக்கி.?//

    எல்லோர் தவறும்தான். நாம் விரும்பியவாறு வராத செய்திகளை எந்த கேள்விக்கும் உட்படுத்தாமல் புறக்கணித்து வருகிறோம் :-(


    //30,000 தமிழர்கள் ஓர் இரவில கொல்லப்பட்டத்தை கண்டு மனமொடிந்து வருத்தப்பட்டவர்கள் எல்லாம் முட்டாள்களா.? //

    இந்த Contextக்கே நான் வரவில்லை.
    //முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்// - இந்த சொற்றொடரை முந்தைய சொற்றொடரோடு சேர்ந்து நீங்கள் வாசித்திருக்க வேண்டும்.

    //புலிகள் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில் புலி எதிர்ப்பு புராணம் பாடி பிழைப்பு நடத்தும் சோபா சக்தியின் புலியெதிர்ப்பு அரசியலை வேறு வகையில் நிறுவப்பார்க்கும் ஒரு செயலாகவே உங்கள் பதிவினை பார்க்கின்றேன்.//

    ஷோபாசக்தியை நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன். அவர் வெறும் புலி எதிர்ப்பாளர் என்ற பரிமாணத்தை மட்டுமே கொண்டவர் என்பதை நான் நம்பவில்லை. புலியெதிர்ப்புப் புராணம் பாடுவதால் அவருக்கு யாரும் படியளப்பதுமில்லை.

    பதிலளிநீக்கு
  15. ஆட்சியாளர்களுக்கு சார்பாகத்தான் அதிகார வர்க்கம் இருக்கும்.. சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள அதிகாரவர்க்கத்தின் கீழ்தான் செயல்படமுடியும்.. உதாரணம் கயவன் கருநாகத்தின் ஆட்சியில் அண்ணன் சீமான் ..கொளத்தூர் மணியை கைது செய்தது தமிழன் தான்.. உள்ளே போனது தமிழன் தான் .. இலங்கையில் சுமூக நிலையாம் .. கடவுளே யார் யாரோ ஹலிகாப்டரில் போகிறார்கள்..ம்ம் என்னத்த சொல்ல..

    பதிலளிநீக்கு
  16. யுவகிருஷ்ணா said...
    //
    புலியெதிர்ப்புப் புராணம் பாடுவதால் அவருக்கு யாரும் படியளப்பதுமில்லை
    //
    நன்றாக புரிந்துதான் பேசுகிறீர்களா?
    படியளப்பது என்பது வேறு. வன்மம் என்பது வேறு...அவர் இந்த இரண்டாம் பிரிவிலேதான் வகைப்படுத்தப்படுவார் என்பது என் எண்ணம். அதற்கான காரணங்களும் உண்டு என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை!

    //
    அரவிந்தன் said...
    நான் கூட நினைத்தேன் லக்கி ”தமிழனத் தலைவர்” தமிழர்களுக்கு எதாவது துன்பம் வந்தால் பதவியை துறந்தாவது தமிழர்களை காப்பாற்றுவார் என்று.
    //
    meeeeee too:-(
    ஏனென்றால் அவரை விட்டால் வேறு நாதி கிடையாது என்ற பிம்பம் இருந்ததால்தான் என்பது மிகத்தாமதமாக எனக்கு புரிந்தது, லக்கி! ஆனால் நீங்கள் இன்னும் புரிந்துகொள்ள விரும்பவில்லை என்பதும் புரிகிறது:-(

    பதிலளிநீக்கு