16 அக்டோபர், 2009

தீபாவளி


தேர்தல் அரசியல் தலைவர்களில், கலைஞர் மட்டும் இன்னும் கொள்கை பிடிப்பாய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காமலிருக்க, கலைஞர் டீவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ̀சன்'னுடன் போட்டியிடும் காலத்தின் கட்டாயத்தில், தீபாவளி பற்றிய சில கருத்துக்கள்; தீபாவளி பற்றி ஏதோ வகையில் எதிரெண்ணம் கொண்டவர்களை முன்வைத்து.

கிட்டத்தட்ட 15 வருஷங்கள் தீபவளியை கொண்டாடாமலும், விலகியும், பட்டும் படாமலும், தவிர்த்தும் வந்து, கடந்த மூன்று வருடங்களாய் கொண்டாடுகிறேன்; கொண்டாடுவது என்பது புத்தாடை, வெடிகளுடன், ̀சகலை' வீட்டில் கொண்டாட்டங்களில் பங்கேற்பது. மகன் பிறந்த பிறகு தீபாவளியை தவிர்ப்பது வன்முறையாகவும், அராஜகமாகவும் தோன்றுகிறது.

தமிழ்நாட்டில் பெரியார் இயக்க பாதிப்பில், கொள்கை பிடிப்புள்ள ஒரு கூட்டம் தீபாவளி பற்றி எதிர் எண்ணம் கொண்டு, ராவணனை/நரகாசூரனை -என்ற திராவிடன/ ̀சூத்திரனை'- கொன்ற தினமாக கருதி, கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறது. இஸ்லாத்திற்கோ, கிரிஸ்தவத்திற்கோ , முடிந்தால் பௌத்தத்திற்கு மாறுவது இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. (எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று சொல்லவில்லை.) மிக தெளிவாக ̀நாம் வேறு; தீபாவளி நமக்கானதல்ல' என்ற எண்ணம் திடமாக வந்து, கொண்டாடாததன் மனக்குறை இருக்காது; குறிப்பாக குழந்தைகளுக்கு இருக்காது. இந்துவான அடையாளத்தை மாற்று மதத்தில் கரைக்காமல், குழந்தைகளிடம் தீபாவளியை பிடுங்குவது நிரப்ப முடியாத வெற்றிடத்தையும், மனக்குறையையும், தாழ்வு மனப்பான்மையை ஒத்த ஒரு மனநிலையையையுமே ஏற்படுத்தும்.

மேலும் எந்த ஒரு செயலுக்குமான பொருளை நாம் புதிது புதிதாக கற்பிக்க இயலும்; 80களின் (இளைஞ)தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக முந்தய தினம் முட்ட முட்ட தண்ணியடிப்பதே. மூன்று மதத்தவரும் சம அளவில் வாழும் தூத்துக்குடியில் வாழ்ந்த போது, 80களின் தெரு முக்கு க்ரூப்களில், இந்துக்கள் தீபாவளியன்று (எல்லோரும் கலக்க) பார்ட்டி தருவதும், ரம்ஜானில் இஸ்லாமிய இறுப்பினர்களும், கிரிஸ்மஸ் அன்று கிருஸ்தவ நண்பர்கள் தருவதும் ஒரு பண்பாடாய் உருவானது. அந்த தீபாவளி நீர் கொண்டாட்டத்திற்கு நரகசூரனோ, ராவணனோ, ராமனோ, கிரிஷ்ணனோ அருத்தம் தருவதில்லை. ஆகையால், இப்போதைக்கு தீபாவளியை வேறு தினத்திற்கு, வேறு சந்தர்ப்பத்திற்கு மாற்றவோ, இதே அளவு குதுகலத்தை பதிலீடு செய்யவும் இயலாததால், எல்லாரையும் தீபாவளி கொண்டாட அறைகூவுகிறேன். மீறி கொண்டாடாதவர்களை நான் திட்ட மாட்டேன். கொண்டாடுபவர்களை யாரும் திட்டாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்!

கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரோஸாவசந்த் எழுதியது. அப்போது படிக்கும்போது தெனாவட்டாக சிரித்தேன். இப்போது கிட்டத்தட்ட இப்பதிவு சுட்டிக்காட்டும் மனநிலைக்கு மாறிவிட்டிருப்பதை உணர்கிறேன். :-)

14 கருத்துகள்:

  1. "தீபாவளி" யுவ தீபாவளி,

    தீபாவளி" யுவ தீபாவளி

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் லக்கி.

    பதிலளிநீக்கு
  3. கிட்டத்தட்ட 15 வருஷங்கள் தீபவளியை கொண்டாடாமலும், விலகியும், பட்டும் படாமலும், தவிர்த்தும் வந்து, கடந்த மூன்று வருடங்களாய் கொண்டாடுகிறேன்; //

    அப்ப உங்க தலைவர் கலைஞரின் கொள்கையில் இருந்து மாறுபட்டு நிற்கிறீர்கள்!

    சரிதான்!

    பதிலளிநீக்கு
  4. லக்கி
    இப்பத்தான் ரெண்டு நாளா மக்கள் ரோசா மேட்டரை மற்ந்திருக்காங்க, திரும்பவும் ஏன் ஞாபகப் படுத்தறே? அடங்க மாட்டியா? :) :) :)
    மூணு ஸ்மைலி போட்டிருக்கேன், பின்னூட்டம் கோபமா இல்லன்னு புரியுமுன்னு நினைக்கிறேன்
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  5. ’’Your comment has been saved and will be visible after blog owner approval.’’

    இது என்னா கூத்து லக்கி

    பதிலளிநீக்கு
  6. இப்போ எல்லாம் உங்க பஞ்ச் குறையும்போதே, உங்க மனநிலை மற்றதை உணர முடிகிறது. Sorry to tell this, even you are also in the way the become 'Neo - Shathriya' as described by Kancha Illah in 'Why I am Not a Hindu' book.
    Disappointing Lucky :-(
    உங்கள் ரசிகன்,
    தரணிபதி.

    பதிலளிநீக்கு
  7. பண்டிகை மனிதனை மகிழ்ச்சி ஏற்படுத்த. இதிலே எங்கிருந்து வந்தது மற்ற கருத்துக்கள். பண்டிகை நாட்களில் குழந்தைகளை சந்தோசப்படுத்தி, அடுத்தவர் மனதை புண்படுத்தாமலிருந்தால் போதும். கலைஞர் டிவியின் மடத்தனமான “விடுமுறை நிகழ்ச்சிகளை” பார்த்து ரசிப்போம்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்வீட் கண்ணன் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!!

    பதிலளிநீக்கு
  9. ஒரு சின்ன கரெக்சன் 'மகள்' பிறந்த பிறகு

    தீபாவளி வாழ்த்துகள் லக்கி..உங்களுக்கும்..குடும்பத்தினர்க்கும்

    பதிலளிநீக்கு
  10. ஒப்புக் கொள்ள வேண்டிய பதிவு....வளர்ந்தவர்களுக்கு ஆயிரம் கொள்கைகள், கோட்பாடுகள் இருக்கலாம்...ஆனால் குழந்தைகளின் கொண்டாட்டத்தை பறிப்பது அராஜகமான ஒன்றே...

    தீபாவளியை பண்டிகை என்று பார்க்காமல் கவலைகளை கொஞ்ச நேரம் மறக்க, குவாட்டரை தாண்டி ஆஃபை ட்ரை பண்ண கிடைக்கும் சாக்காக பார்ப்பது சாலச் சிறந்தது ;))))

    பதிலளிநீக்கு
  11. உங்க வீட்ல இந்த வருஷம் புதுசா ஒரு பாப்பா இருக்குல்ல?? :)))

    வாழ்த்துக்கள் லக்கி! Have a great time!

    பதிலளிநீக்கு
  12. தீபாவளி நல்வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா

    பதிலளிநீக்கு
  13. அது ரோசா வசந்த்யின் பார்வை எப்படியோ இருக்கலாம்...

    தீபாவளி கொண்டாடாத குழந்தைக்கு தாழ்வு மனபான்மை என்பதெல்லாம் அதிகப்படுத்தப் பட்ட செய்தி...

    பதிலளிநீக்கு